புதிய பதிவுகள்2

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் கைது!

1 week 3 days ago
NPP அரசாங்கம் மஹிந்தவின் பினாமிகளையும், அடியாக்களையும் ஒவ்வென்றாக தூக்கிக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் பலிக்கடாவாக்கப்பட்டு மஹிந்த காப்பாற்றப்படுவாரா அல்லது அரச சாட்சியாக மாறி மஹிந்தவும் அவருடைய குடும்பமும் உள்ளே போவார்களா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நெவில் வன்னியாராச்சியே மஹிந்தவின் முக்கிய பினாமியாகும். அவருடைய பெயரில் 12 பேரூந்துகள், 8 ரிப்பர்கள் (tipper vehicle), 3 பெட்ரோல் நிலையங்கள், 32 வங்கிகளில் 41 வாங்கிக்கணக்குகள் என பெருவாரியான சொத்துக்கள் உள்ளன.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
அது. நேற்று. இது இன்று. நான். எழுதியது. இன்றைய. நிலமையை. ்்்்்்மேலும். இந்த கேள்விக்கான. பதில். மற்றும். அரசியல்வாதிகளை. நேரடியாக. நேர்மையாக. விவாதியுங்கள். உத்தம்மான. ஒழுக்கமான. ஒரு தலைவனின். போராட்டத்தை. பிரபாகரன். நடத்திய. விடுதலைப் போராட்டத்தை. ஒழுக்கம். கெட்ட. விரும்பி வந்தாய். பல ஆண்டுகளாய் படுத்துக். கொண்டேன். என்று. சொல்லும். சீமான். தொடர முடியுமா. ? அவள். போடும். வழக்குகளை. விசாரிக்க விடமால்். தடைகளை. ஏன். நீதிமன்றத்தில். கோர வேண்டும். ? அதை. சீமானின். பலியல். வல்லுறவு. சரி. என்பவர்கள். கூறக்கூடாது.

ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்!

1 week 4 days ago
இவர்கள் சொல்வதை மற்றைய நாடுகள் அங்கீகரித்து செயற்படுத்த வேண்டும். ஆனால் சர்வதேசத்துக்கு தாம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்ற மாட்டார்கள், அதற்கு சம்பந்தமில்லாத ஆயிரம் காரணங்களை, அறிக்கைகளை வெளியிடுவர். இலங்கைக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் சொல்ல வேண்டியது; உங்கள் சட்டங்களை உங்கள் நாட்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள், எங்கள் இறையாண்மையில் தலையிடுவதையோ, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எங்களுக்கு கட்டளையிடுவதையோ நிறுத்திக்கொள்ளுங்கள் என அறிவிக்க வேண்டும்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 week 4 days ago
இது 146 பகுதிகளாக பதிவிட உள்ளேன். எல்லாம் எழுதி முடித்துவிட்டேன். ஆகவே பிரச்சனை இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, இப்பொழுது தோள் மூட்டு வலியில், குறிப்பாக வலது தோளில், நான் சிக்கியிருக்கிறேன். தற்போது மிகக் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இனிமேல் நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளைத் தவிர, புதிய பதிவுகளை எழுதுவதை மிகக் குறைக்கவோ, சில காலம் முற்றிலும் நிறுத்தவோ உள்ளேன். அடிப்படை தேவைக்கு அப்பாற்பட்டு, வலது கையால் வேகப்பந்து வீசுவது, பாரங்கள் தூக்குவது, அல்லது கையால் கூடுதல் வேலை செய்வதை தவிர்க்கிறேன். மருத்துவ சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, மருத்துவர் அறிவுரையின் படி என் வருங்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பேன். மிக்க நன்றி என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் மற்றும் கருத்து தெரிவிப்பவர்களுக்கும்

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு!

1 week 4 days ago
பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும். இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கொந்தளிப்பு தொடர்ந்தது, தத்யாலில் போராட்டக்காரர்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஆயிரக்கணக்கான மேலதிக வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர். முசாபராபாத்தில் ஐந்து போராட்டக்காரர்களும், தீர்கோட்டில் ஐந்து பேரும், தத்யாலில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் குறைந்தது மூன்று பொலிஸ் அதிகாரிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைதியின்மை ஒரு பகுதியில் மட்டும் நிற்கவில்லை. முசாபராபாத்துடன், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி ஆகிய இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் மற்றும் மோதல்கள் பதிவாகியுள்ளன, இது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது. ஊடக அறிக்கைகளின்படி, 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமாபாத் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக குற்றம் சாட்டி, கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (JAAC) இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பிராந்தியம் முழுவதும் சந்தைகள், கடைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் மூடப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1449364

பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளத்தால் 275 சிறுவர்கள் பலி : உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

1 week 4 days ago
02 Oct, 2025 | 01:05 PM பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர். வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 321 குழந்தைகள், 450 ஆண்கள் மற்றும் 292 பெண்கள் அடங்குவர். பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 661 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், சேதத்தின் அளவை மதிப்பிடவும் அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்த வெள்ளப் பாதிப்பின் தொடர்ச்சியாக, நாட்டில் பணவீக்கம் தற்காலிக அடிப்படையில் அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த இயற்கை சீற்றம் பாகிஸ்தானில் பெரும் அழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/226671

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் கைது!

1 week 4 days ago
Published By: Digital Desk 1 02 Oct, 2025 | 02:29 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இலஞ்சம் மற்று் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தபட்டு வருகின்றார். அதனையடுத்து நெவில் வன்னியாராச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226676

மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!

1 week 4 days ago
02 Oct, 2025 | 02:28 PM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 1,700 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி. எஸ்.சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/226681

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
தலைவர் எமக்கு மட்டும்தான் சொந்தமென முற்றுப்புள்ளிகள் வைத்து எழுதவும் முடியாது.சொல்லவும் முடியாது. தலைவரை இன்று தமிழினத்தின் தலைவர் என்றே சொல்கின்றனர்.அது தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம். கடவுளை வணங்குவதற்கு/நேசிப்பதற்கு யாருடைய அனுமதியும் உத்தரவுகளும் யாருக்கும் தேவையில்லை.
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed