புதிய பதிவுகள்2

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

3 months ago
பெண்கள் உலகக் கோப்பை: 'இந்த 5 விஷயங்கள் நடந்தால் இந்தியாவுக்கு வெற்றி பிரகாசம்' பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மு.பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025 பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா. அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி. இந்த 5 முக்கிய விஷயங்கள் நடந்தால் இந்திய அணி சாம்பியன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். அவை என்ன? 1) இந்தியா சேஸ் செய்வது சாதகமாக அமையலாம் இந்திய அணி டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்வது சாதகமாக அமையலாம் என்று சொல்கிறார் ஆர்த்தி சங்கரன். "வழக்கமாக இதுபோன்ற பெரிய போட்டிகளில் எந்த அணியுமே முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்வார்கள். பெரிய ரன்கள் அடித்தால், அதுவே எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்திவிடும். அது வழக்கம் தான். ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று தோன்றுகிறது" என்றார் அவர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை சேஸ் செய்தது இந்தியா தான் அப்படிச் சொன்னதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறினார் அவர். "பனி (Dew) இந்தப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பௌலர்களுக்குப் பந்தைப் பிடிப்பது எளிதாக இருக்காது. அரையிறுதியின் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய பௌலர்கள் நிறைய வைட்கள் வீசியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் பந்தும் பேட்டிற்கு நன்றாக வரும். அதனால் இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் நல்லது. அதுமட்டுமல்லாமல் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆடுகளம் மூடி வைக்கப்படலாம். அப்படி மூடிவைக்கப்பட்ட ஆடுகளத்தில் பந்து சற்று நின்று வரும். அப்படியிருக்கும்போது முதலில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்துதான் வரலாற்று வெற்றி பெற்றது. 339 ரன்களை சேஸ் செய்து, பெண்கள் ஒருநாள் போட்டிகளில் மிகப் பெரிய சேஸையும் பதிவு செய்தது இந்தியா. 2) ரேணுகா தாக்கூருக்குப் பதில் ஸ்னே ராணா அரையிறுதியில் ஆடிய அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். "ஸ்னே ராணாவால் இறுதிப் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். அரையிறுதியின் முக்கிய கட்டத்தில் அவர் இல்லாததை உணர முடிந்தது. அதேசமயம் ரேணுகா இந்தியாவின் சிக்கனமான பௌலராக இருக்கிறார். இருந்தாலும், அவரை முதல் ஸ்பெல்லுக்குப் பின் பெரிதாகப் பயன்படுத்த முடிவதில்லை. கடைசி கட்டங்களில் ஒரு பௌலர் குறைவாக இருப்பது போலத்தான். அதனால் எந்த கட்டத்திலும் பந்துவீசக்கூடிய ஸ்னே ராணாவை ஆடவைப்பது மிடில் ஓவர்களுக்கும், டெத் ஓவர்களுக்கும் உதவும்" என்று கூறுகிறார் ஆர்த்தி. இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆடியிருக்கும் ரேணுகா 4.13 என்ற எகானமியில் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 6 போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்னே ராணா, 5.67 என்ற எகானமியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஸ்னே ராணா ஆடவில்லை 3) மரிசான் காப் வீசும் 10 ஓவர்களை சரியாகக் கையாளவேண்டும் தென்னாப்பிரிக்காவின் முன்னணி பௌலரான மரிசான் காப்பை இந்திய பேட்டர்கள் நன்றாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி. "காப் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய 10 ஓவர்களை இந்தியா சிறப்பாகக் கையாளவேண்டும். ஒரு நல்ல விஷயம், இங்கிலாந்து பேட்டர்களுக்கு இருந்ததுபோல் இந்திய பேட்டர்களுக்கு இன்ஸ்விங்கை சமாளிக்கும் பிரச்னை இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் காப். பவர்பிளேவில் பேட்டர்களுக்கு சவால் விடக்கூடிய அவர், இதுவரை 3.83 என்ற எகானமியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இந்தியாவுக்கு பவர்பிளேவில் அவர் கொஞ்சம் பிரச்னை தரலாம் என்று சொல்லும் ஆர்த்தி, காப்போடு டெல்லி அணியில் ஷஃபாலி ஆடியது அவருக்குக் கொஞ்சம் சாதகமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டார். கடந்த 3 ஆண்டுகளாக ஷஃபாலி வர்மா, மரிசான் காப் இருவரும் வுமன்ஸ் பிரிமீயர் லீக் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மரிசான் காப் அதேசமயம் ஷஃபாலி வர்மா அவருடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாடவும் அணி நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி. காப் தவிர்த்து, இடது கை ஸ்பின்னரான மலாபா இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம் என்று கணிக்கிறார் ஆர்த்தி. ஆனால், அவர் பந்துவீச்சில் அதிரடியாக அடித்து ஆடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 4) மூன்று முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றவேண்டும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "தென்னாப்பிரிக்க பேட்டர்களைப் பொறுத்தவரை ஓப்பனர்கள் இருவருமே பெரிய சவாலாக அமைவார்கள். அவர்கள் போக காப்புடைய அனுபவமும் சிக்கல் கொடுக்கும். இவர்கள் மூவரையும் சீக்கிரம் பெவிலியனுக்கு அனுப்பினால், தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்கலாம். அவர்கள் மூவருமே இல்லாதபோது மற்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்." என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லாரா வோல்ஃபார்ட் & டாஸ்மின் பிரிட்ஸ் இந்தத் தொடரில் 470 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் வோல்ஃபார்ட். ''இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் நடீன் டி கிளார்க் தான் 54 பந்துகளில் 84 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். அப்போது பெரும்பகுதி அவரோடு வோல்ஃபார்ட் விளையாடியிருந்தார். அந்த 3 பேரை (வோல்ஃபார்ட், பிரிட்ஸ், காப்) அப்படி நீண்ட நேரம் ஆடவிடாமல் செய்தால், பின்னால் வருபவர்கள் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் செய்ய முடியும்'' என்கிறார் ஆர்த்தி. 5) ஹர்மன், ஸ்மிரிதி இருவரின் நிதானமும் முக்கியம் இந்தியாவின் இரு தூண்களான ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா இருவரும் இறுதிப் போட்டியில் நிதானமாக இருக்கவேண்டும் என்கிறார் ஆர்த்தி. "இந்தியாவின் இந்த இரண்டு ஸ்டார்களும் நெருக்கடிகளை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு, மற்றவர்கள் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வழி வகுக்க வேண்டும்" என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் கேப்டனும், துணைக் கேப்டனும் நெருக்கடியான போட்டியை நிதானமாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன் மேலும், "அவர்கள் இருவரும் இப்போது பல ஃபைனல்கள் விளையாடி விட்டார்கள். நிறைய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறார்கள். அதனால் அந்த நெருக்கடிகளையெல்லாம் அவர்கள் தோள்களில் தாங்கி அதை சமாளிக்கவேண்டும். மற்றவர்களுமே சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த இரு சீனியர்களின் நிதானம் முக்கியம்" என்றார் ஆர்த்தி. இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்குத் தொடங்கும். இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பை எதுவும் வென்றதில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm277k624lvo

ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம்

3 months ago
ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்; அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிவிப்பு : சினோபெக் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளதாகவும் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:33 AM ஆர்.ராம் நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலீட்டாளர்களிடையே ஏற்படும் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புதிய சட்டமூலமானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், நாட்டில் வெளிப்படைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை குறித்த சட்டமூலம் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். இதேவேளை, சினோபெக் திட்டம் சம்பந்தமான உரையாடல்கள்இறுதி கட்டத்தில் இருப்பதால், 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள குறித்த திட்டம் விரைவில் அமுலாக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். குறித்த திட்டம் சம்பந்தமாக நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதோடு விரைவில் குறித்த திட்டத்தினை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார். சீன தூதரகம் மற்றும் சினோபெக் அலுவலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்காளர்களுடன் நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியுள்ள நிலையில் தற்போது அவை இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டிற்கு அதிவேகமான பொருளாதார வளர்ச்சி தேவையாக உள்ளது என்றும் தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அரசியல் கட்டமைப்புகள் போன்ற எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதன் ஊடாக அதனை முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/229255

பூண்டு உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா? பூண்டு உலகெங்கும் பரவிய வரலாறு

3 months ago
பட மூலாதாரம், Press Association படக்குறிப்பு, பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரைப்பை குடல் கோளாறு, வாய்வு மற்றும் குடலில் மாற்றங்களை ஏற்படுத்தும். கட்டுரை தகவல் தி ஃபுட் செயின் ப்ரோக்ராம் பிபிசி உலக சேவை 2 நவம்பர் 2025, 01:52 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளையும் வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதால், சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது. பிபிசி உலக சேவையின் புட் செயின் நிகழ்ச்சி, பூண்டின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. அதே சமயம், பூண்டு உண்மையில் நமது ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்ற ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது. சமையலில் அத்தியாவசியமான பொருள் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வடமேற்கு பிரான்ஸில் உள்ள தனது பிரெஞ்சு சமையல் பள்ளியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் டேனிஷ் சமையல் கலைஞரான பவுல் எரிக் ஜென்சன், 'பூண்டைப் பற்றித் தெரியாத மாணவரை நான் சந்தித்ததே இல்லை' என்கிறார். பூண்டு உணவின் சுவையைப் பெரிதும் உயர்த்துவதாக அவர் நம்புகிறார். 'பூண்டு இல்லாமல் பிரெஞ்சு உணவு எப்படி இருக்கும்?' என்று அவர் ஆச்சரியப்படுகிறார். "பிரெஞ்சுக்காரர்களால் பூண்டு இல்லாத உணவை கற்பனை கூட செய்ய முடியாது என நான் நினைக்கிறேன்," குழம்பு முதல் சூப் வரை, காய்கறி அல்லது இறைச்சி உணவுகள் வரை, எல்லாவற்றிலும் ஒரு பல் பூண்டு கண்டிப்பாக இருக்கும். பூண்டு இல்லாமல் சமைப்பதை கற்பனை செய்யவே முடியாது." என்று ஜென்சன் கூறுகிறார். ஆனால் 1970களின் தொடக்கத்தில் டென்மார்க்கின் கிராமப்புறத்தில் வளர்ந்தபோது, பூண்டு அவருக்கு புதிதாக இருந்தது. அதன் கடுமையான மணத்தின் காரணமாக மக்கள் அதை அப்போது பயன்படுத்தவில்லை. பின்னர், துருக்கிய தொழிலாளர்கள் டென்மார்க்கிற்கு வந்தபோது, பூண்டு சேர்த்த உணவு பரவலானது. இத்தாலிய பீட்சாக்கள் மூலமாகவும் ஜென்சன் பூண்டை ரசிக்கத் தொடங்கினார். இப்போது, குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்காகவும் பூண்டைப் பயன்படுத்துகிறார். "நானும் என் துணைவியும், காலையில் ஒரு கப் சூப் குடிப்போம். அதில் ஒவ்வொருவரும் ஒரு முழு பூண்டு பல்லைப் பிழிந்து சேர்ப்போம். இதனால் எங்களுக்கு சளி, காய்ச்சல் எதுவும் வருவதில்லை. அதற்கு காரணம் பூண்டு தான் என நான் நிச்சயமாக நம்புகிறேன்." என்று அவர் குறிப்பிடுகிறார். ஒரு நீண்ட பயணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 20ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்தவர்கள் புதிய இடங்களுக்கு பூண்டை கொண்டு வந்தனர் பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பண்டைய கிரேக்கர்கள், சூனியம் மற்றும் வீடுகளின் பாதுகாவலரான ஹெகேட்டுக்கு காணிக்கையாக சாலைச் சந்திப்புகளில் பூண்டை வைத்தனர். எகிப்தில், புகழ்பெற்ற துட்டன்காமூனின் கல்லறையில் பூண்டு கிடைத்தது, அவரைப் பாதுகாக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு என்றும் அவர்கள் நம்பினர். அதேபோல், சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறக் கதைகளில், காட்டேரிகளை விரட்ட பூண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. "உலகின் பழமையான சமையல் செய்முறை ஒரு மெசபடோமிய குழம்பு. அது 3,500 ஆண்டுகள் பழமையானது. அதில் இரண்டு பூண்டு பற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன" என 'கார்லிக்: எடிபில் பயோகிராபி'என்ற ('Garlic: An Edible Biography') புத்தகத்தின் ஆசிரியரான ராபின் செர்ரி கூறுகிறார். "பூண்டு குறித்து உள்ள மிகப் பழமையான மருத்துவ குறிப்பும் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது. 'எபர்ஸ் பாப்பிரஸ்' என்று அழைக்கப்படும் அந்த ஆவணத்தில், உடல்நலக்குறைவு முதல் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் வரை பல பிரச்னைகளுக்கு பூண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய பல குறிப்புகள் இருந்தன," என்றும் அவர் கூறுகிறார். பண்டைய கிரேக்க மருத்துவரும் தத்துவஞானியுமான ஹிப்போகிரட்டீஸ் தனது மருத்துவ சிகிச்சைகளில் பூண்டைப் பயன்படுத்தியதாக செர்ரி குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில், அரிஸ்டோபேன்ஸ் போன்ற பல சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பூண்டின் மருத்துவ பயன்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அடிமைகளின் உணவில் இருந்து அரச குடும்பத்தின் உணவு வரை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பீட்சா போன்ற நமக்குப் பிடித்த பல உணவுகளில் பூண்டு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. பண்டைய மெசபடோமியா, எகிப்து, கிரீஸ், ரோம், சீனா, இந்தியா போன்ற பல நாகரிகங்களில் பூண்டு மிகவும் பிரபலமாக இருந்தது. ரோமானிய வீரர்கள் பூண்டு தங்களுக்கு தைரியமும் வலிமையும் தருவதாக நம்பினர். அவர்கள் யுத்தங்களில் வெற்றி பெற்று புதிய பகுதிகளைக் கைப்பற்றிய போது, பூண்டை ஐரோப்பா முழுவதும் பரவலாக்கினர். பூண்டு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டாலும், ஒரு காலத்தில் சமையலில் அது ஏழைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. "அது ஏழைகள் உண்ணும் உணவாகவே கருதப்பட்டது." என்று கூறிய ராபின் செர்ரி, "எகிப்தில் பிரமிடுகள் கட்டிய அடிமைகளுக்கும், ரோமானிய மாலுமிகளுக்கும் வலிமை தருவதற்காக பூண்டு கொடுத்தனர். அது மலிவானது மட்டும் அல்லாமல், கெட்டுப் போன உணவின் சுவையையும் மறைக்கக்கூடும். அதனால் அது ஏழைகள் சாப்பிடும் உணவாகவே நீண்ட காலம் பார்க்கப்பட்டது." என்றும் விளக்குகிறார். ஆனால் 14 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் பூண்டின் மதிப்பு மாறியது. அது, ஐரோப்பாவில் கலை, அறிவியல் வளர்ந்த காலம். "பிரான்சின் நான்காம் ஹென்றி பூண்டால் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அதை அதிகம் உண்டார். இது பூண்டை பிரபலப்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் பூண்டு பிரபலமானது," என்கிறார் செர்ரி. 1950-60களில் குடியேறியவர்கள் மூலம் பூண்டு அமெரிக்காவுக்கு வந்தது. இது எதிர்மறையான கருத்துகளை மாற்ற உதவியது. "யூதர்கள், இத்தாலியர்கள், கொரியர்கள் ஆகியோரை 'பூண்டு சாப்பிடுபவர்கள்' என்று அவமானகரமாக அழைத்தனர். இதற்கு மோசமான அர்த்தம் இருந்தது," என்றார் செர்ரி. மருந்தாகப் பயன்படுத்தப்படும் பூண்டு பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பூண்டு அதன் மருத்துவ குணங்களுக்காக இன்றும் விரும்பப்படுகிறது உலகில் தற்போது 600-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா போன்ற இடங்களில் விளையும் சில வகைகள் சமீபத்தில் தான் உலக சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சமையலில் முக்கியப் பங்கு வகிப்பதைத் தாண்டி, பூண்டு சளியின் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றில் பூண்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் அதில் வெளியான முடிவுகள் மாறுபட்டதாக உள்ளன. உதாரணமாக, இரானில் நடந்த சிறிய ஆய்வு, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு ஆறு வாரங்களில் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 200 நபர்களிடம் ஆறு மாதங்களுக்கு நடந்த ஆய்வில் கொழுப்பு குறைவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனா இப்போது உலகின் மிகப்பெரிய பூண்டு உற்பத்தியாளராக உள்ளது 2014-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, பூண்டு வலுவான நுண்ணுயிர், வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது. "பூண்டில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு போன்றவை மிதமான அளவில் உள்ளன. உண்மையில் இது ஒரு அதிசய காய்கறி," என்கிறார் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும் குழந்தை மருத்துவ உணவியல் நிபுணருமான பஹீ வான் டி போர். "பூண்டில் 'அல்லிசின்' என்ற கந்தகம் கூட்டு பொருள் உள்ளது. இதில், நம் குடல் மிகவும் விரும்பும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையும் உள்ளது." என்றார். அதேபோல் பூண்டின் நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது, மலச்சிக்கல், வயிறு வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது. ஆனால் அமெரிக்கன் ஃபேமிலி ஃபிசிஷியன் (American Family Physician) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பூண்டை அதிகமாக, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள், வாயு பிரச்னை மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவில் மாற்றம் ஏற்படலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8drre7vv3do

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியகப்பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளமை சட்டபூர்வமானதா?

3 months ago
ஐ.நா வெளியகப் பொறிமுறை தொடர்பில் முறைப்பாடு உத்தியோகபூர்வமாக ஆராய்வதாக ஐ.நா. உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:14 AM நா.தனுஜா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வெளியகப் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகமானது உள்ளகக் கணக்காய்வு, விசாரணை, மேற்பார்வை மற்றும் சேவை மதிப்பீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஊழியர்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் கொண்டிருக்கும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும். அதன்படி இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வெளியகப்பொறிமுறை குறித்து இலங்கைப் பிரஜைகள் மூவருடன் இணைந்து அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கோட்பாடுகளுக்கு அப்பால் இலங்கையின் ஒப்புதல் இன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியகப்பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளமையானது அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு என்பன பற்றிய கேள்வியைத் தோற்றுவிப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராயப்படுவதன் காரணமாக, அதன் இரகசியத்தன்மையைக் காரணங்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. https://www.virakesari.lk/article/229253

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

3 months ago
Nov 2, 2025 - 08:51 AM நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட உள்ளார். https://adaderanatamil.lk/news/cmhh597uu01c8o29ndn1dgf0s

வெள்ளவத்தை ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் அங்குரார்ப்பணம்

3 months ago
01 Nov, 2025 | 04:51 PM ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்­பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (31) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் வைத்தியர் கீதா ஹரிப்பிரியா ஆகியோரின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. (படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/229242

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்

3 months ago
Nov 2, 2025 - 08:18 AM இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் மூடியுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmhh436c301c7o29ng88tb3uv

யாழில் சிறுவனைக் காணவில்லை!

3 months ago
யாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்! 02 Nov, 2025 | 09:31 AM யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229260

பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்....முகநூலில் பிரதி பண்ணப்பட்டது..நன்றி..Thapes Vlogger

3 months ago
Thapes Vlogger is at Ahangama Beach, Sri Lanka. deposSntro68a15fm785396h318iitflm7g0uf89i11694g2clmmf1acg4cf · 🇬🇧" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்.. கீழே படத்தில் இருப்பவர் எனது நண்பர். இலங்கையில் பிறந்து சிறு வயதிலையே பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு உயர் படிப்பை முடித்து தொழில்நுட்பத்துறையில் நல்லதொரு வேலையில் இருந்தவர். ஆனாலும் இலங்கை மீது அவருக்கு தீராத காதல்.. அதனால் பிரித்தானியாவில் எல்லாவற்றையும் உதறித்தள்ளி விட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வந்து குடியேறினார்.. அதற்க்கு இலங்கையில் தேர்த்து எடுத்த இடம், தெற்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமான அந்த Ahangama பிரதேசம். தான் படித்ததற்கும், தொழில்நுட்ப துறையில் செய்த வேலைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஆனால் தான் ஆழமாக காதலித்த இசைத்துறையில்.. DJ ஆக அறிமுகமானார் தெற்கில்.. இந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் தெற்கின் முக்கியமான எல்லா உணவகங்கள், Bars, Clubs என அவரின் இசை விருந்து நடக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம்.. அது மட்டுமல்ல Jaffna, Goa, Chennai,Dhaka, Singapore என பல நகரங்களில் தனது DJ இசையரங்கை நடத்தியிருக்கிறார்.. Instagram வளைத்தளத்தில் 45000 பின்தொடர்பாளர்களுடன் தனது இந்த DJ துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர். இந்த ஆண்டு February எனது தெற்கு பயணத்தின் போது Ahangama சென்றிருந்தேன்.. நீண்ட நேரம் உரையாடினோம். அந்த நேரம் தான் அந்த இடத்தில் ஒரு இந்திய உணவகம் இல்லை, தான் ஒரு சிறிய இந்திய உணவகம் திறக்க இருப்பதாக சொன்னார். அதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருந்தது.. நானும் அது பற்றி ஒரு காணொளி போட்டிருந்தேன். அந்த நேரம் என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு அது ஞாபகம் இருக்காலாம். அவர் இன்று தனது Facebook பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார்.. அந்த செய்தியை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த சிறிய இந்திய உணவகத்தை சில மாதங்களுக்கு முன்பு Ahangama வில் திறந்திருந்தார். இன்று அது எப்பவும் மூடப்படும் நிலையில் இருக்கிறது என்று அறிவித்திருக்கின்றார். காரணங்கள்..?? பல தடவை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது அந்த இடத்தில்.. காரணம் ஒரே ஒரு தமிழன் அதில் வியாபாரம் தொடங்கியதற்காக.. இந்த சம்பவத்தை அவர் Facebook ல் பகிர முன்பும் கடைக்கு வந்து காசு கேட்ட ஒரு காடையனால், காசு தர மறுத்ததற்க்காக கழுத்தில் பிடித்து நெரித்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.. தீபாவளி அன்று கடையில் தமிழ் பாட்டு போடக்கூடாது என்றும், நீ திரும்பி உன் யாழுக்கே போய்விடு என்றும் மிரட்டியிருக்கிறார்கள். அவர்களின் அதே கீறல் விழுந்த பழைய “நீயொரு 🐅" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td1/1/16/1f405.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">பயங்கரவாதி” என்ற மிரட்டல்கள்.. ஒரு சுற்றுலாப்பயணியாக தெற்கை சுற்றும் போது, பார்ப்பவர்களெல்லாம் நல்லவர்களாக தெரிந்தார்கள்.. இதையொரு வியாபார போட்டியாகவும் பார்க்கமுடியாது. Ahangama வில் இருக்கும் சுற்றுலா சம்பந்தமான வியாபாரங்கள் முக்கால்வாசி வெளிநாட்டுக்காரர்கள் உடையது.. அதுவும் அந்த இடத்தில் இன்னொரு தென்னிந்திய உணவகமும் இல்லை, அதை போட்டியாக பார்ப்பதற்க்கு.. சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் எழுதியிருந்தேன்.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏன் இலங்கையில் முதலீடுகள் செய்ய விரும்புகிறார்கள் இல்லை என்று.. அதில் நீங்கள் பல பேர் கூறியிருந்தீர்கள்.. இவர்களை நம்ப முடியாது, எப்போ என்ன செய்வார்கள் என்று.. அதென்னவோ உண்மை தான்.. அவர்களில் பல நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், ஆனால் பல பேருக்கு இனத்துவேசமும் இருக்கிறது.. போகும் போதெல்லாம் தெற்க்குக்கும் போய், தெற்கின் மகிமைகளை எல்லாம் காணொளியாக போட்டதை நினைத்தால் இப்ப ஒரு Guilty feeling ஆ இருக்கிறது.. புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து போய் அங்கு வியாபாரம், அதுவும் தெற்கு போன்ற சுற்றுலாபயணிகள் அதிகளவில் கூடும் நகரங்களில் வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள், அது சரியான தெரிவு தானா என யோசிக்க வைக்கிறது இந்த சம்பவம் அதுவும் இந்த 2025ல்..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> இது அங்கிருக்கும் ஒருவருக்கு நடந்திருந்தாலும் அது என்னை பெரிதாக பாதித்து இருக்காது, காரணம் நாங்கள் சின்ன வயதிலிருந்தே அவர்களின் துவேசத்தை பார்த்து வளர்ந்தவர்கள். ஆனால்.. 6-7 வயதில் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து போன ஒருவன், எல்லா வசதிகள் இருக்கும் ஒரு நாட்டில் இருந்தும், தனது நாட்டின் மீது உள்ள காதலால் மீண்டும் இலங்கையில் வந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒருவனுக்கு கிடைத்த இந்த அனுபவம் மிக மோசமானது..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> அவரது Facebook பதிவை Commentல் இணைத்துவிடுகிறேன். #fblifestyle

எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்!

3 months ago
எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! *தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது... ------ ----- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார். அதேபோன்று -- மக்கள் போராட்ட முன்னணியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. அதாவது -- இலங்கைத்தீவை ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பது அவர்களின் வாதமாக உள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் மறுப்பில் நியாயம் உள்ளது. ஏனெனில் -- ரணில், சஜித், ராஜபக்ச என்ற அரசியல் தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள் முன்னர் ஆளும் கட்சியாக இருந்தபோது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரசியல் - பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கேடுவிளைவித்தனர். பொருளாதார நெருக்கடி எழுவதற்கும் இவர்களது கட்சிகளின் 76 வருட ஆட்சிதான் காரணம். இன முரண்பாட்டுக்கு உரிய தீர்வு ஏற்படாமல் வெறுமனெ இனவாதம் பரவுவதற்கும் இவர்கள் தான் காரணம்... இப் பின்னணியில் --- மக்கள் போராட்ட முன்னணி அவர்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்பது நியாயமானது. அவர்களுடைய அரசு எதிர்ப்பு போராட்டமும் தனித்துவமானது. ஆனால் -- சஜித், ரணில், ராஜபக்ச என்ற தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு அநுர அரசாங்கத்தை எதிர்க்க முடியாது. மக்களுக்கும் இக் கட்சிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகள் - ஊழல்கள் தெரியும். இப் பின்னணிகளை தமக்குச் சாதகமாக்கி, 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' என்ற புதிய அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா இல்லையா என்ற இரு வகையான அணுகுமுறைகளுடன் அநுர அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகின்றது. இந்த நிலையில் -- பிரதான எதிர்க்கட்சிகள் தமது பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விடயத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித், ரணில், மகிந்த ஆகியோர் ஏறத்தாள அநுர அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் தன்மை உண்டு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் கடந்த வாரம் முதல் கோர ஆரம்பித்துள்ளன. ஆனாலும் --- இந்தக் கோரிக்கை பலமானதாக இல்லை. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளை தம் பக்கம் எடுக்கக் கூடிய முறையில் சும்மா ஒப்பாசாரத்துக்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையாகவே இதனை அவதானிக்க முடியும். இப்பின்னணியில் -- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான மையமாக விளங்கும் ஜேவிபி கொழும்பில் தொடராக நடத்தி வரும் உரையாடலில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெளிவாக தெரிகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலமான மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரினாலும், கொழும்பை மையமாக் கொண்ட, எதிர்தரப்பு சிங்கள அரசியல் கட்சிகள் அதற்கு பெரிய அளவில் ஆதரவு வழங்கும் சாத்தியம் இல்லை என்பது, ஜேவிபிக்கும் தெரியாமல் இல்லை. புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண முடியும் என ஜேபிவி பலமாக நம்புகிறது. அநுர அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வரும் அதேநேரம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பெரிய அளவில் அவர்கள் அச்சம் கொண்டதாக கூற முடியாது. ஆனால் -- மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் மேலும் ஒத்திவைப்பது குறித்தே அதிகளவில் அவர்கள் சிந்திக்கின்றனர். இந்த விவகாரங்கள் உள்ளிட்ட ஒரு வருட ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக உரையாடுகின்றனர். அதேநேரம் -- தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வகுக்கும் தமிழர் தரப்பு நிலைப்பாடுகள் பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர். குறிப்பாக - தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசும் திட்டம் ஒன்று ஜேவிபியிடம் இருப்பதாக தெரிகிறது. அதேநேரம் -- கடந்த செப்ரெம்பரில் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற உரையாடலின் தொடர்ச்சியாக மற்றொரு உரையாடலை நடத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் பிரதிநிதிகள் என்ற ஒரு கட்டமைப்பை தமக்கு ஏற்ற மாத்திரி உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அறிய முடிகிறது. ஆனாலும் -- சுவிஸ்லாந்தில் நடந்த உரையாடலில் பங்குபற்றிய தமிழ்த்தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் தெளிவாக கூறுகின்றனர். இதன் காரணமாக சுவிஸ்லாந்திலோ அல்லது வேறொரு நாட்டிலோ மற்றொரு சந்திப்புக்கு அதாவது விரிவான உரையாடலுக்கு அநுர அரசாங்கம் இணங்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூற முடியாது. ஆனாலும் -- மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், புதிய யாப்பு எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் ஏற்பாடும் அடுத்த ஆண்டு சூடு பிடிக்கும் என ஜேபிவி தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியளிக்காமல் பிசுபிசுக்குமானால், அநுர அரசாங்கத்தின் மேற்படி இரண்டு அணுகு முறைகளும் 2026 ஆம் ஆண்டு வெற்றியளிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் புதிய யாப்பு அதாவது 'ஏக்கிய இராச்சிய' என்ற அந்தக் கதை நீடித்துச் செல்லக் கூடிய சூழலும், அதன் மூலம் தமிழரசுக் கட்சி தமது செல்வாக்கை நிலை நிறுத்தக் கூடிய வாய்ப்பும் உண்டு. புதிய யாப்பு விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அத்துடன் -- வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர் தரப்பு பேசி வருவதை தடுக்கும் திட்டங்களும் வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் மூலம் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. ஜெனிவா மனித உரிமை சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்தில் உள்ள தூதுவரை சந்தித்து உரையாடியுள்ளார். தமது கட்சி சார்பில் வடக்கு கிழக்கில் எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறது. சர்வதேச மட்டத்தில் இப் பிரச்சாரம் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது. வத்திக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ள இரகசியத்தின் பின்னணியும் இதுதான். அதாவது -- இலங்கைத்தீவு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியில் நிற்கிறார்கள், போருக்குப் பின்னரான சூழலில் மீள் நல்லிணக்கம் உறுதியாகிவிட்டது என்ற இறுதிச் செய்தி உலகத்துக்குப் போய் சேரும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 months ago
அன்று, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால்; கிழக்கின் நிலைமைதான் வடக்கிலும் நிகழ்ந்திருக்கும். கோவில்களில் மீன் சந்தையும், கருவூலங்களில் மாட்டிறைச்சிக்கடையும் அமைந்து, பல முஸ்லீம் கிராமங்கள் தோன்றி, பலர் முஸ்லிம்களாக மாறியிருப்பர். அப்போ பெரிய சந்தோசம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள், மீண்டும் மன்னிப்பு கோரி மீள குடியேற அழைத்தார்கள். இவர்கள் அப்படியா? பிச்சைக்காரனின் புண்போல அப்பப்போ பிரிச்சுக்காட்டி, வெவ்வேறு புனைகதைகளை புனைந்து, எந்தக்காலத்திலும் நல்லிணக்கம் ஏற்படாமல் பாத்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போதே அவர்கள் தம் இருப்பையும் சலுகைகளையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இப்போ அதற்கான சந்தர்ப்பம் குறைந்து வருகிறது என்றே நான் நினைக்கிறன். சரி, புலிகள் இல்லாத காலத்தில் ஏன் இவற்றை ஆண்டுதோறும் புதுப்புதுக் கதைகள் புனைகிறார்கள்? அவர்கள் உயிரோடு இல்லாதபடியால் தாம் நினைத்தபடி கதை எழுதலாமென்றா? "உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்."

விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!

3 months ago
இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், சாணக்கியன் முதலில் தமிழரசுக்கட்சியில் வேட்பாளராக களமிறங்கியபோது, தூஷண பிக்கரை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றி மக்களை பயங்காட்டி வெற்றிபெற்றார். இப்போ, மாகாணத்தேர்தல் வரப்போகிறது, முதலமைச்சர் கனவு வேறு இவரை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக இன்னொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய தேவை இவருக்கு. இந்தச்செய்தி இவரது முகநூலிலேயே பகிரப்படுள்ளது. வடக்கில் சுமந்திரன், யார் யாரையோ ஓடி ஓடி சந்தித்து, அறிக்கை விட்டு, பேச்சுக்கு அழைத்து தயாராகிறார். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு செய்த சேவை காணாதாம், இனி முதலமைச்சர் பதவியில் தமிழருக்கு எல்லா தீர்வும் பெற்றுத்தந்துதான் ஓய்வார்களாம் இருவரும். பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின்பேரில் சந்திக்கிறார், ஒரு ஊடகவியலாளர் அல்லது இவருக்கு பின்னால் அலையும் பட்டாளம் எதையும் காணோம். சும்மா ஒரு கருத்து சொல்வதனாலும் ஊடகவியலாளரும் கூட்டமுமாக வலம் வரும் இவருக்கு. உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவருமே கண்ணில் படவில்லையா? சரியாகத்தானே சமன்பாடு காட்டியிருக்கிறார் தான் போட்ட கணக்கிற்கு!

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months ago
இங்கே பணி புரியும் அனேகமானவர்கள் வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள் ,மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களாவே இருக்கிறார்கள்.பொதுவாக நான் ஊர் நிலவரங்கள் பற்றியே பார்ப்பதனால் அறிந்திருக்கிறேன்.

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months ago
சாதாரணமாக உணவு நிலையங்கள் விடுதிகள் வியாபார நிலையங்கள் ஆகியவையே இப்படியான சோதனைகளுக்கு உட்ப்படுத்தப்படுகின்ற வழமை இது அசாதாரணம் ஆகவே அந்த நிலையத்தை சார்ந்த தொழிலாளர்களே இந்த முறைப்பாட்டை செய்திருக்க வேண்டும் எப்படியாகிலும் தவறு எங்கே நடந்தாலும் தவறுதான்.

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months ago
நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀. அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன். கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months ago
ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலை செய்பவர்களுக்கான உணவு அங்கேயே தயார் செய்யப்பட்டால்.... அதுவும் அழுகிய நிலையில் இருக்கும் மரக்கறிகளை சமைப்பதற்குத் தயார் நிலையில் வைத்திருந்தால்.... குற்றம் தானே

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இந்தியா முதல் சுற்றில் விளையாடி முதல் மூன்று அணிகளாக நிலையெடுத்த அவுஸ் ,இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தானும் தோல்வியடைந்து நான்காவது நிலைக்கு வந்து இருக்கின்றது . இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட அவுசை வென்றிருக்கின்றது. அதே போல தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் சுற்றில் அவுஸ் மற்றும் இங்கிலாந்திடம் தோற்று இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வென்று இப்போது இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ளது கேள்வி என்னவென்றால் 1. இரண்டாவது தடவையும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்குமா ? 2 , வழமைபோல முதல் சுற்றில் கிடைத்த தோல்விக்கான பதிலடியைக் கொடுக்குமா ? பதில் நாளை கிடைக்கும் என நம்பலாம்
Checked
Sat, 02/07/2026 - 20:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed