2 months 2 weeks ago
உக்ரைன்ஸ்கா பிராவ்தா அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் Yevhen Kizilov - 2 அக்டோபர், 20:00 ஈரிக்-நைல்ஸ் கிராஸ். புகைப்படம்: பேஸ்புக் 16062 இல் பிறந்தார் எஸ்தோனிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உளவுத்துறைத் தலைவருமான எரிக்-நீல்ஸ் கிராஸ், உக்ரைன்ஸ்கா பிராவ்டாவை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார். மூலம்: க்ராஸ் ஆன் எக்ஸ் (ட்விட்டர்) விவரங்கள்: உக்ரைனில் ஜனநாயக மாற்றத்திற்கும், " ஜனநாயக உலகின் மூலக்கல் " என்று அவர் அழைத்த பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்படுவதாக கிராஸ் கூறினார் . உக்ரைனின் ஜனநாயக மாற்றங்களில் உக்ரைன்ஸ்கா பிராவ்தா ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறது , ஊழலை அம்பலப்படுத்துதல், மனித உரிமை மீறல்களைப் புகாரளித்தல், ரஷ்ய போர்க்குற்றங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் உக்ரைன் பற்றிய உண்மையின் முக்கிய உலகளாவிய ஆதாரங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது என்று அவர் வலியுறுத்தினார். " உண்மையைச் சொல்லும் உரிமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்த " உக்ரைன்ஸ்கா பிராவ்தா பத்திரிகையாளர்களையும் கிராஸ் நினைவு கூர்ந்தார் : பாவ்லோ ஷெரெமெட் என்ற ஊடக நிறுவனத்தை நிறுவிய ஜார்ஜி கோங்காட்ஸே மற்றும் 2024 இல் ரஷ்ய சிறைப்பிடிப்பில் கொல்லப்பட்ட விக்டோரியா ரோஷ்சினா. மேற்கோள்: " உக்ரைன்ஸ்கா பிராவ்தாவின் நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையை நான் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளேன். இது உக்ரைனின் ஜனநாயக மாற்றத்திற்கும், ஜனநாயக உலகின் மூலக்கல்லான பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும். அவர்களின் தியாகம், பேச்சு சுதந்திரம், எந்த வழியிலும் செல்ல பயப்படாதவர்களின் இரத்தத்திலும் தைரியத்திலும் தங்கியுள்ளது என்பதை ஒரு தெளிவான நினைவூட்டலாகும்." விவரங்கள்: சுதந்திரத்தின் விலையை நன்கு அறிந்த ஒரு நாடான எஸ்டோனியாவிற்கு, இந்த நியமனம் " உக்ரேனிய மக்களுடனான ஒற்றுமையின் வெளிப்பாடாகவும், உண்மையே ஒரு ஆயுதமாக இருக்கும் இடத்தில் தங்கள் பணியைத் தொடரும் பத்திரிகையாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதையாகவும்" உள்ளது என்று எம்.பி. மேலும் கூறினார் . Ukrainska PravdaUkrainska Pravda nominated for Nobel Peace PrizeEstonian MP and former intelligence chief Eerik-Niiles Kross has nominated Ukrainska Pravda for the Nobel Peace Prize.விளங்கநினைப்பவன், நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் அமைதிக்கான நோபல் பரிசிற்கு சிபார்சு செய்யப்பட்ட உக்கிரேனின் லங்காபுவத் போன்ற உக்கிரேன் பிராவ்தாவினை புட்டினின் ஆதரவு பத்திரிகை என கூறியுள்ளீர்கள்.
2 months 2 weeks ago
என் கோபத்தை நீங்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது. 😢
2 months 2 weeks ago
எனக்கு உங்களது கருத்துகள் பிடிக்கும், அதனை வாசிக்கும் போது ஒரு வித்தியாசமான நகைசுவையாக இருக்கும், பெரும்பாலும் உங்கள் கருத்து சரியாக இருக்கும். ஆனால் உக்கிரேன் பிராவ்தா உக்கிரேன் சார்பான ஊடகம், வெகு அரிதாக அமெரிக்க அதிபர் உக்கிரேனுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதற்கு எதிர்வினையாற்றுவார்கள், உக்கிரேன் பிராவ்தா, ஐரோப்பிய பிராவ்தா அமெரிக்க பத்திரிகைகளின் கட்டணம் அறவிடும் பத்திரிகையின் செய்திகளை இலவசமாக தருவதால் அதனை இணைக்கின்றேன். இங்கு பெரும்பாலும் உக்கிரேன் பிராவ்தா வோல்ஸ்ரிர் ஜேர்னல், பைனான்ஸ்சியல் டைம்ஸ் போன்ற கட்டண தகவல்களை இலவசமாக தருகிறது, நீங்கள் மீண்டும் உங்கள் நகைசுவையான கருத்தினை இலைமறை காயாக கூறியுள்ளீர்கள் என கருதுகிறேன்.🤣
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும் ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன. “பஞ்சம் படை வந்தாலும் பட்டினி தான் வந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி” என்று நல்லைக் கந்தனின் புகழை யோகர் சுவாமிகள் பாடுகிறார். முருகன் என்றால் அழகன் என்பர். அழகன் என்றால் இலங்கை வாழ் மக்களைப் பொறுத்தவரையில் மனக் கண்ணில் தெரிபவன் நல்லூர்க் கந்தனேயாவான். அப்படியான முருகனின் திருவிழாவில் கலந்துகொள்ள, ஆரன் வேட்டி மற்றும் வெள்ளை சட்டையுடன், பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லாமல், என்றாலும் தேர்த் திருவிழா காலை என்பதாலும், யாழ் வெக்கையான பகுதி என்பதாலும், சன் கிளாஸ் (Sun Glass) அணிந்து இருந்தாலும், அதை சரிசெய்து, ஒரு வெளிநாட்டவரைப் போல அதிகமாகத் தோன்றாமல் இருக்க முயன்றான். பிறந்து வளர்ந்தது எல்லாம் வெளிநாடு என்பதால், அவனுக்கு இயல்பாக தமிழ் பேசுவது கடினமாக இருந்தது. ஆனாலும், கோயில் மணிகள் முழங்கும்போது, அவனுக்குள் ஏதோ ஒரு ஒலி எழுந்தது. இந்த ஒலி ... அவனின் தந்தை மற்றும் அம்மா, உயர் வகுப்பு படிக்கும் பொழுது, தம் தம் பெற்றோருடன் இலங்கையை விட்டு வெளியேறும் பொழுது, என்னென்னெ நடந்தது என்று, அவனுக்குச் சொன்ன கதைகளில் ஒலித்த ஒலி, அது அவனின் தாத்தா பாட்டியின் இதயத் துடிப்பு! கோயிலின் கிழக்கு வாயிலுக்கு அருகில் ஒரு மூலையில் திரும்பி நின்றான். அப்போது தான் அவன் அவளைப் பார்த்தான். அனலி தன் சகாக்களுடன், நல்லூரில் தற்காலிகமாக அமைந்துள்ள, 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' என்ற நிறுவனத்தின் விளம்பர குடிலில், தங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்திக் கொண்டும், அதேவேளை பக்தர்களுக்கு சக்கரைத் தண்ணீர் வழங்கிக் கொண்டும் நின்றாள். அவளுடைய சேலை சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் மின்னி, தெய்வத்தின் அலங்காரங்களை கிட்டத்தட்ட எதிரொலித்தது. அவளுடைய தலைமுடியில் இருந்த மல்லிகை, தூபத்துடன் கலந்த ஒரு நறுமணத்தை வெளியிட்டது. அவளுடைய சகாக்கள் ஏதோ கிசுகிசுத்ததைப் பார்த்து அவள் சிரித்தாள், அவளுடைய சிரிப்பு திருவிழா சத்தத்தை விட அதிகமாக அவன் உள்ளத்தில் பதிந்தது. சுற்றுலா பற்றி மேலதிக விபரங்களை நேரடியாக அறியும் சாட்டில், ஆரன் அங்கு சென்றான். அவன் இதயம் மிருதங்கத்தை விட பலமாக துடித்தது. தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாற, “மன்னிக்கவும்,” என்று கூறிக் கொண்டு, சக்கரைத் தண்ணீரை கொஞ்சமாக வாங்கிக் கொண்டு, “வடக்கு கிழக்கு சுற்றுலா ஏற்பாடு பற்றி விபரமாகக் கதைக்கலாமா? ” என்று அனலியிடம் கேட்டான். அனலி அவனைப் பார்த்தாள், அவள் கண்கள் குறும்புத்தனமாக இருந்தன. “ஆமாம் … தாராளமாக, ஆனால், அதற்கு முதல், நீங்கள் இந்த சக்கரைத் தண்ணீரை குடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறீர்களா? இது மிகவும் இனிப்பானது. யாழ்ப்பாணத்தைப் போலவே.” என்றாள். ஆனால் அவன் உள்ளம், 'ஆமாம் மிகவும் இனிப்பானது உன்னைப் போலவே' என்று சொல்ல துடித்தாலும், அவளின் கடைவிழி பார்வையில், கொஞ்சம் தடுமாறி, தனக்கு தெரிந்த தமிழில், அவன் வாய் தனக்குள் முணுமுணுத்தது. பெண் நிலவு உன்னைப் பார்த்து வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ கண்ணழகி உன்னைப் பார்த்த நானும் வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ? அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில் அலைமோதுதே என்மனம் உன் விழிகளில் அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம் அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ? அவளுடைய சகாக்கள் சிரித்தனர். ஆரன், ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, “நான் மேப்பிள் சிரப்பை [பாகு / syrup] சாப்பிட்டு வளர்ந்தவான். சக்கரை ஒன்றும் எனக்குப் பெரிது இல்லை" என்றவன், தான் முதலில் சொல்ல விரும்பியதைச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. "ஒருவேளை யாழ்ப்பாணத்தின் இனிப்பு கொஞ்சம் வலிமையானதாக இருக்கலாம், உன்னைப்போல” என்று அவளை ஏறிட்டுப் பார்த்தான். தினமும் அவன், தன் வேலைத்தளத்தில் பல பெண்களோடு கதைக்க, பழக நேரிடும். சில நேரங்களில் அருகில் நெருக்கமாக அமர்ந்தும் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஏற்படாதா ஓர் உணர்வும் புது மாற்றமும் அவளுக்கு எதிராக இப்ப நிற்கும் பொழுது ஏற்படுவது அவனுக்குப் புரியவில்லை. ‘என்ன பொண்ணு டா இவ’ என சொல்லத் துடித்த நா வை அடக்க முடிந்தாலும், மனதை அடக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் ‘என்ன பொண்ணு டா இவ’ என்றே மனசு முணுமுணுத்தது. அனலி புருவத்தை உயர்த்தி, “மேப்பிள் சிரப்? .. அப்ப … நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவரா?” என்று கேட்டாள். “ஆம். கனடா. முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். பிரச்சனைகளின் போது என் பெற்றோர் வாலிப வயதில் இங்கிருந்து வெளியேறினர்.” அவனின் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாறினாலும், சமாளித்து முழுமையாகத் தமிழில் கூறினான். அவள் புன்னகை கொஞ்சம் தணிந்தது. "அப்போ நீங்கள் சரியான நேரத்தில் தான் வந்து விட்டீர்கள். நல்லூர் திருவிழா உள்ளூர்வாசிகளை மட்டும் வரவேற்காது, புலம்பெயர்ந்தோரையும் வரவேற்கிறது." என்றாள். பின் அந்த குடிலில் இருந்த மேசை அருகில் போய், தானும் அமர்ந்து அவனையும் அமரச் சொன்னாள். அப்போது, தங்கத் தேர் தெருவில் திரும்பும் போது கூட்டம் அலை மோதியது. மணிகள் முழங்க, சங்குகள் முழங்க, "வேல் வேல்!" என்ற கோஷங்கள் காற்றை நிரப்பின. ஆரனும் அனலியும், சுற்றுல்லா பற்றிய உரையாடலை சற்று நிறுத்தி, வெளியே எட்டிப் பார்த்தனர். ஆனால், பக்தர்களின் அலையால் இருவரும் மிக நெருக்கமாக தள்ளப்பட்டு, தோளோடு தோள் நின்று, பூக்களால், தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரக் கந்தனை வழிப்பட்டனர். அனலி கிட்டத்தட்ட பயபக்தியுடன் அவனின் காதில், "நல்லூர் ஒரு கோயில் அல்ல, யாழ்ப்பாணத்தின் இதயம்" என்று கிசுகிசுத்தாள். ஆரன் அவளைப் பார்த்தான் - அவள் ஒரு அழகு தேவதை போல் அவனுக்கு இருந்தது. அவள் கண்கள் எண்ணெய் விளக்குகளைப் போல அவன் இதயத்தில் பிரகாசித்தன. தேர் விலகிச் செல்லும் போது, கூட்டம் குழுக்களாகப் பிரிந்தது - சிலர் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி கடைகளுக்குச் சென்றனர், மற்றவர்கள் காவடி நடனக் கலைஞர்களுக்காக வாசிக்கும் மேளதாளங்களை நோக்கிச் சென்றனர். கூட்டம் குறைய, அவர்கள் மீண்டும் மேசைக்குப் போய், சுற்றுலா ஏற்பாடு பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால், ஆரன் அனலியே சுற்றுலா வழிகாட்டியாக வரவேண்டும் என்று வலியுறுத்தினான். அப்பொழுது அனலியின் அக்காவின் குட்டி மகள், அவளது கையை இழுத்து, “சித்தி, நாமும் காவடி நடனத்தைப் பார்ப்போம்!” என்று கெஞ்சினாள். அனலியின் அப்பா தான் இந்த நிறுவனத்தின் முகாமையாளர். அப்பாவை கேட்டு நாளை பதில் சொல்லுகிறேன் என்று அவனது தொடர்பு இலக்கத்தை அவசரம் அவசரமாக பதித்துக் கொண்டு, தன் அக்காவின் மகளுடன் காவடி நடனம் பார்க்கப் புறப்பட்டாள். அவனின் மனதில் அவளின் அழகு, பேசும் தொனி ஒரு சொல்ல முடியாத உணர்வைக் கொடுக்க, அவன் ஒரு தைரியத்தை வரவைத்துக் கொண்டு உச்சந்தலை முதல், முன் பாதம் வரை அவளைப் பார்வையிட்டான். உச்சந்தலையில் குங்கும பொட்டில்லை, காலில் மெட்டியில்லை. 'கலைந்துபோன அவளின் கூந்தலை கண்டு, கட்டிபோட்டிருந்த அவன் மனமும் கொஞ்சம் கலைந்தே போனது !' ஆரன் தயங்கி, “நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்கு ஆட்சேபனையில்லையா?” என்று கேட்டான். அனலி அவனிடம் ஒரு குறும்புத்தனமாக புன்னகைத்து, “ காவடி நேரடியாக பார்ப்பது இதுவா முதல் முறை” என்றாள். ஆனால், அவன் மௌனமாக, அவர்களுடன் ஒன்றாகக் காவடி நடனக் கலைஞர்களிடம் நடந்து சென்றான். ஆண்கள் வெறுங்காலுடன், மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட காவடியை தோளில் சுமந்து, தாளத்துக்கு ஏற்றவாறு உற்சாகமாக நடனம் ஆடினர். அதேவேளை ஒரு குழந்தைகள் குழு குச்சிகள் மற்றும் வண்ண காகிதங்களால் செய்யப்பட்ட பொம்மை காவடிகளை ஏந்திச் சென்றது. அவர்களில் ஒரு குழந்தை ஆரன் மீது மோத, பொம்மைக் காவடி நிலத்தில் தவறி விழுந்து, சிறிது அலங்கோலமாகி விட்டது. ஆரன் சாரி [sorry] என்று சொல்லி, அதை எடுத்து கொடுத்தான். அனலி சிரித்தாள். “பார்த்தாயா? குழந்தைகள் கூட நீ இங்கே சேர்ந்தவனா என்று சோதிக்கிறார்கள்.” என்றாள். ஆரனுக்கு, யாழ்ப்பாணம் அவனது பெற்றோரின் நினைவாக மட்டும் அல்ல. அது குறும்புத்தனத்தையும் அழகையும் சுமந்த ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில், அவனுக்கு முன்னால் உயிருடன் நின்றது. அனலியை பொறுத்தவரை, புலம்பெயர்ந்த அந்நியன் மற்றொரு பார்வையாளர் மட்டுமல்ல. அவன் நல்லூரை நோக்கிப் பார்த்த விதம் - உடைந்த வேர்களைத் தைக்க முயற்சிப்பது போல - அவளை அமைதியாகத் தொட்டது. அன்று இரவு, கோயில் கோபுரங்களுக்கு மேலே பட்டாசு வெடித்தபோது, ஆரன் நினைத்தான்: ஒருவேளை யாழ்ப்பாணம் வந்தது கடந்த காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாக மட்டும் அல்ல, அது எதிர்காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாகக் கூட இருக்கலாம்? என்று. அன்று மாலை, கோயில் வருகைக்குப் பிறகு, ஆரன், அனலி தந்தையின் வீட்டோடு சேர்ந்த 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' டின் முதன்மை அலுவலகத்திற்கு சென்றான். அனலியின் தந்தையுடன் அங்கு அமர்ந்தான். தெருவில் இருந்து மல்லிகை மற்றும் வறுத்த நிலக்கடலையின் வாசனை அங்கு வீசிக்கொண்டு இருந்தது. அனலியின் தந்தை ஆரனை அளவான புன்னகையுடன் பார்த்து, ' கான் ஐ ஹெல்ப் யு? [can I help you]' என்று கேட்டார். அவன் வந்த நோக்கத்தை விபரமாகச் சொன்னான். “ஆரன், நீ கனடாவில் இருந்து இவ்வளவு தூரம் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலத்தின் மீது இவ்வளவு அன்புடன் பேசுகிறாய். ஆனால் சொல்லுங்கள் - ஏன் எங்கள் மகளை சுற்றுலா வழிகாட்டியாக, இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார் ஆரன் மரியாதையுடன் அவரை அழைத்து, "நான் வெளிநாட்டில் பிறந்திருக்கலாம், ஆனால் என் வேர்கள் இங்கேதான். புலம்பெயர்ந்த நம்மில் பலர் கதைகளை மட்டுமே கேட்கிறோம். ஆனால் நாம் நம் கண்களால் இந்த நிலத்தைப் பார்க்க வேண்டும். அனலி சுற்றுலா துறையிலும் வரலாற்றிலும் கல்வி பயின்றவள் என்று அறிகிறேன். எனவே, நாம் பார்க்கவேண்டிய இடங்களையும் அந்தந்த இடத்தைப்பற்றி சரியான விபரத்தையும் தரக்கூடியவள் என்று எண்ணுகிறேன். அதனாலத்தான் ... '' என்று இழுத்தான். ' மற்றும்படி, இந்த அறிவுகளுடன் யார் வந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று முடித்தான். “ஆரன், உன் வேர்களை மீண்டும் கண்டுபிடிக்க வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். நான் உன்னுடன் ஒரு பெரியவரை அனுப்பினால், நீ கவனமாகப் பேசும் வார்த்தைகளை மட்டுமே கேட்பாய். ஆனால், உன் விருப்பம் படி அனலி வழிகாட்டியாக வந்தால், இருவரும் சுதந்திரமாகப் பேசுவீர்கள் - இளைஞர்களாக, சமமாக. உண்மை வரலாறு ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்திற்குப் பரவும் என்று நம்புகிறேன்” அனலி ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தாள். அப்பா (புன்னகையுடன்): “ஆமாம், குழந்தாய். ஆரனின் மரியாதையையும் உன் ஞானத்தையும் நான் நம்புகிறேன். நீ நம் நிலத்தின் வரலாற்றைக் கற்றுக் கொடுக்க, அதை இன்றைய நிலைமையில் இருந்து எடுத்துச் செல்லப் போகிறாய். அவ்வளவுதான் ” என்றார். ஆரன் நன்றியுடன் தலை குனிந்தான். “நான் அனலியை என் சொந்த சகோதரியைப் போலவே மரியாதையுடன் நடத்துவேன்.” என்றான். அனலியின் தந்தை தலையசைத்தார். "நீ நன்றாகப் பேசுகிறாய், ஆரன். இவை புனிதமான பயணங்கள் - நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம், நல்லூர். உனது நோக்கம் - பண்பாடு மற்றும் வரலாறு என்பதால், நாங்கள் உன்னை நம்புகிறோம்." அனலியின் தந்தை, ஆரனின் கண்களைப் பார்த்து, அங்குள்ள நேர்மையை அளந்து, இறுதியாக தலையசைத்தார். "சரி. போ. பயணம் செய், கற்றுக்கொள், பெரியவர்கள் கூட மறந்துவிட்ட கதைகளுடன் திரும்பி வா" என்றார். அருகில் அமர்ந்திருந்த அனலி கீழே பார்த்தாள், ஆனால் அவள் கண்கள் உற்சாகத்தால் பிரகாசித்தன. அவள் தான், தனக்கு ஒரு துணையாக, அக்கா மகளையும் - பாடசாலை விடுமுறை என்பதால் - கூட்டிப்போகவா என்று கேட்டாள். அவளுடைய தந்தை , “அப்படியானால் ஓகே , ஆனால் கவனமாக. நினைவில் கொள்ளுங்கள் - நீங்கள் உங்கள் இளமையை மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் கண்ணியத்தையும் சுமக்கிறீர்கள். ஆரன், நீ அவளைப் பாதுகாக்கவும். அவள் துக்கத்துடன் அல்ல, அறிவுடன் திரும்பட்டும்.” என்றார். அன்று இரவு, மேசை விளக்கின் கீழ், அனலி தனது நாட்குறிப்பில் எழுதினாள் : “நாளை நான் ஆரனுடன் நடப்பேன்; அந்நியனோடு அல்ல, அவன் மறந்துபோன பாரம்பரியத்தின் கதவுகளைத் திறக்கும் ஒரு வழிகாட்டியாக! அவன் காலடி பாதைகளில் எம் முன்னோரின் நிழல்கள் விழித்தெழட்டும் என் வார்த்தைகளில் நாம் இழந்த வரலாறு மீண்டும் உயிர்பெறட்டும்!” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/32609831688665390/?
2 months 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 52 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 52 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் சரியாகக் கற்பிக்கவில்லையா?' புத்தரின் இலங்கை வருகையின் போது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பலகோடி ?? ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. அவர்கள் விஜயன் வரும் பொழுதும் அதற்குப் பிறகும் இலங்கையில் இருந்து இருந்தால், தானாகவே புத்த மதம் அங்கு தழைத்து ஓங்கி இருக்கும். ஆனால், அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து சென்ற பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் அவரது கொள்கைகளை விட்டுவிட்டு முந்தைய கொள்கைகள் மற்றும் சிவ மற்றும் நாக வழிபாடுகளுக்கு திரும்பிச் சென்றனவா? அல்லது புத்தர் சரியாகக் கற்பிக்கவில்லையா? எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் சொல்லவும். பழங்கால அல்லது இன்றைய உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒருவர் தனது போதனைகளை முதலில் தான் பிறந்து வளர்ந்த நாட்டிலேயே நிறுவ முனைகிறார். அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவலாம் அல்லது பரவாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் குறிப்பாக தங்கள் நாடு, அவர்களின் மொழி, அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தை அறிந்திருக்கிறார்கள். மேலும் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாடுகளுக்கு, அந்த பண்டைய காலத்தில் கடினமாக இருந்தது. இரண்டாவதாக, புத்தர் விஜயனின் வருகைக்கு முன் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்தார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. புத்தர் முதலில் வந்தபோது, பல தெய்வீக மனிதர்கள் (தேவர்கள்) கூடினர், மேலும் அவர் அவர்களுக்கு தனது போதனைகளை போதித்தார். இதன் விளைவாக, ஏராளமான உயிரினங்கள் [many kotis of living beings] பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டன. எனக்கு இதில் புரியாதது, தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு போதனை ஏன் ? எதற்காக ?? அவ்வாறே, அவர் தனது இரண்டாவது வருகையின் போது, கடலிலும் நிலத்திலும் வாழ்ந்த ஏராளமான நாகர்களுக்கு கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களில் எண்பது கோடி [eighty kotis] பேர்?? பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இலங்கை சனத்தொகை, 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 23.50 மில்லியனை எட்டும் என்று இன்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது [ஒரு கோடி என்றால் பத்து மில்லியன்] இப்பதான் மொத்த சனத்தொகை அல்லது போதனைகளை கேட்கக்கூடிய அறிவுள்ள உயிரினங்கள் 2.35 கோடியை எட்டப்போகிறது. அப்படி என்றால், எண்பது கோடி இப்ப இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின், இரண்டரைக்கோடி ஆகிவிட்டதா? தனது மூன்றாவது வருகையின் போது, புத்தர் மீண்டும் போதித்தார். புறப்படுவதற்கு முன், அவர் தனது கால்தடங்களை சுமனகுடாவில் (Sumanakuta / A mountain peak in Ceylon / இப்போது ஸ்ரீ பாத அல்லது ஆதாமின் சிகரம் என்று அழைக்கப்படுகிறது) விட்டுச் சென்றார். புத்தர் ஏற்கனவே இலங்கையில் தனது போதனைகளைப் பரப்பியிருப்பதால், விஜயனும் அவனது சீடர்களும் வந்தபோது புத்த மதம் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், சிவன் மற்றும் நாகா (பாம்பு தெய்வங்கள்) வழிபாடுகள், மன்னன் தேவநம்பிய திஸ்ஸாவின் காலம் வரை தொடர்ந்தன என்பதே உண்மையான வரலாற்றுச் சான்றுகள். பிற்காலத்தில் இந்திரன் கடவுள் கூட? [ இந்திரன் ஒரு இந்து கடவுள், அவர் எப்படி புத்த சமயத்தை பரப்ப துணை போனார் ?, தேவலோக துரோகியா?] புத்த துறவி மகிந்தவை இலங்கைக்கு சென்று பௌத்தத்தை பரப்புமாறு அறிவுறுத்தினார். மகிந்த தீவில் பௌத்தத்தை கொண்டு வருவார் என புத்தரே முன்னறிவித்ததை [ ஏன் புத்தர், தானே புத்த கொள்கையை இலங்கைக்கு கொண்டு வந்ததை, அதுவும் மூன்று தடவை என்பதை, மறந்து விட்டாரா?] இந்திரன் மகிந்தவுக்கு நினைவுபடுத்தினார். Part: 52 / Appendix – Dipavamsa / 'Did the Buddha not teach correctly?' What I still don't understand is that if billions of souls, including Nagas and Devas, converted to Buddhism during Buddha's visit to Sri Lanka, what happened to them? Why was Mahinda Thera sent to convert them? Or after the Buddha came and went, did all those beings abandon his principles and go back to the previous principles and Siva & Naga worships? Or did the Buddha not teach correctly? If one takes a look at the history of the ancient world, one tends to establish his teachings first in the country where he was born and brought up. After that it may or may not spread to other countries. Because they especially know their country, their language, their environment and culture. And transportation, especially to foreign countries, was a difficult at the time. Second, the Buddha visited Ceylon three times before Vijaya's arrival, and on his first visit, the Devas assembled, and in their assembly the Master preached them the doctrine. The conversion of many kotis of living beings took place Similarly, in the second visit, he, the Lord, established in the (three) refuges and in the moral precepts eighty kotis of snake-spirits, dwellers in the ocean and on the mainland. And on the third visit, the merciful Lord, had preached the doctrine there, he rose, the Master, and left the traces of his footsteps plain to sight on Sumanakuta / A mountain peak in Ceylon If that is the case, Buddha's teachings must have been there at the time of Vijaya's arrival, but Siva worship and Naga worship have been continued there till the time of Devanampiya Tissa and Even the great Indra sought out the excellent thera Mahinda and said to him: `Set forth to convert Lanka; by the Sam buddha also hast thou been foretold (for this). நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 53 தொடரும் / Will follow துளி/DROP: 1921 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 52] https://www.facebook.com/groups/978753388866632/posts/32588228377492388/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 53 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 53 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மகிந்தவும் சங்கமித்தாவும் கற்பனை கதாபாத்திரங்களா?' மூத்தசிவனின் முதல் மகனான அபயாவுக்கு என்ன நடந்தது என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை. மகாவம்சமும் அவனைப் பற்றி மௌனமாக இருக்கிறது. சுருக்கமாக, இலங்கை பண்டைய நூலின் படி, அசோகா & தேவநம்பியதிஸ்ஸ இருவரும் சமகாலத்தவர்கள், ஒரே மாதிரியான பட்டப்பெயர்களைக் கொண்ட , ஒரே மாதிரியான சமயத்தைக் கொண்ட, ஒரே மாதிரியான இரண்டாவது மகனாக, நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இவை கற்பனையாக ஒருவருக்கு ஒருவர் இணைக்கப்பட்ட ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கையின் திஸ்ஸா இந்தியாவின் உண்மையான அசோகரின் கார்பன் நகலாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் அசோகருக்கு உறுதியான சான்றுகள் உள்ளன. ஆனால், இலங்கையில் தேவநம்பியதிசாவைப் பற்றி தொல்பொருள் அல்லது கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மகிந்த மற்றும் சங்கமித்தா பிறந்த ஆண்டு இலங்கையின் பண்டைய வரலாற்று நூலில் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு சந்தேகத்தை கொடுக்கிறது. எனவே, இது நம்பகமாக இல்லை. காரணம் இருவரும் கண்டுபிடிக்கப்பட்ட கதாபாத்திரங்களாக இருக்கலாம். ஏனென்றால், மகிந்த மற்றும் சங்கமித்தா அவர்களின் பிறந்த இடமான இந்தியாவில் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனவே தேவநம்பியதிஸ்ஸ, மகிந்த மற்றும் சங்கமித்தா கற்பனை பாத்திரங்களாகத் தோன்றுகிறது? இது ஏற்கனவே விரிவாக விளக்கப்பட்டுள்ளது, ஆனால் சுருக்கமாக கீழே தருகிறேன்: மகிந்தவையும் சங்கமித்தாவையும் குறிப்பிடும் இந்திய ஆதாரங்கள் இல்லை. அசோகரின் கல்வெட்டுகளோ, ஆணைகளோ மகிந்தவையோ, சங்கமித்தாவையோ குறிப்பிடவில்லை. மகிந்த உண்மையிலேயே இளவரசராகவும், அசோகரின் மகனாகவும் இருந்தால், குறைந்தபட்சம் ஒரு இந்திய ஆதாரம் அல்லது கல்வெட்டு அவரைக் குறிப்பிடும் என்று எதிர்பார்க்கலாம். தேவநம்பியதிஸ்ஸ மற்றும் அசோகரின் நட்பும் சந்தேகத்திற்குரியது. அவர்கள் நேரில் சந்திக்காத போதிலும், அவர்கள் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க அசோகரின் பதிவுகளில் இருந்து எந்த ஆதாரமும் இல்லை. மற்றொரு முக்கிய பிரச்சினை தேவநம்பியதிஸ்ஸவின் இரண்டாவது முடிசூட்டு விழா மற்றும் பயண நேரங்களின் சாத்தியக்கூறு ஆகும். அசோகரின் செல்வாக்கின் கீழ் தேவநம்பியதிஸ்ஸ இரண்டாவது முடிசூட்டுக் கொண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது, ஆனால் அந்த நாட்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணம் பருவக்காற்றை நம்பியிருந்தது. ஒரு சுற்றுப்பயணம் பல பல மாதங்கள் ஆகலாம், போய் வர அண்ணளவாக ஒரு ஆண்டு ஆகும். எனவே இந்த நிகழ்வுகள் மிகவும் சாத்தியமற்றது. இவை விபரமாக முன்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் புராண கதைகளுக்கான சாத்தியமான காரணங்கள் சமயச் சட்டமாக்கல்: இலங்கையின் பௌத்த பாரம்பரியம், தீவின் ஆட்சியாளர்களை நேரடியாக அசோகருடன் இணைக்கும் வகையில் இந்தக் கதைகளை உருவாக்கி, அதன் மூலம் இலங்கையில் பௌத்தத்தின் புனிதத் தன்மையை வலுப்படுத்தி யிருக்கலாம்? மன்னராட்சி முறை: தேவநம்பியதிசாவை அசோகருடன் தொடர்புபடுத்துவது, இலங்கை மன்னரை சக்திவாய்ந்த மௌரியப் பேரரசுடன் இணைப்பதன் மூலம் அவருக்கு அதிக அங்கீகாரத்தை அளித்திருக்கும். இலங்கை ஆதாரம் இலங்கையில் காணப்படும், மிஹிந்தலை போன்ற கல்வெட்டுகள், மகிந்தவைக் குறிக்கும் ஒப்பீட்டளவில் [ஆனால்] பிற்கால கல்வெட்டுகள் ஆகும். மகிந்த மற்றும் சங்கமித்தாவுடன் தொடர்புடைய ஸ்தூபிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் (மிஹிந்தலை மற்றும் அனுராதபுரத்தின் போதி மர ஆலயம் போன்றவை) பாரம்பரியத்தால் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவற்றின் கல்வெட்டுகள் ஒப்பீட்டளவில் பிந்தியதாகவே காணப்படுகிறது. அவற்றின் இருப்பை உறுதிப்படுத்தும் சமகால கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. Part: 53 / Appendix – Dipavamsa / 'Are Mahinda and Sanghamitta invented personalities?' Devanampiyatissa ruled for forty years. Though the Ceylon chronicles give 37 years for Asoka, the Indian sources give 36 years for Asoka after coronation. Asoka commenced ruling four years before the coronation. Therefore, both Asoka and Tissa had same length of reigns, forty years. Asoka is the second son of his father and Tissa is the second son of his father Mutasiva; another coincident. Dipavamsa is silent on what happened to the first son of Mutasiva, Abhaya. The Mahavamsa is also silent about the first son of Mutasiva. In summary, both are contemporaries, intimate friends with similar sounding names with same length of reigns, the same religion, and the second sons. They had not met each other and separated by more than one thousand five hundred miles in travelling distance. It is quite impossible to be true about two thousand three hundred years ago! These must have been invented coincidences; Tissa of Lanka must be carbon copy of the real Asoka of India. There are concrete evidences for Asoka all over India, and there is no archaeological or inscriptional evidence about Devanampiyatissa in Ceylon. Year of birth of Mahinda and Samghamitta are precisely given in the Ceylon chronicles. The reason could be that both are invented personalities. There are no information about Mahinda and Samghamitta in their birthplace, India. Therefore, Devanampiyatissa, Mahinda and Samghamitta must be invented personalities. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 54 தொடரும் / Will follow துளி/DROP: 1922 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 53] https://www.facebook.com/groups/978753388866632/posts/32596343023347590/?
2 months 2 weeks ago
தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றி Published By: Vishnu 30 Nov, 2025 | 10:49 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கடைசி வரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க 17 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, சிரேஷ்ட வீரர் விராத் கோஹ்லி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் வெறும் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.) இதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்களும் சிரேஷ்ட வீரர்களுமான ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். ரோஹித் ஷர்மா 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் ருத்துராஜ் கய்க்வாட் (8), வொஷிங்டன் சுந்தர் (13) ஆகிய இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். எனினும், 60 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் கே. எல். ராகுலுடன் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் 32 ஓட்டங்களைப் பெற்ற ரவிந்த்ர ஜடேஜாவுடன் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். விராத் கோஹ்லி 120 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 135 ஓட்டங்களைக் குவித்தார். 306ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விராத் கோஹ்லி குவித்த 52ஆவது சதம் இதுவாகும். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன். நண்ட்றே பேர்கர், கோபின் பொஷ், ஒட்னெல் பாட்மன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். மிகவும் கடுமையான 350 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. தென் ஆபிரிக்கா அதன் முதல் 3 விக்கெட்களை 11 ஓட்டங்களுக்கு இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும், மத்திய வரிசையில் மூவர் அரைச் சதங்கள் குவித்ததுடன் மேலும் இருவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தென் ஆபிரிக்க அணியை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர். 39 ஓட்டங்களைப் பெற்ற டோரி டி ஸோர்ஸியுடன் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களையும் 37 ஓட்டங்களைப் பெற்ற டிவோல்ட் ப்றவிஸுடன் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் 70 ஓட்டங்களைப் பெற்ற மாக்கோ ஜென்சனுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் மெத்யூ ப்றீட்ஸ் பகிர்ந்தார். மெத்யூ ப்றீட்ஸ் 72 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து கோபின் புஷ், ப்ரிநெலான் சுப்ராயன் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். சுப்ராயன் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் கோபின் பொஷ், நெண்ட்றே பேர்கர் (17) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் மேலும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். போராட்டக் குணத்துடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கோபின் பொஷ் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/232090
2 months 2 weeks ago
இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்த சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் Nov 30, 2025 - 08:35 PM அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுவதற்கு அவசியமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக நன்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்க்கையை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இன்று (30) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகள், குடிநீர் வசதிகள், நீர்ப்பாசன மறுமைப்பு மற்றும் ரயில் பாதை மற்றும் ரயில் சேவைகளை மீளமைப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்தத்தின் பின்னர் அழிந்த நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதன் மூலம் போக்குவரத்துக் கட்டமைப்பை மீளமைக்க துரித வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்பட்டது. இதற்காக, சேதமடைந்த அனைத்து வீதிகளையும் அடையாளம் காண்பது மற்றும் ரயில் பாதைகள் மற்றும் சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் புனரமைப்பதில் முதல் முன்னெடுப்பாக சேதத்தை மதிப்பிடுவதும், அதே நேரத்தில், புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வளங்களை (பௌதீக மற்றும் மனித வளங்கள்) அடையாளம் காண்பதும் ஆகும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அத்தோடு இந்த நடவடிக்கைகளில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmilur6kv027wo29nbekzenfp
2 months 2 weeks ago
பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்: வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை – நொயெல் பிரியந்த Published By: Vishnu 30 Nov, 2025 | 08:03 PM (இராஜதுரை ஹஷான்) பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும். மின்னிணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின்விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் மண்சரிவு அனர்த்தம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மின்விநியோக கட்டமைப்பு மற்றும் மின்னுற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கான மின்விநியோக சேவையை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பினையும், சேவையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டு தான் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையில் தேசிய மின்கட்டமைப்பு 540 ஜிகாவாட்டாக வரையறுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, மஹியங்களை மற்றும் வவுனத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மாற்று வழிமுறைகள் ஊடாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது அல்லது செயலிழக்கப்பட்டுள்ளது. மின்விநியோக இணைப்பின் போது வைத்தியசாலைகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொதுப்பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும்.தற்போது 72 சதவீதமளவில் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/232085
2 months 2 weeks ago
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னையில் ஒரு காட்சி. 30 நவம்பர் 2025, 09:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தற்போது தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டியே வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் இந்தப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? தஞ்சாவூர் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் பெய்துவரும் கனமழை காரணமாக, சுந்தரம் மீனா நகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கும்பகோணம் தேவனாஞ்சேரியில் தொடர்மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் குடும்பத்தார் (மனைவி மற்றும் இரண்டு மகள்கள்) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டனர். அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த இளைய மகள் ரேணுகா (19 வயது) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படக்குறிப்பு,ஆலமன்குறிச்சியில் இடிந்து விழுந்த வீடும், பலியான ரேணுகாவும் கடலூர் திட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதுமே கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் எழுகின்றன. மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவ்வப்போது காற்றும் வீசி வருவதால் தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. திருவாரூர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக மழை தொடர்கிறது. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான சவளக்காரன், தரிசுவேளி, கூனமடை, கீழநாலாநல்லூர், ராமாபுரம், துண்டாக்கட்டளை, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. ஏற்கனவே பெய்த கனமழையின் காரணமாக குளம் போல் தேங்கியிருந்த மழை நீர் இன்னும் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகக் கணக்கெடுத்து அதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். படக்குறிப்பு,திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது. நிரம்பிய நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி மறுகால் பாயும் நிலையில் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் பிடித்து மகிழ்கின்றனர். விழுப்புரம் திட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூழ்நிலையை சமாளிக்க தீயணைப்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நிலைய பொறுப்பாளர் ஜமுனாராணி, "திட்வா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் சுமார் 200 வீரர்கள் விடுப்பு எடுக்காமல் தயாராக உள்ளனர். ஐந்து ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்பட அனைத்து மீட்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறினார். மேலும், மாவட்டத்தில் புயல் காரணமாக ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 112 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அவர் கூறினார். திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் வீதியில் நள்ளிரவில் தனம்மாள், சரவணன் ஆகியோரது வீடுகளின் மீது புளிய மரக்கிளை விழுந்தது. இதில் விஜயா (60) என்பவர் காயமடைந்தார். விஜயாவின் கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புதுச்சேரி படக்குறிப்பு,புதுச்சேரியில் சீற்றத்தோடு காணப்படும் கடல் புதுச்சேரியில் திட்வா புயல் காரணமாக நேற்று (நவம்பர் 29) காலை 8:30 மணியிலிருந்து இன்று (நவம்பர் 30) அதிகாலை 5.30 மணி வரையிலும் சுமார் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கரையை நோக்கி வருகின்றன. புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. படக்குறிப்பு,காரைக்காலில் மழையால் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்புத் துறையினர் காரைக்கால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் நகரின் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இரு தினங்களாக காற்று பலமாக வீசுகிறது. காரைக்கால் பாரதியார் வீதி உள்ள பகுதியில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், காரைக்கால் மாவட்ட குடிமை பாதுகாப்பு படை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78v90l8kedo
2 months 2 weeks ago
Published By: Vishnu 30 Nov, 2025 | 08:36 PM பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படைத்தளத்தில் இருந்து சுமார் 100 தொன் நிவாரணப் பொருட்கள், பயிற்றப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், மேலும் முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்திய உதவிக்கட்டமைப்பு உள்ளிட்ட அவசர உதவிகளை ஏற்றிய C-130 இலக்க விமானம் இன்று கொழும்புக்குப் புறப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள அவசர சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த மனிதாபிமான உதவி உடனடி நடவடிக்கையாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் அடங்கும் உதவிப் பொருட்களில் அவசர மருத்துவ உபகரணங்கள், தங்குமிட வசதிக்கான பொருட்கள், உணவுப் பொருட்கள், குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. இது இலங்கை மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பாகிஸ்தானின் முக்கியமான மனிதாபிமான உதவி நடவடிக்கையாக உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/232086
2 months 2 weeks ago
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். Published By: Vishnu 30 Nov, 2025 | 10:06 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என்ற சாதனை ரோஹித் ஷர்மாவினால் முறியடிக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவுடனான அப் போட்டியில் ரோஹித் ஷர்மா 57 ஓட்டங்களைப் பெற்றார். https://www.virakesari.lk/article/232088
2 months 2 weeks ago
படக்குறிப்பு,மண்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சபப்டுகிறது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''பெரிய சத்தமொன்று வந்தது. நான் கதவை திறந்தேன். கதவை திறந்தவுடன் பூகம்பம் போல தோன்றியது. ஒரு வீடு அப்படியே உள்ளே புதையுண்டது. அந்த வீடு உள்ள போனதை நான் கண்ணால கண்டேன்" என இலங்கை கண்டியில் நிகழ்ந்த மண்சரிவிலிருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அலவத்துகொடை - ரம்புக்கேஹெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாரியதொரு மண்சரிவு சம்பவம் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிபிசி தமிழ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றது. படக்குறிப்பு,ரஷிம் "நாங்கள் உடனே வெளியில் வந்தோம். நாங்கள் பள்ளிக்கு அருகில் வந்தவுடன்தான் ஆகப் பெரிய மண்சரிவொன்று வந்தது. பெரியதொரு மண்சரிவு அது. பெரியதொரு சத்தம் கேட்டது. என்னுடைய வீட்டை கட்டி நான்கு மாதம்தான் ஆனது. என்னுடைய லாரி வாகனம் எல்லாம் போய்ட்டது.'' என்று ரஷிம் கூறினார். ரம்புக்கேஹெல்ல கிராமமானது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மலைப் பகுதியாகும். கண்டி - மாத்தளை பிரதான வீதியின் அலவத்துகொடை நகர் பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. படக்குறிப்பு,ரம்புக்கேஹெல்ல பகுதியானது, முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு மலைப் பகுதியாகும். நடந்தது என்ன? நேற்று முன்தினம் நள்ளிரவு கடும் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென பாரிய சத்தமொன்று கேட்டுள்ளதுடன், ஒரு சில நொடிகளில் வீடொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டு ஒரு சில நிமிடங்களில் மற்றுமொரு பாரிய சத்தம் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்தே, மலைப் பகுதியில் பாரியதொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. படக்குறிப்பு,இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தில் சுமார் 14 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 40 பேர் வரை அந்த வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். எனினும், போலீஸார் மற்றும் கிராம சேவகரின் மதிப்பீட்டில் அந்த விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வீடுகள் மாத்திரமன்றி, வீடுகளிலிருந்து வாகனங்கள் கூட மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. ரம்புக்கேஹெல்ல பிரதேசத்தின் பாதி பகுதியே மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. தமது சொந்தங்களை தேடும் நோக்கில் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மண்ணை அங்காங்கே தோண்டி தோண்டி தேடுகின்றனர். நேற்று அதிகாலை முதல் தேடுதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 9 பேரின் உடல்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாவது தமது உறவுகளை தாம் கண்டுபிடிப்போம் என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர்கள் தேடி வருகின்றனர். படக்குறிப்பு,மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி மக்கள் கூறுவது என்ன? கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பௌத்த விகாரைகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அவதானிக்க முடிந்தது. ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கிய போதிலும், தமக்கு பூரண ஒத்துழைப்பு இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் அந்த பிரதேச மக்கள். மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாரியளவில் நீர் ஊடறுத்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நீர் ஊடறுத்து செல்லும் இடங்களில் மண் சிறிது சிறிதாக சரிந்து வருவதை அவதானிக்க முடிந்தது. மண்ணில் புதையுண்ட வீடொன்றில் வேலை செய்த லெட்சுமி என்பவர் கண்ணீர் மல்க, காணாமல் போனோர் தொடர்பில் பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ''அவர்கள் எல்லாருமே நல்ல மனிதர்கள். வசதிமிக்கவர்கள். பெரிய பெரிய வீடுகள் இருந்தன. நல்ல குடும்பங்கள். ஒரு வீட்டில 5 பேர் முதல் 8 பேர் வரை இருந்தார்கள். வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்து வீடுகளைக் கட்டினார்கள். அந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லாம் சொந்தக்காரர்கள். எல்லாரும் இறந்து விட்டார்கள்,'' என்றார் லெட்சுமி. படக்குறிப்பு,தாஷிப் உடல்களை எடுக்க முயற்சிக்கின்ற போதிலும், எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்தைச் சேர்ந்த தாஷிப் தெரிவிக்கின்றார். ''இரவு 12 மணிக்கு தான் மண்சரிவு நடந்தது. எல்லாம் பெரிய பெரிய வீடுகள். எல்லாம் போய்விட்டது'' என தாஷிப் தெரிவிக்கின்றார். மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இன்றைய தினம் வானிலை சாதகமான நிலையில் காணப்பட்ட போதிலும், மீட்பு பணிகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமையை பிரதேச மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1m8nx1llyro
2 months 2 weeks ago
மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைந்தால் வரலாறு காணாத அழிவு ஏற்படும் Published By: Vishnu 30 Nov, 2025 | 08:00 PM திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அழிவினை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஏற்படுத்திவிடும் என அச்சம் வெளியிட்டு வந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாற்று அணைக்கட்டின் மேல் பகுதி உடைப்பெடுத்து வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வருகின்றது. வெள்ளப்பெருக்கின் காரணமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல், பூநகர், பூமரத்தடிச்சேனை தவிர்ந்த அனைத்து கிராம மக்களும் இடம்பெயந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மகாவலி கங்கையின் கிளையான வெருகல் ஆற்றை மேவியும், நாதனோடை என்ற பகுதியிலும் வெள்ள நீரானது அணைக்கட்டை மேவி பாய்ந்த நிலையில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் மாவிலாற்று அணைக்கட்டின் உடைப்பின் ஊடாகவும் வெருகலுக்குள் பெருமளவான வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் பிரதேச செயலகம், ஈச்சிலம்பற்று வைத்தியசாலை ஆகியவற்றில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் பிரதான வீதியில் 03அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது. அதேபோன்று வெருகல் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 08 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் இயங்திர படகின் மூலமே போக்குவரத்து இடம்பெறுகின்றது. அதைவிட இராணுவ கவச வாகனங்களின் உதவியுடனும்; அதிகாரிகள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். அப்பகுதியில் குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகின்றது சேருவில பகுதியில் இருந்தே பௌசர் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெறுகிறது இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைக்குமாக இருந்தால் வெருகல், சேருவில, மூதூர், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகள் உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் பாரியளவான அழிவை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக பாதிக்கப்படும் அதேபோன்று சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் சேமபுர, லிங்கபுரம், ஆதியம்மன்கேணி உட்பட பல பகுதிகளும் அதை அண்மித்த மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி போன்ற கிராமங்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். குறித்த கிராம மக்கள் பெருமளவானவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவிலாறு முழுமையாக உடைப்பு எடுக்லாம் என்ற அச்சத்தில் அந்த இடைத்தங்கல் முகாம்களையும் இடம்மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் கங்குவேலி கிராம மக்களின் ஒரு பகுதியினர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பின்னர் தோப்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கங்குவேலியின் பின்புறமாக உள்ள மகாவலி அணைக்கட்டு நேற்று (29) இரவு உடைத்து இரவு ஊரூக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. வீட்டுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது அதேபோன்று லிங்கபுரம் பகுதியிலும் ஆதியம்மன் கேணியின் பின்புறமாகவுள்ள மகாவலி அணைக்கட்டு சிறியளவில் உடைப்பெடுத்ததால் அங்கும் 3 அடிக்கு மேல் ஊருக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிவரை 17926 குடும்பங்களைச் சேர்ந்த 57858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16000 குடும்பங்களைச் சேர்ந்த 52416 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 1926 குடும்பங்களைச் சேர்ந்த 5442 பேர் 27 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 478 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மலைநாட்டில் உற்பத்தியாகின்ற மகாவலி கங்கையானது கிழக்கே குறிப்பாக வெருகல், மூதூர் ஆகிய பகுதிகளில் பல கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அந்தவகையில் வெருகலில் பகுதியில் இரு கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அதிக மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலப்பகுதிகளில் மகாவலி கங்கையை மேவி பாய்கின்ற அல்லது உடைப்பு எடுக்கின்றபோது குறிப்பாக நாதனோடை அனைக்கட்டு உடைத்து வெருகல் பகுதி வெள்ளத்தில் மூழ்குவது வழமை. இது ஒவ்வொரு வருட இறுதியிலும் வழக்கமாக இடம்பெற்று வந்தது. இந்நிலையில் நாதனோடை அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் போடப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தின் தாக்கம் கடந்த சில வருடங்கள் குறைவாக காணப்பட்டன. இந்நிவையில் மகாவலி கங்கையின் கிளையினால் வெளியாகின்ற பெருமளவான நீரை மறித்து மாவிலாறு அணைக்கட்டு கட்டப்பட்டு அதன் ஊடாக விவசாயத்திற்கு தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. இது கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் உயரமுடையதாக காணப்படுகின்றது. மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாகவும் ஏணைய நீர்த்தேக்கங்கள் திறந்து விட்டதன் காரணமாகவும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்துள்ளது. மேலதிக நீர் கடலுடன் கலப்பதன் மூலம் பாதிப்பு இல்லாத சூழல் உருவாகும் ஆனால் கடலுடன் கலப்பதற்கு குறித்த நீர் குறிப்பிட் தூரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் நீரின் அளவு மிகவும் அதிகம் என்பதால் அணைக்கட்டை மேவி பரவ வேண்டி ஏற்படுவதோடு அணைக்கட்டையும் உடைக்கும் நிலையும் உருவாகிறது. https://www.virakesari.lk/article/232084
2 months 2 weeks ago
திட்வா புயல் - இலங்கையின் தற்போதைய நிலவரத்தை காட்டும் 20 புகைப்படங்கள் படக்குறிப்பு,வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான திட்வா புயலால் இலங்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலரையும் காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. படக்குறிப்பு,நுவரெலியாவிற்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மண் சரிவால் மூடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,கடைகளைச் சூழ்ந்துள்ளா மழை வெள்ளம் பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC படக்குறிப்பு,மீட்புப் பணிகளுக்காக படகுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC பட மூலாதாரம்,Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74x3zxelw3o
2 months 2 weeks ago
எங்கள் காலத்தில் ஷெல், விமான குண்டு வீச்சு காலங்களில்தான் இப்படி உடல் சிதறும் அவல காட்சிகள் தென்படும். போர் இப்போது இல்லை. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு விட்டது. ஆனால், உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். என்ன கொடுமை சாமி இது. விசுகரின் கருத்தை பார்த்தேன். செய்தியில் உள்ள படத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் இயற்கை அனர்த்தனத்தில் அவலப்படும்போது உள்ளூர் ரவுடிகள், தாதாக்களுக்கு வேறு பிரச்சனைகள்.
2 months 2 weeks ago
உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே ! சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருறியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநர் 57, உடற்கல்வி இயக்குநர் 102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும். ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tn-trb-exam-85-000-teachers-fail-in-tamil-subject-754703.html டிஸ்கி : இதில் இவர்களுக்கு எந்த தேர்வும் இல்லாமல் விண்ணப்ப முதிர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமாம் . மத்திய அரசு அலுவர்களுக்கு இணையான சலுகைகள் , மற்றும் ஒய்வூதியம் , பணி பாதுகாப்பு அனைத்தும் வேண்டுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் கான்வென்டில் படிப்பார்களாம் அரசு பள்ளிகளின் கல்வி தரம் அந்த அளவில் தான் இருக்கும் அப்புறம் அடுத்த மாநிலத்தான் நம் அரசு வேலைகளை பறிக்கிறான் என்று கூப்பாடு வேறு..?
2 months 2 weeks ago
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கழிமுக அகலப்படுத்தும் நடவடிக்கை இலங்கை கடற்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன வீரர்களை மீட்க ஏற்கனவே விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/navy-personnel-missing-disaster-site-chundikulam-1764506135
Checked
Sun, 02/15/2026 - 09:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed