துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள். எமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர். 27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது. அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் உதயசிறீதர் , குசேலன்ம…
-
- 1 reply
- 785 views
-
-
35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை. செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது. கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் குடிதண்ணீரை அவர்கள் …
-
- 19 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது. மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€) புடிப்படியாக இம்முயற்சியின் வெற்றி வேலைவாய்ப்பை…
-
- 3 replies
- 764 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம். முல்லைத்தீவு மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 100குடும்பங்களுக்கான பழப்பயிர்ச்செய்கைக்கான பழக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கவுள்ளோம். எம்மால் வழங்கப்படும் பழக்கன்றுகளின் பழங்களையும் கொள்வனவு செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒழுங்கினையும் செய்துள்ளோம். இதன் முதற்கட்டமாக 3மாதங்களில் பயன்தரும் பப்பாசிகளை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். 3மாதங்களில் பயன்தரத் தொடங்கும் பப்பாசிகள் ஒன்றரை வருடம் தொடக்கம் 2வருடங்கள் வரையில் தொடர்ந்து பயன்தரக்கூடியவை. பப்பாசி விதைகளை பதியமிட்டு 3வாரங்களில் கன்றுகளாக உருவாக்கிக் கொடுக்…
-
- 2 replies
- 679 views
-
-
இன்று நாம் புலத்திலிருந்த படி பல உதவிகளை தாயகத்தினை நோக்கிச் செய்கிறோம். அப்படிச் செய்யப்படும் உதவிகள் அணைத்தும் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கயை கொண்டு நடாத்துவதற்குரிய (சுயதொழில் சார்ந்த) உதவிகளாக, அல்லது கல்வி சம்மந்தப்பட்ட ஊக்கங்களாக அமைகின்றன. இவை மிகவும் இன்றியமையாதவை, காலத்தின் தேவை அறிந்து செய்யப்படும் உதவிகள், தாயகத்தினை நோக்கி இவ்வாறான உதவிகளை செய்கிறவர்கள் என்றுமே போற்றுதற்குரியவர்கள். எனினும் நாம் தாயக மக்களின் தூர நோக்கில், அவர்களின் வளமான ,உறுதியான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். அப்படி நாம் முன்னெடுக்க வேண்டியவற்றில் (எனது அனுபவத்தில்) நான் சிறப்பாகக் கருதுவது " பட்டதாரிகளை உருவாக்குவது". ஒவ்வொரு வருடமும் A/L …
-
- 12 replies
- 2.4k views
-
-
ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். 2013 ஆனி மாதம் 8ம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குசேலன்மலை(கரடியனாறு) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடானத ஒருவருடத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது. எமது கற்பித்தல் செயற்பாட்டில் மேற்படி கிராமத்தில் வாழும் 27குடும்பங்களிலிருந்தும் பிள்ளைகள் தொடர்ந்து பங்கேற்று அடைவுமட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும். இவர்களது பிரதான தொழில் மீன்பிடி , விவசாயம் ஆகும். இவர்களால் பிடிக்கப்படும் மீனை சந்தைப்படுத்தவோ தொழிலுக்கான வலைகள…
-
- 3 replies
- 1.1k views
-
-
மரணத்தின் வாசலை நெருங்கியிருக்கும் வீரத்தாய் (இது கதையில்லை) ஈழவிடுதலை வரலாறு எத்தனையோ வீரத்தாய்களையும் அவர்களது வீரக்குழந்தைகளின் வரலாறுகளையும் சேமித்து வைத்திருக்கிறது. ஈழக்கனவு கலைந்ததாய் நம்பப்படுகிற இந்நாட்களிலும் இன்னும் அந்தக் கனவின் நனவுக்காய் வாழ்கிற ஆயிரமாயிரம் அம்மாக்களின் வரிசையில் தனது பிள்ளைகளை தமிழீழக்கனவுக்காய் ஈந்த அம்மா பெயரைப்போல அழகான அம்மா. தனது குடும்பத்தின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளென 10 உறுப்பினர்கள் வரை நாட்டுக்குத் தந்த வீரத்தாய். வயது 90ஐத் தாண்டும். கண்பார்வையும் குறைந்து காதும் கொஞ்சம் கேட்காது. ஆனால் குரலை வைத்தும் நிழலை வைத்தும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய திறனை இன்னும் இழக்கவில்லை. இன்றும் இடையறாத மாவீரர் நினைவும் அந்த…
-
- 1 reply
- 855 views
-
-
2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை. சிறு சிறு துளியாக பாதிக்கப்பட்டவர்களின் துணையாக எழுந்த நேசக்கரமானது 2011 யூலைமாதம்; கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாக செயற்படுத்த திட்டமிட்டோம். புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்படும் நிதியை மீள செலுத்தக் கூடியவர்களிடமிருந்து மீளப்பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழங்கும் உதவிகளை கடன் அடிப்படையில் வழங்கி மீளப்பெறும் நிதியை சுழற்சி முறையில் அடுத்தடுத்தவர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது. கட்டம் 1. திருமுறிகண்டியில் மீள்குடியேறிய குடும்பங்களில் 4குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒரு குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபா அடிப்படையில் 120000ரூபா(ஒருலட்சத்த…
-
- 2 replies
- 627 views
-
-
சின்னச் சின்ன உதவிகள் தேவை (பணம் அல்ல) நீங்களும் வருவியளோ ? நேசக்கரம் , மற்றும் கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பு அல்லாத உதவிகள் செய்வதற்கான ஆர்வமுள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். வாரத்தில் 2மணித்தியாலம் ஒதுக்கி இந்தப் பணியில் உதவிட உறவுகளை வரவேற்கிறோம். தேவைப்படும் உதவிகள் :- 1) செய்திகள் தொகுப்பு. 2) கணக்கறிக்கை தயாரித்தல். 3) மாதாந்த தொகுப்பறிக்கை தயாரித்தல். 4) தமிழில் எழுதப்படும் செய்திகள் அறிக்கைகளை ஆங்கிலம் , டொச் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தல். 5) ஊடகங்களில் வெளிவரும் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை தொகுத்தல். 6) நீங்கள் அறியும் பெண்கள் மீதான வன்முறைகள் தகவல்களை தொகுத்தல். 7) புதிய திட்டமிடல்கள் செயற்பாடுகளுக்கு உங்கள் தரப்பு ஆலோசனைகள் திட…
-
- 1 reply
- 867 views
-
-
2014ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான முகவர் வியாபார கணக்கறிக்கை. BY ADMIN IN கணக்கறிக்கை எமது முகவர் வியாபாரத்தின் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.எமது முதலீட்டாளர்களில் ஒருவரான சபேசன் அவர்களின் இலாபமானது அவரால் எமக்கு தரப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படுகிறது. மற்றும் தேன்சிட்டு உளவள அமைப்பின் கல்விச் செயற்பாட்டிற்கு கனடாவைச் சேர்ந்த றவி ,சுரேஷ் நண்பர்களின் உதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதர முதலீட்டாளர்களின் இலாபத்தின் மூலம் கடந்த 5மாதங்களில் எமது வியாபாரத்தின் இலாபத்திலிருந்து போரால் பாதிக்கப்பட்ட 2குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்கு உதவியுள்ளோம். கடந்த 5மாதங்களில் மொத்தம் தொழிலாளர் கொடுப்பனவு வாகனம் யாவும் கொடுத்து எமக்கு கிடைத்த மொத்த இல…
-
- 0 replies
- 511 views
-
-
285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும். 17வருடங்கள் போராட்ட வாழ்வு. போராளியையே திருமணம் செய்து கொண்டான் பிள்ளைகள் 2. அவன் பங்கேற்ற களங்களில் பலமுறை காயமுற்று உடலில் எறிகணைத்துகள்கள் கலந்து அந்த வலிகளோடு வாழும் ஒரு முன்னாள் போராளி. எல்லா விடயங்களிலும் அவன் ஒரு முன்னுதாரணம். இதைச் செய்யென்றால் இதற்கு மேலும் தனது வலுவை வழங்கி வேலைகளை முடிக்கும் கடமையுணர்வாளன். இறுதியுத்தத்தில் எல்லாம் இழந்து போனபின்னரும் அவனது குடும்பத்தின் முயற்சியில் உயிர் பிழைத்தவன். சிறை புனர்வாழ்வு என எல்லாத் துயரங்களையும் அனுபவித்தான். சிறையிலிருந்து ஊர் திரும்பியவனுக்கு அடுத்த வேளையைக் கொண்டு செல்ல ஆதரவற்ற நிலமை. அன்றாட வாழ்வை குழந்தைகளின் பசிபோக்க முடிந்தவரை கிடைக்கிற தொழில்கள் யா…
-
- 7 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கால்நடை விவசாய அபிவிருத்திக்கு பணம் உதவல். இந்த ஆரம்பத்தில், நவ்வவ் இன்று இந்த உயர்நிலை அடைவதற்கு காரணமாக இருந்த உங்களின் குறைவில்லாத கொடைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நவ்வவ் கடந்த சில ஆண்டுகளாக கூடக் கூட திறனுடனான சிக்கலான முன்னெடுப்புகளை எடுத்துவருவதை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். எங்கள் அமைப்பின் பிரகாரத்தில் உள்ளடங்கத்தக்கதாக, குடும்பங்களை மீளக் கட்டமைப்பதுடன் தொழில் வாய்ப்பையும் பெற்றுத்தரத்தக்க முழுமையான முன்னேற்றமாக அமைந்த கட்டைபறிச்சான் கமத்தொழில் முன்னேற்ற முயற்சியின் ஆச்சரியமான பெரு வெற்றி எமது திறன் வலு கூடிய முன்னெடுப்புக்களின் ஒரு உதாரணம். எங்களின் இலக…
-
- 2 replies
- 723 views
-
-
நோக்கம் போரால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல். ஊக்கம் சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை, வியாபாரங்களை ஆரம்பித்தல். கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல். ஆக்கம் செயற்றிட்டங்களை விரிவுபடுத்தி, சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, எம் மக்களை பொருளாதார ரீதியில், கல்வியில் தன்னிறைவு நிலையை எட்டி வலுவடையச் செய்தல். வியாபாரத்தில் இணையும் பங்குதாரருக்கான உரிமைகளும் நிபந்தனைகளும். BY ADMIN IN 1) முதலீட்டாளர் எமது சமூகப்பணிகளில் இணைந்திருக்க முடியும். அதாவது நாம் முன்னெடுக்கும் சமூகப்பணிகளில் தங்களது உதவிகளை வழங்குவதன் மூலம் இணைந…
-
- 0 replies
- 614 views
-
-
சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர். சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது. ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை. இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் ந…
-
- 9 replies
- 1.6k views
-
-
உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை. 13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான். அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடு…
-
- 1 reply
- 657 views
-
-
சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள். போரால் பாதிப்புற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று கோட்டத்தில் 32 பாடசாலைகள் இயங்குகின்றது. இப்பிரதேசமானது வளங்கள் குறைந்த மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் முகமாக நேசக்கரம் அமைப்பானது பலவகையிலான உதவிகளை வழங்கி வருகிறது. இப்பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் மழை , வெயில் காலங்களில் மாணவர்கள் பாவிப்பதற்கான குடைகளை சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினருக்கு முன்வந்து வழங்கியுள்ளனர். எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஒன்றான ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலத்தில் கற்கும் மாணவர்களுக்கு சுவிஸ் ப…
-
- 2 replies
- 682 views
-
-
தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி ஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது. தற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார். இவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து எதுவுமற்றுப் போன இக்குடும்பத்துக்கு உதவுங்கள். நேரடியாகவே உங்கள் உதவியை வழங்க …
-
- 1 reply
- 670 views
-
-
‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் வழங்கி விழிப்பணர்வு வாரமாக அனுட்டிக…
-
- 0 replies
- 789 views
-
-
தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு. மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்றலில் மிகவும் பின் தங்கிய…
-
- 0 replies
- 565 views
-
-
நேசக்கரம் மாதாந்த கணக்கறிக்கை ஒவ்வொரு மாதமும் நேசக்கரம் இணையத்தில் தரவேற்றும் சம நேரத்தில் இப்பகுதியிலும் பதிவு செய்யப்படும். தைமாதம் கணக்கறிக்கை கணக்கறிக்கையை கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள். January2014 கணக்கறிக்கை பெப்ரவரி 2014 கணக்கறிக்கை பெப்ரவரி 2014 PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். feb_2014
-
- 19 replies
- 2k views
-
-
அவனுக்கு இடுப்பின் கீழ் உணர்வற்று போனது 2009 இறுதி யுத்தத்தின் போது. ஒரு போராளியாய் தனது கடைசி நாட்களை களத்தில் செலவளித்த போதில் காலம் முழுவதும் மற்றவர்களுக்கு பாரமாகிவிடுவேனென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இறுதியாய் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுடன் அவனும் சரணடைந்தான். தடுப்பு மருத்துவமனையென்று 2011வரையும் அங்குமிங்கும் அலைவு. 2012இல் அவர்களை பராமரித்த மருத்துவமனையும் எல்லோரையும் வீடுகளுக்கு அனுப்பியது. அப்போதுதான் தனது அடுத்த கட்டத்தின் பயங்கரத்தை உணரத் தொடங்கினான். ஊனமில்லாது சுகதேகியாக இருந்திருப்பின் அக்காக்களுக்கும் அவன் இராசகுமாரனாக இருந்திருப்பான். ஆனால் நாட்டுக்காக போனவன் ஊனமாகி வீடு திரும்பிய போது யாரும் அவனை விரும்பியேற்கவில்லை. அன்பை எதிர்பார்த்து போன அக்…
-
- 4 replies
- 1.5k views
-
-
நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும். 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம். முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள். வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் தொடர்ந்த வெற்றி…
-
- 4 replies
- 976 views
-
-
சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ? 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியினை பரீட்சார்த்தமாக ஆரம்பித்திருந்தோம். இதில் உணவு உற்பத்தியாக மிக்சர் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டும் மற்றும் சாம்பிராணி உற்பத்தியினை அம்பாறையிலும் ஆரம்பித்திருந்தோம். 25.05.2012அன்று அம்பாறையில் சாம்பிராணி உற்பத்திக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடாத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை வைத்து செயற்படத் தொடங்கியது நேசம் சாம்பிராணி உற்பத்தி. இதுவொரு சிறு கைத்தொழில் முயற்சியாகையால் ஆரம்ப வருமானமும் உற்பத்திக்கு ஏற்பவே எனும் அடிப்படையில் தொடங்கப்பட்டது. தொழிலில் ஈடுபட்ட 11 பெண்களுக்கும் மாதம் 4ஆயிரம் ரூபாய் வருவாயை தரக்கூடியதாக முதலில் நடைபெறத் தொடங்கியது. இத்தோடு உணவு உற்பத்திகளிலும் 11பேரை…
-
- 0 replies
- 1k views
-
-
எழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி. மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் எம்மர் உருவாக்கப்பட்ட எழுவான் அபிவிருத்திச் சங்கம் ஊடாக 2013ம் ஆண்டு 13குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு கடனுதவி 274905,09ரூபா வழங்கியிருந்தோம். கடனுதவியைப் பெற்றவர்கள் கடந்த வருடம் 60200.00ரூபாவும் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 30ஆயிரம் ரூபாவுமாக இதுவரையில் 90200.00ரூபாவினை மீளச்செலுத்தியுள்ளனர். தொடர்ந்து தம்மால் கடனுதவியை செலுத்த முடியாத நிலமையில் இரு குடும்பங்கள் தொடர்பிலும் இல்லாது விலகிவிட்டார்கள். இவர்கள் தொடர்புக்காக தந்த தொலைபேசியிலக்கம் யாவும் செயலிழந்த நிலமையில் இருக்கிறது. இம்மாதம் மீளக்கிடைத்த 30ஆயிரம் ரூபாவை எமது தேன்சிட்டு ஆ…
-
- 0 replies
- 563 views
-
-
34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை. மன்னார் மாவட்டம் மடுவலயத்திற்கு உட்பட்ட மினுக்கன் ஆரம்பப் பாடசாலையில் தரம் 1முதல் 5வரையான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் மொத்தம் 34மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பிரதேசம் வசதிகளைக் கொண்டிராத தன்னிறைவற்ற பிரதேசமாகும். கல்வி கற்கும் மாணவர்களின் குடும்ப வாழ்வாதார நிலமையும் வறுமைக்கோட்டின் கீழ்தான் இருக்கிறது. மினுக்கன் பாடசாலையும் மிகவும் வசதிகள் குறைந்த பாடசாலையாகவே காணப்படுகிறது. இங்கு 1முதல்5வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாதணிகள் புத்கப்பைகள் கூட இல்லாமலேயே பாடசாலை செல்கின்றனர். இப்பிள்ளைகளுக்குத் தேவையான பாதணிகள் , புத்தகப்பைகளை வழங்குமாறு குறித்த பாடசாலையின் அதிபர் விண்ணப்பித்துள்ளார்…
-
- 7 replies
- 1.2k views
-