புதிய பதிவுகள்2

இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 months 1 week ago
இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு 02 Dec, 2025 | 11:39 AM இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் புயல்கள்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் , வீதிகள் , கட்டிடங்கள் என்பன சேதடைந்துள்ளன. இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேஷியாவிலும் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 1,140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், இந்தியோனேஷியாவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமாத்திரா தீவின் பல பகுதிகள் வெள்ள நீர் நிரம்பியதால் மக்களை எளிதில் இன்னும் அணுக இயலாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளங்கள், மண்சரிவு காரணமாக வீதிகள் சேதடைந்ததால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/232221

சாத்தானின் படை புத்தகம் வேண்டி

2 months 1 week ago
dokumen.pubThe Satanic Force [1] - DOKUMEN.PUBஇந்த புத்தகம் ஈழ தமிழ் மக்களுக்கு இந்தியா இழைத்த துரோகம் பற்றி ஆதாரங்களுடன் கூறுகிறது...dokumen.pubThe Satanic Force [2] - DOKUMEN.PUBஈழ மக்களுக்கு துரோகம் இளைத்த இந்தியா...dokumen.pubThe Satanic Force [3] - DOKUMEN.PUBதலைவர் பிரபாகரன் வாழ்க...இந்த இணைதளத்தில் கூட volume 1 இன்- Part 1 / 2 / 3 தான் இருக்கிறது. மேலதிகமான பதிவுகள் இருந்தால் அறியத்தாருங்கள். மிக்க நன்றி.

இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள்

2 months 1 week ago
இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள் கிளிநொச்சி உமையாள்புரம் கிராமஅலுவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கறுப்புப் பட்டிகளுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிராம அலுவலர்கள் அறிவித்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் வெள்ளப் பேரிடர் உதவி வழங்கலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கினார் என்று கிராம அலுவலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனைக் கண்டித்து ஒரு வாரத்துக்குக் கறுப்புப் பட்டியுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். https://newuthayan.com/article/இளங்குமரன்_எம்.பி.யைக்_கண்டித்து;_கறுப்புப்_பட்டியுடன்_கிராம_அலுவலர்கள்

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்!

2 months 1 week ago
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்! adminDecember 2, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 443 பேர் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 1264 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 040 அங்கத்தவர்கள் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன. 11 046 குடும்பங்களை சேர்ந்த 34ஆயிரத்து 718 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/223446/

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 months 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 55 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 55 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தரின் வலது காறை எலும்பு எப்படி சொர்க்கத்திற்குச் சென்றது?' தேவநம்பியதிஸ்ஸ தூபாவைக் [Thupa / ஒரு புனித நபரின் சாம்பலின் மேல் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம்.] கட்டுவதாக உறுதியளித்தார். மேலும் மகிந்த தேரரை வணங்குவதற்கு ஒரு நினைவுச்சின்னத்தைக் [புத்தரின் தாதுவைக்] கண்டுபிடிக்குமாறு கோரினார். மகிந்த, சுமணாவை [Sumana] பாடலிபுத்திரத்திற்குச் [Pataliputta] சென்று அசோகனிடம் புத்தரின் தாது [relic] ஒன்றைக் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அசோகன் மகிழ்ச்சியுடன் அன்னதானக் கிண்ணத்தை நினைவுப் பொருட்களால் [தாதுவால்] நிரப்பினான். அதன் பிறகு சுமணா தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்று வலது காறை எலும்பைப் பெற்றான். பின் அவன் பாடலிபுத்திரத்திற்கு எப்படி பறந்து சென்றார் என்பதும் அவர் எப்படி தேவ உலகத்திற்குச் சென்றார் என்பதும் மற்றொரு அதிசயம். அதை விட அதிசயம், புத்தரின் தாதுவை எட்டுப் பகுதிகளாக பிரித்து, தூபாக்கள் [Thupas] அதன் மேல் எழுப்பிய பின், எப்படி இந்திரன் புத்தரின் வலது காறை எலும்பை முழுதாகக் எடுத்துக்கொண்டு தேவலோகம் போனார் என்பது? என்றாலும் இந்த கேள்விகளை தற்காலிகமாக ஒருபுறம் தள்ளி வைப்போம். தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த நினைவுச்சின்னம் [தாது] இலங்கைக்கு பறந்து எடுத்துச் செல்லப்பட்டது ? மேலும் முந்தைய புத்தர்களின் [previous Buddhas] கதைகளும் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த கௌதம புத்தருக்குப் பிறகு தான் புத்த சமயமே, அப்படி என்றால், முன்னையவர்களை எப்படி முந்தைய புத்தர்கள் என்று கூறலாம்? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் புத்தரே பிராமண சமயத்தில் தான் பிறந்தார், இருந்தார். அவர் அங்கு புரட்சி ஒன்றையே செய்தார் என்பதே உண்மை. மற்றும்படி மாற்றுச் சமயம் அவர் அமைக்கவில்லை! ராணி அனுலா [Queen Anula] தானும் மத சபையில் சேர விரும்பினார். அதனால், பின்னர் மகிந்த தேரர் தனது சகோதரி சங்கமித்தாவை இலங்கைக்கு அழைத்து வந்து பெண்களுக்கு, அவர்களை பெண் துறவியாக்கும் சடங்கு செய்ய முடிவு செய்தார். தீபவம்சத்தின்படி சங்கமித்தாவின் சகோதரியின் மகன் தான் சுமணா. 15-93 ஐ பார்க்கவும் [(மகள் சங்கமித்தாவுக்கு அசோகன் பதிலளித்தார்:) "உங்கள் சகோதரியின் மகன் சுமணா மற்றும் என் மகன், உங்கள் மூத்த சகோதரர், / (93. the great Sage has communicated to me the message of my brother.” (Asoka replied:) “Your sister’s son Sumana and my son, your elder brother]. இருப்பினும், சுமணா மகாவம்சத்தின்படி சங்கமித்தாவின் மகன் ஆவார். 13-5 ஐ பார்க்கவும் [மற்றும் சங்கமித்தாவின் மகனும், அதிசயமான பரிசு பெற்ற புதிய ஆண் துறவி சுமணா, / and also Sanghamitta’s son, the miraculously gifted samanera Sumana]. இன்னும் ஒன்றையும் நான் இந்த இடத்தில் சொல்லவேண்டும். மகவசத்தின் படி, மேலும் அசோகர் 84,000 மடங்களைக் கட்ட முடிவு செய்தபோது, அவர் மீண்டும் நிலத்தை அகழ்ந்து, முன்பு நிலத்தின் கீழ் புதைத்த ஏழு இடங்களில் இருந்து நினைவுச்சின்னங்களைப் பெற்றார். என்றாலும் நாகர்கள் வசம் இருந்த எட்டாவது புத்தரின் தாதுப் பகுதியை அவரால் பெற முடியவில்லை. ஆனால், பேரரசர் அசோகா தோல்வியுற்ற அந்த எட்டாவது புத்தரின் தாதுவை, துட்டகாமினி, நாகரின் பாதாள உலகத்திலிருந்து பெற்றதாக மகாவம்சம் பெருமையாக கூறுகிறது. இது இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மூன்றாவது தாதுவா ? இது சம்பந்தமாக மகாவம்சத்தின் முப்பத்தொன்றாம் அத்தியாயத்தை வசனம் 65 இல் இருந்து பார்க்கவும். [The naga said: If thou shalt see the relics, venerable sir, take them and go.’ Three times the thera made him repeat this (word), then did the thera standing on that very spot create a (long) slender arm, and stretching the hand straightway down the throat of the nephew he took the urn with the relics, and crying: Stay, naga !’ he plunged into the earth and rose up (out of it) in his cell. The naga-king thought: The bhikkhu is gone hence, deceived by us,’ and he sent to his nephew to bring the relics (again). But when the nephew could not find the urn in his belly he came lamenting and told his uncle. Then the naga king also lamented: We are betrayed,’ / வணக்கத்துக்கு உரியவரே, தாது உங்கள் கண்ணில் பட்டால், எடுத்து செல்லுங்கள் என்று நாகராஜன் கூறினான். தேரர் இவ்வார்த்தைகளை மூன்று முறை திருப்பச் சொல்லும் படி செய்தார். பிறகு, தேரர் அந்த இடத்தில் நின்றவாறே, தமது கையை நீளுமாறு செய்தார். நீண்ட அவரது கை [நாகராஜனின்] மருமகனுடைய தொண்டைக்குள் நுழைந்து சென்றது. [அங்கு, வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த] தாதுவுடன் இருந்த பேழையைக் கையில் எடுத்துக்கொண்ட அவர், ' நாகா நில்' என்று இரைந்து விட்டு, பூமிக்குள் புகுந்து மறைந்து, தமது இடத்தில் வந்து தோன்றினார். தம்மால் ஏமாற்றப்பட்டு பிக்கு இங்கிருந்து போய்விட்டார் என்று எண்ணிய நாகராஜன், தாதுவை இனி கொண்டுவா என்று மருமகனுக்கு சொல்லி அனுப்பினார். ஆனால், தன் வயிற்றுக்குள் பேழையைக் காணாத மருமகன் அழுது புலம்ம்பிக்கொண்டே அரசனிடம் வந்தான்] சங்கமித்தாவை போதிமரக் கிளையுடன் அனுப்ப அசோகன் மூன்று அரசுகளையும், விந்திய மலைத் தொடர்களையும் [Vindya mountain range], பெரும் காடுகளையும் கடந்து சமுத்திரத்தை அடைந்தான். இலங்கைக்கு போதிமரக் கிளை [அரசமரக் கிளை / Bo branch] செல்லும் வழியில் நாகர்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. தீபவம்சத்தில் அரசமரக் கிளையைக் கண்டு நாகர்கள் மகிழ்கிறார்கள். நாகர்கள் அரசமரக் கிளையைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கடல் வழி முழுவதும் வழிபடுவதாகவும் காட்டப்படுகிறது. நாகர்களின் தாராள மனப்பான்மைக்கான தீபவம்சத்தை, 16 - 8 முதல் 29 வரை பார்க்கவும். என்றாலும், எப்பொழுதும் பகைமையையும் முரண்பாட்டையும் உருவாக்கும் பழக்கம் கொண்ட மகாநாம தேரர் [Mahanama], நாகர்கள் முதலில் அரசமரக் கிளையை எடுக்க முயன்றார்கள் என்றும், ஆனால் சங்கமித்தா ஒரு கிரிஃபின் [யாளி / griffin / a mythical animal typically having the head, forepart, and wings of an eagle and the body, hind legs, and tail of a lion / ஒரு புராண விலங்கு. கிறிப்பன் அல்லது கிரிஃபின் ஒரு சிங்கத்தின் உடல், வால் மற்றும் பின் கால்கள் மற்றும் கழுகின் தலை மற்றும் இறக்கைகள் கூடிய ஒரு பழம்பெரும் உயிரினமாகும்] வடிவத்தை எடுத்து நாகர்களை பயமுறுத்தினாள் மற்றும் அவர்களை அடிபணியச் செய்யும்படி கட்டாயப்படுத்தினாள் என்கிறது. அவநம்பிக்கை மற்றும் முரண்பாடுகளை விதைப்பதற்காக சமூகங்களுக்கு இடையில் நிலவும் நட்பு சூழ்நிலையை மகாநாம தேரர் சிதைத்தார். எனினும், அக்காலத்தில் இலங்கை முதல் காந்தாரம் வரை நாகர்கள் வாழ்ந்ததாக தீபவம்சத்தில் உள்ள தகவல்களில் இருந்து ஊகிக்க முடிகிறது. Part: 55 / Appendix – Dipavamsa / 'How did Buddha's right-collar bone go to heaven?' Devanampiyatissa promised to build a Thupa, and requested Mahinda Thera to find a relic so that he could worship. Mahinda asked Sumana to go to Pataliputta and obtain relic from Asoka. Asoka gladly filled alms-bowl with relics. Then Sumana went to Indra, the head of Devas, and obtained the right-collar bone. He flew to Pataliputta, but how he managed to go to Deva’s world is another miracle. Ignoring the details, the relic was brought to Lanka. Stories of previous Buddhas are also stated in this Chapter. The Buddha prophesied at his deathbed that ‘they will deposit a relic of my body in the most excellent island’, 15-73. The author of Dipavamsa never anticipated that they would bring another relic of the Buddha, the tooth relic. He would have, otherwise, stated two relics instead of one. Queen Anula wanted to be admitted to the Order. Mahinda Thera then decided to get his sister Samghamitta to Lanka to perform ordination of women. Sumana is the son of the sister of Samghamitta as per the Dipavamsa, 15-93. He is, however, the son of Samghamitta as per the Mahavamsa, 13-5. Asoka crossed three kingdoms, Vindya mountain range and great forest to reach the ocean to send off Sanghamitta with the Bo branch. Numerous mentions of Nagas on the way of the Bo tree branch to Lanka. Nagas are happy to see and go along with the Bo branch in the Dipavamsa. Nagas are shown to be very happy about the Bo branch and venerating all the way along sea passage. See the Dipavamsa, 16 – 8 to 29, for the liberal and generous way the Nagas accompanied the Bo branch along the sea passage. Mahanama, who is always in the habit of creating enmity and discord, says Nagas tried first to take the Bo branch, but Sanghamitta took the form of a griffin and terrified the Nagas and forced them to seek submission. Mahanama distorted the prevailing friendly atmosphere among communities to sow distrust and discord. It can be inferred from the information in the Dipavamsa that Nagas were living from Lanka to Gandhara at that time. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 56 தொடரும் / Will follow துளி/DROP: 1925 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 55] https://www.facebook.com/groups/978753388866632/posts/32637271075921451/?

நிவாரணங்களுடன் வந்தது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் விமானம்

2 months 1 week ago
02 Dec, 2025 | 09:58 AM இலங்கை முகங்கொடுத்துள்ள பேரிடர் அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அனுப்பிய முதல் நிவாரண உதவி விமானம் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 48 தற்காலிக கூடாரங்கள், ஒரு குடும்பத்திற்குப் 14 நாட்களுக்கு போதுமான 2,592 உணவு பொதிகள், கூடாரங்கள், மீட்பு படையினருக்கான உபகரணங்கள், கடினமான பாதைகளில் செலுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பெருமளவு நிவாரணப் பொருட்கள் அடங்கியிருந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படைக்கு சொந்தமான, உலகின் மிகப் பெரிய சரக்கு கொண்டு செல்லும் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் C-17 வகை விமானம், அபுதாபி நகரிலிருந்து இந்த நிவாரண சரக்குகளை ஏற்றி இலங்கைக்கு வந்தது. மேலும் இதே போன்ற மேலும் 3 விமானங்கள் எதிர்வரும் சில சில நாட்களுக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வரவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிவாரண விமானம் வந்தடைந்த சமயத்தில், இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை தூதர் ரஷீத் அல் மஸ்ரூயி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமித்து ரம்புக்வெல்ல, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் குழுவொன்றும், இலங்கை இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர். https://www.virakesari.lk/article/232204

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரணக் குழுக்களுக்கு பொலிஸ் விடுத்துள்ள அறிவிப்பு

2 months 1 week ago
Published By: Digital Desk 3 02 Dec, 2025 | 09:54 AM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, தற்போதைய வீதி மறுசீரமைப்பு பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர், இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகள். எனினும், தற்போது வீதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும், வீடியோக்களை பதிவு செய்யவும் நிறுத்தி வைக்கப்படும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளால் இந்தப் பகுதிகளில் செயல்படும் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வலயங்களுக்குள் நுழைபவர்களுக்கும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. அதன்படி, பொதுமக்களுக்கான நிவாரணங்களை விநியோகிப்பதற்கு முறையாக ஒருங்கிணைக்க, அனைத்து நிவாரணக் குழுக்களும் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை (OIC) தொடர்பு கொள்ளுஙங்கள். நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அனர்த்த செயல்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். பொலிஸ் சிறப்பு செயல்பாட்டு மைய தொடர்பு இலக்கங்கள்: 071-8595884 071-8595883 071-8595882 071-8595881 071-8595880 https://www.virakesari.lk/article/232205

வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடன் உதவுங்கள் - கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

2 months 1 week ago
Published By: Vishnu 02 Dec, 2025 | 04:12 AM (நா.தனுஜா) வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ளப்பெருக்கு இதுவென அனர்த்த முகாமைத்துவக் கண்காணிப்புக்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் தீவிரத்தன்மையானது உடனடி சர்வதேச உதவிகளுக்கான தேவைப்பாட்டினை உணர்த்துகின்றன. இந்த மிகமோசமான காலநிலையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவும் உள்ளடங்குகின்றன. இந்த மாவட்டங்கள் வறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்களாகவும் இருக்கின்றன. அதேபோன்று அடிக்கடி அதிக மழைவீழ்ச்சி மற்றும் மண்சரிவு என்பவற்றுக்கு முகங்கொடுக்கும் மலையகமும் இவ்வனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட தரப்பினரைச் சென்றடைவதை உறுதிசெய்யக்கூடியவகையில் நம்பத்தகுந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் ஊடாக தொடர் மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232192

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு

2 months 1 week ago
இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு Published By: Vishnu 02 Dec, 2025 | 03:58 AM (நா.தனுஜா) மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதற்கமைய இலங்கை உள்ளடங்கலாக பாரிய அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 'மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனை அடைகிறோம்' என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, இந்நாடுகளின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/232189

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

2 months 1 week ago
கோப்பாய் பொலிஸ் பிரிவில் நபரொருவர் கொலை — சந்தேக நபர்கள் கைது! 02 Dec, 2025 | 11:14 AM யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் நேற்றையதினம் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வாகனத்தில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. நீண்டகாலமாக இரண்டு வன்முறைக் கும்பலிடைய காணப்பட்ட பகைமை உணர்வே குறித்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்களிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அதற்கு பழிதீர்க்கும் முகமாக விளக்கமறியலில் சிறையில் உள்ள நபரின் வழிகாட்டலுக்கமைய தெல்லிப்பழையில் வட்டி தொழில் செய்யும் ஒருவரிடம், கொலை செய்யப்பட்டவருக்கான தாக்குதலுக்கான திட்டம் கொடுக்கப்பட்டது. இதன்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்கள் இணைக்கப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் அருகில் வசிக்கும் நபர் ஒருவரும் இதற்கு ஒத்துழைத்துள்ளதுடன் பிரத்தியேக கையடக்க தொலைபேசிகள், சிம்கள் வாங்கப்பட்டு அதன் ஊடாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) திட்டமிட்டபடி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை திட்டத்தை மேற்கொண்ட வட்டித் தொழில் செய்பவர் தனது ஹயஸ் வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தாலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தனியான விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பதிவான காணொளி, கொல்லப்பட்ட நபரின் பின்ண்ணி என்பவற்றை வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் குறித்த கொலையை புரிந்தவர்கள், ஒத்துழைத்தவர்கள், திட்டம் தீட்டிய வர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதானவர்கள் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/232200

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 1 week ago
🤣................. ஏராளமான இந்தியர்களின் கதைகளில் ஒன்று இது: என்னுடன், என் அணியிலேயே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய நண்பனின் விசாவில் ஒரு சிக்கல் வந்தது. இன்னமும் சில மாதங்களே இருந்தன. அவனும் , மனைவியும் திரும்பிப்போக வேண்டிய ஒரு சூழல். மனைவி சில மாதங்கள், நாலோ ஐந்து மாதங்கள், கர்ப்பமாக இருந்தார். அவர்கள் உடனே திரும்பிப் போகவில்லை. சில மாதங்களின் பின் அவன் மட்டுமே திரும்பிப் போனான். மனைவி இங்கேயே தனித்து இருந்தார். பின்னர் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவி குழந்தையுடன் இந்தியாவுக்கு திரும்பிப் போனார். இவை மொத்தமுமே அவர்களின் குழந்தை அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே நிகழ்ந்தது. மருத்துவ காரணங்கள் எதுவுமில்லை. 'அமெரிக்கர்கள் பெரிய திருட்டுப் பயல்கள், சார்.................' என்று சொல்லிக் கொண்டே இங்கு நான் இருக்கும் இடத்திலேயே இரண்டு வீடுகளும், ஒரு வியாபாரமும் வாங்கும் இந்தியர்கள் பலர். அமெரிக்க பல்கலைக் கழகங்கள் உருப்படியற்றவை என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த உடனேயே, இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்களுக்கு எப்படி அனுமதியைப் பெற்றுத் கொள்வது என்ற ஆராய்ச்சியிலும், முயற்சிகளிலும் இறங்கிவிடுவார்கள். இவர்களில் ஒருவர் கூட மாஸ்கோ பல்கலைக்கழகம் பற்றி அதன் பின்னர் பேசமாட்டார்கள். இந்தியர்கள் கோவிட் தொற்றின் போது ஸ்புட்னிக் வக்சீனுக்காக வரிசையில் நின்றார்களா, இல்லையே, ஃபைசர் வக்சீன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். இங்கு எவராவது ஸ்புட்னிக் வக்சீன் போட்டார்களா................... இங்கு களத்திலேயே சில மாதங்களின் முன் ரஷ்யா புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்தி வந்தது. களம் ஆராவாரமாகவும் இருந்தது. உலகில் ஆயிரம் புற்றுநோய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் இந்த மருந்து எந்த புற்றுநோய்க்கு என்ற கேள்வி கூட வரவில்லை. ரஷ்யாவை நண்பர்கள் என்று சொல்லும் இந்தியர்களும், இந்தியாவும் இந்த மருந்தை இந்திய மருத்துவமனைகளில் அனுமதித்து விடுவார்களா.............. டி. ராஜேந்தரே இங்கு சன் ஃபிரான்சிஸ்கோ வந்து தான் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தார். ஏன், நாங்களும் தான் ரஷ்ய மருந்தை எங்கள் உடலுக்குள் செலுத்த அனுமதிப்போமா................... இந்தியாவினதும், இந்தியர்களினதும் நட்பும், நடைமுறையும் இவ்வாறு முரண்பட்டதே.............. அவர்களின் கனவு மாஸ்கோவிற்கு போவதல்ல................... அவர்களின் கனவு சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு போவதே........... புதிதாக மதம் மாறியவர்கள், அது வேறு ஒரு வகை. எம்ஜிஆர் ரசிகராக இருந்த ஒருவர் திடீரென்று சிவாஜி ரசிகர் ஆனால் என்ன நடக்குமோ அதையே தான் இந்த மதம் மாறியவர்களும் செய்கின்றார்கள். பழையதை எவ்வளவு தூற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக தூற்ற வேண்டும்; புதியதை எவ்வளவு போற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக போற்ற வேண்டும். இந்த வகையில் பயங்கர ஆக்டிவாக இருப்பார்கள். இவர்களைப் பார்த்து புதுக் கடவுளே பயந்து போய் பதுங்கிவிடுவார்.....................🤣. இது அரசியலில் கட்சி மாறுபவர்களைப் போன்ற ஒன்று.............. இது விசுவாசம் தான்................. அவர்கள் இன்னொன்றை கண்டு கொள்ளும் வரை............................

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு

2 months 1 week ago
இன அழிப்பிற்கு மட்டும் தான் சிங்களவன் ஒற்றுமையானவன்.. இதர கொசுறு வேலைகளுக்கெல்லாம் தமிழனுக்கு நிகரானவன்கள்.😂

ரஷ்யாவிற்கு தூதர் பயிற்சி அளிப்பதாக கசிவு தோன்றியதை அடுத்து, டிரம்ப் விட்காஃப்பைப் பாதுகாக்கிறார்

2 months 1 week ago
ஐரோப்பிய ஒன்றியம் என ஒன்று இல்லாதிருந்தால் உக்ரேன் போர் வந்திருக்காது.அப்படி வந்திருந்தாலும் ஓரிரு மாதங்களில் நிறுத்தப்படிருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 1 week ago
சீனன் வருவதற்கு முன் முதல் கதிரையை பிடிக்க முயற்சி செய்கின்றார்கள் போலும்... ஆனாலும் தமிழனை விட சிங்களத்திற்கு நன்கு தெரியும் கிந்தியன் யாரென..... காரியம் முடிய கடந்து விடுவான்.அவன் எப்படியோ இவனும் அப்படியே...
Checked
Sun, 02/15/2026 - 18:30
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed