3 months 2 weeks ago
வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு! வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும். இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும். https://athavannews.com/2025/1428407
3 months 2 weeks ago
இப்போதுதான் கவனித்தேன் .........."இரத்த சொந்தம்" நல்லதொரு சிறுகதை . .......... எந்தக் காயங்களையும் காலம் மாற்றிவிடுவதுண்டு . ........! 👍
3 months 2 weeks ago
அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி இப்ப என்பதால் நீதி அந்த மாதிரி இருக்கும் என்று பிரசாரம் செயய்கின்றார்களே
3 months 2 weeks ago
கிழக்குக் கடற்கரை சாலையில் கோடிகளில் சொகுசு பங்களா வாங்குவதற்கு அவர் ஈழதமிழர்களை வைத்து திரள்நிதி அரசியல் செய்யவில்லை.
3 months 2 weeks ago
அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்… — கருணாகரன் — April 12, 2025 கருணாகரன் — அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, அவர் இந்தியாவுக்குச் செய்த விஜயமும் அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததும் அரசியல் நோக்கர்களிடத்தில் பலவிதமான அபிப்பிராயங்களை உருவாக்கியுள்ளது. கூடவே சில விமர்சனங்களையும். உருவாகிய காலத்திலிருந்தே (1970 களில்) இந்திய எதிர்ப்பு உளநிலையிலிருந்த ஜே.வி.பியினரின் அரசாங்கம் இந்தியாவுடனான உறவை எப்படிப் பேணப்போகிறது? என்.பி.பியின் ஆட்சியில் இலங்கை – இந்திய உறவு நிலை எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்திருந்தன. மட்டுமல்ல, ஐ.எம். எவ் உடனான ஒப்பந்தத்தின் எதிர்காலம் அல்லது அதனுடைய தொடர் நடவடிக்கை, மேற்குலகத்துடனான உறவு என்பனவற்றிலும் கேள்விகள் இருந்தன. குறிப்பாக அரசியற் கட்சிகளும் அரசியல் நோக்கர்களும் இதைக்குறித்து ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அநுரகுமார திசநாயக்க பதவியேற்ற கையோடு ஜே.வி.பியின் அடையாளத்தையே மாற்றிப்போடுவதாக இந்தியாவுக்கே முதற்பயணத்தைச் செய்தார். அதைப்போல ஐ.எம்.எவ்வுடனான தொடர் நடவடிக்கை பற்றிப் பேசினார். இதன்மூலம் தம்மைப்பற்றியிருந்த வெளி அபிப்பிராயத்தை மாற்றியது என்.பி.பி. அநுரவின் (என்.பி.பியின்) இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. பலரும் கேள்விகளோடும் குழப்பங்களின் முன்பும் குந்தியிருந்தார்கள். எதிர்க்கட்சிகள் வழமையைப்போல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் என். பி. பி மிக வேகமாக அதிரடி ஆட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதிகாரத்திலிருக்கும் தரப்புகளின் பொதுக் குணம் இது. அதிகாரத்துக்கு வெளியே (அதிகாரம் இல்லாதபோது) பேசியதை எல்லாம் அதிகாரத்திலிருக்கும்போது எதிர்பார்க்க முடியாது. அதிகாரம் என்பது வேறான ஒன்று. அதை விளங்குவதற்கு வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பலருக்கும் என்ன குழப்பம் என்றால், நீண்டகாலமாக இவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்த ஜே.வி. பி அல்லது என்.பி.பி, இப்பொழுது எப்படிக் குத்துக்கரணமடித்து இப்படிச் சமரசத்துக்கு வந்தது? அப்படிச் சமரசத்துக்கு வந்ததைப் பற்றி – அதனுடைய நியாயங்களைப் பற்றி – அது பகிரங்கமாகச் சொன்னதா? அதாவது அது தன்னுடைய கொள்கை மாற்றத்தைப் பற்றிப் பொதுத்தளத்தில் எங்கேயாவது பேசியுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்படுகின்றன. எந்தக் கேள்விக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ ஜே.வி.பியோ அல்லது என்.பி.பியோ பதிலே சொல்லவில்லை. சொல்லப்போவதுமில்லை. அவர்களைப் பொறுத்தவரை தம்மை நோக்கி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கான பதில் என்பது செயல்தான் எனக் கருதுகிறார்கள். அதாவது செயற்பாடு அல்லது நடவடிக்கை. எதையும் சொல்வதை விட, எதற்கும் விளக்கமளிப்பதை விட, உரிய காரியங்களைச் செய்வதே சரியானது. அதுவே அரசியற் பெறுமானமுடையது. அதுவே அவசியமானது. அதுவே பொருத்தமானது என்பதுதான் அவர்களுடைய நம்பிக்கை. அதாவது தாம் ஒரு மாற்றுச் சக்தி என்பது, தமது செயல்களின் அடையாளமாகும்; செயல்களின் விளைவாகும் என்ற நிலைப்பாடு. இதில் அவர்கள் எவ்வளவு தூரம் சரியாகச் செயற்படுவார்கள்? எந்தளவு வெற்றியைப் பெறுவார்கள்? எவ்வாறான மாற்றங்களை நிகழ்த்துவர்கள்? எப்படியான மாற்றங்கள் நிகழும்? என்ற கேள்விகள் ஒரு புறமிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்டாலும் பதில் கிடையாது. அவர்களுடைய ஆட்சியைக் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டியதுதான். இதன்படியேதான் என்.பி.பியின் நடவடிக்கைகள் அமைகின்றன. இதற்குச் சிறந்த உதாரணம், என்.பி.பி இந்திய உறவைக் கையாள்வது அல்லது இந்தியாவைக் கையாள்வதாகும். முதலில் இந்தியாவுக்கும் பிறருக்கும் ஜே.வி.பியையைப் பற்றி அல்லது என்.பி.பியைப் பற்றி வெளியே இருந்த அபிப்பிராயத்தை அது மாற்றியிருக்கிறது. உண்மையில் அநுரவின் வெற்றியையும் அதைத் தொடர்ந்து என்.பி.பி. பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரும்பான்மை பலத்தையும் குறித்து இந்தியாவுக்குச் சற்றுப் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. அநுரவும் என்.பி.பியும் சீனாவுடன் நெருங்கக் கூடும். அல்லது சீனா என்.பி.பி. அரசாங்கத்தை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இலங்கையில் செல்வாக்கை வலுப்படுத்தக் கூடும். இதனால் தனக்கு நெருக்கடி உண்டாகலாம் என இந்தியா பதற்றமடைந்தது. பதவியேற்ற கையோடு இந்தியாவுக்கு முதற் பயணத்தைச் செய்து இதையெல்லாம் மாற்றிப் போட்டு விட்டார் அநுர. இதை என்.பி.பியின் சரணாகதி என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியல்ல. இதுதான் அரசியல். அரசுக்கு வெளியே – ஆட்சிக்கு வெளியே இருப்பது வேறு. அரசைப் பொறுப்பெடுத்து இயக்குவது வேறு. வெளியே இருக்கும்போது பலதையும் பத்தையும் பேசலாம். அப்படிப் பேசுவது சரியென்று சொல்லவில்லை. ஆனால், வெளியே இருக்கும்போது எதையும் பேசுவதற்கான சூழலும் சுதந்திரமும் இருக்கும். ஆட்சியிலிருக்கும்போது அப்படிச் செய்ய முடியாது. ஒவ்வொன்றுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும்; பொறுப்பேற்க வேண்டும். ஆகவே ஒவ்வொன்றிலும் நிதானம் வேண்டும். ஒவ்வொன்றிலும் சரிகளைத் தவற விட்டால், அதற்கான எதிர்விளைவுகள் வந்தே தீரும். அதற்கெல்லாம் முகம் கொடுத்தே ஆக வேண்டும். இதேவேளை நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்.பி.பி என்பது கடந்த கால ஜே.வி.பி அல்ல. அது தன்னை மாற்றிக் கொண்ட ஒன்று. இன்று அது முற்றிலும் புதிய ஒன்று. அதில் பழைய ஜே.வி.பியின் சிறு குணங்கள் – பிசிறுகள் – இருக்கலாம். ஆனால், அதையும் விட அது மாறிய – மாற்றத்துக்குள்ளான – ஒரு அரசியல் இயக்கமாக, அரசியல் வடிமாகவே உள்ளது. ஆனால், பலரும் முந்திய ஜே.வி.பியைத்தான் இன்னமும்மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் அவர்களுக்கு இன்னமும் குழப்பங்களும் கேள்விகளும் எழுகின்றன. அவர்களுடைய விமர்சனம் அந்த அடிப்படையிலானதே. பலரும் ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். ஜே.வி.பி ஏன் என்.பி.பி யாக மாற்றமடைந்தது? எப்படி அது ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய நிலைக்கு வந்தது? மட்டுமல்ல, ஏன் இவர்களில் பலரும் என்.பி.பியின் இந்தத் திடீர் வளர்ச்சியையும் அது ஆட்சியைக் கைப்பற்றியதையும் கூட இன்னமும் நம்ப முடியாமல் – ஏற்றுக் கொள்ள முடியாமல்- புரிந்து கொள்ள முடியாமல்தான் உள்ளனர். ஆனால், இதொரு மறுக்க முடியாத உண்மை. இதொரு யதார்த்தம். யாரும் ஏற்கலாம், விடலாம். ஆனால், இதொரு வெற்றி. அதாவது ஜே.வி.பியினுள் நிகழ்ந்த மாற்றம், என்.பி.பியின் வெளிப்பாடாக, வெற்றியாக வளர்ச்சியடைந்துள்ளது. இதைப் புரிந்து கொண்டால், அநுர – மோடி இருவரும் இறுகப் பற்றித் தழுவிக் கொண்டதற்குப் பின்னால், இறுகப் பற்றிக் குலுக்கிய கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலையும் யதார்த்தத்தையும் குழப்பமின்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இன்றைய சூழலில் இந்தியாவுக்கு இலங்கை மிக அவசியமானது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிர்நிலையிலேயே உள்ளன. அல்லது இந்தியாவுக்கு மாறான உளநிலையிலேயே இருக்கின்றன. ஆகவே இலங்கையையாவது தன்னுடைய நெருக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்குள்ளது. என்பதால்தான் அது இலங்கையுடன் நிபந்தனையற்ற உறவைக் கொண்டுள்ளது. அநுரவின் ஆட்சிக்கு முன்பு, சீனாவின் மடியில் ராஜபக்ஸக்கள் தலையை வைத்திருந்த காலத்திலும் இந்தியா மிகப் பொறுமையாக – நிதானமாக இலங்கையுடனான உறவைத் தொடர்ந்தது. இதற்கு வாய்ப்பாக இலங்கையின் நெருக்கடிகளில் பங்கேற்கும் தரப்பாகத் தன்னைத் தொடர்ந்தும் வைத்திருக்கிறது. போரிலும் பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளை இங்கே நினைவு கொள்வது நல்லது. இலங்கை இந்தியாவை விட்டு மேற்குலகம், சீனா என்று சற்று விலகிச் சென்றபோதும் அதைக் கண்டும் காணாததைப்போல இருந்து கொண்டு தொடர்ந்தும் உறவிலும் உதவித்திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது இந்த அடிப்படையிலேயே. இலங்கையோடு பகை நிலையைக் கொண்டால், அது (இலங்கை) முற்று முழுதாக சீனா, பாகிஸ்தான் என்ற இன்னொரு உறவு வளையத்துள் சென்று விடக் கூடும் என்ற அச்சம் இந்தியாவுக்குண்டு. இந்த நிலைமை இலங்கைக்குச் சாதகமான ஒன்று. இதைப் புரிந்து கொண்டிருக்கிறது என்.பி.பி – அநுரகுமார திசநாயக்க அரசாங்கமும். தாம் எப்படி ஆட்சியைக் கைப்பற்றும் தரப்பாக மாறுதலுக்கு உட்பட்டோமோ, அதைப்போல,ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் மாறுதல்கள் வேண்டும் என்பதே என்.பி.பியினரின் நம்பிக்கையாகும். எனவேதான் இந்தியாவுக்கு முதற் பயணத்தை அநுரகுமார திசநாயக்க மேற்கொண்டார். இந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியிலிருந்து வந்த ஒருவர், ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் இந்தியாவுக்கு முதல் வருகை செய்வதை இந்தியா வரவேற்றதும் இலங்கையைத் தன்னுடைய நட்பு வளையத்துள் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற நலன் நோக்கு அடிப்படையிலேயே. அதாவது ஒவ்வொருவருக்குமான பரஸ்பர நன்மைகள், லாபங்களின் அடிப்படையில். இதனால் ஜனாதிபதி அநுரவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு டெல்லியில் அளிக்கப்பட்டது. இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அநுரகுமார திசநாயக்க முயற்சித்தார். குறிப்பாக இலங்கை சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரு துணைக்கரமாக இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள விளைந்தார். அதற்கான தொடர்பாடலின் விளைவாக – வெற்றியாக – மோடியின் இலங்கைப் பயணம் அமைந்தது. மோடிக்கு இலங்கையில் செல்லுமிடமெங்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. வழியெங்கும் நிறைந்திருந்த சனங்கள் மோடியை வாழ்த்திப் பாடினார்கள். இந்தப் பயணத்தில் பல விடயங்களை பேசப்பட்டன. சில விடயங்கள் இருதரப்பு உடன்பாட்டுக்குள்ளாகின. சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சில விடயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றோடு சேர்ந்து இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு போன்ற வழமையான விவகாரங்களும் அமைந்துள்ளன. இவையெல்லாம் இந்த ஆட்சியின் தொடக்க ஆட்டம்தான். ஏனென்றால், இந்தியாவுக்கு இலங்கையில் எத்தகைய நன்மைகள் வேண்டியிருக்கிறதோ, அதற்கு நிகராக இந்தியாவிடத்திலிருந்தும் பலவிதமான நன்மைகளைப் பெற வேண்டிய தேவை இலங்கைக்குள்ளது. என்பதால்தான் இது இருதரப்பு உறவாக – உறவாடலாக இருக்கிறது. எனவே இந்தத் தொடராட்டம் மேலும் நீடிக்கப்போகிறது. திசநாயக்கவின் அரசாங்கம் முதல் ஆட்டத்தைச் சிறப்பாகவே ஆடியிருக்கிறது. எப்படி அது ஐ.எம்.எவ்வுடன் ஒரு சுமுகமான ஆட்டத்தில் உள்ளதோ, அவ்வாறே இந்தியாவுடனும் உறவாடுகிறது. மோடியின் இந்த இலங்கைப் பயணத்தில் அவருக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதை – மகிழ்ச்சி உண்டாகியதை – அவருடைய சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்பு அவர் மூன்று தடவை இலங்கைக்கு வந்திருக்கிறார். ஆனால், இந்தத் தடவையே அவர் உற்சாகமாக இருந்ததாக உணர முடிகிறது. ஏதோ நீண்டகால நண்பர்களைப்போல அநுரவும் மோடியும் காட்டிய நெருக்கம் இதற்குச் சான்று. 1980 களின் இறுதியில் இலங்கைத்தீவில் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்புகள் இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தன. ஒன்று ஜே.வி.பி. மற்றது விடுதலைப்புலிகள். ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தி, மாற்றியமைத்தது. அதனால்ஆட்சியைக் கைப்பற்றியது. இப்பொழுது அந்த ஆட்சியைத் திறம்பட நிகழ்த்திக் காட்ட முற்படுகிறது. விடுதலைப்புலிகள் மாற்றத்தைப்பற்றிக் கவனத்திற் கொள்ளவில்லை. சூழலின் – காலத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்துவதில் தவறிழைத்தது. அதனால் அது களத்தில் இருந்து அகற்றப்பட்டது. மாக்ஸிஸத் தத்துவம் எப்போதும் வலியுறுத்துவது, “மாற்றம் என்பது நிகழ்ந்தே தீரும். மாறாதவை அழிவடையும்” என்பதாகும். என்.பி.பி (ஜே.வி.பி) இதைப் புரிந்துள்ளது என எண்ணலாம். ஆகவே, அடுத்த கட்டமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மேலும் பல அனுகூலங்கள் சித்திக்கக் கூடும். பல புதிய திட்டங்களுக்கான வாசல்கள் திறக்கப்படலாம். அதில் சில நெருக்கடிகளைத் தருவனவாகவும் இருக்கலாம். அதையெல்லாம் கையாள்வதுதான் அரசியல். அதுதான் அரசியல் ஆளுமையும் தலைமைத்துவமும் ஆகும். அநுரகுமார திசநாயக்க இளைய தலைவர். என்.பி.பிக்கு இது புதிய ஆட்சி அனுபவம். ஆனாலும் விடயங்களைக் கையாள்வதில் முதிர்ச்சியான போக்குத் தென்படுகிறது. இலங்கையின் இராசதந்திரமும் கொள்கை வகுப்பாளர்களும் எப்போதும் வியப்பூட்டும் வகையில் செயற்பட்டதே வரலாறு. தலைக்கு வருவதையெல்லாம் அவர்கள் தலைப்பாகையோடு தள்ளி விடுவார்கள். என்றபடியால்தான் இந்தச் சின்னஞ்சிறு தீவு, புவியியல் ரீதியாக நெருக்கடிப் புள்ளியிலிருந்தாலும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிந்திக்கக் கூடியவர்களின் வரலாறு எப்போதும் முன்னோக்கியே பயணிக்கும். பின்னோக்குவதில்லை. நதிகள் பின்னோக்கிப் பாய்வதில்லை. என்.பி.பி. தன்னை ஒரு நதியாக உணர்ந்துள்ளது போலும். வரலாறு அதைச் சொல்ல வேண்டும் https://arangamnews.com/?p=11945
3 months 2 weeks ago
பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….? April 12, 2025 — அழகு குணசீலன்— தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சில நாட்களாகிறது. இந்த செய்தி அறிந்து வெடிக்கொழுத்தி சித்திரைப் புத்தாண்டை முன்கைட்டியே கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானுக்காக ஒப்பாரி வைக்காவிட்டாலும் கவலைப்பட்டு நினைத்து பேச கணிசமானவர்கள் நிச்சயம் இன்னும் இருக்கிறார்கள். வழக்கம்போல் இந்தக் கைது விடயத்தில் மட்டக்களப்பு சமூகம் இரண்டாக இரு வேறுபட்ட நோக்குகளுடன் பிரிந்து கிடக்கிறது. பிள்ளையானின் கைதுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் பார்வை. அப்படி இல்லை இது கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியான சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும், நீதி, நிர்வாகத்தை அரசியல் பிடியில் இருந்து விடுவிக்கும் மற்றொரு நடவடிக்கை என்கின்றனர் மறுதரப்பினர். இதனால்தான் இதனை ஒன்றும்,ஒன்றும் இரண்டா? அல்லது அதற்கும் மேலா?என்று கேட்கவேண்டி உள்ளது. முதலில் கைது செய்யப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்ட போதும், பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ். ரவீந்திரநாத் 15, டிசம்பர்,2006 இல் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமைக்காக இந்த கைது இடம்பெற்றதாக தெரியவந்தது. இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்களையும், சட்டப்பிரிவுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதால் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள்/ 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம் பெறுவதாகவே அறிய வந்தது. பின்னர் அது நீடிக்கப்பட்டுள்ளது. பின்னர் பாராளுமன்றத்தில் இது பற்றி பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையானுக்கு ஈஸ்டர் படுகொலைகளோடு கணிசமான தொடர்புகள் இருப்பதாக அறிவித்தார். இது பயங்கரவாத சட்டத்திற்குள் இழுத்து விடுவதற்கான காரணம் தேடலாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பாக பிள்ளையான் பல தடவைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் சிறையில் இருந்தவர். இது குறித்து சிறைச்சாலையில் நடந்த சில நிகழ்வுகளையும் தனது நூலில் எழுதியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்திலும் இது போன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டா. தற்போது உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார காலத்தில் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் பின்னணியைக்கொண்டது என்பதற்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இதனை ஆதாரம் காட்டுகிறது. இதைவிடவும் கடந்த தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு வந்திருந்த அநுரகுமார திசாநாயக்க பிள்ளையானையும் அவரது கட்சியையும் கடுமையாக எச்சரிக்கும் தொனியில் அவரது வழமையான பாணியில் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த பிள்ளையான், “எங்களுக்கு முதலில் ஆயுதம் தந்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்றும், பின்னர் அவர்கள் ஆயுதம் கேட்டபோது நாங்கள் கொடுக்கவில்லை……” என்றும் கூறினார். பிள்ளையானின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி. இதுவரை பதிலளித்ததாக தெரியவில்லை. அண்மையில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற கட்சியின் பெயரை பிள்ளையான், கருணா, வியாழேந்திரனின் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக பயன்படுத்துவது குறித்து இரு தரப்பாலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பெயர் குறித்து விவாதிப்பதற்கு இப்பத்தி பொருத்தமற்றது என்பதால் இனி வரும் காலங்களில் இதற்கு வெளிச்சம் போடப்படும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரைப்பொறுத்தமட்டில் தமிழரசுகட்சிக்கு அடுத்து என்.பி.பி.க்கு சவாலாக கிழக்கு கூட்டமைப்பு அமையும் என்று நம்புகின்றனர். இதனால் கடந்த பாராளுமன்ற தேர்தல் போன்று இப்போதும் பிள்ளையானின் தலையில் குட்ட அநுரகுமார அரசு முனைகிறது என்கிறார்கள் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள். வியாழேந்திரன், பிள்ளையானுக்கு அடுத்து கருணா மீது புலனாய்வு பிரிவினர் பாய்வார்களா? என்ற கேள்வியும் மட்டக்களப்பில் நிலவுகிறது. ஜனாதிபதி அநுரகுமார சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு வந்தார். அதற்கு முன்னர் திட்டமிட்டு, கணக்கு பார்த்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இந்த “கணக்கு பார்ப்பில்” கவனிக்கத்தக்கது என்னவெனில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு தற்போது நீதிமன்ற விடுமுறை காலமாகும். ஏப்ரல் 22 ம் திகதியே நீதிமன்றங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கும் இதுவும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்கிறது ரி.எம்.வி.பி. ஆக, பிள்ளையான் இல்லாத மட்டக்களப்புக்கு வருவதும், ஈஸ்டர் படுகொலையை அரசியல் பிரச்சாரமாக்குவதும் ஜனாதிபதியின் உள்திட்டம் என்று கூறுகிறார்கள் அவர்கள். முதலாவது தரப்பினரின் கருத்துக்களை வடிகட்டியதில் கிடைத்த மற்றொரு தகவல் வடக்கில் என்.பி.பி. தனது ஆதரவை அதிகரிக்க புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை நாடியிருப்பதாகவும், அந்த டயஸ்போராவின் நிபந்தனையை நிறைவு செய்யவே, பிள்ளையான் கைது, வீதித்தடை நீக்கம் போன்றவை இடம்பெறுகின்றனவாம். தமிழ் டயஸ்போராவின் நிபந்தனைகளில் டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் ஆகியோர், உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த தகவல் ஒன்றில் அறியக்கிடைத்தது. டக்ளஸ் தேவானந்தா ஊழல், இலஞ்சம் மற்றும் சிறிதர் தியேட்டர் சொத்து சேர்ப்பு சம்பந்தமாகவும், சித்தார்த்தன் அவரது புளட் இயக்க தோழர், ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்றும் கதையடிபடுகிறதாம். என்.பி.பி. வடக்கில் பாராளுமன்றமன்ற தேர்தலில் கிடைத்த ஆதரவை தக்கவைக்க முயற்சிக்கிறது. எனினும் எப்படித்தான் இருந்தாலும் புலிகளை எதிர்த்து, உயிரைப்பணயம்வைத்து ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை வலியுறுத்தியவர் டக்ளஸ் கொமறாட் என்று அநுரகுமார கருதுவதாகவும் ஒரு கசிவு தகவல் உண்டு. இது இவ்வாறு இருக்க, தமிழ்த்தேசிய வெடித்தரப்பும், அரசாங்கத் தரப்பும் பிள்ளையான் கைது செய்யப்பட்டதில் சத்தியமாக அரசியல் பின்னணி இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்து வருகிறார்கள். அண்மையில் தென்னிலங்கையில் பேசிய பிரதி அமைச்சர் ஒருவர் திறைசேரி அந்நியச் செலாவணி இருப்பு குறித்து “அம்பே அப்பே” என்று அம்மா மேல் சத்தியம் செய்தது போல் இல்லாமல் இவர்களின் சத்தியம் இருந்தால் சரிதான். என்.பி.பி. அரசாங்கத்தின் இலஞ்ச, ஊழல் அற்ற, நீதி, நிர்வாகத்தில் சுதந்திர செயற்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சாரம் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்கள் நம்புகின்றனர். ராஜபக்சாக்களின் சொத்து சேகரிப்பு, ஈஸ்டர், பட்டலந்த படுகொலைகள் போன்று படிப்படியாக ஒவ்வொன்றும் வெளிச்சத்திற்கு வரும் என்று வாதிடுகின்றனர். அப்படியானால் அரசாங்க அரசியல் வாதிகள் அடிக்கடி கைதுகள் குறித்து முன்கூட்டியே பேசுகின்றனரே அரசியல் தலையீடு இல்லாத நீதி நிர்வாகத்தில் இது எப்படி சாத்தியம் என்றும் மறு தரப்பு கேட்கிறது. முன்னாள் தமிழ்த்தேசிய ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளவர்கள் பிள்ளையான் – கருணா குழுவினிரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்று பிள்ளையானின் கைதை நியாயப்படுத்தியுள்ளார். அதைப்படித்தபோது இஸ்ரேல் மொசாட் புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவர் முக அடையாளத்தை மறைக்க ஒரு கண்ணை மறைத்து இருப்பார். அதுதான் நினைவுக்கு வந்தது. அந்த அதிகாரியின் பெயர் தயான். அது போன்று ஒரு கண்ணால் பார்த்ததாலோ என்னவோ அரியத்தாருக்கு புலிகள் செய்த கொலைகள் / கொலை முயற்சிகள் தெரியவில்லை. அந்த பட்டியலில் அ.தங்கத்துரை, கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மௌனகுருசாமி, கிங்ஸ்லி இராசநாயகம், சம்பந்த மூர்த்தி, ராஜன் சத்தியமூர்த்தி, நிமலன் சௌந்தரநாயகம், சாம்.தம்பிமுத்து, வாசுதேவா போன்றவர்கள் மீதான கொலைகள் அவருக்கு தெரியவில்லை. இதில் வேடிக்கை என்ன வெனில் அனேகர் தமிழரசுக்கட்சிக்காரர், தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், அவரின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்படி அரசியல் செய்வதால்தான் தமிழரசு இன்று “சின்னவீடு” ஆகி இருக்கிறது. சங்கு சின்னத்தில் ஜனாதிபதிக்கு போட்டியிட்டதால் சந்திரா பெர்ணான்டோ, வணசிங்கா, ஊடகவியலாளர் நித்தியின் கொலைகள்/ தாக்குதல்களையும் மறக்கவேண்டியதாயிற்று. இந்த நாட்டில் மொத்தமாக 50 ஆண்டுகாலமாக ஆயுத வன்முறை நிலவியது. இன்னும் நிலவுகிறது. ஜே.வி.பி.யும், தமிழ் இளைஞர்களும் அவரவர் அரசியல் நோக்கை அடைவதற்காக ஆயுதம் தூக்கி ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்து இறுதியில் தோற்றுப்போயினர். இவ்வாறான சூழலில் பல்வேறு சிறிய ஆயுதக்குழுக்களும், அரசாங்க படைகளுடன் சேர்ந்து செயற்படும் குழுக்களும், ஊர்காவற்படைகளும் இருந்தது வெளிப்படை. கலவர காலத்தில் ஜனநாயக அரசாங்கமோ, சட்டம் ஒழுங்கோ நாட்டில் இருக்கவில்லை. ஆயுதமேந்தியோர் ரில்வின் சில்வா சொல்வதுபோல் என்ன காரணத்தை சொன்னாலும் இந்த ஜனநாயக ரீதியான, நிறுவனரீதியான கட்டமைப்புக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதன் போது மனித உரிமைகள் மீறல், ஜனநாயக மறுப்புக்கள், கொலைகள், கொள்ளைகள் , சட்டமறுப்புக்கள், மீறல்கள் உள்நாட்டு போர் நடந்த நாடுகள் போன்று இலங்கையிலும் இடம்பெற்றன. இந்த கொடூரத்திற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கவேண்டும். இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். என்பதில் வேறு கருத்துகள் இல்லை. அப்படி இல்லாமல் இனப்படுகொலை அழிவுகளையும், இறுதியுத்த அழிவுகளையும் செய்த அரசபயங்கரவாத இராணுவ இயந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு என்.பி.பி.யினால் எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.னால் கொல்லப்பட்ட 1300 பேரின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு ஜே.வி.பி.யின் நீதி என்ன? இது வரை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே எம்.பி. இது இழகிய இரும்பை கொல்லன் ஓங்கி அடிக்கும் கதை. புதிய அதிகாரம் பழைய அதிகாரத்தை பாதுகாத்தல். இளம் ராசபக்சாக்கள் மட்டும் விசாரணை என்று அழைக்கப்பட்டார்கள், எதுவும் நடக்கவில்லை. மகிந்த ராஜபக்சவை அரசாங்க வீட்டில் இருந்து கூட எழுப்ப முடியவில்லை. அமைச்சர் பிமல் ரத்நாயக்க சர்வதேச ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார். அரியநேத்திரனின் கண் மறைப்பைதான் இவரும் செய்துள்ளா. இறுதியுத்தகால அழிவை விசாரிக்க உள்ளகபொறிமுறை தான் என்று சர்வதேச பொறிமுறையை நிராகரித்தவர்கள், ஆனால் ஜே.வி.பி.க்கு எதிரான பட்டலந்தை கொலைகளை விசாரிக்கவும் ரணிலுக்கு தண்டனை வழங்கவும் சர்வதேச ஆதரவை பெறப்போகிறார்கள். இதற்கு பெயர் இனவாதத்திற்கு இந்த நாட்டில் இனி இடமில்லை? இங்கு எப்படி ஒன்றும், ஒன்றும் இரண்டாகும்…….? https://arangamnews.com/?p=11941
3 months 2 weeks ago
இந்தியப் பிரதமரின் வருகை : அனுர யாரோடு ? - நிலாந்தன் நான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக இருந்து வருகிறது.ஆனாலும் பிரதமர் மோடியின் வருகையின்போது மாறாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாடு. இரண்டாவது,மீனவர்களின் விவகாரம்.அதுவும் தமிழ் மக்களோடு தொடர்புடையதுதான். இந்தியப் பிரதமரின் வருகையை மூன்று தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும்.முதலாவது பிராந்தியத் தளம். இரண்டாவது கொழும்பு. மூன்றாவது தமிழ் நோக்கு நிலை. பிராந்தியத்தில் இந்தியா “அயலவர் முதலில்” என்று கூறிக்கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அதன் அயலில் உள்ள சிறிய நாடுகளை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இருந்து சீனா எங்கே கழட்டி எடுத்து விடுமோ என்ற நிச்சயமின்மைதான் காணப்படுகின்றது.நேபாளம், பங்களாதேஷ், மாலை தீவுகள் ஆகிய மூன்று நாடுகளிலும் இந்தியாவின் பிடி சகடயோகமாகத்தான் இருக்கிறது. இலங்கையிலும் அப்படித்தான். இப்பொழுது இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருப்பது சீன இடதுமரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்திதான். இப்படிப்பட்டதோர் பிராந்தியப் பின்னணிக்குள் இந்தியப் பிரதமரின் வருகையின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்,காணொளிகளில் பிரதமர் மோடிக்கு அருகே அனுர பணிவான ஒரு இளைய சகோதரனைப்போலவே காணப்படுகிறார்.அயலில் உள்ள சிறிய நாடுகளுக்கும் தனக்குமான பிடி சகடயோகமாகக் காணப்படும் ஒரு பின்னணிக்குள் இலங்கைத்தீவில் தேசிய மக்கள் சக்தியை எப்படித்தன் செல்வாக்கு மண்டலத்துக்குள் பேணுவது என்பதுதான் இப்பொழுது இந்தியாவுக்குள்ள பிரதான சவால். இது முதலாவது. இரண்டாவது,கொழும்பு.இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் குழந்தை.பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காவிட்டால் அதற்கு எதிர்காலம் இல்லை.சில தசாப்தங்களுக்கு முன்பு இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராகக் காணப்பட்ட ஜேவிபிக்கு இப்பொழுது இந்தியா தொடர்பான அதன் கொள்கைகள் மாறியிருப்பதைக் காட்டவேண்டிய நிர்பந்தம் உண்டு. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.அவர் இங்கு ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்கள் நல்கிய ஆதரவை பாராட்டிப் பேசினார். அதாவது சீனா, புதிய அரசாங்கத்தை எதிர்பார்ப்போடு பார்க்கிறது என்று பொருள்.இந்த எதிர்பார்ப்பானது ஏற்கனவே தனக்குள்ள இந்தியாவின் எதிரி என்ற படிமத்தைப் புதுப்பிக்கக் கூடியது என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரிகிறது.எனவே பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்காமல் எப்படிப் பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்பதுதான் அவர்களுக்குள்ள சவால்.அதை நோக்கியே அவர்கள் இந்தியாவை அணுகுவார்கள். மேலும் இந்தியாவை அரவணைப்பதன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்களையும் குறைக்கலாம். மூன்றாவது தமிழ் நோக்கு நிலை.கடந்த 15 ஆண்டுகளிலும் இந்தியா தமிழர் தொடர்பான அதன் நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் காட்டியிருக்கவில்லை.13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது யாப்பில் இருப்பதை அமுல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப் பாடாகக் காணப்படுகின்றது.ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா கொழும்பிடம்தான் முன்வைக்க வேண்டும். மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.13ஆவது திருத்தம் என்பது இந்தியாவின் குழந்தை.எனவே கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அதனை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற கேள்வியை இந்தியா கொழும்பிடமும் தன்னிடமும்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். இலங்கைத் தீவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் 13ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.ஆனால் கடந்த 38 ஆண்டுகளாக அந்த நிறைவேற்று அதிகாரம் அந்த திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தாமல் தடுப்பதற்குத்தான் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.அதாவது யாப்புக்கு எதிராகத்தான் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டதோர் அபகீர்த்தி மிக்க யாப்புப் பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டிடம் திரும்பத் திரும்ப 13ஐ அமுல்படுத்து என்று ஏன் இந்தியா கூறிக் கொண்டிருக்கிறது? தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் கொழும்பைப் பகைத்துக் கொள்ள இந்தியா தயாரில்லை?13ஆவது திருத்தம் என்பது இலங்கைத்தீவில் இந்தியாவின் இயலாமையைக் காட்டும் ஒரு குறியீடுதான். இந்த விடயத்தில் 13ஆவது திருத்தம் மற்றும் இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பொருத்தமானது.கடந்த வாரம் இந்தியப் பிரதரைச் சந்தித்தபின் கஜேந்திரகுமார் பின்வருமாறு கூறியிருக்கிறார்…”இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு மட்டும்தான் அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பார்வை;பங்களிப்பு;உரித்து இருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கின்றோம்…வேறு எந்த நாட்டுக்கும் தங்களுடைய தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகும் உரிமையோ,அருகதையோ இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தினோம்….இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு மற்றைய நாடுகளை விட முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டைக் குறிப்பிட்டோம்….விசேடமாக வடக்கு,கிழக்கில் அந்த உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்பதை இந்தச் சந்திப்பில் சொன்னோம்….” இது முன்னணியின் புதிய நிலைப்பாடு அல்ல. இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பாக முன்னணி தொடர்ச்சியாக இதே கருத்தைத்தான் கூறி வருகிறது.இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கிலான அந்த அணுகுமுறை மிகவும் தெளிவானது; பொருத்தமானது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன்மூலம் கொழும்பைப் பகைத்துக்கொள்ளத் தயாரில்லை என்ற செய்தியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.ஆனால் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் சீனா எப்பொழுதோ நுழைந்துவிட்டது.அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா 100ஆண்டு குத்தகைக்குப் பெற்றுவிட்டது.கொழும்பில் ஒரு துறைமுக நகரத்தை கட்டியெழுப்பி வருகிறது. இப்படிப்பட்டதோர் உள்நாடு பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் சூழலின் பின்னணியில் வைத்தே இந்தியப் பிரதமரின் வருகையை விளங்கிக்கொள்ள வேண்டும் இரு தசாப்தங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் எதிரியாக காணப்பட்ட ஒரு கட்சியானது இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டம் வழங்கியிருக்கிறது.அரசியலில் நிரந்தரப் பகைவரும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை. ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்துக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது. ஆனால் அதே சீனாதான் ஜேவிபிக்கு கொம்யூனிச புத்தகங்களையும் வழங்கியது.ஜேவிபியின் முதலாவது போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் சிறை வைக்கப்பட்ட ஜேவிபிக்காரர்களிடம் ஒரு சிறை அதிகாரி என்னென்ன புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள்.அநேகமானவை சீன கொம்யூனிச புத்தகங்கள். அந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்த அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே தன் கையில் வைத்திருந்த ரி-56 ரக ரைஃபிளைக் காட்டிச் சொன்னாராம்,”சீனா உங்களுக்கு இந்தப் புத்தகங்களைத் தந்தது, எங்களுக்கு இந்த துவக்கைத் தந்தது” என்று இதுதான் அரசியல். அன்றைக்கு சீனா மட்டுமல்ல இந்தியாவும் சிறீமாவோவின் அரசாங்கத்துக்கு ஆதரவாக நின்றது. இது நடந்தது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு. அதன்பின் இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய பின் ஜேவிபி அதன் இரண்டாவது போராட்டத்தைத் தொடங்கியது.அது முழுக்க முழுக்க இந்திய படையினரின் பிரசன்னத்துக்கு எதிரானது.அந்த இரண்டாவது போராட்டத்தோடு ஜேவிபியின் ஆயுதப்போராட்ட முனைப்பு முற்றாக நசுக்கப்பட்டது. இவ்வாறு சீன இந்திய உதவிகளோடு நசுக்கப்பட்ட ஒரமைப்பு. இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டத்தை வழங்குகிறது. இதுதான் அரசியல். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை. சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு.பெரிய இனம். ஆனால் ராஜதந்திரம் என்று வரும் பொழுது விவேகமாக முடிவுகளை எடுக்கின்றார்கள்.அரசற்ற சிறிய இனமாகிய தமிழ் மக்களும் விவேகமான முடிவுகளை எடுக்கவேண்டும். விவேகமான முடிவென்பது 13ஐ ஏற்றுக்கொள்வதோ அல்லது “எக்கிய ராஜ்ஜிய”வை ஏற்றுக்கொள்வதோ அல்லது நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தைக் கைவிடுவதோ அல்ல. உடனடியாகவும் முதலாவதாகவும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்..கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் கொடுத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என்பதனை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும்.மோடியின் வருகையையொட்டி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் முகநூலில் பின்வருமாறு எழுதியிருந்தார்….”தென்னாசியாவின் சக்தி மிக்க தலைவர்கள். ஒருவர் தனது சிறுபிராயத்தில் புகையிரதத்தில் தேநீர் விற்றவர்.மற்றவர் புகையிரதத்தில் சிற்றுண்டிகள் விற்றவர். இருவருமே ஒரு காலம் அரசியல் இயக்கங்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.ஒன்று ஆர்.எஸ்.எஸ்.அதிலிருந்து பிஜேபி எழுச்சி பெற்றது.மற்றது,ஜேவிபி. அதிலிருந்து என்பிபி எழுச்சி பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும், இரண்டு கட்சிகளுமே ஊழலுக்கும் சுதந்திரத்திற்கு பின் தத்தமது நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய உயர் குழாத்துக்கும் எதிரானவை.இந்த இரண்டு ஐதீகப்பண்புமிக்க தலைவர்களும் தென்னாசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடும்.” இப்படிப்பட்ட பிராந்தியக் கனவு ஏதாவது தேசிய மக்கள் சக்தியிடம் இருக்குமாக இருந்தால் முதலில் அவர்கள் உள்நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் முழு இலங்கைக்கும் பாதுகாப்பு இல்லை மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்பதுதான் கடந்த 15 ஆண்டுகால அனுபவமாக உள்ளது. https://www.nillanthan.com/7302/
3 months 2 weeks ago
பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் அநுர அரசும் பல்டி - இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவிடம் தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை 12 APR, 2025 | 12:52 PM - ஆர்.ராம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்கும் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தேர்தல்கள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி நிலைப்பாட்டையும் மாற்றியுள்ளது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவானது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அரசாங்கம் நீக்கும் வரையில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை உடன் நிறுத்துவதற்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான கால எல்லை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவுக்கு வரவுள்ளநிலையில் அதனை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் வாரம் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அப்பின்னணியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுகின்றது. தொழில்துறையும் மக்களும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் வரிச்சலுகைகள் அவசியமானவை என்பது பொதுப்படைய விடயமாகும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இலங்கையில் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டமானது தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டம் தமிழர்களை இலக்கு வைத்து எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று தான் ஜே.வி.பியையும் இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பயன்பாட்டில் பாதிப்புக்குள்ளான அனுபவம் ஆளும் தரப்பில் உள்ளவர்களுக்கும் நன்றாகவே உள்ளது. அவ்வாறான நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், அவ்விதமான நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முழுமையாக மாறியிருக்கின்றார்கள். தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை பல்வேறு விதமான காரணங்களுக்காக பயன்படுத்தும் நிலைமைகளே உள்ளன. எம்மைப் பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த காலத்தில் இருந்த அத்தனை அரசுகளும் அதனை நீக்குவதாகவே கூறிவிட்டு இழுத்தடிப்புக்களைச் செய்து வந்திருந்தார்கள். அப்பின்னணியில் ஒரு கட்டத்தில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்தபோது பிரஸ்ஷல்சுக்குச் சென்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக உறுதியளித்துவிட்டு வந்திருந்தார். அதன்பின்னர் அவர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினை கொண்டுவருவதற்கு விளைந்தார். எனினும் அது கைகூடவில்லை. அதன்பின்னர் தீவிரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுவும் நிறைவேறவில்லை. குறித்த இரண்டு சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பங்களிலும் ஜே.வி.பி. எதிர்க்கட்சியில் இருந்தது. அச்சட்டமூலங்கள் பற்றி உரையாடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோது அதில் பங்கேற்க முடியாது என்று ஜே.வி.பி.அறிவித்ததோடு பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவது தான் தமது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டது. தமது ஆட்சியில் நீக்கப்படும் என்றும் கூறியது. எனினும், நாங்கள் நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டையையும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். அப்போது ஜே.வி.பியும் அதனை ஆதரித்துள்ளது. தற்போது, அந்த வாக்குறுதிகளையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதில் சட்டத்தினை இயற்றுவதற்கு தயாராகின்றது. அநுர அரசாங்கத்தின் திடீர் கொள்கை மாற்றத்துடனான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை வருகின்ற ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பை குழுவானது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடடினாக நீக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கோர வேண்டும் என்றார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்களில் ஒன்றான பி.ஆர்.எல்.எம்.இன் தலைவரும் கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டமானது, தற்போது வரையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டத்தினை நீக்குமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். ஆனால், ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை எமக்கும் வழங்குவார்கள். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தரப்பினருக்கும் வழங்குவார்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது கிடையாது. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் மட்டுமல்ல, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த நிலைமையே தற்போது வரையில்நீடிக்கின்றது. தற்போது ஆட்சிக்கு வந்தவர்களும் இந்தச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருந்தாலும் சில விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டியிருப்பதாக கூறுகின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் நாட்டில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்கள் இறைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் போதுமானதாகவே உள்ளது. ஆகவே, பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி தான் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஏமாற்றும் தந்திரமாகும். ஆகவே தற்போதைய அரசாங்கமும் ஏமாற்றுச் செயற்பாட்டையே செய்கிறது,போலி வாக்குறுதியையே வழங்கியுள்ளது. எனவே பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரையில் ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை நீக்க வேண்டும். அதன் மூலமாகவே அரசாங்கத்தினை வழிக்குக் கொண்டுவர முடியும் என்றார். https://www.virakesari.lk/article/211885
3 months 2 weeks ago
இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது!! Vhg ஏப்ரல் 12, 2025 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை தளபதியாக இயங்கிய கருணா,தன்னுடைய பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் மட்டக்களப்பில் பிரதான சுடரினை ஏற்றி மடிந்த வீரர்களுக்காக அஞ்சலித்து வந்திருக்கிறார் . இறுதியாக 2003 கார்த்திகை இருபத்தி ஏழில் தனது இறுதி அஞ்சலியை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் செலுத்தினார். விடுதலைப்புலிகளின் பாரம்பரியத்தை மீறி அந்த ஆண்டில் சில புதுமைகளை சேர்த்து அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.முன்னேற்பாடுகளிலும் வீரர்களின் அணிநடைமற்றும் அஞ்சலிக்கும் முறை என்பவற்றையும் தானே முன்னின்று பயிற்சி வழங்கி வழிநடத்தினார். சமாதான உடன்படிக்கை காலத்தில் அந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்திருந்தமையால் தரவை மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன.மரபை மீறிய அந்த மாவீரர் நாள் நிகழ்வு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின. அந்த இறுதி நிகழ்வோடு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்த அவர்,அதன் பின்னர் போராளிகள் தொடர்பிலான எந்த ஒரு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. 2003 ற்கு பின்னரான மாவீரர் நாள் அனுட்டானங்கள் நடைபெறும் பொழுதுகளில் ,கருணா நிறைந்த மது போதையில் கிடப்பதாகவே அவரது அருகாமையாளர்கள் காதோடு காது வைத்து பேசிக்கொள்வர். தனது கட்டளையை ஏற்று சண்டையிட்டு மடிந்து போன வீரனைகூட நினைவில் கொள்ளும் நிலையில் அவர் இருப்பதில்லை என்பதுதான் தகவல். ஆனால்,திடீரென ஞானம் வந்தது போல் கதிரவெளியில் கடந்த 10 ஆம் திகதி போய் நின்றிருக்கிறார் கருணா. சித்திரை 10 ஆம் திகதியை பிள்ளையான் அணியினர் சிவப்பு சித்திரை எனும் பெயரில் வெருகல் துறை மற்றும் ஏனைய இடங்களில் தம்மோடு இருந்து மாண்டு போன அல்லது தமிழினத்தை காட்டிக்கொடுத்தனர் என குற்றஞ்சாட்டி விடுதலை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சில உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வந்திருந்தனர் . தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் இதுவரை இடம்பெற்று வந்த அந்த நினைவேந்தல் முதல் தடவையாக இம்முறை கருணா அவர்களின் கைக்கு மாறியிருக்கிறது. 21 வருடங்களுக்கு பின்னர் போராளிகளை அஞ்சலிக்கச்சென்ற கருணா,யாரை நினைவுகூர்ந்திருப்பார்? கருணா என்ற ஒற்றை நபருக்காக தான் கொண்ட கொள்கை,கோட்பாடு எல்லாவற்றையும் மறந்து வெருகல் துறையில் களமாடிய பாரதிராஜாவை நினைவு கூர்ந்திருப்பாரா?அம்மான் என்ற பெயரைக்கேட்டாலே புல்லரித்து நின்ற மாபெரும் தளபதி ராபட்டை நினைவுகூர்ந்திருப்பாரா?அல்லது ஊரவன் என்ற அடிப்படையில் தன்னை நம்பி வந்த ஜிம்கலி தாத்தாவை நினைவுகூர்ந்திருப்பாரா? அல்லாது போனால் கருணா தலையீடு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுள் இருக்கவேண்டும் என்று வாதாடியதால் பிள்ளையானுக்காக கொல்லப்பட்ட நந்தகோபனை நினைவுகூர்ந்திருப்பாரா?பிள்ளையானின் கோட்டைக்குள் நின்று கருணாவுக்காக கொக்கரித்து வெல்லமுடியாது போகவே சையனைட் அருந்தி மாண்டுபோன மருத்துவ போராளி திலீபனை நினைவுகூர்ந்திருப்பாரா? எத்தனை எத்தனை பெறுமதியான உயிர்களை தனது சுயநலத்திற்காக பலியிட்ட கருணா அவர்கள்,நேற்றுவரை அந்த நினைவுகளே இன்றி கிடந்து,இன்று வந்து விளக்கேற்றி அஞ்சலிப்பதன் மாயமென்ன? இங்கே இரண்டு கேள்விகள்தான் தொக்கி நிற்கின்றன. 1.இனி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு கருணாதான் தலைவரா? 2.இனி பிள்ளையானை இந்த அரசாங்கம் சிங்களவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் நடாத்திய அத்தனை கொலைகளுக்கும் காரணகர்த்தாவாக்கி சிறையிலேயே அடைத்துவிடபோகிறதா? வியாளேந்திரனின் சிறை பிரவேசம்,பிள்ளையானின் கைது,கருணாவின் மீளுருவாக்கம் என்பனவெல்லாம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல வரலாற்று பாடங்களை கற்றுத்தந்துகொண்டுதான் இருக்கின்றன. "இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது" https://www.battinatham.com/2025/04/blog-post_99.html
3 months 2 weeks ago
படக்குறிப்பு,ஜான் ஜெபராஜை கைது செய்த போலீஸார் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், 17 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் அவர் மீது, போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருந்தார். தனிப்படை போலீஸார் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஜான் ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர், உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் ஜான் ஜெபராஜை போக்சோ நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்போடு காவல்துறையினர் அழைத்து வந்தனர். யார் இந்த ஜான் ஜெபராஜ்? பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM படக்குறிப்பு,ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது ஜான் ஜெபராஜின் கிறிஸ்தவ மத இசை நிகழ்ச்சிகளுக்கு, பெரும் கூட்டம் கூடுவது வழக்கமாகவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களிலும் இவர் இசை ஊழிய நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தென்காசியை சேர்ந்த ஜான் ஜெபராஜ் (வயது 37), ஒரு கிறிஸ்தவ மத போதகர். தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, அவருடைய சொந்த ஊர் செங்கோட்டை. எஸ்எம்எஸ்எஸ் அரசுப்பள்ளியில் கடந்த 2005 வரை படித்த பின், சதர்ன் ஆசியா பைபிள் கல்லுாரியில் படித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெவிமினிஸ்ட்ரிஸ் என்ற மதபோதக அமைப்பை நிறுவி, அதனை நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்த ஜான் ஜெபராஜ், கிராஸ்கட் ரோட்டில் கிங்ஸ் ஜெனரேஷன் சர்ச் என்ற பெயரில் தனியாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை மற்றொரு பாஸ்டருடன் சேர்ந்து நடத்தி வந்துள்ளார். இலங்கையில் பள்ளி செல்லும் வயதில் 'தாயாகும்' சிறுமிகள் - காரணங்களும் தீர்வுகளும் என்ன? கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா? பெல்ஜியம்: உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம் கடந்த ஆண்டிலிருந்து அந்த ஆலயமும் மூடப்பட்டுவிட்டதாக கிராஸ்கட் ரோட்டில் உள்ள அந்த கட்டடத்துக்கு அருகில் இருப்பவர்கள், பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தனர். அதன்பின், தனியாக அரங்கங்களை எடுத்து ஜெபக்கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் ஜான் ஜெபராஜ் நடத்தி வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக, கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளன. அதேபோன்று, அவர் நடத்திய இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசுகிற பேச்சுக்கள், பாடல்கள் குறித்த காணொளிகளும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் இளைஞர்களின் கூட்டம் மிக அதிகளவில் திரள்வதையும் அதில் காண முடிகிறது. அவருடைய பேச்சும், பாடல்களும், நடனமும் இளைய வயதினரை குறி வைப்பதாகவுள்ளன. கடந்த சில மாதங்களாக கோவையில் ஜான் ஜெபராஜ் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை என்பதும், அவர் இங்கு இல்லை என்பதும் அவருடைய சமூக ஊடகப் பதிவுகளிலிருந்து தெரியவருகிறது. பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM படக்குறிப்பு,கிறிஸ்தவ பாடல்களுடன் அவர் வெளியிட்டுள்ள பல்வேறு இசை ஆல்பங்கள் பல லட்சக்கணக்கான பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று, ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வின்போது, 17 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, தற்போது ஜான் ஜெபராஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெயர் கூற விரும்பாத காவல் அதிகாரி, ''கடந்த 2024 மே மாதத்திலேயே இந்த சம்பவம் நடந்திருந்தாலும், அந்தக் குழந்தைகள் யாரிடமும் சொல்லவில்லை. சில மாதங்களாக அவர் கோவைக்கே வரவில்லை. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிதான், தங்களுக்கு நடந்தது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த சிறுமி பெயரில்தான் தற்போது புகார் தரப்பட்டு, இரு சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார். டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுக்கும் போது இந்தியா மௌனம் காப்பது ஏன்?9 ஏப்ரல் 2025 Y மற்றும் U ஆகிய எழுத்துகளால் பெண் காவல் அதிகாரி கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?9 ஏப்ரல் 2025 மற்ற பாஸ்டர்களின் விமர்சனம் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9 (I) (m) (கடுமையான பாலியல் தாக்குதல்) மற்றும் அதற்கான தண்டனைப் பிரிவு 10 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருவதால் வேறு எந்தத் தகவலையும் பகிர முடியாது என்று காவல் ஆய்வாளர் ரேணுகா கூறியுள்ளார். ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, ஆதரவும், எதிர்ப்புமாக பலவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஜெபராஜுக்கும், மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களுக்கும் இடையில் இணக்கம் இல்லை என்பதும், மோதல் இருந்ததும் பல்வேறு பதிவுகளின் மூலமாகத் தெரியவருகிறது. இதே கருத்தை, பிபிசி தமிழிடம் பேசிய பல்வேறு பாஸ்டர்களும் தெரிவித்தனர். இதற்கு முன்பாக ஜான் ஜெபராஜ் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பல்வேறு காணொளிகளிலும் இந்த மோதல் போக்கு வெளிப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள்10 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 குறிப்பாக, கிறிஸ்தவ மதபோதகர் அகஸ்டின் ஜெபக்குமார் என்பவர், இவரை 'பாட்டுக்காரன்' என்று கூறி, இவர் மேடையில் பேசுகிற சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்குப் பதிலடி தரும் விதமாக, ஜான் ஜெபராஜும் தனது இசை நிகழ்ச்சிகளில் அகஸ்டின் ஜெபக்குமார் பெயரைக் குறிப்பிட்டே விமர்சித்துள்ளார். இவ்விருவருக்கிடையிலான மோதல் காணொளிகளும் சமூக ஊடகங்களில் இன்னும் வலம் வருகின்றன. வேறு சில மதபோதகர்களும் இவரைப் பற்றி விமர்சித்துள்ளனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை கிறிஸ்தவ மதபோதகர்கள் ஐக்கியம் (Pastor's Fellowship) அமைப்பின் தலைவர் சாம்சன் எட்வர்டு, ''கோவையில் பெந்தகோஸ்தே சபை பாஸ்டர்கள் மற்றும் இவாஞ்சலிஸ்ட்கள் என மொத்தம் 800 பேர் எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ளனர். இதில் ஜான் ஜெபராஜ் எப்போதுமே இணைந்ததில்லை. அவரை ஒரே ஒரு நிகழ்வில் ஐந்தே நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.'' என்றார். அவர் மீதான பாலியல் புகாரின் உண்மைத்தன்மை குறித்து எதுவும் தனக்குத் தெரியாத நிலையில், அதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலாது என்று கூறிய சாம்சன் எட்வர்டு, கடந்த சில மாதங்களாக அவர் கோவையில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை என்றார். கோவையில் அவர் எந்த ஆலயத்தையும் வெகுகாலம் நடத்தியதில்லை என்றும் அவர் கூறினார். மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு9 ஏப்ரல் 2025 திரை வசனங்களை பயன்படுத்தியவர் ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி காணொளிகளில், இளைய வயதினரை ஈர்க்கும் வகையில், சினிமா பாடல் மெட்டுக்களில் கிறிஸ்தவப் பாடல்களை பாடுவதும், ஆடுவதும் நகைச்சுவை நடிகர்கள் வடிவேல், விவேக் உள்ளிட்ட பலருடைய பிரபல வசனங்களை அவர் அடிக்கடி பயன்படுத்துவதும் தெரிகிறது. பிரபல இசையமைப்பாளர்கள் நடத்துவது போலவே, அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கும் Live in Concert என்றே சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் நடந்துள்ளது. தன்னைத் தேடி வரும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து, பொறாமையிலேயே மற்ற மத போதகர்கள் தன்னை விமர்சிப்பதாக இசை நிகழ்ச்சிகளில் அவர் பேசியதையும் காணொளிகள் வாயிலாக பார்க்க முடிகிறது. ஜான் ஜெபராஜ் குறித்து மற்ற கிறிஸ்தவ மதபோதகர்களும், மற்றவர்களைப் பற்றி ஜான் ஜெபராஜும் காணொளிகளில் பகிர்ந்துள்ள தகவல்களையும், கருத்துகளையும் பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜான் ஜெபராஜ் மற்றும் அவர் தரப்பில் தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், ''ஜான் ஜெபராஜ் தற்போது தலைமறைவாக இருப்பதால், அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர் வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் விரைவில் அவர் கைதாக வாய்ப்பு அதிகமுள்ளது,'' என்றார். அவர் மீது வேறு எந்தப் புகார்களும் வந்துள்ளதா என்பது பற்றி கேட்டபோது, ''இதுவரை வேறு எந்தப் புகாரும் வரவில்லை. இந்த சம்பவம் கடந்த ஆண்டில் நடந்திருந்தாலும் இப்போதுதான் புகார் வந்துள்ளது. அதனால்தான் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் காவல் ஆணையர் சரவணசுந்தர். கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 வேலை, ஓய்வூதியம், வட்டி: பங்குச் சந்தை சரிவு உங்களை எவ்வாறு பாதிக்கலாம்? 4 முக்கிய விஷயங்கள்9 ஏப்ரல் 2025 மே 18 – சென்னையில் ஜான் ஜெபராஜ் இசை நிகழ்ச்சி ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 18 ஆம் தேதியன்று சென்னை காமராசர் அரங்கத்தில் 'JJ-REBORN என்ற பெயரில் ஜான் ஜெபராஜ் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடப்பதாக அவருடைய சமூக ஊடகப்பக்கங்களில் விளம்பரங்கள் காணப்படுகின்றன. டிக்கெட் புக்கிங் நடப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நான் தேவாலயம் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை என்னுடன் இருந்தவன் திருடிவிட்டான், புதிய தேவாலயம் கட்ட ஒரு கோடி ரூபாய் செலவாகும். அதற்கு நிதி திரட்டவே இந்த இசை நிகழ்ச்சி. இதற்கு பண உதவி செய்ய விரும்பாதவர்கள், இதைப் பொருட்படுத்த வேண்டாம். தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம், '' என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,JOHN JEBARAJ / INSTAGRAM வழக்குப்பதிவுக்கு முன் ஜான் ஜெபராஜ் வெளியிட்ட ஆடியோ போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு, 3 வாரங்களுக்கு முன்பு, ஜான் ஜெபராஜ் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தம் ஒரு மணி நேரம் அதில் அவர் பேசியுள்ளார். கோவை ஒய்எம்சிஏ கட்டடத்தில் முதல் முதலாக சபையைத் துவக்கியது குறித்தும், அதன்பின் கிராஸ்கட் ரோட்டில் மற்றொருவருடன் இணைந்து சபை நடத்தியதாகவும் அதில் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் முதல் தேதியன்று கோவையில் புதிய கட்டடத்தில் மீண்டும் சபை துவங்குமென்றும் உறுதியளித்துள்ள அவர், தற்போது தன்னுடைய சபையில் 2,300 குடும்பங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தன்னைப் பற்றி அவதுாறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுத்தளத்தில் வைத்தால் அதைச் சந்திக்கத் தயாராகவுள்ளதாகவும் பேசியுள்ளார். பல்வேறு பிரச்னைகளால் சாப்பிடாமல் 9 கிலோ எடை குறைந்ததாகவும், தற்கொலைக்கு பலமுறை முயன்றதாகவும் அந்த ஆடியோவில் ஜான் ஜெபராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்துள்ள இந்த பிரச்னையிலிருந்து மீள்வதற்கு கடவுளே நீதிபதியாக இருந்து தீர்ப்பை வழங்குவார் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆடியோவையும் முக்கிய ஆதாரமாக வைத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக காந்திபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கூறியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5xx2qv31lo
3 months 2 weeks ago
சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும் - ஜனாதிபதி வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கிலிருந்து அநாவசியமாகப் பணத்தை பெற்று அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த வங்கிக் கணக்கை நிறைவுறுத்தி பணம் பெறுமாறு தாமே அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுகிறார். அவ்வாறெனில் தற்போது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் இவ்வாறான உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்பட்டது. தற்போது அதனை நாம் மாற்றியுள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கோ வராதவர்கள் தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகளை முன்னெடுக்க உரிய சட்டஅமுலாக்க நிறுவனங்களுக்கு நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம். முன்னர் காவல்துறையினருக்கு பயந்து குற்றவாளிகள் தலைமறைவாகினர். தற்போது முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காவல்துறைமா அதிபரே தலைமறைவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்தனர். அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர். அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை. ஏனையோருக்கே சட்டம் உரித்தானது என அவர்கள் செயற்பட்டனர். எனவே, அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர். அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்று உள்ளது. இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/402764/சட்டவிரோதமாக-வாகனங்களைப்-பயன்படுத்தியவர்களின்-பெயர்-பட்டியல்-விரைவில்-வெளியாகும்-ஜனாதிபதி
3 months 2 weeks ago
13 APR, 2025 | 10:36 AM சுமார் 75 ஆண்டுகளாக போராடிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, உரிமைகளை தர மறுக்கும் பேரினவாத கட்சிகள் வாக்குகளுக்காக இன்று வீட்டு திண்ணையில் வந்து நின்று கதவுகளை தட்டுகின்றனர். அவர்களை மட்டக்களப்பு தமிழர்கள் தோற்கடித்து தன்மானத் தமிழர்கள் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாம் வட்டார வேட்பாளர் செ.நிலாந்தன் தெரிவித்தார். செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், தமிழரசுக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தமிழரசுக் கட்சி இந்த ஐயன்கேணி மண்ணுக்கு என்ன செய்துள்ளது என்று? இலங்கையில் சுமார் 75 ஆண்டுகளாக வரலாற்றைக் கொண்ட தன்மானம் மிக்க தமிழர்களின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய மிக்க தமிழரசுக் கட்சி இந்த கிராமத்திற்கு மாத்திரம் அல்ல வடகிழக்கு தமிழர் தாயகத்திற்காக பல உயிர் தியாகங்களை செய்திருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய கட்சி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் ஐயாவை நாங்கள் பலி கொடுத்திருக்கின்றோம். நிமலன் சவுந்தரநாயகம் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம். சந்திரநேரு ஐயாவை பலி கொடுத்திருக்கின்றோம், கொழும்பில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல உயிர் தியாகங்களை செய்த கட்சி என்றால் அது தமிழரசுக் கட்சி மாத்திரமே. வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக முப்பது ஆண்டுகள் யுத்தம் செய்தனர், அகிம்சை வழியில் அரசியல் வழியில் போராடினர். அந்த நேரத்தில் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த பேரினவாத அரசுகள் கூட தமிழ் மக்களின் போராட்டத்தை ஏற்று பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் இன்று இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக ஆட்சிக்கு வந்த அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமைப் பிரச்சினையும் இல்லை என்ற கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, அரசியல் அதிகாரத்தை தர மறுக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்திருக்கின்றோம், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள் திணைக்களம், வன இலாக திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படுகிறது, மட்டக்களப்பு எல்லைக் கிராமமான மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் கிராமங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முகத்தைக் கொண்டு தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாத்திரம் அல்ல தென்னிலங்கையில் உள்ள பல பேரினவாத கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக இங்குள்ள சில தமிழர்களை ஏமாற்றி கையூட்டுக்களை கொடுத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை தருவதில்லை அவர்கள் தொடர்ந்து சிங்கள மக்களுக்கான ஆட்சியையே நடாத்தி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதைத்தான் செய்கிறது. தமிழ் மக்கள் தங்களது இருப்பைப் பாதுகாக்க எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கின்றனர். அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத அரசு இன்று வந்து எமது வீட்டு திண்ணையை தட்டுகின்றனர் தேசிய மக்கள் சக்தி வாக்களிக்குமாறு. நாம் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் அல்ல ஏனை மாற்றுக் கட்சிகளுக்கும் வாக்களிப்போமாக இருந்தால் நாம் எமது அடையாளத்தை, நாம் தமிழர்கள் என்ற பூர்வீகத்தை எமது வரலாற்றை இழப்போம் என்பதோடு எமது இருப்பை பாதுகாப்பதற்கும் இருப்பதையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இன்றுவரை போராடிவரும் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211944
3 months 2 weeks ago
புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு செய்திகள் மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் வணிகர் கழக அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்திலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம் ஆகிய 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமையவுள்ளது. விவசாயம் சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மீன்பிடி சார் பெறுமதிசேர் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், கடதாசி சார் உற்பத்திப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், இரசாயனம் சார் உற்பத்திப்பொருட்கள் உள்ளிட்ட இலங்கையில் தடை செய்யப்படாத பொருட்களை தயாரிக்க முடியும். இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவம், உள்ளக வீதி வசதிகள், மின்சார வசதிகள் என்பன கிடைக்க வசதி செய்யப்படும். இதற்கு மேலதிகமாக முதலீட்டு ஊக்குவிப்பாக முதலீட்டுக் கழிவுரிமை 200 வீதம் வழங்கப்படும். இது ஏனைய பகுதிகளில் 100 வீதமாக உள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் 30 வருட குத்தகைக்கு வழங்கப்படும். இது பொதுவான நடைமுறை. தேவையை பொறுத்து இதனை நீடித்துக் கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை முதலீட்டு சபை ஒழுங்கமைத்து வழங்கும். தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், கட்டட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் போன்றவற்றிற்கு இறக்குமதி தீர்வை விலக்களிக்கப்படும். ஏற்றுமதி நோக்கிலான தொழில் முயற்சிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யலாம். எனவே மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை இந்த 3 வலயங்களிலும் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறோம். இதன் மூலம் வடமாகாணம் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தேசிய ரீதியாக எமது உற்பத்தியின் பங்களிப்பை அதிகரித்து கொள்ள முடிவதுடன் வடமாகாணத்தில் அதிகளவானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். மேற்படி பிரதேசங்களில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தமது விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டு சபைக்கு சமர்ப்பிக்க முடியும். ஆகவே இந்த வருட இறுதியில் இவ் மூன்று வலயங்களும் உருவாக இருப்பதனால் விரைவாக விண்ணப்பிக்குமாறு யாழ் வணிகர் கழகம் முதலீட்டாளர்களை கோருகின்றது. இது தொடர்பாக மேலதிக விபரங்களை 021 222 1336, +9477 777 6606, மின்னஞ்சல் - jeyamanonr@boi.lk, முகவரி - சிரேஸ்ட பிரதிப்பணிப்பாளர், இலங்கை முதலீட்டு சபை, வடமாகாண காரியாலயம், NHDA கட்டடிம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியும். இது பொருளாதார ரீதியாக கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம். இதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு யாழ் வணிகர் கழகத்தை தொடர்புகொள்ளலாம் - என்றார். https://adaderanatamil.lk/news/cm9efqa1j00a1hyg3e8djsodq
3 months 2 weeks ago
13 APR, 2025 | 10:24 AM உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் கூறுகையில் , தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகிறது. கடந்த காலங்களில் திகன, மாவனல்லை என பல பிரச்சினைகள் உருவாகியது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களே.. அவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் வாழ்கிறீர்கள். இதற்காக அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமையாக பயணிக்க வேண்டியுள்ளது. எனவே தான் இம் முறை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள். பலர் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இவர்களை பார்த்தால் அவர்களுக்குப் பின்னால் மரம் உள்ளது. அம்பாறையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள். நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக கொடுத்து முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம். இன வாத பிரச்சினைகளை இந்த நாட்டில் உருவாக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதனால் முஸ்லிம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசப்படுத்தியுள்ளார்கள். எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, கடன் சுமை என பல இடர்களை சந்தித்தது. தற்போது பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். இதனையடுத்து அரச சேவையை மீள் எழுச்சி பெறவும் மக்களுக்கு திறந்த சேவைகளை வழங்கவும் அரசாங்க துறையில் சம்பள உயர்வை ஏற்படுத்தியுள்ளோம். ரூபா 38000 பெற்ற ஒருவர் ரூபா 63000 வரை பெறுகிறார். ரூபா 54000 பெற்ற வைத்தியர் ரூபா 94000 பெறுகிறார். இதற்காக இந்தவருடம் 11 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 30000 உத்தியோகத்தர்களை அரச துறையில் ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது போன்று அரசாங்க கொடுப்பனவுகளான அஸ்வெசும நலன்புரி சேவை, முதியோர், சிறுநீரக கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளர்களை இணைக்கவுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/211942
3 months 2 weeks ago
யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித! நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் எனக் கூறி பல இடங்களிலும் சிறிது நேரம் தமிழ் மொழியில் உரையாற்றியிருந்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கு தமிழில் பேசவே விரும்புகிறேன். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் தமிழில் கொஞ்சம் உரையாற்றிவிட்டு தொடர்ந்து சிங்களத்திலும் கதைக்கிறேன். எங்களுக்கு இன மத சாதி பேதமிஎல்லை. நாங்கள் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளே. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை - என்றார். https://adaderanatamil.lk/news/cm9f5ca7t00aihyg3q6xspai5
3 months 2 weeks ago
தமிழ் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும் புரியவில்லை. இன்னும்... இந்தியா ஏதாவது செய்யும் என, வீணீர் வடிய பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் நகர்வுகளை எடுக்க... அடிப்படை அறிவு இல்லாதவர்களிடம், நாம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்.
3 months 2 weeks ago
வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி : பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார் 13 APR, 2025 | 10:08 AM வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலமை காணப்பட்டது. சனிக்கிழமை (12) இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை. எனவே, தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி - போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது. எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி, முச்சக்கர வண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியின் தலையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர். வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/211938
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
ஒரு உயிர் பறிபோக காரணமாக இருந்த பெற்றோரை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளையை... கவனிக்கத் தெரியாதவர்கள் ஏன்... குழந்தை பெறுகின்றார்கள். 😡 ஜேர்மனியில் இப்படி ஒரு சம்பவம் நடை பெற்று இருக்குமானால்... பெற்றோர் பெரும் தண்டனையை பெற்று இருப்பார்கள்.
3 months 2 weeks ago
12 APR, 2025 | 12:23 PM - ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவோ ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவோ உத்தியோக பூர்வமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலைமையானது வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தமிழ்த் தலைவர்கள் பல தருணங்களில் இந்தியாவின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது பல்வேறு சந்தர்ப்பங்களை கைவிட்டு வரலாற்றுத் தவறிழைத்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும் தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கையில் தான் ராஜீவ் காந்தியின் வருகை நிகழ்ந்தபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் அச்சமடைந்த நிலையில் இருந்தார். ஆனால், இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்திருக்கின்ற நிலையில் அது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றிருக்கின்றது. அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபயத் திட்டங்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதனடிப்படையில் தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் பார்க்கின்றபோது, இந்தியா தற்போது பொறுமையிழந்துவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஏனென்றால், பிரதமர் மோடி தனது இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியப் பிரச்சினை தொடர்பிலோ, அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ உத்தியோக பூர்வமாக எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை. அவர் ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகக் கூட நேரடியாகக் கூறாது, இலங்கையின் அரசியலமைப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களே. ஏனென்றால் இவர்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டு மாகாண சபை முறையில் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட விடுதலை இயக்கங்கள் மட்டுமே பங்கேற்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளும் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் புலிகளின் தனிநாட்டுக் கொள்கையை தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணித்தார்கள். பிரபாகரனின் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்தார்கள். போரின் முடிவின் பின்னர் அவர்கள் தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வு செய்வில்லை. மாறாக, டில்லி வழங்கிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளாது அவர்களுக்கு கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது வரலாற்றுத் தவறிழைத்தார்கள். டில்லியை விடவும் புலம்பெயர் தமிழர்களையும் மேற்குலகத்தையும் அபரிதமாக நம்பிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முறையாக கையாளாது அவற்றை ஒற்றையாட்சிக்குள் பெறமுடியாதென நிராகரித்துவிட்டு, பொறுப்புக்கூறல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு விசாரணையாளர்கள் என்று நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களின் மீது காலத்தினைக் கடத்தினார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கமான இடைவெளி அதிகரித்து விட்டது. அந் நிலைமையானது, நான்கு தசாப்த இந்தியாவின் காத்திருப்புக்குப் பின்னர் ‘பொருளாதாரத்தினை மட்டும் மையப்படுத்தியதாக’ தனது மூலோபாயத்தினை மாற்றியமைத்துள்ளது. அதனை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதொரு சூழலாகும். ஏனென்றால், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை கையிலெடுத்தால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் பிரதமர் மோடியின் அடுத்த இலங்கைக்கான பயணத்தின்போது அவர் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூடக் கோரிக்கை விடுக்காத நிலைமைகளே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே, தற்போதைய சூழலை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தமது பழைய சித்தாதந்தங்களை கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்காக டில்லியுடன் மீள் ஊடாட்டத்துக்குச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது என்றார். https://www.virakesari.lk/article/211882
Checked
Sat, 08/02/2025 - 17:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed