புதிய பதிவுகள்2

(தீ) சுவடு

2 months ago
போராளிகளின் போருக்குப் பின்னான வாழ்வில் ஒரு துளி இங்கும் தெறித்து விழுந்திருக்கு......! 😢 நல்லதொரு சம்பவம் "தனி".....பகிர்வுக்கு நன்றி......!

யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

2 months ago
விவாதம் என வந்தால் விண்ணானம் விடுப்பு எழுதுவது என் பாணி .....மேலும் விவாதிப்பவர் தமிழ் தேசிய விரோத கருத்தையும் தமிழ் மக்களுக்கு ஏதிரான மனபோக்கையும் வைத்திருப்பார் என நான் புரிந்து கொண்டால் அவருடன் நாம் என்னத்தை விவாதித்தாலும் முடிவு முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போய் விட்டார்கள் செல்வா காலத்திலிருந்தே யாழ்ப்பாணதான் மோசமானவன் என்ற பதில் தான் வரும்

எமது கிராமத்தின் வரலாறு

2 months ago
எழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன. இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பாடும் என்ற நிலையில் சந்தோசமாகவும் அமைதியாகவும் எந்தவிதமான கோபதாபம் பிணக்குகளின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆதிமுதல் “பெரும்படை” என்னும் தெய்வத்தையே தமது குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். வழமையாக வருடாந்தம் பங்குனி மாதம் கொண்டாடப்படும் பெரும் பொங்கல் தினத்தையே பெருவிழாவாகக் கொண்டாடி வந்தனர். ஒரே சமூகமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இவர்களைப் பிரிக்க வேண்டுமென்ற சிலரின் தீய எண்ணத்தாலோ ஏதோ ஒரு காரணத்தாலோ ஒரு பொங்கல் தினத்தன்று இவர்களுக்கிடையே பிரச்சனைகளும், மனஸ்தாபங்களும், குரோதங்களும் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் தமக்கொன அதே பெயரில் இன்னொரு “பெரும்படை” என்னும் கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். அன்று தொடங்கிய பகை நீண்ட காலம் வேண்டத்தகாத சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறமைகளையும் இவர்களுக்கிடையே வளர்த்தது. இது இவர்களுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து இவர்களின் சீரான வாழ்வைச் சீரழித்தது. http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-41e748b1726d6a09d2d6dc91d20f1138-V-1024x768.jpg இம் மக்கள் கடற்கரையையண்டி வாழ்ந்தபடியால் கடல்படு திரவியம் தேடும் தொழிலே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் விவசாயத்தையும் தம் தொழிலாகக் கொண்டனர். அக்காலம் போதிய போக்குவரத்து வசதி இன்மையால் தாம் பெற்ற சரக்கைத் தனங்கிளப்பிற்கு நேரேயுள்ள கடற்கரையிலிருந்து காவுதடி கொண்டு சாவகச்சேரிச் சந்தையில் விற்றுப் பணமாக்கினர். இந்த நிலை வீண் சிரமத்தையும் கஷ்டத்தையும் கொடுத்ததைக் கண்டு ஒரு சில பெரியவர்களினதும் நல்ல உள்ள கொண்டவர்களது மன எண்ணத்தின்படியும் தம் கடற்கரையிலே தாம் பிடித்த சரக்கை விற்பனை செய்து சம்பாதிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கம் உதயம் இம்மக்களை ஒன்றுபடுத்தி இவர்களது வாழ்வைச் சிறப்புறச் செய்யவும் வீணான குரோதங்களை இல்லாமற் செய்யும் நோக்கத்திற்கும் ஒரு ஸ்தாபனம் தேவைப்பட்டது. அதன் நிமித்தம் கூட்டுறவுச் சங்கம் உதயமானது. அதன் தலைவராக தச்சன்தோப்பைச் சேர்ந்த அறிவு மிக்க திருவாளர் முருகேசு காசிப்பிள்ளையும், செயலாளராக திரு கனகர் சதாசிவம், பொருளாளராக திரு வேலுப்பிள்ளை பொன்னம்பலம் ஏனைய சிலர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர். இந்நிகழ்வு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. சந்தை ஆரம்பம் கைதடி நாவற்குழி தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சந்தையைச் செயற்படுத்தும் நோக்கத்தோடு கடற்கரையோரம் சிறு கொட்டிலை அமைத்தது. நல்ல நாளாக சித்திரைப் பரணி தினத்தன்று வியாபாரம் தொடங்கத் தீர்மானித்தனர். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் பல ஊர்களுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினர். அன்றைய தினம் தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையுள்ளோர் சமூகம் கொடுத்து மீன் வகைகளைக் கொள்வனவு செய்தாலும் நாளடைவில் – காலப்போக்கில் மக்கள் அநேகம் பேர் கூடவும் வியாபரம் பெருகவும் வழி உண்டாயிற்று. வியாபாரத்தைக் கண்காணிக்க மகேசனும், சிப்பந்தியாக திரு.வி.சின்னத்துரையும் நியமிக்கப் பெற்றனர். சிப்பந்தி நகைச்சுவையாக “காத்தடி கொண்டு காவினதெல்லாம் அந்தக்காலம், இப்போ கையிலே தூக்கி கரையிலை வைப்பது இந்தக் காலம்” எனக் கவிதையும் யாத்துப்பாடியது இப்போதும் காதில் கேட்கின்றது. கூட்டுறவுச் சங்கத்தின் சேவை கூட்டுறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதும் ஆரம்பத்திற் குறிப்பிட்ட ஒரு தொகையினர் அங்கத்துவராகச் சேரப் பின்னடித்தாலும், ஏனையவர்களோடு சங்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சங்கத்திற்கு ஒரு பெயர் வைப்பதற்காக பூசாரி க.சதாசிவம் பூசை செய்யும் வைரவர் கோயில் முன்றலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடற்றொழில் இலாகாவைச் சேர்ந்த திரு சோமசுந்தரம் என்னும் உயர் அதிகாரியால் “ஸ்ரீ மகாவிஷ்ணு கடற் தொழில் கூட்டுறவுச் சங்கம்” என்னும் பெயர் மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சங்கம் வளர்ச்சியடைந்து அங்கத்துவர்களுக்கு கடன் வசதி, வலை, கம்பு, வள்ளம் போன்ற உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்தது. இதனைக் கண்ட ஏனையோரும் அங்கத்துவர்களாகச் சேரத் தொடங்கினர். கடற்கரை வீதி வரலாறு http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-82fe14590a826d1ffd3367bd27cbf8ce-V-1024x768.jpg கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடற்கரை மைதானத்தில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு வே.குமாரசாமி அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கோவிலாக்கண்டி சந்தியில் இருந்து கடற்கரை வரையான பாதை மோட்டார் வாகனமன்றி துவிச்சக்கர வண்டி கூட செல்ல முடியாதளவு பெரும் மண் தரையாக இருந்தபடியால் பாராளுமன்ற உறுப்பினர் தமது மோட்டார் வாகனத்தை திரு.வே.சிவசுப்பிரமணியம் ஆசிரியரது வீட்டில் நிறுத்தி விட்டு கூட்டம் கூடும் இடத்திற்கு நடந்தே வந்தார். மக்களும் மேளதாளத்தோடு மாலை அணிவித்து மிகவும் மரியாதையாக அழைத்து வந்தனர். அன்றைய தினம் தனது பேச்சின் போது, தான் இவ்விடத்திற்கு மோட்டார் வாகனத்தில் வரமுடியாது நடந்தே வரவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அடுத்த முறை இவ்விடத்திற்கு வருவதாயிருந்தால் தனது மோட்டார் வாகனத்திலேயே இவ்விடம் வந்து இறங்குவேன் எனக் கூறினார். அவர் அப்பொழுது பாராளுமன்றத்தில் செல்வாக்குள்ளவராகவும் இருந்தபடியால் குறுகிய காலத்தில் வீதிக்கு ரூபா 10000/= ஒதுக்கப்பட்டது. அப்போது சதத்தில் பணப் புழக்கம். இப்போது இத் தொகை பத்துக் கோடிக்குச் சமனாகும். இவ் வீதியை புனரமைக்க காரைநகைரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அவரும் விரைவில் வீதியைச் சீரமைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் தாம் கூறியவாறு மோட்டார் வாகனத்தில் வந்திறங்கினார். இவ் வீதி சீரமைக்கப்பட்டதால் கிராமமும் மக்களும் பெரிதும் அபிவிருத்தியடைந்ததோடு பெற்றவராயினர். பல நன்மைகளும் கிடைக்கப் பெற்றவராயினர். இவ்வேளை இக் கிராமத்து மக்களை ஒன்று படுத்துவதில் திரு.க.சதாசிவமும் திரு.வே.பொன்னம்பலமும் பெரிதும் முயற்சியெடுத்தனர். ஓரளவு வெற்றியும் நிறைவும் பெற்றனர். பாடசாலை ஆரம்பம் http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-547be8c8a2b2a2719b390d5a38935af7-V-1024x768.jpg இக்கிராமத்துப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை யா/கோவிலாக்கண்டி மகாலக்குமி வித்தியாசாலையில் கற்று வந்தனர். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அப்பாடசாலையிற் கற்றவர்கள் அதனோடு தமது கற்றலையும்,சிலர்நாலாந்தரத்தோடும் நிறுத்தியுள்ளனர். இதற்கு அவர்களது போக்குவரத்து வசதியீனமும் வறுமையும் காரணமாக அமைந்துள்ளது. இக்காலத்தில் நான் க.பொ.சா/தரப்(SLC) பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.உ/ தரம்(HSC) சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்று வந்த வேளையில் திரு.ந.இளையப்பா ஆசிரியர் அவர்களைச் சந்தித்த வேளையில், இக் கிராமத்துப் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்காமல் நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு என ஒரு பாடசாலையை எமது கிராமத்திலே ஆரம்பித்தால் அவர்கள் தொடர்ந்து கற்கச் சந்தர்ப்பம் உண்டாகுமென, ஆண்டவன் அருளால் உதித்த எனது எண்ணக் கருத்தினை வெளிப்படுத்தினேன். அதற்கு அந்த நல்ல உள்ளம் கொண்ட பெரியவரும் தானும் வேண்டிய உதவி செய்வதாகவும் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் கூறினார். அப்போதுள்ள சமூக, சமுதாய சூழ்நிலை இக் கைக்காரியத்துக்கு கடும் எதிர்ப்பும், பகையும் கிடைக்கும் என்றுணர்ந்தும் நல்லதொரு காரியத்துக்கு ஆண்டவன் பக்க பலமாக துணைநிற்பான் என்ற அசையாத துணிச்சலோடும், நம்பிக்கையோடும் பாடசாலை ஆரம்பிக்கத் தொடங்கினேன். பாடசாலை நடாத்துவதற்கு ஒரு இடம், கட்டிடம் தேவைப்பட்டது. அப்பொழுது கடற்றொழிளாருக்கென கட்டிடம் ஒன்று புதிதாகக் கட்டப் பெற்ற நிலையில் இருந்தது. அதனை சங்க நிர்வாகிகளுடன் கதைத்துப் பெற்றுள்ளேன். http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-abb94b57b9b315ebebc1be460740077b-V-1024x768.jpg 1960 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 30.09.60 நவராத்திரி காலத்தின் விஜயதசமியன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.ந.நவரத்தினம் அவர்களைக் கொண்டு திறப்பதற்கு தீர்மானித்த வேளை அவர் அவசியம் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் துணைவியார் திருமதி இரகுபதி நவரத்தினம் அவர்களை அனுப்பியிருந்தார். அந்த அம்மையாரும் சமூகம் கொடுத்து அன்றைய தினம் பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலை இக் கிராமத்தில் தொடக்கி வைக்கப் பெற்றதால் பிரிந்து நின்றவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகவும் பழைய பகைமைகளை மறந்து சந்தோஷமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-af643c86c2e2a5543eb771f051ad3e1f-V-1024x768.jpg பாடசாலையை அரசு பொறுப்பேற்பதாக இருந்தால் நிரந்தரக் காணி, நிரந்தரக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்காக இப்போது பாடசாலை அமைந்துள்ள காணியை உரியவர்களான திரு.மு.கனகர், திரு.ம.ஆறுமுகம், திருமதி ம.சின்னாச்சி என்போரிடம் இருந்து பெருமுயற்சி எடுத்து சம்மதம் பெறப்பட்டது. உடனே நொத்தரிசுக்கு கிளாக்கராக இருந்த திரு.வ.செல்லத்துரை என்பவரைக் கொண்டு உறுதி எழுதப்பட்டது. இனி நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும். அதற்குரிய கல், சீமெந்து பாடசாலைக் காணிக்கு கொண்டு வர முடியாத நிலை. அந்தளவுக்கு புழுதி மணல் நிரம்பிய பாதை. திரு.சு.கந்தையா என்பவர் தனது மெசினில் கொண்டு வரும் கல், சீமெந்தை தற்போது ஆலடி அம்மன் கோயிலாகவிருக்கும் இடத்தில் பறித்துவிட்டுப் போய் விடுவார். அப்போது எம்மிடம் வண்டில் மாடு இருந்தமையால் மாடுகள் இழுக்கக்கூடிய அளவு கல், சீமெந்தை ஏற்றி பாடசாலைக் காணிக்கு கொண்டு வந்து சேர்த்தேன். ஏனைய உதவிகள் பெற்றோராலும் கிடைக்கப் பெற்று கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றது. கிணற்றினைத் திரு.வியாழரத்தினமும் அவரது மகன் தியாகராசா உடன் நானும் சேர்ந்து வெட்டினோம். மேசன் திரு.வ.சிதம்பரநாதனுக்கு நான் உதவியாளராக இருந்து கிணறு கட்டி முடிக்கப்பட்டது. http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-0bcda21163caa7269020a3c7f0513981-V-1024x768.jpg அப்பொழுது இப் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியரான திருமதி அ.இளையப்பா அவர்கள் தலைமை ஆசிரியராகவும், திரு.வே.இராமர், செல்வி.வி.சிவபாக்கியம், செல்வி.சி.இராசேஸ்வரி பின்பு செல்வி.சி.சின்னக்குட்டி ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் கடமையாற்றினர். வகுப்புகள் தரம் | தொடக்கம் தரம் V வரையுமே நடைபெற்றன. அரசு பொறுப்பேற்றல் அப்போதுள்ள கல்விச் சட்டத்தின்படி பாடசாலை ஆரம்பித்து சில மாதங்களில் பொறுப்பேற்க வேண்டிய நிலையிருந்தும் எதிர்ப்புகள் காரணமாக காலதாமதமாகியது. அப்போது மத்துகம் தொகுதி பா.உறுப்பினராக இருந்த திரு. பங்குவில என்பவரை இங்குள்ள அவரது நண்பர் பாடசாலை விடயமாகக் கதைத்ததனால் அவர் பாராளுமன்றத்தில் எமது பாடசாலையின் விபரம், நிலைமையை எடுத்துக் கூறியதால் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.வை.துடாவையின் உத்தரவின் பேரில் யாழ் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய கல்வியதிகாரி திரு.எஸ். முத்துலிங்கம் அவர்கள் 1963 ஆம் ஆண்டு தை மாதம் 30ந் திகதி பாடசாலைக்கு சமூகம் கொடுத்து அரசாங்க பாடசாலையாகப் பதிவு செய்து பொறுப்பேற்றதை சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார். இவ் வைபவம் இக்கிராமத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும். http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-46b5c886e31377d1d9380dbd01ceca47-V-768x1024.jpg இதனைத் தொடர்ந்து பாடசாலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1964ஆம் ஆண்டு திரு. V.S.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதிலிருந்து அந்த வருடமே கிராமசபை அங்கத்தவர் திரு.வே.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதும், பரீட்சைகளில் மாணவர் திறமை காட்டி கல்வியில் முன்னேற்றமடைந்ததும், பெற்றார் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதும் மறக்க முடியாதவையாகும். 1965, 1966 ஆகிய இரு வருடங்கள் ஆசிரிய பயிற்சி பெற்று 1967 ஆம் ஆண்டு தொடக்கம் க/புசல்லாவை சரஸ்வதி ம.வியில் 6 வருடங்கள் கடைமையாற்றி விட்டு இப் பாடசாலைக்கு மாற்றம் பெற்று வந்த பொழுது ஆண்டு 9 வரையும் உள்ள பாடசாலையில் ஆண்டு 5 வரையும் இருப்பதைக் கண்டு அதிபர் திரு.வே.நாகராசாவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு அதிபர் தரம் கிடைத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ம/கள்ளியடி அ.த.க பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். ஒன்பது வருடங்கள் அம்மாவட்டத்தின் பாடசாலைகளில் கடமையாற்றி விட்டு 1984ஆம் ஆண்டு யா/ கைதடி முத்துக்குமாரசாமி ம.வி.க்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது யா/கல்வித் திணைக்களத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திரு.கு.சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது பதில் அதிபராக கடமையாற்றிய செல்வி இ.வசந்தாதேவி பாடசாலைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-3bbddd51d27e7f984a43f564cee82193-V-768x1024.jpg 1984ம் ஆம் ஆண்டு பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நான் 5ம் வகுப்புக்கு மேல் வகுப்புகள் வைப்பதற்கு முயற்சி எடுத்தேன். கொத்தணி முறையில் நிர்வாகம் இயங்கிய காலம் கைதடிக் கொத்தணி அதிபர் திரு.சோ.கணேசலிங்கம் தலைமையில் நடந்த அதிபர்கள் கூட்டத்துக்கு கல்விப் பணிப்பாளர் திரு. மன்சூர் அவர்களும் சமூகம் கொடுத்திருந்தார். அவரிடம் இப்பாடசாலையில் 6ம் வகுப்பு வைக்க வேண்டிய தேவைகளை எடுத்துக் கூறியதோடு அது பற்றிய கடிதமும் கொடுத்துள்ளேன். கொத்தணி அதிபர், ஏனைய அதிபர்கள் யாவரும் ஒத்துழைப்பு நல்கியதால் கல்விப் பணிப்பாளர் உடனடியாக 6ம் வகுப்பு வைப்பதற்கு அனுமதி தந்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்க சந்தர்ப்பம் உண்டானது. 9ம் வகுப்பு வைப்பதற்குக் கல்வி அமைச்சிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அதற்கு இங்குள்ள கல்வித் திணைக்கள அதிகாரிகள் சிபார்சு செய்ய வேண்டும். நானும் பலமுறை வேண்டுதல் செய்தும் அவர்களும் ஏதோ காரணங்களைக் கூறி சிபார்சு செய்வதைப் பின் போட்டுக் கொண்டு வந்தார்கள். இந்தநிலையில் திருமதிபுஸ்பாகணேசலிங்கம் அவர்கள் சாவகச்சேரி கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்கள் மேல் வகுப்பு படிப்பதற்குப் படும் கஷ்டங்களையும், போக்குவரத்து வசதியின்மையையும், வறுமை நிலையையும் எடுத்துக் கூறியதன் பேரில் இதனை நன்குணர்ந்து 9ஆம் வகுப்பு வைப்பதற்கு சிபார்சு செய்தமையை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் வைக்கப் பெற்று 1996ஆம் ஆண்டு க.பொ.சா/தரப் பரீட்சை எழுத வேண்டியிருந்த பொழுது பொல்லாத காலமாக நாட்டில் யுத்தம் மூண்டது. இக் கால இடைவெளிக்குள் மாணவர்கள் கல்வியில் அதீத முன்னேற்றம் கண்டனர். கல்வி அதிகாரிகளின் பாராட்டுதலையும் நன்மதிப்பையும் பெற்றனர். இப்பாடசாலையில் பன்னிரண்டு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் என்னோடு ஒத்துழைத்துக் கடமையாற்றிய ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி, அர்ப்பணிப்பான சேவை, ஆக்கபூர்வமாக கல்விப்பணி, மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றம் காணச் செய்தமையோடு பாடசாலைக்குப் பெரும் புகழையும் பெருமதிப்பையும் தேடித் தந்தன. இதனால் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நல்ல அதிபர் தெரிவில் மாவட்ட மட்டத்தில் நல்ல அதிபராகத் தெரிவுத் தெரிவு செய்யப் பெற்று கல்விப்பணிப்பாளர் திரு.இ.சுந்தரலிங்கம் அவர்களால் பாராட்டப்பெற்றுச் சான்றிதழும் பெற்றுள்ளேன். இந்தப் பெருமை எனக்கு கிடைக்கச் செய்தமை இக்காலத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களையே சாரும் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்கால இடைவெளி எல்லைக்குள் பாடசாலை அபிவிருத்தியோடு கிராமத்தின் அபிவிருத்தியிலும் பங்கு பெறும் வாய்ப்பு உண்டானது. தலைமையாசிரியர் திரு.V.S.கந்தையா அவர்களது பெரும் பங்களிப்புடன் கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இச் சங்கத்தின் மூலம் பாடசாலை வீதி, பாடசாலை கடற்கரை வீதி, புதிய கிணறு கட்டியது, ஒழுங்கைகள் திருத்தம் போன்ற பணிகள் செய்யப் பெற்றன. உணவு இக் கிராமத்து மக்கள் சங்கக் கடையிலேயே அத்தியாவசியமான அரிசி,மா,சீனிபருப்பு போன்றவற்றைகூப்பன் முறையில் பெற்றனர். இச் சங்கக்கடை கைதடி நாவற்குழி வடக்கிலுள்ள முருக மூர்த்தி கோயிலுக்கருகில் அமைந்துள்ளது. இம் மக்கள் பெரும் வயல் வெளியைத் தாண்டியே நடந்து சென்று பொருள்களைப் பெற்று வந்தனர். மாரி, மழை காலங்களில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால் ஒரு பகுதியினர் கைதடி நாவற்குழி (வடக்கு) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும், ஒரு பகுதி மக்கள் கோவிலாக்கண்டி மத்தி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் கூப்பன் பொருட்களைப் பெற்று வந்தனர். நாளடையில் இவ்விரு சங்கத்தினரும் இக் கிராமத்திலேயே இரு கிளைகளை நிறுவி திரு.சி.சங்கரப்பிள்ளை ஒரு கிளைக்கு மனேஜராகவும், திரு.க.கனகரத்தினம் என்பவரை ஒரு கிளையின் மனேஜராகவும் நியமித்து பொருட்களை விநியோகித்து வந்தனர். இந்த இழிநிலையைப் போக்கும் முகமாக நாம் எமது கிராமத்துக்கென பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை நிறுவ முயற்சி எடுத்தோம். அப்போது உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு.க.சிவப்பிரகாசம் என்பவரும் அரியாலையைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் திரு.க.பொன்னுத்துரை என்பவரும் பெரும் உதவி செய்தனர். கூட்டுறவுப் பரிசோதகருக்கு அவர் வேண்டுதலின் பேரில் இம் மக்களின் தொகை விபரங்களை வேலையாள், சாதாரணம், பிள்ளை, குழந்தை என்ற வகையில் வகைப்படுத்தியும் மேலும் வேண்டிய விபரங்களையும் வழங்கி உதவினேன். அப் பெரியவர்களது முயற்சியினால் இப் பகுதிக்கு கைதடி நாவற்குழி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என தனியாக சங்கம் உருவானது. இதற்கும் கடைசி நேரத்திற் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவற்றை எழுத நான் விரும்பவில்லை. தென்மராட்சி மேற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சமாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு திரு.க.ஐயாத்துரை என்பவரது வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப் பெற்றது. திரு.க.கனகரத்தினம் மனேஜராகக் கடமையாற்றினார். திரு.வே.பொன்னம்பலம் அடிக்கடி கண்காணித்து சங்க வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதால் ஓரிரு வருடங்களில் சங்கம் பெரும் இலாபத்தை ஈட்டியது. அந்த இலாபப் பணத்தைக் கொண்டே புதிதாகக் கட்டிடம் கட்டப் பெற்றுள்ளது. அதுவே இப்போதுள்ள சங்கக் கட்டிடமாகும். உடை கைதடி நாவற்குழி தெற்கு கி.அ.சங்கத்தின் தலைவராக இருந்த நானும் செயலாளரான திரு.ஆ.கந்தையாவும் கிராம அபிவிருத்திச் சிறு கைத்தொழிற் திணைக்களத்தினருடனும் தொடர்பு கொண்டபடியால் மீசாலையிலிருந்து ஒரு தையற் பயிற்சி ஆசிரியர் இங்கு வந்து தையல் பயிற்சி வகுப்புகளை பயிற்றுவித்தார். புதிய வடிவில் சட்டைகளை அமைக்கவும், விதம் விதமாக றேந்தைகள் பின்னவும், அழகான வகை வகையான தையற் பயற்சிகளையும் நடாத்தினார். இப் பயிற்சியால் பெண்களும் குறிப்பாக இளம் யுவதிகளும் நன்மையடைந்தனர். கண்காட்சியும் நடாத்தப்பட்டது. வைத்தியம் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகா விஷ்ணு க.தொ.கூ. சங்கம் அதன் நிர்வாகத் திறமையால் இலங்கையில் முதற் தரமான சங்கமாகக் கணிக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது கடற்றொழிற் திணைக்களப் பணிப்பாளர் திரு.பீற்றர் அவர்கள் இங்கு சமூகம் கொடுத்து விருந்துபசாரத்தில் பங்கு பற்றிய பொழுது இங்கு வைத்தியத் தேவையை எடுத்துக் கூறிய பொழுது தான் கொழும்பு சென்று சுகாதாரப் பகுதியினருடன் கதைத்து ஒழுங்குபடுத்துவதாகக் கூறினார். சில மாதங்களின் பின் கைதடி வைத்தியசாலையிருந்து வைத்தியரும், உதவியாளரும் வார நாட்களில் இரண்டு நாட்கள் சமூகம் கொடுத்து வைத்திய சேவை ஆற்றினர். சிலரது வேண்டுகோளினால் ஏனைய கிராம மக்களும் பயன் பெறும் பொருட்டு ஆசிரியை திருமதி இராசம்மா வீட்டுக்கு மாற்றினர். பின்னர் மறவன்புலோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது எந்த இடத்திலும் வைத்திய வசதி இல்லை. மின்சாரம் http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-3388508632a22d8bf821c1830fa81fd8-V-1024x768.jpg நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள், பாடசாலை, கோயில்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றி கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது, அப்போதைய யாழ் மாவட்ட அமைச்சருக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றிக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து எனது விடயம் கவனத்தில் எடுக்கப்படும் எனப் பதிற் கடிதம் கிடைத்தது. சாவகச்சேரிப் பிரதேச உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.சுந்தரம்பிள்ளை அவர்களுடன் மின்சாரத்தின் தேவை பற்றிக் கதைத்த பொழுது அப்பிரதேசம் நீண்ட வயல் வெளிப்பிரதேசம், அதிக பணம் தேவைப்படும், ஆசிய பவுண்டேசனுக்கு தெரியப்படுத்துகின்றேன், கிடைத்தால் உங்கள் அதிஷ்டம் எனக் கூறினார். சில மாதங்களின் பின் எமது பகுதிக்கு மின்சாரம் வழங்க அனுமதி கிடைத்ததாகவும், அது கோவிலாக்கண்டி பகுதிக்குப் போக இருப்பதாகவும் தகவல் அறிந்தோம். உடனடியாக மாவட்ட அமைச்சரது கடிதத்துடன் நான் தனஞ்செயன் என்பவருடன் அரசாங்க அதிபரைச் சந்தித்து கடிதத்தையும் காட்டி இது எமது பகுதிக்கே வரவேண்டியது என்றும், உதவி அரசாங்க அதிபருடன் கதைத்த விடயத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சுன்னாகத்தில் உள்ள மின்சாரசபை அதிகாரிகளைச் சந்திக்கச் சொன்னார். உடனே சுன்னாகம் சென்று மின்சாரசபை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினேன். அவர்களும் நாளை மின்சாரக் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் வரும். கைதடிச் சந்தியிலிருந்து வாகனத்தை மறித்து அவர்களுக்கு இடத்தைக் காட்டும்படியும் கூறினார்கள். அடுத்த நாட் காலை கைதடிச் சந்தியிற் காத்திருந்த வேளை மின்சாரம் பொருத்துவதற்கான வாகனம் தூண்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அதனை மறித்து வாகனத்தில் ஏறி இடத்தைக் காட்டினேன். கடற்கரையிலிருந்து தூண்கள் பறிக்கப்பட்டு விரைவில் வேலைகளைத் தொடங்கினார்கள். முதலாவது தூண் தற்போது வயலோரம் அம்மன் கோயில் செல்லும் வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி நாட்டப்பட்டது. திரு.க.ஆறுமுகம் இந்த இறைபணியைச் செய்தார். விரைவாக மின்சார வேலைகள் செய்து முடிக்கப் பெற்றது. மக்களும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி கொண்டாடினர். இதுவே மின்சாரம் கிடைத்த வரலாறு. இதனைத் தொடர்ந்து கிராம அபிவிருத்திக்குப் பல வேலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இவ்வாறன பணிகள் தொடங்கவும் நிறைவேறவும் ஏதே ஒரு மாபெரும் சக்தி துணை நின்றதை உணர்கின்றேன். வாழ்க்கை முறைகளும் வழிபாடுகளும் http://raamu.vaathiyaar.blog/wp-content/uploads/2024/01/IMG-2b97176e0062cc4e12372e46c9cab5ed-V-768x1024.jpg ஆரம்ப காலம் இம் மக்கள் கூட்டுறவு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தனர். ஒரே காணிக்குள் பல வீடுகளைக் கட்டியும் ஒரே வீட்டில் சில குடும்பங்களுடனும் வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையும் உதவியும் புரிந்தும் உணவு வகைகளைப் பங்கிட்டுக் கொடுத்தும் சந்தோசமாக வாழ்ந்து வரலாயினர். பனை ஓலையாலும், கிடுகுகளாலும் வேயப் பெற்றதும், கிடுகுகளால் மறைப்புத் தட்டிகள் அமைத்தும், மண் தரையுமாக வீடுகள் அமைந்துள்ளன. வேலிகளை கிடுகளாலும், அலம்பல் எனும் தடிகளாலும், மட்டை வரிந்தும் மறைப்புச் செய்தனர். தற்போது மாற்றமடைந்து கல்வீடுகளாகவும் மதில் சுவர்களாகவும் மாறியுள்ளன. கிராமத்தில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் சகலரும் பங்கு பற்றியும் சில நாட்கள் அவ் வீட்டிலேயே தங்கி நின்று உதவி செய்தும் தமதன்பை வெளிப்படுத்தினர். ஆதிகாலம் தொட்டு இவர்களது வழிபாட்டுத் தலங்களாக பெரும்படை அம்மன் கோயில், மகாவிஷ்ணு ஆலயம், வைரவர், வீதிகளில் சிறு கட்டிடங்களில் அமைந்த அம்மன் ஆலயங்கள் என அமைந்துள்ளன. இரண்டாகப் பிரிந்து நின்றவர்கள் தற்போது சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது மகிழ்ச்சியைத் தருவதோடு ஒற்றுமையையும் வளர்ப்பது ஆண்டவன் அருளாகும். இத்தோடு முன்பள்ளி பாடசாலை, அறநெறிப் பாடசாலையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமத்தின் வளர்ச்சியில் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகாவிஷ்ணுக.தொ.கூசங்கம், ஸ்ரீ மகாவிஷ்ணு சனசமூக நிலையம், ஸ்ரீ மகாவிஷ்ணு விளையாட்டுக்கழகம் போன்றவை அரும் சேவையாற்றி வருகின்றன. இன்னும் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இக்கிராமம் மேன்மேலும் சிறப்புறவும் அபிவிருத்தியடையவும் இக்கிராம மக்கள் உறுதுணையாக இருப்பதோடு குறிப்பாக அறிவுசால் பெரியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் அனைவரும் ஒத்துழைத்தும் நல்சேவையும் ஆற்றி கிராமத்தைச் செழிப்புறச் செய்வார்களாகுக. வே.இராமர் ஓய்வு நிலை அதிபர் https://raamu.vaathiyaar.blog/ emathu_kiramam-ebook_download.pdf

நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட நாடு - இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

2 months ago
பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, கயானாவில் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லியாண்ட்ரோ ப்ரேஸரஸ் பதவி, பிபிசி செய்தி பிரேசில் 28 நிமிடங்களுக்கு முன்னர் சகோதரர்கள் ஷிவ் மற்றும் ஹேமந்த் 1982இல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கயானாவை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்ற போது அவர்களது வயது 19 மற்றும் 16. ஒரு நல்ல வாழ்க்கைக்காக ஆயிரக்கணக்கான கயானா இளைஞர்கள் என்ன செய்தார்களோ அதையே அவர்களும் அப்போது செய்தனர். வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். வருமானத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறையில் வேலை செய்தார்கள். 39 ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல், அவர்கள் கயானா திரும்ப முடிவெடுத்தனர். சமீப காலங்களில் பெட்ரோலியம் மூலம் கிடைத்த வருமானத்தால் கயானாவின் பொருளாதாரம் உயர்ந்தது. இதனால் நாட்டை விட்டு வெளியேறிய சகோதரர்களின் மனம் மாறியது. அவர்கள் கயானா நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் அதிக மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதிலும் வாடகைக்கு விடுவதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கினர். ஷிவ் மற்றும் ஹேமந்த் கயானாவில் புதிதாக உருவாகியுள்ள நடுத்தர வர்க்கத்தின் இரண்டு முக்கிய பிரதிநிதிகள். இந்த புதிய நடுத்தர வர்க்கம் என்பது கயானா நாட்டில் கச்சா எண்ணெய் ஆய்வு தொடங்கியதிலிருந்து மீண்டும் நாட்டிற்கு திரும்பிய மக்களே. 2019 முதல், இந்த கச்சா எண்ணெய் ஆய்வின் காரணமாக உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது, முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கயானா. பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, ஷிவ் மிசிர், தனது 19வது வயதில் கயானாவை விட்டுச் சென்றார். வரலாறு காணாத பொருளாதார ஏற்றம் கயானா என்பது தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில், சூரினாம் மற்றும் வெனிசுலா இடையே அமைந்துள்ள ஒரு நாடு. வெறும் 8,00,000க்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது கயானா. ஆரம்பத்தில் கரும்பு உற்பத்திக்காக டச்சு காலனியாக உருவாக்கப்பட்டது. 1966 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து கயானாவிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 2015ஆம் ஆண்டில், அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் (Exxon Mobil), நாட்டின் கடற்கரையோரம் பொருளாதார ரீதியாக லாபமளிக்கக் கூடிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், எக்ஸான் மொபில், அமெரிக்கன் ஹெஸ் கார்பரேஷன் மற்றும் சீன சிஎன்ஓஓசி நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு கயானீஸ் கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் எண்ணெய் கிணறுகளைத் தோண்டியது. தோராயமாக 1,100 கோடி பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் இருப்பு இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்திய மதிப்பீடுகள் இந்த அளவு 1,700 கோடி பீப்பாய்கள் அளவை எட்டும் என்று கூறுகின்றன. இது 1,400 கோடி பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்ட பிரேசிலின் மொத்த எண்ணெய் இருப்பையும் விட அதிகமாக இருக்கும். 2019 வரை, கயானா மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் விவசாயம், தங்கம் மற்றும் வைரச் சுரங்கம் மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றைச் சார்ந்து இருந்தது. அந்த ஆண்டு முதல், எண்ணெய் வருவாய் கயானா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில், பிரேசிலின் அப்போதைய பொருளாதார அமைச்சர் பாலோ குடெஸ், கயானா நாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நகரங்களில் ஒன்றான துபாயோடு ஒப்பிட்டார். எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் செல்வத்தின் அடையாளமாக திகழ்கிறது துபாய். "கயானா, நமது பிராந்தியத்தின் புதிய துபாய்" என குடெஸ் கூறினார். கச்சா எண்ணெய் இருப்பு குறித்த அளவீடுகள் உண்மையில் உலகின் கவனத்தை ஈர்க்கின்றன. நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீபத்திய ஆண்டுகளில், கயானாவின் பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. 2019 மற்றும் 2023க்கு இடையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.17 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து சுமார் 3 மடங்காக அதாவது 14.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. அதாவது 184% அதிகரித்துள்ளது ஜிடிபி. 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 62% ஆக இருந்தது. அதேபோல், தனிநபர் வருமானம் (நாட்டின் செல்வத்தை குடிமக்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது) 2019இல் 6,477 அமெரிக்க டாலரில் இருந்து 2022இல் 18,199 அமெரிக்க டாலராக உயர்ந்தது. ஒப்பீட்டளவில், அந்த எண்ணிக்கை பிரேசிலின் 2022 தனிநபர் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் மற்றும் குவாத்தமாலாவை விட மூன்று மடங்கு அதிகமாகும். “நாட்டிற்கே லாட்டரி அடித்தது போல உள்ளது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது. நாட்டின் வளர்ச்சி குறித்து மக்களிடம் அதிக நம்பிக்கை தெரிகிறது” என்று கயானா மற்றும் சூரினாமுக்கான உலக வங்கியின் பிரதிநிதி டிலெட்டா டோரெட்டி பிபிசி பிரேசிலிடம் கூறினார். எண்ணெய் உற்பத்தியின் விளைவாக, நாட்டின் பொருளாதாரத்தின் பிற துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் படி, 2022இல் எண்ணெய் துறையைத் தவிர்த்து ஜிடிபி வளர்ச்சி 11.5% ஆகும். தலைநகர் ஜார்ஜ்டவுன் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இதன் விளைவுகள் தெரிகிறது. புதிய மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களிலும், அமெரிக்கன் மேரியட் மற்றும் பெஸ்ட் வெஸ்டர்ன் போன்ற சர்வதேச சொகுசு ஹோட்டல்களை நிர்மாணிப்பதிலும் கிரேன்கள் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக வேலை செய்வதைக் காணலாம். புதிய நெடுஞ்சாலைகளில் டஜன்கணக்கில் புதிதாக கட்டப்பட்ட கிடங்குகள் காணப்படுகின்றன. நாட்டின் கட்டுமானத் தளங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக டிராக்டர்கள், எஸ்கவேட்டர்கள் மற்றும் பிற கனரக கட்டுமான உபகரணங்களால் இந்த கிடங்குகள் நிரப்பப்பட்ட உள்ளன. பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, ஜார்ஜ்டவுனில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் என்ற அமெரிக்க நட்சத்திர ஹோட்டலை சீன நிறுவனம் ஒன்று கட்டி வருகிறது. புதிய நடுத்தர வர்க்கம் இந்த பொருளாதார ஏற்றத்தால்தான் சகோதரர்களான ஷிவ் மற்றும் ஹேமந்த் தற்காலிகமாக கயானாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர். 2021 முதல், அவர்கள் இருவரும் தங்கள் புதிய வணிகத்தை கவனித்து கொள்வதற்காக டொராண்டோ (கனடா) மற்றும் ஜார்ஜ்டவுன் இடையே அடிக்கடி பயணம் செய்கிறார்கள். எண்ணெய் மூலம் கிடைக்கும் பணம் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கும், நாட்டின் தற்போதைய பணக்கார வர்க்கத்திற்கும் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். “மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பொருளாதார ரீதியில் பயன் தரக்கூடிய ஒரு அமைப்பின் பகுதியாக தாங்கள் இருப்பதாக உணர்கிறார்கள்” என்கிறார் ஷிவ். மேலும், "கயானாவில் ரியல் எஸ்டேட்டில் அல்லது எண்ணெய் தொழில் விநியோகச் சங்கிலியில் பணிபுரியும் பல பணக்காரர்கள் உள்ளனர்." அமெரிக்காவிலோ கனடாவிலோ வசித்துக் கொண்டு, எண்ணெய் வளத்தால் ஆதாயம் பெறும் நம்பிக்கையில் கயானாவில் சொத்து அல்லது நிலத்தில் முதலீடு செய்யும் மற்ற கயானிகளை தனக்குத் தெரியும் என்கிறார் ஷிவ் மிசிர். அவர்கள் கயானாவிற்கு வந்ததும், தானாகவே புதிய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள். "நாட்டிற்கு திரும்பி வரும் பல கயானிகள் உள்ளனர். அவர்கள் உயர் சமூகங்களில், தனியார் பாதுகாப்புடன் கூடிய நவீன வீடுகளில், முன்பு இருந்த அனைத்து வசதிகளுடன் வாழ முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தவர்கள்." என்கிறார் ஷிவ். அதிக பொருள் வாங்கும் திறன் கொண்ட வாடிக்கையாளர்களுடன் பழகியுள்ள ஷிவ், நாட்டின் பணக்கார வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இன்னும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.அதனால் தான் நாட்டில் இப்போதும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இல்லை என்று கருத்துத் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எண்ணெய் வளம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றம் மற்ற துறைகளையும் உயர்த்தியுள்ளது. துடிப்பான சந்தை டச்சு மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட போதிலும், கரீபியனில் உள்ள அதன் அண்டை நாடுகளைப் போலவே, அமெரிக்காவுடன் நெருங்கிய வணிக மற்றும் கலாச்சார உறவுகளைப் பேணுகிறது கயானா. வெறும் நான்கு மணி நேர விமான பயணத்தில் அமெரிக்காவை அடையலாம். ஷிவ் கூற்றுப்படி, கயானிய பணக்கார வர்க்கத்தின் பெரும் பகுதியினர் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா, கனடா அல்லது ஐரோப்பாவிற்கு படிக்க அனுப்புகிறார்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை சந்திக்கச் செல்லும்போது இந்த நாடுகளை சுற்றிப் பார்க்கவும் வாழ்க்கை முறையை அனுபவிக்கவும் செய்கிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, நாட்டின் உயரடுக்கினரை மையமாகக் கொண்ட வணிகங்களைத் திறப்பதை ஊக்குவித்தது என்று தொழிலதிபர் ஷிவ் மிசிர் உறுதிப்படுத்துகிறார். "எடுத்துக்காட்டாக, எங்கள் வணிகம் அவற்றில் ஒன்று" என்கிறார். மிசிர் சகோதரர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூவி டவுன் ஷாப்பிங் சென்டரில் ஒரு சிறிய இடத்தில் செயல்படுகிறது, இது ஜார்ஜ்டவுனில் 2019இல் திறக்கப்பட்டது, அதே ஆண்டில் தான் நாட்டில் கச்சா எண்ணெய்க்கான ஆய்வு தொடங்கியது. ஒரு காலத்தில் நாட்டின் செல்வத்தின் முக்கிய ஆதாரங்களாக விளங்கிய கரும்பு மற்றும் அரிசி பயிரிடப்பட்ட ஜார்ஜ்டவுனின் புறநகர்ப் பகுதிகள், இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்களுக்கு வழிவகுக்கின்றன. கயானா நாடு சந்திக்கும் மாற்றங்களையும், புழக்கத்திற்கு வரும் பணம் எப்படி புதிய பழக்கங்களையும் நிலப்பரப்புகளையும் உருவாக்குகிறது என்பதை இது காட்டுகிறது. புதிதாக உருவான ஷாப்பிங் சென்டர்களில் ஒன்று அமேசானியா மால் ஆகும். இது டெமராரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. நகரின் மையத்திலிருந்து அரை மணி நேர பயணத்தில் இதை அடையலாம். இந்த ஷாப்பிங் சென்டரின் முக்கிய கடைகளில் ஒன்று ஸ்டார்பக்ஸ். ஏப்ரல் 2023இல் திறக்கப்பட்ட இந்த ஷாப்பிங் சென்டர், 200 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 50 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. பிபிசி பிரேசிலிடம் பேசிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம், "நாடே இப்போது 'ஒரு துடிப்பான சந்தையாக இருப்பதால்', இங்கு ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டது" என்று கூறியது. பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, ஒரு காலத்தில் கரும்பு மற்றும் அரிசியை பயிரிட பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்கள் கட்டப்படுகின்றன. பல நாடுகளின் புதிய முதலீடுகள் புதிய எண்ணெய் வளம் கயானாவிற்குள் எவ்வளவு விரைவாக தாக்கம் செலுத்துகிறது என்பதற்கான மற்ற அறிகுறிகளும் உள்ளன. பல தசாப்தங்களாக நாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போது அதற்கான ஒப்பந்தங்களை கோரும் பல நாட்டு நிறுவனங்களை கயானா நாடு ஈர்க்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் வணிக ரீதியான எண்ணெய் ஆய்வு நடத்தப்பட்ட முதல் ஆண்டான 2019ஆம் ஆண்டில், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அரசாங்கம் 187 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2023இல், அந்த எண்ணிக்கை 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, அதாவது 247% அதிகரித்துள்ளது. “கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் இங்கு வசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடு சென்று, திரும்பி வரும்போது வித்தியாசத்தை கவனிக்கிறேன்,” என்கிறார் உலக வங்கியின் அதிகாரி டிலெட்டா டோரெட்டி. “புதிய சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என பல உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு வரும் அதிக எண்ணிக்கையிலான வணிகப் பணிகளும் கவனிக்கத்தக்கவை என்கிறார் அவர். எதிர்பாராத மூலவளங்கள் கிடைப்பதால், உலகளாவிய கட்டுமானத் தளமாக மாறியுள்ளது கயானா நாடு. நிதி ஒப்பந்ததாரர்களுக்கு கடன் வழங்கும் நாடுகளின் பார்வையும் கயானாவின் மீது உள்ளது. "எங்களிடம் ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளன" என்று கயானாவின் பொதுப்பணித் துறை துணை அமைச்சருக்கு இணையான பதவியை வகிக்கும் டியோடாட் இந்தார் பிபிசி பிரேசிலிடம் தெரிவித்தார். சீனா அந்த குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக தோன்றுகிறது. உதாரணமாக, சீன நிறுவனங்களின் கூட்டமைப்பு டெமராரா ஆற்றின் மீது புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டரை வென்றது. இந்த பணிக்கு சீன வங்கி நிதியளித்தது. பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, சீன மற்றும் கயானிய தொழிலாளர்கள் டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டுகின்றனர். இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது, ஏனெனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாலத்தை மாற்றுவது இதன் முக்கிய பணி. ஒரு நாளைக்கு பல முறை கப்பல்கள் இந்த ஆற்றை கடந்து செல்கின்றன. புதிய பாலம் ஒரு தொங்கு அமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கப்பல்கள் கீழே செல்ல அனுமதிக்கும். இந்தத் திட்டத்தின் மதிப்பு 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் பல மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கும் சீன வணிகர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர். ஆனால் சீனாவுக்கு இங்கு போட்டியாளர்கள் உள்ளனர். 2022ஆம் ஆண்டில், நெடுஞ்சாலை அமைப்பதற்கான $106 மில்லியன் டெண்டரை வென்றார் ஒரு இந்திய ஒப்பந்ததாரர். கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு பொது மருத்துவமனையைக் கட்டுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஆஸ்திரியா கடன் வழங்கியுள்ளது. திட்டத்தின் மதிப்பு 161 மில்லியன் அமெரிக்க டாலர்கள். சில நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வருகின்றன. டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டும் சீனக் கூட்டமைப்பு இதைத் தான் செய்கிறது. திட்டப் பணிகள் சீன மற்றும் கயானிய தொழிலாளர்களிடையே பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வெனிசுலாவிற்கும் அந்த நாட்டிற்கும் இடையே எஸ்சிகிபோ பிராந்தியம் தொடர்பாக இருந்த நீண்ட கால பிரச்னை காரணமாக சர்வதேச நாடுகளின் கவனத்திற்குள் வந்தது கயானா. எஸ்சிகிபோ பிராந்தியம், தோராயமாக 1,60,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட பகுதி. இது கயானாவின் 70% நிலப்பரப்பைக் குறிக்கிறது. இது தங்கம், தாமிரம் மற்றும் வைரம் போன்ற கனிமங்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் சமீபத்தில் எண்ணெய் மற்றும் பிற ஹைட்ரோகார்பன் வளங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ்சிகிபோ, கயானாவின் 70% நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பிரதேசம். இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி? கயானாவைச் சேர்ந்த டேவிட் ஹிண்ட்ஸ், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் அவரது சொந்த நாட்டிற்கும் இடையே பயணம் செய்து வருகிறார். அவர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) பேராசிரியராக உள்ளார். கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். கயானா மிகவும் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் வர்க்கப் பிரிவைக் கொண்ட நாடு என்று ஹிண்ட்ஸ் கூறுகிறார். 17 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், நாடு ஐரோப்பியர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டது. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் உழைப்பைப் பயன்படுத்தி சர்க்கரையை உற்பத்தி செய்தனர். 1833இல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பிறகு, கிழக்கு ஆசியாவில் இருந்து, குறிப்பாக இப்போதைய இந்தியா, சீனா மற்றும் போர்த்துகீசிய பிராந்தியத்திலிருந்து கயானாவிற்கு பணியாளர்களை கொண்டுவரத் தொடங்கியது ஐக்கிய இராஜ்ஜியம். அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்கள் தொகையில் 39.8% இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், 30% ஆப்பிரிக்க வம்சாவளியினர், 10.5% பழங்குடியினர் மற்றும் 0.5% பேர் சீன, டச்சு மற்றும் போர்த்துகீசியம் போன்ற பிற பூர்வீகங்களைக் கொண்டவர்கள். அப்போதைய பிரிட்டிஷ் பேரரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், ஆசிய மற்றும் போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த குடியேறியவர்களை நாட்டின் வர்த்தகம் மற்றும் புதிய தொழில்துறைகளில் வேலை செய்ய ஊக்குவித்ததாக ஹிண்ட்ஸ் கூறுகிறார். "இந்தியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களின் சந்ததியினர் கயானாவின் பொருளாதார உயரடுக்கின் ஒரு பகுதியாக உள்ளனர்" என்று அவர் கூறுகிறார். மறுபுறம், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கர்களின் சந்ததியினர், குறைந்த திறன் வேலைகளில் அல்லது பொது சேவையில் வேலை செய்யத் தொடங்கினர் என்று ஹிண்ட்ஸ் விளக்குகிறார். கயானாவின் 'புதிய பணக்காரர்கள்' நாட்டில் குடியேறிய அதே பொருளாதார உயரடுக்கிலிருந்து வந்தவர்கள் என்று பேராசிரியர் உறுதிப்படுத்துகிறார். "பொருளாதார ஏற்றத்தை சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் கயானாவின் உயரடுக்கில் ஏற்கனவே வேரூன்றியவர்கள்" என்கிறார் பேராசிரியர் ஹிண்ட்ஸ். நாட்டில் நிலவும் சமூக சமத்துவமின்மை பற்றி கயானிய அரசாங்கத்திடம் பிபிசி பிரேசில் கேட்டது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 'புதிய துபாய்' தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார். நகரின் மையத்தில், தனது டீலர்ஷிப்பில் நிறுத்தப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட கார்களை தனது பணியாளர்கள் கவனமாக மெருகூட்டுவதை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறுவயதில் இருந்தே கார் மற்றும் தொழில்நுட்பம் மீது ஆர்வம் கொண்டவர். இவர் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்கிறார், பெரும்பாலும் ஜப்பான் போன்ற நாடுகளில் கார்கள் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த கார்களில், கயானா கார்களில் உள்ளது போல், வலது பக்கத்தில் ஸ்டீயரிங் உள்ளது. அவரைப் பொருத்தவரை, எண்ணெய் வளம் மூலம் பொருளாதார மாற்றம் இருந்த போதிலும், நாட்டின் பணக்கார வர்க்கத்தினர் பயன்படுத்தப்பட்ட கார்களை விரும்புகின்றனர். ஏனெனில் புதிய கார்களை இறக்குமதி செய்வதற்கான வரி மிக அதிகமாக உள்ளது. நாட்டில் இன்னும் முறையான திறனுடைய தொழிலாளர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான அணுகல் இல்லை. எனவே புதிய வாகனங்களை இறக்குமதி செய்து, பராமரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஜப்பானிய உற்பத்தியாளர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மேல் இருந்த வாடிக்கையாளர்களின் கவனம் இப்போது பிஎம்டபிள்யூ கார்கள் மேல் சென்றுவிட்டதாகவும், நாட்டில் எண்ணெய் ஆய்வு தொடங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார் சிங். எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையுடன் தொடர்புடைய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு அடிக்கடி வருகிறார்கள். அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாகனங்களைத் இங்கு தேடுகின்றன. "கயானிய உயரடுக்கின் நுகர்வோர் பழக்கங்களை நன்கு அறிந்த சிங், நாட்டில் ஒருவித 'புதிய நடுத்தர வர்க்கம்' உருவாகி வருவதைக் கவனிக்கிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங். "ஆம், ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உள்ளது. அது கயானாவில் உள்ள பழைய நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலே அமர்ந்திருக்கிறது" என்கிறார் சிங். பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார். தொழிலில் வருவாய் அதிகரிப்பு தனது பிடித்தமான ஒன்றைத் தொடர சிங்கை அனுமதிக்கிறது, அது மோட்டார் ஸ்போர்ட்ஸ். கடந்த ஆண்டு மே மாதம், ஃபார்முலா 1 பார்க்க மயாமிக்குச் சென்றார் சிங். ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் அதன் உச்சத்தை எட்டவில்லை என்று தொழிலதிபர் சிங் நம்புகிறார். "நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கயானா (பொருளாதார ரீதியாக) மிகப்பெரிய உயரத்தை அடையும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் சிங். துபாயுடன் கயானாவை ஒப்பிடுவதை நம்பிக்கையான தொனியில் சிங் ஒப்புக்கொள்கிறார். "நான் எப்பொழுதும் துபாய் பற்றிய கதைகளைப் பார்த்திருக்கிறேன். 90களில் நீங்கள் அங்கு சென்றால், அது வெறும் பாலைவனமாக இருந்தது. இப்போது சென்றால் அதை அடையாளம் காண முடியாது, முற்றிலும் மாறிவிட்டது" என்று அவர் கூறுகிறார். "இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் இந்த நாட்டைப் பார்த்து, 'இது கயானா என்று என்னால் நம்ப முடியவில்லை' என்று சொல்வார்கள். அத்தகைய மாற்றம் இங்கேயும் நடக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங். https://www.bbc.com/tamil/articles/cq5x22nq5x8o

யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

2 months ago
சிங்கள அரச தலைமைக்கு தமிழர்கள்தான் முதல் எதிரி ஏனையோர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களைக்கண்டால் வாலைச் சுறுட்டிகொண்டு நிப்பினம். இந்திய ஏகாதிபத்தியம் தான் நினைத்தமாதிரிக் காய்களை நகர்த்துகிறது தமிழர்பகுதியில் அவர்கள் சிங்களத்துகுக்குத் தெரிந்தே எல்ல இடங்களிலும் தங்கள் கரங்களை விரித்து வளைத்துப்பிடித்துள்ளார்கள் இதைப்பற்றி சிங்களம் வாய் திறக்கமுடியாது காரணம் விடுதலைப்புலிகளைப்போல் இன்னுமொரு அமைப்பை நாம் மாலைதீவில் புளொட்டை இறக்கினமாதிரி இறக்கிவிடுவம் எண்டு சொன்னால் பொத்தீருவினம். அடுத்து தெற்கு அங்கு பொருளாதார மீட்சி எனக்கூறிக்கொண்டு அனைத்து இடங்களையும் வளைத்துப்போட்டுக் கபளீகரம் செய்வதை சிங்களவர்கள் கவனிக்க மாட்டார்கள் (தற்போதைக்கு) தவிர போர்க்குற்றம் மனித உரிமை பொறுப்புக்குறல் விடையத்தில் அவர்களுக்கு ஆதரவாக நின்றால் சிங்களவன் மது உண்ட மந்தியாகிவிடுவான். இல்லாதுவிட்டால் நீர்மூழ்கிக்கப்பலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது அடாத்தாக இலங்கைத் துறைமுகத்துக்குள்ள கொண்டுபோவானா? ஒரு இறைமை உள்ள நாட்டின் எல்லைக்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இராணுவத் தளபாடங்களை நகர்த்துவது என்பது எவ்வளவு பாரதூரமான விடையம். நான் ஆரம்பத்தில் நினைத்தேன் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப்பகுதி (முக்கியமாக வடக்கு) தான் இந்தியாவின் ஒருமாநிலமாக மாறிவிட்டது என இப்போது பார்த்தால்தான் தெரியுது இலங்கைத் தீவு முழுவதும் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாகி நீண்ட நாள் ஆகிவிட்டதென. இல்லாதுவிடின் ஜே வி பி யின் அனுரகுமாரவை ஏதோ பஜகவின் தமிழ்நாட்டுப் பிரிவு செயலாளர் அண்ணாமலையை டெல்கிக்குக் கூப்பிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கமுடியுமா. இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்.

இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா

2 months ago
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். கனடாவின் தமிழ் ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்களிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளோம். திட்டமிடப்பட்ட சதி மேலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தமிழினத்தை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை ஐ.நா உட்பட சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்துவோம். அத்துடன், குறித்த வழக்கினை நடாத்துவதற்காக கனடாவின் வெளிவிவகார விடயங்களுக்கான வழக்கறிஞர்களை நாங்கள் வழிநடத்தவுள்ளோம்” என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/canadian-politician-against-sri-lankan-war-crimes-1707838457

டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு

2 months ago
இந்தியாவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்; கண்ணீர்ப் புகை, முள்வேலி, பொலிஸ் தடுப்பு - ஹரியானா எல்லையில் பதற்றம் 13 FEB, 2024 | 03:51 PM புதுடில்லியை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில் ஹரியானா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டு வீசி தடுத்துள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பெப்ரவரி 13-ம் திகதி டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. அதற்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் திங்கட்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (13) காலையில் தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் - ஹரியானா ஹரியானா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய வேண்டும். விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க எல்லைப் பகுதிளில் சிமென்ட் தடுப்புகள் முள்படுக்கை முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியானா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர். . இதனிடையே ஆம் ஆத்மி அரசு விவசாயிகளுடன் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. டெல்லி பவானா மைதானத்தை விவசாயிகளை கைது செய்து அடைப்பதற்கான தற்காலிக சிறையாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவை டெல்லி ஆம் ஆத்மி அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்த மத்திய அரசின் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் "விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு உரிமை வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “விவசாயிகள் நமது நாட்டு மக்களின் பசியாற்றுவோர். அவர்களை கைது செய்யும் நடைமுறை வெந்தப் புண்ணில் உப்பைத் தடவுவதற்குச் சமம். மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாங்களும் ஓர் அங்கமாக இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176286

நுண்கடன் திட்டங்களினால் கிராமப்புறங்களில் 28 இலட்சம் பேர் பாதிப்பு - துறைசார் மேற்பார்வைக் குழு

2 months ago
Published By: VISHNU 13 FEB, 2024 | 06:26 PM நுண்நிதிய கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் சுமார் 28 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 முதல் 48 சதவீதம் என்ற அடிப்படையில் அதிக வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. நுண்கடன் திட்டங்களினால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்கடன் திட்டங்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளது எனப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நுண்நிதிய பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் அண்மையில் கூடிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. நுண்நிதியக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் இந்தக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தன. மேலும், இலங்கை மத்திய வங்கி, நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சமுர்த்தி திணைக்களம், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அமைப்புக்கள் இங்கு உரையாற்றுகையில், நுண்நிதி நெருக்கடியினால் 28 இலட்சம் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 24 இலட்சம் பெண்கள் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டினர். இந்தக் கடன்கள் குறைந்த தொகையாக இருந்தாலும், கிராமப்புற மக்களால் அதனைச் செலுத்த முடியாத நிலையில், 38 முதல் 48 சதவீத வட்டி அறவிடப்படுவதாகவும் இதன் காரணமாகக் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முற்றாக மாறியுள்ளதாகவும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான கிராமப்புறப் பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்வதற்கு நுண்கடன் நெருக்கடி காரணமாக அமைந்திருப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டினர். மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் உள்ள வங்கி அல்லாத ஆறு பிரதான நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பெருந்தொகையான குழுவினராலேயே நுண்நிதித் துறையில் இந்த நெருக்கடி உருவாகியிருப்பதாகவும், நுண்நிதி கடனான 84,000 மில்லியன் ரூபாவில் 67,000 மில்லியன் ரூபாவை இந்நிறுவனங்கள் வழங்கியிருப்பதாகவும், கடன் பெற்றவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்துவதை இந்நிறுவனங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும் இங்குத் தெரியவந்தது. அத்துடன் உத்தேச சட்டமூலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை எனவும் இதனால் தாங்கள் மேலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். உத்தேச சட்டமூலத்தை முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகதுறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன்படி அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தாமல்,மத்திய வங்கியும் நிதியமைச்சும் இணைந்து சட்டமூலத்தை மீளாய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும், ஆறு பரிய நிதி நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் அது இருக்க முடியாது. இதன் ஊடாகப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இலங்கையிலுள்ள 30 முதல் 40 இலட்சம் வரையிலான நுண்நிதி வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இது விடயம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவிருப்பதாகவும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176302

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்

2 months ago
கருணா குழுவால் சுட்டுக் கொல்லப் பட்ட யோசப் எம்.பி போல வாழ வேண்டுமென்று ஒருவர் சொல்கிறார் பெருமாளாவது வைச்சுக் கொண்டு வஞ்சகம் செய்யும் ஆளல்ல, அவரது ஆழம், யோசிப்பு எல்லோரும் அறிந்தது தான்! நீங்களோ அதற்கு சிரிப்புக் குறியும் போட்டு, கீழே இருக்கும் கருத்தை மிகவும் சாதாரணமாக எழுதியிருக்கிறீர்கள். எப்படி முடிகிறது ஒரு அரசியல் படுகொலையை நகைச்சுவையாக்க? பெரியோர், மூத்தோர் என்ற அடையாளத்தைத் தாங்கியிருக்கிறீர்கள், அதற்கேற்ப நிதானித்துக் கருத்தெழுதாமல் இப்படி இருக்கிறீர்கள்??

செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?

2 months ago
இனி திமுகா என்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்குமா என்பதே சந்தேகம்தான் குடும்ப ஆட்ச்சிக்கு எதிராக கட்சிக்காரர்களே வெம்பி கொண்டு இருக்கிறார்கள் 2௦௦க்கு காசுக்கு போனவர்களே புரியாணி அண்டாவை துக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் . வரும் தேர்தலில் அண்ணாமலை பாரிய அறுவடையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் போற போக்கை பார்த்தால் ஸ்டாலின் சிறை செல்வதை தடுக்க முடியாது போல் உள்ளது .

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில்

2 months ago
சுகாதாரத் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு நாளையும் தொடருமாம்! 13 FEB, 2024 | 05:28 PM இன்றையதினம் 72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நாளை புதன்கிழமையும் (12) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. குறித்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176297

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - அழுத்தங்கள் - திருத்தங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம்

2 months ago
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி Published By: RAJEEBAN 13 FEB, 2024 | 05:09 PM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துலகுணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து குறித்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து யோசனைகளை பெற்றுள்ளதாக பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த யோசனைகளை அடிப்படையாகவைத்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான நகல்சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/176299

கருணாவின் ஈச்சையடி பண்ணையில் இரு சடலங்கள் மீட்பு

2 months ago
மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (13.2.2024) இடம்பெற்றுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான் பேரல்லாவெளி பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கருணா அம்மானுக்கு சொந்தமான பண்ணையில் வயல் வேலைக்காக நின்ற இருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர். சின்ன நுரைச்சோலை - குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும், அவரது மருமகனான புலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய நபரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை குறித்த பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://tamilwin.com/article/two-men-killed-in-electric-fence-1707821150

செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?

2 months ago
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிறையில் இருந்தபடி இலாகா இல்லாத அமைச்சராக இருந்துவந்த செந்தில் பாலாஜி தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இப்போது ராஜினாமா செய்தது ஏன்? செந்தில் பாலாஜி கைதான 8 மாதங்கள் கழித்து ராஜினாமா போக்குவரத்துக் கழக பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் அளிக்கப்பட்டது. இருந்த போதும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராகவே அவர் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழிந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமா கடிதம் திங்கட்கிழமையே அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஆளுநர் மாளிகையின் ஒப்புதல் வழங்கப்பட்டு, இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சையில் இருந்த செந்தில் பாலாஜி விவகாரம் கைது செய்யப்பட்ட பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்த விவகாரம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையாகத்தான் இருந்துவந்தது. செந்தில் பாலாஜியின் அமைச்சரவைப் பொறுப்புகள் பிற அமைச்சர்களுக்கு பிரிந்து வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்குப் பிறகு, முதலமைச்சரின் பரிந்துரையின்றி செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஐந்து பக்கக் கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில், "எனது அறிவுரையையும் மீறி அவரை பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உங்கள் பாரபட்சத்தை காட்டுகிறது. அவர் அமைச்சராக நீடிப்பது, சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164வது பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. அதன்படி, வி.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறேன்" என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக" இன்னொரு கடிதத்தை முதல்வருக்கு ஆளுநர் எழுதினார். இதையடுத்து அந்த விவகாரம் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. செந்தில் பாலாஜி இப்போது ராஜினாமா செய்திருப்பது ஏன்? கைதான பிறகும் சுமார் 8 மாதங்கள் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி இப்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தான் கைது செய்யப்பட்டதிலிருந்து தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்துவருகிறது. அந்த வழக்கு ஜனவரி 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "சிறைக்குச் சென்று 230 நாட்களுக்கு மேலாகியும் எப்படி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்? கீழ் நிலை அரசு ஊழியர்கள் 48 மணி நேரத்திற்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது பொதுமக்களுக்கு என்ன செய்தியைச் சொல்கிறது?" என்று கேள்வியெழுப்பினார். "இதற்கு முன்பாக செந்தில் பாலாஜி உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் கோரிய போது, அந்த ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரனால் நிராகரிக்கப்பட்டது. அப்போது இருந்த சூழலுக்கும் இப்போதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; மேலும் செந்தில் பாலாஜி இப்போதும் அமைச்சராகவே நீடிக்கிறார்" என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் அமலாக்கத் துறை எல்லா விசாரணைகளையும் முடித்துவிட்டதாலேயே ஜாமீன் கோரப்படுவதாகவும் அமைச்சர் பதவியில் இருப்பதையே ஜாமீனுக்கு எதிரான ஒரு முகாந்திரமாகக் கொண்டால், பெரிய பதவியில் இருப்பவர்கள் யாரும் ஜாமீன் கோர முடியாமல் போகக்கூடும் என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, இந்த வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதி புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், வழக்கு விசாரணைக்கு இரு நாட்களுக்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி. பட மூலாதாரம்,X/STALIN திமுக வியூகம் என்ன? செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை விசாரிக்க அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அவர் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 9ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்தனர். அசோக் குமார் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். "அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளில், அவர்கள் முன்வைக்கும் வாதங்களைத்தான் நீதிபதி முக்கியமானதாகக் கருதுவார். அவர்கள் ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அதை நீதிபதி அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது. இத்தனை நாட்களாக, செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதைக் காரணம் காட்டிய அமலாக்கத்துறை, அவர் வெளியில் வந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடக் கூடும் என்று குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்திருக்கக் கூடும். அதன் மூலம் அமலாக்கத் துறை முன்வைத்த மிக முக்கியமான வாதம் அடிபட்டுவிட்டது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கச் சொல்லி பலரும் கோரியபோதும் நீக்காத தி.மு.க. அரசுக்கு இது ஒரு அரசியல் ரீதியான பின்னடைவாகப் பார்க்க முடியுமா? "செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும்போது அமைச்சராக இருப்பது அவருக்கு உதவக்கூடும் என ஆரம்பத்தில் கருதியிருந்தார்கள். ஆனால், நாள் செல்லச்செல்ல அதுவே அவர் ஜாமீனில் வர பாதகமாக அமைந்திருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். இப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்தால், நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் தீவிரமாக கட்சிப் பணியை ஆற்றக்கூடும்" என்கிறார் ப்ரியன். இந்தத் தருணத்தில் செந்தில் பாலாஜிக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதைச் சுட்டிக்காட்டித்தான் செந்தில் பாலாஜியின் ஜாமீனை தொடர்ந்து எதிர்த்து வருகிறது அமலாக்கத்துறை. ஆகவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தம்பியை சரணடையச் சொன்னால், ஒருவேளை ஜாமீன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறார் செந்தில் பாலாஜி. ஆனால், அப்படி நடக்காமலும் போகலாம். தில்லியில் மனீஷ் சிசோடியா அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை அவரை வெளியில் கொண்டுவந்துவிட்டால், அரசியல் பணிகளிலாவது அவரை ஈடுபடுத்தலாம் எனப் பார்க்கிறது. அவருக்கு ஜாமீன் கிடைப்பதை வைத்துத்தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்" என்கிறார் குபேந்திரன். பட மூலாதாரம்,ANI இந்திய அரசியலில் இலாகா இல்லாத அமைச்சர்கள்: இலாகா இல்லாத அமைச்சர்கள் என்பது இந்திய அரசியலில் புதிதல்ல. ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சி. ராஜகோபாலாச்சாரியார், என். கோபாலசாமி ஐயங்கார், வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். அதற்குப் பிறகு, டிடி கிருஷ்ணமாச்சாரியும் லால் பகதூர் சாஸ்திரியும் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். 1999- 2004 இடையிலான வாஜ்பேயி அரசில் மம்தா பானர்ஜியும் முரசொலி மாறனும் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். இதில் முரசொலி மாறன் உடல் நலம் குன்றியபோது அவர் வசம் இருந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறை அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். 2005ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நட்வர் சிங் உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தபோது அவர் வசம் இருந்த வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். 2013ல் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரான கே. சந்திரசேகர ராவ் இலாகா இல்லாத அமைச்சராக மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, உடல்நலம் சார்ந்த காரணங்களால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரது துறைகளை நெடுஞ்செழியன் கவனித்தார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குன்றியபோது அவரது துறைகளை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனித்தார். கால்நடைத் துறை அமைச்சராக இருந்த எஸ். கருப்பசாமி, உடல் நலம் குன்றியபோது அவரது இலாகா வேறொருவருக்கு அளிக்கப்பட்டு அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். அதேபோல, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் உடல் நலம் குன்றியபோது அவரது அமைச்சரவை வேறொருவருக்கு மாற்றித்தரப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். பட மூலாதாரம்,ANI செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி கடந்த 2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்தப் பணியிடங்களை நிரப்புவதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. மத்திய குற்றப்பிரிவின் வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுத்த நாள் அதிகாலையில், விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்த போதும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவருக்கு இதுவரை 19 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cl5leel0pkko

இன்றைய ஸ்பெசல்

2 months ago
இங்கு அமாவாசையில் நண்டு சதையை கரைக்கும் என்பார்கள் அதுக்காகவே கேட்டன் எனக்கு நண்டு உடைச்சு சாபிட நேரம் எடுப்பதால் சாப்பிடுவது குறைவு

திருப்பூர்: தீண்டாமைச் சுவரா? பாதுகாப்புச் சுவரா? - பிபிசி கள ஆய்வு

2 months ago
திருப்பூர் தீண்டாமைச் சுவர் சர்ச்சை: கனிமொழியிடம் முறையிட்டதும் சுவரின் ஒரு பகுதி இடிப்பு - பின்னணி என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தீண்டாமைச்சுவரால் அரசு ரோட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக பட்டியலின மக்கள் கனிமொழி எம்.பியிடம் மனு கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த சுவர் உடனடியாக இடிக்கப்பட்டு பாதை உருவாக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? தீண்டாமைச் சுவர் சர்ச்சை - பின்னணி என்ன? திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் ஊராட்சியின், தேவேந்திரன் நகரில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இதற்கு அருகே வி.ஐ.பி கார்டன் பகுதியில் மற்ற சமூகத்தினர் உள்ளனர். ‘‘இந்த இரண்டு பகுதிக்கும் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால், அரசு சாலைகளை பயன்படுத்த முடியாமல் அதிக தொலைவு நடக்க வேண்டியுள்ளது, தீண்டாமைச் சுவரை இடித்து வழி ஏற்படுத்த வேண்டும்,’’ என, தேவேந்திரன் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக மனு கொடுப்பது, ஆட்சியரை சந்திப்பது என, இப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளும், ‘தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும்’ என, இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தனர். ஆனால், எதிர் தரப்பில் வி.ஐ.பி கார்டன் பகுதியில் வசிப்பவர்கள், ‘‘இது தீண்டாமைச்சுவர் அல்ல குடியிருப்புக்கான பாதுகாப்புச்சுவர்,’’ என்று கூறினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்திருந்தனர். கே.சி.பழனிசாமி என்பவர், ‘‘தேவேந்திரன் நகரில் இருக்கும் சுவர் தங்களுக்கு பாத்தியப்பட்டது எனவும், சுவருக்கு அருகேயுள்ள அரசு ரோட்டிலும் தனக்கு இடம் உள்ளது,’’ எனக்கூறி, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் மனு கொடுத்திருந்தார். இருதரப்பு மனுக்களையும் பெற்று, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். கனிமொழியிடம் மனு – சுவரின் ஒரு பகுதி இடிப்பு! இப்படியான நிலையில், பிப்ரவரி 10ம் தேதி அவிநாசியில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிக்காக மக்கள் கருத்து கேட்புக்கூட்டத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி பங்கேற்றார். அங்கு, தேவேந்திரன் நகரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் கனிமொழியிடம், ‘‘தீண்டாமைச்சுவரை அகற்றி வழி ஏற்படுத்தித்தர வேண்டும்,’’ என்று மனு கொடுத்திருந்தார். இதையடுத்து, கனிமொழி உடனடியாக மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜை தொடர்பு கொண்டு, தீண்டாமைச் சுவரை இடித்து பட்டியலின மக்களுக்கு பாதை ஏற்படுத்தித்தர வேண்டுமென வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக சுவரை இடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மேற்பார்வையில் சுவரின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டு பாதை உருவாக்கப்பட்டது. ‘20 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி’ கனிமொழியிடம் மனு கொடுத்தது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மனோன்மணி, ‘‘எங்கள் பகுதியில் இருக்கும் அரசு சாலைக்கு அருகில் இந்த தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ளது. சுவருக்கு அந்தப்பக்கம் வி.ஐ.பி கார்டன் பகுதியினர் மூன்று சாலைகளை ஊராட்சியிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த மூன்று சாலைகளையும் அரசு நிதியில் ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த மூன்று அரசு சாலைகளும், எங்கள் பகுதி சாலையும் இணையும் இடத்தில் தான் இந்த தீண்டாமைச்சுவர் இருக்கிறது. மூன்று இடத்திலும் சுவற்றை இடித்து பாதை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி போராடி வந்தோம். கனிமொழி எம்.பி உத்தரவின் பேரில் முதற்கட்டமாக ஒரு பகுதியில் சுவர் இடிக்கப்பட்டு, பாதை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் 20 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. மீதமுள்ள இரண்டு பகுதியிலும் சுவரை இடித்து பாதை அமைத்துத் தர வேண்டும்,’’ என்கிறார் அவர். படக்குறிப்பு, மனோன்மணி, கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தவர் இது தொடர்பான எதிர்தரப்பான கே.சி.பழனிசாமி மற்றும் வி.ஐ.பி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர். ‘ஆட்சியர் உத்தரவை பின்பற்றியுள்ளோம்’ சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ‘‘மாவட்ட ஆட்சியர் மூன்று இடங்களில் சுவரை இடித்து பாதைகள் உருவாக்க உத்தரவிடார். முதற்கட்டமாக ஒரு பகுதியில் சுவர் இடிக்கப்பட்டு பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதால், ஆட்சியர் விசாரித்து வருகிறார். விசாரணை முடித்து ஆட்சியர் உத்தரவிட்டால் மற்ற இரு பகுதிகளிலும் சுவர் இடிக்கப்படும்,’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/cz7kj8yr3z7o
Checked
Fri, 04/19/2024 - 14:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed