புதிய பதிவுகள்

பாலைவன தடங்கள்

2 months 1 week ago
ஈழப்பிரியன் அண்ண கிழக்கில் அழகிய கிராமம் மேற்கே வயலும் கிழக்கே கடலும் சூழ்ந்தது அரச வேலை முதல்வேலையாகவும் பகுதி நேர வேலைகள்(உழைப்பு) கடல் , வயல் இந்த மூன்று தொழில்களும் முதன்மையானது. எங்கள் வீடுகள் எல்லாம் கடற்கரை ஓரத்தில் இருந்தது சொந்தங்கள் அனைவரும் அம்மாவுக்கு 8 தங்கைகைள் அப்பவுக்கு 6 தம்பி இரண்டு தங்கைகள் எல்லோரும் அருகருகில் தான் வாழ்ந்து வந்தோம் சுனாமி அன்று நான் கொடுத்தனுப்பிய போணுக்கு ஒரு சிம் காட் போடுவதற்கு தம்பி சென்றுள்ளான் என் நண்பனைக்கூட்டிக்கொண்டுள்ளான் சிம் கிடைத்தும் போணை வீட்டில் வைத்துவிட்டு ஒரு சித்தியின் வீட்டுக்கு சென்று அவரது மகனை எங்கள் வீட்டூக்கு தூக்கிவர சென்ற போது கடல் முதலாவது அலை பரவி வருவதைக்கண்டு அம்மாவையும் தங்கைகளையும் கூட்டிக்கொண்டு போவதற்கு வீடு தேடி ஓடிவர அம்மாவும் தங்கையும் கடல் வருவதைக் கண்டு அவனைக்கூப்பிட்டு பார்த்தவாறே முதலில் ஓடி இருக்கிறார்கள். ஆனால் அந்த அல்லோல கல்லோல சத்தத்தில் அவனுக்கு அது விளங்கவில்லை தெரியவும் இல்லை அவர்கள் ஓடியது. அவனோ ஓடி வீட்டுக்குள் செல்ல அடுத்த அலை வீட்டுக்கு மேலால சென்று விட்டது இதுவரைக்கும் அவனது சடலம் கிடைக்கவில்லை அன்றிலிருந்து அம்மா 2 வருடம் சுயநினைவு இழந்த து போல் இருந்திருக்கிறா கவுண்சிலிங் எடுத்து ஆனால் இதெல்லாம் எனக்கு யாரும் சொல்லவில்லை அறிந்தால் நான் மனஉழைச்சலுக்கு ஆளாவேன் என. எனது தம்பி மாமி இருவரும் அவர்கள் குழந்தைகளும் இறந்து போயினர் சுனாமியால் . தற்போது நாங்கள் இருந்த காணியில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர் அரச காணியாக்கி இதனால் தான் யாரிடமும் இதை சொல்வதில்லை என்னைச் சந்திந்த வீடு தேடி வந்த களஉறவுகள் ஜீவன் அண்ண , அக்னி, அர்ஜின் அண்ண, மீராஅண்ண, இவர்களுக்கு தெரியும் நன்றி நண்பா இழப்பு என்பதும் சோகம் என்பதும் ஈழத்தமிழனுக்கு கிடைத்த பரிசுகள் அது மனதில் மட்டும் இருந்து கோண்டே இருக்கும் ஓம் அண்ண படிப்பினையாக இருக்கட்டுமே என எழுத தோன்றியது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் வாசித்தமைக்கும்

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

2 months 1 week ago
இடுப்பில் செருகிய புடவை.. ஏற்றி வாரிய கொண்டை.. கையில் துடைப்பக்கட்டை.. யார் இந்த பிரகலதா! சென்னை: காலில் செருப்பு இல்லை.. தலையில் கொண்டை.. புடவையை வாரி இடுப்பில் செருகி கொண்டு கையில் ஒரு துடப்பக்கட்டையை எடுத்து பெருக்கி கொண்டு இருக்கிறார் பிரகலதா! யார் இந்த பிரகலதா! இவர்தான் நாம் தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி வேட்பாளர்! தன் கட்சி வேட்பாளர்களை சும்மா தேர்ந்தெடுப்பாரா என்ன சீமான்? எப்படி வடசென்னை வேட்பாளர் காளியம்மாளோ அதுபோலவே போர்க்குணம் நிறைந்த வேட்பாளர்!திருமதி பிரகலதா ராம் எம்.ஏ எம்.எட் படித்திருக்கிறார். கொஞ்ச காலம் பேராசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். இது இவருடைய தனிப்பட்ட பொதுவான தகவல்தான். ஆனால் யாருமே அறியாத, மறைக்கப்பட்ட ஒரு விஷயம் உள்ளது சிறை சென்றவர் அது என்னவென்றால், சேலம் 8 வழிச்சாலை என்ற கார்ப்பரேட் அறிவிப்பு வந்தபோது, விவசாயிகள் உருக்குலைந்தனர். அப்போது முதன்முதலில் போராட்டம் நடத்தியதுடன், அதற்காக சிறை சென்றவர்தான் இந்த பிரகலதா! சாணி அள்ளுகிறார் இவரை பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என்று சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்தபோதுதான் பிரகலதா அவருடைய வீட்டில் வேலை பார்ப்பதுபோன்ற ஒரு வீடியோ இருந்தது. அவரது குடும்பம் விவசாய குடும்பம் போல தெரிகிறது. வீட்டில் மாடு வளர்க்கிறார்கள். அந்த மாட்டு தொழுவத்தைதான், இவர் சாணி அள்ளி, பெருக்கி துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். கேள்விகள் இந்த வீடியோவுக்கு பின்புறம் சீமான் குரல் ஒலிக்கிறது. வழக்கம்போல நாக்கை பிடுங்கி கொள்கிற அளவுக்கு கேள்வி கேட்கிறார் சீமான். அதில் அவர் பேசிய ஒரு சில வார்த்தைகள் இது: சோறு எவன் போடுவான்? விவசாயம்தான் இனி நமக்கு அரசாங்க பணி.. எல்லாரும் ஐஏஎஸ் ஆயிட்டா எப்படி? ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபீசர்ன்னா பசிக்காதா ராஜா? சோறு எவன் போடுவான்? யதார்த்தத்துக்கு வாங்கடா... வேளாண்மையை கைவிட்டிட்டீங்களே.. உலகம் ஒருநாள் சோத்துக்கு கையேந்தும்.. சாராயம் டாஸ்மாக்குல சாராயம் ஊத்தி குடுக்கறவன் கவர்ன்மென்ட் எம்பிளாயிடா.. ஆனா உலகத்துக்கே சோறு போடற எங்க ஆத்தாளும் அப்பனும் கவர்மென்ட் எம்ப்ளாயி ஆக கூடாதா? பைத்தியக்கார பயலுகளே.. ஒரு காலம் வருது.. விவசாயத்துக்கு ஓய்வூதியம் தர்றோம் 60 வயசுக்குமேல! விவசாயத்தை அரசு பணியாக்கறோம் என்று கர்ஜித்து கொண்டே போகிறார். தாலி அறுது பிரகலதா விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரித்தவாறே சொல்கிறார் விழுப்புரம் பகுதியில பார்த்தீங்கன்னா, நிறைய பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். நாங்க ஓட்டு கேட்டு போனா எங்ககிட்ட பெண்கள் சொல்றது, மதுவால எங்க தாலி அறுது.. ஏதாச்சும் பண்ணுங்க, இதுவரைக்கும் எந்த தலைவரும் இதுக்கு ஒரு முடிவு கட்டல என்பதுதான். களத்தில் இறங்கி போராடியது போதும்.. காசுக்கு ஓட்டு தந்தது போதும்.. கையில் அதிகாரம் இருந்தால்தான் நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் பேசி செல்கிறார் பிரகலதா! https://tamil.oneindia.com/news/chennai/naam-tamizhar-vizhpuram-candidate-pragalatha/articlecontent-pf366166-346313.html டிஸ்கி: செம்பு தற்ஸ்தமிழ் காங்கிரஸ் -- திமுக யால்ராவுக்கு என்னமோ ஆகி போச்சுது .. இன்று ஒரு நாளுக்காவது நல்ல புத்தி வந்தமைக்கு வாழ்த்துவம். .😇

அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள்

2 months 1 week ago
அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள் யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் அவர்கள் இந்தப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது. அதனால் அதன் பணிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் பஸ் நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்திருந்தது. இந்த நிலையில் 63 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து மாற்று இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி வியாபாரிகள் அமைதிவழிப் போராட்டத்தை இன்று ஆரம்பித்தனர். தமது கோரிக்கையை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் நிறைவேற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/53664

இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நியமனம்

2 months 1 week ago
இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் நியமனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த இணைத்தலைமைப் பதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கானதும், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கானதும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கானதும் என மூன்று இணைப்புக்குழுக்களின் இணைத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் அவருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் என்ற நியமனததிற்கு மேலதிகமாக இந்த இணைத் தலைமைப் பொறுப்பு தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/53652

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

2 months 1 week ago
கோத்தபாயவிற்கு எதிராக ஏன் வழக்கு - பீரிஸ் கருத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே அவரிற்கு எதிராக அமெரிக்காவில் இரு வழக்குகள் தாக்கப்பட்டுள்ள என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோத்தபாய ராஜபக்சவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் மேற்கொள்கின்ற போதிலும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்களிற்கு பின்னரே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உள்நோக்கம் கொண்டவர்கள் நீதித்துறையை பயன்படுத்துகின்றனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.virakesari.lk/article/53649

மரண தண்டனை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய வேண்டுகோள்

2 months 1 week ago
மரண தண்டனை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய வேண்டுகோள் மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசாங்கம் தொடரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது இலங்கையிலுள்ள பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து நோர்வே சுவிட்சர்லாந்து பிரிட்டன் மற்றும் கனடா அவுஸ்திரேலியா ஆகியநாடுகளின் தூதரகங்களுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது இலங்கை அரசாங்கம் போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக 43 வருடங்களின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவது உலக நாடுகளிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பதையும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதேவேளை மரண தண்டனைகள் மூலம் இந்த வகை குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது போதைப்பொருள் ஆபத்தை எதிர்கொள்வதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு உள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தயார் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பல்வேறு வகையிலான நீதித்துறைகளை பாரம்பரியங்களை கலாச்சாரங்களை மத பின்னணிகளை கொண்ட பெருமளவிலான உலகநாடுகள் மரணதண்டனையை ஒழித்துள்ளன எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது மரணதண்டனை மனித கௌரவம் மற்றும் நேர்மை ஆகியவற்றை மறுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2018 டிசம்பரில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்களித்தபடி இலங்கை மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை தொடரவேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது http://www.virakesari.lk/article/53644

உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு

2 months 1 week ago
உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு யாழ்ப்பாணம் தனங்களப்பில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தைய வாமதேவன் தலைமையில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நீரேற்றி வைக்கப்பட்டது. அறுகுவெளிப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் லண்டன் முதலீட்டாளர் கந்தையா பிரேமதாஸ் மற்றும் ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவனமும் இணைந்து, சகாதேவன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வி.சகாதேவனின் ஆலோசனையில் கீழ் உருவாக்கப்பட்டது. “இந்த உப்பள உற்பத்தி நிறுவத்தின் முதற்கட்ட நடவடிக்கை 100 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகள் போரின் போது வடமாகணத்தில் காணப்பட்ட தொழிற்சாலைகள் அழிவடைந்த பின்னர் இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றார்கள். இவ்வாறான நிலையில், வடமாகாணத்தில் போர் நிறைவடைந்த பின்னர் அண்மையில் லண்டன் வாழ் முதலீட்டாளர் பிரேம்தாஸ் 200 மில்லியன் ரூபா நிதியில் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்பட்டு உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்தி செய்வதற்கான பாத்திகள் அமைக்கப்பட்டு, அங்கு 100ற்கும் மேற்பட்ட இளையோருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. உப்பு உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுச் சூழல் மாசடையாத வகையிலும் இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது” என்று சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கூறினார். ஆரம்ப நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ.நிமலரோகன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன், ஹற்றன் நஷனல் வங்கியின் மூத்த பிராந்திய முகாமையாளர் எம்.டேமியன் ரஞ்சித், பிரதேச கிராமிய வங்கி உதவித் திட்ட முகாமையாளர் கே.தியாகராஜா உள்பட பிரதேச சபை உறுப்பினர்கள், ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். http://www.virakesari.lk/article/53637

“கடற்படை , இராணுவத்தின் தேவைகளுக்காக யாழில் காணிகளை சுவீகரிக்கத் திட்டம்”

2 months 1 week ago
“கடற்படை , இராணுவத்தின் தேவைகளுக்காக யாழில் காணிகளை சுவீகரிக்கத் திட்டம்” யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் கடற்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளுக்காக மட்டும் தற்போது 43 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அக் காணிகளை அளவீடு செய்து சுவீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது. இதன்போது , இவ்வாறு அரசாங்கம் காணிகளை அளவீடு செய்வதனை தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் காணிகளை அளவீடு செய்வதற்கான அனுமதிகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் கணிகளை வழங்குவதில்லை எனவும் மேற்கூறிய 43 இடங்கள் தொடர்பில் பிரதேச செயலர்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08) இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/53631

இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

2 months 1 week ago
ஈரானின் புரட்சி படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. பிற நாட்டு அரசு படையை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவிப்பது இதுதான் முதல் முறையாகும். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவிக்கையில், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அத்துடன் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையுடன் உலகின் எந்த வங்கிகளும், நிறுவனங்களும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது. அவ்வாறு தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இத‍ேவேளை ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளது, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்கிறது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற உண்மை, இந்த நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/53646

ஈரானின் புரட்சி படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா

2 months 1 week ago
ஈரானின் புரட்சி படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. பிற நாட்டு அரசு படையை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவிப்பது இதுதான் முதல் முறையாகும். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவிக்கையில், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அத்துடன் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையுடன் உலகின் எந்த வங்கிகளும், நிறுவனங்களும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது. அவ்வாறு தொடர்பு வைத்திருப்பது தெரிந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இத‍ேவேளை ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளது, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்கிறது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற உண்மை, இந்த நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/53646

இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

2 months 1 week ago
இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைATTA KENARE/AFP/GETTY IMAGES இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை இரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக இரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே, இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையும் அதோடு தொடர்புடைய மற்ற சில அமைப்புகளும் அணுஆயுத பரவல், பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவற்றின் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது. டிரம்ப் என்ன சொன்னார்? படத்தின் காப்புரிமைMANDEL NGAN "இரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன் அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது" என்று இதுகுறித்த அறிவிப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறினார். இரான் மீதான அழுத்தத்தை "கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில்" இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார். "நீங்கள் இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாததிற்கு நிதியுதவி செய்வதற்கு சமம்" என்று டிரம்ப் தெரிவித்தார். டிரம்பின் அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-47862831

காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 600 பேர் பலி

2 months 1 week ago
காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 600 பேர் பலி Published : 09 Apr 2019 11:45 IST Updated : 09 Apr 2019 11:45 IST மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பு இதுவாகும். தவறவிடாதீர் ஒரே விமானத்தை இயக்கிய அம்மா - மகள் பைலட் குழு: வைரலாகும் படம் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ''காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,041 பேருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசிகள் மூலம் கிட்டதட்ட 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய நகரகளுக்கு எபோலா நோய் பரவலையும் தடுத்துளோம் என்றும், தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் எபாலோ வைரஸ் பாதிப்பால் 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 11,000 பேர் உயிரிழந்தனர். https://tamil.thehindu.com/world/article26778376.ece

கனடா திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் மாணவர்கள் சாதனை

2 months 1 week ago
கனடா திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் தழிழ் மாணவர்கள் சாதனை கனடாவின் டெரன்டோ நகரில் நடைபெற்ற சிவா பைட்டர்ஸ் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் ஜி.கே.எம்.ஓ (எஸ்.கே.ஏ.ஜ மற்றும் கே.ஓ.ஜே.எவ்) கழக மாணவர்கள் காட்டா போட்டியில் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் குமித்தே போட்டியில் 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களாக 12 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இதில் பயிற்றுனர் சென்செய்.சுகந்தன் காட்டாபோட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இவர்களுக்கான ஆரம்ப பயிற்சிகளை சென்செய்.ஜெயதாஸ், சென்செய்.ரெஜினோல்ட் ஆகியோரும் சுற்றுப்போட்டிக்கான சிறப்பு பயிற்சிகளை சிகான்டாய்.எஸ்.மனோகரனும் வழங்கியிருந்தார். ஜி.கே.எம்.ஓ கனடா கழக நிர்வாகக்குழு கடந்த மாதம் தங்களுக்கான சிறப்பு உயர்தர பயிற்சிகளை பெற்றுக்கொள்ள இலங்கையிலிருந்து அதன் தொழில்நுட்ப பணிப்பாளர் சிகான்.அன்ரோ டினேஸை அழைத்து மாணவர்க்கான பயிற்சி பட்டறைகளையும் பயிற்றுனர்களுக்கான தொடர்பயிற்சி பட்டறைகளையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/53648

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2

2 months 1 week ago
``சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா..?” - ராகுல், மோடிக்கு சீமான் கேள்வி கே.குணசீலன் Follow ம.அரவிந்த் Follow ``காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்த அரசு, நீரையும் சோறையும் பெறுக்குவதற்கு நினைக்கவில்லை. எரிபொருளை சிக்கனம் செய்து சேமிக்க நினைத்த அரசு, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க பிரசவித்த குழந்தைதான் அ.தி.மு.க. ஒன்றுமே இல்லாத கட்சியான பி.ஜே.பி-யை இவர்கள்தான் தமிழகத்திற்கு அழைத்துவந்தனர்" என்று தஞ்சாவூரில் சீமான் தெரிவித்தார். தஞ்சாவூரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கார்த்திக் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் வாக்குகள் கேட்டுப் பேசினார். அப்போது, ``எத்தனையோ தேர்தல்கள் வந்தாலும் மக்களுக்கு எந்த மாறுதலும் இல்லை. எல்லா கட்சிகளும் பணத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்கிறார்கள். நாங்கள் உயர்ந்த கருத்தை வைத்து களம் காணுகிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்தது. அப்போது செய்யாத காங்கிரஸ் இப்போது என்ன செய்யப்போகிறது என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கப்போவதாக ராகுல் காந்தி கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயிகள் ஏழையாகினர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 6,000 போடப்போவதாக மோடி கூறுகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 100 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இவர்களை ஒரு முறைகூட மோடி பார்க்கவில்லை. கோரிக்கை என்னவென்று கேட்கவில்லை. 6,000 ரூபாயை முன்பே கொடுத்திருந்தால், அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைந்திருக்கும். இப்போது, வாக்கைப் பெறுவதற்காகப் பணம் கொடுக்கின்றனர். இது நல்ல திட்டமல்ல, நயவஞ்சகத் திட்டம். 50 ஆண்டு கால சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க முடியாத நிலையில் ராகுல் காந்தி உள்ளார். இதேபோல, ஐந்தாண்டு கால சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் மோடி இருக்கிறார். காசு கொடுத்து வாக்கு கேட்கும் கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வரும். கஜா புயலில் நான்கு மாவட்டம் பாதி அழிஞ்சுபோச்சு. மரங்கள் மட்டும் முறிந்து விழவில்லை மனமும் முறிந்துவிட்டது .உலகுக்குகே சோறுபோட்ட விவசாயிகள், ஒரு வேளை சோற்றுக்கு கையேந்தி நிற்கிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். புயலினால் 89 பேர் இறந்தனர். வாழ்வாதாரத்தை இழந்து தவித்த விவசாயிகளுக்கு மோடி ஒரு வார்த்தைகூட ஆறுதல் கூறவில்லை. ஏன் ராகுலும் ஆறுதல் வார்த்தை கூறவில்லை. இப்போது, வாக்கு கேட்பதற்கு அடிக்கடி வருகின்றனர். ஐந்து ஆண்டு சாதானைகளில் ஒன்றைச் சொல்லி வாக்கு கேட்க முடியுமா மிஸ்டர் மோடி. பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் ராகுல் காந்திக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை. இருவரும் ஏமாற்றுபவர்கள்தான். இந்த நாட்டின் பாதுகாப்பில்கூட தற்சார்பு இல்லை.போர் விமானம் உட்பட ஒவ்வொரு கருவியும் வெளிநாட்டிலிருந்துதான் வாங்குகின்றனர். இதனால், வாங்கி வாழ்கிற வாட்ச் மேன்கள் இவர்கள். இந்தியாவை ஒரு சந்தையாக்கிவிட்டனர். வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து தொழில் தொடங்குபவர்கள் வியாபாரம் முடிந்தவுடன், ஓடிவிடுகின்றனர். ஒரு வாடகைத் தாயைப் போலவே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை உள்ளது. இதனால், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கோர்டுக்கு சென்றது நாம் தமிழர்தான். இப்போது அந்தத் திட்டத்தை ரத்துசெய்துள்ளது நீதிமன்றம் அதை நாங்கள் செய்தோம் என இன்று பலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்த அரசு, நீரையும் சோறையும் பெறுக்குவதற்கு நினைக்கவில்லை. எரிபொருளை சேமிக்க நினைத்த அரசு, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க பிரசவித்த குழந்தைதான் அ.தி.மு.க. ஒன்றுமே இல்லாத கட்சியான பி.ஜே.பி-யை இவர்கள்தான் தமிழகத்திற்கு அழைத்துவந்தனர். இப்போது, பி.ஜே.பி-யை எதிர்க்கிறார் ஸ்டாலின். பி.ஜே.பி போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கூட்டணி கட்சிக்குக் கொடுத்துவிட்டது தி.மு.க. ராகுல் காந்தி ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பேசும்போது, மீத்தேன் திட்டத்திற்கு நாங்கள் கையெழுத்திடச் சொல்லவில்லை; தி.மு.க தான் கையெழுத்திட்டது என்றார். இவர்கள், நாங்கள் ஆய்விற்குத்தான் ஒப்புதல் தந்தோம் என மக்கள் போராட்டத்திற்குப் பிறகு சொன்னார்கள். பா.ஜ.க வரக் கூடாது. ஆனால், பா.ஜ.க-வுக்கு மாற்று காங்கிரஸ் கிடையாது. சிஸ்டத்திற்குள் வேலை செய்ய வந்தவர்கள் நாங்கள் இல்லை. கொள்கையையே மாற்ற வந்தவர்கள். நாம் தமிழர் கட்சியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்தால், கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்றார். https://www.vikatan.com/news/politics/154578-election-compaign-of-seeman-thanjavur.html

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

2 months 1 week ago
அசராது போட்டியை முடித்து வைத்தார் ராகுல் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு மொகாலியில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணியின் தலைவர் அஷ்வின் களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 150 ஓட்டங்களை குவித்தது. 151 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான கிறிஸ் கெய்ல் 3.1 ஓவரில் ரஷித் கானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனால் ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் 18 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடிய கே.எல். ராகுல் மற்றும் அகர்வாலின் பொறுப்பான இணைப்பாட்டத்தினால் பஞ்சாப் அணி முதல் ஐந்து ஓவர்களில் 30 ஓட்டத்தையும் 10 ஓவர்களின் முடிவில் 102 ஓட்டங்களையும் பெற்றது. அத்துடன் ராகுல் 34 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் விளாசினார். மறுமுணையில் அகர்வால் 16.2 ஆவது ஓவரில் 40 பந்துகளை எதிர்கொண்டு அவரும் அரை சதமொன்றை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 18 ஆவது ஓவரின் முதல் பந்தில் சண்டீப் சர்மாவுடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த மில்லரும் அதே ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 135 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து. அவர்களின் ஆட்டமிழப்பையடுத்து மண்டீப் சிங் களமிறங்க, பஞ்சாப் அணிக்கு ஒரு கடத்தில் வெற்றிக்கு 12 பந்துகளில் 16 ஓட்டம் என்ற நிலையிருக்க மண்டீப் சிங் 18 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து சாம் கர்ரன் ஆடுகளம் புக, பஞ்சாப் அணிக்கு 6 பந்துகளுக்கு 11 ஓட்டம் என்ற நிலையிருந்தது. இறுதியாக ராகுல் 19.5 ஆவது பந்தில் போட்டியை முடித்து வைத்தார். அதன்படி ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் ராகுல் 71 ஓட்டத்துடனும், சாம் கர்ரன் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் சண்டீப் சர்மா 2 விக்கெட்டுக்களையும், சித்தார்த் கவுல் மற்றும் ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம் http://www.virakesari.lk/article/53633

எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்

2 months 1 week ago
வழி சாலை தீர்ப்பு எல்லாருக்கும் சொந்தம்தான்.. ஆனால் "விதை" நாம் தமிழர் போட்டது சென்னை: உண்மையிலேயே.. 8 வழிச்சாலை தீர்ப்பு யாருடைய முயற்சியால் கிடைத்தது? யாருக்கு இந்த பெயர் போய் சென்றடையும்? என்பதில் இரு பெரும் சர்ச்சைகள் வெடித்து கிளம்பி உள்ளன.சென்னை டு சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பானது, பாமக சார்பில் நான் மேற்கொண்ட சட்டப் போராட்டத்துக்கும், உழவர்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல நக்கீரன் இதழில், ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் எவன் கேட்டான் எட்டுவழிச்சாலை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதனால் இந்த தீர்ப்பில் நக்கீரனின் பங்கு உள்ளது என்கிறது அந்த தரப்பு! நக்கீரன் மட்டுமின்றி சன் நியூஸ் தொலைக்காட்சியும் விவசாயிகளின் அவலத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதில் பங்கேற்றது. ஆனால் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு யார்தான் காரணம்? குரல் வளைகள் 8 வழிச்சாலை என்று கார்ப்பரேட்கள் அன்று அறிவித்த உடனேயே விவசாயிகள், தங்கள் உடம்பில், உணர்வில், உயிரில் கலந்த விளைநிலங்களில் அழுது புரண்டார்கள். கண்முன்னே குத்தி கிழிக்கப்பட்ட நிலங்களை கண்டு சுயநினைவு இருக்கும்வரை கதறினார்கள்! எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டன. போராடும் உரிமைகள் நசுக்கப்பட்டன. சொல்லக்கூடிய முடியாத வேதனையில் விவசாய கிணற்றில் உயிரை மாய்த்து கொள்ளவும், பிளேடு, கத்திகளால் தங்களை கிழித்து கொள்ளவும் விவசாயிகள் தயாரானார்கள்! மறைக்கப்பட்ட உண்மை எனவேதான் விஷயம் கோர்ட் வரை சென்றது. இது சம்பந்தமாக முதன்முதலில் வழக்கு தொடுத்தது நாம் தமிழர் கட்சிதான்! அதுமட்டுமல்ல.. இந்த திட்டத்தை எதிர்த்து கைதாகி சென்றது அதே கட்சியை சார்ந்த ஒரு பெண் என்பதும் அப்பட்டமாக மறைக்கப்பட்டு வரும் உண்மை ஆகும்! நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி, தான் தொடர்ந்த வழக்கு, மற்றும் அதன் எண்ணை வெளியிட்டுள்ளது. வழக்கு எண் 16961/2018 என்றும் ஆனால் பாமக வழக்கு எண் 20014/2018 என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. இதற்கான சட்டநகல் ஆதாரங்களையும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக ட்வீட்கள் மிக வேகமாக இணையத்தில் பதிவாகி வருகின்றன. போராளி பிரகலதா ராம் திட்டத்தை எதிர்த்து கைதாகி முதல் முதலில் சிறைக்கு சென்றது நாம்தமிழர் கட்சிதான்....! அப்போது சிறை சென்ற 27 பேரில் ஒரே ஒரு பெண் போராளி...! அப்பெண் தான் நம் விழுப்புரம் நாடாளுமன்ற நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சகோதரி பிரகலதா ராம் என்கிறது ஒரு பதிவு. எட்டு வழிச்சாலை வழக்கில் தீர்ப்பு! நாம்தமிழர் தொடர்ந்த வழக்கு எண் 16961/2018. அன்புமணி வழக்கு எண் 20014/2018. அன்புமணி, நாம் தமிழர் தொடர்ந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். மறப்பது மக்கள் இயல்பு... நினைவூட்டுவது நம் கடமை என்கிறது மற்றொரு பதிவு. வழக்கறிஞர் அறிவிப்பாணை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தொடுத்த வழக்கில் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு. என்று தெளிவுபடுத்துகிறது மற்றொரு ட்வீட்! குரல் எழுப்பியது பாமக ஆக மொத்தம், நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த இந்த செயலில், தன்னை இணைத்துக் கொண்ட பாமக எதற்காக தன்னை பகிரங்கப்படுத்தி கொள்கிறது என தெரியவில்லை. அன்புமணி தரப்பில் கோர்ட்டில் கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான்.. மக்களுக்காக பாமகவும் குரல் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாதுதான். ஆனால் விதை... நாம் தமிழர் போட்டது! இப்படி நாம் தமிழர் கட்சிதான் வழக்கை முதன்முதலில் பதிவு செய்தது என்பதையும், இதற்காக அக்கட்சியின் பெண் வேட்பாளர் பிரகலதா ராம் முதன்முதலில் சிறைக்கு சென்றார் என்பதையும் நாட்டு மக்கள் உண்மை தன்மையை அறிய வேண்டியதுதான் இவர்களுக்கு செய்யும் உரிய நன்றிக் கடனாக இருக்க முடியும்! " https://tamil.oneindia.com/news/chennai/naam-tamizhar-party-behind-in-eight-way-road-verdict/articlecontent-pf366122-346308.html டிஸ்கி: பாமக , பிஜேபி -- அதிமுக கூட்டணியில் இருப்பதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கினம்.. இதுதான் சமயம் எண்டு அவயளின் 6% வாக்குகளை தமிழ்த்தேசிய வாக்குகளாக மாற்ற வேண்டும்.. 😎
Checked
Thu, 06/20/2019 - 13:19
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed