Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ள மாம்பழம்! யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த எட்டாம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இதன் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு முருகனுக்கும் விநாயகப் பெருமானிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக சுற்றி முதலில் வலம் வருபவருக்கே மாம்பழம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்ல விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியாருமான வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். இச் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாடகம் …

  2. பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, தீபக் மஹவார், ராகோகரில் உள்ள ஜேபி கல்லூரியில் பல ஆண்டுகளாக பாம்புகளின் நண்பராக (பாம்புகளை மீட்கும்) பணியாற்றினார் கட்டுரை தகவல் ஷுரைஹ் நியாஸி பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், 'பாம்புகளின் நண்பர்' தீபக் மஹவார் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். கழுத்தை சுற்றியிருந்த பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். முதலில், பாம்புகடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் நஞ்சு படிப்படியாக பாதிக்கவே, அவரது நிலை இரவில் மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்…

  3. சத்திரசிகிச்சை மூலம் உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது! சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர். கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் , சென்னையில் இருந்து , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமையை கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து அப்பெண்ணை கைது செய்த உத்தியோகஸ்…

  4. இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Published By: Digital Desk 1 30 Mar, 2026 | 04:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர…

  5. விமானத்தில் அணில் குரங்கை கடத்திவந்த பயணி கைது! மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனையில், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இதேவேளை, இந்த அணில் குரங்கு, அரி…

  6. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 கிலோகிராம் எடை என்ற அளவில் தான் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவு முறைகளே குழந்தையின் எடை அதிகமாக இருக்கக் காரணம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். சிசேரியன் சிகிச்சை தங்களுக்கு சவாலாக இருந்ததாகவும் குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்…

  7. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது. பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1461687

  8. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜ…

  9. சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை துப்பாக்கி முனையில் படகில் ஏற்றிய காவலர்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். இலங்கை காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட…

  10. அம்மாவாகும் ரோபோக்கள் 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் எனசீன விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. https://www.tamilmirror.lk/science-tech/அம்மாவாகும்-ரோபோக்கள்/57-363457

  11. பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது! கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் …

  12. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை மீறி சாரதி டிப்பர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார். அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்ற நிலையில் , சாரதி டிப்பர் வாகனத்தை மணலுடன் வீதியில் நிறுத்தி விட்டு , வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். தப்பியோடிய சாரதியை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர். கைது செய்த சாரதியை பொலிஸார் விசாரித்த வேளை , குறித்த நபர் முன்னாள் பொல…

  13. வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்! கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியைச் ஒட்டிய விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை கொன்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், பெயளரவுக்கு கூண்டு வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள்…

  14. பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை Mar 23, 2026 - 08:50 PM வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைப் பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார். விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், வைத்தியர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது, உடலினுள் இருந்த இரும்புப் பகுத…

  15. கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை ; சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளி! 13 Feb, 2026 | 12:17 PM கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவி வருகின்றன. குறித்த உணவகத்தில் வியாழக்கிழமை (12) காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை போன்ற பகுதி இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சை காணொளியை குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. காணொளி வெளியான ச…

  16. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI கொலம்பியா நாடாளுமன்ற தேர்தலில் AI போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மார்ச் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் AI போட்டியிட உள்ளது. கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையில் உள்ள ஜெனு சமூகத்தைச் சேர்ந்த கார்லோஸ் ரெடோண்டோ என்பவர் இந்த AI அவதாரை உருவாக்கி, Gaitana (கைடானா) என பெயரிட்டுள்ளார். கைடானா என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த பழங்குடி மக்களின் தலைவி ஆவார். இந்த கைடானா ரோபோவின் குரல் மற்றும் நீல நிற தோலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கைடானாவிற்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், வாக்குச்சீட்டில் “IA”…

  17. நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொ…

  18. சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதி ஒருவர் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் (GAS COOKER) விற்பனைக்கு உள்ளதாக முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதன்போது, காஸ் குக்கரை (GAS COOKER)பெறுவதற்காக பணத்தை தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும், மேலதிக தகவல்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும்…

  19. இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர்! 18 Dec, 2025 | 09:58 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் சாவோ தேசிய பூங்காவில், ஆண் யானை ஒன்று தனது தந்தத்தை தும்பிக்கையால் வருடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தந்தம் தும்பிக்கைக்குள் குத்திக் கொண்டது. இதனால் அந்த யானை, சுமார் மூன்று நாட்களாக அதே நிலையில் சிக்கி, இரை எடுக்கவும், நீர் அருந்தவும், முறையாக சுவாசிக்கவும் முடியாத நிலையில் இருந்தது. பசி மற்றும் தாகம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யானை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை அவதானித்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை குழுவினர், கென்யா வனவிலங்கு சேவையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்படி, யானைக்கு மயக்…

  20. கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை. கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில…

  21. இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு! இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் மருத்துவர் (Nathaniel Spencer ) நதானியேல் ஸ்பென்சர் மீது அவர் கவனித்துக் கொண்ட 38 நோயாளிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்களில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் தாக்குதல் மற்றும் ஊடுருவல் மூலம் தாக்குதல் என மொத்தம் 45க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந…

  22. பேருவளையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது. பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒ…

  23. உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்! Mar 1, 2026 - 08:24 AM மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானது. நேற்று (1) இடம்பெற்ற இந்தவிபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பழுதான நிலையில் இருந்துள்ளது. அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இழுத்து வரப்பட்ட டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற உழவு…

  24. 38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது! 8 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கைகளின்படி, கண்டி, திகனவைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை பெங்கோக்கிலிருந்து வந்தடைந்தபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வழிமறித்தனர். சோதனையின் போது, அவரது பயணப் பைகளில் கினி எலிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ் (Sugar Gliders) மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவை அவரிடமிருந்து இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை சந்தேக நபருக்கு 2,50,000 ரூபா அ…

  25. மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் - இருவர் வைத்தியசாலையில் adminMarch 24, 2026 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தில், காவல்துறைக் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர்கள் உணவு சமைத்து மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்திற்கு சுற்றுலா சென்ற மற்றொரு குழுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறி, அதில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மதுபோதையில் இருந்ததுடன், பொது இடத்தில் ஒழு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.