3 months 2 weeks ago
ஒருமையா பன்மையா அண்ணை?!!
3 months 2 weeks ago
தான் பதவிக்கு வந்தால் செய்வேன் என்கிறார்! பெரும்பாலும் தேர்தல் கால வாக்குறுதி தான், மற்றவர்கள் கரிசனை கொள்ளாத செய்யவேண்டிய பணியை செய்வேன் என்கிறார்! பொறுத்திருந்து பார்ப்போம்.
3 months 2 weeks ago
ஒரு உணவகத்தில் புகைபிடிக்கும் பகுதியில் உள்ள ஓவியம் .........! 😂
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
சஜித் அள்ளி எறிகிறார் வாக்குறுதிகளை. சுமந்திரன் சொல்கிறார் தனக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் நாடே அழியுமாம். சி எம் ஆர் இணைய வானொலி.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
அணிலின் உசாரைப் பார்த்தபிறகுமா இந்தக் கேள்வி . ......! 😂
3 months 2 weeks ago
நான் இனி வீதியில் வேகமாக ஓட மாட்டேன் ஐயா , இந்த ஒருதடவை மட்டும் மன்னித்துக் கொள்ளுங்கள் ......! 😂
3 months 2 weeks ago
சரியாக தேர்தல் நேரம் ஒத்துளைப்பு மாநாடு நடாத்த தீர்மானித்துள்ளார். என்ன ஒரு கரிசனை???
3 months 2 weeks ago
அவர் எத்தனை உறுதி மொழிகளை தந்து ஏமாற்றி உள்ளார். அப்போதும் நம்மில் சிலர் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளோம்.
3 months 2 weeks ago
மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு வந்தாலும் வரலாம்.🧐
3 months 2 weeks ago
இவர் மரத்தில் ஏறிப் போராட்டம் செய்யுமளவு அந்தத் தெய்வம் இவருடன் குடும்பம் நடத்தியிருக்கிறா .......! 😂
3 months 2 weeks ago
காதலன் இருக்கட்டும்…. உங்கள் நிலைப்பாடு என்ன வாலி அவர்களே!?????🤪
3 months 2 weeks ago
நல்லது நல்லது . .......! 👍
3 months 2 weeks ago
பெட்டியை திறந்து பார்த்தால் அங்க ஒன்றுமே இல்லையாம், அதுதான் இந்த கோபம்🤣🤣
3 months 2 weeks ago
எ...மை
எ...மை
அப்படியானால் 2005 முடிவு சரி
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
ரணில்தான் மீட்பர் என்று சுமத்திரன் பலகாலமாக ஏமாற்றி வந்தார். இப்பொழுது ரணிலிடம் பெட்டி வாங்கிக் கொண்டு ரணிலுக்கு எதிராகப் பேசுகிறார். உண்மையில் சுமத்திரன் தான் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்திருக்கிறார்.தமிழ்மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
3 months 2 weeks ago
04 SEP, 2024 | 12:19 PM
கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலத்தைநிறைவேற்ற ஏதுவாக 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அழைப்பு விடுத்தது. பாலியல் வன்கொடுமை தடுப்பு அபராஜிதா மசோதாவை மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக் அம்மாநில சட்டப்பேரவையின் முதல்நாள் சிறப்பு அமர்வின்போது அறிமுகம் செய்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டமூலம் ஒருமனதாக நிறைவேறியது.
‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் சட்டமூலம் 2024 (மேற்குவங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்)’ என்ற தலைப்பில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழக்க நேரும்பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்கு கள் மீதான விசாரணை ஆரம்ப அறிக்கை 21 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதம் விதிப்பதும் இந்த புதிய சட்ட மசோதாவில் அடங்கும்.
குடிமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும்இ குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை சட்டத்தின் முன் முழு வலிமையுடன் சந்திப்பதை உறுதி செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா மாநிலத்தின் உறுதிப்பாட்டுக்கு ஒரு சான்றாகும் என்று வரைவு குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/192818
3 months 2 weeks ago
2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான திகதி மற்றும் மைதானத்தை அறிவித்தது ஐ.சி.சி
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2025 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் இறுதி நாளில் மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்கள் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் ஜூன் 16 ஆம் திகதி “ரிசர்வ் டே” வாக கருதப்பட்டு போட்டி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் -2025 இறுதிப் போட்டி முதல்முறையாக இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்டனில் நடந்த அதேவேளை, தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில்,2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடந்த இரண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முறையே வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியிருந்தன.
உலக தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. தற்போதைய தரவரிசையின் படி இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணி 3வது இடத்திலும், இங்கிலாந்து 4 வது இடத்திலும் உள்ளது.
இலங்கை 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6வது இடத்திலும், பங்களாதேஷ் 7வது இடத்திலும் உள்ளது.
அதேநேரம், ஒட்டுமொத்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 58 ஆட்டங்களில் விளையாடி அதில் 29 போட்டிகளில் வெற்றிபெற்று அதிக வெற்றிகளை பெற்ற அணியாக சாதனை படைத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்காக ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் அலர்டிஸ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கிரிக்கெட் கலண்டரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் ஜெப் அலர்டிஸ் தெரிவித்துள்ளார்.
https://thinakkural.lk/article/308955
Checked
Mon, 12/23/2024 - 04:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed