புதிய பதிவுகள்2

யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது

2 months 1 week ago
சிலோனிலை 43 லச்சத்தை வங்கியிலை போட்டு வைச்சால் எவ்வளவு வட்டி வரும்? 43 லச்சத்தை வைச்சு சொந்தமாய் ஒரு தொழிலும் தொடங்கேலாதோ? அது சரி வாத்தி வெளிநாட்டுக்கு வந்து என்ன வேலை செய்வார்?

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

2 months 1 week ago
இது நீங்கள் சொன்னது உண்மை. ஆனால் மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது.பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இல்லை முஸ்லிம் மதம் சிறுபான்மை மதமும் இல்லை. தனது ஷரியா மத சட்டத்தின் கீழ் மற்ற மக்களையும் சுதந்திர சிந்தனை கொண்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களையும் அடக்கிஆட்சி செய்ய முயல்கின்றது. பர்த்தா ஹிஜாப் அணியாத நான் முஸ்லிம் தான் ஆனால் அந்த முட்டாள் (stupid )கோட்பாடுகளை பின்பற்ற நான் தாயர் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் பெண்களை எனக்கு தெரியும். முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் பாதையில் தமிழ்தேசியம் 😟

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 1 week ago
வணக்கம் வாத்தியார்........! ஆண் : பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு அடி பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு ஆண் : கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி பெண் : தொட தெரிய ஏத்தி கட்டி பெண் : வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு ஆண் : அப்டி போடு ஆண் : ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு உன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு ஆண் : நீ நெளிஞ்சு போகையிலே நெஞ்சுல சுளுக்கு பெண் : வாட காத்தடிச்சு வாட்டுது மாமா என் கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா பெண் : உன் ஊடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா ஆண் : உன் கண்ணு ரெண்டும் நவா பழம் காச்சு இருக்கு கொய்யா பழம் மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே பெண் : அட புல் அறுக்க போகையிலே புள்ள வரம் கேட்க வந்தேன் தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத ஆண் : ஓரஞ்சரம் பார்த்து ஒதுங்கனும் பதமா பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி குளிக்கணும் சுகமா ஆண் : மெல்ல லவகமா உன் முதுக தேய்க்கணும் இதமா பெண் : மாமா பம்முறீயே பொழுதுக்கு மேலே நீ கம்மன்கட்டு மூலையிலே கல்லணை போலே பெண் : நான் ஒத்தையில தான் வருவேன் உன் நினைப்பால ஆண் : அட மஞ்ச காட்டு ஓரத்திலே மத்தியான நேரத்தில காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா பெண் : அட வெள்ளைச்சோள சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி தொட தெரிய ஏத்தி கட்டி வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு......! --- பஞ்சு மிட்டாய் சேலை ---

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

2 months 1 week ago
முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் - மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப்பின் கனவுப்பயணம் ஆரம்பம் Published By: RAJEEBAN 18 JAN, 2024 | 02:32 PM சிலருக்கு முதல்போட்டி என்பது கனவு போல அமைவதுண்டு. மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சம்மெர் ஜோசப்பின் முதல் போட்டியும் ஒரு கனவே! முதலில் அவரின் ஆரம்பம் - கயானாவின் 350 பேரை கொண்ட பராகரா என்ற ஊரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் இவர். அதன் பின்னர் அவர் தனது முதல் டெஸ்டில் மேற்கிந்திய அணியின் அதிக ஓட்டங்களை பெற்ற 11 வீரர் என்ற சாதனையை முறியடித்தார், 36 ஓட்டங்களை அவர்பெற்றார் அதில் ஜோஸ் ஹசெல்வூட்டின் பந்தில் பெறப்பட்ட சிக்சரும் அடங்கும். அதன் பின்னர் தனது பந்து வீச்சை ஆரம்பித்தவேளை டெஸ்ட்போட்டிகளில் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்திய 23 வீரர் - மேற்கிந்திய அணியின் இரண்டாவது வீரர் என்ற சாதனைபட்டியலில் அவர் தனது பெயரை பதிவு செய்துகொண்டார். முதல் பந்தில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித்தினை முதலாவது பந்தில் ஆட்டமிழக்க செய்ததை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என சாமர் ஜோசப் முதல்நாள் நிறைவின் பின்னர் தெரிவித்தார். நான் அதனை படமெடுத்து எனது வீட்டில் ஒட்டிவைப்பேன் என்றார் அவர். தனது முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்துவேன் என அவர் தனது அணியினரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அது ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் என நான் எதிர்பார்க்கவில்லை, அது எனக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்தது நான் மிகவும் சாதகமான மனோநிலையுடன் விளையாடினேன் உலகின் தலைசிறந்த அணியுடன் விளையாடும்போது சாதகமான மனோநிலை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். முதல் இனிங்சில் மேற்கிந்திய அணி 188 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஜோசப் பந்து வீச ஆரம்பித்தார் - அவ்வேளை ஸமித் இரண்டு பவுண்டரிகளுடன் நிதானமாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். கெமரோச், அல்சாரி ஜோசப் போன்றவர்களின் பந்து வீச்சு சவாலாகயிருக்கவில்லை. முதல் பந்தை வீசுவதற்காக ஓடிவந்த ஜோசப் ஆனால் அவரது ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு மீண்டும் பந்து வீச ஆரம்பித்தார். ஒவ்ஸ்டம்பிற்கு வெளியே 137 கிலோமீற்றர் வேகம் ஸ்மித் தடுமாறினார் துடுப்பை உரசிக்கொண்டு சென்ற பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது மூன்றாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஜஸ்டின் கிரீவ்ஸ் இவரும் முதல் டெஸ்டில் விளையாடுகின்றார் அந்த கட்ச்சினை பிடித்தார். நான் முதல் பந்திற்காக ஓடியவேளை பதட்டமாக உணர்ந்தேன் அதன் காரணமாகவே இடையில் நின்று மீண்டும் திரும்பி வந்து பந்துவீசினேன் மீண்டும் முதல்பந்திற்காக எனது மனதை உறுதியாக்கி கொண்டு வந்து பந்துவீசினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் ஸடீவ் ஸ்மித் துடுப்பெடுத்தாடுவதை வீடியோக்கள் மூலம் அவதானித்துள்ளேன். அவர் ஓவ் ஸ்டம்பிற்கு வெளியே பலவீனமானவர் என்பதை உணர்ந்தேன் அவர் அங்கும் இங்கும் திரும்பும் ஒருவர் என்பதால் ஒவ்ஸ்டம்பிற்கு மேலே பந்தை வீச தீர்மானித்தேன் அதேபோ பந்து வீசினேன்; பந்து சிறியளவு ஸ்விங் ஆனது துடுப்பின் நுனியில் பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிக்களிப்பில் அவர் மைதானத்தின் கிழக்கு பகுதியை நோக்கி ஓடினார், இன்னமும் அதிக தூரம் ஓடமுடியுமென்றால் நான் ஒடியிருப்பேன் அவ்வளவு மகிழ்ச்சியாகயிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/174240 சமர் ஜோசப்பின் 5 விக்கெட் வீழ்த்தும் காணொளி இணைப்பு கீழே www.cricket.com.au/videos/3860616/shamar-joseph-five-wicket-haul-debut-australia-west-indies-adelaide-oval-smith-labuschagne-green-bow Australia v West Indies 2023-24 | First Test | Day 1

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
தற்போது தான் இந்த அவியலை பார்த்தேன் இது பற்றி கொஞ்சம் விரிவாக எதிர் பார்க்கிறோம் 😭

யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது

2 months 1 week ago
யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் பல்வேறு நபர்களிடமும் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது தனிப்பட்ட வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பண பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1366404

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!

2 months 1 week ago
வரலாறு காணாத விலை உயர்வு : மரக்கறிகளின் விலையை தீர்மானித்தது யார்? வியாபாரிகள் தீர்மானித்த மரக்கறிகளின் விலையை விவசாயிகளின் தீர்மானத்திற்கேற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மரக்கறி விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை ரூ.2,500 ஆக உயர்ந்து வரலாற்றில் பதிவான அதிகூடிய விலையை பதிவு செய்துள்ளது. மேலும் போஞ்சி, கறி மிளகாய், வெண்டைக்காய், லீக்ஸ் மற்றும் கோவா போன்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், காய்கறி விலையை நிர்ணயிப்பவர் விவசாயி என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1366335

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி

2 months 1 week ago
மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி. மீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம் என அதன் தலைவர் ஜயசிறி விக்கிரமாரச்சி தெரிவித்தார். இதனிடையே கடந்த 15ம் திகதி மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல மீன் 600 ரூபாவாகவும், 1 கிலோ அலகொடுவா 900 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1366367

மின் கட்டணம் செலுத்தாத 10 இலட்சம் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு - காஞ்சன

2 months 1 week ago
80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிப்பு! கடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துண்டிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து 1,909 மில்லியன் ரூபாய் மீளப்பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் தாம் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று மீதி கொடுப்பனவுகளை பின்னர் வழங்க முடியும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1366371

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

2 months 1 week ago
இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்! இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கவலையளிக்கின்றது. இத்தகைய கைது நடவடிக்கைகளால் மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவர்களிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்தத் தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டும். அத்துடன் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1366361

அமெரிக்க கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்!

2 months 1 week ago
அமெரிக்க கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்! செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. ஹூதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார். காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இலக்குகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1366391
Checked
Thu, 03/28/2024 - 10:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed