புதிய பதிவுகள்2

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

2 days 6 hours ago
நீங்கள் கொடுக்கும் தரவுகள் எல்லாம் மேற்கு, அமெரிக்கா சார்ந்த ஊடங்கங்களில் இருந்து பெறப்பட்டதே! அவரின் நம்பகத்தன்மைதான் எங்களுக்கு நன்றாக தெரியுமே! நீங்கள் பாவிக்கும் கழிப்பறைகளை விட நல்ல கழிப்பறைகள் என்வீட்டிலும் உண்டு!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024

2 days 7 hours ago
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR V KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team CSK V SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR V SRH 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR V CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) MI 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jose Buttler 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK போட்டியில் நானும் குதித்துவிட்டேன். ஓடி வாங்கோ ஓடி வாங்கோ இன்னும் 2 நாள் தான் இருக்கு.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

2 days 7 hours ago
தமிழ்நாடு பற்றி இவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் நீங்கள், தேர்தல் ஆணைய குளறுபடி, வாக்கு இயந்திர மோசடி, கைப்பொம்மைகள், கையூட்டுகள் எல்லாற்றையும் கணக்கில் எடுத்து நாத கட்சி எத்தனை வீதம் வாக்குகள் பெறும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

2 days 7 hours ago
6/50 கோடி வாக்க‌ள‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் இந்த‌ க‌ருத்துக் க‌ணிப்பு வெறும‌ன‌ம் சில‌ ம‌க்க‌ளிட‌ம் கேட்டு விட்டு அதை வெளியில் வெளியிடுவ‌து அப‌த்த‌ம்............................. தேர்த‌ல் ஆணைய‌மே வீஜேப்பியின் கைபொம்மை தேர்த‌ல் முடிவை மாற்றி சொன்னாலும் ஆச்சரிய‌ப‌ட‌ ஒன்றும் இல்லை.................................... ஏவிம் மிசினில் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்ய‌லாம் என்று ப‌ல‌ர் வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம் ஆனால் பொய் என்றால் ஏன் தேர்த‌ல் ஆணைய‌ம் அவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கு தொடுக்க‌ வில்லை அண்ணா............................

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

2 days 7 hours ago
கருத்துக் கணிப்பின்படி ஒருசில இடங்களைத் தவிர அதிமுக பிஜேபி யைவிட முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியால் பிஜேபி யின் வாக்குகளைக் கூடக் கவர முடியவில்லை. மொத்தமாக நாதக 4 முதல் 5 வீதமான வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் வாக்கு இயந்திரத்தைக் குறை கூறுவதிலேயே நிற்கிறீர்கள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2024

2 days 7 hours ago
பெரிய‌ப்பு அவ‌ச‌ர‌ம் வேண்டாம் நுனா அண்ணா ந‌ம்ப‌ர் ( எப்போதும் த‌மிழ‌ன் வாதாவூர‌ன் அண்ணா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ண‌ Ahasthiyan அண்ணா இப்ப‌டி ப‌ல‌ர் க‌ல‌ந்து கொள்ள‌ இருக்கின‌ம் நாளைக்குள் போட்டி ப‌திவை எதிர் பார்க‌லாம்......................

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

2 days 8 hours ago
உந்த‌ ம‌த‌ வெறி பிடிச்ச‌ வீஜேப்பி ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌த்துக்குமே ஆவ‌த்து......................ஆதிமுக்கா இர‌ண்டாவ‌து இட‌ம் வ‌ந்தால் ம‌கிழ்ச்சி தேர்த‌ல் விம‌ர்ச‌க‌ர் சொல்லுகிறார் ஆதிமுக்காவின் ஓட்டுக‌ள் ம‌ற்ற‌ க‌ட்சிக்கு போகும் என்று.................. ஏவிம் மிசில் குள‌று ப‌டிக‌ள் செய்து அண்ணாம‌லைய‌ வெல்ல‌ வைப்பின‌மோ தெரியாது........................

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!

2 days 8 hours ago
ஒரு மெளன செய்தி ( இன்று படித்ததில் பிடித்தத்து. ) 100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்மா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில் 80 பேர் தினமும் உப்மாவுக்கு பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்மா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்மாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர். இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் விடுதி காப்பாளர் வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த டிபன் அன்றே சமைக்கப்படும். உப்மா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 - மசாலா தோசை 16 - ஆலு பரோட்டா & தாஹி 14 - ரொட்டி & துணை 12 - ரொட்டி & வெண்ணெய் 10 - நூடுல்ஸ் 10 - இட்லி சாம்பார் எனவே, வாக்குப்பதிவு முடிவுகளின்படி, உப்மா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது. பாடம்: 80% மக்கள் சுயநலவாதிகளாகவும், பிரிந்து சிதறியவர்களாகவும் இருக்கும் வரை, 20% பேர் நம்மை ஆள்வார்கள்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

2 days 8 hours ago
மின்னம்பலம் திமுகவினது இல்லை. எல்லாக் கட்சிகளும் விளம்பரங்களைப் போடுவதைப் பார்க்கின்றேன். கருத்துக்கணிப்பு தெளிவாகச் சொல்வது என்னவென்றால் எவர் வெல்லும் கூட்டணியை அமைக்கின்றாரோ அவர் கட்சிக்கூட்டணியே வெல்லும். அதிமுக, பிஜேபி, பா.ம.க கூட்டணி அமைத்திருந்தால் திமுகவுக்கு பத்துக்குள்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது. கூட்டணி எப்போதும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். ஆனால் சுயநலத்திற்காகத்தான் தமிழ்நாட்டில் கூட்டணிகள் அமைவதும், பிரிவதும் உண்டு. எல்லாமே பகடை பன்னிரண்டுதான்! இப்போது 40 தொகுதிகளுக்குமான கருத்துக்கணிப்பு வந்துள்ளது. அண்ணாமலைக்கும் வெற்றி வாய்ப்பில்லை. ஆனால் கடினமாக முயன்றால் வெல்ல இப்போதும் சந்தர்ப்பம் இருக்கின்றது! வாய்ப்பில்லை ராஜா!😜 பிஜேபி கூட்டணி மூலம் வளர்ந்து வருகிறது. எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 days 8 hours ago
வணக்கம் வாத்தியார்.......! பெண் : தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ பெண் : நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து நிலவுன்னை கோலம் போட அழைத்திடும் பெண் : நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் பெண் : பெண்பூவே நீயும் ஆட முகில்கள் ஊஞ்சல் போடும் உலாவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைத்தே போகும் பெண் : பகலினில் முழுவதும் வெயிலினிலே உனை சுட்டு வருந்திய வானம் அது பெண் : இரவினில் முழுவதும் அதை எண்ணியே பனித்துளி சிந்தியே அழுகிறது பெண் : வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும் நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே பெண் : சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும் என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே பெண் : உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள் உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் குயிலுக்கு ஆனந்தங்கள் பெண் : பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும் நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும் பெண் : வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும் எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும் .......! --- தேவதை வம்சம் நீயோ ---

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

2 days 8 hours ago
இது பிபிசி சொல்லுவததற்கு முதல், வேறு எங்கோ, உக்கிரனுக்கு eu என்ன செயலாம் என்பதில் 2-3 கிழமைக்கு முதல் ஒரு சிறிய விடயமாக வந்தது.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

2 days 9 hours ago
அடே... நம்நாட்டில் அப்படி ஒன்று இருக்கா? மறந்து போயிருக்கும் எப்படி நம்மவர் சொந்த நாட்டுக்குள்ளேயே விரட்டப்பட்டனரென. இப்போ வெளிநாட்டு இங்கையர். இப்போ விமானநிலையத்திலேயே வரவேற்பு அவர்களுக்கு! வெளிநாட்டினர் தங்கலாம், வேண்டியதெல்லாம் செய்யலாம் இலங்கையில் ஆனால் தமிழர் மட்டும் விரட்டப்படவேண்டியவர்கள். நாடே கொந்தளிக்கும், எரியும், ரத்த ஆறு ஓடும் தமிழர் உரிமை பெற்றால் இலங்கையில்.. எப்படி எல்லாம் முழுப்பூசணிக்காயை மறைக்க பாடுபடுகிறார்கள்! நீங்கள் இலங்கையில் இருந்து இதை எழுதியிருந்தால் அதற்கு வரவேற்பு அதிகமாக இருந்திருக்கும். டும்... டும்.... தேர்தல் வரப்போகுது, ஐயா பலாலிக்கு ராணுவத்தோட போட்டு வந்திட்டார். அதுதான் சரியான திசை, அவரோடு பயணியுங்கள், பிடுங்கினதெல்லாம் திரும்ப பறிச்சிடுவார். காலத்துக்கு காலம் அரங்கம், நாடகம், வசனம், மாறவேண்டாமோ? எத்தனை வருடங்களாக உறவுகளை தொலைத்தவர்கள் தெருவிலே அலைகிறார்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கமுடியவில்லை அவர்களை சந்திக்க திராணியில்லை, இராணுவத்தினரோடு பவனி, யாரை ஏமாற்றுகிறார் தன்னையா?

துபாய்: வெள்ள நீரில் மிதந்த விமான நிலையம்

2 days 9 hours ago
சோதனைகளும் துன்பங்களும் எங்குதான் இல்லை.......இவர்களது துன்பங்களை பார்க்கும்போது என்னுடைய கஷ்டமெல்லாம் வெறும் தூசு போலத் தெரியுது.........! 😴 வன்னியன் சார் கவனம்...........!

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!

2 days 9 hours ago
நண்பரே கொஞ்சம் வேலையாக இருந்ததால் இந்த பக்கம் வரவில்லை . இப்பதான் பார்த்தேன் . உங்கள் பிரச்சனை தான் என்ன .குலவழக்கம் என்றால் - இங்கே நான் எந்த குலத்தையும் கூறவில்லை . முதலில் அவர் யாருக்கு நம்புகின்ற மாதிரி இருக்கின்றார் . செய்வது முழுக்க நாச வேலை . இதனையும் பட்டியல் போடணுமா ? அரசியலுக்கு வந்தது ஏன் ? இப்ப என்ன செய்து உள்ளார் , கடைசியில் தமிழரசு கட்சியும் கதை முடிந்தது. ஆமை புகுந்த வீடு நாசம் என்ற பழமொழி மாதிரி. ஊரில் பொதுவாக சொல்வார்கள் நாணயம் இல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை , நாசவேலை செய்பவர்களை . இது அவரது பிறவிக்குணம் என்று சொல்வார்கள் . அவரது நடவடிக்கையை வைத்து மட்டும் சொல்வார்கள். காக்கை வன்னியன் என்று ஏன் கூறுவார்கள். காட்டி கொடுத்து துரோகம் செய்தவர்களை. அதுமாதிரிதான் . இப்படியான நாசா வேலை செய்தவரை அப்படி சொன்னேன் . இதில் என்ன பிழை கண்டுபிடித்தீர் ? உண்மையாவே உங்களுக்கு " குலவழக்கம்" பதில் வேண்டுமா ?

துபாய்: வெள்ள நீரில் மிதந்த விமான நிலையம்

2 days 10 hours ago
துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது. எண்ணற்ற விமானங்கள் காலதாமதத்துடனும், ரத்து செய்யப்பட்டும் இருந்தன. இது விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன. இதேபோன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. துபாயின் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது. ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அமீரகத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. இன்றும் புயல் வீசக்கூடும் என முன்னறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். துபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/299335

பதவி விலகவுள்ள சிங்கப்பூர் பிரதமர்!

2 days 10 hours ago
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரீன் 3வது பிரதமரான இவர், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அண்மைக் காலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 02 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பிரதமர் லீ சியென் லூங்கும் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/299288
Checked
Fri, 04/19/2024 - 14:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed