புதிய பதிவுகள்2

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

3 months 2 weeks ago
84 பக்கங்கள் கொண்ட பி டி எப் இல் 20 பக்கத்தில் உள்ள சந்தை வட்டம் படம் AUDJPY முதல் இரண்டு நாள் நிலவரம் இந்த முறைமியினை Market makers method என அழைக்கிறார்கள் இந்த முறைமயினை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரிவ் மாரோ என்பவர், தற்போது இதே முறைமையினை ICT முறைமையில் வேறு பெயரில் அழைக்கிறார்கள் இரண்டு விதமும் யூ ரியூப்பில் குறித்த நபர்களால் தரவேற்றப்பட்டுள்ளது. முதலாவது படத்தில் சந்தை வட்டம் விளக்கப்பட்டுள்ளது. சந்தை வட்டம் 3 நிலைகளை கொண்டது 1. Accumulation (வாரத்தின முதல் நாள் ஆசிய சந்தை நேரம், சந்தையின் முதல் நாள் ஆசியநேரத்தினை இரண்டாவது படத்தில் சிகப்பு பெட்டியினால் குறிப்பிடப்பட்டுள்ளது) 2.Manipulation 3.Trend release வாரத்தின் முதல் நாள் ஆசிய சந்தையில் தமக்கு தேவையான பங்குகளை சந்தையினை உருவாக்குபவர்கள்(Market Makers) வாங்குவார்கள், இதனை Accumulation என கூறப்படுகிறது. அடுத்து இரண்டாவதுநிலை ஆரம்பமாகிறது அதனை Manipulation phase என கூறப்படுகிறது இந்த நிலையில் சாதாரண வாடிக்கையாளர்களாகிய என்னை போன்ற வர்த்தகர்களை (Break out traders) கவர்ந்திழுக்க சந்தையின் தவறான பக்கத்தில் விலையினை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்வார்கள் AUDJPY இல் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதனை பின்பற்றி நானும் வாங்கி இழப்பு ஏற்பட்டது. அடுத்த நிலை சந்தையினை சரியான திசையில் கொண்டு செல்லல்(Trend release) இதன் படி பார்த்தால் குறைந்தது அடுத்த இரண்டு நாளைக்கு விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது வார இறுதியில் விலை உயர்வடையலாம் அல்லது அவ்வாறு நடக்காமலும் விடலாம். முதலாவது உதாரண மாதிரி Up trend இற்கானது, ஆனால் AUDJPY இந்த வாரம் down trend (Mirror image மாற்றி பார்ககவும்) பி டி எப் மற்றும் யுர்யூப்பில் இது தொடர்பான விளக்கங்கள் உள்ளது. இத படங்கள் 7 நாளில் காலாவதியாகிவிடும்.

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
https://www.facebook.com/watch?v=1071579011636009 ஜனாதிபதி தமிழ் மக்களை மீண்டும் பழிவாங்குகிறார்.!! பக்கா அரசியல்வாதி என்பதை இதை தானோ??

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago
இரண்டாவது வாக்கையாவது தாருங்கள் என்று பேரினவாத கட்சிகள் கேட்பது பொதுவேட்பாளருக்கு கிடைத்த வெற்றியே.

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago
இல்லை இந்த இரண்டாவது வாக்கு அதாவது தமிழரின் இரண்டாவது வாக்கு சஜித்க்கு முதல் வாக்கு தான் இது ஒரு மிகச்சிறந்த சுற்றுமாத்து அதாவது சுமத்திரனின். தமிழரசுக்கடசியின். தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது மாதிரி ஆம் ஏனெனில் அவர் கட்சியில் இணைந்த முறை கட்சியை கேவலமாக்கி விட்டது மேலும் அந்த கட்சியிலிருந்து கொண்டு கட்சிக்கு எதிராக வழக்கு போட்ட. முதலாவது இலங்கையன் எந்தவொரு கட்சியிலும். இப்படி இதுவரை இலங்கையில் நடந்தது இல்லை

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago
இந்தா பிடியுங்கோ 👇 Upcoming Presidential Election: How second and third preferences will matter 11 Aug 2024 | By Pamodi Waravita With the next crucial Presidential Election slated to be held on 21 September, Sri Lanka is gearing up to a number of election outcomes. Traditionally, the country has seen two main frontrunners dominating the polls, making the final count relatively straightforward. However, this year’s election may present a different scenario, with some analysts suggesting that it could be a three-way race. This potential scenario raises questions of whether any one candidate would get the required 50% to win the election. To understand the legal framework in place for a potential second count of votes, The Sunday Morning spoke with election monitors and the Election Commission. 50% + 1 vote Speaking to The Sunday Morning, Commissioner General of Elections Saman Sri Ratnayake said that according to the Presidential Elections Act No.15 of 1981, in order for one candidate to win, they must obtain 50% and one vote. “If nobody receives 50% and one vote in the first count, then the two leading candidates – that is, those two who have received the highest number of votes – are considered for the second count. Votes for these two leading candidates are temporarily set aside and everyone who voted for the other candidates are considered – that is, the votes for the other candidates. From these, the second and third preferences are counted towards the first two candidates,” said Ratnayake. He noted that some voters may not have the leading candidates as their second or third preference, resulting in their votes being set aside. “Some may not have either one of the first two candidates as their second preference but would have them as their third preference. That will be counted,” said Ratnayake. The highest number wins in second round Institute for Democratic Reforms and Electoral Studies (IRES) Executive Director Manjula Gajanayake clarified the process, noting that if no candidate was able to collect the required 50% and one vote to win the election, the first and second candidates would be kept aside and the preferential votes cast by those who voted for the remaining candidates counted. “For example, if there are ten candidates, the first and second ones will be kept aside and the preferential votes of those who voted for the other eight candidates will be counted. These will be gradually added to the first or the second candidate. Both of these two votes can be counted in one round. “Once one of those two candidates gets the highest votes, the Election Commission will reveal the winner. Importantly, the 50% law will not be considered in the second round – whoever gets the highest number of votes will win.” Casting your vote said that the least number of candidates in an election historically has been six. As of Thursday (8), the Election Commission said that 22 candidates had officially placed bond deposits, marking their intention to run this time. “When there are more than three candidates, voters can cast their vote by marking ‘1’ and show their next preferences using the numbers ‘2’ and ‘3’,” said Ratnayake. “However, our voters have become accustomed to drawing the cross so if someone draws a cross, we equalise it to ‘1’ or their vote. There is less understanding about the second and third preference votes.” Elections researcher and analyst, Attorney-at-Law D.M. Dissanayake further warned that marking three crosses on the ballot paper or one cross and the numbers ‘2’ and ‘3’ would make the vote invalid. Coin toss Commenting on whether the second count should be done within a specific timeframe, Dissanayake said that there was no such rule. “Usually the first count is sent to the main tabulation centre, which will then announce whether a candidate has obtained the 50% requirement to win the election. The general practice of the staff is to count the second preferences as well, immediately after they count the vote, as they’re waiting for the main centre to dismiss them. Therefore, the whole process won’t take a long time.” However, both Dissanayake and Gajanayake said that the chance of such a situation arising – where a second count would be needed – was unlikely. “This hasn’t happened before. We have always voted for two main candidates. That is the trend – even though this time there are many candidates, two will rise to the top,” said Dissanayake. Gajanayake said that this was an inherent feature of Sri Lanka’s electoral system which promotes an executive-level individual. “If the race is tied even after the second count, the Election Commission can toss a coin to determine the winner.” Modest contingency electoral system pointed out that Sri Lanka had adopted the practice of counting the second and third preferential votes in case of no clear winner as we had no money to conduct a run-off election. “In France and the Maldives, if someone is unable to collect the required votes to win, run-off elections will be held. This happened in the Maldives a few months back because none of the candidates was able to collect 50%, so there was another election between the first two candidates. “The US President is chosen according to the electoral college. However, in Sri Lanka we have a ‘modest contingency electoral system’ where we have enough alternatives to elect our President in one election,” said Gajanayake

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை பீரிஸ் என்பவரின் அறிவுரை சஜித்துக்கு ஆதரவான வாக்குகளை வீணாக்குகின்ற வேலை போல தெரிகின்றது ஏன் என்றால் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி தெரிந்தவர்கள் சொன்னது படி புள்ளடி போடுவதானால் ஒருவருக்கு மட்டுமே போட முடியும் இரண்டு புள்ளடிகள் போட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago
தமிழரின் அரசியல் இருப்பின் வீழ்ச்சிக்கும் சுமந்திரன்தான் காரணமா? இலங்கைத் தமிழர் இந்தியாவிற்கு விசுவாசமாக, ஆதரவாக இருக்குவரை இலங்கைத் தமிழரின் அரசியல் இருப்பு வீழ்ச்சியடைந்துகொண்டே செல்லும்.

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago
அது சரி புலவர் முதலாவது வாக்கும். இரண்டாவது வாக்கும். என்ன வித்தியாசம் ?? 1=2. இல்லையா?? 🤣😂😂🙏

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

3 months 2 weeks ago
சஜித்தின் கட்சிக்காரர் உமாசந்திரபிரகாசும் இப்படித்தான் கூறினார். அவர் கூறினால் அது சஜித் கூறியமாதிரித்தான்.சஜித் சொன்னாலும் சுமத்தின் சொல்லமாட்டார். ஏன் என்றால் அவருடைய அரசியல் இருப்பு சரிந்து கொண்டே வருகிறது.பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தனக்குத்தானே ஆப்பு வைக்க மாட்டார்.

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
எதையும் சொல்லுங்கள் பேச்சுவார்த்தை குழப்பி அடிக்கப்பட்டது என்று கூற வேண்டாம் காரணம் தமிழருக்கு 1,.வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுப்பது இல்லை 2,..வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது இல்லை 3,..வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் அதிகாரமில்லை எந்தவொரு அபிவிருத்தியும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செய்யும் அதிகாரங்கள் கொடுப்பது இல்லை 4,. இந்த எல்லா பேச்சுவார்த்தைகளும். பேச முதலே இலங்கை அரசு குழப்பி அடித்து விட்டது 5. தமிழர்கள் நாங்கள் எப்படி ?? என்னத்தை குழப்பி அடிப்பது?? 6... இன்றைக்குக்கூட இலங்கை அரசு விரும்பினால் டக்ளஸ் முதலமைச்சர் கருணா பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையான் உள்நாட்டு அமைச்சர் சாணக்கியன் நிதியமைச்சர் சுமத்திரன். நீதி அமைச்சர் சுமத்திரன். வெளிநாட்டு அமைச்சர் இப்படி ஒரு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுக்கலாம் யார் மறிப்பது??? எவருமில்லை ஆனால் இவர்களையும் நம்ப அவர்கள் தயார் இல்லை எனவே… தயவுசெய்து தமிழர்கள் பேச்சுவார்த்தை குழப்பினார்கள் என்று சொல்லாதீங்கள். 🙏

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
என்னைக் கைகாட்டுவதால் தாங்கள் மறக்கப்பட்டுவிடுவீர்கள் என்று கற்பனை செய்யாதீர்கள். இந்தக் கேள்வி உங்களை தொடர்ந்துகொண்டே இருக்கும். 👇 விபு களின் பணத்தைச் சூறையாடியவர்கள், 2005 பேச்சுவார்த்தையைக் குழப்பிஅடித்தவர்கள், பிரபாகரனின் கையில் அதிகாரம் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி நின்றவர்கள் மற்றும் அவர்களின் பின்னால் நின்ற நாடு எது என்று எல்லாமே உங்களுக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும். தெரிந்திருந்தும் அவர்களை வெளிக்காட்டாது அவர்களை நீங்கள் பாதகாத்து பிறர் மீது பழி போடுவது ஏன் ?

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. யாராலேயோ வளர்க்கப்பட்டு அவர்கள் அழிக்க நினைக்கும் இடங்களில் போடப்பட்டவர் தாங்கள் என்பதும் தெரியும். உங்களைப் போன்ற பலரும் பல அமைப்புகளிலும் பரவிக் கிடக்கிறார்கள். அவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான். ஏனெனில் எனக்கு அந்தளவுக்கு முள்ளமாரித்தனம் தெரியாது. ஒத்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
எனக்கு எரியவில்லை விசுகர். சகலதும் தெரிந்தும் மெளனமாக நின்று பிறர் மீது பழிபோட்டு நாடகமாடுகிறீர்களே அதுதான் சகிக்க முடியவில்லை. நான் நேராகவே கூறுகிறேன் விசுகர், விபு களின் பணத்தைச் சூறையாடியவர்கள், 2005 பேச்சுவார்த்தையைக் குழப்பிஅடித்தவர்கள், பிரபாகரனின் கையில் அதிகாரம் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி நின்றவர்கள் மற்றும் அவர்களின் பின்னால் நின்ற நாடு எது என்று எல்லாமே உங்களுக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும். தெரிந்திருந்தும் அவர்களை வெளிக்காட்டாது அவர்களை நீங்கள் பாதகாத்து பிறர் மீது பழி போடுவது ஏன் ? அதுதான் சகிக்க முடியவில்லை

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

3 months 2 weeks ago
ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட்டு அதன் பிறகே சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறான். இப்பொழுது அவளது கணவனும் இன்னும் ஐம்பது ஆண்களும் நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்பார்த்து வரிசையில் நிற்கின்றார்கள். அந்த ஆணின் பெயர் டொமினிக்(71). அவரது மனைவியின் பெயர் கீசெலா (72). இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றைய ஆண்கள் 18க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீயணைப்பு வீரர், செவிலியர், சிறைக் காவலர், பத்திரிகையாளர் என வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் வரிசை கட்டி வந்திருக்கிறார்கள் என்பது சமூகத்தின் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆண்களிடம் இருந்து டொமினிக் பணமாக ஒரு ‘சென்ற்’ கூடப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே. பிறகெதற்கு இந்த விளையாட்டு? நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து, தனது பாலியல் கற்பனைகளை திருப்திப்படுத்துவதே டொமினிக்கின் நோக்கமாக இருந்திருக்கிறது. தானும் சளைத்தவன் இல்லை என்று டொமினிக்கும் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவற்றையும் வீடியோ எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இப்பொழுது மொத்தமாக 92 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டொமினிக் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை பார்வையிட்டதில், சிலர் ஒரு முறையே போதும் என்று ஒதுங்கி விட்டிருந்தனர். சிலர் சும்மாதானே என ஆறு முறை கூட வந்திருந்தனர். வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, டொமினக்குக்கோ, வந்து போன ஆண்களுக்கோ உளவியல் பிரச்சினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக முழுமையான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஒரு ஆறுதலான விடயம். ஆனாலும் வீடியோவில் உள்ள 72 ஆண்களில் சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி டொமினிக் மாட்டிக் கொண்டார் என இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். எல்லாம் ஆர்வக் கோளாறுதான். டொமினிக் பல் பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளரின் பாவாடையின் கீழ் கமாராவைப் பிடித்து வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வீடியா எடுக்கப்போய் மாட்டிக் கொண்டதில், சகலதையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள். டொமினிக்கின் கீசலாவுடனான ஐம்பது வருடக் குடும்ப வாழ்க்கை இப்போ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கும் டிசம்பர் 20ந் திகதி வரை நடக்க இருக்கிறது. அதன் பிறகு டொமினிக்குக்கு இன்னுமொரு வாழ்க்கை இருக்கும். அவர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த வீடியோக்களைப் பார்ப்பதற்குத்தான் முடியாமல் போகும். அநேகமாக இந்தச் செய்தி பல மொழிகளில் வந்திருக்கும். நான் வாசித்தது இங்கே, https://www.n-tv.de/panorama/Mann-liess-Ehefrau-von-72-Maennern-vergewaltigen-article25199233.html

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
காட்டி கூட்டி கொடுக்கும் காவாலிகள் பற்றி பேசியதும் ஏன் உங்களுக்கு எரியுது?? உண்மை கசப்பானது. ஆனால் எதிர் கொண்டவர் நாம். எனவே நீங்கள் தூரமாக நின்று உங்கள் கரசேவையை தொடருங்கள்.
Checked
Sun, 12/22/2024 - 22:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed