ஊர்ப்புதினம்

ஓடுபாதையில் நரி: பேரழிவை தவிர்த்த கொழும்பு விமானம்

3 months 2 weeks ago

image_41f7654885.jpg

இலங்கையிலிருந்து வந்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த ஒரு பெரிய சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என டாக்கா ட்ரிப்யூன் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றது.

200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கியது.

விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டது.

விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தது.

தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக விலங்கை அகற்றி அப்புறப்படுத்தினர்.

சம்பவத்தை விமான நிலையத்தைச் சேர்ந்த பல அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.  பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பெரிய விபத்தைத் தடுத்த ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டினர்.


Tamilmirror Online || ஓடுபாதையில் நரி: பேரழிவை தவிர்த்த கொழும்பு விமானம்

மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்!

3 months 2 weeks ago

15 Oct, 2025 | 04:28 PM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்புக்காக முறையற்ற வகையில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  மனுஷ நாணயக்கார, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார். 

இதன்போது மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! | Virakesari.lk

கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது

3 months 2 weeks ago

கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது.

அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது.

S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது.

செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது | Virakesari.lk

கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள்

3 months 2 weeks ago

கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள்

15 Oct, 2025 | 11:59 AM

image

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில்  காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்  தாக்கம் காரணமாக  குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார்   கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும். 

குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ' சிவப்பு நண்டு'  என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால்  மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில்  பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு  முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு  இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2025-10-14_at_8.14.40_AM.

WhatsApp_Image_2025-10-14_at_8.14.40_AM_


கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் | Virakesari.lk

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு!

3 months 2 weeks ago

15 Oct, 2025 | 05:45 PM

image

இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.

நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் உடல் தளர்வு பயிற்சி நடைபெற்று முதல் விளையாட்டு நிகழ்வாக நீச்சல் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சைக்கிள் பவனி ஆரம்பிக்கப்பட்டு பின் விழிப்புணர்வு மரதன் ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் அனைத்து விளையாட்டுகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூர்ய திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் முரளீஸ்வரன், சுகாதார சேவைகள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் பூர்ணிமா விமலரத்தின, கமர்சியல் வங்கியின் கிழக்கு மாகாண கிளையின் முகாமையாளர் கஜரூபன், மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, சமூகத் தொண்டு நிறுவனங்கள், அரச திணைக்கள ஊழியர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மார்பக புற்றுநோய் கண்டறிதல் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-10-15_at_5.35.00_PM_

WhatsApp_Image_2025-10-15_at_5.35.02_PM_

WhatsApp_Image_2025-10-15_at_5.35.00_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.35.02_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.34.59_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.34.58_PM.

WhatsApp_Image_2025-10-15_at_5.34.57_PM.


இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு! | Virakesari.lk

உலக உணவு தினம் 2025 : சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் கைகோர்ப்போம் !

3 months 2 weeks ago

15 Oct, 2025 | 01:25 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

உலக உணவு தினம் 2025 ஐ “ சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம் ” என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த, நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது.

இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO ) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( IFAD ) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கான இலங்கை பிரதிநிதி மற்றும் பணிப்பாளர் பிலிப் வார்ட் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இலங்கையின் சவால்கள் மற்றும் நிலை:

இலங்கை தற்போது பட்டினி மற்றும் போசாக்குக் குறைபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், பொருளாதார ஸ்திரமின்மை, காலநிலை மாற்றங்கள் மற்றும் சந்தைச் சீர்குலைவுகளின் கூட்டு விளைவுகளால் குடும்பங்களும் சமூகங்களும் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கின்றன.

கிராமப்புற சமூகங்கள், குறிப்பாக சிறு பரிமாண விவசாயிகள், உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தைகள், நிதி வசதிகள் மற்றும் காலநிலைக்கு உகந்த தொழில்நுட்பங்களை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது என்பது உலகளாவிய கடமைகளை நிறைவேற்றுவதுடன், நாட்டினுள் மக்களின் வாழ்வாதாரம், கண்ணியம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் குறிக்கிறது.

ஐ.நா.வின் ரோமைத் தளமாகக்கொண்ட நிறுவனங்களின் பங்களிப்பு:

ஐக்கிய நாடுகள் சபையின் ரோம் நகரத்தை தளமாகக் கொண்ட உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD), மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன இலங்கையின் முயற்சிக்கு தனித்துவமான பலத்தை வழங்குகின்றன:

FAO: விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் தொடர்பான கொள்கை வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குகிறது.

IFAD: கிராமப்புற வளர்ச்சியில் முதலீடு செய்து, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துகிறது, அத்துடன் சிறு பரிமாண விவசாயிகளுக்கு நிதி அணுகலை மேம்படுத்துகிறது.

WFP: உடனடி உணவு மற்றும் போசனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மீண்டெழும் திறனையுடைய உணவு கட்டமைப்புகளை உருவாக்க பாடசாலை உணவுத் திட்டங்கள், அவசரகாலத் தயார்நிலை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துகிறது.

இந்த முயற்சிகளை ஒன்றிணைத்து, தேசிய முன்னுரிமைகளுடன் இணைத்து, அரச நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள், தனியார் துறையின் புத்தாக்கம், சிவில் சமூக ஈடுபாடு மற்றும் சமூகப் பங்கேற்பு மூலம் வலுப்படுத்தப்படும்போது மட்டுமே சாதகமான விளைவுகளை எட்ட முடியும்.

நம்பிக்கைக்குரிய வழிமுறைகள் (இலங்கையில் உள்ள உதாரணங்கள்):

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை நோக்கிய நம்பிக்கைக்குரிய பல வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன:

  • நவீன தொழில்நுட்பம்: சந்தை அணுகலுக்கான டிஜிட்டல் தளங்கள், காலநிலைக்கு உகந்த திட்டமிடலுக்கான தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) தொழில்நுட்பம் போன்றவை விவசாயத்தை மறுவடிவமைக்கின்றன.

  • நீர்வள முகாமைத்துவம் : குளங்களின் அடிப்படையிலான நீர்ப்பாசன முறைகளை மீட்டெடுப்பது, சிறு பரிமாண விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது.

  • இளைஞர் புத்தாக்கம்: இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் வேளாண் தொழில்நுட்பத் தீர்வுகள், உற்பத்தியாளர்களை நேரடியாக நுகர்வோருடன் இணைக்கின்றன.

  • போசணை மேம்பாடு: செறிவூட்டப்பட்ட அரிசியை பாடசாலை உணவில் சேர்ப்பது இளம் பாடசாலைப் பிள்ளைகளின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

  • பால்நிலை சமத்துவம்: பெண் உற்பத்தியாளர் குழுக்கள் வருமான ஆதாரங்களை விரிவுபடுத்துவதிலும், பால்நிலை சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முன்னோக்கிச் செல்லும் வழி - ஐந்து முன்னுரிமைகள்:

உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த, பின்வரும் ஐந்து முன்னுரிமை விடயங்கள் அவசியமாகும்:

  • டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம்: விவசாயத்தில் வேகத்தை அதிகரித்து, சிறு விவசாயிகள் (குறிப்பாக பெண்கள், இளைஞர்கள்) காலநிலைத் தகவல், நிதிச் சேவைகள் மற்றும் சந்தை இணைப்புகளின் நன்மையை அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • பெண்கள் மற்றும் இளைஞர் தலைமை:மீண்டெழும் தன்மை கொண்ட வேளாண் உணவு கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினரைத் தலைவர்களாகவும் புத்தாக்கவியலாளர்களாகவும் பார்க்க வேண்டும்.

  • காலநிலைக்கு இயைபாக்கம்: குளங்களை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புதுப்பித்தல், காலநிலைக்கு பொருத்தமான நடைமுறைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மூலம் மீண்டெழும் திறனை வலுப்படுத்தல்.

  • ஒருங்கிணைந்த தேசியத் தளம்: கூட்டாண்மைகள், தரவுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒருங்கிணைந்த தேசியத் தளத்தை அரசு, தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும்.

  • போசணை உணர்திறன் கொண்ட சமூகப் பாதுகாப்பு: பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை) சென்றடையக்கூடிய சமூகப் பாதுகாப்புச் செயற்திட்டங்களை உறுதி செய்வதன் மூலம் சத்தான உணவுக்கான அணுகலை உறுதி செய்தல்.

இவ்வருட உலக உணவு தினத்தன்று, அனைவரும் ஒன்றாகக் கைகோர்ப்பதன் மூலம் நிகழ்காலத் தலைமுறைகளுக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் சிறந்த உணவையும் சிறந்த எதிர்காலத்தையும் இலங்கை உறுதி செய்ய முடியும்.

https://www.virakesari.lk/article/227787

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr