கலைஞ்சரின் இதயத்துடன்
கலைஞ்சரின் கவிதை பேசட்டும்
காலப் பேழையின் கவிதை சாவி
கலைஞ்சரின் கண்களை திறக்கட்டும்
இருப்பிடம் வேறானாலும்
இனம் ஒன்றேயாகும்
ஈழத்தில் சிங்களவன் சீண்டிப்பார்த்தால்
இணையற்ற சோழர் வீரம்!
இங்கிருந்து சேனை திரட்டும்!
இன்றும் சிங்களவன் சீண்டிபார்க்க
இந்தியாவின் உதவிநாடி
புது புது திட்டங்கள் வகுத்துவிட்டான்
வீதிகளை மூடிவிட்டான்!
விரும்பியே தள்ளிவிட்டான் - தமிழர்களை
பசிப்பிணியில் பாழ்கினற்றில்!
பசிப்பிணியால் பரிதவிக்கும் தமிழருக்கு
இங்கிருந்து திரட்டிய உணவை மருந்தை
இந்தியாவும் தடுத்து நிற்க்க
இங்கிருந்து தருகின்றார் ஆயுதங்கள் சிங்களனுக்கு
தன்னிகரிலாத் தமிழர் தலைவர்
தயவுடன் ஆட்சி செய்வோர்!
என் துணையைப் பயண்படுத்தி
எம் இனத்தை கொன்றொழிக்க அயுதங்கள் தருவாயோ!
பாதுகாப்பு ஆயுதம் என்பாய்- பார்த்திருப்பேனா நான்!
இல்லை! இல்லை! இழிசெயல் என்பேன் நான்!
கவலை மிக கொண்டேன் கடிது அனுமதி
தாருங்கள் தமிழருக்கு உணவை மருந்தை அனுப்ப
என்று இயம்ப கலைஞ்சரின் கண்கள் திறக்குமா?
காலப் பேழையும் கவிதை சாவியும்
கலைஞ்சரிடம் பேசட்டும்! கவிதை வாரிசு!
கனிமொழியாவது கருத்து களத்துக்கு பதில் தரட்டும்.
கலைஞ்சர் அவர்களே உங்கள் "காலப் பேழையும் கவிதைச் சாவியும்" என்ற கவிதை தொகுப்பில் உள்ள கவிதையின் ஒரு பகுதியைதான் கீழே கொடுத்துள்ளேன். சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம்! என்று வாழும் நீங்கள் முழங்கிய நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் கவிதை வரிகள் உங்களுடன் பேசும் போது நெஞ்சில் நீதி பேசுமா? நெஞ்சுக்கு நீதி எழுதியவர்களாயிற்றே நீங்கள்!
கலைஞ்சரின் கவிதை பேசுகிறது!
திராவிட இனத் தமிழர்களிடம் வீரம் இருந்தது விவேகம் இருந்தது,
திக்கெட்டும் புகழ் மனக்கும் திறன் இருந்தது,
போரில் புலி என்கிற புய வலிமை இருந்தது; பகைவனிடம்
புறமுதுகிடா மான உணர்வு மண்டிக்கிடந்தது!
நெஞ்சில் வேல்தாங்கி களச்சாவை சந்திக்கும்
அஞ்சாமை அணுப்பொழுதும் அகலாமல் இருந்தது-
ஆனால்
ஆனால்
அந்தோ; தமிழரிடையே
இன ஒற்றுமை என்ற
அந்த ஒன்றுதான் இல்லை என்பதற்கு
இந்த வரலாற்று நிகழ்ச்சி நம்மை
மிக வருந்தச் செய்யும் நிகழ்ச்சியன்றோ!
Recommended Comments