செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
17 APR, 2024 | 11:38 AM புத்தாண்டுக்காக காலி லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பத்தேகம மாவட்ட நீதிபதி ஒருவரை கடுமையான வார்த்தைகளால் தூஷித்து அறைந்த குற்றச்சாட்டில் அவரது மைத்துனரான உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பத்தேகம மாவட்ட நீதிபதியின் மனைவியின் சகோதரராவார். பத்தேகம மாவட்ட நீதிபதி எல்.கே.ஜி விஸ்வநாத் தனது மனைவி மற்றும் செல்லப் பிராணியான பூனையுடன் காலி, லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற மறு…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது! யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள் சீனிப்பாணியே காணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8, 1/4 போத்தல் நெய் போத்தல்களும் கலப்படம் நிறைந்தது என அவற்றையும் கைப்பற்றியுள்ளார். கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி கரைசல் மற்று…
-
- 1 reply
- 121 views
-
-
மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டி: தாய் சிறுத்தையுடன் இணைந்தது இலங்கை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் 06 மாதங்களே ஆன சிறுத்தைக்குட்டியை மீட்டு பத்திரமாக காட்டுப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி ஹற்றன் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் சிறுத்தைப்புலி புகுந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்ததுடன், வீட்டின் உரிமையாளர் அதனை அறையொன்றிற்குள் பூட்டி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தைக்குட்டியை அறையில் இருந்து பத்திரமாக அப்புறப்படுத்தியதுடன், அதன் தாயை கண்டுபிடித்து வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 27ஆம் தி…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்! புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி வாடியில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். அதன் பின்னர், மீன்பிடி வாடியிலிருந்த மற்றொரு நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவ…
-
- 0 replies
- 120 views
-
-
பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES கட்டுரை தகவல் தனாய் நெஸ்தா குபேம்பா பிபிசி செய்திகள் 30 ஜூன் 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது. யூரோஜாக்பாட்டில் "ஆயிரக்கணக்கான மக்கள்" பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொ…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
சோற்றுக்காக சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா! Dec 19, 2025 - 07:04 PM பாராளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார். மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது, அங்கு சிவப்பரிசியும், சொதியும் மாத்திரமே இருந்ததாக கவலைத் தெரிவித்தார். பாராளுமன்ற நிர்வாகக் குழுவின் மீது இதன்போது தமது அதிருப்தியையும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வௌிப்படுத்தினார். அவரது இந்த முறைப்பாட்டை சபாநாயகருக்கு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmjcwvot702xgo29nkgkwhgst
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணிபுரிந்த போது இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அறையில் இருந்த மற்றுமொரு கைதி கூரிய ஆயுதத்தால் வாயில் வெட்டியுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரியின் காயங்களுக்கு சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. https://thinakkural.lk/article/305836 கைலஞ்சமும் வாங்கிற்று கண்டபடி வாய்காட்டினாரோ?!
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏற முற்பட்ட சிறுவன் – அவுஸ்திரேலியாவில் பரபரப்பு. அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏறிய 17 வயது சிறுவன் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். வியாழக்கிழமை மெல்போர்ன் அருகே உள்ள விமான நிலையத்திற்குள் பதுங்கிச் சென்று விமானத்தில் ஏற முயன்ற குறித்த சிறுவனை, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பயணிகள் மடக்கிப் பிடித்தனர். அவலோன் விமான நிலையத்தில் பாதுகாப்பு வேலியில் இருந்த ஒரு துளை வழியாக அந்த சிறுவன் விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதிக்குள் நுழைந்துள்ளார். பின்னர், அவர் சுமார் 160 பயணிகளுடன் சிட்டினிக்கு புறப்படத் தயாராகவிருந்த JQ 610 ஜெட்ஸ்டார் விமானத்திற்குள் ஏற முற்பட்ட போது மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக…
-
- 0 replies
- 117 views
-
-
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது. பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்த இக்கோழிகளை விலங்கு உணவிற்காகக் கொண்டு செல்வதாகக் கூறி, அவற்றை மனித நுகர்விற்காக (உணவுக்காக) விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை ஆனமடுவ நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 117 views
-
-
காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்! கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணாவின் கூற்றுப்படி, பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தலா 2.2 கிலோ கிராம் எடை கொண்ட நிலையில் ஆரோக்கியத்துடன் பிறந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார். இரட்டை குழந்தைகளும் அவற்றின் வயிற்றுப் பகுதியால் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரிப்பு அறுவை…
-
- 0 replies
- 117 views
-
-
கனடிய விமான நிலையத்தில் மகனை கடத்திய பெண் கைது. டொரொண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது சிறிய மகனை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது மனைவி ஆறு வயது மகனை கனடாவை விட்டு வெளியே அழைத்துச் செல்லலாம் என சந்தேகம் தெரிவித்து புகார் செய்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. பீல் பிராந்திய காவல்துறை மற்றும் கனடா எல்லைப் பாதுகாப்பு சேவையின் உதவியுடன், அந்த பெண்ணும், குழந்தையும் பியர்சன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். 36 வயதுடைய குறித்த பெண் குழந்தையை கடத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை தந்தையிடம் பாதுகாப்பா…
-
- 0 replies
- 117 views
-
-
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம் ”கபேன் காபி லேம் (Khaby-lame) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான காபி லேம் அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30-ம் திகதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசா காலத்தையும் தாண்டி,விதிமுறைகளை மீறி அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவரைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுக்குப் பின், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவதாக அவர் கூறிக் கொண்டதால் காபி லேம்மை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரி…
-
- 1 reply
- 116 views
-
-
அர்ச்சுனா mp யின் காணிகளால் அவதியுறும் மக்கள் ! நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது. அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது. அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன. குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள், வீதிகள், அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர். வீதியில் சிறியவர்களோ, பெரியவர்களோ …
-
- 0 replies
- 116 views
-
-
டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்! இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால் குறித்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 இல் அங்கித் திவான் என்ற பயணி, ஸைப்ஸ் ஜெட் விமானத்தில் ஏறுவதற்கு, தனது 7 வயது மகள், 4 மாத கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஊழியர்க…
-
- 0 replies
- 116 views
-
-
யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு! யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். வந்தவர் அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு , ” சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையில் கொண்டுவந்திருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும் , அவரது இடுப்பு பகுதிய…
-
- 1 reply
- 114 views
- 1 follower
-
-
பொள்ளாச்சியில் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் 'உயிருடன்' திரும்பி வந்த நபர் - என்ன நடந்தது? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பொள்ளாச்சியில் ஒருவர் தன் தந்தை இறந்து போனதாக இறுதிச்சடங்குகள் செய்த நிலையில், அவருடைய தந்தை உயிருடன் திரும்ப வந்துள்ளார். அதனால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சடலம், கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவருடைய தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்ததால் இந்த குழப்பம் நடந்துள்ளதாக தெரிவித்த மகனின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கிற்காக பல ஆயிரம் வரை செலவழித்துள்ளதாகக் கூறினர். இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பது அடையாளம் தெரியவில்லை என்று கா…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 03:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச இணையவழி மோசடி கும்பலின் வலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தபால் திணைக்களத்தை சேர்த்தவர்களை போன்று நடித்து பொதி ஒன்றுக்கு இணையம் வழியாக பணத்தை செலுத்துமாறு கோரி நீதிபதியின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி சுமார் 400,000 ரூபாவை மோசடி செய்துள்ளனர். அதாவது, இந்த இணையவழி மோசடி கும்பல் தபால் திணைக்களத்திற்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள சிறிய கட்டணத்தை (பொதுவாக ரூ. 100 க்கும் குறைவானது) செலுத்துமாறு இணைய கட்டண இணைப்பு ஒன்றின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதனை நம்பி மக்கள் …
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு 06 Dec, 2025 | 03:34 PM வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சனிக்கிழமை (06) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் அச்சமயம் இருந்த தாய், தந்தை, மகள் ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர். வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை (05) காலை எழும்பவில்லை என சந…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி! பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நட்பு வளர்ந்த பின்னர், 24 வயதான இலங்கை மாணவி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நம்பிக்கையை மாணவி பெற்றதால், அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடலைத் தொடங்கினர். இந்த வீடியோ அழைப்புகளின் போது, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை குற்றம…
-
- 0 replies
- 113 views
-
-
இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு Jan 8, 2026 - 06:54 PM கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk5hawq803p0o29nfh0w5ihk
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்தால் ரூ.1.25 கோடி வழங்குவதாக குற்றவாளி கடிதம் வாயிலாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு முறை நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூவ் என்று இளைஞன் நடத்திய துப்பாக்கிச…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது! யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார். பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தன் கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ வைத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரை…
-
- 0 replies
- 112 views
-
-
"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! Jan 18, 2026 - 10:21 AM "நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தி. அனுஷ்வரன் (36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பிரகலாதேவி (31) என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை 8.30 மணியளவில் கணவன் - மனைவிக்கு இடையே பண விவ…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்து விட்டதாக இரு சந்தர்ப்பங்களில் மரபணு பரிசோதனை (DNA) செய்து சாரா ஜெஸ்மினின் மரபணுவுடன் ஒத்து போவதாக தெரியப்படுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க அதன் தலைவர் அஜித் தர்மபால இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, கொவிட் தொற்று ஏற்பாட்ட காலத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசி…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி வி…
-
- 0 replies
- 110 views
-