புதிய பதிவுகள்2

சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!

3 months 2 weeks ago
சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து! சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும். இது திறந்த சுழற்சி செயற்பாட்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும் எனவும் இந்த மின் நிலையம், குறிப்பாக இரவு நேரங்களிலும் குறைந்த காற்றழுத்த நேரங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Regasified Liquefied Natural Gas (R-LNG) மூலம் இயக்கப்படுவதால், இது கோரிக்கையின் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் திறனை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்தின் மின்உற்பத்தி செயற்பாடுகள், 2028 ஆம் ஆண்டு முதல் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றமடைவதால், எரிபொருள் செலவுகளை 50 வீதம் குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் எனவும் நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428381

சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!

3 months 2 weeks ago
வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம்-ட்ரம்ப்! அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் ,”எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது,” என்று தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறதுடன் சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா தற்போது 145% ஆக உயர்த்தி உளள நிலையில், பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது. உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வரும் நிலையில், அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மோதல் குறிப்பாக இரு நாடுகளுக்கும் பரவலாக உலக நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428405

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
சாதனைமேல் சாதனை: அபிஷேக் சிக்சர் மழையால் 246 ரன் இலக்கை அநாயசமாக எட்டிப் பிடித்த சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியுள்ளது. 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோற்றிருந்த அந்த அணி, நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 246 ரன் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து ரசிகர்களை வியக்க வைத்தது. அந்த அணியின் தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட், இந்த தொடரில் முதன் முறையாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்து சாதனை சதத்துடன் அந்த அணியை எளிதாக வெற்றி பெறவும் வைத்தார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலிலும் ஏற்றம் கண்டுள்ளது. அதிரடியால் மிரட்டிய அபிஷேக் சர்மா பல சாதனைகளையும் படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்த அந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. முந்தைய போட்டியில் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோல்வியில் தள்ளிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மிரட்டினார். முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பிரப்சிம்ரன் பவுண்டரிக்கு விரட்ட, அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தை கிரீசுக்கு வெளியே வந்து சிக்சருக்கு விளாசினார் ஆர்யா. ஷமியின் அடுத்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். இருவரது அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது. ஆனால் ஆர்யாவின் வாண வேடிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் வழக்கமாக இறுதிக்கட்ட ஓவர்களை வீசும் ஹர்ஷல் படேல் நேற்றைய ஆட்டத்தின் போக்கால் தொடக்கத்திலேயே கொண்டு வரப்பட்டார். அதற்கு சன்ரைசர்ஸ் அணிக்க பலனும் கிடைத்தது. 13 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசியிருந்த ஆர்யா, ஹர்ஷல் படேல் பந்தில் நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாசும் தொடக்கம் முதலே பட்டாசாய் வெடித்தார். சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரப்சிம்ரன் ஸ்ரேயாஸ் விளாசல் பஞ்சாப் கிங்ஸ் அணி தனக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஆர்யா அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரனும் கேப்டன் ஸ்ரேயாசும் ரன்ரேட்டை அதிகபட்ச நிலையில் அப்படியே பராமரித்தனர். இருவரது பேட்டில் இருந்தும் பந்துகள் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் சென்ற வண்ணம் இருந்தன. ஸ்ரேயாஸ் தனது ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமான அரைசதத்தை எட்டினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரைசதம் கண்டார். மறுபுறம் சன்ரைசர்ஸ் சார்பில் ஐபிஎல் அறிமுகம் கண்ட ஈஷான் மலிங்கா தனது முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரனை ஆட்டமிழக்கச் செய்தார். பிரப்சிம்ரன் 23 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களை சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்ரேயாஸ் ஹர்ஷல் படேல் இம்பாக்ட் சன்ரைசர்ஸ் அணிக்கு தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்த ஹர்ஷல் படேல் இறுதிக்கட்ட ஓவர்களிலும் தாக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 250 ரன்களை எளிதாக தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு அணை போட்டவர் ஹர்ஷல் படேல்தான். ஆட்டத்தின் 15-வது ஓவராக தனது மூன்றாவது ஓவரை வீச வந்த ஹர்ஷல் படேல் அதிரடியில் எதிரணிகளை மிரட்டக் கூடிய ஷஷாங்க் சிங் விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல், 18-வது ஓவரில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் தடாலடி வீரர் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் ஹர்ஷல் பெவிலியனுக்கு அனுப்பினார். ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 82 ரன் எடுத்தார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார். முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு அவரது அணி ரசிகர்களை குஷிப்படுத்தினார். முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை குவித்தது. ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹர்ஷல் படேல் (பவுலர்) சன்ரைசர்ஸ் பதிலடி 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி இந்த சீசனில் முதன் முறையாக சிறப்பான தொடக்கம் தந்தது. யான்சென் வீசிய இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி வாண வேடிக்கையை தொடங்கி வைத்தார். அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். நடப்பு சீசனில் முந்தைய போட்டிகளில் ஜொலிக்காத அபிஷேக் அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் போட்டியில் அதிரடியில் மிரட்டினார். அவர் 2 முறை அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பவும் செய்தார். 28 ரன்களை எடுத்திருந்த போது டீப் பாயிண்டில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யாஷ் தாகூர் தவறவிட்டார். அதேபோல், 57 ரன்கள் எடுத்திருந்த போது, சாஹல் வீசிய ஓவரில் அபிஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாஹல் தவறவிட்டார். இரு கண்டங்களில் இருந்தும் தப்பிய அபிஷேக் தனது அதிரடியை ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்தில் தொய்வடைய விடவே இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிராவிஸ் ஹெட் டிராவிஸ் ஹெட் - மேக்ஸ்வெல் வாக்குவாதம் 19 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து அவர் அசத்தினார். அபிஷேக் - ஹெட் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 7.3 ஓவரிலயே சதத்தை எட்டிவிட்டது. டிராவிட் ஹெட் 31 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் மேக்ஸ்வெல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அப்போது மேக்ஸ்வெல் ஏதோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டாய்னிஸ் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். சேஸிங்கில் 9-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்குத் தேவையான ரன்னில் பாதியை எடுத்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 171 ரன்களை எட்டிய போது ஒருவழியாக முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 13-வது ஓவரில் சாஹல் வீசிய இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் அடித்த பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் செய்தார். எனினும், இதனை பெரிய அளவில் கொண்டாடும் மனநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கவில்லை. காரணம், முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்திய போது சன்ரைசர்ஸ் அணி சாத்தியமில்லாததாக கருதப்பட்ட வெற்றியை சாத்தியமான ஒன்றாக ஆக்கியிருந்தது. டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபிஷேக் சர்மா சதம் டிராவிஸ் ஹெட் அவுட்டானதும் அடுத்த 4 பந்துகளில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது முதல் சதம் இதுவாகும். தொடக்கம் முதலே வாண வேடிக்கை நிகழ்த்திய அபிஷேக் 40 பந்துகளில் தனது முதல் சதத்தை அதுவும், சேஸிங்கில் அடித்தார். சதம் அடித்ததும் தனது ஸ்டைலில் கொண்டாடினார். அத்துடன், 'இது ஆரஞ்சுப் படைக்கானது' என்று ஒரு பேப்பரை பெவிலியனை நோக்கி காட்டினார். இந்த சீசனில் முந்தைய போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத அபிஷேக் இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 10 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி, 141 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த கட்டத்தில் ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. கிளாசனும், இஷான் கிஷனும் எளிதான வெற்றியை விரைவிலேயே தங்களது அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை 9 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே சன்ரைசர்ஸ் அணி எட்டியது. சன்ரைசர்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன்12 ஏப்ரல் 2025 தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா சாதனைமேல் சாதனை அபிஷேக் சர்மா அடித்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன் லோகேஷ் ராகுல் அடித்த 132 ரன்களே ஐபிஎல்லில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. அபிஷேக் சர்மா சேர்த்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி பேட்டர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். அபிஷேக் சர்மா மூன்றாவது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டுள்ளார். அந்த வரிசையில், நிகோலஸ் பூரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அவர் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. அந்த வகையில், ஆர்சிபி அணியுடன் இந்த சாதனையை அந்த அணி பகிர்ந்து கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா இன்றைய ஆட்டங்கள் முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்: ஜெய்ப்பூர் நேரம்: மாலை 3.30 இரண்டாவது ஆட்டம் டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடம்: டெல்லி நேரம்: இரவு 7.30 நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்12 ஏப்ரல் 2025 சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 14 நேரம்- இரவு 7.30 இடம் – லக்னெள ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 349 ரன்கள் (6 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y477r00g7o

யாழில் எறும்புக்கடியால் பிறந்து 21 நாட்களேயான சிசு உயிரிழப்பு

3 months 2 weeks ago
13 APR, 2025 | 10:38 AM யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக சனிக்கிழமை (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211941

நானும் ஊர்க் காணியும்

3 months 2 weeks ago
நாங்கள் ஒரு வேலைக்கு போனால்; மனச்சாட்சிக்கு பயந்து, சரியாக, வாங்கும் சம்பளத்துக்குஉண்மையாக, சம்பளம் தருபவர் மனநிறைவடையும் படி உழைக்கிறோம். அப்படித்தான் மற்றவர்களும் என நினைப்பது தவறு. அவர்கள் ஓம் என்று ஒத்துக்கொள்வார்கள், பிறகு ஏதேதோ சொல்லி இடையில் சென்றுவிடுவார்கள். அவர்கள் விட்ட குறை வேலையை வேறொருவர் தொடர மாட்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு கொள்கை. அதனால் அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து தாங்கள் நினைப்பதை சாதித்து விடுகிறார்கள். ஒன்று, நீங்களும் அவர்களோடு களத்தில் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும், எல்லா வேலைகளும் முடியாது. புல்லுபிடுங்கல், கூட்டல், துடைத்தல் வேலைகளில். மற்ற வேலைகளில் அவர்களோடு கூட நிற்பது நல்லது. நாங்களும் எங்கள் உறவினர்களை வேலைக்கு அழைத்தே நிறைய இழந்துவிட்டோம், இதனால் அவர்கள் நினைப்பது; நம்மை எப்படியென்றாலும் ஏமாற்றலாம், அவர்களை விட எங்களுக்கு வேலைக்கு வேறு கதி இல்லையென்றே. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்ற கற்றுக்கொண்டு விட்டார்கள். நாமே நம் வேலை செய்ய முயற்சித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
உங்களுக்கு அடிக்க வேணும் என்டு அடிச்ச மாதிரிக் கிடக்கு. SRH இப்பிடிப் போட்டு வெளுத்துவிட்டாங்களே. சிங்கம் கூட்டைவிட்டு சிங்கிளா போனதால வந்த வினை.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஞாயிறு 13 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 11 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 12 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் ஏராளன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 07 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் நுணாவிலான் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஆமா சென்னையின் தல இன்று பத்துக்கட்டளைகளை தனது படையணிக்கு பிறப்பித்து அந்தக் கட்டளைகளை கண்ணும் கருத்துமாகப் பின் பற்றினால்( இன்னும் பல தோல்விகளை அட சி கருமம் கருமம் )😂 மேலும் பல வெற்றிகளை பெற்று முன்னேறலாம் என அறிக்கை விட்டுள்ளார்😗

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
பம்மல் கே சம்பந்தம் இன்றைக்கு கையை விட்டிட்டுது, அண்ணா........ நாளைக்கு பஞ்ச தந்திரத்துடன் வருகின்றேன்................🤣. தெனாலியில் நாய் கலைக்க கமல் பயத்தில் ஓடிப் போய் ஓட்டப் போட்டியில் முன்னுக்கு வந்தது போல என் நிலை அச்சு அசலாக.......... எத்தனை அணிகள், எத்தனை வீரர்கள், எத்தனை நிற பிட்சுகள்.......... பஞ்சாப் அணியில் விளையாடுகின்ற சிம்ரன் மட்டும், ஏனோ தெரியல்ல, மனதில் அப்படியே நிற்கின்றார்..........😜. சென்னையே வெண்ணை என்று கூப்பிடக் கூடிய நிலையில் இருந்த ஹைட்ரபாத் இப்படி அடிப்பார்கள் என்று யார் நினைத்தது................ இப்ப சென்னை தான் கடைசியா............🫣.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நாளையான் விளையாட்டில் யார் யாரைத் தெரிவு செய்தார்கள் என்ற விபரத்தைத் தந்தால் தான் இன்று இரவு நல்ல கனவு வருமா ...அல்லது கெட்ட கனவு வருமா..... எண்டு ஒரு முடிவுக்கு வரலாம் 😂🤣

நானும் ஊர்க் காணியும்

3 months 2 weeks ago
இப்போதைக்கு அப்பிடி காணி கீணி வாங்கிறமாதிரி யோசினை இல்லை. காலம் மாறலாம். பார்ப்போம். இயந்திரங்களை வாங்க முடியுமாயின் வாங்கி உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொன்னமாதிரி, அங்கே இருந்து செய்வதுதான் நல்லது. சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்களும் உங்களிடம் வருகைதரலாம்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
தனித்து வெல்லும் கட்சி என்று நினைத்திருக்க, கடைசியில் தவெக போல தனியவே நில் என்று விட்டிட்டார்கள்...........🤣. ஒரு பிள்ளைக்கு மட்டும் புள்ளி கிடைக்காத அநீதி இன்றைக்கு உங்கள் எல்லோரின் நினைவுகளிலும் நடுச்சாமத்தில் வந்து, அது உங்களின் நித்திரைகளை குழப்பட்டும்...............🤣🤣.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
உண்மைதான். அவர் தனது இணையரையும் விட்டு, ஒரு மாரக்கமாத்தான் போய்க்கொண்டிருக்கிறார். வாழ்த்துகள் சுவி. நல்ல வேளை, காவிய நம்பி கவுளேல.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நேற்று மகா மன்னர் அடித்த குத்துக் கரணம் இன்று அவரின் முடியைக் காப்பாற்றியுள்ளது 😇 படைத் தளபதியை எதிரிகளின் கோட்டைக்குள் அனுப்பி அவர்களுக்கு 😂 பலத்த சேதத்தை ஏற்படுத்தி இன்றும் மன்னராகத் திகழ்கின்றார் 🤣

'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!

3 months 2 weeks ago
வாரத்தில் 5 நாட்களாவது ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி உடற்பயிற்சிகள் செய்துவந்தால் இவர் அடைந்த பயன்கள் இவை
Checked
Sat, 08/02/2025 - 17:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed