கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"பொன்னந்தி மாலையிலே" "பொன்னந்தி மாலையிலே தனியே நிற்பவளே அன்ன நடையில் மனதைக் கவர்பவளே சின்ன இடையில் அழகு காட்டுபவளே அன்பு கொண்டேன் அருகில் வருவாயோ?" "முந்தானை காற்றில் மேலே பறக்குதே சிந்தனை தடுமாறி ஆசை தூண்டுதே எந்தன் இதயத்தை தொட்ட தேவதையே இந்திர மண்டலத்து ஊர்வசி நீயோ?" "வண்ணக் கோலத்தில் மயக்கம் தருபவளே மண்ணின் வாசனையை பண்பில் சொல்பவளே எண்ணம் எல்லாம் உன்னையே நாடுதே கண்ணே கண்மணியே பூச்சூட வரலாமா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 318 views
-
-
"போனால் போகட்டும் போடா" "போனால் போகட்டும் போடா மனிதா போதை போனதும் தெரியுது உலகமடா ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!" "ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியை கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!" "உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்திய…
-
- 0 replies
- 317 views
-
-
"உயிரின் உயிரே!" "அன்பு கொண்டு .... அருகில் வந்தேன் ஆதரவு சொல்லி .... ஆனந்தம் தருவாயோ? இன்பம் மலர .... இருவரும் சேர்ந்தோம் ஈருடல் ஒன்றாக .... ஈரமான ரோசாவே உலகம் மறந்து .... உவகை கொண்டோமே!" "ஊமை விழியில் .... ஊர்வலம் சென்று எழுச்சி கொண்ட .... எம் காதலே ஏமாற்றாமல் இவனின் .... ஏக்கம் தணியாயோ? ஐம்புலனும் தேடும் .... ஐயமற்ற அழகியே ஒப்பில்லா என் .... உயிரின் உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 316 views
-
-
"நெஞ்சம் பாடும் வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும் வீரவணக்கம் இன்றோ வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 315 views
-
-
பேரன் 'இசை'யின் இரண்டாம் பிறந்த நாள்! / It's Grandson's ISAI's second birthday! [13 / 03 / 2025] "பேரனின் இரண்டாம் பிறந்த நாள் பேரொலி முழங்க 'இசை'யுடன் கொண்டாடுவோம்! பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது பேரறிவுடன் 'இசை' என்றும் வாழட்டும்!" "காலம் ஓடியதை நம்பவே முடியல காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு? காளன் மாதிரி குட்டையாய் இருந்தாய் கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!" "உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து உயர்ந்து நின்று பாதத்தால் நடந்து உற்சாகம் கொண்டு வென்று விட்டாய்!" "முழுஆண்டு இரண்டு முடிந்து விட்டது மும்முரமாக கதைகத் தொடங்கி விட்டாய் ! முக்கனி சுவை முழுதாய் கொண்ட முந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்!" "பிறந்த நாள…
-
- 0 replies
- 315 views
-
-
“ஆனந்தம் ஆனந்தமே” "புருவம் உயர்த்தி புன்னகை பூத்து அருகில் வந்தால் ஆனந்தம் ஆனந்தமே! பெருமிதம் கொண்டு கட்டித் தழுவி நெருங்கி வந்தால் ஆனந்தம் ஆனந்தமே!" "விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி பெருமை படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே! உருகி பேசி நெஞ்சில் சாய்ந்து வருடி அணைத்தால் ஆனந்தம் ஆனந்தமே!" "பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே! பருத்த மார்பும் சிறுத்த இடையும் கருத்த கூந்தலும் ஆனந்தம் ஆனந்தமே!" "பருத்தி சேலையில் பட்டு ரவிக்கையில் உருவம் தெரிந்தால் ஆனந்தம் ஆனந்தமே! திரும்பி பார்த்து வெட்க்கப் ப…
-
- 0 replies
- 312 views
-
-
"சித்திரம் பேசுதடி" "சித்திரம் பேசுதடி சின்ன பெண்ணே சிறிதளவும் உனக்கு இதயம் இல்லையோ? கோத்திரம் கேட்கிறாய் காதலித்த பின்பு கோலம் ஒன்றை நீரில் போட்டேனோ? பாத்திரம் அறியாமல் காதலை ஏற்றேனோ பாவியாய் இன்று அலைய விட்டாயோ?" "சாத்திரம் பார்க்கும் அழகு மாதே சாந்தமாய் கதைத்து கவர்ந்தது ஏனோ? ஆத்திரம் வருகுதடி ஏமாந்து போனேனே ஆசையை வார்த்து மோசம் செய்தாயோ? காத்திரமான உறவு என்று நான் காலத்தை வீணாக்கி உன்னை நம்பினேனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 309 views
-
-
"தேடும் விழிகளில்" [கசல் கவிதை] "தேடும் விழிகளில் கதைகள் இருக்கும் சொல்லப்படாத கனவுகள் ஆடும்!" "மௌன பிரார்த்தனையில் ஏக்கம் விரிந்து காதல் கலந்து மோதல் வெடித்து பின்னிப் பிணைந்து கண்களின் கண்ணீர் ஏதேதோ சொல்லும்!" "சோகத்தின் திரைகள் வழியாக மகிழ்ச்சியின் முகமூடி வழியாக மனம் பறந்து தேடும் கண்களில் நம்பிக்கை ஒளிர்விடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 307 views
-
-
"முகநூல்" "முகநூல் படும்பாடு தலையை சுற்றுது முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி முகத்தை ரசிக்கினம் காதல் நாடி முழுதாய் அலசினம் நட்பு வேண்டி" "முத்து முத்தான அறிவும் அங்குண்டு முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு முடிந்தவரை ஏமாற்றிக் கறப்பவரும் உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 306 views
-
-
உயிரோடு கரைதின்ற கடல்..! ************************************* கண் இமைக்குள் உனை வைத்தே! காலம் எல்லாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் தாயென்றே- உன்கால் ஓரம் கிடந்தோம். அலை கரத்தால் எம் உடலை அன்போடு தொடுவாய்…. அதை எடுத்து எம் நெஞ்சின் ஆழத்தில் புதைப்போம். உனை விட்டு ஒரு நாளும் ஊர் தள்ளி போகோம். உன் வாழ்வில் எம் வாழ்வை ஒன்றாகக் கலந்தோம். ஓர் இரவில் உன் உயரம் ஓங்கியது ஏனோ? உயிர் குடிக்க உந்தனுக்கு தூண்டியது யாரோ? தாயே தன் பிள்ளைகளின் தலை கொய்யலாமோ? தடை உடைத்து மதம் பிடித்து- எம்தடம் அழிக்கலாமோ? உன் மீது நாம் கொண்ட உயிர் பாசம் எங்கே? …
-
- 0 replies
- 305 views
-
-
"தேடும் கண்களே" "தேடும் கண்களே ஓடும் உலகில் நீயோ நாடும் நங்கையின் அழகை அனுபவிக்கிறாயே! காடும் மலையும் பெரிதல்ல வாடும் கொக்காய் இரவும் பகலும் ஆடும் நெஞ்சே பெரிது! சிறுத்த இடையும் செவ்விதழும் உறுத்தும் பார்வையும் அறுத்து எடுக்குதே என் இதயத்தை! கருத்த கூந்தல் காற்றில் ஆட ஒருத்தி அருகில் வந்தால் குருத்து ஆசை விழிகளில் மலருதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 305 views
-
-
"சிந்தை சிதறுதடி" "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 298 views
-
-
“ராஜ பார்வையின் ரகசியங்கள்” "ராஜ பார்வையின் ரகசியங்கள் எதுவோ ராதை கொடுத்த ஊடலின் வலியோ ராத்திரி துயிலாத விழிகளின் கோலமோ ராணியைக் காணாத ராமனின் சீற்றமோ?" "கண்கள் ஏங்கும் பார்வை ஏனோ கண்மணி சுற்றி சிவந்தது எதற்கோ கவலைகள் தந்த கண்மணி யாரோ களங்கம் படுத்திய செயல் என்னவோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 294 views
-
-
ஆயிரங்களில் ஒன்று ------------------------------ எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் ஒரு குடும்பத்தின் கதை இது ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர் தெரிந்தவர் தான் பலர் கவனம் கொண்டிருந்தார்கள் அந்த நாட்களில் அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் இலங்கை இராணுவமும் காவல்துறையும் அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது ஒரு முறை அகப்பட்டவர்களை ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது இன்னொரு முறை எங்கள் கடற்கரையில் முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும் எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள் எங்கு கண்டாலும் எங்களை இறக்கி அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள் ஊரே உயிர் காக்க சித…
-
-
- 2 replies
- 293 views
-
-
"மனமும் மனிதனும்" "மனமும் மனிதனும் போராடும் உலகில் கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான் தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான் மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!" "மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?" "உள்ளம் அலைபாயும் மனிதன் இவன் நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும் மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும் மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 291 views
-
-
"மூன்று கவிதைகள் / 02" 'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்' என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன் அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன் கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்? வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன் கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன் கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன் எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்? பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன் கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 'என்னிதய ஏட்டினில…
-
- 1 reply
- 290 views
-
-
"முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!" "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!" "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!…
-
- 0 replies
- 286 views
-
-
"அன்பே ஆரமுதே" "அன்பே ஆரமுதே கரும்பே தேனே இன்பம் பொழியும் அழகு தேவதையே துன்பம் போக்கும் கருணை மாதே இன்னும் ஏன் தயக்கம் உனக்கு?" "மாசறு பொன்னே வலம்புரி முத்தே பாசம் கொட்டும் பெருங்குடி மகளே வாசம் வீசும் கூந்தல் அழகியே நேசம் கொண்டு அருகில் வருவாயோ?" "காதல் என்பது காமம் அல்ல மோதல் பிறக்கும் இடமும் அன்று சாதல் எம்மை அணுகும் வரை இதயம் சேரும் ஒற்றுமை நட்பே!" "உணர்வு ஒன்றி இருவரும் கலந்து உள்ளம் நாடும் இனிய உறவில் உணர்ச்சி தவிர்த்து நிலை அறிந்து உண்மை வாழும் இருவரின் பற்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 281 views
-
-
“செங்காந்தள்” [அந்தாதிக் கவிதை] "செங்காந்தள் முகிழ்விடும் நம் தேசமே தேசம் எமக்கு ஈன்ற மாவீரர்களே மாவீரர்களே எங்கள் நிலத்தின் தெய்வமே தெய்வமே உங்களுக்கு தீபம் ஏற்றுகிறோம் ஏற்றிய சுடரில் உங்களைக் காண்கிறோம்! காண்கிறோம் நேர் உரிமைப் போராட்டத்தை போராட்டம் காட்டிய உங்கள் வீரத்தை வீரத்தில் நீங்கள் உரைத்த நீதியை நீதி நிலைநாட்டிடச் செய்த தியாகத்தை தியாகம் விதைத்த பூமியே செங்காந்தள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 277 views
-
-
"காசேதான் கடவுளடா" & "தர்மம் தலை காக்கும்" "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" "தர்மம் தலை காக்கும்" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இரு…
-
- 0 replies
- 277 views
-
-
ஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்ற…
-
- 0 replies
- 277 views
-
-
"வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!" "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்! இலைமறை காய்போல் அது உங்களை விலையும் பேசும் மோசமும் செய்யுமே!" "மலையாக உடல் அசையா குழந்தைகளே! மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக காலை படிப்பிலும் கவனம் சிதற நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 276 views
-
-
"விதை" "விதை விதைத்தவன் வினை அறுப்பான் விளைச்சல் தந்தால் பொருள் ஈட்டுவான் வித்து மடிந்தால் விம்மி அழுவான்!" "வாழ்வும் சாவும் மனித வயலில் தாழ்வும் உயர்வும் வளரும் பக்குவத்தில் விதைப்பு சரியாகட்டும் இதயம் செழிக்கட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 273 views
-
-
"அடைமழை" [அந்தாதிக் கவிதை] "அடைமழை தொடர்ந்து ஐப்பசியில் பெய்யுது பெய்த நீரோ வெள்ளமாய் நிற்குது நிற்கும் தண்ணீரில் கழிவுகள் மிதக்குது மிதக்கும் எண்ணங்கள் தேடுது கடுதாசி கடுதாசி கப்பலாக அங்கே ஓடுது ஓடும் மீன்கள் அதைத் துரத்துது துரத்தும் மீனைப் பறவை கொத்துது கொத்தும் பறவை பசியைத் தீர்க்குது தீர்க்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்குது இருக்கும் வடிகாலும் முடங்கிக் கிடக்குது கிடக்கும் குப்பைகள் ஒட்டத்தை தடுக்குது தடுக்கும் எதையும் உடைக்குது அடைமழை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 270 views
-
-
"வாழ்ந்து பார்" வாழ்ந்து பார் நீங்க யாழில் தாழ்ந்து போன கதை புரியும்! ஆழ்ந்த சிந்தனை கொண்ட இவன் கீழ் மட்டம் தொட்டது தெரியும்! "வீழ்ந்த வரலாற்றை பாடமாகக் கற்று சூழ்ந்த வஞ்சகத்தை எடுத்து எறிந்து காழ்ப்பு களைந்து உண்மை அறிந்து மூழ்கிய ஒற்றுமையை மீட்டு எடுத்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 269 views
-