உலக நடப்பு

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின்... தாய்வானுக்கான, விஜயத்தின் எதிரொலி: சீனா மீண்டும் போர்ப் பயிற்சி!

4 hours 1 minute ago
அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் தாய்வானுக்கான விஜயம் எதிரொலி: சீனா மீண்டும் போர்ப் பயிற்சி! அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின்... தாய்வானுக்கான, விஜயத்தின் எதிரொலி: சீனா மீண்டும் போர்ப் பயிற்சி!

 

அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழு தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சீனா இராணுவம் மீண்டும் தாய்வான் தீவைச் சுற்றிலும் போர்ப் பயிற்சியை தொடங்கியுள்ளது.

தாய்வான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயார் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன இராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஷீ யீ தெரிவித்தார்.

மேலும், தாய்வான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற போர்ப் பயிற்சிதான் தற்காப்பு நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தாய்வான் நீர்ச்சந்தியின் அமைதியையும் சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, போர் பயிச்சிகளையும் மேற்கொண்டது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தனி நாடாக செயற்பட்டு வரும் தாய்வான் தீவை தங்கள் நாட்டின் ஓர் அங்கமாக (பிராந்தியமாக) சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆகையால், தாய்வானுக்கு எந்த நாட்டின் தலைவரும் அலுவல்பூர்வமாக செல்வதை சீனா எதிர்த்து வருகிறது.

https://athavannews.com/2022/1294846

அமெரிக்காவை ஏமாற்றி தாலிபன்களிடம் ஹெலிகாப்டரை ஒப்படைத்த ஆப்கன் பைலட்

1 day ago
அமெரிக்காவை ஏமாற்றி தாலிபன்களிடம் ஹெலிகாப்டரை ஒப்படைத்த ஆப்கன் பைலட்
  • இனாயதுல்லா யாசினி மற்றும் சுவாமிநாதன் நடராஜன்
  • பிபிசி உலக சேவை
15 ஆகஸ்ட் 2022
 

முகமது எட்ரிஸ் மொமண்ட் தனது ஹெலிகாப்டரை ஆப்கானிஸ்தான் பரப்புக்கு மேலே பறக்கிறார்

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND

"சிலர் என்னுடன் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கலாம். கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் நான் அவர்களுக்கு இதை சொல்லிக் கொள்கிறேன். நாடு ஒரு தாயைப் போன்றது. அதற்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது," என்கிறார் முகமது எட்ரிஸ் மொமண்ட்.

அமெரிக்காவில் விரிவான பயிற்சி பெற்ற ஆப்கானிய ராணுவ விமானிகளில் மொமண்ட் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தாலிபன்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியபோது, அவர் தனது அமெரிக்க கூட்டாளி படைக்கு எதிரான நிலையை எடுத்தார். அதுநாள்வரை தான் இயக்கி வந்த ஹெலிகாப்டரை தனது முன்னாள் எதிரிகளான தாலிபன்களிடம் ஒப்படைக்க தனது சொந்த கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்தார்.

"ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான ஒரு சொத்தைப் பாதுகாப்பதே எனது நோக்கம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இது நடந்த ஒரு வருடம் கழித்து, அவர் தனது முடிவு குறித்து விளக்கினார்.

 
 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND

 

படக்குறிப்பு,

அமெரிக்காவால் பயிற்சி பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளில் ஒருவராக மொமண்ட் இருந்தார்.

மொமண்ட் 2009இல் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். வெஸ்ட் பாயின்ட் எனப்படும் அமெரிக்க ராணுவ பயிற்சி மையத்தில் நான்கு ஆண்டுகள் நடந்த கடுமையான பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்கா சென்றார்.

ஆரம்பத்தில், அவர் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட்டுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் ரஷ்யா உருவாக்கிய எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இயக்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் ஒரு இடைவெளி கிடைத்தது.

"2018ஆம் ஆண்டின் இறுதியில், பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு சமீபத்திய விமானப்படை தொழில்நுட்பத்தைப் படித்த இளம் விமானிகளின் ஒரு சிறிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து நான் பிளாக் ஹாக்ஸில் பறக்கத் தொடங்கினேன்," என்கிறார் மொமண்ட்.

பிளாக் ஹாக்ஸ் ஹெலிகாப்டர், சரக்கு மற்றும் படையினர் போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

படை விலக்கலை அறிவித்த பைடன்

2021 ஆம் ஆண்டில், செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா மீதான தாக்குதல்களின் இருபதாம் ஆண்டு நிறைவிற்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் தாயகத்துக்கு அழைத்துக் கொள்ளும் தனது விருப்பத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அப்போது மொமணம்ட், மசார்-இ-ஷரீப்பில் இருந்தார்.

அதே ஆண்டு ஜூலையில் படையினர் ஆப்கனில் இருந்து வெளியேறும் தேதி ஆகஸ்ட் 31 என அறிவிக்கப்பட்டது.

தாலிபன்கள் நாட்டை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் மீண்டும் வருவதை முழுமையாக தடுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் பல பில்லியன் டாலர்களை ஆப்கானிய ராணுவத்தின் பயிற்சிக்காகவும் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவும் செலவிட்டன.

 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND.

 

படக்குறிப்பு,

எப்போதும் சரக்கு ஹெலிகளை இயக்கியதாகவும் போர் விமானங்களை இயக்கியதில்லை என்றும் கூறுகிறார் மொமண்ட்.

அந்த நம்பிக்கை ஒரு கனவாக மாறியது.

ஆப்கானிஸ்தான் ராணுவம் அசுர வேகத்தில் தாலிபன்களிடம் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்தது.

தாலிபன் போராளிகள் ஜூலை மாதம் ஆப்கனின் பெரும்பாலான கிராமப்புறங்களைச் சூழ்ந்தனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் மாகாண தலைநகரம் தாலிபன் வசம் வந்தது.

பெரும்பாலான மாகாணங்களைப் பாதுகாத்த பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் எவ்வித தடையின்றி காபூலை கைப்பற்றினர்.

இஸ்லாமியவாத போராளிகள் குழு, செப்டம்பர் 7ஆம் தேதி தலைநகரின் வடக்கே பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் எஞ்சியிருந்த எதிர்ப்பின் கடைசி பகுதிகளை முறியடித்தது.

 

தாலிபன்கள்

வெளியேற உத்தரவு

அந்த சமயத்தில் நாடு குழப்பத்தில் மூழ்கிய நிலையில், மசார்-இ-ஷரீப்பில் மொமண்டின் ஆறு மாத கால பணி ஜூலையில் முடிவடைந்தது. அவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி காபூல் விமானப்படை தளத்திற்குத் திரும்பினார்.

உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்வதாக வதந்திகள் பரவின. இதனால் நிலைமை பதற்றமாக இருந்தது.

தாலிபன்கள் காபூலின் நுழைவாயிலுக்கு வெளியே காத்திருந்தனர். அங்குள்ள விமான நிலையம் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அது எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருக்கும் என்பது சந்தேகமாக இருந்தது.

"எங்கள் விமானப் படை தளபதி அனைத்து விமானிகளையும் அவரவர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் நாட்டை விட்டு வெளியே பறக்க உத்தரவிட்டார். உஸ்பெகிஸ்தானுக்குச் செல்லும்படி அவர் கூறினார்" என்று மொமண்ட் பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND.

 

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் விமானப்படையில் மொமண்ட் பல்வேறு ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார்.

அந்த உத்தரவால் மொமண்ட் கோபமடைந்தார். அதற்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று முடிவு செய்தார்.

"என் நாட்டுக்கு துரோகம் செய்யும்படி என் தளபதி என்னை வற்புறுத்தினார், நான் ஏன் அத்தகைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்? தாய்நாட்டைக் காட்டிக் கொடுப்பது மிக மோசமான குற்றம். அதனால்தான் நான் அந்த உத்தரவுக்கு கீழ்படியவில்லை," என்று மொமண்ட் விளக்குகிறார்.

அவர் தனது குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். குறிப்பாக அவரது அப்பா வலிமையானவர்.

"நான் தாய்நாட்டை விட்டு வெளியேறினால் என்னை மன்னிக்க மாட்டேன் என்று எனது அப்பா எச்சரித்தார்."

"இந்த ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமானது. அது நாட்டை விட்டு போகக்கூடாது," என்று தன் அப்பா கூறியதாக மொமண்ட் தெரிவித்தார்.

படைக்குழுவை ஏமாற்றிய செயல்

அந்த நேரத்தில் மொமண்டின் மாகாணம் ஏற்கெனவே தலிபான் வசம் வந்திருந்தது. அவரது அப்பா உள்ளூர் ஆளுநரிடம் பேசினார். ஹெலிகாப்டரை அங்கு பறக்க அனுமதித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் உறுதியளித்தார்.

 

Momand in front of his helicopter

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND

 

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தானில் ஏழு பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே செயல்படுவதாக மொமண்ட் கூறுகிறார்

மொமண்ட் ஒரு தப்பிக்கும் திட்டத்தை தயாரித்தார். ஆனால் அதற்கு முதலில் அவர் ஹெலிகாப்டர் பயணம் செய்யும் பாதையில் ஏற்படும் ஒரு பெரிய தடங்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

"ஒவ்வொரு பிளாக் ஹாக்கிலும் நான்கு பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். எனது திட்டத்தால் அவர்களை நம்ப வைக்க முடியாது என்று எனக்குத் தெரியும்."

"அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினேன். அவர்கள் என் உயிருக்கு ஆபத்தாகவும் ஹெலிகாப்டரின் அழிவுக்கு கூட காரணமாக இருப்பார்கள் என கருதினேன்," என்று மொமண்ட் கூறினார்.

எனவே உடன் பணியாற்றிய படையினரை ஏமாற்ற மொமண்ட் ஒரு தந்திரம் செய்தார்.

"ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளது. என்னால் புறப்பட முடியவில்லை என்று விமானப்படை தளபதியிடம் கூறி விட்டேன் என்று அவர்களிடம் சொன்னேன். அதைக் கேட்ட மூன்று படையினரும் உஸ்பெகிஸ்தானுக்கு புறப்பட தயாராக இருந்த மற்றொரு ஹெலிகாப்டரில் ஏறினர்."

 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND.

 

படக்குறிப்பு,

தனது கிராமத்திற்கு பறந்த பிறகு ஹெலிகாப்டரை தலிபான்களிடம் மொமண்ட் ஒப்படைத்தார்.

குனாருக்கு தப்பிய நிமிடங்கள்

மற்ற அனைத்து ஹெலிகாப்டர்கள் புறப்பட்ட பிறகு, 30 நிமிட பயணத்தில் குனாருக்கு தனியாக தனது ஹெலிகாப்டரை இயக்கினார் மொமண்ட்.

"அந்த நேரத்தில் அமெரிக்கர்கள் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். அதனால், நான் உஸ்பெகிஸ்தானுக்குப் புறப்படுகிறேன் என்று ரேடியோவில் சொன்னேன். விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு நான் எனது ரேடார் சாதனத்தை அணைத்து விட்டு நேராக குனாருக்குச் சென்றேன்."

"நான் எனது வீட்டுக்கு அருகிலுள்ள எனது கிராமத்தில் தரையிறங்கினேன். தாலிபன்களிடமிருந்து உத்தரவாதம் கிடைத்ததும், கடந்த காலங்களில் ஹெலிகாப்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப தரையிறங்கும் இடத்திற்கு கொண்டு சென்றேன்," என்கிறார் மொமண்ட்

 

தாலிபன்கள்

எனது முடிவை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் முழுமையாக ஆதரித்தனர் என்கிறார் மொமண்ட்.

மொமண்ட் தனது செயல்களுக்காக வருத்தப்படவில்லை என்று கூறுகிறார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பிய போதும் தாய்நாட்டிலேயே தொடர்ந்து தங்க முடிவு செய்ததாக கூறினார்.

 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND

 

படக்குறிப்பு,

தனது தளபதியின் கட்டளைகளை மீறியதற்காக வருத்தப்படவில்லை என்கிறார் மொமண்ட்

"அமெரிக்க ஆலோசகர்கள் எனக்கு மூன்று முறை தகவல் அனுப்பினர். ஹெலிகாப்டரை கொண்டு வர முடியாவிட்டாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சாலை வழியாக வந்து வெளியேறுங்கள் என்று கூறினர். ஆனால் நான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை," என்கிறார் மொமண்ட்

ஆப்கானிஸ்தான் விமானப்படையின் பலம்

2021ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உட்பட 167 விமானங்களை ஆப்கானிஸ்தான் விமானப்படை இயக்கியது என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிகார்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆப்கானிஸ்தான்

இந்த விமானங்களில் சில மொமண்டின் சக படையினரால் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டன. ஆகஸ்ட் 16ஆம் தேதி உஸ்பெகிஸ்தானின் டெர்மேஸ் விமான நிலையத்தின் செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வின்படி எம்ஐ-17, எம்ஐ-25, பிளாக் ஹாக்ஸ் மற்றும் பல ஏ-29 இலகு ரக தாக்குதல் ரக விமானங்கள் C-208 விமானங்கள் உட்பட இரண்டு டஜன் ஹெலிகாப்டர்கள் உஸ்பெக்கில் இருந்தன.

 

தாலிபன்கள்

 

தாலிபன்

சேதப்படுத்திய அமெரிக்க படையினர்

காபூலில் விடப்பட்ட பெரும்பாலான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயங்க முடியாத அளவுக்கு அமெரிக்க துருப்புக்கள் சேதப்படுத்திச் சென்றனர்.

இன்று ஆப்கானிஸ்தானில் எத்தனை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"எங்களிடம் இப்போது பயன்படுத்தக்கூடிய ஏழு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. குறைந்த வளங்களைக் கொண்ட ஆப்கானிய பொறியாளர்களால் அவற்றைப் பழுதுபார்க்க முடிந்தது. படிப்படியாக மற்ற பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவோம்," என்கிறார் மொமண்ட்.

நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவை கண்மூடித்தனமாக பின்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் தனது சகாக்களைக் குற்றம் சாட்டினார்.

"உஸ்பெகிஸ்தானுக்கு தங்கள் ஹெலிகாப்டருடன் பறந்து சென்றவர்கள் உண்மையில் தாய்நாட்டுக்கு துரோகம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர்கள் எங்கள் நாட்டிற்கு சொந்தமானவை. அவை மிகவும் விலை உயர்ந்த ஹெலிகாப்டர்கள். அந்த ஹெலிகாப்டர்களை நாங்கள் திரும்பப் பெறுவோம் என்று நான் நினைக்கவில்லை," என்கிறார் மொமண்ட்.

தொடர்ந்து சேவை செய்வேன்

 

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND

 

படக்குறிப்பு,

சாகும் நாள் வரை தனது நாட்டுக்கு சேவை செய்வேன் என்று மொமண்ட் கூறுகிறார்

ஹெலிகாப்டர் பைலட்டுக்கு பயிற்சி அளிக்க 6 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அமெரிக்காவில் பயிற்சியின் போது மொமண்டிடம் கூறப்பட்டது.

எனவே அந்த வாய்ப்பை மதிக்கிறார் அவர். அமெரிக்காவில் தனது முதல் ஹெலிகாப்டர் இயக்கத்தை இன்னும் அவர் நினைவுகூர்கிறார்.

"அந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கையில் இப்படி ஒரு நாள் வரும் என்று என்னால் நம்ப முடியவில்லை," என்கிறார் அவர்.

நான்கு வருட பயிற்சியின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்காமல் அமெரிக்காவிலேயே மொமண்ட் தங்கியிருந்தார்.

தாலிபன்களை எதிர்த்துப் போராட பயிற்சி பெற்ற மொமண்ட், இப்போது அதே தாலிபன்களால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்திற்காக பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை இயக்குகிறார். இதில் அவர் எந்த முரண்பாட்டையும் பார்க்கவில்லை.

"அரசாங்கங்கள் எப்போதும் மாறுகின்றன. எங்களைப் போன்றவர்கள் தேசத்தை மதிப்பவர்கள். தேசத்திற்கு சேவை செய்கிறோம். ராணுவம் அரசியலில் ஈடுபடக்கூடாது. நாடு என்னைப் போன்றவர்களுக்காக நிறைய முதலீடு செய்துள்ளது," என்கிறார் அவர்.

தாலிபன்கள் ஒரு வருடமாக நாட்டை ஆண்டாலும், எந்த நாடும் அவர்களை முறையான ஆட்சியாளர்களாக அங்கீகரிக்கவில்லை. இருந்தபோதிலும், மொமண்ட் உறுதியாக இருக்கிறார்.

"என் வாழ்வின் கடைசி நாள் வரை எனது தேசத்திற்கு சேவை செய்வதற்காக எனது துறையில் தொடர்ந்து இருப்பேன்," என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/global-62556011

வட கொரியாவுடன்... விரிவான, ஆக்கபூர்வமான... இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக, ரஷ்யா உறுதி!

1 day 3 hours ago
வட கொரியாவுடன் விரிவான- ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதி! வட கொரியாவுடன்... விரிவான, ஆக்கபூர்வமான... இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக, ரஷ்யா உறுதி!

வட கொரியாவுடன் விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது

வடகொரியாவின் விடுதலை தினத்தன்று தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு அனுப்பிய கடிதத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் நலன்களுக்காக இருக்கும் என்று கூறினார்.

இதையொட்டி, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை வென்றதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கிம் கூறினார். அவர்களின் ‘தோழமை நட்பு’ மேலும் வலுவடையும் என்று அவர் கூறினார்.

வட கொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.இன் அறிக்கையின்படி, விரிவாக்கப்பட்ட இருதரப்பு உறவுகள் இரு நாடுகளின் நலன்களுடன் ஒத்துப்போகும் என்று புடின் கூறினார்.

ஜப்பானிய எதிர்ப்புப் போரில் உருவான ரஷ்யா-வடகொரியா நட்புறவு நூற்றாண்டிற்குப் பின் ஒருங்கிணைக்கப்பட்டு வளர்ந்தது என்று கிம் தனது கடிதத்தில் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் ஒற்றுமை, விரோதப் படைகளின் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டல்களை விரக்தியடையச் செய்வதற்கான பொதுவான முன்னணியில் சேர்க்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்

வடகொரியா விரோத சக்திகள் என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை என்றாலும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைக் குறிக்க வட கொரியாவால் இந்த வார்த்தை தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றது.

சோவியத் ஒன்றியத்தின் ஒரு காலத்தில் வட கொரியாவின் முக்கிய கூட்டாளியாக ரஷ்யா இருந்தது, பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் உதவிகளை பரிமாறிக்கொண்டது.

ஆனால் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த உறவு பாதிக்கப்பட்டது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து மேற்குலகில் இருந்து ரஷ்யா படிப்படியாக பிரிந்த பிறகு படிப்படியாக ஓரளவு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஜூலையில், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பெற்ற இரண்டு பிரிவினைவாத நாடுகளை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த சில நாடுகளில் வட கொரியாவும் ஒன்றாகும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது எல்லைக்குள் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைன், வடகொரியாவுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.

https://athavannews.com/2022/1294746

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை

1 day 11 hours ago
ஆங் சான் சூகிக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை

Digital News Team 2022-08-15T18:03:42 

மியான்மாரில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட தலைவி ஆங் சான் சூகி திங்கள்கிழமை (15) இராணுவ நீதிமன்றத்தால் மேலும் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்கனவே கிடைத்த 11 ஆண்டுகள் கூடுதலாக மேலும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி,  அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அவரது தண்டனைக்கு எதிராக சூகி மேன்முறையீட செய்வார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றது.  ஊடகங்களுக்கோ பொதுமக்களுக்கோ உள்நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. சூகியின் சட்டத்தரணிகளிற்கும்  தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

மியான்மரில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக்கின் (NLD) ஆட்சியை, பெப்ரவரி 1, 2021 அன்று இராணுவம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றியது.சூகி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சூகி காவலில் வைக்கப்பட்டு பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.இன்று 4 ஊழல் வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று, பொது நிலத்தை சந்தை விலைக்குக் குறைவான விலையில் வாடகைக்கு எடுப்பதற்கு சூகி தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.தகவல்களின்படி, அவர் தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடைகள் மூலம் ஒரு குடியிருப்பையும் கட்டினார்.சூகி நான்கு வழக்குகளில் ஒவ்வொன்றிற்கும் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றார். ஆனால் அவற்றில் மூன்று குற்றச்சாட்டுக்களின் தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும். ஒரு வழக்கின் தண்டனை தனியாக அனுபவிக்க வேண்டும். மொத்தம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.தேச துரோகம், ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Thinakkural.lk

அமெரிக்காவின், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு.. மீண்டும் தாய்வானுக்கு பயணம்!

2 days 2 hours ago
அமெரிக்காவின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் தாய்வானுக்கு பயணம்! அமெரிக்காவின், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு.. மீண்டும் தாய்வானுக்கு பயணம்!

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டு 12 நாட்களே ஆன நிலையில், அமெரிக்க மேலவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எட் மார்கே தலைமையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் தாய்வானுக்கு சென்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தைபே விமான நிலையத்தில் அமெரிக்க அரசாங்கா விமானம் வந்திறங்கிய காட்சிகளை தாய்வான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, 2 நாட்ள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.

இதன்போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தாய்வான் தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று அங்குள்ள அதிகாரபூர்வமில்லாத அமெரிக்க தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் வருகையால், சீனா-அமெரிக்கா இடையிலான மோதல்போக்கு மேலும் அதிகரிக்கும் என்று சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, தாய்வான் நீரிணை பகுதியில் நேற்று 10 போர் விமானங்கள் உட்பட சீன இராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தனி நாடாக செயற்பட்டு வரும் தாய்வான் தீவை தங்கள் நாட்டின் ஓர் அங்கமாக (பிராந்தியமாக) சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆகையால், தாய்வானுக்கு எந்த நாட்டின் தலைவரும் அலுவல்பூர்வமாக செல்வதை சீனா எதிர்த்து வருகிறது.

இந்தச் சூழலில், நான்சி பெலோசியின் அண்மைய பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா,தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294700

அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி !

3 days 2 hours ago
அணுமின் நிலையத்தில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் உக்ரைன் ஜனாதிபதி ! அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி !

முற்றுகையிடப்பட்டுள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் ரஷ்யப் படையினர் பாதுகாப்புப் படையினரால் குறிவைக்கப்படுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

மார்ச் மாதம் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் ரஷ்யா குறித்த ஆலையை இராணுவ தளமாக மாற்றி, அதை அணு ஆயுத அச்சுறுத்தலாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா, தெற்கு உக்ரேனிய நகரமான நிகோபோலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

இந்த தளம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்தாலும், உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களினால் குறித்த அணுமின் நிலையம் இன்னும் இயங்குகின்றது.

இந்த வார தொடக்கத்தில், இந்த அணுமின் நிலையம் மீதான பீரங்கித் தாக்குதல் சர்வதேச கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில் ரஷ்யாவும் உக்ரைனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் ஆலை மீது துப்பாக்கிச் பிரயோகத்தை மேற்கொண்டு ரஷ்யா தொடர்ச்சியாக ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஆலை தொடர்ந்தும் இருப்பது ஐரோப்பாவிற்கு கதிர்வீச்சு அச்சுறுத்தலை அதிகரிக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1294642

சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்?

4 days ago
சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்?
13 ஆகஸ்ட் 2022, 02:27 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

1993-இல் சல்மான் ருஷ்டி பிரிட்டனின் கிங் கல்லூரி தேவாலயத்துக்கு முன்பு எடுத்த படம்

நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டிக்கு கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன.

பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' 1981ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது.

ஆனால் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நான்காவது நாவலான தி சாத்தானிக் வெர்சஸ் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இதன் தலைப்பை சாத்தானின் வசனங்கள் என்று கூறலாம். இது அதற்கு முன்பு எந்தப் புத்தகமும் சந்திக்காத எதிப்பைச் சந்தித்தது. இஸ்லாமிய உலகம் கொந்தளித்தது.

ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு அவர் தலைமறைவாகவே வாழ நேரிட்டது. பிரிட்டிஷ் அரசு அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது.

 

சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு இரானின் உச்சபட்ச மதத் தலைவராக இருந்த அயதுல்லா ருஹோல்லா கோமேனி, ஃபத்வா என்படும் மதக்கட்டளையை 1989ஆம் ஆண்டு பிறப்பித்தார்.

இந்தப் பிரச்னைக்காக இரானும் பிரிட்டனும் தங்களது அரசுமுறை ராஜ்ஜீய உறவுகளை முறித்துக் கொண்டன. இஸ்லாமியர்களின் தீவிரமான எதிர்வினையால் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் கண்டித்தனர்.

சல்மான் ருஷ்டி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அப்போதைய பம்பாயில் பிறந்தார்.

14 வயதில் அவர் இங்கிலாந்துக்கு படிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். பிறகு கேம்பிரிட்ஜில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

 

சாத்தானின் வசனங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சாத்தானின் வசனங்கள் புத்தகம் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைத்தது. தனது இஸ்லாமிய மத நம்பிக்கைகளைத் துறந்தார். சில காலம் ஒரு நடிகராவும் இருந்தார். அதன் பிறகு நாவல்களை எழுதத் தொடங்கினார்.

அவரது முதல் புத்தகமான 'க்ரிமஸ்' பெரிதாக வெற்றியடைவில்லை. ஆனால் அவருக்குத் திறமை இருப்பதை எழுத்துலகம் புரிந்து கொள்ள அது அவருக்கு உதவியது.

தனது இரண்டாவது புத்தகமான மிட்நைட்ஸ் சில்ட்ரனை எழுத ருஷ்டிக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டன. இது பரவலாகப் பாராட்டப்பட்டது. 5 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது.

மிட்நைட்ஸ் சில்ட்ரன் இந்தியாவைப் பற்றி பேசியது. 1983இல் வெளியான அடுத்த நாவலான 'ஷேம்' பாகிஸ்தானைப் பற்றியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ருஷ்டி நிகரகுவா நாட்டு பயணத்தைப் பற்றிய 'தி ஜாகுவார் ஸ்மைல்' நாவலை எழுதினார்.

செப்டம்பர் 1988ஆம் ஆண்டு அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய சாத்தானிக் வெர்சஸ் நாவல் வெளியிடப்பட்டது. இந்த பின்-நவீனத்துவ நாவல் முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாவல் தங்களது மதத்தை அவமதிப்பதாக அவர்கள் கருதினர்.

 

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1989-ஆம் ஆண்டு பாரிஸில் சல்மான் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது

இதற்குத் தடை விதித்த முதல் நாடு இந்தியா. அதன் பிறகு பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற முஸ்லிம் நாடுகள் இந்தியாவைப் பின்பற்றி ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்தன.

ஆயினும் எழுத்துலகில் இந்த நாவல் பாரட்டப்பட்டது. நாவல்களுக்கு வழங்கப்படும் விட்பிரெட் பரிசைப் பெற்றது. ஆனால் நாவல் பிரபலமாகும் போதே அதற்கான எதிர்ப்பும் கடுமையாக அதிகரித்தது. ஏராளமானோர் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.

சில முஸ்லிம்கள் இந்த நாவல் இஸ்லாத்தை அவமதிப்பதாகக் கருதினர். கதையில் பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களுக்கு முகமது நபியின் மனைவிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட பல அம்சங்களை முஸ்லிம்கள் கண்டித்தனர்.

சாத்தானின் வசனங்கள் என்ற தலைப்பு, குரானில் இருந்து முகமது நபியால் நீக்கப்பட்ட இரண்டு வசனங்களைக் குறிப்பிடுகிறது. அவ்விரு வசனங்களும் பிசாசினால் தரப்பட்டவை என்று முகமது நம்பியதாகக் கருதப்படுகிறது.

1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனின் பிராட்ஃபோர்டில் முஸ்லிம்கள் புத்தகத்தின் நகலை எரித்தனர். செய்தித்தாள் முகவர்கள் அவரது புத்தகங்களைக் காட்சிப் படுத்துவதை நிறுத்தினர். ஆனால் தன் மீதான மத நிந்தனை குற்றச்சாட்டுகளை ருஷ்டி நிராகரித்தார்.

 

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ருஷ்டிக்கு எதிராக நடந்த கலவரங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். இரான் தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது. ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரிட்டனின் சில முஸ்லிம் தலைவர்கள் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் மற்றவர்கள் இரானின் உச்சபட்ச மதத் தலைவரை ஆதரித்தனர். ருஷ்டி மீதான கொலை மிரட்டல்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

அதன் பிறகு ருஷ்டி தனது மனைவியுடன் போலீஸ் பாதுகாப்பில் தலைமறைவாக வாழத் தொடங்கினார். இஸ்லாமியர்களுக்கு ஏற்படுத்திய துயரத்துக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஆனாலும் இரானின் உச்சபட்ச மதத் தலைவரான கோமேனி, ருஷ்டிக்கு எதிரான பத்வாவை மீண்டும் பிறப்பித்தார்.

 

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ருஷ்டியை போலவே அதை விற்பனை செய்தவர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.

அதே நேரத்தில் அந்தப் புத்தகம் அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறம் உள்ள நாடுகளிலும் பரபரப்பாக விற்பனையாகியது. பிரிட்டனை போலவே ஐரோப்பிய நாடுகள் ருஷ்டியை ஆதரித்தன். பெரும்பாலான நாடுகள் தெஹ்ரானில் இருந்து தூதர்களைத் திரும்பப் பெற்றன.

இதனிடையே 1991ஆம் ஆண்டு ஜூலையில் ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானில் மொழி பெயர்த்த ஹிடோஷி என்பவர் டோக்கியோவில் கொல்லப்பட்டார். உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

அதே மாதத் தொடக்கத்தில், இத்தாலிய மொழிபெயர்ப்பாளரான எட்டோர் கேப்ரியோலோ, மிலனில் உள்ள அவரது குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டார். எனினும் அவர் உயிர் பிழைத்தார்.

 

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

1998ஆம் ஆண்டில் இரான் அரசு மனம் மாறியது. ருஷ்டிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பத்வாவுக்கான தனது அதிகாரபூர்வமாக ஆதரவை விலக்கிக் கொண்டது.

சாத்தானின் வசனங்கள் புத்தகத்துக்குப் பிறகும் பல புத்தகங்களை ருஷ்டி எழுதியுள்ளார். ஹாரூன் அண்ட் தி சீ ஆஃப் ஸ்டோரிஸ் (1990), இமேஜினரி ஹோம்லேண்ட்ஸ் (1991), தி மூர்ஸ் லாஸ்ட் சை (1995), தி கிரவுண்ட் உள்ளிட்டவை அடங்கும்.

ருஷ்டி நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இலக்கியத்திற்கான அவரது சேவைகளுக்காக 2007ஆம் ஆண்டில் அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டில், சாத்தானின் வசனங்கள் பற்றிய சர்ச்சையை ஒட்டிய தனது வாழ்க்கையின் நினைவுகளைப் புத்தகமாக வெளியிட்டார். https://www.bbc.com/tamil/global-62530835

நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார்

4 days 15 hours ago
நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார்
24 நிமிடங்களுக்கு முன்னர்
 

சல்மான் ருஷ்டி தாக்குதல்

பட மூலாதாரம்,JOSHUA GOODMAN

 

படக்குறிப்பு,

விரிவுரை நிகழ்வின்போது தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நிலையை பார்வையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு ஆளானார்.

அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முற்படும் காட்சி, இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தெரிந்தது.

 

சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால், ருஷ்டியின் நிலைமை தொடர்பான தகவல் இன்னும் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/global-62521467

இரண்டு திருமணம் செய்யாவிட்டால் ஆண்களுக்கு சிறை! கட்டாய சட்டம் உள்ள விசித்திர நாடு

4 days 19 hours ago

ஆபிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ள எரித்திரியா என்னும் சிறிய நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும் அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

https://www.times.lk/news/local-news/53206?fbclid=IwAR2kHfwoywcLQnfyPd56_q35iTl_Mkvrvwkv7K3IKXiZwH7cVkcxznXpvUk#

 

 

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம்

5 days 20 hours ago
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம்
55 நிமிடங்களுக்கு முன்னர்
 

கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சகோதரியுடன் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்

கொரோனா தொற்றுகாலத்தில், வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு தொற்று (காய்ச்சல்) இருந்தது என்று அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரமாக அவரது கூற்று பார்க்கப்படுகிறது.

மேலும், தமது நாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட தென் கொரியாதான் காரணம் என்றும் கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை பகுதியில் கொரோனா தொற்று கொண்ட துண்டு பிரசுரங்களை அனுப்பியதாக அவர் கூறினார்.

இதனை தென் கொரியா ஆதாரமற்றது என்று கூறி மறுத்துள்ளது.

கொரோனா தொற்றை எதிர்த்து தமது நாடு வெற்றி கண்டுள்ளது என்று கிம் ஜாங் உன்அறிவித்ததையடுத்து, அவரது சகோதரி இதுகுறித்து பேசினார்.

 

கடந்த மே மாதம், முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்தது. அன்று முதல், மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு, சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், அங்கு நடந்த மிக குறைவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கவனிக்கும்போது, இது தொடர்பான தரவு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அந்நாட்டில் கிம் யோ ஜாங் மிகவும் செல்வாக்குமிக்கவர். அவரது உரையில், எல்லையைத் தாண்டி, தென் கொரியா துண்டு பிரசுரங்களை அனுப்புவதன் மூலம் கோவிட் வடக்கில் பரவியதற்காக குற்றம் சாட்டினார். தென் கொரியாவில் உள்ள ஆர்வலர்கள் பல தசாப்தங்களாக பலூன்களைப் பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை, வட கொரியாவுக்கு எதிரான பிரசாரங்களை காற்றில் மிதக்கச் செய்தனர். இந்த நடைமுறை கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்டது.

இத்தகைய துண்டுப் பிரசுரங்களை அனுப்புவதை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்," என்றும், தொற்று உள்ள பொருள்களை அனுப்புவதன் மூலம் தொற்றை இங்கு பரப்ப செய்யும் ஆபத்து உள்ளது" என்று அவர் கூறியதாக அந்நாட்டு அரசுசெய்தி முகமையான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

வட கொரியா இதற்கு ஒரு வலுவான பதிலடி கொடுப்பது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும் தமது உரையில் தமது சகோதரரின் உடல்நிலை குறித்து கிம் பேசினார். "அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போர் முடியும்வரை, அவர் மக்களைப் பார்த்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுக்கவில்லை," என்றார்.

அங்கு கொரோனா தொற்றை கண்டறிய சோதனை கருவிகள் இல்லாததால், கொரோனா தொற்று என்பதை விட 'காய்ச்சல்' என்றே வட கொரியா குறிப்பிடுகிறது.

 

 

வட கொரியா அதிபர்

பட மூலாதாரம்,KCNA VIA REUTERS

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்

இந்த தொற்றுக்கு எதிராக நாடு மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்று அறிவித்த அதிபர், வட கொரியர்களின் மன உறுதியையும் பாராட்டினார் என்று கே.சி.என்.ஏ தெரிவித்தது.

வடகொரியாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொற்று காரணமாக வெறும் 74 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதை 'அதிசயம்' என்று பாராட்டியுள்ளார்.

ஜூலை 29ஆம் தேதி முதல் வட கொரியாவில் சந்தேகத்திற்கிடமான புதிய கொரோனா பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், அந்நாட்டில் சோதனை வசதி மிகவும் குறைவாக உள்ளது என்று சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 4.8 மில்லியன் பேருக்கு தொற்று பாதிப்புகள் இருப்பதாக கே.சி.என்.ஏ கூறுகிறது. ஆனால் 74 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இறப்பு விகிதம் 0.002% ஆக உள்ளது. இந்த விகிதம் உலகில் மிகவும் குறைந்த விகிதம்.

 

பலூன்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த புள்ளிவிவரங்களை நம்புவது கடினம் என்று பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.. வெகுசில தீவிர சிகிச்சை பிரிவுகள், கோவிட் சிகிச்சை மருந்துகள், தடுப்பூசிகள் இல்லாத உலகின் மிக மோசமான சுகாதார அமைப்புகளில் ஒன்றாக இந்த நாடு உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தொற்றுநோய்களின் போது வட கொரியா நாடு எந்த தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக ஊரடங்கு, உள்நாட்டு சிகிச்சைகள் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை 'சாதகமான கொரிய பாணியில் உள்ள சமூகவுடைமை அமைப்பு' என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/global-62503290

உக்ரைனுக்கு... ஒரு "பில்லியன்" அமெரிக்க டொலர்கள் மதிப்பில், ஆயுத பாதுகாப்பு உதவி!

6 days 3 hours ago
உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவி! உக்ரைனுக்கு... ஒரு "பில்லியன்" அமெரிக்க டொலர்கள் மதிப்பில், ஆயுத பாதுகாப்பு உதவி!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்காவிற்கு இந்த தொகுப்புக்கு நன்றி தெரிவித்தார், மேலும் அதில் 100 சதவீதம் சுதந்திரம், நமது பொது சுதந்திரத்தை பாதுகாக்க பயன்படுத்துவோம் என உறுதியளித்தார்.

https://athavannews.com/2022/1294138

லாங்யா வைரஸ்: சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா?

6 days 14 hours ago
லாங்யா வைரஸ்: சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மூஞ்சூறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற புதிய வகை வைரஸ் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன.

விலங்குகளிடமிருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. LayV வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸை முக்கியமாக எலி வகையைச் சேர்ந்த மூஞ்சூறுகளில் கண்டறிந்தனர்.

 

சீனா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கடிதத்தில் இந்த கண்டுபிடிப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' சஞ்சிகையிலும் இது வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் லின்ஃபா, "இது வரை கண்டறியப்பட்டிருக்கும் வைரஸ்கள் ஆபத்தானவை அல்ல. அதனால் பீதி அடையத் தேவையில்லை" என்று சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

இருப்பினும், இயற்கையில் இருக்கும் பல வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கிய பிறகு கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வாங் கூறியுள்ளார்.

சோதனை செய்யப்பட்ட 27% மூஞ்சூறுகளில் LayV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை இந்த வைரஸிற்கான "இயற்கை சேமிப்புக் கிடங்குகளாக" இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மூஞ்சூறுகள் தவிர, சுமார் 5% நாய்களிலும் மற்றும் 2% ஆடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

புதிய வைரஸ் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தைவானின் நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

 

மூஞ்சூறு வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லாங்யா என்பது ஒரு வகை ஹெனிபா வைரஸ் ஆகும். இவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவக்கூடிய ஜூனோட்டிக் வைரஸ் வகையாகும்.

ஜூனோடிக் வைரஸ்கள் மிகவும் பொதுவாகக் காணப்படுபவை. ஆனால் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன..

புதிதாகப் பரவும் நான்கு தொற்று நோய்களில் மூன்று தொற்றுநோய்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் விலங்குகளின் அதீதப் பயன்பாடு ஆகியவற்றால் உலகம் இதுபோன்ற நோய்களைக் காண வேண்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்பு எச்சரித்தது.

சில ஜூனோடிக் வைரஸ்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. ஆசியாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே அவ்வப்போது பரவும் நிபா வைரஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் குதிரைகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹெண்ட்ரா வைரஸ் ஆகியவை இதில் அடங்கும்.

https://www.bbc.com/tamil/global-62494642

ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!

1 week ago
ஈரானிலிருந்து செயற்கைக்கோளை ஏவியது ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அச்சம்! ஈரானிலிருந்து... செயற்கைக் கோளை ஏவியது, ரஷ்யா: உக்ரைன்- இஸ்ரேல் உள்ளிட்ட  நாடுகள் அச்சம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது.

11ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞரும் தத்துவஞானியுமான உமர் கயாமின் பெயரிடப்பட்ட ரிமோட் கயாம் உணர்திறன் செயற்கைக்கோள், கஸகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் ரொக்கெட் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏவப்பட்டு வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நுழைந்ததாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் விண்வெளி நிறுவனம் செயற்கைக்கோளில் இருந்து அனுப்பப்பட்ட முதல் டெலிமெட்ரி தரவுகளைப் பெற்றுள்ளது என்று அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் அதன் உளவுத்துறை திறன்களை அதிகரிக்க ரஷ்யாவால் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படலாம் என்ற கூற்றை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானுக்கு முதல் நாளிலிருந்தே அதன் மீது முழுக் கட்டுப்பாடும் செயற்பாடும் இருக்கும் என்று கூறியுள்ளது.

வொஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே வளர்ந்து வரும் விண்வெளி ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர், இந்த செயற்கைக்கோள் உக்ரைனில் ரஷ்யாவிற்கு உதவுவது மட்டுமல்லாமல், இஸ்ரேல் மற்றும் பரந்த மத்திய கிழக்கில் சாத்தியமான இராணுவ இலக்குகளை கண்காணிக்க ஈரானுக்கு முன்னோடியில்லாத திறன்களை வழங்கும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், கதிர்வீச்சு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறுகிறது.

கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி முதல் ஈரானுடனான உறவை ஆழப்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது. கடந்த ஜூலை மாதம், புடின் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவப் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து முன்னாள் சோவியத் யூனியனுக்கு வெளியே தனது முதல் சர்வதேச பயணமாக ஈரானுக்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294203

வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ.

1 week ago
வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ.
9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. அதிபராக இருந்த போது நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கையாண்ட விதம் குறித்த விசாரணையுடன் இந்தச் சோதனை தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், "இது நாட்டின் இருண்ட காலம்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு, இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை," என்று தெரிவித்துள்ளார்.

 

எனினும் இந்தச் சோனை குறித்து எஃப்.பி.ஐ. அமைப்போ, அமெரிக்காவின் நீதித்துறையோ கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அமெரிக்காவின் மைய அரசின் சட்டங்களும் ரகசிய ஆவணங்களை கையாள்வது குறித்து விவரிக்கின்றன.

இந்தச் சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ட்ரம்பின் வழக்கறிஞர் கிறிஸ்டினா என்பிசி நியூஸிடம் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், ட்ரம்ப் வீட்டில் நடைபெற்றிருக்கும் சோதனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

 

ட்ரம்ப் வீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனைத்து அரசு அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகவும், அதனால் "அறிவிக்கப்படாத இந்தச் சோதனை அவசியமில்லை, ஏற்புடையதில்லை" என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடுவதைத் தடுக்கவே நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.

"இத்தகைய தாக்குதல்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே நடக்கும் சாத்தியம் உண்டு. கெடுவாய்ப்பாக, இதுவரை காணாத ஊழலில் திழைக்கும் அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

புளோரிடாவில் சோதனை நடந்தபோது நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் ட்ரம்ப் இருந்ததாக சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது.

ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய ட்ரம்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப், "இந்தச் சோதனை தேசிய ஆவணக் காப்பகப் பதிவுகளைக் கையாள்வது குறித்த விசாரணையுடன் தொடர்புடையது" என்று கூறினார்.

பின்னணி என்ன?

அதிபராக இருந்தபோது அரசு ஆவணங்களைக் கையாண்டது தொடர்பாக ட்ரம்பை விசாரிக்க வேண்டும் என்று தேசிய ஆவணக் காப்பகம் நீதித்துறையைக் கேட்டுக் கொண்டுது.

அதிபராக இருந்த காலத்தில் பல ஆவணங்களை ட்ரம்ப் கிழித்து எறிந்ததாகவும் அவற்றை ஒட்டவைக்க வேண்டியிருந்தது எனவும் தேசிய ஆவணக் காப்பக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை 'போலிச் செய்திகள்' என்று கூறி நிராகரித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாகவே இப்போது ட்ரம்பின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

எஃப்.பி.ஐ.யின் தேடுதல் வாரண்டில் நீதிபதி ஒருவர் கையெழுத்திட வேண்டும். தேடுதல் வேட்டைக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்த பிறகே நீதிபதி அதில் கையெழுத்திடுவார்.

 

காப்பகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த வகையில் நீதிபதி கையெழுத்திட்ட வாரண்ட் குறித்த தகவல் திங்கள்கிழமை காலை பத்து மணிக்கு எஃப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் வந்ததாக பெயர்கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ட்ரம்பின் இல்லத்தில் இருந்து பல பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவம் எந்தக் கதவும் உடைக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதனிடையே வெள்ளை மாளிகையின் கழிவறைப் பேழையில் சில காகிதங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களை பத்திரிகையாளர் மேகி ஹேபர்மன் வெளியிட்டுள்ளார். இது ட்ரம்பின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ட்ரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வெள்ளை மாளிக்கைக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையின்போது, நீதித்துறையின் விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என்று பைடன் கூறியிருந்தார். வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டில் பைடனின் மகன் ஹன்டர் பைடனும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறார். https://www.bbc.com/tamil/global-62447584

சீனா - தைவான் விவகாரம்: தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன?

1 week ago
சீனா - தைவான் விவகாரம்: தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன?
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தைவான் - சீனா

பட மூலாதாரம்,EPA

 

படக்குறிப்பு,

சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து தைவான் முன்னெச்சரிக்கையுடன் படைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளது.

அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றது, சுயாதீன ஆட்சி நாடாக இருக்கும் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது. நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தைவானை சுற்றி சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டதை இருதரப்பும் எப்படி பார்க்கிறது என்பதை பிபிசி செய்தியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

புதிய இயல்பு நிலை

ஸ்டீஃபன் மெக்டொனெல், பெய்ஜிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள தீவிர சிந்தனையாளர்கள், நான்சி பெலோசியின் தைவான் வருகை தங்களுக்கு விட்டுச் சென்றுள்ள சூழல் குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடையலாம்.

 

நான்சி பெலோசி அவர்களுக்கு ஒரு வாய்ப்பை திறந்துவிட்டுள்ளார், அவர்கள் அதனை பயன்படுத்தியுள்ளனர்.

தைவானைச் சுற்றி மேற்கொள்ளப்படும் தீவிர ராணுவ நடவடிக்கைகள் தற்போது "ஏற்றுக்கொள்ளக்கூடிய" பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

தைவானில் ஏவுகணைகளை ஏவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது "ஏற்றுக்கொள்ளக்கூடியதாக" மாறியுள்ளன. சர்வதேச சமூகம் இதனை ஏற்றுக்கொண்டது மட்டும் இதற்கு காரணம் அல்ல, அவற்றை நிகழ்த்திய சீனா அதிலிருந்து தப்பித்து கொண்டதால் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இப்போது சீன ராணுவம் (பிஎல்ஏ) ஒவ்வொரு முறையும் தைவானுக்கு நெருக்கமாக போர் விமானங்களை அதிக எண்ணிக்கையில் பறக்கவிடுகிறது. இது தற்போது புதிய இயல்பாக மாறியுள்ளது.

இதைவிட, சீனா தன் படைகளின் மூலம் தைவானை கைப்பற்றும் வகையில் தாக்குதல் நிகழ்த்தும் என்பதே நடப்பதற்கு சாத்தியமான ஒன்றாக உள்ளது என, சீன மக்கள் பலரும் கருதுகின்றனர்.

இது நடைபெற வேண்டும் என விரும்பியவர்களுக்கு இச்சூழல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தைவான் "தாய்நாட்டுக்குத் திரும்புதல்" என, சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ விவரித்ததை அடைவதற்கு உண்டான அமைதிவழி உத்திகள் தற்போது விவாதிக்கப்படவில்லை அல்லது அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

சீன ராணுவத்தின் இத்தகைய பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகைகள், சீன ராணுவத்தின் எழுச்சி தடுக்க முடியாதது என்கிற நம்பிக்கையை உலகளவில் முடுக்கிவிட்டுள்ளது என்பது இதன் பக்கபலனாக கருதப்படுகிறது. இது, தென்சீனக் கடலில் உரிமைகோரல் தொடர்பாக சீனாவுடன் போட்டி கொண்டுள்ள தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளை அச்சுறுத்தலாம்.

 

சீனா - தைவான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த பெரியளவிலான ராணுவ நடவடிக்கைகள் முன்னதாக திட்டமிடப்பட்டிருக்கலாம். நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி கசிந்தபோது, சீன ராணுவ ஜெனரல்கள், திடீரென இவற்றை நிகழ்த்தினார்கள் என கற்பனை செய்வது கடினம்.

சீனா இதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு, சந்தர்ப்பம் கிடைத்தபோது நிகழ்த்தியது என்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் பெய்ஜிங்கில் நேர்காணல் செய்யப்பட்ட தேசியவாதி ஒருவர், "காம்ரேட் பெலோசிக்கு நன்றி!" என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

 

நான்சி பெலோசி - ட்சாய் யிங் வென்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

நான்சி பெலோசி - ட்சாய் யிங் வென்

கடும் ரத்தக்களரியான, பேரழிவு நிகழ்வு என்பதற்கு மாறாக, தைவானை கைப்பற்றுவது எளிதானது என, தனது சொந்த போர்க்குணமிக்க சொல்லாட்சிகளில் சீன அரசாங்கம் சிக்கிக்கொள்வது ஆபத்தானது.

பிரதான நிலப்பகுதியில் எவ்வித தாக்குதலையும் தடுக்க தைவான் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் பாதுகாப்பு உத்திகளை தயாரிப்பதற்கு இந்த போர் விளையாட்டுகள் உதவியதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இந்த போர் ஒத்திகைகள் அதிபர் ஷி ஜின்பிங் அரசாங்கத்திற்கு போதவில்லை. அமெரிக்காவுடன் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லை கடந்த குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றுடனான ஒத்துழைப்பை சீனா கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்திவிட்டது. மேலும், அமெரிக்கா - சீன ராணுவத்திற்கு இடையிலான அனைத்து உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

மேலும், இதுதொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே ஆகியோரின் தொலைபேசி அழைப்புகளுக்கு சீன தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்திக்கொண்டது. உலகின் இருபெரும் கார்பன் உமிழ்வு நாடுகள் இதுதொடர்பாக பேசுவதை நிறுத்திக்கொண்டன.

பெலோசியின் தைவான் வருகை பதட்டத்தை நிச்சயமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஷி ஜின்பிங் அரசாங்கம் குறைந்தது இப்போதைக்கு இந்த பதட்டத்தை விரும்புவதாக தெரிகிறது.

 

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஷி ஜின்பிங்

வார்த்தை போர்

ரூபெர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ், தைவான்

தைவானை சுற்றி நடக்கும் சீன ராணுவ நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீன தரப்பிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளும் அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

தைவான் அரசியல்வாதிகளின் சிறு குழு ஒன்றை சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, "தைவானின் பிரிவினைவாத சக்திகள்" என்று அடையாளப்படுத்தினார்.

அப்படி அடையாளப்படுத்தப்பட்டதில் முதன்மையானவர் தைவான் அதிபர் ட்சான் யிங்-வென். சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ அவரை, "சீன நாட்டின் தகுதியற்ற வம்சாவழி" என கூறினார். இதனை வேறு விதமாக கூறினால், ஒரு துரோகி.

தங்களின் எதிரி அல்ல என சீனா கூறிவரும் பெரும்பகுதி தைவான் மக்களை, தைவானை தாய்நாட்டிலிருந்து கிழித்தெடுக்க முயற்சிப்பதாக கூறும் சிறிய "குழுவில்" இருந்து பிரித்தெடுக்க முயற்சிப்பதே இதன் நோக்கமாகும்.

தைவான் குறித்த சீனாவின் இந்த பார்வை யதார்த்தத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பது இங்கு பிரச்னையாக உள்ளது. சீனாவுடனான எவ்விதமான ஒன்றிணைப்பையும் தைவானின் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர் என சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களை "தைவானியர்கள்" என்றே கருதுகின்றனர் "சீனர்களாக" அல்ல.

"சீன கலாச்சாரக் கூறுகளை நீக்குவதை" ட்சாய் யிங்-வென் அரசாங்கம் மேற்கொள்வதே இதற்கு காரணம் என, வாங் இ கூறுகிறார். மேலும், ட்சாய் "இரு சீனாக்கள்" அல்லது "ஒரு சீனா, ஒரு தைவானை" உருவாக்க முயல்வாதாக கூறுகிறார்.

 

சீனா - தைவான்

பட மூலாதாரம்,EPA

தைவான் சீனாவுடன் "மீண்டும் இணைந்த பின்பு" தைவான் மக்கள் "மீண்டும் கற்க வேண்டும்" என்று பிரான்ஸுக்கான சீன தூதர் கூறியிருந்தார். தைவான் மக்கள் சீனர்கள் அல்ல என நம்பும் வகையில் அவர்கள் "மூளைச்சலவை" செய்யப்பட்டுள்ளதாக, அவர் கூறுகிறார்.

இது மீண்டும் யதார்த்தத்துடன் வேறுபட்டதாக உள்ளது. விரும்பியதை படிக்கவும் சிந்திக்கவும் வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட்ட சுதந்திர சமூகத்தினராக தைவான் மக்கள் உள்ளனர்.

இவை அனைத்தும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போதைக்கு உள்ள கேள்வி.

2024இல் நடைபெற உள்ள தேர்தலில் தைவான் மக்களை அதிபர் ட்சாய் கட்சிக்கு எதிராக தைவான் மக்கள் வாக்களிக்கும் வகையில் அச்சுறுத்துவதே சீனாவின் நோக்கமாக உள்ளது. சீனாவுடன் நட்பாக உள்ள குவாமிண்டாங் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என சீனா நினைக்கிறது.

சீன பிரதான நிலப்பகுதியில் பெருமளவில் முதலீடு செய்துள்ள தைவான் தொழிலதிபர்களுக்கு சீனா நேரடி அச்சுறுத்தல்களை விடுக்கிறது. அவர்கள் "சரியான பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்" என அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

இத்தகைய உத்திகளை சீனா முன்பே முயற்சித்துள்ளது, ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தைவானின் தொழில்கள் பல சீனாவின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக தைவானின் பழ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைவானுக்கு வரும் பிரதான சுற்றுலாப் பயணிகள் மீது சீனா விதித்துள்ள தடையால் சுற்றுலாத் துறை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவைப் பற்றிய தைவானிய அணுகுமுறைகள் மேலும் கடினமாகிவிடும் என்பதே கடந்த சில நாட்களின் சான்றுகள் கூறுவதாக உள்ளன.

https://www.bbc.com/tamil/global-62473778

சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் - சீனாவின் அபிலாசைகள் தாய்வானுடன் முடியப்போவதில்லை தாய்வான் வெளிவிவகார அமைச்சர்

1 week ago
சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் - சீனாவின் அபிலாசைகள் தாய்வானுடன் முடியப்போவதில்லை தாய்வான் வெளிவிவகார அமைச்சர்

By Rajeeban

09 Aug, 2022 | 12:28 PM
image

சீனா தற்போது முன்னெடுத்துள்ள போர் ஒத்திகைகளின் நோக்கம் தாய்வானின் தற்போதையை நிலையையும் பிராந்தியத்தின் தற்போதையும் மாற்றுவதே என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் பாரிய போர் ஒத்திகை ஒரு தூண்டும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 நான்சி பெலோசியின் விஜயத்தின் பின்னர் தாய்வானிற்கு கிடைத்த சர்வதேச ஆதரவிற்காக அந்த நாடு நன்றியுடையதாக உள்ளது என தெரிவித்துள்ள ஜோசப் வூ சீனாவின் இலட்சியம் 23 மில்லியன் மக்களை கொண்ட சுயாட்சி நாடான தாய்வானை கைப்பற்றுவது மாத்திரமில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனா தற்போது கிழக்கு தென்சீனாவை தாய்வான் நீரிணையின் ஊடாக இணைக்க முயல்கின்றது இதன் மூலம் அந்த பகுதி முழுவதையும்  சர்வதேச கடற்பரப்பாக மாற்ற முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் சீனாவின் நோக்கங்கள் அத்துடன் நிற்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தாய்வான் தொடர்பான சீனாவின் நடவடிக்கை ஒரு சாக்குபோக்கு மாத்திரமே அதன் இலட்சியங்கள் அதன் தாக்கம் தாய்வானிற்கு அப்பால் நீண்டுள்ளது என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் நாடுகள் அனைத்தும் சீனாவின் ஏதேச்சதிகாரம்; விரிவடைவதற்கு பதிலளிக்க முயலவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாய்வானிற்கான சீனாவின் அச்சுறுத்தல்   முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது ஆனால் தனது சுதந்திரம் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தாய்வான் மிகவும் உறுதியாக உள்ளது என தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வு சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

சீனா பல வருடங்களாக தாய்வானை மிரட்டிவருகின்றது அது கடந்த வருடங்களில்  அதிகரித்துள்ளது என தாய்வான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான்சி பெலோசியின் விஜயம் இடம்பெற்றதோ இல்லையோ தாய்வானிற்கு எதிரான சீனாவின் இராணுவ அச்சுறுத்தல் எப்போதும் காணப்பட்டுள்ளது இதற்கு தீர்வை காணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாய்வானை சர்வதேசசமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கு வெளிநாட்டு நண்பர்களை தாய்வானிற்கு அழைப்பது தாய்வானின் முக்கிய தந்திரோபாயங்களில் ஒன்று என தெரிவித்துள்ள அவர்தாய்வானிற்கு வந்து ஆதரவு தெரிவிக்க விரும்பும் எவரையும் நாங்கள் வரவேற்க முடியாது என சீனா எங்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் என நான் அச்சம் கொண்டுள்ளேன்,சீனா தற்போது எங்களை அச்சுறுத்த முயல்கின்றது நாங்கள் அச்சமடையவில்லை என்பதை சிறந்த வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/133209

 

அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா

1 week 1 day ago
அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா
  • ஜாரியா கோர்வெட்
  • பிபிசி ஃபியூச்சர்
17 நிமிடங்களுக்கு முன்னர்
 

அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கா இதுவரை குறைந்தது மூன்று அணு குண்டுகளையாவது தொலைத்துள்ளது. அவை எங்குள்ளன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது எப்படி நடந்தது? அமெரிக்கா தொலைத்த அணுகுண்டுகள் எங்கே போயின? அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா?

அது பனிப்போர் உச்சத்தில் இருந்த ஒரு மெல்லிய குளிர்கால நாளின் காலைப்பொழுது.

ஜனவரி 17, 1966 அன்று, ஸ்பெயினில் இருந்த மீன்பிடி கிராமமான பலோமரேஸில், உள்ளூர்வாசிகள் வானத்தில் இரண்டு ராட்சத நெருப்புப் பந்துகள் அவர்களை நோக்கி வரும் காட்சியைக் கண்டனர். அடுத்த சில நொடிகளில், கட்டடங்கள் குலுங்கின. வெடிகுண்டு துண்டுகள் தரையில் விழுந்தன.

சில வாரங்களுக்குப் பிறகு, ஃபிலிப் மேயர்ஸ் டெலிபிரின்டர் மூலம் ஒரு செய்தியைப் பெற்றார். அந்த நேரத்தில், அவர் கிழக்கு சிசிலியில் உள்ள கடற்படை விமான தளத்தில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரியாக இருந்தார். ஸ்பெயினில் அவசரநிலை இருப்பதாகவும் சில நாட்களுக்குள் அவர் அங்கு இருக்க வேண்டும் என்றும் டெலிபிரின்டர் செய்தியில் கூறப்பட்டது.

 
 

1px transparent line

 

1px transparent line

இருப்பினும் ராணுவம் எதிர்பார்த்ததைப் போல் இந்தப் பணி ரகசியமாக இருக்கவில்லை. பொதுமக்களுக்கு என்ன நடக்கிறது எனத் தெரிந்திருந்தது. அன்று மாலை விருந்து ஒன்றில் கலந்துகொண்டு தனது மர்மமான பயணத்தைப் பற்றி அறிவித்தபோது, அவருடைய ரகசியத்தன்மை நகைப்புக்குரியதாக மாறியது. "அது ஒருவிதத்தில் சங்கடமாக இருந்தது. அது ரகசியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் எதற்காகச் செல்கிறேன் என்பதை என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள்," என்கிறார் மேயர்ஸ்.

பல வாரங்களுக்கு, உலகெங்கும் உள்ள செய்தித்தாள்கள், இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் நடுவானில் மோதியபோது, நான்கு பி28 தெர்மோநியூக்ளியர் குண்டுகளை பலோமரேஸில் விழுந்தன என்று சொல்லப்படுவதாகச் செய்தி வெளியிட்டன. மூன்று குண்டுகள் நிலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று மட்டும் தென்கிழக்கில் மத்திய தரைக் கடலில் தொலைந்தது. 1,100,000 டன் டி.என்.டி குண்டுகளின் வெடி திறனைக் கொண்ட, 1.1 மெகா டன் அணுகுண்டைக் கண்டுபிடிப்பதற்கான வேட்டை நடந்து கொண்டிருந்தது.

 

பாலோமரேஸில் அணு குண்டுகள் தொலைந்தபோது, 3.2 கிலோ புளூட்டோனியத்தை சிதறின

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பாலோமரேஸில் அணு குண்டுகள் தொலைந்தபோது, 3.2 கிலோ புளூட்டோனியத்தை சிதறின

காணாமல் போன மூன்று அணு குண்டுகள்

1. ஒரு மார்க் 15 தெர்மோநியூக்ளியர் குண்டு, ஜார்ஜியாவிலுள்ள டைபீ தீவில், பிப்ரவரி 5, 1958 அன்று தொலைந்தது. பாதுகாப்பான தரையிறக்கம் செய்வதற்கு விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக கடலில் தூக்கி எறியப்பட்டது.

2. ஒரு பி43 தெர்மோநியூக்ளியர் குண்டு, பிலிப்பைன்ஸ் கடலில், டிசம்பர் 5, 1965 அன்று தொலைக்கப்பட்டது. ஒரு குண்டுவீச்சு விமானம், விமானி மற்றும் அணு ஆயுதம் ஆகியவை, விமானங்களைச் சுமந்து செல்லும் கேரியர் கப்பலின் ஒரு பக்கத்திலிருந்து நழுவியது. அதை மீண்டும் கண்டுபிடிக்கவே இயலவில்லை.

இரண்டாவது நிலையிலிருந்த ஒரு பி28எஃப்1 தெர்மோநியூக்ளியர் அணுகுண்டு, கிரீன்லாந்து துலே விமான தளத்தில், 22 மே 1968 அன்று தொலைக்கப்பட்டது. கேபினில் தீ பற்றியதால், விமானத்தில் இருந்த குழு விமானத்தைக் கைவிட்டு தப்பித்தனர்.

சோவியத் தொலைத்த அணுஆயுத டோர்பிடோக்கள்

பலோமரேஸ் சம்பவம் மட்டுமே அணு ஆயுதத்தைக் கைவிட்ட சம்பவமல்ல. 1950ஆம் ஆண்டு முதல், பூமியில் பேரழிவை விளைவிக்கக்கூடிய இந்த குண்டுகளோடு தொடர்புடைய இத்தகைய 32 விபத்துகள் நடந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில், இவை தவறுதலாகக் கைவிடப்பட்டன அல்லது அவசரநிலையின்போது தூக்கி எறியப்பட்டு பிறகு மீட்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவின் மூன்று அணுகுண்டுகள் முற்றிலும் காணாமல் போய்விட்டன. அவை, சதுப்புநிலங்கள், பெருங்கடல் என்று எங்கு தொலைந்தனவோ அங்கேயே இன்றுவரை இருக்கின்றன. ஆனால், எங்கே என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

 

அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கலிஃபோர்னியாவில் இருக்கும் ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுதப் பரவல் தடுப்பு மையத்தின் கிழக்காசிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு திட்டத்தின் இயக்குநர் ஜெஃப்ரி லூயிஸ், "அமெரிக்காவின் இத்தகைய பெரும்பாலான பிரச்னைகளைப் பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். 1980களில் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட முழு பட்டியல் வெளியானபோது தான் இது வெளிப்பட்டது," என்று அவர் விளக்குகிறார்.

"பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா அல்லது சீனா பற்றி எங்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது. எனவே முழு கணக்கியல் போன்ற எதுவும் எங்களிடம் இல்லையென்று நான் நினைக்கிறேன்," என்கிறார் லூயிஸ்.

சோவியத் யூனியன், 1986-இல் 45,000 அணு குண்டுகளைக் குவித்து வைத்தது. அவர்களும் அணு குண்டுகளைத் தொலைத்த சம்பவங்கள் நடந்துள்ளன. அவையும் மீட்டெடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்க சம்பவங்களைப் போலன்றி, அவையனைத்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் நிகழ்ந்தன. அவற்றின் இருப்பிடங்கள் தெரிந்திருந்தாலும் அணுக முடியாத இடத்தில் இருக்கும்.

ஏப்ரல் 8,1970-இல் சோவியத் கே-8 என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் தீ பரவத் தொடங்கியது. அது ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு அருகே, பிஸ்கே விரிகுடாவில், வடகிழக்கு அட்லான்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. அதில் மூன்று அணு ஆயுத டோர்பிடோக்கள் இருந்தன. அவை அந்த நீர்மூழ்கிக் கப்பலோடு கடலுக்குள் மூழ்கின.

1974ஆம் ஆண்டில், ஹவாய்க்கு வடமேற்கே பசிபிக் பெருங்கடலில் மூன்று ஆணுசக்தி ஏவுகணைகளுடன் ஒரு சோவியத் கே-129 நீர்மூழ்கிக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியது. அதை விரைவாகக் கண்டுபிடித்து, அதிலிருந்து அணு ஆயுதங்களைத் தன்வசமாக்கிக் கொள்ள அமெரிக்கா ரகசிய முயற்சிகளை எடுக்க முடிவெடுத்தது என்கிறார் லூயிஸ்.

ஹாவர்ட் ஹியூஸ் என்ற அமெரிக்க கோடீஸ்வரர், விமானி மற்றும் திரைப்பட இயக்குநர் என்று பரவலாகப் பிரபலமானவர். அவர் ஆழ்கடல் சுரங்கங்களில் ஆர்வம் இருப்பதைப் போல காட்டிக் கொண்டார். "ஆனால், உண்மையில் அது ஆழ் கடல் சுரங்கம் இல்லை. அது, ஆழ் கடல் வரை சென்று நீர்மூழ்கிக் கப்பலைப் பிடித்து மீண்டும் மேலே கொண்டு வருவதற்கான ஒரு ராட்சத கருவியை உருவாக்குவதற்கான முயற்சி," என்று லூயிஸ் கூறுகிறார். பிராஜக்ட் அசோரியன் என்றழைக்கப்பட்ட அது துரதிர்ஷ்டவசமாக வேலை செய்யவில்லை. நீர்மூழ்கிக் கப்பலைத் தூக்கும்போதே உடைந்துவிட்டது.

"ஆகவே அந்த அணு ஆயுதங்கள் மீண்டும் கடலுக்கடியில் விழுந்திருக்கும்" என்கிறார் லூயிஸ்.

1998ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் அவருடைய கூட்டாளியும் 1958ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள டைபீ தீவுக்கு அருகே விழுந்த அணு குண்டைக் கண்டுபிடிக்க உறுதியோடு முயன்றனர். அவர்கள் முதலில் அதைத் தொலைத்த விமானியை விசாரித்தார்கள். பிறகு வெடிகுண்டைத் தேடியவர்களையும் பேட்டி கண்டார்கள். பல தசாப்தங்களுக்கு முன்பு அட்லான்டிக் பெருங்கடலின் அருகிலுள்ள விரிகுடாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இறுதியில் அவர்களுடைய தேடல் பரப்பு சுருங்கியது. பல ஆண்டுகளாக மேவரிக் கூட்டாளிகள் படகு மூலம் அந்தப் பகுதியைத் தேடினர்.

 

அணுகுண்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பாலோமரேஸில் அணுகுண்டை மீட்க ரோபோடிக் நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டது

ஒருநாள் அவர்கள் கதிர்வீச்சைக் கண்டறியும் கெய்கர் கருவியைப் படகில் பொருத்தி தேடிக் கொண்டிருந்தபோது, விமானி விவரித்த சரியான இடத்தில், மற்ற இடங்களில் இருக்கும் அளவை விட 10 மடங்கு அதிக கதிர்வீச்சு இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், அது கடல் பரப்பிலுள்ள தாதுக்களில் இயற்கையாக நிகழும் கதிர்வீச்சிலிருந்து வந்துள்ளது.

ஆகவே, இப்போது வரை அமெரிக்கா தொலைத்த மூன்று அணு குண்டுகள் மற்றும் சோவியத் தொலைத்த டோர்பிடோக்கள், பெருங்கடலில் அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தல்களின் நினைவுச் சின்னங்களாகக் கிடக்கின்றன. இருப்பினும் அவை பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன. இந்த ஆபத்தான ஆயுதங்கள் அனைத்தையும் ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை? அவை வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளதா? நாம் எப்போதாவது அவற்றைத் திரும்பப் பெற முடியுமா?

தண்ணீருக்குள் வந்த பாராசூட் சிக்கல்

இறுதியாக, 1966ஆம் ஆண்டில் பி52 குண்டுவீசும் விமானம் விழுந்த ஸ்பானிய கிராமமான பலோமரேஸுக்கு மேயர்ஸ் வந்தபோது, அதிகாரிகள் காணாமல் போன அணு குண்டை தேடிக் கொண்டிருந்தனர்.

மார்ச் 1, 1996 அன்று, சிறிய நீர்மூழ்கிக் கப்பல் வெடிகுண்டு முதன்முதலில் கடலின் அடிவாரத்தைத் தாக்கியபோது ஏற்பட்ட தடத்தைக் கண்டுபிடித்தது. பிறகு, அதுகுறித்த படங்கள் ஒரு வினோதமான காட்சியை வெளிப்படுத்தின. காணாமல் போன அணு ஆயுதத்தின் வட்டமான முனை அதில் தெரிந்தது. அணுகுண்டுக்குப் பொருத்தப்பட்டிருந்த வெள்ளை நிற பாராசூட், அது விழுந்தபோது ஓரளவுக்கு வெளியாகி அணுகுண்டின் வட்டமான முனையை மூடியிருந்தது.

அந்த அணுகுண்டை மீட்பதற்கான முயற்சிகள் ஓயவில்லை. 2,850 அடி ஆழத்தில், கடல் தளத்திலிருந்து இந்த அதை மீட்பது மேயர்ஸின் வேலையாக இருந்தது. அவர்கள் சில ஆயுரம் அடி கனரக நைலான் கயிறு, ஓர் உலோக கொக்கி ஆகியவற்றை வைத்து ஒரு வகையான மீன் பிடி தூண்டிலைப் போன்ற ஒரு கருவியை உருவாக்கினர். அந்த ஆயுதத்தின் மீது அதை மாட்டி, முக்குளிப்பவர் அதற்கு அருகே செல்லக்கூடிய தொலைவுக்கு அதை மேலே இழுப்பதும், பிறகு முக்குளிப்பவர்கள் அதை மேலே கொண்டு வருவதும் "திட்டமாக" இருந்தது. ஆனால், அது வேலை செய்யவில்லை.

"அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் மெதுவாகவே செய்யப்பட்டன. நாங்கள் காத்திருந்தோம். அந்தத் தூண்டில் போன்ற கருவியை அணுகுண்டில் இணைக்க முடிந்தது. ஆனால், அதைத் தண்ணீரிலிருந்து மேலே உயர்த்தத் தொடங்கியபோது, அதிலிருந்த பாராசூட், கடலின் அடியில் விரிந்துகொண்டது. இதனால், அது ஒருபுறம் அணுகுண்டை கீழ்நோக்கி இழுக்கவே, நாங்கள் ஒருபுறம் மேல்நோக்கி இழுக்கவே, அதைத் தூக்குவது கடினமானது," என்கிறார் மேயர்ஸ்.

"பாராசூட்கள் நிலத்தில் செயல்படுவதைப் போலவே தண்ணீரிலும் நன்றாக வேலை செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்கிறார் மேயர்ஸ். பாராசூட் ஒருபுறம் கீழ்நோக்கி மிகவும் கடினமாக இழுத்ததால், தூண்டிலின் கொக்கி உடைந்து அணு குண்டு கீழே விழுந்தது. இந்த முறை அது முன்பை விட இன்னும் ஆழத்தில் விழுந்தது. மேயர்ஸ் உடைந்து போனார்.

 

1px transparent line

 

1px transparent line

ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள் வேறு வகையான ரோபோடிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். அதன்மூலம் பாராசூட்டையே பிடித்து இழுத்து, அணு குண்டை நேரடியாக மேலே இழுக்க முயன்றனர். அந்த முறையில் அதைச் செய்தும் முடித்தார்கள்.

தொலைந்துபோன அணு குண்டுகளின் அபாயம்

துரதிர்ஷ்டவசமாக, காணாமல் போன மூன்று அணு குண்டுகளில் இத்தகைய வெற்றிகரமான மீட்பு முயற்சிகள் சாத்தியப்படவில்லை. இருப்பினும் அந்த அணு குண்டுகள் வெடிக்கும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

அபாயம் ஏன் குறைவு என்பதைப் புரிந்துகொள்ள, அணு குண்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் 1905ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது அறிவியல் கட்டுரையின் பக்கங்களில் தனது ஃபவுன்டைன் பேனாவை வைத்து, உலகின் மிகவும் பிரபலமான சமன்பாடாக மாறவிருந்த, ஒரு பொருளின் நிறையை ஒளியின் வேகத்தால் பெருக்கினால் கிடைப்பதே ஆற்றல், E = mc2 என்ற தனது கோட்பாட்டை எழுதினார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டை, நாஜிக்கள் தனது கோட்பாட்டை ஓர் ஆயுதமாக மாற்ற முயல்கிறார்கள் என்று எச்சரித்தார். அதற்குப் பிறகு விரைவாக மேன்ஹாட்டன் திட்டம் உருவாக்கப்பட்டதும் அமெரிக்கா அணு குண்டை பயன்படுத்தியதும் வரலாறு.

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் பயன்படுத்தப்பட்டவை அசல் அணு குண்டு வகை. இவை கதிரியக்க தனிமங்களின் அணுக்களை ஒன்றுக்கொன்று மோத வைத்து, அவற்றைப் பிரித்து வெவ்வேறு தனிமங்களை உருவாக்குகின்றன. இந்த "பிளவு" செயல்முறை அதிக ஆற்றலை வெளியிடுகிறது.

இந்த அணுக்கரு பிளவை அடைவதற்கு, அணு குண்டுகள் பொதுவாக துப்பாக்கி போன்ற செயல்முறையைப் பயன்படுத்தியது. அது கதிரியக்க தனிமங்களை உடைக்க வழக்கமான வெடிபொருட்களைப் பயன்படுத்தியது.

இதற்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாகப் பயன்படுத்தப்பட்ட தெர்மோநியூக்ளியர் அல்லது ஹைட்ரஜன் குண்டுகள் - 1950கள் மற்றும் 60களில் நிறைய அணு ஆயுதங்கள் தொலைக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை - அதைவிட ஆயிரக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தவை.

இவை, முதலில் அணுகுண்டுகளைப் போலவே வழக்கமான பிளவு நடந்து அளப்பறிய ஆற்றலை வெளியிடும். இது இரண்டாவது மையத்தைப் பற்ற வைக்கும். அதில், ஹைட்ரஜன் ஐசோடோப்புகள், டியூட்டீரியம் (கனமான ஹைட்ரஜன்) மற்றும் டிரிடியம் (கதிரியக்க ஹைட்ரஜன்) ஆகியவை ஒன்றாக உடைந்து, முன்பைவிடப் பல மடங்கு அதிக ஆற்றலை வெளியிடுகின்றன.

தொலைந்து போன டைபீ தீவு அணுகுண்டை எடுத்துக்கொண்டால், அது இன்னும் எங்கோ கடலுக்கடியே மண்ணில் புதையுண்டு கிடக்கிறது. பிப்ரவரி 5, 1958-இல், இந்த 3,400-கிலோ மார்க் 15 தெர்மோநியூக்ளியர் ஆயுதம் பி-47 குண்டுவீச்சு விமானத்தில் ஏற்றப்பட்டது. இதுவொரு நீண்ட பயிற்சிப் பணியிலொரு பகுதி. மாஸ்கோ போல, விர்ஜீனியாவின் ராட்ஃபோர்ட் நகரத்தை உருவகப்படுத்தி, சோவியத் யூனியன் மீதான தாக்குதலை உருவகப்படுத்துவது தான் திட்டம். விமானிகள் ஃப்ளோரிடாவில் இருந்து புறப்பட்டு பல மணிநேரங்கள் கனரக ஆயுதங்களுடன் கப்பலில் பறக்கும் திறனைப் பரிசோதிக்கும் ஒரு வழியாக, தங்கள் இலக்கை நோக்கிச் சென்றனர்.

 

அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

எல்லாம் நன்றாக நடந்தது. ஆனால், திரும்பும் வழியில், விமானங்கள் தெற்கு காரோலினாவில் ஒரு தனி பயிற்சிப் பணியை எதிர்கொண்டது. இந்தப் பயிற்சியின் திட்டம், பி47 விமானத்தில் ஒன்றை இடைமறிப்பது. ஆனால், அந்த வழியில் வந்த அணு ஆயுதம் ஏந்தியிருந்த வேறு பி47 விமானத்தை அவர்கள் இடைமறித்தது தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நடந்த விபத்தில் அணுகுண்டை ஏற்றிச் சென்ற பி47 ரக விமானம் சேதமடைந்தது.

அணுகுண்டை தண்ணீரில் வீசிவிட்டு, அவசரமாகத் தரையிறக்க விமானி முடிவெடுத்தார். வெடிகுண்டு 30,000 அடி ஆழத்தில், டைபீ தீவு கடல் பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த தாக்கத்தில் கூட அது வெடிக்கவில்லை. உண்மையில் முன்பு கூறிய இத்தகைய 32 விபத்துகளில் எதுவுமே அணு குண்டுகளை வெடிக்க வைக்கவில்லை. ஆனால், இரண்டு குண்டுகள், கடல் பரப்பை கதிரியக்கப் பொருட்களால் மாசுபடுத்தியுள்ளன.

பிளவு வினை நடக்கத் தேவையான அணுக்கருப் பொருளை ஆயுதத்திலிருந்து தனித்தனியாக வைத்திருப்பது, அணு குண்டு வெடிக்காததற்குரிய காரணிகளில் ஒன்று என்று லூயிஸ் கூறுகிறார்.

சுமார் 10 வாரங்கள் தேடியபிறகு, டைபீ தீவு வெடிகுண்டு 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியன்று தொலைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டில், அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் உதவியாளர் எழுதிய ஒரு கடிதத்தில், அவர் வெடிகுண்டு "முழுமையானதாக இருந்தது" என்று விவரித்தார். அதாவது அதில் புளூட்டோனியம் கோர் இருந்தது. இது உண்மையாக இருந்தால், மார்க் 15 இன்னமும் முழு வெடி திறன் கொண்டதாக இருக்கலாம்.

இன்று இந்த வெடிகுண்டு 5-15 அடிக்கு கடல் தரை மண்ணின் அடியில் புதைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், விமானப்படை அணு ஆயுதங்கள் மற்றும் எதிர்ப்புப் பரவல் நிறுவனம், அதனுள்ளே இருக்கும் வெடிபொருட்கள் அப்படியே இருந்தால், அது "தீவிரமான வெடிப்பு அபாயத்தை" ஏற்படுத்தக்கூடும் என்று முடிவு செய்தது.

அணு ஆயுதம் நீருக்கடியில் வெடிக்குமா?

சாத்தியமுண்டு. 25 ஜூலை 1946இல் அமெரிக்கா பிகினி அட்டோல் என்ற பகுதியில் அணுகுண்டை வெடிக்கச் செய்தது. பன்றிகள் மற்றும் எலிகளால் நிரப்பப்பட்ட கப்பல்களுக்குக் கீழே 90 அடி ஆழத்தில் அணு குண்டை வெடிக்க வைத்தனர். பல கப்பல்கள் உடனடியாக மூழ்கின. அதிலிருந்த உயிரினங்கள், ஆரம்ப வெடிப்பிலும் பிறகு தொடர்ந்த கதிர்வீச்சிலும் உயிரிழந்தன. வேற்று கிரக வானிலையைப் போல, ராட்சத வெள்ளை காளான் மேகம் எழுவதை அந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட அணு குண்டு வெடிப்பு காட்டியது.

 

அணு குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

வேற்று கிரக வானிலையைப் போல, ராட்சத வெள்ளை காளான் மேகம் எழுவதை அந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட அணு குண்டு வெடிப்பு காட்டியது

இந்தச் சோதனை மற்றும் பிற சோதனைகளின் விளைவாக, அந்தத் தீவுச் சங்கிலி மிகவும் கதிரியக்கம் கொண்டதாக மாறியது. அது இன்றுவரை கதிர்வீச்சு கொண்டதாக உள்ளது. செர்னோபில் போல, மனிதர்களற்ற காட்டுயிர்களின் சோலையாக அது மாறிவிட்டது.

அணுகுண்டுகளின் கதிரியக்கத் தன்மை

காணாமல் போன மூன்று அணுகுண்டுகள் எப்போதாவது மீண்டும் கண்டுபிடிக்கப்படுவது சாத்தியமில்லை என்று லூயிஸ் கருதுகிறார்.

விமானங்கள் கடலில் விழுந்து நொறுங்கும்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி பெரும்பாலும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படும். நவீன தொழில்நுட்பத்துடன் இதைக் கண்டுபிடிக்க, "நீருக்கடியில் இருப்பிடத்தைக் காட்டும் பீக்கன்" பயன்படுத்தப்படும். அது தேடல் குழுக்களை கறுப்புப் பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி வழிநடத்தும்.

ஆனால், தொலைந்துபோன அணு ஆயுதங்கள் இருந்த விமானத்தில் அத்தகைய தொழில்நுட்பங்கள் எதுவுமில்லை. அதற்குப் பதிலாக, தேடல் குழுக்கள் கடலை சிறிது சிறிதாகத் தேட வேண்டும்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டெரெக் டியூக் டைபீ வெடிகுண்டை தேடியதைப் போல, கதிர்வீச்சு உள்ள பகுதிகளைத் தேடுவது ஒரு மாற்றாக இருக்கலாம். ஆனால், இது மிகவும் சிக்கலானது. அணு குண்டுகள் உண்மையில் கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல.

"அவற்றைக் கையாளும் மக்களுக்குக் கதிரியக்க அச்சுறுத்தல் இல்லாத வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றில் கதிரியக்கத் தன்மை இருந்தாலும் அதைக் கண்டறிய மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும்," என்கிறார் லூயிஸ்.

லூயிஸை பொறுத்தவரை, தொலைந்துபோன அணு ஆயுதங்கள் மீதான ஈர்ப்புக்குக் காரணம், அவை இப்போது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான அபாயங்கள் இல்லை. அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதுதான் அதற்கான காரணம். அது, ஆபத்தான கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பாகக் கையாளும் அதிநவீன அமைப்புகளில் இருக்கும் பலவீனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

 

அணு குண்டு மீட்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரோபோடிக் நீர்மூழ்கிக் கப்பலின் உதவியோடு இறுதியில் பாலோமரேஸில் தொலைந்த அணுகுண்டு மீட்கப்பட்டது

லூயிஸ், "பொதுவில், அணு ஆயுதங்களைக் கையாளும் நபர்கள் நமக்குத் தெரிந்த மற்றவர்களைவிட வித்தியாசமானவர்கள், மிகக் குறைவான தவறுகளைச் செய்கிறார்கள் அல்லது அவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற கற்பனை உள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனால், உண்மை என்னவென்றால், அணுசக்தியைக் கையாள வேண்டிய அமைப்புகள் மற்ற மனித அமைப்புகளைப் போன்றவை தான். அவை குறைபாட்டற்றவை அல்ல. அவை தவறுகள் செய்கின்றன," என்று கூறுகிறார்.

அனைத்து அணுகுண்டுகளும் இறுதியில் மீட்கப்பட்டுவிட்ட பாலோமரேஸில் கூட, நிலம் இன்னமும் முன்பு நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளின் கதிர்வீச்சினால் மாசுபட்டுள்ளது. ஆரம்ப துப்புரவு முயற்சிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவப் பணியாளர்களில் சிலருக்கு மர்மமான முறையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கும் இந்தத் துப்புரவு முயற்சிக்கும் தொடர்பு உள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள். 2020ஆம் ஆண்டில், உயிர் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் முன்னாள் படைவீரர்கள் விவகார செயலாளருக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். இதில் பலரும் 70 மற்றும் 80 வயதின் பிற்பகுதியில் உள்ளனர். உள்ளூர் மக்கள் பல தசாப்தங்களாக கதிர்வீச்சை முழுமையாகச் சுத்தம் செய்யுமாறு பிரசாரம் செய்து வருகிறார்கள். பாலோமரேஸ் "ஐரோப்பாவின் மிகுந்த கதிரியக்கம் கொண்ட நகரம்" என்று அழைக்கப்பட்டது. மேலும் உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தற்போது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் அப்பகுதியில் விடுமுறை விடுதி கட்டத் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து வருகின்றனர்.

1968ஆம் ஆண்டு ஆபரேஷன் குரோம் டோம் முடிவுக்கு வந்ததால், பனிப்போரின் போது ஏற்பட்ட இழப்புகள் மீண்டும் நிகழ வாய்ப்பில்லை என்று லூயிஸ் நம்புகிறார்.

இதற்கு விதிவிலக்காக, இன்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றிலும் இது மாதிரியான, கிட்டத்தட்ட தவறுதலாகக் கைவிடக்கூடிய நிலைமைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் தற்போது 14 பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் ஒவ்வொன்றிடமும் அத்தகைய நான்கு கப்பல்கள் உள்ளன.

அணுசக்தி தடுப்புகளாக வேலை செய்ய, இந்த நீர்மூழ்கிக் கப்பகள் கடலில் செயல்படும்போது இவை கண்டறியப்படாதவாறு இருக்க வேண்டும். மேலும் அவை எங்குள்ளன என்பதைக் கண்டறிய மேற்பரப்புக்கு எந்த சமிக்ஞையையும் அனுப்ப முடியாது. முக்கியமாக, நீர்மூழ்கிக் கப்பல் கடைசியாக எந்த நேரத்தில், எங்கு இருந்தது, எந்தத் திசையில் சென்றது, எவ்வளவு வேகமாகப் பயணித்தது என்பதைக் கணக்கிடுவதற்கு கைரோஸ்கோப்கள் பொருத்தப்பட்ட இயந்திரங்களைச் சாந்துள்ளனர். இந்தத் துல்லியமற்ற அமைப்பு, பல சம்பவங்களை விளைவித்துள்ளது. சமீபத்தில் 2018ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஸ்.எஸ்.பி.என். நீர்மூழ்கிக் கப்பல் கிட்டத்தட்ட ஒரு கப்பலின் மீது மோதியிருக்கும்.

அணு ஆயுதங்களைத் தொலைக்கும் சகாப்தம் இன்னும் முடிவடையாமல் கூட இருக்கலாம்.

https://www.bbc.com/tamil/global-62470199

உக்ரைனிலிருந்து... தானியங்களுடன் புறப்பட்ட கப்பல், துருக்கியை வந்தடைவு!

1 week 1 day ago
உக்ரைனிலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல் துருக்கியை வந்தடைவு! உக்ரைனிலிருந்து... தானியங்களுடன் புறப்பட்ட கப்பல், துருக்கியை வந்தடைவு!

ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை வந்தடைந்தது.

உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து கடந்த 5ஆம் திகதி 12,000 டன் சோளத்துடன் புறப்பட்ட கப்பல் நேற்று (திங்கட்கிழமை) துருக்கியை வந்தடைந்தது.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் உங்களைக் கைவிடாது என மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தத் தகவல் நம்பிக்கை அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

ஒப்பந்தப்படி உக்ரைனிலிருந்து 12 கப்பல்கள் அனுப்பப்படவுள்ளன. 3,22,000 மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் புறப்பட்டுள்ளன.

உக்ரைனிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட மேலும் 4 கப்பல்கள் விரைவில் துருக்கியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சியெரா லியோன் நாட்டுக் கொடியுடன் 26,000 மெட்ரிக் டன் கோழித் தீவனத்தை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் திட்டமிட்டபடி இன்னும் லெபனானை சென்றடையவில்லை. அந்தக் கப்பல் வருவதற்குத் தாமதமானதால் உணவு தானியத்தை வாங்கவிருந்தவர் மறுப்பு தெரிவித்ததாகவும், வேறு யாராவது வாங்குவதற்காக அந்தக் கப்பல் லெபனான் அருகே காத்திருப்பதாகவும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம், ரஷ்யா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையொப்பமானமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1294076

சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன்: ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் பாண்ட்

1 week 1 day ago
சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன்: ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் பாண்ட்
  • பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர்
  • பிபிசி நியூஸ்
7 ஆகஸ்ட் 2022
 

2005ஆம் ஆண்டு என்பிசியில் கேரி ஷ்ரோன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2005ஆம் ஆண்டு என்பிசியில் கேரி ஷ்ரோன்

9/11 நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு முதல் உளவுப்படை அணியை வழிநடத்திய சிஐஏ ஏஜென்ட் கேரி ஷ்ரோன் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 80ஆவது வயதில் காலமானார். பொதுவாக உளவு அமைப்புகளில் வாழ்ந்து, கடமைக்காகவே அர்ப்பணித்து மறைந்தவர்கள் பற்றி உலகம் அதிகம் அறிவதில்லை. ஆனால், அந்த உளவு அமைப்புகளின் வரலாற்றில் இதுபோன்ற ஜேம்ஸ் பாண்டுகள் என்றென்றும் நினைவுகூரப்படுவர். அத்தகைய ஒருவர்தான் கேரி ஷ்ரோன்.

அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அழித்தொழித்த அமெரிக்க நடவடிக்கையில் அவர் ஆற்றிய வரலாற்றுபூர்வ பங்களிப்பை இங்கே விரிவாக காணலாம்.

அது.... 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 19, , உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன், 9/11 தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளில் இன்னும் புகைந்து கொண்டிருந்த நிலையில், சிஐஏ அதிகாரி கேர் ஷ்ரோன் தனது மேலதிகாரியின் அலுவலகத்தில் தான் செய்ய வேண்டியவை குறித்த உத்தரவுகளைப் பெற்றார்.

அதில் ஒன்று, "பின்லேடனை பிடிக்கவும் கொல்லவும் அவரது தலையை பனிப்பெட்டியில் கொண்டு வர வேண்டும்," என்பது.

 

ஒசாமா பின்லேடனின் வலது கரமாகக் கருதப்பட்ட அய்மன் அல் ஜவாஹிரி மற்றும் அல்-காய்தாவின் உள்வட்டத்தின் மற்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை, "அவர்களுடைய தலைகளை ஈட்டி முனையின் மீது குத்த வேண்டும்" என்று கேர் ஷ்ரோனுக்கு வந்த உத்தரவுகள் நேரடியானதாகவே இருந்தன.

அடுத்த சில நாட்களுக்குள், ஷ்ரோன் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் குழு ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியது. அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசிகளை விடச் சற்று கூடுதலான வசதிகளைக் கொண்ட சாதனங்களை வைத்திருந்தனர். அத்துடன், அவர்களுக்கு ஆதரவளிக்கும் கூட்டாளிகளுக்காக லட்சக்கணக்கான டாலர்கள் பணமும் வைத்திருந்தனர்.

சில வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 7ஆம் தேதி தாலிபன் ஆளுகையில் இருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடங்கியது. இது ஆகஸ்ட் 2021இல் முடிவடைந்த சுமார் 20 ஆண்டுகால போரைத் தொடக்கி வைத்தது.

பின்லேடன், 2011ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். ஆனால், அவரது வலது கரமாக செயல்பட்ட ஜவாஹிரியை கொல்ல மேலும் பத்தாண்டுகள் ஆயின.

ஆகஸ்ட் 1ஆம் தேதி, இறுதியாக காபூலில் அமெரிக்க ட்ரோன் ஒன்று ஜவாஹிரியை கண்டுபிடித்த ஒரு நாள் கழித்து, கேரி ஷ்ரோன் தனது 80ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

1px transparent line

 

1px transparent line

அவருடைய மரணத்தை அடுத்து, சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் ஆற்றிய இரங்கல் உரையில், அமெர்க்க உளவுத்துறையில் பணியாற்றும் ஒவ்வோர் அதிகாரிக்கும் ஷ்ரோனின் வாழ்க்கையை "ஒரு காவியமாக, உத்வேகமாக" குறிப்பிட்டுப் பாராட்டினார்.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிலும் சிஐஏவிலும் அவர் பணியாற்றிய அனைத்து பதவிகளிலும், மிகச் சிறப்பான திறனை கேரி வெளிப்படுத்தினார். அவருடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வாய்மை தவறாமை மற்றும் விடாமுயற்சியை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்," என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார்.

அந்த நேரத்தில் சிஐஏவில் பணியாற்றிய சில அதிகாரிகளே, ஆரம்பகட்ட நடவடிக்கையை வழிநடத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். பல தசாப்தங்களாக நீடித்த எங்கள் தொழிலில், ஷ்ரோன் 1980கள் மற்றும் 1990களில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சிஐஏ-வின் தலைவராகப் பணியாற்றினார்.

அந்த நேரத்தில், ஆப்கானிஸ்தான் மீது "அமெரிக்க அரசுக்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை," என்று அவர் பிபிஎஸ்-இல் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார்.

"தாலிபன்கள் அங்கு இருந்தனர். அவர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவொரு துயர்மிகுந்த அரசாங்கம். தங்கள் மக்களை மோசமாக நடத்தினார்கள். ஆனால், உண்மையில், வாஷிங்டனில் இருந்தவர்கள் யாரும் அதன்மீது அவ்வளவாக அக்கறை காட்டவில்லை."

 

சிஐஏ அதிகாரிகள்

பட மூலாதாரம்,CENTRAL INTELLIGENCE AGENCY TWITTER

 

படக்குறிப்பு,

செப்டம்பர் 19, 2001 அன்று அல் காய்தா தலைவர்களை வேட்டையாட, 3 மில்லியன் டாலர்களுடன் புறப்பட்ட சிஐஏ அதிகாரிகள்

இருப்பினும், 1996ஆம் ஆண்டு வாக்கில், 1980களில் சோவியத்துக்கு எதிரான கொரில்லா போரில் பங்கெடுத்த, பெரியளவில் அப்போது அறியப்படாத ஜிஹாதியான ஒசாமா பின்லேடனின் நடவடிக்கைகளில் அமெரிக்க உளவுத்துறை கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகு, "நிலைமை மாறத் தொடங்கியது" என்று ஷ்ரோன் கூறினார்.

சிஐஏவின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் ஒரு சிறு குழுவை ஷ்ரோன் உருவாக்கினார். அந்தக் குழுவே செளதி நாட்டவரான பின்லேடனால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து முதலில் எச்சரித்தது. ஷ்ரோன் விரைவில், அந்தப் பிராந்தியத்தில் அவர் இருந்த காலத்திலிருந்து அறிந்து வைத்திருந்த ஆப்கன் தாலிபன் தளபதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஷ்ரோன் வழிகாட்டுதலின் பேரில், சிஐஏ பலமுறை பின்லேடனை கொல்லவோ பிடிக்கவோ முயன்றது. பின்லேடனின் வாகனத் தொடரணி (கான்வாய்)மீது மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவது, ஏவுகணைகள் மற்றும் குண்டு வீச்சுத் தாக்குல்களை மேற்கொள்வது, தெற்கு ஆப்கனில் இருக்கும் பின்லேடனின் பண்ணையில் சோதனையிடுவது வரை எல்லாம் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது.

இந்த நேரத்தில் உச்சகட்டமாக, பின்லேடன் 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டு வெடிப்புகளை நடத்தினார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் அல்-காய்தா தளங்கள் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான கப்பல் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின்லேடன் தப்பினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அல்-காய்தாவைச் சேர்ந்த விமான கடத்தல்காரர்கள், 9/11 தாக்குதலைத் தொடங்கினர்.

 

வடக்குக் கூட்டணி, 2001

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கேரி ஷ்ரோனின் 2001ஆம் ஆண்டின் பணி, இதுபோன்ற வடக்குக் கூட்டணி போராளிகளுடன் இணைவது

2001ஆம் ஆண்டு, ஆபரேஷன் ஜாபிரேக்கர் என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் ஆப்கானிஸ்தானுக்கான ஆபரேஷனில், ஷ்ரோன் மற்றும் ஏழு அமெரிக்கர்கள், 1996ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆண்ட தாலிபன் அரசை எதிர்த்துப் போராடும் குழுக்களின் கூட்டணியான வடக்குக் கூட்டணியோடு (Northern Alliance) இணைந்தார்கள். அப்போது 59 வயதாகியிருந்த ஷ்ரோன், சிஐஏவின் பணியாளர்களுக்கான ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கு வெறும் 11 நாட்களே மிச்சமிருந்தது.

"நான் அந்த ஆப்கனுக்குள் செல்ல அழைப்பு வரும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வடக்குக் கூட்டணியில் இருப்பவர்களுடனான எனது நீண்ட கால உறவைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இது சரியான தேர்வு என்றே நினைக்கிறேன்," என்று ஷ்ரோன் பல ஆண்டுகளுக்குப் பிறகு கூறினார்.

ஷ்ரோனின் மதிப்பீட்டையே முன்னாள் சிஐஏ துணை ராணுவ அதிகாரியும் ஆப்கானிஸ்தான் போர் வீரரும் முன்னாள் துணை பாதுகாப்புச் செயலருமான, மைக்கேல் "மிக்" முல்ராயும் கூறினார்.

"செப்ரம்பர் 11, 2001ஆம் தேதிக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அவருடைய அனுபவம், அவர் தலைமையிலான படையெடுப்பு, ஆரம்பகட்ட படையெடுப்பில் எங்கள் வெற்றிக்கு முற்றிலும் முக்கியமானது. ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற முதல் அணியில் இருந்ததோடு, கேரி முன்னின்று படையை வழிநடத்தியதன் மூலம் அவர் ஓர் உதாரணத்தை அமைத்தார்," என்று முல்ராய் பிபிசியிடம் கூறினார்.

ஒரு ராணுவ நடவடிக்கையாக, ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பு குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியடைந்தது. 2001 டிசம்பருக்குள் தாலிபன்களை அதிகாரத்திலிருந்து விரட்டியது. ஆனால், ஷ்ரோனின் முக்கிய இலக்கான, பின்லேடன் மற்றும் அல்-ஜவாஹிரி போன்ற பிற மூத்த அல்-கொய்தா பிரமுகர்கள் தப்பிவிட்டனர். அதே நேரத்தில், தாலிபன்கள் மீண்டும் ஒருங்கிணைந்து போரிட்டதால், போர் உச்சகட்டத்தை அடைந்தது.

 

அல்-கொய்தா தலைவர்கள்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

2001ஆம் ஆண்டு கோப்புப் படத்தில், ஒசாமா பின்லேடனும் அய்மன் அல்-ஜவாஹிரியும்

2003ஆம் ஆண்டு இராக் படையெடுப்பால் சிஐஏ மற்றும் ராணுவத்தின் வளங்கள் குறைக்கப்பட்டதன் காரணமாக, ஆப்கானிஸ்தானை பாதுகாப்பதிலும் அதன் முக்கிய எதிரிகளைப் பிடிப்பதிலும் அமெரிக்கா தோல்வியடைந்ததாக ஷ்ரோன் தனது வாழ்வின் பிற்பகுதியில் அளித்த பேட்டிகளில் கூறினார்.

இராக் அரசாங்கத்துக்கு 9/11 தாக்குதல்களோடு தொடர்பு இருந்தது என்று ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அமெரிக்க நிர்வாகத்தின் ஆரம்பகட்ட கூற்றுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அப்படியான எந்தத் தொடர்பும் இருந்ததாக தாம் நம்பவில்லை என ஷ்ரோன் தெரிவித்தார்.

"இராக் நடவடிக்கையில் ஆட்கள் தேவைப்பட்டதால், இந்த சிறிய தொலைதூர முகாம்கள் மற்றும் தளங்களில் இருக்கும் வீரர்கள், சிஐஏ பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இது உண்மையில் எங்களுக்குப் பெரிய இழப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த இழப்பு இன்றளவும் நிலைத்துள்ளது," என்று அவர் என்பிஆரில் 2005ஆம் ஆண்டு கூறினார்.

ஷ்ரோன் இறுதியாக ஆப்கன் படையெடுப்புக்குப் பிந்தைய ஆண்டுகளில் ஓய்வு பெற்றார். பின்னர், 2005ஆம் ஆண்டில் "ஃபர்ஸ்ட் இன்" என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.

அவருடைய ஓய்வுக்குப் பிறகும், பின்லேடனின் கூட்டாளிகள் ஷ்ரோனை ஓர் இலக்காகப் பார்த்தனர். 2013ஆம் ஆண்டில், சோமாலிய போராளிக் குழுவான அல்-ஷபாப் ட்விட்டரில் அவரைக் கொன்றதாகக் கூறியது. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள், என்பிசியிடம் அத்தகைய கூற்றுகளில் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தினர்.

"கேரி ஷ்ரோன் உயிருடன் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார்," என்று அந்த நேரத்தில் வெளியான என்பிசி செய்தியறிக்கை குறிப்பிட்டது.

ஷ்ரோனின் பணி, விர்ஜீனியாவிலுள்ள சிஐஏ தலைமையகத்தில் உயிர்ப்போடு இருக்கிறது. 2001ஆம் ஆண்டு பயணத்தின்போது ஷ்ரோன் பயன்படுத்திய ஹெலிகாப்டர் அங்குள்ள சிஐஏ மைதானத்தில் அவரது நினைவாக இப்போதும் வைக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-62455221

தாக்குதலுக்கான ஒத்திகை.. சீனாவின், பொறுப்பற்ற நடவடிக்கை – அமெரிக்கா குற்றச்சாட்டு!

1 week 2 days ago
தாக்குதலுக்கான ஒத்திகை சீனாவின் பொறுப்பற்ற நடவடிக்கை – அமெரிக்கா குற்றச்சாட்டு! தாக்குதலுக்கான ஒத்திகை.. சீனாவின், பொறுப்பற்ற நடவடிக்கை – அமெரிக்கா குற்றச்சாட்டு!

தாய்வான் விடயத்தில் சீனா ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

தாய்வான் எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தமது நீண்டகால இலக்குடன் அவர்கள் முரண்படுகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

நான்காவது நாளாக இன்றும் தம்மீது தாக்குதல் நடத்துவதற்கு சீனா ஒத்திகை வான் மற்றும் கடல்வழியாக ஒத்திகை பார்த்ததாக தாய்வான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நான்சி பெலோசி தலைமையிலான அமெரிக்கக் குழு தாய்வான் சென்றதைத் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

தாய்வான் தமது கட்டுப்பாட்டில் உள்ள நாடு என உரிமை கோரிவரும் சீனாவிற்கு அமெரிக்கா மற்றும் தாய்வானின் நட்பு சவாலாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் தாய்வான் கடற்பரப்பில் நேற்றைய தினம் சீனக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் சென்றதாக தாய்வான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது உத்தியோகப்பூர்வமற்ற நடவடிக்கை என்பதனால் அவர்களை எச்சரிக்க, வான்பரப்பில் போர் விமானங்களை தாமும் அனுப்பியதாக தாய்வான் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1293901

Checked
Wed, 08/17/2022 - 06:18
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe