Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது! கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் …

  2. வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்! கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள்…

  3. இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர்! 18 Dec, 2025 | 09:58 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் சாவோ தேசிய பூங்காவில், ஆண் யானை ஒன்று தனது தந்தத்தை தும்பிக்கையால் வருடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தந்தம் தும்பிக்கைக்குள் குத்திக் கொண்டது. இதனால் அந்த யானை, சுமார் மூன்று நாட்களாக அதே நிலையில் சிக்கி, இரை எடுக்கவும், நீர் அருந்தவும், முறையாக சுவாசிக்கவும் முடியாத நிலையில் இருந்தது. பசி மற்றும் தாகம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யானை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை அவதானித்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை குழுவினர், கென்யா வனவிலங்கு சேவையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்படி, யானைக்கு மயக்…

  4. கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை. கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில…

  5. சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் உயிர்போகும்வரை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனா ஹூவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘சீனா ஹூவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் செயற்பட்டு வருகின்றது. இதன் முன்னாள் அதிகாரியான பாய் தியான்ஹய் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அபவிருத்தி திட்டங்களின்போது, சுமார் 15.6 கோடி டெலர் மதிப்பிலான நிதியை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழி…

  6. இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு! இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் மருத்துவர் (Nathaniel Spencer ) நதானியேல் ஸ்பென்சர் மீது அவர் கவனித்துக் கொண்ட 38 நோயாளிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்களில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் தாக்குதல் மற்றும் ஊடுருவல் மூலம் தாக்குதல் என மொத்தம் 45க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந…

  7. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜ…

  8. மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின் வீடியோ காட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நலகா கலுவேவா அப் பாடசாலையின் அதிபருக்கு பணித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்றும் செயலாளர் கூறினார். சம்பவம் தொடர்பாக அதிபர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நலகா கலுவேவா கூறினார். அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பெண் ஆசிரியர்கள…

  9. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது. பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1461687

  10. லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்! இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் . இதனிடையே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பெண், பின்னர் நினைவு திரும்பும்போது அந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.