புதிய பதிவுகள்2

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

4 days 1 hour ago
வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை adminFebruary 1, 2026 மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை வடமாகாண ஆளுநரால் நேற்றைய தினம் சனிக்கிழமை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்: மாவை.சேனாதிராசாவை எனக்கு எனது 10 வயதிலிருந்தே தெரியும். எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடாத்திய ஆசானாகவும் திகழ்ந்தார். நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும், எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது. பதவி ஆசை இல்லாதவர். சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாதவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில் மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். ஒரு அப்பாவியான மனிதர். அவரிடம் உதவி கேட்டு வரும் யாருக்கும் ‘மாட்டேன்’ என்று சொல்லும் துணிவு அவருக்கு இருந்ததில்லை. அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவுக்கு மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். இத்தகையதொரு சிறந்த தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும், என தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாவை.சோ.சேனாதிராவின் முதலாமாண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராசா என்னும் நூலுமாக இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/228116/

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் –  நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

4 days 1 hour ago
தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு adminFebruary 1, 2026 இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு இடையிலான பகுதியில் இந்திய இழுவைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. எல்லை தாண்டி வர வேண்டாம் என நயினாதீவு மீனவர்கள் எச்சரித்தபோது, இந்திய மீனவர்கள் அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், உடனடியாக இந்திய துணைத்தூதரக அதிகாரியை “வீடியோ கோல்” (Video Call) ஊடாகத் தொடர்பு கொண்டு, கடலில் நடக்கும் அத்துமீறல்களை நேரலையாகக் காண்பித்துள்ளார். தூதரக அதிகாரி படகின் இலக்கத்தைக் கேட்டபோது, இந்திய மீனவர்கள் தமது படகின் இலக்கத்தை வேண்டுமென்றே அழித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தாக்குதல் மற்றும் அத்துமீறல் தொடர்பான காணொளி ஆதாரங்கள் முறைப்பாடாக இந்திய துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக அரங்கேறும் இவ்வாறான அத்துமீறல்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வடபகுதி மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.”வீடியோ கோல்” மூலம் பெறப்பட்ட நேரடி ஆதாரங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில், இந்திய துணைத்தூதரகம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளின் பட்டியலை தமிழக கடலோர அதிகாரிகளிடமிருந்து பெற்று, சம்பந்தப்பட்ட படகை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்திய எல்லைகளைத் தாண்டி அத்துமீறிச் செல்லும் மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணைத்தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நயினாதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த கடற்படையினர் அதிவேகப் படகுகள் மூலம் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர். அத்துமீறி நுழையும் படகுகளைக் கண்டறியும்போது அவற்றை விரட்டியடிக்க அல்லது கைது செய்யத் தேவையான உத்தரவுகள் கடற்படைத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மீனவர்கள் இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அறிவிக்குமாறும் கடற்படை அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து விரைவில் மாபெரும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/228114/

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு!

4 days 1 hour ago
உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! adminFebruary 1, 2026 தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ‘Gold Street’-இல் தங்கம், வைரம் மற்றும் உயர்தர ஆபரணங்களுக்கான சிறப்பு வணிக வளாகங்கள், பாரம்பரியமும் நவீனமும் இணையும் வடிவமைப்புகள், சர்வதேச வணிகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வசதிகள், தங்க வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரநிலைகளை வலுப்படுத்தும் அமைப்புகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உலக தங்க சந்தையில் டுபாயின் பங்கை மேலும் விரிவுபடுத்தும் இந்த முயற்சி, தங்கம்–ஆபரணத் துறையில் புதிய முதலீடுகள், சர்வதேச வர்த்தக வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228133/

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

4 days 1 hour ago
திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்! திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462483

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

4 days 4 hours ago
தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியும் நாங்கள், பேரம்பேசும் சக்தியும் நாங்களே என்று தெனாவெட்டாக எழுபத்தாறு ஆண்டுகள் வீணானதே. அதுதான் தென்னிலங்கை கட்சிகள் தமிழரிடம் காட்சிகள் அரங்கேற்ற காரணம். மக்களை பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள், மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று வழி காட்டியவர்களும் இவர்களே. அதன்மூலம் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முடிந்ததா இவர்களால்? சும்மா மக்களை குற்றம் சொல்வது இவர்களின் வழமை. இவர்களும் தவறானவர்களை தெரிந்தெடுக்க மக்களை தூண்டியிருக்கிறார்களல்லவா? இந்த முறை மட்டுமே மக்கள் இவர்களின் தெரிவுக்கு செவிசாய்க்கவில்லை, மற்றைய தெரிவுகளுக்கு இவர்களும் பொறுப்பே. இவற்றின்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்கு இவர் சாதித்தது என்ன? ஒன்றாக இருந்த கட்சியை சிதைத்ததை தவிர. இருந்த இடத்திலிருந்து, இன்று தையிட்டிவரை முன்னேறியிருக்கிறது இவரின் சட்டத்துறை நிபுணத்துவம் சாதித்தது என்ன?

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்

4 days 4 hours ago
செரெண்டிபை அதிரவைத்தது சென் மேரிஸ்; மீண்டும் நியூ ஸ்டார் ஹீரோவானார் பஸால் 01 Feb, 2026 | 07:51 AM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற மாவனெல்லை செரெண்டிப் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் யாழ். நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது. இரண்டு அணிகளும் எதிர்த்தாடுவதிலும் தடுத்தாடுவதிலும் மிகத் திறமையாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சென். மேரிஸ் கழக வீரர்கள் முந்தைய போட்டிகளிலும் பார்க்க இந்தப் போட்டியில் சிறந்த வியூகங்களுடன் விளையாடினர். அதுவே அவர்களது வெற்றியில் பிரதான பங்காற்றியது. இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளைக்குப் பின்னர் 50ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி ஃப்ரிம்ப்பொங் யாவ் கோல் ஒன்றைப் போட்டு செரெண்டிபை முன்னிலையில் இட்டார். ஆனால், சென் மேரிஸ் வீரர்கள் திறமையாக விளையாடி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஜோன் லவானி மூலம் கோல் நிலையை சமப்படுத்தினர். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. போட்டியின் 72ஆவது நிமிடத்தில் வலதுபுற முன்கள மாற்று வீரர் எம். மேரிசன் மிகவும் சாமர்த்தியமாக பந்தை நகர்த்திச் சென்று எம். பிரேம்குமாருக்கு பரிமாறினார். எம். பிரேம்குமார் மிகவும் பலமாக உதைத்து கோலாக்கி சென். மேரிஸ் கழகத்தை வெற்றிபெறச் செய்தார். பஸால் மீண்டும் ஹீரோவானார், மஞ்சள் அட்டைக்கும் இலக்கானார் நியூ ஸ்டார் கழகத்திற்கும் சொலிட் கழகத்திற்கும் இடையில் இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் சொலிட் கழகத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் எம்.என்.எம். பஸால் உபாதையீடு நேரத்தில் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்து ஹீரோவானார். ஆனால், வெற்றிக்களிப்பில் ஜேர்சியைக் கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் முதலாவது பகுதியில் கோல் எதுவும் போடப்படவில்லை. இடைவேளை முடிந்த பின்னர் 48ஆவது நிமிடத்தில் மொஹமத் ஷஹிர் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை முன்னிலையில் இட்டார். 15 நிமிடங்கள் கழித்து சொலிட் கழகம் சார்பாக ஹென்றி சிபுயேஸ் கோல் நிலையை சமப்படுத்தினார். அதன் பின்னர் போட்டியில் சூடு பிடிக்க இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. உபாதையீடு நேரத்தின்போது பஸால் அருமையான கோல் ஒன்றைப் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்தார். https://www.virakesari.lk/article/237503

ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!

4 days 4 hours ago
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி! Feb 1, 2026 - 09:26 AM நாட்டின் முன்னணி பொருளாதார மத்திய நிலையங்கள் ஐந்தினை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து நீக்கி, தனியானதொரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கு அறிவித்துள்ளனர். நேற்று (31) பிற்பகல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, 7 பணிப்பாளர்களை நியமித்து, தற்போது முகாமைத்துவ நிதியத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களை இந்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விடயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் பியன்வில, அரச அதிகாரிகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவ நிதியத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இதன்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வர்த்தகச் சமூகத்தினர் அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கையில், இந்த வர்த்தக நடவடிக்கைகள் 35 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒரு நிறுவனம் என்று கூறினர். அதேபோன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அமைச்சருக்குத் தேவையான குழுக்களை நியமித்துத் தமது வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகித்து, மக்களுக்கு மிக நியாயமான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டார். அதற்கமைய தம்புள்ளை, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பெட்டிபொல, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை இந்தப் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் மாதாந்த வாடகை மற்றும் நிர்வாகப் பணம் அனைத்தும் அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பறிக்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வர்த்தகச் சமூகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எவ்வித ஆராய்வும் இன்றி புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, தாம் நடத்தி வந்த வர்த்தகத்தை ஒப்படைக்க முடியாது என்றும், தற்போது மிகவும் பலமான முகாமைத்துவ நிதியத்தின் ஊடாக 30 வருடங்களுக்கும் மேலாகப் பொருளாதார மத்திய நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக வர்த்தக சங்கங்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வர்த்தகச் சமூகத்தினர், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரை மிகவும் சூட்சுமமான முறையில் மாற்றி, புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினர். இதற்காக எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர். அதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 29 வருட காலப்பகுதியில் அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டு, தற்போதும் முகாமைத்துவ நிதியத்தில் 25 கோடி ரூபா பணத்தைச் சேமித்துள்ளதாகவும் அவர்கள் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினர். வர்த்தகச் சமூகம் விவசாய மக்களுக்கு வட்டியில்லாக் கடன், விதை உள்ளிட்ட மரக்கறிச் செய்கைக்கான செலவுகளை மேற்கொண்டு இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைப் பராமரித்து வருவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்விதத்திலும் தெரியாத நிறுவனமொன்றுக்குத் தமது உரிமையை வழங்கத் தயாரில்லை என்றும் வர்த்தகச் சமூகம் அமைச்சரிடம் தெரிவித்தது. இதற்கு அமைச்சரும் பதில் வழங்க முற்பட்டபோது, வர்த்தகர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்புள்ளைக்கு வந்து, தேர்தல் வாக்குறுதியாக 30 வருட குத்தகை ஒப்பந்தத்தைப் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்களுக்கு வழங்குவதாகக் கூறியதையும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் நினைவுகூர்ந்தனர். எனினும், அதற்கு எவ்வித பதிலையும் வழங்க அமைச்சர் இதன்போது முற்படவில்லை. எவ்வாறாயினும், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் வர்த்தகர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ள வர்த்தகப் பெயர் ஆகியவற்றுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிறுவனத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். எப்படியிருப்பினும், வர்த்தகச் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இது குறித்துத் தொடர்ந்தும் பரிசீலித்து, நிறுவனம் மற்றும் வர்த்தகச் சமூகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடத் தான் எதிர்காலத்தில் திகதி ஒன்றை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cml37lycs04owo29nbuyyy2m5

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு

4 days 5 hours ago
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு 01 Feb, 2026 | 09:36 AM ஆர்.ராம் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2011ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த திட்டம் மீள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 23,500மில்லியன் ரூபா செலவில் மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டிருக்கின்றநிலையி;ல், அங்குள்ள குடியேற்ற பெரும்பான்மை மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்கள் கையகப்படுத்தப்படும் ஆபத்துக்கள் காணப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்வாதரத்தினை பூர்த்தி செய்யும் வயல்நிலைங்களும் பறிபோகும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கரிசனைகள் வெளிப்டடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், சிலில் அமைப்புக்களும் ஆணித்தனமாக வலியுறுத்தும் முகமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237510

இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி!

4 days 5 hours ago
இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி! Jan 31, 2026 - 06:57 PM டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நிவாரண உதவிகள், மீள்குடியேற்றப்பட்ட இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகளால் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாக கையளிக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் யாவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படஉள்ளன. பொருள் உதவிகளுக்கு மேலதிகமாக, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்களாக முன்வந்து, ஒருங்கிணைந்த முயற்சிகள் வாயிலாக இந்திய ரூபாய் 12,33,604 (பன்னிரண்டு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து அறுநூற்று நான்கு) நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது இலங்கை ரூபாய் ஏறத்தாழ 42,50,000க்கு (நாற்பத்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) சமமானதாகும். நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டபோது, துணைத் தூதரகத்தில் பெருமளவிலான இலங்கை சமூகப் பிரதிநிதிகள் உடனிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில், தங்களின் நிவாரண உதவிகளை இலங்கைக்கு ஒருங்கிணைத்து அனுப்புவதற்கு எடுத்த முயற்சிகளுக்காக துணைத் தூதரகத்திற்கு அவர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த கடினமான காலகட்டத்தில் வெள்ளச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த உதவிகள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சென்றடையும் என்பதில் இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். மேலும் 40,000 மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள் முகாம்களுக்கு வெளியே பொலிஸில் பதிவு செய்துகொண்டு வாழ்கின்றனர். இடம் பெயர்வதால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், இந்த சமூகங்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் மனதினை நெகிழச் செய்துள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cml2cjlrq04ojo29nj8dugjyv

நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!

4 days 5 hours ago
நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை! Published By: Digital Desk 1 01 Feb, 2026 | 08:58 AM (நமது நிருபர்) வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ஈ.ஆர்.படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237504

'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும்

4 days 5 hours ago
'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பிரதமர் மோதி 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் சனிக்கிழமை (ஜனவரி 31) குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல், "இதுவொரு தேசிய அவமானம். பிரதமர் மோதி தாமாக முன்வந்து எங்களது மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று பதிவிட்டார். இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது, ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, "மின்னஞ்சலின் மீதமுள்ள தகவல்கள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் வெற்றுப் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுபவற்றில் இருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி பற்றிய அறிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். அதில் பிரதமர் மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, மின்னஞ்சலின் பிற தகவல்கள் தண்டனை பெற்ற குற்றவாளியின் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை, அவற்றை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய கோப்புகள் வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் மோதியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. சனிக்கிழமை, காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "நரேந்திர மோதியின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, சிறார் பாலியல் வன்கொடுமையாளர் மற்றும் மனிதக் கடத்தல்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஜூலை 9, 2017 அன்று ஒரு மின்னஞ்சலில் அதை எழுதியுள்ளார்..." என்று கூறியது. "இந்தியப் பிரதமர் மோதி ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, சில வாரங்களுக்கு முன்பு அவர் சந்தித்த அமெரிக்க அதிபரின் நலனுக்காக இஸ்ரேலில் ஆடிப் பாடினார். அதற்கு பலன் அளித்தது." Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது "ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்" - மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன? பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" - மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? 'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் ஐக்கிய அரபு அமீரகம், சௌதியின் இந்த முடிவு இரானை அமெரிக்கா தாக்காமல் தடுக்குமா? End of அதிகம் படிக்கப்பட்டது "'மோதி என்னிடம் ஆலோசனை பெற்று இஸ்ரேலுக்குச் சென்று அமெரிக்க அதிபரின் நலனுக்காக ஆடிப் பாடினார். அது பலன் அளித்தது என்றும் எப்ஸ்டீன் தெளிவாகக் கூறியுள்ளார்'." என காங்கிரஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளது. "நினைவில் கொள்ளுங்கள். இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 முதல் 6, 2017 வரை இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு எப்ஸ்டீன் இந்த மின்னஞ்சலை எழுதியுள்ளார். இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாகவே, ஜூன் 25-26, 2017-இல் மோதி அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மின்னஞ்சலில் உள்ள தொடர்புகளை நாம் இணைத்தால், மோதி ஜூன் 2017-இல் அமெரிக்கா சென்று அங்கு எப்ஸ்டீனிடம் ஆலோசனை கேட்டார் என்பது தெளிவாகிறது." "ஒரு வாரம் கழித்து (ஜூலை 4-6, 2017), மோதி இஸ்ரேலுக்கு வந்து, அறிவுறுத்தப்பட்டபடி அங்கு ஆடிப் பாடினார், காரியமும் முடிந்தது. பிரதமர் மோதிக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஆழமான மற்றும் நீண்டகால உறவு இருப்பது இப்போது தெளிவாகிறது, இது இந்தியாவிற்கு அவமானகரமானது. இது நாட்டின் கண்ணியம் மற்றும் சர்வதேச அளவிலான நற்பெயர் தொடர்பான விஷயம், இதற்கு பிரதமர் மோதி பதிலளிக்க வேண்டும்." மூன்று கேள்விகளை பட்டியலிட்டுள்ள காங்கிரஸ், "நரேந்திர மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன வகையான ஆலோசனைகளைப் பெற்றார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் எவ்வாறு பயன் பெற மோதி இஸ்ரேலில் ஆடினார்? 'இது பலன் அளித்தது' என்று எப்ஸ்டீன் எழுதியுள்ளார்... இதன் பொருள் என்ன?" "நரேந்திர மோதி ஜி, நாடு பதில்களைக் கோருகிறது. தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்ஸ்டீனுடன் உங்களுக்கு என்ன உறவு?" என பதிவில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான புதிய கோப்புகள் வெளியீடு பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019 இல் சிறையில் இறந்தார். தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான புதிய கோப்புகளை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ளது.30 லட்சம் பக்கங்கள், 1,80,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) பகிரங்கமாக வெளியிடப்பட்டன. எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற சட்டப்பூர்வ காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறவிட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு, கணிசமான எண்ணிக்கையிலான கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கோப்புகளில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சிறைவாசம் பற்றிய தகவல்கள், உளவியல் அறிக்கை மற்றும் அவர் சிறையில் இருந்த போது ஏற்பட்ட மரணம் குறித்த விவரங்கள் உள்ளன. இது தவிர, எப்ஸ்டீனுக்கும் உயர்மட்ட பிரமுகர்களுக்கும் இடையிலான மின்னஞ்சல்களும் இதில் அடங்கும். பல மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலானவை மற்றும் எப்ஸ்டீனின் சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இடையே இருந்த உறவை அவை வெளிப்படுத்துகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபர் பற்றி நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் எப்ஸ்டீனுக்கு நண்பராக இருந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த உறவு கசந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மறுத்துள்ளார். இந்த ஆவணங்களில் எப்ஸ்டீனுக்கும் உலகின் முதன்மையான செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான மின்னஞ்சல் உரையாடல்களும் அடங்கும். இந்த வழக்கில் மஸ்க் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. எப்ஸ்டீன் தன்னை அவரது தீவிற்கு அழைத்ததாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் அவர் முன்னதாகவே கூறியிருந்தார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியாவது இத்துடன் முடிவடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. "இது மிகவும் விரிவான ஆவண அடையாளம் காணல் மற்றும் மறுஆய்வு செயல்முறையின் முடிவு, அமெரிக்க நீதித் துறையைப் பொறுத்தவரை அவர்களது பணி முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது" என்று துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கூறினார். இருப்பினும், சரியான காரணமின்றி சுமார் 25 லட்சம் வரையிலான ஏராளமான ஆவணங்களை நீதித் துறை தடுத்து வைத்துள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0yx102mg8o

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!

4 days 5 hours ago
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"! Jan 31, 2026 - 10:29 PM 1996 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் யாழ். சிவகுரு ஆதீனத்தில் "நீதிக்கான சாட்சி" என்ற நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதே போன்ற ஒரு நாளில் (1996.01.31) கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதியின் 31வது ஆண்டை நினைவுகூரும் முகமாக இந்த நூதன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, அவர்களது சிறைவாச ஆண்டுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சி சித்தரிக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை மெழுகுவர்த்தி போல தேய்வடைந்து செய்கின்றது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இதில் அரசியல் கைதிகளின் உறவுகள் வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், சட்டத்தரணிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் தேசியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cml2k445m04ooo29ng9ox5cpd

பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்

4 days 13 hours ago
நீங்கள் இருவரும் சொன்னது போல இன்னொரு தேர்தல் நடந்தால் சிங்கள பகுதிகளில் தான் ஜேவிபி இதே மாதிரி வெற்றி அடைய முடியாது.
Checked
Thu, 02/05/2026 - 10:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed