அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்! விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்துக்குள் சுபான்ஷு சுக்லா உடன் ஏனைய 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர். இன்று மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, அக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த ஜூன் 25ம் திகதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இவர்கள் அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்திய விண்வெளி வீரர் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார். இந்…
-
- 1 reply
- 108 views
-
-
"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
15 Oct, 2025 | 09:23 AM ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களை (Dummy Satellites) விண்ணில் செலுத்தியது. இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன? பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு 52 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது. திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-