புதிய பதிவுகள்2
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது Published By: Vishnu 01 Feb, 2026 | 09:29 PM (நெவில் அன்தனி) இந்த வருட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் எனவும் ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. சுமார் ஒரு வாரம் நீடித்த நிச்சயமற்றத் தன்மைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணியை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற அனுமதிக்க இன்று முடிவுசெய்தது. ஆனால், பெப்வரி 15ஆம் திகதி இந்தியாவை எதிர்த்தாடாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. தனது பரம வைரியான இந்தியாவை பி குழுவுக்கான முதலாவது சுற்றில் பாகிஸ்தான் எதிர்த்தாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 'ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15ஆம் திகதி அட்டவணை படுத்தப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது' என பாகிஸ்தான் அரசாங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பங்களாதேஷ் விலகியதை அடுத்து ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் நிலை தோன்றியதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிபை கடந்த திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி சந்தித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விடயம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாக இந்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட நக்வி, இது தொடர்காக வெள்ளிக்கிழமை அல்லது திங்களன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை இணைத்ததை அடுத்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது. அயல் நாடுகளான இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல் உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்தியாவுக்கு செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்தது. அதன் பின்னர் பங்களாதேஷுக்கு பதிலாக உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டதாக ஜனவரி 24ஆம் திகதி ஐசிசி அறிவித்தது. தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த ஐசிசி, உலகக் கிண்ணப் போட்டி நெருங்கிவரும் நிலையில் இடத்தை மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/237579
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@வீரப் பையன்26 ஓடி வாங்கோ, போட்டி தொடங்கப்போகிறது.
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை பட மூலாதாரம்,Getty Images 1 பிப்ரவரி 2026, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிதி அமைச்சரின் உரை முடிவடைவதற்குள், பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் (Sensex) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தது. பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT) அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதே இந்த எதிர்வினைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை இன்று இயங்கியது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் முதல் கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகள் வரை சில முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, ஃபியூச்சர்ஸ் ((Futures) மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்கிறது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது. எஸ்டிடி என்றால் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' (Securities Transaction Tax) என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எஃப் அண்ட் ஓ மீதான எஸ்டிடி 0.02% ஆக இருந்தது. இப்போது அதனை 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. எஸ்டிடி என்பது அடிப்படையில் மற்ற வரிகளிலிருந்து தனித்துவமானது. வருவாய் ஈட்டவும், நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கவும் பங்குப் பரிவர்த்தனைகள் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது. இது முற்றிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலானது, அதாவது சம்பந்தப்பட்ட தனிநபர் பங்குப் பரிவர்த்தனையில் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு எஸ்டிடி வரி விதிக்கப்படும். வருமான வரி தொடர்பான அறிவிப்பு பட மூலாதாரம்,SANSAD TV படக்குறிப்பு,மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். வருமான வரித் தாக்கல் (ITR) தொடர்பான காலக்கெடு மற்றும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள் இனி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இந்த முறை வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சம்பளதாரருக்கான நிலையான கழிவு ₹75,000 ஆகும். எனவே ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14rdlv87npo
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! உதாரணமா பார்த்தீங்க என்றால், * ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால் * டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால் * எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால் * கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால் * கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால் *யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால் தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால் *செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா * அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !! இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!! ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!! #அழகியதொருவாழ்வு முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் லிளையாடுவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்கள்.
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார்.கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில்,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார். ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான்,கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள்.கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள்.அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக….என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை.ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ? இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி,சிலையாக்கி,திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான்.கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில்,நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார்.அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது. அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது. அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது.ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது.அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல,அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை. இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா? தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல.அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள்.தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்? இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை.இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது.ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை. அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள்.ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம்,இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல. இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம். தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது. https://athavannews.com/2026/1462539
'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும்
இவருக்கு சொல்லிப் போட்டுத் தான் மோடி போயிருப்பாரோ? அல்லது இவரும் சேர்ந்து போனாரோ?
தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு! யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது கடற்பரப்பினுள் இருந்து வெளியேறுமாறு நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவுறுத்தியும் , அதனையும் மீறியும் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களின் படகுக்கு அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அதனை அடுத்து கைத்தொலைபேசியில் “வீடியோ கோல்” ஊடாக இந்திய துணைத்தூதராக அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட , கடற்தொழிலாளர் ஒருவர் , நேரடியாக இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை காண்பித்துள்ளார். அதன் போது படகின் இலக்கத்தினை தூதரக அதிகாரி வினாவிய வேளை , படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்ததனை அவதானித்துள்ளனர். பின்னர் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றினை தூதரக அதிகாரிக்கு நயினாதீவு கடற்தொழிலார்கள் அனுப்பி வைத்துள்ளனர். https://athavannews.com/2026/1462549
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்! சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் கராப்பிட்டிய மற்றும் வென்னப்புவ பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது குறித்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீனவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடாத்தியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையினை நிறைவு செய்து மீண்டும் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது இதேவேளை தாம் எதிர்கொண்ட அசம்பாவிதம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கியிருந்ததைடுத்து அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் நால்வர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் வென்னப்புவ பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்த அரசுடன் ராஜதந்திரமட்டத்தில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1462572
யார் முருகன் ? யார் சூரன்? -நிலாந்தன்
இந்தப் படத்தைப் பார்த்ததும் அனுராவுக்கு இன்னும் பக்தைகள் வரப் போகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்தால் அனுராவுக்கே சந்தோசமாக இருக்கும்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் திமிர். எந்த ஒரு ஆட்சியிலும் இப்படி வரக்கூடாது. அமெரிக்காவிலும் இதே நிலைதான்.
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
கோசான் வாலி நான் சொன்னது மேலே உள்ள பந்தியில் ஓரளவு பொருந்துகிறது.
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரையில் போட்டியில் இணைந்தவர்கள் எத்தனை பேர்?கிரிக்கட்டை நுனி விரலில் லவத்திருக்கும் @பையன் இணைந்து விட்டாரா?
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
2012 டிச 07 அன்று பாராளுமன்றத்தில் 2013ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும், அவர்கள் மனித உரிமைகளை மதிக்காத காரணத்தால் அழிந்து போனார்கள் என்றும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் எக்காரணம் கொண்டும் வெளியேறவேண்டும் என்ற கொள்கை தமது கட்சிக்கு என்றைக்கும் இல்லையென்று, எந்த கூச்சமுமில்லாமல் பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இது தமிழ் அரசியல் அரங்கில் ஞாபகசக்தி கம்மியானவர்களுக்கு பழைய செய்தியே, இருந்தும் தாக்கம் தமிழினத்துக்கு மிக மோசமானது என்ற உணர்வின் பிரதிபலிப்பே இந்த பதிவு. BBC News தமிழ்'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்'...நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளை கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சம்பந்தன்.'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பட மூலாதாரம்,விடுதலைப் புலிகள் 18 டிசம்பர் 2019 இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை. 1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளைப் பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை. அரசாங்கம் சர்வதேச ரீதியாக வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதைப் பாரதப் பிரதமருக்கும் கொடுத்திருக்கிறது. "மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?" - மூத்த அரசியல் தலைவர் கேள்வி முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்கள் எதிர்பார்ப்பும் ஜனாதிபதியாக இருந்த போது மகிந்த ராஜபக்ஷசவும் அவருடைய வெளி விவகாரச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல்.பிரீசும் இந்திய அரசாங்கத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். அதற்கு மேலதிகமாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் வழிசெய்வோம் என்று. அது நடைபெற வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இந்த விடயம் சம்பந்தமாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை வெளி விவகார அமைச்சர் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர்கள் பல முறைகளில் பேசியிருக்கின்றார்கள். பல வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கூறிய செய்தி என்னவெனில் இங்கு எதிர்பார்க்கின்றதை இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கின்றார் நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று. இது சாதாரணமான சொற்கள் அல்ல. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" - மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? "ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்" - மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன? பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல் End of அதிகம் படிக்கப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது.அந்த ஊடக சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதி இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம் அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து முத்தையா முரளிதரன் பேசியது என்ன? முல்லைத்தீவில் வெடித்தது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா? இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த பொழுது உதவிய நாடுகள் நோர்வே, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஜப்பான், போன்ற நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அதிகார பகிர்வின் ஊடாக நாட்டில் சமத்துவமாக மக்கள் வாழக் கூடிய வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என்று. அந்த நாடுகளும் தங்களுடைய கருத்தகளைக் கூறியிருக்கின்றார்கள். அமைப்பு ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்விதமான மாற்றங்களின் ஊடாக ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அமெரிக்கா தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்குக் கூறியிருக்கின்றது.உங்களுடைய பழைய நிலைமைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். சமஷ்டியைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள், அதியுச்ச அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். பட மூலாதாரம்,Str ஆனபடியால் அந்த அடிப்படையில் ஒரு தீர்வு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.இவை நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் என்ன விதமாகச் செயற்படப் போகின்றோம் என்பதை முடிவெடுத்து அதைச் செய்ய வெண்டும். அது தான் எங்களுடைய கடமை. அது தான் எங்களுடைய எதிர்காலம். அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்தவமாக நீதி பெற்றவர்களாக சமாதானமாகக் கௌரவமாக வாழக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான சர்வதேச சமூகம் விசேசமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தார்கள். அதுவொரு நிபந்தனையின் அடிப்படையில் தான்.தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்று. ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றார்கள்.அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்று தான். அந்த நிலைமை இருக்க முடியாது. அந்த நிலைமை இருக்கக் கூடாது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய தீர்மானங்கள் சிவில் அரசியல் உரிமைகள் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ய உரிமையுண்டு. இதைச் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளைக் கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
சிரிக்க மட்டும் வாங்க
காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு
காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு பட மூலாதாரம்,Getty Images/HITESH DAFDA படக்குறிப்பு,கடந்த 1915ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்திற்கு ஒரு தலித் குடும்பம் வந்தபோது, ஆசிரமவாசிகள் பலர் அவர்களை எதிர்த்தனர். உள்ளே உள்ள படத்தில் காந்தியும் அவர் தத்தெடுத்த தலித் மகளான லட்சுமியும் காணப்படுகின்றனர் கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காந்திக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மகளைத் தத்தெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகள் யார்? அவர் கோச்ரப் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவுடன், கஸ்தூரிபா உட்பட ஆசிரமவாசிகள் அவரை ஏன் எதிர்க்கத் தொடங்கினார்கள்? இந்த எதிர்ப்பை காந்தி எப்படி கையாண்டார்? இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு கஸ்தூரிபா அந்த மகளை எப்படி ஏற்றுக்கொண்டார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி குஜராத்தி காந்திய இலக்கியங்களைப் ஆய்வு செய்ததோடு, தத்தெடுக்கப்பட்ட அந்த மகளின் குடும்பத்தில் இன்று உயிருடன் இருக்கும் உறுப்பினர்களிடமும் பேசியது. காந்தியின் வளர்ப்பு மகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள, நாம் வரலாற்றைப் புரட்ட வேண்டும். காந்தி ஜனவரி 9, 1915 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் மும்பையில் கால் பதித்தபோது, ஒரு தேசிய வீரரைப் போல அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 'டால்ஸ்டாய்' மற்றும் 'பீனிக்ஸ்' போலவே இந்தியாவிலும் ஒரு நிறுவனம் அல்லது ஆசிரமத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. மே 25, 1915 அன்று, காந்தி ஆமதாபாத்தில் 'சத்யாகிரக ஆசிரமத்தை' நிறுவினார். இது இன்று 'கோச்ரப் ஆசிரமம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆமதாபாத்தில் காந்தி குடியேற உதவியவர்களில் ஜீவன்லால் பாரிஸ்டரும் ஒருவர். கோச்ரப்பில் உள்ள அவரது வீட்டை ஆசிரமத்திற்காக வாடகைக்கு எடுக்க காந்தி முடிவு செய்தார். தனது சுயசரிதையான 'சத்திய சோதனை'யில் காந்தி குறிப்பிடுகையில், அந்த நேரத்தில் ஆசிரமத்தில் 13 தமிழர்கள் இருந்ததாக எழுதியுள்ளார். அவர்களுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐந்து தமிழ் குழந்தைகளும் வந்திருந்தனர். சுமார் 25 ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஆசிரமம் தொடங்கியது. "அனைவரும் ஒரே சமையலறையில் சாப்பிட்டோம், ஒரே குடும்பமாக நடந்து கொள்ள முயற்சித்தோம்" என்று காந்தி எழுதியுள்ளார். இருப்பினும், ஆசிரமம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே காந்திக்கு ஒரு கடுமையான சோதனை காத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் என்று அக்காலத்தல் கருதப்பட்ட பிரிவினரில் ஒரு குடும்பத்தை ஆசிரமத்தில் குடியமர்த்தி ஒரு முன்மாதிரியை உருவாக்க காந்தி விரும்பினார். எனவே, ஆசிரமத்தில் வசிக்க விருப்பமுள்ள அத்தகைய குடும்பங்களைத் தேடினார். பட மூலாதாரம்,BHIKHUBHAI DAFDA படக்குறிப்பு,காந்தி துதாபாய் தஃப்டாவின் குடும்பத்துடன். லட்சுமி வலதுபுறத்தில் குடும்பத்துடன் ஆசிரமத்திற்குள் நுழைந்த தலித் மகள் லட்சுமி காந்தியின் கருத்துகளைப் பின்பற்றி, பழங்குடி சமூகங்களிடையே கல்வி கற்பிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பாடுபட்ட அமிர்தலால் தக்கர் (தக்கர் பாபா) என்பவரிடமிருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர், "ஒரு ஏழ்மையான மற்றும் நேர்மையான அந்தியஜ (தலித்) குடும்பம் உள்ளது. அவர்கள் உங்கள் ஆசிரமத்திற்கு வந்து வாழ விரும்புகிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று எழுதியிருந்தார். காந்தி தனது சுயசரிதையில், "தக்கர் பாபாவின் பரிந்துரையுடன் வரும் அந்தக் குடும்பம் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தை என் தோழர்களிடம் வாசித்துக் காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றனர். அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் விதிகளைப் பின்பற்றத் தயாராக இருந்தால், அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று நான் அமிர்தலால் தக்கருக்குத் தகவல் அனுப்பினேன்," என்று குறிப்பிட்டுள்ளார். துதாபாய் செப்டம்பர் 6, 1915 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் ஆசிரமத்தில் சேர விரும்புவதாகவும், அதன் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும் தெரிவித்திருந்தார். இறுதியாக, செப்டம்பர் 11, 1915 அன்று துதாபாய், அவரது மனைவி தானிபென் மற்றும் பெண் குழந்தையான லட்சுமி ஆகியோர் ஆசிரமத்திற்கு வந்தனர். பின்னர் செப்டம்பர் 26 அன்று அவர்கள் ஆசிரமத்தில் குடியேறினர். துதாபாய் தற்போதைய அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவராஜியா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் போடாட் நகரில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார், பின்னர் மும்பையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால் அவரது வருகையோடு, ஆசிரமத்தில் சிக்கல் தொடங்கியது. "ஆதரவாக இருந்த நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பங்களா உரிமையாளருக்குப் பங்கிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது." "அந்த நபர் மீது எங்கள் தண்ணீர் தெளித்தால் கோபப்படுவார். அவர் துதாபாயைத் திட்டவும் துன்புறுத்தவும் தொடங்கினார். அனைவரிடமும் அந்த வசவுகளைப் பொறுத்துக்கொண்டு, உறுதியுடன் தண்ணீர் எடுக்குமாறு நான் சொல்லியிருந்தேன்"என்று காந்தி பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த நபர் திட்டுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அதன் பிறகு ஆசிரமத்தில் மற்றொரு பிரச்னை உருவானது. பட மூலாதாரம்,HITESH DAFDA படக்குறிப்பு,காந்தி தனது வளர்ப்பு மகள் லட்சுமியுடன் ஆசிரமத்திற்கு கிடைத்து வந்த நிதி உதவி நின்றது. "ஆசிரம விதிகளுக்கு உட்பட்டு அந்தியஜர்கள் (தலித் மக்கள்) உள்ளே நுழைவதை ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்த அந்தச் சகோதரருக்கு, அவர்கள் ஆசிரமத்திற்குள் வருவார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை. நிதி உதவி நின்றது. சமூகப் புறக்கணிப்பு பற்றிய வதந்திகள் என் காதுகளை எட்டின. புறக்கணிக்கப்பட்டு எந்த ஆதரவும் இல்லாமல் போனாலும், நாங்கள் ஆமதாபாத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று என் தோழர்களிடம் சொன்னேன். நாங்கள் அந்தியஜவாடாவுக்கே (தலித் மக்கள் வசிக்கும் பகுதி) சென்று அவர்களுடனேயே வாழ்வோம். அங்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்தோ அல்லது உழைத்தோ பிழைத்துக்கொள்வோம்," என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். நிதி உதவி நின்ற பிறகு, ஆசிரமத்தின் நிர்வாகம் மற்றும் செலவுகளைக் கவனித்து வந்த காந்தியின் மருமகன் மகன்லால் காந்தி, "அடுத்த மாத ஆசிரமச் செலவுகளைச் சமாளிக்க நம்மிடம் பணம் இல்லை"என்று காந்திக்கு ஒரு தகவலைத் தந்தார். மகன்லால் காந்தி, காந்தியின் மாமா ஜீவன் சந்தின் மகனான குஷால் சந்தின் மகன் . காந்தியைப் போலவே அவரும் தென்னாப்பிரிக்கா சென்றார். ஆனால் அங்கு தொழில் செய்யாமல், காந்தியின் ஆசிரமத்தில் இணைந்தார். மகன்லால் காந்தியின் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக , "அப்படியானால் நாம் இறுதிவரை போராடுவோம்" என்று காந்தி எழுதியுள்ளார். மேலும், "இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கு வருவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும், 'ஷாம்லா' (கடவுள்) கடைசி நிமிடத்தில் உதவியை அனுப்பியிருக்கிறார்" என்று எழுதியுள்ளார். மகன்லால் அந்தத் தகவலைச் சொன்ன உடனேயே, ஒரு நாள் காலை ஒரு குழந்தை ஓடிவந்து காந்தியிடம், "ஆசிரமத்திற்கு வெளியே ஒரு கார் நிற்கிறது. ஒரு வணிகர் உங்களை அழைக்கிறார் என்று கூறியது. இதனைக் குறித்து காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார். "நான் அந்த நபரை அணுகினேன். அவர் என்னிடம், "நான் ஆசிரமத்திற்கு உதவ விரும்புகிறேன், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான், "நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன், ஆனால் தற்போது நான் பெரும் நெருக்கடியில் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். "மறுநாள் சந்திப்பதாக அவர் கூறிச் சென்றார். அடுத்த நாள், அந்த வணிகர் காந்தியிடம் வந்து 13,000 ரூபாயை ரொக்கமாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்." பட மூலாதாரம்,Getty Images கஸ்தூரிபாவின் எதிர்ப்பு ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பம் தங்குவது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் காந்தியின் மனைவி கஸ்தூரிபாவும் ஒருவர். லட்சுமியின் சகோதரர் மோகன்பாய் தஃப்டாவின் மகனான பிகுபாய் தஃப்டா, பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "கஸ்தூரிபா கோபமாக இருந்தார். எனவே என் தாத்தா துதாபாய், காந்தியிடம் தாங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். ஆனால் காந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டார். அனைத்தையும் மௌனமாக பொறுத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்"என்றார். காந்தி தனது 'அக்ஷர்தேக்' நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். "துதாபாய் ஆசிரமத்திற்கு வந்த அன்று, தென்னாப்பிரிக்கா சத்யாகிரகத்தில் பங்கேற்ற சந்தோக் மகன்லால் காந்தி விரதத்தைத் தொடங்கினார். ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. சந்தோக் சாப்பிடாததால் நானும் சாப்பிடவில்லை. கஸ்தூரிபாவிற்கும் இது பிடிக்கவில்லை, அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரமத்தின் மற்ற சகோதரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்." காந்தி கஸ்தூரிபாவிடம், "நீ என்னை விட்டு பிரிந்து செல்லலாம், நாம் நல்ல நண்பர்களாகவே பிரிவோம்" என்று கூறிவிட்டார். செப்டம்பர் 24 அன்று சந்தோக்கும் மகன்லாலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும், அவர்கள் அக்டோபர் 3 அன்று மீண்டும் திரும்பினர். கஸ்தூரிபா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறவில்லை. ஆசிரமவாசிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க காந்தி 'உண்ணா விரதம்' என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்தார். காந்தி எப்போதும் கஸ்தூரிபாவுக்கு நிலைமையை விளக்குவார், ஆனால் பா (கஸ்தூரிபா) சோர்ந்து போவார். அவர் கண்களில் கண்ணீர் வழியும், ஆனாலும் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில், காந்தியின் மூத்த சகோதரி ரலியத்பென்னும் ஆசிரமத்தில் வசித்து வந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்த அவருக்கும், துதாபாயின் குடும்பம் ஆசிரமத்தில் தங்குவது பிடிக்கவில்லை. முதலில், அவர்கள் தனிச் சமையல் வேண்டும் என்று கோரினர், ஆனால் காந்தி அதை நிராகரித்தார். இதனால் அவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அவர் ராஜ்கோட்டிற்குச் சென்றார், அங்கு அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை காந்தி செய்து கொடுத்தார். காந்தி கஸ்தூரிபாவிடமும், நீயும் ரலியத்பென் போலவே ராஜ்கோட்டிற்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் கஸ்தூரிபா, "அப்படிச் செய்வதன் மூலம், உங்கள் வாழ்நாள் முழுவதும் என்னை நீங்கள் பிரிக்க நேரிடும். நான் உங்களைப் பிரிந்து செல்ல மாட்டேன்," என்று கூறிவிட்டார். இறுதியாக, காந்தியின் கோரிக்கையை பா ஒப்புக்கொண்டார். பின்நாட்களில், லட்சுமியின் தலைமுடியைச் சீவி, குளிப்பாட்டி அவரை பா தயார் செய்வார். ஆரம்பத்தில் காட்டிய வெறுப்பிற்குப் பதிலாக, லட்சுமியின் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார் கஸ்தூரிபா. பட மூலாதாரம்,ROLI BOOKS லட்சுமியை தத்தெடுத்த காந்தி இறுதியாக, எதிர்ப்புகளை சமாளிக்க லட்சுமியைத் தத்தெடுக்க காந்தி முடிவு செய்தார். அக்டோபர் 5, 1920 அன்று காந்தி லட்சுமியைத் தத்தெடுத்தார். அப்போது லட்சுமிக்கு சுமார் ஆறு வயது. அடுத்த 14 ஆண்டுகள் லட்சுமி காந்தியுடன் இருந்தார். லட்சுமி திருமண வயதை அடைந்ததும், அவருக்குத் திருமணம் செய்து வைக்க காந்தி முடிவு செய்தார். இதற்காக, ஆசிரமத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ் பிராமணரான மாருதி சர்மாவை அவர் தேர்ந்தெடுத்தார். மாருதி சர்மா விழித்திரை தொடர்பான பணிகளைச் செய்யும் ஒரு தொழிற்சாலையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். "அவர்களது திருமணத்தின் போது காந்தி எரவாடா சிறையில் இருந்தார். எனவே, காந்தி இல்லாத நிலையில், காந்தி ஆசிரமத்திற்கு எதிரே இருந்த சிவப்பு பங்களாவில் திருமணம் நடந்தது. பிரபல இசைக்கலைஞர் நாராயண் கரே லட்சுமிக்குச் சீர் செய்தார்"என்று பிகுபாய் தஃப்தாவின் மகன் ஹிதேஷ்பாய் தஃப்தா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார். முன்னதாக, காந்தி சிறையில் இருந்ததால் லட்சுமியின் திருமணம் தள்ளிப்போனது. காந்தி நேரில் இல்லாமல் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என லட்சுமி மறுத்து வந்தார். ஆனால், இந்த முறை காந்தி இல்லாத போதும் லட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகனுக்கு ஹரிபாய் சர்மா என்றும், மகளுக்கு கல்பனாபென் என்றும் பெயரிடப்பட்டது. ஹரிபாய் சர்மா, ரஸிலாபென் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு சிநேக் என்ற மகள் உள்ளார். ஹரிபாய் சர்மா தற்போது உயிருடன் இல்லை. மாருதி சர்மா 1946-ல் காலமானார். லட்சுமிபென் 32 வயதிலேயே கணவரை இழந்தார். ஆனால், காந்தியின் பெயரைச் சொல்லி அவர் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள். "அவர் ஒரு மில்லில் வேலை செய்தார், பின்னர் ஒரு மருத்துவமனையில் மக்களுக்குச் சேவை செய்ய முடிவு செய்தார்," என்று ஹிதேஷ் சர்மா கூறுகிறார். லட்சுமிபென் ஷர்மாவின் மகன் ஹரிபாய் சர்மா இறந்துவிட்டாலும், அவரது மனைவி ரஸிலாபென் சர்மா இன்றும் உயிருடன் இருக்கிறார். பிபிசி குஜராத்தியிடம் பேசிய ரஸிலாபென் சர்மா, "அவர் எளிமையை விரும்பினார். காந்தியின் கருத்துகளின்படி வாழ விரும்பினார்," என்று கூறினார். "எனக்கு 1978-ல் திருமணம் நடந்தது, அவர் 1984-ல் இறந்தார். நாங்கள் ஒன்றாக இருந்த காலம் மிகக் குறைவு, ஏனெனில் அவர் காந்தி ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார்." காந்தி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல அவர் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை? இந்தக் கேள்விக்கு ரஸிலாபென் பதிலளிக்கையில், "அவர் அரசியலில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தார். ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. எப்போதும் காதி ஆடைகளையே அணிந்தார், காந்தியைப் போலவே எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். மக்களுக்குச் சேவை செய்வதிலும் காந்திய சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மிகவும் எளிமையான குணம் கொண்டவர்," என்றார். பட மூலாதாரம்,HITESH DAFADA படக்குறிப்பு,காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி 1984ஆம் ஆண்டு காலமானார் தஃப்டா குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவரது கணவர் மாருதி சர்மா இறந்த பிறகு, லட்சுமி தனது வாழ்வாதாரத்திற்காக ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆலையில் வேலை செய்யத் தொடங்கினார். ஒரு நாள், அவர் படிக்கட்டில் வழுக்கி விழுந்ததால், கடினமான வேலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். லட்சுமிபென்னின் மகன் ஹரிபாய் சர்மா குஜராத் காதி வாரியத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணியாற்றி வந்தார். காந்திக்கு ஹரிபாய் மீது மிகுந்த அன்பு இருந்தது. ஹரிபாய் குழந்தையாக இருந்தபோது காந்தி அவருடன் விளையாடுவார். காந்தி உயிருடன் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சுமியைத் தன்னுடன் வந்து தங்குமாறு (பிறந்த வீட்டிற்கு வருவது போல) அழைப்பார். கஸ்தூரிபாவின் மறைவுக்குப் பிறகும் காந்தி இந்த வழக்கத்தைத் தொடர்ந்தார். லட்சுமிபென்னை எப்போதும் கடிதங்கள் எழுதுமாறு காந்தி சொல்வார். காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி லட்சுமியைப் பெரிதும் உலுக்கியது. டெல்லிக்குச் செல்ல அவரிடம் போதிய வசதிகள் இல்லாததால், நான்காவது நாளில் தான் அவர் டெல்லியை அடைந்தார். பின்னர் அவரது அஸ்தியுடன் பிரயாகைக்குச் சென்றார். கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை வளர்த்த அவர், ஜனவரி 31, 1984 அன்று காலமானார். அவர் இறக்கும் போது, அவரது கடைசி விருப்பத்தின்படி காந்தி ஆசிரமத்திலேயே வசித்து வந்தார். லட்சுமிபென்னின் இரண்டாவது சகோதரி சந்திரிகாபென்னின் மகன் நரேந்திரபாய் கோஹில், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "அவர் இறுதிவரை காந்தி ஆசிரமத்தின் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். பஜனைகள் பாடுவார், ஆசிரம நிகழ்வுகளில் கலந்துகொள்வார். காந்தியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை"என்றார். "அவர் இறுதிவரை காதி ஆடைகளையே அணிந்தார். அவரது குழந்தைப் பருவமும் ஆசிரமத்தில் கழிந்தது, அவரது இறுதி நாட்களும் ஆசிரமத்திலேயே கழிந்தன." "அவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அதை வைத்தே அவர் வாழ்ந்தார். வேறு எந்த உதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை"என்பதையும் நரேந்திரபாய் கோஹில் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், பொதுவாழ்வில் இருந்து லட்சுமிபென் எப்போதும் ஒதுங்கியே இருந்தார். "காந்தியின் முக்கிய குடும்ப உறுப்பினர்களுடனான எங்கள் தொடர்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஒருமுறை காந்தியின் வம்சாவளிப் பட்டியலைத் தயாரித்தபோது, அதில் லட்சுமிபென்னின் பெயர் இருந்தது. ஆனால் அதைத் தவிர மற்ற தொடர்புகள் அனைத்தும் நின்றுவிட்டன. நாங்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை," என்று பிகுபாய் டஃப்தா தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wx0xqnz8wo
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு 01 Feb, 2026 | 10:45 AM (இராஜதுரை ஹஷான்) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்கும் துணைசெல்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடவில்லை. எதிர்க்கட்சியினரால் தோற்றுவிக்கப்பட்ட தவறான நிலைப்பாட்டையும், பாடப்புத்தக தயாரிப்பின் போது ஏற்பட்ட குறைபாட்டையும் நிவர்த்தி செய்வதற்காகவே ஆறாம் தரத்துக்கான கல்வி மறுசீரமைப்பு 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது. புதிய கல்வி மறுசீரமைப்பின் போது தேசிய கல்வி நிறுவகம் இரு இடத்தில் தவறிழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த தவறு திருத்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவர்களுக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரமும், தாபன விதிக்கோவையின் பிரகாரமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வங்குரோத்து அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் போலி என்று நிரூபித்ததன் பின்னர் தாங்கள் கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பிற்போட்ட கல்விக் கொள்கையை உடன் அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தற்போது குறிப்பிடுகிறார். உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சுய சிந்தனையுடன் தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. கல்விக் கொள்கைக்கு எதிராக இரண்டு பிரதான ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து தவறான நிலைப்பாட்டையே கொண்டு சென்றது. இந்த இரண்டு ஊடகங்களும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. அதேபோன்று எதிர்க்கட்சிகளும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்தி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக குறிப்பிட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டுவருமாறு குறிப்பிட்டோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் சுவிஸ்லாந்தில் இருந்து நாடு திரும்பியவுடன் சபைக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார். பிரதமரும் நாட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரவில்லை. பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்க்கட்சியினர் தற்போது குறிப்பிடுகிறார். பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்குவது தொடர்பில் ஆராய்ந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலகவும் கலந்துக் கொண்டார். ஆகவே எதிர்கட்சித் தலைவர் மேலதிக தகவல்களை கயந்த கருணாதிலகவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237521
இரசித்த.... புகைப்படங்கள்.
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ.......! --- வெண்மேகம் பெண்ணாக ---
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed