ஊர்ப்புதினம்

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

2 weeks 1 day ago

03 Dec, 2025 | 04:55 PM

image

இலங்கைக்கு காலாவதியான பொருட்கள் வழங்கியதாக பரவும் செய்தியை பாகிஸ்தான் கடற்படை மறுத்துள்ளது. 

இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தன என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கடற்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களி்ல் பரப்பிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கடற்படை,

பேரிடர் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த பைகள், உணவுப் பொருட்களுக்கானவை அல்ல, அவை ஏற்கனவே பாகிஸ்தான் கடற்படை பயிற்சி கப்பலில் இருந்த பழைய பைகள், இலங்கைக்கு அவசரமாக உதவி அனுப்ப வேண்டியிருந்ததால், அந்த பைகள் விரைவாக கொண்டுசெல்லும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பைகளுக்குள் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் புதியதும், காலாவதி நிறைவடையாதவையும் ஆகும்.

“இலங்கை மக்களுக்கு உதவுவதில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். பொய்யான தகவல்கள் மற்றும் பிரசாரங்களுக்கு எவரும் உள்ளாக வேண்டாம்.” டித்வா புயல் காரணமாக இலங்கையில் மிகப்பெரிய நிவாரண தேவை நிலவுகின்ற நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் மீட்பு முயற்சியை திசைதிருப்பக் கூடாது.


போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ? | Virakesari.lk

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்.

2 weeks 1 day ago

WhatsApp-Image-2025-12-03-at-15.08.37-1.

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்.

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான சூழலிலும், யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகியது. இப்போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு குறித்த போட்டிற்கு ஆதவன் தொலைக்காட்சி , ஆதவன் வானொலி, தமிழ் எப்.எம் மற்றும் ஒருவன் ஆகியன ஊடக அனுசரணை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

WhatsApp-Image-2025-12-03-at-15.08.38-1.jpeg?resize=600%2C450&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-15.08.37.jpeg?resize=600%2C450&ssl=1

இன்றைய தொடக்க நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ளு. அறிவழகன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு சங்கரன் ராஜகோபால், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி ளு. சிவன்சுதன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

WhatsApp-Image-2025-12-03-at-14.06.39-1.jpeg?resize=600%2C338&ssl=1
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு பெருமை மிக்க நிலத்தில் உலகத் தரத்திலான சதுரங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் போட்டி, இலங்கை சதுரங்க வரலாற்றில் புதிய மைல்கல்லாக திகழ்கிறது. மொத்தம் ரூ. 24 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவது, இதுவரை நாட்டில் நடைபெற்ற எந்த சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் இல்லாத மிக உயர்ந்த பரிசாகும்.

WhatsApp-Image-2025-12-03-at-15.08.38.jpeg?resize=450%2C600&ssl=1

கடந்த ஆண்டுகளின் சிறப்பான சாதனையாளர்கள்

இந்தப் போட்டி முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமானது.

முதல் JICC 2023 சாம்பியன்:  இந்தியா – நாக்பூரைச் சேர்ந்த IM Anup Deshmukh

இரண்டாவது JICC 2024 சாம்பியன்:  இந்தியா – மும்பையைச் சேர்ந்த IM Nubairshah Shaikh

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய வீரர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதை அடுத்து, இந்த ஆண்டும் இந்தியாவின் பல முன்னணி வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டியில் அதிக ஆவல் நிலவுகிறது.

WhatsApp-Image-2025-12-03-at-14.06.46-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.38.jpeg?resize=600%2C338&ssl=1

இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்கள்

இந்த ஆண்டு JICC பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட உயர்தர ரேட்டிங் வீரர்கள் பங்கேற்கின்றனர். மலேசியா, பங்களாதேஷ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த

ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகள்:

Mechalite and Corporate Sector

School Category (Open & Women’s)

Higher Education Sector

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகைகள், கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

உள்ளூர் வீரர்களுக்கான உயர்வான வாய்ப்பு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டியின் முக்கிய சாதனைகளில் ஒன்று, உள்ளூர் வீரர்களுக்கு FIDE Rating பெறும் வாய்ப்பை வழங்குவதாகும்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 72 புதிய வீரர்கள் தங்கள் முதல் சர்வதேச ரேட்டிங்கைப் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மேலும் பல வீரர்கள் தங்கள் ரேட்டிங்கை மேம்படுத்தவும் அல்லது புதிதாகப் பெறவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

போட்டியின் பெருமை மற்றும் தாக்கம்

சாதாரண விளையாட்டு நிகழ்வைத் தாண்டி, இது யாழ்ப்பாணத்திற்கும் இலங்கைக்கும் ஒரு முக்கிய மைல்கல். சர்வதேச தரத்திலான போட்டி அனுபவத்தை நாட்டிற்கு கொண்டு வருவது உள்ளூர் திறமையாளர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவது. நாடுகளுக்கிடையேயான கலாச்சார நட்புறவை வலுப்படுத்தும் மேடையாக அமைவது. யாழ்ப்பாணம் அறிவு, பண்பாடு, சிந்தனை ஆகியவற்றின் மையமாக இருப்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், இந்தப் போட்டி மிகுந்த சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச மேடையைத் திறக்கிறது. உலகத்துடன் போட்டியிடும் திறனை உருவாக்குகிறது. யாழ்ப்பாணத்தை உலக சதுரங்க வரைபடத்தில் மேலும் உயர்த்துகிறது. அடுத்த சில நாட்களில் பல அதிரடி ஆட்டங்கள் சதுரங்க ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. . இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும்.

WhatsApp-Image-2025-12-03-at-14.06.46.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.45-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.45.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.44.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.43.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.40-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.40.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.39.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.38-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.37.jpeg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1455021

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

2 weeks 2 days ago

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

22 மாவட்டங்களை “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் விளைவுகளால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானியை பதிவாளர் ஜெனரல் சசிதேவி ஜலதீபன் வெளியிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1454913

யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

2 weeks 2 days ago

யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் விளக்கம்

அண்மைய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அதிகரித்து வருகின்றது.இதனால். ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் இவ்வாறு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரம் இருவர் உயிரிழந்தனர், கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த வருடமும் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி 8 பேர் உயிரிழந்தனர். எனவே, இந்த நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.


எலிக்காய்ச்சல் ஒருவகை பக்ரீறியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர், வயல்நீர், சேற்று நிலங்களில் கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில்,வயல் நிலங்களில். சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலுக்குள் செல்கின்றன. கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றன இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் ஏற்பட்டால், சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவிக்கும். இந்த நோயானது பெரும்பாலும் வயல்கள், சேற்று நிலங்களில் பயிர்செய்யும் விவசாயிகள் மத்தியிலும், கடல்நீரேரிகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், வெள்ள நீருடன் தொடுகையில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை -செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும். வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும்.


வயல்களில், சேற்றுநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவக அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப்பெற்றுக்கொள்ளலாம் என்றுள்ளது.

193955607.jpg


யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

2 weeks 2 days ago


1501636532.jpeg

யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன்

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

சீரற்ற காலநிலை காரணமாக தேங்கியிருந்த வெள்ளத்தில் இருந்து பெருமளவு கால்நடைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுகின்றன. வடமராட்சி கிழக்கு புன்னையடிப் பகுதியில் பெருமளவான கால்நடைகள் வீதிகளில் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு!

2 weeks 2 days ago

02 Dec, 2025 | 12:34 PM

image

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக  அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும்  அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு! | Virakesari.lk

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை!

2 weeks 2 days ago

02 Dec, 2025 | 03:51 PM

image

மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 01 ஆம் திகதி வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  58 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

10.jpg

09.jpeg

08.jpg


மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை! | Virakesari.lk

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்

2 weeks 2 days ago

02 Dec, 2025 | 06:18 PM

image

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். 

எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....  

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.  

இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். 

ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

 வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். 

அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள்

2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர்.

ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும். 

எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது. 

இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.  

நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். 

அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். 

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk

நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம்

2 weeks 2 days ago

நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம்

Published By: Vishnu

02 Dec, 2025 | 06:41 PM

image

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ம் திகதி மண்சரிவு மற்றும் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குறித்த தோட்டத்தை சேர்ந்த 65குடும்பங்களை சேர்ந்த 250பர் பாதிக்கபட்டு தற்காலிகமாக உடஹேன்தென்ன கிறேஹெட் இல 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர் லயன் குடியிருப்பை சேர்ந்த 13வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது கற்பறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08பேர் சடலமாக மீற்கப்பட்தாகவும் இன்றைய தினமும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு  மேலும் 05 பேர் கானாமல் போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கபாபட்டு வருவதாக குருந்துவத்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஏழு பேரின் சடலங்களும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .இந்த விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் மண்ணில் புதையுண்ட சடலங்களை மீட்பதற்கு இரானுவத்தினரோ பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கபாபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_20251202_130906_4.jpg

IMG_20251202_130959_2.jpg

IMG_20251202_131029_1.jpg

IMG_20251202_131101_3.jpg

IMG_20251202_133013_9.jpg

IMG_20251202_131444_1.jpg

IMG_20251202_131328_2.jpg

IMG_20251202_131113_7.jpg

IMG_20251202_134119_0.jpg


நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம் | Virakesari.lk

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2 weeks 2 days ago

PUTIN.jpg?resize=750%2C375&ssl=1

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் செய்தியில் அவர்,

மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் துணை நிற்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவை புட்டின் கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட இலங்கையில் பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த செய்தி வந்துள்ளது.

https://athavannews.com/2025/1454770

இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள்

2 weeks 3 days ago

இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள்

200176691.jpg

கிளிநொச்சி உமையாள்புரம் கிராமஅலுவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கறுப்புப் பட்டிகளுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிராம அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் வெள்ளப் பேரிடர் உதவி வழங்கலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கினார் என்று கிராம அலுவலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனைக் கண்டித்து ஒரு வாரத்துக்குக் கறுப்புப் பட்டியுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

https://newuthayan.com/article/இளங்குமரன்_எம்.பி.யைக்_கண்டித்து;_கறுப்புப்_பட்டியுடன்_கிராம_அலுவலர்கள்

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்!

2 weeks 3 days ago

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்!

adminDecember 2, 2025

5-4.jpg?fit=1170%2C816&ssl=1

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 443 பேர் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன.

சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 1264 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 040 அங்கத்தவர்கள் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

11 046 குடும்பங்களை சேர்ந்த 34ஆயிரத்து 718 பேர்  நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/223446/

நிவாரணங்களுடன் வந்தது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் விமானம்

2 weeks 3 days ago

02 Dec, 2025 | 09:58 AM

image

இலங்கை முகங்கொடுத்துள்ள பேரிடர் அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அனுப்பிய முதல் நிவாரண உதவி விமானம் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 48 தற்காலிக கூடாரங்கள், ஒரு குடும்பத்திற்குப் 14 நாட்களுக்கு போதுமான 2,592 உணவு பொதிகள், கூடாரங்கள், மீட்பு படையினருக்கான உபகரணங்கள், கடினமான பாதைகளில் செலுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பெருமளவு நிவாரணப் பொருட்கள் அடங்கியிருந்தன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படைக்கு சொந்தமான, உலகின் மிகப் பெரிய சரக்கு கொண்டு செல்லும் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் C-17 வகை விமானம், அபுதாபி நகரிலிருந்து இந்த நிவாரண சரக்குகளை ஏற்றி இலங்கைக்கு வந்தது.

மேலும் இதே போன்ற மேலும் 3 விமானங்கள் எதிர்வரும் சில சில நாட்களுக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வரவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிவாரண விமானம் வந்தடைந்த சமயத்தில், இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை தூதர் ரஷீத் அல் மஸ்ரூயி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமித்து ரம்புக்வெல்ல, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் குழுவொன்றும், இலங்கை இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.

633abea9-d3e9-4802-a2fc-35bd0e827e48.jpg

61d5ec44-3b09-46e5-a0da-fe22cfe5b562.jpg

b555ad86-a4b4-4cdd-b02b-56998bd7b479.jpg

edf4dd93-2408-4f4b-aeb0-2df743bc4ae3.jpg

https://www.virakesari.lk/article/232204

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரணக் குழுக்களுக்கு பொலிஸ் விடுத்துள்ள அறிவிப்பு

2 weeks 3 days ago

Published By: Digital Desk 3

02 Dec, 2025 | 09:54 AM

image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, தற்போதைய வீதி மறுசீரமைப்பு பணிகளுக்கு  இடையூறாக இருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர்,

இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகள். 

எனினும், தற்போது வீதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும்,  வீடியோக்களை பதிவு செய்யவும் நிறுத்தி வைக்கப்படும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளால்  இந்தப் பகுதிகளில் செயல்படும் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வலயங்களுக்குள் நுழைபவர்களுக்கும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கான நிவாரணங்களை விநியோகிப்பதற்கு முறையாக ஒருங்கிணைக்க, அனைத்து நிவாரணக் குழுக்களும் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை (OIC) தொடர்பு கொள்ளுஙங்கள்.

நிவாரணங்களை  வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அனர்த்த செயல்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் சிறப்பு செயல்பாட்டு மைய தொடர்பு இலக்கங்கள்:

071-8595884

071-8595883

071-8595882

071-8595881

071-8595880

https://www.virakesari.lk/article/232205

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு

2 weeks 3 days ago

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு

Published By: Vishnu

02 Dec, 2025 | 03:58 AM

image

(நா.தனுஜா)

மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன.

அதற்கமைய இலங்கை உள்ளடங்கலாக பாரிய அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

'மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனை அடைகிறோம்' என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, இந்நாடுகளின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/232189

மன்னாரில் குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு, மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு

2 weeks 3 days ago

01 Dec, 2025 | 04:03 PM

image

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை (01) காலை ஒரு தொகுதி உலர் உணவு  மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் திங்கட்கிழமை (01) காலை 10.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

குஞ்சுக்குளம் மற்றும் மாதா கிராம பகுதியில் சுமார் 304 குடும்பங்களைச் சேர்ந்த 133 நபர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை, ஆலயம், பொது மண்டபங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் பணியாளர்கள் இணைந்து குறித்த பொருட்களை வானூர்தி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

WhatsApp_Image_2025-12-01_at_1.13.05_PM.

WhatsApp_Image_2025-12-01_at_1.29.00_PM.

WhatsApp_Image_2025-12-01_at_1.13.01_PM.

WhatsApp_Image_2025-12-01_at_1.28.59_PM.

https://www.virakesari.lk/article/232147

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு

2 weeks 3 days ago

01 Dec, 2025 | 04:50 PM

image

(எம்.மனோசித்ரா)

தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில்  புதன்கிழமை (03) கூடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார்.

இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும். 

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு | Virakesari.lk

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன?

2 weeks 3 days ago

01 Dec, 2025 | 04:44 PM

image

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை. 

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. 

ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க. 

இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள். 

டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார்.

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? | Virakesari.lk

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

2 weeks 3 days ago

அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.

அனர்த்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நேரத்தில், சில நபர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு இருப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் தவறான செயல் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த அனர்த்த காலத்தில்  முழு நாடும்  ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இலங்கை பொலிஸ் சார்பாக தான், பொதுமக்களை கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனர்த்த நிவாரண முகாம்களிலும், பாதித்த பகுதிகளிலும் சில குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் பாலியல் வல்லுறவு, அத்துமீறல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், அனர்த்தத்தினால் பாதித்த மக்களின் நலனுக்காக அரசாங்கம் செயற்படுத்தும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரின் கௌரவமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது என்றும், அதன்போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ,விமான நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும். 

சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு

2 weeks 3 days ago

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லையென முறைப்பாடு

01 Dec, 2025 | 10:48 AM

image

மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி வர முடியாத மக்களுக்கு கடற் படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக  இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் பொலிஸார் ,இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் தொடர்ச்சியாக மக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடம் பெயர முடியாத மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கான சமைத்த உணவை வழங்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

 திங்கட்கிழமை (01) காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. எனவே மக்களின் அவசர நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WhatsApp_Image_2025-11-30_at_12.15.11_AM

WhatsApp_Image_2025-11-30_at_12.15.11_AM

WhatsApp_Image_2025-11-30_at_12.15.11_AM

https://www.virakesari.lk/article/232118

Checked
Fri, 12/19/2025 - 05:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr