1 week 4 days ago
இலங்கையர்களில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம் 'எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை' என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது, வருடாந்தம் மது பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மது பாவனை முன்னனி காரணியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, மது பாவனையினால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள், மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மதுசார பாவனை ஒரு முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையர்களில்-மதுவால்-தினமும்-50-பேர்-அகால-மரணம்/175-365626
1 week 4 days ago
குழந்தை மீட்பு;17 வயதுடைய பெற்றோருக்கு விளக்கமறியல் ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (1) அன்று அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை பிரசவித்து அதனை அநாதரவாக கைவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். மேலும் 17 வயதுடைய குறித்த பெற்றோர்கள் திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம் மீட்கப்பட்ட பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) அன்றுபெற்றெடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை கைது செய்த பொலிஸார் அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது இருவரையும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தி பின்னணி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தையை கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) அன்றுமீட்கப்பட்டிருந்தது. இதன் போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (30) ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாய் உள்ளிட்டோரை கைது செய்தனர். அத்துடன் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்17 வயதுடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் குழந்தையின் தந்தையின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார். இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை காதலியின் வீடு சென்று எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள் என்று பெற்றுக் கொண்டு வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தந்தை அவரது உறவுக்கார பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளார். உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவ்வுறவுக்கார பெண்ணும் சம்மதித்துள்ளார். இந்த நிலையில் குழந்தையின் தொப்புள்கொடி உரிய முறையில் வெட்டப் படாமை காரணமாக அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததை அடுத்து அருகில் உள்ள ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்தே குழந்தையொன்று ஒலுவில் அண்டிய பகுதியில் நபரொருவர் கண்டெடுக்கப்பட்டதாக கதை பரவியது. இந்தப் பின்னணியில்தான் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/குழந்தை-மீட்பு-17-வயதுடைய-பெற்றோருக்கு-விளக்கமறியல்/175-365630
1 week 4 days ago
வடக்கு, கிழக்குப் பாடசாலைகளை நவீனமயப்படுத்த 'நிப்பொன்` உதவி! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாட சாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் நிப்பொன் மன்றம் உத்தரவாதமளித்துள்ளது. டோக்கியோவில் உள்ள நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவருக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நடந்தகலந்துரையாடலில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். https://newuthayan.com/article/வடக்கு,_கிழக்குப்_பாடசாலைகளை_நவீனமயப்படுத்த_'நிப்பொன்%60_உதவி!
1 week 4 days ago
செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கருத்து தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதன்போது கூறினார். யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/செம்மணி-மனிதப்-புதைகுழி-2/
1 week 4 days ago
மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு! மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு எதிராக பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சனிக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மேலும் ஐந்து நபர்களுக்கு எதிராகவும் மன்னார் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் அடங்குவர். குறித்த நபர்கள் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்பட்ட நிலையில் , ஐந்து சந்தேக நபர்களையும் தலா ரூ.5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. https://www.samakalam.com/மன்னார்-போராட்டக்காரர்க/
1 week 4 days ago
யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்! adminOctober 2, 2025 மகாத்மா காந்தியின் 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது. https://globaltamilnews.net/2025/221065/
1 week 4 days ago
வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட விசா! adminOctober 2, 2025 திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. குறித்த விசேட விசா ஜெர்மன் நாட்டவரான ப்ரே ட்ரெக்ஸ்செல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைய, 5 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும். அதேநேரம், 10 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 2 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும். நிரந்தர வதிவிட விசா https://globaltamilnews.net/2025/221068/
1 week 4 days ago
எங்கே ஐயா ஸ்டாலினின் இரும்புக்கரம்?திராவிட மாடல் ஆட்சி சிற்ப்பாக நடக்கிறது.
1 week 4 days ago
பிராமணரான ஸ்ரீதர் வேம்பு தனது தகவல் பரிமாற்ற செயலிக்கு 'அரட்டை' என்று தமிழில் பெயர் வைக்கிறார். தமிழைப் பேசிப் பிழைத்த திராவிடவாதியான கருணாநிதி குடும்பம் தங்களின் தொலைக்காட்சிக்கு சன் டிவி என்று பெயர் வைத்தது. சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்க்கும் பிராமணர்களை தமிழர்கள் அல்லாதவர்கள் என்று போலியாகக் கட்டமைக்கும் ஆரிய திராவிட இனவாத அரசியல் ஒழிக்கப்படவேண்டும்.
1 week 4 days ago
Published By: Digital Desk 1 02 Oct, 2025 | 09:56 AM யாழ். நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (01) மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடாத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள் வெளியாகவில்லை. பொது இடத்தில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதால் மக்கள் அச்ச நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/226638
1 week 4 days ago
நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில், நேற்று (01.10.2025) இக்குழுவின் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது, சுயாதீன சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சு, இதற்கான அடிப்படைக் கருத்துப் பத்திரத்தைத் தயாரித்த பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இக்கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாரிந்த ரணசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmg8rxgr200rro29nma7dwrh3
1 week 4 days ago
01 Oct, 2025 | 03:58 PM (இராஜதுரை ஹஷான்) வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடக பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ராஜபக்ஷர்கள் இந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட பொய்களை உண்மையாக்குவதற்கு முயற்சித்தார்கள். வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கைது செய்து போலியான வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் முயற்சித்தார்கள். அந்த அதிகாரிகள் தான் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரத்தில் போலியான வாக்குமூலம் வழங்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார். ஒருசில அதிகாரிகள் போலியான சாட்சியங்களை திரட்டி அரசாங்கத்தையும்,ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு விடயங்களை குறிப்பிடுகிறார். இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிக்கையிட வேண்டுமே தவிர ஊடகங்களுக்கு குறிப்பிட கூடாது. அரசியல் பேசுபொருளுக்காகவே இந்த விடயம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்த விடயத்துடன் தொடர்புடைய சி.சி.டி காணொளியில் இடப்பில் கை வைத்துக் கொண்டிருப்பவர் தனது கணவர் என்று அவரது மனைவி குறிப்பிட்டதாக பொலிஸார் குறிப்பிடுகிறார். அந்த நபர் கடந்த காலங்களில் யாருடன் இருந்தார்,யாருக்காக செயற்பட்டார் என்பதை பொலிஸார் விசாரிக்க வேண்டும். வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து விட்டது.தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்று தெரியவில்லை. அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய பொலிஸ் ஊடக பேச்சாளர் ஊடங்களுக்கு பொய்யான விடயங்களை குறிப்பிடுவதும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகவல்களை குறிப்பிட்டால் அவருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/226599
1 week 4 days ago
'குழந்தைகளை இழுத்து செல்லும் ஓநாய்கள்' - உத்தரபிரதேசத்தில் இங்கே என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். கட்டுரை தகவல் சையத் மோஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025 "நாங்கள் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும்போது, எனது மகன் தன் சகோதரியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்தான் . அப்போது இரண்டு ஓநாய்கள் வந்து அவனை இழுத்துச் சென்றன. நாங்கள் ஒருபுறம் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மற்றொரு ஓநாய் எங்கள் மீது பாய்ந்த போது என் மகன் எங்கள் கைகளிலிருந்து நழுவினான் " என்று அனிதா விவரிக்கிறார். செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். அன்றிலிருந்து குழந்தையை காணவில்லை. அனிதாவின் முழு குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது. லக்னோவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தின் கைசர்கஞ்ச் தாலுகாவில் சில கிராமங்கள் தற்போது கடும் பயத்தில் வாழ்கின்றன. காரணம், இரவும் பகலும் தாக்கும் ஓநாய்கள். "ஓநாய் தான் இப்படி தாக்குகிறது. இது எங்கள் டிரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. கிராமவாசிகள் வீடியோவும் எடுத்துள்ளனர்" என்று பஹ்ரைச் துணை நிதி அதிகாரி ராம் சிங் யாதவ் பிபிசியிடம் தெரிவித்தார். செப்டம்பர் 23-ஆம் தேதி பிபிசி குழு அனிதாவின் வீட்டிற்கு வந்தபோது, அருகிலுள்ள பாபா பங்களா கிராமத்தில் (வெறும் 300 மீட்டர் தொலைவில்) திடீரென பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அலறிக் கொண்டிருந்தனர், பெண்கள் அழுது கொண்டிருந்தனர். இந்தப் பகுதியிலும் ஒரு ஓநாய் மதியம் 1 மணியளவில் தாயின் கைகளில் இருந்து மூன்று வயது குழந்தையைப் பறித்துச் சென்றுள்ளது. உடனடியாக கிராம மக்கள் தைரியமாக ஓநாயை விரட்டியுள்ளனர். இதனால், ஓநாய் குழந்தையை விட்டுவிட்டு ஓடியுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24 அன்று, அருகிலுள்ள பாபா படாவ் கிராமத்தில் ஒரு சிறுமி தாக்கப்பட்டுள்ளார். இங்கும், கிராமவாசிகள் ஓநாயை விரட்டிச் சென்று சிறுமியை மீட்டுள்ளனர், ஆனால் பலத்த காயமடைந்த சிறுமி இறந்துவிட்டார். கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் ஓநாய் தாக்குதல்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி பராக் பூர்வா கிராமத்தில் தொடங்கியது. ஒருநாள் இரவு 8 மணியளவில் தனது தாத்தா முன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மூன்று வயது சிறுமியை ஓநாய் இழுத்துச் சென்றது. மறுநாள் காலை அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அச்சிறுமியின் உடலில் பாதியைக் காணவில்லை. இதுகுறித்துப் பேசிய பஹ்ரைச் மாவட்ட ஆட்சியர் அக்ஷய் திரிபாதி, "மூன்று குழந்தைகள் இறந்துவிட்டனர்" என்று கூறினார். அனிதாவின் குழந்தை இறந்ததாக நிர்வாகம் இன்னும் கருதவில்லை, ஏனென்றால் குழந்தையின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில், பஹ்ரைச்சில் இப்படியான சம்பவங்கள் நடந்தன. அப்போது, வனத்துறை 10 குழந்தைகள் இறந்துவிட்டனர் என உறுதிப்படுத்தியது. ஆனால், இப்போது தாக்குதல் முறை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த ஆண்டு, பெரும்பாலான தாக்குதல்கள் இரவில் நடந்தன. ஆனால் இப்போது அவை இரவும் பகலும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பகலில் தாக்குதல் நடப்பதைப் போலவே மற்றொரு புது முறையிலும் தாக்குதல் நடப்பதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தாக்குதல்களை நேரில் பார்த்த கிராமவாசிகள் இரண்டு ஓநாய்கள் ஒன்றாக வருவதாகக் கூறுகிறார்கள். "அவை மிகவும் ஆரோக்கியமாகத் தெரிகின்றன," என்று ஓநாயைத் துரத்திச் சென்ற சாலிக் ராம் கூறினார். கடந்த ஆண்டு, ஓநாய் தாக்குதல்களின் மையமாக மஹ்சி தாலுகா இருந்தது, ஆனால் இந்த முறை கைசர்கஞ்ச் தாலுகாவின் மஞ்ச்ரா தௌக்லி பகுதி மையமாக உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 45,000 மக்கள் வசிக்கின்றனர் என்று கூறும் கிராமத் தலைவர் தீப் நாராயண், இந்த முழுப் பகுதியும் இந்த ஆண்டு தாக்குதல்களின் மையமாக உள்ளது என்றும் இது காக்ரா நதிக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் விளக்குகிறார். மழைக்காலத்தில், நீர் அணையை அடைகிறது. கிராமத்தில் கான்கிரீட் வீடுகள் குறைவாகவும், கூரை வீடுகள் அதிகமாகவும் உள்ளன. இப்பகுதி முழுவதும் கரும்பு பயிரிடப்படுகிறது, ஆங்காங்கு நெல் வயல்களும் கால்நடைகளும் உள்ளன. "இதுவரை மூன்று குழந்தைகள் இறந்துள்ளனர், ஒருவரைக் காணவில்லை. ஏழு பேர் காயமடைந்துள்ளனர்" என்று பஹ்ரைச் டி.எஃப்.ஓ. ராம் சிங் யாதவ் தெரிவித்தார். தனது குழு உட்பட 32 குழுக்கள் மற்ற மூன்று டிஎஃப்ஓக்களின் வழிகாட்டுதலின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "இரண்டு ஆபரேட்டர்களால் இயக்கப்படும் நான்கு டிரோன் கேமராக்கள் உள்ளன. இவற்றில் ஓநாய் தென்பட்டது. இன்றும் கூட, எங்கள் ஊழியர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு ஓநாய் இருப்பதைக் கண்டனர்" என்று அதிகாரி ராம் சிங் யாதவ் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஓநாய் நடமாட்டத்தை கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்குப் பிறகும், கிராமத்தில் சிறு குழந்தைகள் சுற்றித் திரிவது சோகமான விஷயம். தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் தொடர்ந்து கூறப்படுகிறது," என்று கூறினார். பயத்தில் வாழும் கிராம மக்கள் சுமார் 45,000 மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் யாரும் பாதுகாப்பாக உணரவில்லை. இரவில் மாறிமாறி இந்தப் பகுதியைக் காவல் காத்த கிராமவாசிகள், இப்போது பகலில் கூட குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை எனக் கூறுகிறார்கள். இதனால் கிராம மக்கள் மிகவும் பயந்து போயுள்ளனர், நிரந்தர வீடுகள் இல்லாத பலர் தற்காலிகமாக உயரமான பலகைகள் அமைத்து தூங்குகிறார்கள். சிலர் மரங்களின் மேலும், சிலர் தள்ளுவண்டிகளிலும், வீட்டுக்குள் மூங்கில் கம்புகளைப் பயன்படுத்தியும் உயரமான மேடை போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். "ஓநாய்கள் மீதான பயம் அதிகரித்துள்ளதால், நாங்கள் கம்புகளை வைத்து ஒரு மேடை கட்டியுள்ளோம். ஆனால் பகலில் அதன் மீது உட்கார முடியாது, அதனால் இரவில் அதன் மீது தூங்குகிறோம். முன்பு, ஓநாய் இரவில் எங்களைத் தாக்கும், எனவே பகலில் விவசாய வேலைகளை எளிதாகச் செய்ய முடிந்தது, ஆனால் இப்போது பகலில் வயல்களுக்குச் செல்லக் கூட எங்களுக்கு பயமாக உள்ளது" என்று ஜமீல் என்பவர் பிபிசியிடம் கூறினார். பாதிக்கப்படும் முதியவர்கள் கிராமத்தில், குழந்தைகள் மட்டுமல்ல, முதியவர்களும் ஓநாய் தாக்குதல்களுக்கு இரையாகி வருகின்றனர். சமீபத்தில், ஒரே இரவில் ஐந்து பேர் ஓநாய்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் உயிர் பிழைத்தாலும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 60 வயதுடைய சீதாபி, ஒரு ஓலைக் கூரையின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தார். இரவில் அங்கு வந்த ஒரு ஓநாய் அவரைத் தாக்கியது. இதுகுறித்து அவர் கூறுகையில், "அது என் காலைக் கடித்தபோது, அது ஒரு விலங்கு என்பதை உணர்ந்தேன். அது என்னை இழுத்துச் சென்றது, ஆனால் கொசு வலை இருந்ததால், நான் தரையில் விழுந்தேன். உடனே சத்தமாக கத்தினேன், அக்கம்பக்கத்தினரும் குடும்பத்தினரும் வந்தனர், ஓநாய் ஓடிவிட்டது"என்றார். அன்று இரவு சாந்தி தேவி என்ற பெண்ணும் தாக்கப்பட்டுள்ளார் . 80 வயதான சாந்தி தேவி தனது வீட்டின் வராண்டாவில் படுத்துக் கொண்டிருந்தார். அதிகாலை 1 மணியளவில் ஓநாய் அவரைத் தாக்கியுள்ளது. "அவை என் தலையைப் பிடித்தன . நான் கத்தினேன், குடும்பத்தினர் இரும்புத் தட்டை வைத்து அடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவை ஓடவில்லை. பின்னர் அதிகமானோர் கூடியபோது, அவை ஓடிவிட்டன. அங்கு இரண்டு ஓநாய்கள் இருந்தன. அவற்றின் கண்கள் கண்ணாடி போல பிரகாசித்தன"என்கிறார் சாந்தி தேவி. பகலில் தாக்குதல்கள் நடக்கத் தொடங்கியதிலிருந்து தங்கள் கவலைகள் அதிகரித்துள்ளதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். குழந்தைகளும் முதியவர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் விஜய் சிங் இதுகுறித்துக் கூறுகையில், "மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்குப் பிறகும், வனத்துறை டிரோன்கள் மற்றும் கூண்டுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது"என்கிறார். தாக்குதல் முறைகளில் மாற்றம் இரவில் அதிக ஆபத்து இருந்தாலும், இதுபோன்ற தாக்குதல்கள் பகலிலும் அதிகம் நிகழ்கின்றன, இதனால் அச்சம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீது சிறப்பு கண்காணிப்பு உள்ளபோதிலும், ஓநாய்கள் தாக்குகின்றன. ஓநாய்கள் பகலில் தாக்குவது குறித்து, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் ஷஹீர் கான் கூறுகையில், "அறிவியல் ரீதியாக, பகலில் ஓநாய்கள் தாக்குவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இது பஹ்ரைச்சில் நடக்கிறது என்றால், அது புதிய மற்றும் தனித்துவமான சம்பவம். இது குறித்து விசாரிக்க வேண்டும்" என்றார். இந்த முறை ஓநாய் தாக்குதல்கள் வித்தியாசமாக நிகழ்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு, இதுபோன்ற சம்பவங்கள் இரவில் மட்டுமே நடந்தன, அதிலும் குறிப்பாக ஒரு ஓநாய் மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் இந்த முறை, இரண்டு ஓநாய்கள் ஒரே நேரத்தில் தாக்குகின்றன, பகலில் கூட அவை சுறுசுறுப்பாக உள்ளன. "மழைக்குப் பிறகு, ஓநாய்களின் குகைகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்க வேண்டும். அதனால்தான் அவை புதிய இடங்களையும் உணவையும் தேடிப் புறப்பட்டிருக்க வேண்டும்" என்கிறார் வனவிலங்கு நிபுணர் அபிஷேக். ஓநாய்களின் வாழ்க்கை முறைகள் மாறிவிட்டன என்பதை டிஎஃப்ஓ ராம் சிங் யாதவும் ஒப்புக்கொள்கிறார். "காலப்போக்கில் அவை தங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. இதனால்தான் அவற்றைப் பிடிப்பது கடினமாகி வருகிறது" என்று அவர் கூறுகிறார். வனத்துறை முன்னுள்ள சவால்களும், உத்திகளும் ஓநாய்களின் அச்சுறுத்தல் காரணமாக நிர்வாகம் இப்பகுதியை கண்காணித்து வருவதாக பஹ்ரைச் கோட்ட வன அதிகாரி(DFO) ராம் சிங் யாதவ் குறிப்பிட்டார். "நாங்கள் டிரோன் கேமராக்கள் மூலம் அவற்றைக் கண்காணித்து வருகிறோம், கூண்டுகள் மற்றும் பொறிகள் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் இந்த பகுதியின் பரப்பளவு மிகப் பெரியது" என்கிறார் ராம் சிங் யாதவ். இதுகுறித்து முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் விஜய் சிங் கூறுகையில், "மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்குப் பிறகும், அரசாங்கம் டிரோன்கள் மற்றும் கூண்டுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. எங்களுக்கு உடனடி பாதுகாப்பு தேவை" என்றார். குழந்தைகள் தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்கவும், இரவில் குழுக்களாக இருக்கவும் மக்களை வனத்துறை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களிடையே இந்த பயம் மிகவும் அதிகமாக இருப்பதால், பகலில் கூட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்குகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3q25k1xw6o
1 week 4 days ago
ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 ; இலங்கை வந்தடைந்தது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 02 Oct, 2025 | 10:05 AM ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை - 2025 போட்டிகளுக்காக இந்தியா சென்றிருந்த இலங்கை மற்றும் இந்திய தேசிய மகளிர் கிரிக்கெட் அணிகள், நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. அவர்கள் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 08.35 மணிக்கு ஃபிட்ஸ் ஏர் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் 8 D. - 522 இல் இந்தியாவின் குவஹாத்தியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மேலும், அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226642
1 week 4 days ago
இன்று விளையாடும் இரண்டு அணிகளும் சம பலம் உடைய அணிகள் ஆனால் வெற்றி வாய்ப்பு பாக்கிஸ்தானுக்கு தான் அதிகம்................... விளையாட்டில் எதுவும் நடக்கலாம் பெரிய அணிகள் இந்த இரண்டு அணிகளை சிம்பிலா வென்று விடுவினம்👍..................................
1 week 4 days ago
@ஈழப்பிரியன் முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்வதை நிறுத்தி விட்டிங்களா அண்ணா😁.............................
1 week 4 days ago
1 week 4 days ago
தங்காலை போதைப்பொருள் மீட்பு; மற்றொரு நபர் கைது! தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘பெலியட்டா சனா’ என்று அழைக்கப்படும் சந்தேக நபர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில், சீனிமோதரவில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் சரக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ‘உனகுருவ சாந்த’ என்ற கடத்தல்காரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரின் நெருங்கிய சகா என்று கூறப்படும் ‘பெலியட்டா சனா’ கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் பதுக்கி வைக்க கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மற்றொரு வீட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தங்காலை – மாரகொல்லிய பகுதியில் அமைந்துள்ளஇந்த வீடு போதைப்பொருட்களை மறைத்து வைக்க பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1449301
1 week 4 days ago
சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு! அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் மோட்டார் வாகனத்தின் சாரதி மற்றும் எந்த இருக்கையிலும் அமர்ந்து வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தனிநபரும், சீட் பெல்ட் அணிய வேண்டும். https://athavannews.com/2025/1449273
1 week 4 days ago
இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ரூபாவில் பரிவர்த்தனை மேற்கொள்ள இந்தியா முடிவு! இந்திய ரூபாயின் உலகளாவிய பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் மத்திய வங்கி புதன்கிழமை (01) முன்மொழிந்தது. இதில் உள்ளூர் வங்கிகள் அண்டை நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு ரூபாயில் கடன் வழங்க அனுமதிப்பது மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளின் நாணயங்களுக்கு அதிகாரப்பூர்வ அடிப்படை மாற்று விகிதங்களை நிர்ணயிப்பது ஆகியவை அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, புதன்கிழமை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை முடிவோடு இந்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் இந்தியாவின் நாணய விகித நிர்ணய குழு எதிர்பார்த்தபடி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்தது. முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எல்லை தாண்டிய வர்த்தக பரிவர்த்தனைகளுக்காக பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு ரூபாய் மதிப்புள்ள கடன்களை வழங்க அனுமதிக்கப்படும். ரூபாய் அடிப்படையிலான பரிவர்த்தனைகளை எளிதாக்க, இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகளின் நாணயங்களுக்கான வெளிப்படையான குறிப்பு விகிதங்கள் நிறுவப்படும் என்றும் மல்ஹோத்ரா கூறினார். இந்தோனேசிய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஆகியவை மத்திய வங்கி அடிப்படை விகிதங்களை நிறுவ விரும்பும் நாணயங்களில் அடங்கும். https://athavannews.com/2025/1449280
Checked
Mon, 10/13/2025 - 12:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed