2 months 2 weeks ago
புதிய இணைப்பு Update - 06:47 விபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாம் இணைப்பு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விழுந்து இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்குள்ளான போது குறித்த உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்ததாகவும், குறித்த நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/extreme-weather-helicopter-accident-1764506677
2 months 2 weeks ago
மாவிலாறு அனர்த்தம்! 1,000 பேரின் அவலநிலை.. ஜனாதிபதிக்கு நேரடியாக வந்த தொலைபேசி அழைப்பு மாவிலாறு உடைப்பை தொடர்ந்து சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து விமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் காப்பாற்றப்பட்டு வருதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அவசர கலந்துரையாடலின் போது ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்த ஒருவர், தங்கவெளி கிராமத்தில் உள்ள சுமார் 1,000 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்காலிக தங்குமிடம் இதற்கிடையில், நேற்று (29) இரவு மூதூர் மற்றும் நீலபொல பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் கிண்ணியா நகரம் தற்போது முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரங்களில் இருப்பதாகவும், அவர்களை மீட்க கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவில்ஆறு குளக் கரை உடைப்பு சோமபுர, சிறிமங்கலபுர, கல்யாறு மற்றும் தெஹிவத்த பகுதிகளைப் பாதித்து வருகிறது, மேலும் அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை சேருநுவரவில் உள்ள நவோதயா பாடாசாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் சேருவில ராஜமகா விஹாரையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட உள்ளனர். https://tamilwin.com/article/immediate-action-rescue-1000-people-mavil-aru-1764502671
2 months 2 weeks ago
மாவிலாறு அணை உடைந்துள்ளது மூதூர், வெருகல், சேருவில கடும் பாதிப்பு..! 30 Nov, 2025 | 04:42 PM மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்த நிலையில் மூதூர், வெருகல், சேருவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாவலி ஆற்றில் அதிக நீர் ஓட்டம் மற்றும் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மாவிலாறு நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி ஒரே நீர்த்தேக்கமாகக் காணப்பட்டது. மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் . பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் நீர்ப்பாசன இயக்குநர் நாயகம் கேட்டுக்கொள்கிறார். கடற்படையினர் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கங்கை பாலத்திற்கு அருகாமையில் உள்ள முறிஞ்சாறு உடைப்பு எடுத்தன் காரணமாக மூதூர் பயணம் உப்பாறு பாலம் வழியாக போக முடியாமல் தடைப்பட்டுள்ளது. வெருகல் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. ஈச்சிலம்பற்று வைத்தியசாலை பாதிக்கப்பட்டுள்ளது. கங்குவேலி பாடசாலை மற்றும் முத்துவிநாயகர் விவசாய சம்மேளன கட்டிடம் முமுமையாக நீரில் மூழ்கி உள்ளன. மூதூர் - இறால் குழி , நாவலடி பிரதேச மக்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர் இவர்கள் அந்- நஹார் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாபிநகர், வேதத்தீவு மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மகாவலி கங்கை பெருக்கெடுப்பால் மாவிலாறு அணை உடைந்ததால் மூதூர், வெருகல், சேருவில மக்களின் வயல்கள், வீடுகள், கால் நடைகள் அழிவடைந்துள்ளன. https://www.virakesari.lk/article/232062
2 months 2 weeks ago
கந்தப்பளை - எஸ்கடேல் பகுதியில் மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 04:47 PM நுவரெலியா - இராகலை பிரதான வீதியில் கந்தப்பளை, எஸ்கடேல் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். மண்ணில் புதையுண்டவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த பகுதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக மீட்பு பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே இன்றைய தினம் வானிலை வழமைக்கு திரும்பி மழை இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரையில் மண்ணில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை பொலிஸாரும் பொது மக்களும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியை, தரம் 9 தரம் 6 கல்விபயிலும் இரண்டு மகன்கள் மற்றும் வயோதிப பெண் ஒருவர் என நான்கு பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/232060
2 months 2 weeks ago
கொத்மலை அனர்த்தத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண், காயமடைந்த இருவர், வெளிநாட்டவர்கள் உட்பட 24 பேர் இந்திய விமானப்படையின் ஒத்துழைப்புடன் மீட்பு 30 Nov, 2025 | 04:45 PM கொத்மலை பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டுசென்றுள்ளனர். இன்று (30) இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI 17 (Indian Ac) ஹெலிக்கொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232059
2 months 2 weeks ago
செயலிழந்துள்ள தொலைபேசி இணைப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் தடையின்றி பராமரிக்க தொலைபேசி சேவை வழங்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி, விரைவில் தகவல் தொடர்பு வசதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் பந்துல ஹேரத், TRCSL அதிகாரிகள் மற்றும் மொபைல் போன் சேவை வழங்குநர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். நுகர்வோருக்கு சிறப்பு சலுகை (Mobitel) மொபிடெல்: 7677 என்ற எண்ணுக்கு 'YES' என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள், 300 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் 3 நாள் பேக்கேஜ் பெறலாம். கூடுதலாக, SLT-Mobitel லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு வசதிகளையும், ஃபைபர், ஹோம் 4G LTE மற்றும் ADSL உள்ளிட்ட பிராட்பேண்ட் பயனர்களுக்கு வரம்பற்ற இணைய அணுகலையும் வழங்குகிறது. (Hutch) ஹட்ச்: எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் சலுகை. #3111# ஐ டயல் செய்வதன் மூலம் சலுகை பெறலாம். இதற்போது நுகர்வோருக்கு சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (Dialog) டயலொக் மற்றும் எயார்டெல்: எந்த நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள், 250 SMS மற்றும் 1GB டேட்டாவுடன் கூடிய 3 நாள் இலவச சலுகை #006# ஐ டயல் செய்வதன் மூலம் பெறலாம். https://tamilwin.com/article/announcement-regarding-the-broken-telephone-lines-1764496286 வடக்கு, கிழக்கு, தெற்கில் சில மாகாணங்களில் Dialog நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி இணைப்புகள் மட்டுமே செயலிழந்தது. Mobitel, Hutch இரண்டும் இயங்கியது.
2 months 2 weeks ago
திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு - 55 பேர் விமானம் மூலம் மீட்பு! 30 Nov, 2025 | 03:27 PM திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடை முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்களை சீனாபே விமான படைதளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர். இதேவேளை மேலும் 22 பேர் விமான மூலம் மீட்கப்பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்றுவருகின்றதாக தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/232051
2 months 2 weeks ago
திடீரென ரத்தான Flights.. உலகளவில் எதிரொலித்த பிரச்னைக்கு என்ன காரணம்? | Airbus A320
2 months 2 weeks ago
Sri Lankaவில் மழை நின்ற பின்னும் குறையாத ஆபத்து; தொடர்ந்து Death Counts அதிகரிப்பது ஏன்? திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 228 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அரசும் 'ஆபரேஷன் சாகர்பந்து' என்ற பெயரில் மீட்பு பணிக்கு உதவி வருகிறது. இந்த சூழலில் மின்சாரம், தகவல் தொடர்பு சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை பற்றி இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள். #SrilankaRains #SirlankaFlood #DitwahCylone இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
2 months 2 weeks ago
நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்றை ஆரம்பித்து உள்ளோம். இன்றைய தினம் காலை 7.00மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான - குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால்மா, ரஸ்க்) - அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு) - குழந்தைகளுக்கான சோப் - தொற்றுநீக்கிகள் - நுளம்புவலை - பிளாஸ்டிக் பாய் - படுக்கை விரிப்புகள் - தேயிலை - பால்மா - சீனி - நுளம்புத் திரி - பிஸ்கெட் வகைகள் - பொதி செய்யப்பட்ட உணவுகள் - தண்ணீர் போத்தல்கள் - தறப்பாள் - Towels போன்றவற்றை வழங்கலாம். முதற்கட்ட நிவாரணமாக இன்றைய தினம் காலை 11 மணிக்கு, பாரவூர்தி செல்ல இருக்கிறது. தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை சேகரிப்பு பணி தொடர்ந்து நடைபேறும். சேகரிப்பு மையம் தொடர்பான அனைத்து பணிகளும் யாழ் மருத்துவபீட மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும். நன்றி. A Relief Supply Collection Centre has been established at the Faculty of Medicine, Jaffna for the public to donate essential items. From 7.00 a.m. today, the collection point will be functioning at the main entrance area (Aadiyapatham Road). Those who wish to extend their support may contribute urgently needed items such as: - Baby food (biscuits, milk powder, rusks) - Sanitary items (sanitary pads & diapers for women and children) - Baby soap - Disinfectants - Mosquito nets - Plastic sheets - Bed sheets - Tea - Milk powder - Sugar - Mosquito coils - Biscuit varieties - Packaged food items - Bottled water As the first phase of relief, a lorry carrying supplies will depart at 11.00 a.m. today. The collection process will continue until further notice. All activities related to the collection centre are being coordinated by the Student Union of the Faculty of Medicine, Jaffna. Thank you. தன்னார்வலர்களால் எம்மிடம் கையளிக்கப்படும் இடரனர்த்த உதவிப்பொருட்களை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு பகிர்ந்து கொள்வதற்காக, உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் சேகரிப்பு மையம் - யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் (இராமநாதன் வீதி) அமைக்கப்பட்டுள்ளது. ☎️தொடர்புகளுக்கு - லஜிதன் : +94 76 205 6557 (தலைவர், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) - கஜேந்திரன் : +94 76 090 0982 (தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம்) பேரனர்த்தத்துக்குள்ளாகியிருக்கிற எங்களது மக்களை மீட்டெடுக்கும், உயரிய பணியில் உங்களையும் பங்காளர்களாக அன்புரிமையுடன் அழைக்கின்றோம். - ஒருங்கிணைப்பாளர் : ம.தனுஷன் (உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்) +94 77 530 2813
2 months 2 weeks ago
மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்??? வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡
2 months 2 weeks ago
மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்??? வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡
2 months 2 weeks ago
30 Nov, 2025 | 04:02 PM சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஞாயிற்றுக்கிழமை (30) இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பிரதேச செயலாளர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், மேன்மேலும் துரிதமான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக மேலதிக ஒருங்கிணைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் துரித நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கவனத்திற்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கலுக்காக - தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக - சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது. 1. பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 03 நாட்களுக்கு சமைத்த உணவு பிரதேச செயலாளர் ஒழுங்கமைப்பில் வழங்க முடியும். மேலதிக நாட்களுக்கு வழங்க வேண்டியிருப்பின் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேலும் 04 நாட்களுக்கு வழங்க முடியும் எனவும், அதற்கு மேலும் 07 நாட்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படின் அமைச்சின் செயலாளர் அனுமதி பெற்று வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார். 2. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருக்காமல் அவர்களுடைய வீடுகள் அல்லது நண்பர்கள் ,உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவு வழங்கலாம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீரான உணவு விநியோகத்தில் வினைத்திறனான ஒத்துழைப்பினை வழங்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். 3. அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் பிரதேச செயலாளர்கள் மூலமே பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், ஏற்கனவே பிரதேச செயலகங்களுக்கு அவசர தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட தறப்பாள், நுளம்பு வலைகள், மடிக்கும் கட்டில்கள் வழங்கப்பட்டதற்கு மேலதிகமான தேவைப்பாடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு தாம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றதும் பிரதேச செயலகங்களின் தேவைக்கு ஏற்ப மேலும் பங்கிட்டு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. மேற்படி பிரதேச செயலாளர்கள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபங்கள், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இது தொடர்பான திருத்தப்பட்ட கடிதங்கள் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு உரிய தெளிவூட்டல்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித இடையூறும் அற்ற வகையில் சமைத்த உணவு வழங்குமாறு பிரதேச செயலாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் பங்குபற்றியதுடன், நேரடியாக இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. வை. தர்சினி, அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் ஆ. நளாயினி ஆகியோர் பங்குபற்றினார்கள். https://www.virakesari.lk/article/232056
2 months 2 weeks ago
வெள்ளத்துக்கு பிறகு பலர் அசுத்தமான நீரும் நுளம்புகளும் காரணமாக உடல்நலப் பிரச்சனைகள் பெறலாம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். சுத்தமான அல்லது கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்கவும், உடனடி சமைத்த உணவு சாப்பிடவும், காயங்களை மூடி வைத்திருக்கவும், வெள்ளநீரை தவிர்க்கவும். நுளம்பு விரட்டும் கிரீம் பயன்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், அடிக்கடி கைகள் கழுவவும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது ஏதாவது விசித்திரமான அறிகுறிகள் இருந்தால் உடனே டொக்ரரைச்சந்திக்கவும்(டொக்ரர் அரச்சனாவை அல்ல😂
2 months 2 weeks ago
கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை written by admin November 30, 2025 யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா், திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் , தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கி பயணித்த வேளை காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் , திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை ,தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். ஓடி சென்றவர் வர்த்தகநிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது,துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டதில் , இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்துள்ளாா். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/223286/
2 months 2 weeks ago
கொட்டும் மழையிலும் யாழில் இளைஞர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை #info4tamil #tamilnewsupdates #TopNews #BreakingNews #TamilNews #srilanka #SriLankaNews #lka #lkanews #jaffnanews கொட்டும் மழையிலும் ஒரு இளைஞர் திருநெல்வேலி சந்திக்கு அணமையில் துரத்தி துரத்தி வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தியை இன்போ தமிழ் வெளியிட்டுள்ளது.
2 months 2 weeks ago
யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர். பாங்கிங் மெசினில் இருந்து பணத்தை எடுப்பது தான் அவர் வேலை. அதை பயன்படுத்தி...🤣 இந்தியா இலங்கையில் தேர்தலில் நின்று போட்டியிட வேண்டியவர்.
2 months 2 weeks ago
வரலாற்றின் குற்றக் கிடங்கு November 29, 2025 — கருணாகரன் — ‘உலகின் சொர்க்கத்தீவு‘ (The paradise island of the world) என்று வர்ணிக்கப்படும் இலங்கையில், பொன்னும் மணியும் விளைவதற்குப் பதிலாக, மனிதப் புதைகுழிகளே விளைந்துள்ளன. இந்தப் புதைகுழிகளை விளைத்தவர்கள் (விதைத்தவர்கள்) அநேகமாக ஆட்சியாளர்களே. (இப்படியான காரியங்களைச் செய்வதில்தான் இவர்கள் கெட்டிக்காரர்கள். இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள செம்மணியில் ஒரு புதைகுழி அகழப்படுகிறது. இதில் இதுவரையில் 225 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெண்கள், குழந்தைகளுடையவையும் உண்டு என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 1990களில் இலங்கைப் படையினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1996 இல் இதே இடத்தில், இப்படியொரு புதைகுழியில்தான் கிருசாந்தி குமாரசாமி என்ற பள்ளிக்கூட மாணவி, படையினரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்டாள். அவளைத் தேடிச்சென்ற அவளுடைய தாயும் தம்பியும் அயலவரும் கூடக்கொன்று புதைக்கப்பட்டனர். இந்தக் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியும், இதை எதிர்த்துச் சட்டப் போராட்டம் நடத்திய சூழலும் வரலாற்று முக்கியவத்துக்குரியது. இந்தக் கொலைகளில் சம்மந்தப்பட்டவரான இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், செம்மணி புதைகுழியின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார். இது மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர். இதையெல்லாம் குறித்து முன்பொரு கவிதை நூல் ‘செம்மணி’ என வந்தது. இப்பொழுது ‘வாசலிலே கிரிசாந்தி’ என இன்னொன்று வந்துள்ளது. இதற்கு முன் 1990 ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில், யாழ்ப்பாண நகரத்திற்கு கிட்டவாக உள்ள – இன்னொரு பக்கத்தில் இருக்கும் தீவுப்பகுதியில் (லைடன் தீவிலும் மண்டைதீவிலும்) இலங்கை அரச படைகளின் ‘திரிவித பலய’ கூட்டுப்படை நடவடிக்கையின்போது 163 பொதுமக்கள் அழிக்கப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கைக்கும் படுகொலைக்கும் தலைமை தாங்கியவர் இலங்கை இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிய மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ. (இவர் பின்னாளில் (1992.08.02) கண்ணிவெடித் தாக்குதலொன்றில் இதே தீவுப்பகுதியில் இறந்தார்). இந்தப் படுபாதகச் செயலைக் குறித்த ஒரு நூல் ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என எழுத்தாளர் ஷோபாசக்தியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஷோபாசக்தி, இந்தக் கொலைகள் நடந்த கிராமங்களில் ஒன்றான அல்லைப்பிட்டியில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், இந்தப் படுகொலை நடந்தபோது ஷோபாசக்தி, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். (அந்த நாட்களில் அல்லைப்பிட்டியில் இருந்திருந்தால் அந்தப் படுகொலையில் அவரும் சிக்கியிருக்கக் கூடும்). அதில் தப்பிப்பிழைத்ததால் இப்பொழுது, இந்தப் படுகொலைகள் நடந்து 35ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படுகொலைகளை அதற்கான சாட்சியங்களோடும் விவரங்களோடும் தொகுத்து ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் அநீதியிழைப்பொன்றின் சான்றாதாரமாகவும் நீதி கோரும் மக்களின் ஆன்மாவாகவும் இருநிலைகளில் தொழிற்படுகிறது. இந்த நூலில், ‘இந்தப் பேரழிப்பின்போது இராணுவத்தினரால் உண்டாக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் மண்டைதீவில் உள்ளன’ எனப் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் பகிரங்கச் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ‘இந்தக் கொலைகளையும் புதைகுழிகளையும் குறித்து வெவேறு இடங்களிலும் வெளிவந்த ஆவணங்களையும் அறிக்கைகளையும் ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்கள் பெறப்பட்டும்’ இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஷோபாசக்தி தெரிவித்திருக்கிறார். அவர் சொல்லியிருப்பதைப்போலவே, இந்த நூலின் அனைத்து விவரங்களும் தெளிவாகவும் சான்றுகளோடும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசைப்படுத்தி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. படுகொலைகளின் பின்னணி, பணயக்கைதிகள், படுகொலைக்களம், காணாமலாக்கப்பட்டவர்கள், லைடன் தீவில் படுகொலையான பொதுமக்கள், மண்டைதீவில் படுகொலையான பொதுமக்கள், உண்மையைப் புதைத்த குழிகள் என்ற ஏழு அத்தியாயங்களின் தலைப்புகளே போதும் இந்தப் படுகொலைகளின் சித்திரத்தை உங்களுடைய மனதில் எழுப்புவதற்கு. இவற்றுக்கு அப்பால், இவற்றைச் சான்றாதாரப்படுத்தும் வகையிலான ஆவணங்களும் நிழற்படத் திரட்டும் இணைக்கப்பட்டுள்ளன. கூடவே, நீதி மிகத் தொலைவில் என்ற முற்பகுதியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக ஒன்பது தலைப்புகள். இது நீதிகோரும் ஒரு முதன்மையான வெளிப்பாடு. சமனிலையில் நீதியின்மைக்கான எதிர்ப்புக் குரல். இலங்கை அரசினதும் அதனுடைய படைகளினதும் மானுட விரோத, அரசியல் விரோதச் செயலை உலகின் முன்வைக்கும் வலுவான ஆவணம். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பலியானோரின் உறவினர்களும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் இந்தக் கொலைகளைப்பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். தங்களுக்கு நீதிகோரிப் பலரையும் சந்தித்திருக்கின்றனர். நடந்த சம்பவங்களைப்பற்றி விரிவான வாக்குமூலங்களை வழங்கியிருக்கின்றனர். ஆண்டுகள் பல கடந்தாலும் அவர்களுடைய மனதில் அந்தத் துயரமும் அங்கே சுவாலை விட்டு எரிந்த நெருப்பும் அவர்களுடைய மனதிலும் நினைவுக் கண்களிலும் அப்படியே ஆறாச் சூட்டோடுதான் உள்ளன. ஆனால், ‘இந்தக் கொலைகள் எதற்குமே நீதி வழங்கப்படவில்லை. கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. அரச படைகள் செய்த இந்தப் படுகொலைகளுக்கு இலங்கை அரசு இதுவரையில் பொறுப்புக் கூறவில்லை’. ஷோபாசக்தியே இந்த நூலில் கூறியிருப்பதைப்போல, இந்தப் படுகொலைகள் வரலாற்றின் இருண்ட கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டு விடக் கூடாது. அப்படியொரு எண்ணத்தோடுதான் இவை அந்தக் கொலைகளுக்கு எதிரான சாட்சியமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியைக் கோரும்போது தமக்கேற்பட்ட பாதிப்புகளையும் தமக்கிழைக்கப்பட்ட அநீதியின் சான்றுகளையும் வலுவாகத் திரட்டி முன்வைக்க வேண்டும். அறத்துக்குப் பதிலாக நலன்களே முதன்மை நோக்கமாகக் கொண்டியங்கும் உலகில், உலோகத்தையும் விடக் கனத்துத் தடித்திருக்கும் இதயத்தின் சுவர்களை உடைகக் கூடிய கூரிய ஆயுதங்களாக இருப்பவை பாதிப்புகளின் – அநீதிகளின் சான்றுகளே! ஆகவே அவற்றை நீதியைக் கோரும் மக்கள் தமக்கான வலிய கருவிகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ஈழத்தமிழ்ச் சூழலில் இது மந்தநிலையில் (மந்தைத் தனமாக) உள்ளது. இந்த மந்தைத் தனத்தையே கொலையாளிகளும் அரசும் அதையே விரும்புகின்றன. இதற்கு எதிராக இயங்குவதே, எதிர்ப்புச் செயற்பாட்டை எந்த நிலையிலும் மேற்கொள்வதே கொலை அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான ஒரே நீதிச்செயற்பாடாகும். ஷோபாசக்தி இவற்றை அந்த நீதியுணர்வோடும் அது எதிர்நோக்கும் அறிவியல் – அற வினாக்களோடும் இங்கே திரட்டி முன்வைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்தக் கொலைகளைப் பின்னணியை கொரில்லா நாவலில் ஒரு அத்தியாயத்திலும் தேசத்துரோகி என்ற கதையிலும் பதிவு செய்திருக்கிறார் ஷோபாசக்தி. இதைவிட இந்தக் கொலை ஷோபாசக்தியினால் வலுவான இலக்கியப் பிரதியாக்கப்பட்டிருப்பது மிக உள்ளக விசாரணை என்ற சிறுகதையில். அந்தக் கதை தமிழில் மட்மல்லாமல், சிங்களம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படுகொலை நடந்த ஊர்வாசியாகவும் படுகொலைக்கு எதிரான மனித உரிமைப்போராளியாகவும் அநீதிக்கு எதிரான இலக்கியப் படைப்பாளியாகவும் என வெவ்வெறு நிலைகளில் நின்று இந்தப் பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷோபா. முந்தியவை புனைவின் வழியானவை. இது நேரடியான சான்றுகள், சாட்சியங்களோடானவை. ஆக ஷோபாசக்தியினுள்ளே அந்தக் கொலைகள் தணலாகவே கனன்று கொண்டிருக்கின்றன. இப்படி வேறு சில எழுத்தாளர்களும் தங்களுடைய காலத்திலும் சூழலிலும் எதிர்கொள்ள நேரிட்ட இத்தகைய கொலைகளையும் அநீதிச் செயல்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். வரதரின் கற்பு கதை தொடக்கம், நிலாந்தனின் கடலம்மா கவிதை உள்ளடங்கலாக இதற்கான ஒரு நெடும் பாரம்பரியமே ஈழத்திலக்கியத்தில் உண்டு. அவை வெறுமனே பதிவுகளல்ல. நீதிக்கான குரல்கள். சிங்கள ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் வரலாற்றின் முன்னே நிறுத்தி விசாரணை செய்யும் கலகப்பிரதிகள். ஆனால் இவை புனைவும் நிஜமும் கலந்த இலக்கியப் பிரதிகள். இங்கே இப்பொழுது ஷோபாசக்தி திரட்டி அளித்திருப்பது நடத்தப்பட்ட கொலைகளைப் பற்றிய நிஜமான ஆவணம். இப்படி ஒரு ஆவணத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திரட்டி முன்வைக்க முயற்சிக்கும்போது ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, இவை அல்லது இந்த மாதிரியான கொலைகள் நடத்தப்பட்ட சூழல் என்பது ஒன்றில் போர் நிகழ்ந்த பகுதியாக இருக்கும். அல்லது ஒடுக்குமுறைத்தரப்புகளான அரச படைகளும் அவற்றின் துணை இராணுவக்குழுக்களும் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதிகளாக இருக்கும். இதனால் முறையான தகவல்களை – விவரங்களை – ப் பெறுவதில் (சேகரிப்பதில்) சிரமங்கள் உண்டு. அடுத்தது, இந்தச் சம்பவங்களின்போது உடனிருந்து தப்பியவர்கள், இவற்றை அறிந்தவர்கள், இவை பற்றிய விவரங்களைத் திரட்டிய ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எல்லாம் கால நீட்சியில் மரணித்தும் வேறு இடங்களுக்குச் சென்றும் விட்டதாகும். மட்டுமல்ல, இந்தக் கொலைகளைப் பற்றியும் இவை போன்று ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நூறு படுகொலைகளைப் பற்றியும் பதிவு செய்யப்பட்டும் பகிரப்பட்டும் உள்ள தகவல் – விவர – ஆணமாக்கல்களில் குழப்பங்களும் குறைபாடுகளும் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகவே இவ்வாறான ஒரு அவலச் சூழலில் இருந்து கொண்டே இந்த மாதிரியான சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. போரினாலும் மிக மோசமான ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம் தனக்கான தீர்வையும் நீதியையும் கோரும் போராட்டத்தில் – அரசியல் முன்னெடுப்பில் தீவிரமாக உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு ஒரு வலுவான ஆதாரமாக முன்வைக்கக் கூடிய இவ்வாறான படுகொலைகள், இனவழிப்புச் செயற்பாடுகள், ஒடுக்குறைச் சான்றுகள் போன்றவற்றைச் சரியாக உருவாக்குவதில் பின்னடைந்தே இருக்கிறது. இதைச் செய்வதற்குத் தாராளமான – ஏராளமான வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகளோடு ஈழத் தமிழ்ச் சமூகம் உலகம் முழுவதிலும் பரந்திருக்கிறது. ஆனால், செயற்பாட்டில் மிகப் பிந்தங்கிப் பலவீனமான நிலையில் இருக்கிறது. இதனை நடைமுறையில் இந்தப் பிரதியின் உருவாக்கத்தின்போது ஷோபாசக்தியும் உணர்ந்திருக்கிறார். ‘வரலாற்றை ஆவணமாக்கி வைத்திருப்பதில் ஈழத்தமிழ்ச் சமூகம் பெருமளவு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது…. இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிவதற்காக அல்லது ஆய்வு செய்வதற்காக தமிழ் இணையச் செய்தி ஊடகங்களை நாடிச் செல்லும் ஒருவர் ஏராளமான தவறான மற்றும் குழப்பமான தகவல்களைக் கண்டடைய முடியும்..’ எனக் கவலையோடு அவர் சொல்வதைப்போல, வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) திரட்டி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள ஆவணமாக்கல் – வெளிப்படுத்தல் மூலங்களிலும் தகவல் பிழைகள் உள்ளன. ஆனாலும் இவற்றைப் புறந்தள்ளவும் முடியாது. இவற்றிலிருந்தும் நேரடியான வாய்மொழிச் சாட்சியங்கள், பிற அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள், மனித உரிமை அமைப்புகள், நிர்வாக ரீதியான அரசாங்கப் பதிவேடுகள் எனப் பலவற்றிலிருந்தும் பெறக் கூடிய தகவல்களை வைத்துக் கொண்டே இதுபோன்ற சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க முடியும். அதற்கு காலத் தாமதம் கூடாது. அப்படியே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது இதை உணர்கிறோம். அத்துடன், இவற்றின் ஊடாக நாம் மிக மோசமான முறையில் நம்முடைய காலடியின் வழியே கடந்து சென்ற காலத்தை மீளத் திறந்து பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஆதிக்க அரசியலுக்காகப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுச் சின்னங்களும் புதைகுழிகளும் இலங்கையில் ஏராளம் – தாராளம். இந்தப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு, மத்தி என்று எந்த வேறுபாடுமில்லால் எல்லா இடங்களிலும் உண்டு. தமிழர்கள், சிங்களர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என எல்லாத்தரப்பிலிருந்தும் கொன்று புதைக்கப்பட்டனர்; ஆற்றில் வீசப்பட்டனர்; தீயிட்டு எரிக்கப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையின் ஆட்சிச் சிறப்பு இது. ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகாலம் நீடித்த அந்நியரின் (ஐரோப்பியரின்) ஆட்சியில் கொல்லப்பட்டோரை விடவும் சுதேச ஆட்சியில் – சுதந்திர இலங்கையில் கொல்லப்பட்டோர் அதிகம். இவ்வாறு கொல்லப்பட்டோருக்கான நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் உண்டு. எல்லாக்கொலைகளும் ஒன்றல்ல. மரணம் வேறு. கொலை வேறு. மரணம் தரும் துக்கம் வேறு. கொலை உண்டாக்கும் துக்கம் வேறு. கொலையினால் ஏற்படும் துக்கம் கோபத்தையும் தன்னுள் கொண்டெரிவது. அந்தக் கோபம் அநீதியினால் உருவாகியது. அநீதிக்கு எதிரானது. ஈழத்தில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட பல நூறு கூட்டுக் கொலைகளின் நினைவாகவும் அவற்றுக்கு எதிரான அடையாளமாகவும் பல்வேறு இடங்களிலும் நினைவுத்தூபிகளும் கல்வெட்டுகளும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 1974இல் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைக்குள்ளான பதினொரு பேரின் நினைவுச் சின்னம் யாழ்ப்பாண நகரத்தில் வீரசிங்கம் மண்டபதற்கு முன்பாக, முற்றவெளியில், கோட்டைக்கு எதிர்த்திசையில் உள்ளது. இப்படியே மட்டக்களப்பு மகிழடித்தீவில், முல்லைத்தீவு மாத்தளனில், முள்ளிவாய்க்காலில், நாகர்கோயிலில், நவாலியில், மன்னார் – முருங்கனில் வல்வெட்டித்துறையில்.. எனப் பல இடங்களிலும் உள்ளன. இன்னொரு நிலையில் எழுத்தாவணங்களும் வீடியோப் பதிவுகளும் ஒளிப்படங்களும் ஏராளமாக உண்டு. வல்வை ந. அனந்தராஜ் தொகுத்துப் பதித்த ‘வல்லைப் படுகொலைகள்’ கலாநிதி முருகர் குணசிங்கத்தின் “தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்: அரச பயங்கரவாதமும் இன அழிப்பும்” மற்றும் நிஜத்தடன் நிலவன் எழுதிய “ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 (பாகம் -1)”போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல கொலைகளைப் பற்றிய ஆவணப்படங்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆவணப்பிரிவும், நிதரம்சனமும் அரங்கம் நிறுவனமும் தயாரித்து வெளியிட்டிருந்தன. யாழ்ப்பாண நூலக எரிப்பை சோமீதரன் ‘எரியும் நினைவுகள்’ (Burning memories) ஆவணப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இலங்கை அரசின் மீதும் அது மேற்கொண்டுவரும் இனவாத அரசியலின் மீதும் அதற்கு எந்தக் கேள்வியுமற்று ஆதரவைக் கொடுத்து நிற்போரின் மீதும் தங்களின் எதிர்ப்பு அடையாளத்தைப் பதிவு செய்கின்றன. நீதியற்ற ஆட்சியே நீடித்தது என்பதற்கான சாட்சியங்களே அவை. அத்தகைய சாட்சியங்களில் ஒன்றே 1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும் ஆகும். இது புதைகுழிகள் தோண்டப்படும் காலம். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரமும் பேசப்படும் நாட்களிவை. நீதியைக் கோரும் மக்களுக்கு – பாதிக்கப்பட்டோருக்கு – இவை, இந்தச் சான்றாதாரங்கள் வலுவானவை; மிக மிக அவசியமானவை. ஈழத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றே பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படுகிறது. மக்கள் மீண்டும் தங்களுடைய ஊர்களில் மீளக் குடியேறி விட்டார்கள். (எல்லோரும் அல்ல. எல்லா இடங்களும் மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டவையும் அல்ல). ‘மாற்றத்துக்கான ஆட்சி’யை நடத்துவதற்குப் புதிய அரசாங்கம் (NPP) வந்து விட்டது என்று பலரும் கருதவும் கூடும். வெளித்தோற்றத்துக்கு இப்படித் தெரியலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதே நிலையில்தான் உள்ளனர். அவ்வாறுதான் நடத்தப்படுகின்றனர். ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாற்றப்பட்டுள்ளன. குண்டுச் சத்தங்களும் சுற்றிவளைப்புகளும் கொலையும் இடப்பெயர்வும் இப்போதில்லைத்தான். ஆனால், ஏனைய அனைத்து நெருக்குவாரங்களும் சுமைகளும் ஒடுக்குமுறைகளும் அந்நியமாக்கலும் அப்படியேதான் உள்ளன. புத்தர் சிலைகளை முன்னிறுத்தி நில ஆக்கிரமிப்பு நடக்கிறது. படைகள் எல்லாம் ஊர்களில் சாவகாசமாகவே இருக்கின்றன. என்பதால்தான் இவற்றையெல்லாம் – தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையெல்லாம் – நாம் வலுவோடு பேச வேண்டியுள்ளது. அந்த வகையில்தான் ஷோபாசக்தியும் இந்த நூலை மிகக் கடுமையாக உழைத்து, மிகுந்த சவால்களின் மத்தியில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இது எளிய பணியல்ல. இந்தக் கொலை நாடகம் நடந்த நாட்களில் நான் யாழ்ப்பாண நகரத்திற்கு அண்மையில் (ஐந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில்) பதறும் நெஞ்சோடிருந்தேன். சிறைப்பிடிக்கப்பட்ட மக்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலை அன்றிருந்தது. புங்குடுதீவிலிருக்கும் தன்னுடைய வீட்டுக்குப் போக முடியாமல் யாழ்ப்பாண நகரில் தவித்தலைந்து கொண்டிருந்தார் கவிஞர் சு. வில்வரெத்தினம். வீட்டுக்குப் போக முடியாமல் மட்டுமல்ல, அங்கே உள்ள தன்னுடைய குடும்பத்தின் நிலை என்ன என்பதையே அறிய முடியாமல் தவித்தார். அந்தத் தவிப்பில் இரவெல்லாம் அவர் எழுதிய கவிதைகளைச் சைக்கிள் மிதித்து வந்து படிப்பார். அவருடைய கண்களும் நெஞ்சும் மட்டும் கலங்கவில்லை. எங்களுடைய கண்களும் நெஞ்சும் கலங்கியது. அந்தக் கவிதைகள்தான் பின்னாளில் ‘காற்றுவழிக்கிராமம்‘, ‘காலத்துயர்‘ என்ற கவிதை நூல்களாகின. அதில் ஒரு கவிதை இப்படியிருந்தது – உடைந்து கிடக்கிறது கொள்ளிக் குடம் உமியின் கரிச்சட்டி ஒருபுறம் ஒரு நெல்லுப்பொரியும் விடாமல் பேய்கள் கொறித்து முடிக்க கிடந்ததொரு வெற்றுப்பெட்டி. வாழ்வின் கொள்கலங்களும் இவ்வாறு சுடலைக்கே பாத்திரமாய்ப் போக நானிங்கு எதனுடைய முதிசம் காக்க? யாரும் பிச்சையிடமாட்டாததொரு மலட்டுத் தெருவில் எல்லாவழிகளும் மயானத்திற்கே இட்டுச் செல்வதாய ஒரு சந்தியில் உயிர்வழிந்தோடும் பாத்திரமொன்றைக் கையளித்துவிட்டு காலம் நகர்கிறது ஊன்றுகோலையும் பறித்துக்கொண்டு… இதையே – இந்த அவல நாடகத்தையே – ஷோபாசக்தி, தன்னுடைய பல கதைகளில் புனைவாக்கினார். இன்னும் அவை இலக்கியமாக வரலாம், வரும். அந்தப் புனைவுகளில் பேசியவற்றுக்கும் அப்பால் இந்த உண்மைகள் இன்னொரு வகையில் உலகோடு பேச விளைகின்றன. அதற்கு உலகம் தயாராக உள்ளதா? இந்த நூலைப்படிக்கும்போது அந்த நாட்கள் பதற்றத்தோடு நினைவில் எழுகின்றன. அப்பொழுது (1994 இன் முற்பகுதியில்) யாழ்ப்பாணக் குடாநாட்டைப் படைகள் முற்றுகையிட்டுச் சிறைப்பிடிக்க முயன்றன. இதனால் குடாநாட்டைச் சுற்றி முற்றுகைப்போர் மூண்டது. அதை முறியடிக்கும் முனைப்போடிருந்தனர் புலிகள். இரண்டு தரப்புக்குமிடையில் பெரும்மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த மோதல்களில் படையினரும் புலிகளும் மட்டும் பலியாகவில்லை. பொதுமக்களும் கொல்லப்பட்டனர். படைகள் திட்டமிட்டே பொதுமக்களைப் படுகொலை செய்தன. “ஆயுதமேந்திய தரப்புகள் மோதிக் கொள்வதற்குப் பதிலாக ஏன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்? போராளிகளை இலக்கு வைப்பதற்குப் பதிலாக எதற்காக மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்?“ என்று இன்றைய வாசகர்களும் இளைய தலைமுறையினரும் கேட்கக் கூடும். காஸாவில் மக்களின்மீதும் அவர்களுடைய வாழிடங்களின் மீதும் இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதையேதான் இலங்கையில் – இந்தத் தீவுகளில் – இலங்கைப் படையினர் செய்தனர். உள்நாட்டுப்போரில் எப்போதும் மக்களே இலக்கு வைக்கப்படுகிறார்கள். உள்நாட்டுப்போரில்தான் அதிகமாக மக்கள் கொல்லப்படுவதுமுண்டு. மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு தரப்பும், அந்த ஆதரவை இல்லொதொழிப்பதற்காக இன்னொரு தரப்பும் இலக்கு வைப்பது மக்களேயே. ஆகவேதான் மக்கள் எப்போதும் தங்களுடைய தலைகளை இழக்க வேண்டியேற்படுகிறது. இந்த எண்ணிக்கை ஒன்றும் வெறும் புள்ளி விவரக் கணக்கல்ல. அல்லது இந்த மாதிரிப் படுகொலைகள், புதைகுழிகளைப் பற்றிய கதைகள் வெறும் செய்திகளோ தகவல்களோ அல்ல. அதற்குமப்பால், இந்த நவீன உலகில் நாமெல்லாம் நீதி, அறம், விழுமியம், வாழ்க்கை குறித்த பல்வித நோக்குகள், மனித மாண்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் நமக்கு முன்னே நிகழ்ந்தப்பட்ட இரத்தமும் கண்ணீரும் பெருக்கெடுக்க நிகழ்த்தப்பட்ட மனித அழிப்பு நடவடிக்கைகளாகும். அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அப்பாவிச் சனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், காணாமலாக்கப்படுதல்களாகும். அதாவது கீழ்மை அரசியலின் வெளிப்பாடுகள். இந்த அநீதியை – கொடூரத்தை – மானுட அழிப்பை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யாரும் மறந்து விட முடியாது; மறந்துவிடக் கூடாது. இதைப் பேசியே ஆக வேண்டும். அநீதியை, கொடூரத்தை, மானுட அழிப்பை, மனித விரோதத்தைப் பேசாமல் விட்டால் அது அநீதிக்கும் கொடூரத்துக்கும் மனிதகுல விரோதத்துக்கும் உடன்பட்டுப்போவதாகவே இருக்கும். என்பதால்தான் ஷோபாசக்தி இதைப்பேசுகிறார். புனைவிலும் இவ்வாறான ஆவணப்படுத்திலும் என இரு தளங்களிலும் இவற்றைப் பேசியுள்ளார். இது அவருள் அடங்காதிருக்கும் தாகமும் அணையாதிருக்கும் நெருப்புமாகும். இரண்டினுடைய முக்கியத்துவமும் பெறுமதியும் வேறு. இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைப்போல, “இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். அத்தோடு, காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்துச் சுதந்திரமான, பாரபட்சம் இல்லாத நீதி விசாரணைகளை விரைந்து நடத்த வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் காலம் கடந்து இப்போதாவது நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் மீதான மவுனமும் புறக்கணிப்பும் மூடி மறைத்தலும் தட்டிக் கழித்தலும் உண்மையான சமாதானத்தை உண்டாக்கிவிடாது. கடந்த காலங்களில் போர்கள் நிகழ்ந்து இன்று அமைதி நிலவும் உலகிலுள்ள பல்வேறு நிலங்களில் பொறுப்புக் கூறலும் நீதி வழங்கலுமே நீடித்த சமாதானத்தையும் பகை மறப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. இலங்கையிலும் அது நிகழ வேண்டும்.” என்ற நோக்கில் இதனுடைய வரலாற்று முக்கியத்துவமும் பெறுமானமும் அமைகிறது. ஆம், நீதியைப் பெறுவதற்காக நாம் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. நீதி நமக்குக் கிடைப்பதற்காக – நாம் நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக – நாம் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த உண்மைகளை, ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தனக்குச் சாத்தியமான வழிகளில் ஷோபாசக்தி அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்போல சாத்தியமான அனைவரும் தொழிற்படுவது அவசியம். விடுதலை என்பதும் போராட்டம் என்பதும் கூட்டுச் செயற்பாட்டின் விளைவாலானவை. கூட்டுச் செயற்பாடு, கூட்டுக் குரல் போன்றனவே உலகத்தின் கவனத்தைப் பாதிக்கப்பட்டோரின் பக்கமாகத் திருப்புவதற்கான அழைப்பு அடையாளமாகும். இந்த நூல் மேலும் பல குரல்களை – உண்மைகளை – மேலுர்த்திப் பேச வைக்கும் என நம்புகிறேன். அதற்கான தூண்டல்களை, முன்மாதிரிகளை உருவாக்குகிறது. இதனைச் சரியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘கருப்புப் பிரதிகள்‘ பதிப்பகத்துக்கு பாராட்டுகள். ஷோபாசக்திக்கு நன்றி. நீதிக்கான பயணத்தில் இப்படிப் பல தரப்புகளும் இணைந்திருப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘ (பக்கங்கள்: 144). நூல் கிடைக்குமிடம்: கருப்புப் பிரதிகள் பதிப்பகம் – சென்னை (WhatsApp : +91 9444272500). https://arangamnews.com/?p=12464
2 months 2 weeks ago
பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன் “நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான். அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பலரும் தாங்கள் எழுதியதை நினைவூட்ட வேண்டிய துர்பாக்கியமான ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுதிய அனேகர் பழைய பூங்காவின் பல்பரிமாண முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள், உரைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் அவர்களுடைய கருத்துக்கள் காட்டின. பழைய பூங்கா ஏற்கனவே சிதைக்கப்பட்டு விட்டது. அதைச் சிதைத்தவர் மஹிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்த முன்னாள் படைத் தளபதியாகிய சந்திரசிறீ. இதுதொடர்பாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி சபாபதி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நான் பேசியிருந்தேன். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலனின் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் வெளியீட்டு விழா அது. மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரைகளின் தொகுப்பு அது. அபிவிருத்தியின் பெயரால் மரபுரிமைச் சொத்துக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக அகிலன் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். காலத்தின் விளிம்பு நூல் வெளியீட்டில் பழைய பூங்காவுக்குள்ள மரபுரிமை முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,அரசியல்,பண்பாடு முக்கியத்துவம் போன்றவற்றைத் தொகுத்து நான் பேசினேன்.அது ஒரு பண்பாட்டு இன அழிப்பு என்றும் சுட்டிக்காட்டினேன். அதன் பின்,சில மாதங்களுக்கு முன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்,நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதும் நான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன் பின்,புதிய வட்டுவாகல் பாலம் தொடர்பாக,ஈழநாட்டில் எழுதிய கட்டுரையிலும் பழைய பூங்காவைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு. நமது அரசியல்வாதிகள் எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்கள்? சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் எத்தனைபேர் அவற்றை வாசிக்கிறார்கள்? தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் விமர்சகர்கள் குறைவு. அதே சமயம் அதை வாசிப்பவர்களும் குறைவு. அரசியல் விமர்சனங்களை அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அல்லது அந்த அரசியலில் ஆர்வமுடைய தரப்புகள் வாசிக்கவில்லை என்றால் அரசியலில் அறிவும் செயலும் எப்படி இணைய முடியும்? அரசியல் செய்பவர்கள், அரசியலை விமர்சிப்பவர்களை ஒருவித ஒவ்வாமையோடு பார்க்கிறார்கள். அதனாலும் அவர்கள் எழுதுவதை வாசிக்காமல் விடுகிறார்கள். சரி.அதை வாசிக்க வேண்டாம். ஆங்கிலத்தில்,சிங்களத்தில் வருபவற்றையாவது வாசிக்கலாம்தானே? தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் தெரியும் எத்தனை பேர் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்? அவர்களில் பலருடைய உரைகளைப் பார்த்தால் அவர்கள் எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லையே? குறைந்தபட்சம் அரசியல் ஆழம்மிக்க காணொளிகளைக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லையே ? இவ்வாறு தமிழ்த் தேசியப் பரப்பில் அறிவும் செயலும் பிரிந்திருக்கும் ஒரு துப்பாக்கியமான,தோல்விகரமான ஓர் அரசறிவியல்சூழல் காரணமாகத்தான் தமிழ்மக்கள் தமது இறுதி இலக்குகளை வெல்லமுடியாத மக்களாகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்களா ? இக்கேள்வியோடு இக்கட்டுரையின் மையப் பகுதிக்கு வரலாம். பழைய பூங்கா. 1800ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜேம்ஸ் கோடினரின் குறிப்பின்படி,கேர்னல். பார்பெட் என்ற பிரிட்டிஷ் நிர்வாகியால் அமைக்கப்பட்ட, சுற்று மதியோடு கூடிய ஒரு தோட்டம் பற்றிக் கூறப்படுகிறது. இந்தத் தோட்டத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரச அதிபராக இருந்த பி.ஏ.டைக்(1831 -1867 )விலைக்கு வாங்கி ஏற்கனவே காணப்பட்ட பூங்காவை விஸ்தரித்ததோடு,அரச அதிபருக்கான மாளிகையும் உட்பட சில கட்டடங்களைக் கட்டியதாக கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் நூலில் கூறப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதாவது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில், பழைய பூங்கா அதன் பராமரிப்பை இழந்து விட்டது என்பதை பிரிட்டிஷ் நிர்வாகிகளின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அதிலிருந்து தொடங்கி அது யாழ்பாணத்தின் நகர்ப்புறக் காடாக வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பாக முதலாங் கட்ட ஈழப் போரின் தொடக்கத்தில் அது படையினரின் முகாமாக இருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அது அவர்களுடைய காவல்துறைத் தலைமையகமாக,பயிற்சி மையமாக இருந்தது. படையினரும் சரி விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி அங்கிருந்த முதுமரங்களை ஒரு கவசமாக,ஒரு குடையாக, ஒரு விதத்தில் மறைப்பாகப்பயன்படுத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும். ஆனால் நாலாங் கட்ட ஈழப்போரின் பின்,சந்திரசிறீ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. அரச திணைக்களங்களின் கட்டடங்கள் அங்கே கட்டியெழுப்பப்பட்டன. ஆளுநர் சந்திரசிறீ முது மரங்களை மட்டும் வெட்டவில்லை, அந்த மரங்களில் வாழ்ந்த வெளவால்கள் எச்சமிடுவதாகக் கூறி அவற்றைச் சுட்டதாக ஐங்கரன்நேசன் கூறினார். சந்திரசிறி பழைய பூங்காவைச் சிதைக்கும்போது தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்கவில்லை. அப்போது இருந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதுதொடர்பாக வலிமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வேரை அறுக்கும் பண்பாட்டுப் படுகொலை அது. சந்திரசிறீ பழைய பூங்காவின் ஆன்மாவை பெருமளவுக்கு சிதைத்து விட்டார். பின்னர் அதன் மூலையில் ஒரு சிறிய புதிய பூங்காவை உருவாக்கினார். பழைய பூங்காவுக்குப் பல் பரிமாண முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு மரபுரிமைப் பிரதேசம். குடியேற்றவாத ஆட்சியாளர்களின் காலத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கான நிர்வாகத் தலைமையகமாகவும் அதேசமயத்தில் ஒரு பூங்காவாகவும் அது பராமரிக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கிய வடபகுதிக்கான முதலாவது அரச அதிபரான டைக் அதனை ஒரு பூங்காவாக மட்டும் கருதி உருவாக்கவில்லை என்பதனை அதுதொடர்பான குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அதனை அவர் ஒரு பூங்கா என்பதற்கும் அப்பால் ஒரு பழத் தோட்டமாகவும் பராமரித்துள்ளார். அங்கிருந்த பழங்களை யாரும் இலவசமாகச் சாப்பிடலாம் என்றும் அனுமதித்திருக்கிறார். பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி காலம் என்பது தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் ஒரு காலகட்டம். பழைய பூங்கா பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிர்வாக மையமாகக் காணப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வரலாற்றின் ஒரு காலகட்ட நினைவுகளை தாங்கி நிற்கும் மரபுரிமை சின்னங்கள் ஆகும். அந்த அடிப்படையில் பழைய பூங்கா ஒரு மரபுரிமைப் பிரதேசம். அதைப் பாதுகாப்பது என்பது தமிழ் மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியை பாதுகாப்பது. அபிவிருத்தியின் பெயரால் அந்த மரபுரிமைச் சொத்துக்களைச் சிதைப்பது என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றின் ஒரு பகுதியை இல்லாமல் செய்வதுதான். அது மரபுரிமைப் பிரதேசங்கள் தொடர்பான உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு எதிரானது. இரண்டாவது பரிமாணம், அது ஒரு நகர்ப்புற காடு. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் நகரங்களின் சுவாசப் பைகளாக நகர மத்தியில் சிறு காடுகளை உருவாக்கிவரும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்த, நூற்றாண்டு கால முதிய காடு ஒன்றின் தப்பி பிழைத்த சிறு பகுதியையாவது யார் பராமரிப்பது? அந்த முதுமரங்களில் வசித்த லட்சக்கணக்கான வௌவால்களும் அந்தக் காட்டின் ஒரு பகுதிதான். மிக அரிதான முதுமரங்களை விதைத்தவை அந்த வௌவால்கள்தான். இது பழைய பூங்காவுக்குள்ள சூழலியல் முக்கியத்துவம். இதுதொடர்பாக ஐங்கரநேசன் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றில் விரிவாகப் பேசியுள்ளார். மூன்றாவது தாவரவியல் பரிமாணம். அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று. பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முது மரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லாரையும் விட, அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விட மூத்தவை. நகரங்களைக் கட்டமைக்கும் போதும் வீதிகளை விசாலிக்கும்போதும் முதுமரங்களைப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை,தாவரவியல் ,சூழலில் நடைமுறைகளில் ஒன்று. எனவே பழைய பூங்காவை அதன் முதுமரங்களோடும் வெளவால்களோடும் பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு. போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட ஒரு மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் சிதைப்பதற்கு அனுமதிக்கலாமா? இப்பொழுது உயிரோடிருக்கும் எல்லா யாழ்ப்பாணதவர்களை விடவும் அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விடவும் வயதால் மூத்த அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா? தனது வேர் களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசிய இனமாக நிமிர முடியுமா? https://www.nillanthan.com/7955/#google_vignette
2 months 2 weeks ago
மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பு - தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின! 30 Nov, 2025 | 12:43 PM திருகோணமலை மாவட்டம் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இன்று (30) அதிகாலை உடைப்பெடுத்ததால் வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சேருவில பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளன. மகாவலி கங்கையின் நீர்வரத்து அப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களாக தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்ந்த பொதுமக்கள் அங்கிருந்து அனர்த்தப் பாதுகாப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232031 மாவிலாற்றுப் பகுதியில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் ஹெலிக்கொப்டர்கள் 30 Nov, 2025 | 12:52 PM மாவிலாற்றுப் பகுதியில் இலங்கை விமானப்படையானது ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் வான் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை மாவிலாறு பகுதியில் மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த பெல்–412 ஹெலிக்கொப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிக்கொப்டர், KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் MI-17 ரக ஹெலிக்கொப்டர் ஆகியன மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. https://www.virakesari.lk/article/232032
Checked
Sun, 02/15/2026 - 09:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed