ஊர்ப்புதினம்

பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு

1 week 4 days ago
பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் உத்தரவு

 

 

1605327486palitha3

பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெரும உட்பட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

மத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கண்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றது.

சடலத்தை புதைக்க முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர்.

அதனையடுத்து உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் வைத்தார்.

இதையடுத்து பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

குற்றச் செயல்களைத் தடுக்க பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி- நீதி அமைச்சர்

1 week 4 days ago
குற்றச் செயல்களைத் தடுக்க பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி- நீதி அமைச்சர்

 

 

 

Thalatha Athukorala

அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது தடை செய்யப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாம் மனிதர்களாக முன்னேறிச் செல்வது அவசியம். அந்த வகையில் எமது பிள்ளைகள் மிலேச்சத்தனமானவர்களாக வளர்ந்து விடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டக் கல்வியை பாடசாலைக் கல்வியில் உட்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் ஆரம்பித்து க. பொ. த. உயர் தரத்தில் இதனை ஒரு பகுதியாக நாம் உட்படுத்தவுள்ளோம்.

 
 
இரத்தினபுரி கஹவத்தை ஆரம்ப பாடசாலையில் இரண்டு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவடைந்தது ! பிரதமர் ரணிலுடனான கலந்துரையாடல் குறித்து சஜித் கூறுவது !

1 week 4 days ago

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியுமென அமைச்சரும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக இன்று இரவு அமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச  அலரி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுற்ற நிலையில் அலரிமாளிகைக்கு வெளியில் நின்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

அதோபோன்று எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம்.

ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காணமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிங்களம், பௌத்தம், கொவிகம, ' வேட்பாளர் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் ; வாசுதேவ

1 week 4 days ago

சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்று பழுத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கிறார்.

சமூக ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் அவரிடம் செய்தியாளர் சிங்கள பௌத்தர் ஒருவரினால் மாத்திரம் தான் ஜனாதிபதியாக வரமுடியுமா என்று கேட்டபோது அவர் சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டு வேட்பாளர் கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தாலேயே வெற்றி கிட்டும் என்று குறிப்பிட்டார். 

ஆனால், உடனடியாகவே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானதன் மூலமாக சாதி அமைப்புமுறையை தகர்த்ததையும் நினைவுபடுத்த வாசுதேவ தவறவில்லை.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாசுதேவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவை ஆதரிக்கிறார். 

பிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள -- பௌத்த -- கொவிகம முக்கியஸ்தர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரேமதாச ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி நிலவிய காலத்து சூழ்நிலை அவசியப்படுத்திய தேவையின் காரணமாகவே   ஜனாதிபதியாக வந்தார்.என்றாலும் கூட அன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த உயர்சாதி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள்.

தற்போது சிங்கள -- பௌத்த -- கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக வெற்றிபெற முடியும்.ஜனாதிபதியாக சிங்கள -- பௌத்த -- கொவிகம மாத்திரமே தெரிவுசெயயப்பட முடியும் என்ற மனநிலையே நாட்டில் நிலவுகிறது. ஜனாதிபதி பிரேமதாசவின் நியமனத்துடன் நாம் நிப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியே வந்தோம்.அதை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயவேண்டும் என்று வாசுதேவ கூறினார்.

கொழும்பில் சாதி முறைமை குறிப்பிட்ட அளவுக்கு  தவிர்க்கப்பட்டுவிட்டது என்பதை ஒத்துக்கொண்ட நாணயக்கார, வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சாதிமுறைமை உறுதியானதாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இன்று சஜித் பிரேமதாச முகங்கொடுக்கின்ற பிரச்சினை போன்றே அன்று அவரின் தந்தையார் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சித்ததை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உயர்மட்டத்தவரும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுகின்றவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள் என்று கூறிய அவர், தேசிய உடையின் தாக்கத்தையும் மக்களின் வாக்குகளைக் கவருவதில் அந்த உடைக்கு இருக்கும் ஆற்றலையும் பற்றி குறிப்பிடுகையில், " அந்த உடை மக்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதால் தாக்கம் ஒன்றைக் கொணடிருக்கிறது.மக்கள் தனிப்பட்ட முறையில் தாங்கள் தேசிய உடையை அணிவதில் ஆர்வத்தைக் காட்டுவதில்லை என்ற போதிலும், தங்களது தலைவரின் ஊடாக தேசிய அடையாளம் வெளிக்காட்டப்படுவதை விரும்புகிறார்கள்" என்று விளக்கமளித்தார்.

சிங்கள பௌத்த தலைவர் ஒருவர்தான் நாட்டுக்கு தேவையா என்று நாணயக்காரவிடம் கேட்டபோது, " எமக்கு சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை, சகல இனங்களையும் சேர்ந்த மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய  இலங்கைத் தலைவரே தேவை.எவ்வாறெனினும், சிங்கள பௌத்தர்களே நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால், தேரர்தல் ஒனறில் சிங்கள பௌத்தர்களின் முன்னிபந்தனை இல்லாமல் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது கஷ்டமான காரியமேயாகும்.எனவே, சிங்கள பௌத்த சக்திகளின் செல்வாக்கு இல்லாமல், முழு நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் ஒருவரைக் கொண்டுவருவது கஷ்டமானதேயாகும் " என்று பதிலளித்தார்.

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடாது.ஆனால், பிரதானமாக அவர்களே பெரும்பான்மையினராக ஆதிக்கநிலையில் இருப்பதால் அவர்களின் கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கிறது.

சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக இருப்பதால், சிங்கள பௌத்தத்தின் மீது அதன் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதால் அந்த நியமங்களை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.ஆனால், அந்த காரணத்துக்காக இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குத்தான் சொந்தமானது என்று நாம் உரிமைகோரக்கூடாது என்றும் 80 வயதான நாணயக்கார கூறினார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய நியமிக்கப்படுவதை நாணயக்கார முன்னர் எதிர்த்துவந்தார். இப்போது அவரே வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அது குறித்து கேட்டபோது கோதாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் மீதான தனது கண்டனப்பார்வை மாறிவிட்டது என்று பதிலளித்தார்.

https://www.virakesari.lk/article/64551

வாக்குவேட்டைக்காக தமிழ் மக்களை பந்தாட இனி எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை

1 week 4 days ago

வாக்கு வேட்டைக்காக தமிழ் மக்களை பந்தாட இனி எவருக்கும் இடமளிக்கப் போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நாட்டை ஆட்சி செய்த ஆட்சியில் இருக்கின்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும், அதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், உண்மையாக செயற்படுகின்ற புதிய முகம் ஒன்று வந்தால், ஆதரவு வழங்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.  என்றபிரைஸ் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி கூடத்தை நேற்று பார்வையிட வந்த ஈ.சரவணபவன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

NW06.jpg
 
 

 
 

 

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சர்வகட்சி மாநாட்டை நடாத்தி பின்னர் அதனை கலைத்துவிட்டு, காலத்தை வீணடித்தார். அதன்பின்னர், ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவை அமைத்து காலத்தை வீணடித்தது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை ஒரிரு தினங்களில் உருவாக்க முடியுமாயின் ஏன் இனப்பிரச்சினைத் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பை ஏன் உருவாக்க முடியாதென்றும் சரவணபவன் கேள்வி எழுப்பினார்.

வடமாகாணம் கல்வி சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் 9வது மாகாணமாகவே இன்னும் இருக்கின்றது. ஏனைய மாகாணங்களுக்குரிய அனைத்து விதமான அபிவிருத்திகளும் வந்து, ஏனைய மாகாணங்களுடன் சம அளவில் இருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டாலே, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்.

சகல விதத்திலும், பின்தங்கிய நிலையில் வடமாகாணம் உள்ளது. வடமாகாண சபைக்கும் உரிய அதிகாரமும், உரிய நிதியும் வழங்கப்பட்டிருந்தால், அதனூடாக மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். என்றபிரைஸ் கண்காட்சி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முதல் நாள் கண்காட்சியைப் பார்வையிட வந்த போதும், என்னால், அவற்றை ஒழுங்காக அவதானிக்க முடியாமல் இருந்தது.

தற்போது மிக ஆறுதலாக ஒவ்வொரு கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்ட போது, ஒரு வெளிப்படைத் தன்மை காணக்கூடியதாக இருந்தது.

எமது மக்களை சரியான முறையில் இந்த கடன் திட்டம் சேருமாக இருந்தால், உரிய பலனை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து விசு கருணாநிதி, கே. அசோக்குமார், சுமித்தி தங்கராசா

http://www.thinakaran.lk/2019/09/10/உள்நாடு/40051/வாக்குவேட்டைக்காக-தமிழ்-மக்களை-பந்தாட-இனி-எவருக்கும்-இடமளிக்கப்-போவதில்லை

தமிழர்கள் சுதந்திரத்துக்காகவே போராடுகின்றனர்

1 week 4 days ago

-எஸ்.நிதர்ஷன்

 

தமிழர்கள் சுதந்திரத்துக்காகவே போராடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஆகையால் தமிழர்களின் உரிமைகள் உரித்துகள் வழங்கப்பட்டு, சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறினார்.

image_ce171fbce9.jpg

அத்துடன், நாட்டில் தற்போது தேர்தல் வரவிருப்பதால், பலரும் பல தீர்வுகளை முன்வைத்து பொய்களைச் சொல்வார்கள் என்பதால், சரியான முடிவை எடுத்து செயற்பட வேண்டுமெனவும், அவர் கூறினார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசலை எனும் வேலைத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதியை, நேற்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், தேசியப் பாடசாலைகளுக்கு கொடுக்கின்ற அத்தனையும் மாகாணப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட கவனம் செலுத்தப்பட்டு போதுமான வளங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தாம் அதிகாரங்களையும் உரிமைகளையும் உரித்துகளையும் கேட்கின்ற போது, இருக்கின்றதை பறிக்க அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த அவர், இருக்கிறதைப் பறிப்பதை விட்டுவிட்டு, கொடக்கப்பட வேண்டியவற்றை கொடுக்க வேண்டுமென்றும் கோரினார்..

தமது பிரச்சினைக்கான தீர்வுக்காக கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தை ஆதரித்ததாகத் தெரிவித்த அவர், ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை முற்றுப்பெறாத நிலையே காணப்படுகிறதெனவும் ஆகவே அந்த நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு தமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், ஆங்கிலேயர்கள், இந்த நாட்டிலிருந்த வெளியேறியதால் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையெனவும் அந்தச் சுதந்திரத்த:க்காகவே தமிழர்கள் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழர்கள்-சுதந்திரத்துக்காகவே-போராடுகின்றனர்/71-238234

பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சி இடையே விரிசல் அதிகரிப்பு

1 week 4 days ago
பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சி இடையே விரிசல் அதிகரிப்பு  

SLFP-SLPP-300x187.jpg

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இருதரப்புக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலில் பொதுச் சின்னத்தில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.

எனினும், அந்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி விருப்பம் வெளியிட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுக்கள் இழுபறிக்குள்ளாகியிருக்கும் நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என பொதுஜன பெரமுன தலைவர்கள் பலரும் கூறத் தொடங்கியுள்ளனர்.

தனித்துப் போட்டியிட்டால் , சுதந்திரக் கட்சிக்கே பாதிப்பு என்றும் அவர்கள். எச்சரித்து வருகின்றனர்.

அதேவேளை, தமது ஆதரவின்றி எந்தக் கட்சியினாலும் 47 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாது என்று சுதந்திரக் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2019/09/10/news/39943

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு

1 week 4 days ago
காணாமல் போனோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு

8305fb8f2ea5b7f85aaac2dc3f7e75b1_XL

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நவம்பர் மாதம் முதல் 6000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் போன்று தெற்கிலும் காணாமல் போனோரின் குடும்பத்திற்கும், பொலிஸ் மற்றும் முப்படைகளின் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/189113/

ரணில், சஜித், கரு இன்று முக்கிய சந்திப்பு

1 week 4 days ago
ரணில், சஜித், கரு இன்று முக்கிய சந்திப்பு  

ranil-karu-sajith-300x200.jpg

அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு, இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஐதேகவின் இந்த மூன்று தலைவர்களும் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுப்பார்கள் என்று பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்த போதும், சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய பிற்போடப்பட்டது.

இன்றைய பேச்சுக்களில் தான் பங்கேற்பேன் என்றும், தனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் யாழ்ப்பாணத்தில் நேற்று சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.

அத்துடன் தான் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயம் என்றும், அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/09/10/news/39948

“புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என நான் கூறவில்லை.” - முரளிதரன்

1 week 5 days ago
“புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என நான் கூறவில்லை.”
September 10, 2019

Muttiah-Muralitharan.jpg?resize=800%2C45

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியமை குறித்து முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலருக்கு அச்சம் என்றால் என்னவென்று தெரியாது என கூறியிருந்த அவர், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போதும் தாம் அச்சத்துடன் இருந்ததாகவும், தனது வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு நாள் எது என்று கேட்டால், அது 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த ஆண்டு என்றும், இலங்கையில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை, இல்லாது செய்யப்பட்ட ஆண்டே அது எனவும் அவர் சுட்டிக்காட்டிருந்தார். எனினும்,  2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், இலங்கை மக்கள் மீண்டும் ஒரு அச்சத்துடனான சூழ்நிலையை சந்தித்துள்ளனர் என்றும் இதற்கு  நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் எனவும் முத்தையா முரளிதரன் கூறுகின்றார். அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்களுக்கு யார் சரியான பாதுகாப்பை வழங்குவார்களோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் போது, தனது தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க என்ன கூறினாலும், அதனை தான் செய்ததாகவும், ஏனெனில், கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க தன்னை பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார் என சிலர் கூறியதை தான் கேட்டதாக தெரிவித்த அவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தால், நாட்டை ஆட்சி செய்வது யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அச்சமின்றியும், சந்தேகமின்றியும் வாழக்கூடிய சூழ்நிலையை யார் உருவாக்குகின்றார்களோ, அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

தான் பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள முரளிதரன்  “தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என தெரிவித்தார். தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

 

http://globaltamilnews.net/2019/130250/

பிள்ளையானை பெருமாள் கண்டார்…

1 week 5 days ago
பிள்ளையானை பெருமாள் கண்டார்…

September 9, 2019

 

DSCF0174.JPG?resize=1226%2C920

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள்  இன்று திங்கட்கிழமை (9.9.19) மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  இச் சந்திப்பில்  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DSCF0179.JPG?resize=1226%2C920

 

http://globaltamilnews.net/2019/130247/

இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

1 week 5 days ago
%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-720x450.jpg இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.

இந்த கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் உரையாற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தபோதும் இலங்கை விவகாரங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இலங்கை  இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அண்மையில் கவலை வெளியிட்டிருந்தார்.

எனினும் இந்த விடயம் குறித்தும் நேற்றைய உரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://athavannews.com/இலங்கை-விவகாரங்கள்-குறித/

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் -வர்த்தமானி வெளியீடு

1 week 5 days ago
Government_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped-720x450.jpg பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் -வர்த்தமானி வெளியீடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்  2140/15  என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் நியமனம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட அதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பதி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பாதுகாப்பு-அமைச்சின்-கீழ/

வேட்பாளர் யார் என்பதனை விட தமிழ் வாக்கு குறித்து நாடி பிடிப்பதிலே குறியாக உள்ளனர்

1 week 5 days ago

தென்னிலங்கையிலே யார் வேட்பாளர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் நாடி பிடிக்கிறார்கள். தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதையே நாடி பிடித்துப் பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கூறினார். 

வரணி இடைக்குறிச்சி மேற்கு நவா சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,  நாங்கள் இப்போது சின்னச் சின்ன குழுக்களாக சின்னச் சின்ன சமூகங்களாக வேறுபட்டுப் போய் இருக்கிறோம், அதனை அரசாங்கமோ, பேரினவாதிகளோ திட்டமிட்டுச் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் பலமாக ஒற்றுமையாக நின்றால் அவர்களால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. 

எங்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.  மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எல்லாம் மாறி மாறி வந்த தேசியக் கட்சிகள் எல்லாம் எங்களது இனத்தின் மீது சவாரி விடுவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். எமது பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி வழங்குவதில் அவர்கள் எந்த கரிசனையும் கொண்டிருக்கவில்லை. 

இப்போது தென்னிலங்கையிலே யார் வேட்ப்பாளர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் நாடி பிடிக்கிறார்கள். கோத்தபாய கேட்கிறாரா அல்லது சஜித் கோட்கிறாரா ரணில் விக்கிரமசிங்க கேட்கிறாரா என்பதல்ல அவர்களின் பிரச்சினை. 

அவர்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதனைப் பார்கிறார்கள்.  

http://www.thinakaran.lk/2019/09/09/அரசியல்/40014/வேட்பாளர்-யார்-என்பதனை-விட-தமிழ்-வாக்கு-குறித்து-நாடி-பிடிப்பதிலே-குறியாக

‘பொலிஸாரைப் பிடித்து கொடுத்தால் 5,000 ரூபாய் தருவார்களா?’

1 week 5 days ago

-க. அகரன்

 

மதுபோதையில் கடமைசெய்யும் பொலிஸாரைப் பிடித்து கொடுத்தால், தமக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவார்களேயானால் எத்தனையோ பொலிஸாரைக் காட்டிகொடுப்போமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூறன் தெரிவித்தார். 

 

வவுனியாவில், நேற்று  (08) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அதிகளவான விபத்துகள் இந்த மாவட்டத்திலே அல்லது மாகாணத்திலே இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் இங்கு சாரதி பயிற்சி நிலையங்கள் சரியான முறையிலே இயங்குவதில்லையெனவும் கூறினார்.

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுகொள்வதற்கான  பரிசோதனையில் சித்தி பெறுவதற்கு, 5 ஆயிரம் ரூபாய் தருமாறு சாரதி பயிற்சி நிலையங்களில் கேட்கப்படுவதாகத் தெரிவித்த அவர்,  இது தவறான விடயமெனவும் கூறினார்.

அத்துடன் மது போதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை பிடித்தால் பொலிஸாருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கபணம் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆனால் பொலிஸாரே இன்று மதுபோதையுடன் கடைமையில் இருந்துதான் சாரதிகளை கைதுசெய்கிறார்களெனவும் குற்றஞ்சாட்டினார்.

அவ்வாறான பொலிஸாரைப் பிடித்து கொடுத்தால் 5 ஆயிரம் ரூபாய் பணம் தமக்கு தருவார்களேயானால், எத்தனையோ பொலிஸாரைக் காட்டிகொடுப்போமெனவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பொலிஸாரைப்-பிடித்து-கொடுத்தால்-5-000-ரூபாய்-தருவார்களா/72-238145

கிளிநொச்சியில் 51 வீடுகளைக்கொண்ட 4 மாதிரி கிராமங்களை மக்களிடம் கையளித்தார் சஜித்

1 week 5 days ago
Sajith-Kilinochchi.jpg கிளிநொச்சியில் 51 வீடுகளைக்கொண்ட 4 மாதிரி கிராமங்களை மக்களிடம் கையளித்தார் சஜித்

அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் 51 வீடுகளைக்கொண்ட 4 மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அமைச்சரினால் நான்கு மாதிரி கிராம்களும் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அமைச்சரினால் 1 இலட்சம் பெறுமதியான கடன் 25 பேருக்கும், தலா ஒரு இலட்சம் பெறுமதியானதும், நாற்பதினாயிரம் ரூபாய் மானிய அடிப்படையிலுமான கடன் 25 பேருக்கும், 200 பெறுமதியான கடன் 50 பேருக்கும் வழங்கப்பட்டன.

அத்தோடு 120 பேருக்கு 39 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களிற்கு தலா 50 ஆயிரம் பெறுமதியான காசோலைகளும், 60 பயனாளிகளிற்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Sajith-Kilinochchi3.jpg

http://athavannews.com/கிளிநொச்சியில்-51-வீடுகளை/

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்! : சஜித்

1 week 5 days ago

(தி.சோபிதன்)

ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

sajith.jpg

காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாச முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச கண்காட்சியையும் பார்வையிட்டார். இதன் போது அங்கு வந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒருவரின் தாயார் சஜித் பிரேமதாசவுடன் பேசுவதற்காக அவரை நெருங்க முற்பட்டிருந்தார். 

இருந்த போதும் அவருடைய பாதுகாப்பு பிரிவினர் அந்த தாயாரை தடுத்து நிறுத்தி விட்டனர்.

இதன் போது அங்கு நின்ற யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டிடம் உரையாடிய குறித்த தாய் தான் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சஜித் பிரேமதாசவிடம் ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் ஏற்பாட்டில் அந்த தாய் அங்கு வைத்தே சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

இதன் போது அந்த தாயார் சஜித் பிரேமதாசாவை பார்த்து நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிகின்றோம்.

நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை தரவேண்டும்.

இதனை யாழ்.மாநகர முதல்வர் சஜித் பிரேமதாசவிற்கு சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச காணாமல் போனோர் விடயத்தில் நான் கரிசனையுடன் செயற்படுவேன். காணாமல் போனார் பற்றிய அலுவலகம் அதன் செய்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/64456

பௌத்த விகாரை வளாகத்தில் இந்து ஆலய மகா கும்பாபிசேகம் மட்டக்களப்பில் மத நல்லிணக்கம்

1 week 5 days ago

இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி  ஆலயத்தின் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வு மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது.

கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரிகைகள் ஆரம்பமாகி  தானிய வாசம் ,வாஸ்து சாந்தி ,,தூபி ஸ்தாபனம்  யாக பூஜைகள் இடம்பெற்று ஸ்ரீகண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு  இடம்பெற்றது.

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  சிறப்பாக நடைபெற்றது.

IMG_6817.JPG

 

 

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  அடியார்கள் புடை சூழ   அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக நடைபெற்றது .

தொடர்ந்து பிரதான  கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய  கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன பிரதம குரு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில்  நடைபெற்ற  மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வில் ஜெயந்திபுரம் கிராம  மக்கள்  கலந்து சிறப்பித்தனர் .

https://www.virakesari.lk/article/64348

IMG_6824.JPG

IMG_6857.JPG

IMG_6871.JPG

ஜனாதிபதித் தேர்தலுக்கு 17 வேட்பாளர்கள்

1 week 5 days ago
ஜனாதிபதித் தேர்தலுக்கு 17 வேட்பாளர்கள்
 

election

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாவது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகள் எழுத்து மூலமாகவும் மேலும் இரண்டு அரசியல் காட்சிகள் வாய்மொழி மூலமாகவும் தமக்கு அறிவித்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக ஒருவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பவர்கள் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/189062/

தமிழ்த்தேசியத்தினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு ; சி.வி.கே.சிவஞானம்

1 week 5 days ago

தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

c.v.k.-sivagnanam.jpg

வடக்குமாகாண சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர்மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சரியான தெரிவுகள் அறிவிக்கப்படவில்லை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பமான முடிவுகளே உள்ளது. சரியான தெரிவுகள் அறிவிக்கப்பட பின்னரே எமது முடிவுகள் வெளிவரும் 

குறிப்பாக தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய குறிப்பாக தமிழ்த்தேசிய இனம் தன்னுடைய கலை கலாச்சாரம் நிலம் மதம் அரசியல் உரிமை என்பனவற்றை கட்டமைப்புசார்ந்து பிரிக்கப்படாத நாட்டுக்குள் சுயாட்சி முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதை யார் உறுதிப்படுத்துகிறார்களே அதனை யார் தெற்கிலும் கூறுகிறார்களே அவர்களுடைய செயற்பாட்டின் அடிப்படையில் தான் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் இதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடி முடிவுகளை எடுக்கும் என்றார். 

https://www.virakesari.lk/article/64434

Checked
Sun, 09/22/2019 - 08:09
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr