பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்
செருபகையும் சேராதிருப்பது நாடு
என வள்ளுவம் காட்டும் வளம்மிகு நாடாக நாடாத, நாடாததற்க்கு நாணாத நம் தமிழர்கள் இன்று இருப்பது போலவே என்றும் இருந்திருக்கின்றனர். எல்லையற்ற புகழுக்கு சொந்தக்காரர்களை ஏளனம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டது போலும் இயற்கை.இயற்கையின் சதியோ, இதயமற்றவர்களின் சூழ்சியோ! இன்று இல்லாதிருப்பதே மேல். இருந்தால் ஈழத்தில் வேழம் இருந்தாலும் வேங்கை இருந்தாலும் கீழாகும் தமிழர் நிலை. பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் உடைத்துவிடக் கூடும் தமிழர்தம் உறுதியை, உதாரணத்துடன் விளக்க உறுதி கொண்ட எமக்கு ஓடி வந்து உதவுகிறார் கலைஞர் இன்றும். இதோ அவர் கூறுகிறார் முதலில். முடிவில் நாமும் கூறுவோம். முதலில் அவர் முறை முதல் அமைச்சர் அல்லவோ அவர், அமைச்சரின் ஆலோசனைக்கு பின்பே அரசனாகிய நாம் (அதாங்க ராசா சிவராசா) முயற்சிப்பது நலம் என்பதால் அவர் ஆலோசனையைக் கேட்கிறோம். அவர் சொல்கிறார்.
பகல் நேரக் கதிரொளியாய்
பரந்து விரிந்து வெளிச்சம் தந்த
பழந்தமிழ்ச் சோழர்களாம்
பாண்டியர் பல்லவர் சேரர்களாம்
பயண் விளைக்கும் ஏர் முனையாய்
பகை சாய்க்கும் வாள் முனையாய்
பாரினிலே புகழ் எய்திப் பின்னர்
தேரினிலே அச்சானி கழன்றாற் போல்
தேயமெங்கும் ஒற்றுமை கட்டுக் குலைந்து
தேய்ந்திடும் நிலவின் கோட்டும் பிறைகளாகி
குழுக்களாய் குறுநில மன்னராட்சிகளும் - அவை
குருவித் தலை பணங்காய் எனும் காட்சிகளும்-
செங்கோல் மட்டுமே உடைமையாய்க் கொண்ட
சிற்றரசர்கள் செயல்பட்ட மாட்சி (?)களும்
இப்படி பல பிரிவுடனே களப்பிரர், கள்ளவரும் கலந்து,
மூவேந்தர் முத்தரையர் கூட்டும் சேர்ந்து
முரண்பட்ட சூழ்நிலைகள் முட்டியும் மோதியும்
முடிவாகப் பகை, படை, போர் அழிவு என சிதைந்து
"நேற்றிருந்தார் இன்றில்லை என்பதுபோல் எம்மோடு
வீற்றிருந்தார் எங்கு போனார்?" என்று வினவிடும் நிலையில்
வேற்படை, வாட்படை, வேழப்படை, புரவிப்படையிருப்பினும்
வேலைகள் அவற்றுக்குள்ளவற்றை வீரர்பால் ஒப்படைத்துவிட்டு
வியர்வை நீக்கிடவும், அயர்வைப் போக்கிடவும்- ஓய்வுக் கொண்டு
உல்லாசம் அனுபவிக்க ஓடிவிடும் உத்தம தலைவர்களை விடுத்து;
யுத்த களத்தில் போராட உத்தி வகுத்துச்
செயல்பட்டவர்களால் பெருவெற்றி கிட்டியது-
பெயருக்கு அரசர்களாக இல்லாமல் - அவர்கள்
பேரரசர்களாகவே விளங்கினர்-
வீரமும் வெற்றியும் கடையில் விற்றிடும் பொருள் என்றும்
அதை பெறுவதற்குக் கூட கடவுள் அருள் தேவை என்றும்
எண்ணுவோர், லட்சியத்தில் திண்ணியராய் இல்லாத காரணத்தால்
கண்ணியம், கடமை, கட்டுபாடு கெட்டுப் போய், அந்த
கெடுநிலைக்கான காரணங்கள் அனைத்தும் போக்கிட
நெடுநாள் காத்திராமல் பெருந்திரன் காட்டியதால்
இடைகாலமென அறுநூறு ஆண்டுகாலம்;
எடைக்கேற்பத் தராசுத் தட்டு மேலும் கீழும்
மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும்
ஏறியும் இறங்குவதும் போல
தோன்றிய பல்லவ அரசில் துளிர்த்துப்
பாண்டிய அரசில் செழித்த - இந்தத்
தமிழகத்தின் மறுமலர்ச்சி, மீண்டும்
சங்க காலப் பெறுமைப் பெற புத்துருகொண்ட சரிதத்தை
இங்கிருந்து தொடங்கிடுவோம்
இருண்டிடுந்த சோழ கிழக்குச்
சங்கின் வெண்மை வானில் பரவும்; நம்
வரலாறு, அந்த வான் மேவி ஒளிரும்.
நன்று கலைஞரே
நல் ஆலோசனை நயமுடன் தந்தீர்
நடந்ததை நாமும் முன் கூறி
நடப்பதை பின்பு கூறி
நாடிடுவோம் நல்லோர்
கருத்தை கருத்துக் களத்தில்.
முன் ஒன்று கூறி
பின் ஒன்று கூறி
தடம் மாறும் தற்குறிகள்
பின்கூறி புறமும் கூறிடுவர்
தடுமாறி தம் நிலை மாறி
செருபகை முன்னே
பாழ் செய்யும் உட்பகையால்
பல் குழு அரசியல் என்றால்
பலமாய் மறுத்துரைப்போம் - தமிழர்களே
சீண்டிடும் செருபகையின் முன்னே
சீரழிவோம் பாழ்படுவொம் பல் குழுவாய் பிரிந்தால்
சிந்தையில் கொண்டால் சிறப்புறலாம்.
அகிலத்தின் அங்கீகாரத்திற்க்கு பின்னான
அரசியல் அமைப்புக் கான - அவர்
அடிதளத்தை இட்ட பின்பும்
அதுவல்ல அரசியல் முறை
அறம் தோற்க மறம் புறம் போக
அறங்கேற்றிடலாம் பல் குழுவை
அடித்துக்கொள்ள செய்வோம் உட்பகையால்
அடித்துகொள்ளும் அவரை
அடுத்தடுத்து கெடுத்து கொல்வோம்
அடிமை கொள்வோம்
அதற்கான அரசியல் அங்கே ஏன்
அறங்கேறவில்லை என்று அலுத்துக் கொள்வோர்
அவணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பர்
அவர் அறவழி நின்று கூறட்டும்
அவர் அவாவின் உண்மை நோக்கத்தை.
Recommended Comments