Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "மனதைத் திருடியவளே" "மனதைத் திருடியவளே என்னை மயக்கியவளே மன்றாடிக் கேட்கிறேன் திருப்பித் தந்துவிடு! மகிழ்வைத் தந்து விலகிப் போனவளே மஞ்சள் நிலாவில் தனிமையில் வாடுகிறேனே!!" "மஞ்சத்தில் உறங்கையில் கனவு விரியுது மகர தோரணம் பந்தலில் ஆடுது! மங்கல அரிசி காத்து கிடக்குது மணமகள் நீயோ அங்கு இல்லையே!!" "மழையும் புயலும் பழகி விட்டது மது வாசனையில் என்னை மறக்கிறேன்! மரணம் என்னை நெருங்க முன் மவுனம் களைத்து மடியைத் தாராயோ!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  2. "பாட்டி வாரார் பாட்டி வாரார்" [இரண்டு பாட்டிகளின் கதை] "பாட்டி வாரார் பாட்டி வாரார் பார்த்து படியில் கால் வைத்து பாதியில் நின்று கை காட்டி பாட்டி வாரார் பாட்டி வாரார்" "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் பாலகனுக்கு கலந்து அன்புடன் ஊட்ட பாவம் பாட்டி இந்த வயதிலும் பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" "பாத்திரம் கழுவி வீடு துடைக்க பானை நிரம்ப சோறு காச்ச பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ****************** "பாட்டி வாரார் பாட்டி வாரார் பாட…

  3. "தளதள ததும்பும் இளமை பருவமே" "தளதள ததும்பும் இளமை பருவமே தகதக மின்னும் அழகிய மேனியே நறநறவென பல்லைக் கடித்து நின்று திருதிருவென விழித்து அழைப்பது ஏனோ ?" "சல்சல் என சலங்கை ஒலிக்க சிலுசிலு எனக் காற்று வீச கமகம என முல்லை மணக்க தடதடவென கதவைத் தட்டுவது ஏனோ ?" "திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க திடுதிடு இன அறையில் நுழைந்து தரதர என்று என்னை இழுத்து விக்கிவிக்கி மெதுவாய் அழுதது ஏனோ ?" "தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு துடிதுடிக்கும் இதயத்தை சாந்தப் படுத்தி கிளுகிளுப்பு தந்து மடியில் சா…

  4. இயற்கையே ஏன் இந்தக்கோபம்! *************************************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்ணம் கொண்டான். அடை மழை கட்டி வானம்-"டித்வா" அடித்தது புயலாய் நாட்டில் பெரு வெள்ளம் உட்புகுந்து பிரளையம் ஆச்சே வீட…

  5. "மூன்று கவிதைகள் / 13" 'பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே' பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே வஞ்சனை இல்லா கம்பீர நாயகனே! கொஞ்சும் மொழியாலே உன்னைத் தாலாட்டவா தஞ்சம் தேடி என்னிடம் வந்தவனே மிஞ்சும் அழகு மகிழ்ச்சி தருகுதே! துள்ளும் ஆசை இதயத்தில் எழ சொல்லும் வார்த்தைகள் தேனாய் இனிக்க கள்ளும் தராத மயக்கம் வர உள்ளும் புறமும் நீயே தோன்ற அள்ளும் ஆசை அலையாய் பாயுதே? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------------------------- ''புகைப்படக் கவிதை'' "பெண்ணில் பிறந்தவன் அவளையே நாடுகிறான் மண்ணில் தவழ்ந்தவன் அதுவே ஆகிறான்! வண்ண விளக்கில் அணிச்சலை வெட்டுகிறான் வண்ணாத்திப் பூச்சியாய் மகிழ்ச்சியில் பறக்கிறான்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…

  6. "மூன்று அந்தாதிக் கவிதைகள்" "விமானம்" "விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின பேசிய திசையில் பறந்தது விமானம்!" .............................................. "அறுவடை" "அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக பணம் சேர்ந்து திருமணம் கைகூட கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!" .............................................. "அன்பு" "அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் ஒன்று கூடி இன்பம் பொழிய பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே! நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி ஏந்திய காதலை அவளில் கொட்டி கொட்டிய ஆச…

  7. "திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்" "திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம் இல்லை எனக்கூறாய் இருப்பதை எமக்கு அளித்தாய் வாழ்வின் பொருளை உன்னில் நாம் கண்டோம் வில்லங்கத்தில் இருப்பவனுக்கு நீ ஒரு கடவுள் நாவிற்கு இனிய சுவையுடன் தினமும் உணவு தந்தாய் யகத்தில் வித்தாகி, மலராகி, காயாகி, கனியாகி, விதையானாய் கண்டதையும் கற்று பண்டிதையாகிய ஒரு பல்கலைக்கழகமே லிங்கவழிபாடு பின் விநாயகர் முருகன் என்றும் முடிவில்லை இங்கிதமாய் பழகிடுவாய் இன்று உன்னை எங்கு காண்போம் கண்டதும் கவர்ந்திடுவாய் கலகலப்பாய் பழகிடுவாய் ஒரு பெரு முற்றுப்புள்ளியை இன்று பொட்டாய் வைத்துவிட்டாய் …

  8. 'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!' சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன் சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே! கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே! குன்றில் வரைந்த தங்கநிற மங்கையே குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்! தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன் தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்! சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது! சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும் சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்! ["[1] சிங்கப் பாறை" - சிகிரியா குன்று [2] சிகிரியா சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள் / தங்கநிற மங்கை [3] ‘மிரர் வால் / mirror wall’ - கண்ணாடி சுவர் அல்லது சிங்காரச் சு…

  9. "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…

  10. 'காதல் சொல்லத் தூண்டாதோ?' பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான் கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன் விண்ணில் வாழும் தேவதை இவளோ மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ? உதடு பிரித்து முத்துப் புன்னகை உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை உதடு சுழித்து கொல்லும் புன்னகை உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் என் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவந்து காற்று என்னைப் போர்க்காதோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்து பொங்கும் நட்பைக் காதலாய் மாற்றாதோ? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்து அவளுக்கு காதல் சொல்லத் தூண்டாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'காதல் சொல்லத் தூண்டாதோ?' https://www.facebook.com/group…

  11. "மூன்று கவிதைகள் / 21" 'பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே' அன்ன நடையாள் தூளியிலே ஆடி இன்முகம் காட்டி அருகில் அழைத்து இன்பம் கொட்டும் நிலா ஒளியில் மின்னும் விளக்கில் இருவரும் சேர பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே ? சின்ன இடையாள் அழகு காட்டி தேன் சிந்தும் இதழ்கள் பதித்து கன்னம் இரண்டிலும் முத்தம் கொடுத்து அன்பு மழையால் உள்ளம் நனைக்க இன்னாள் என்றும் கிடைக்குமா மீண்டும் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'புகைப்படக் கவிதை' அம்மம்மாவின் வடிவிலேயே, எமக்கு வந்தவளே அவளின் பெயரையே, தனக்கும் எடுத்தவளே அழகான மழலையே, எங்கள் பேத்தியே அன்போடு அணைத்து, அகம் மகிழ்கிறேன்! [க…

  12. 'மனசுக்குள் மத்தாப்பூ' அதிகாலை தென்றலிலே மனசுக்குள் மத்தாப்பூ அழகுப் பதுமை இதயத்துக்குள்ளே புகுந்ததே! அணங்குப் பார்வை தீண்டிய நொடியிலே அன்பு மலர்ந்து காதல் பூத்ததே! உன்னை நினைத்தால் இருதயம் துள்ளுதே தீப்பொறி போலே எண்ணங்கள் ஒளிருதே! மௌனமாய் வெடிக்கும் காதல் இதுவோ! குறும்புப் புன்னகையால் என்னை மயக்கியவளே குறையில்லா அழகை வீசும் வனிதையே குதூகலம் பொழியும் வண்ண மையிலே குதர்க்கம் வேண்டாம் அருகில் வாராயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 'மனசுக்குள் மத்தாப்பூ' https://www.facebook.com/groups/978753388866632/posts/32072218642426700/?

  13. "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்] "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!" "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?" "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?" "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நி…

  14. "மூன்று கவிதைகள் / 10" பண்பாடு வரலாறு காட்டும் உடை பலராலும் உடுத்த வெள்ளை வேட்டி! காலம் மாற கோலம் மாறினாலும் திருவிழாக் காலத்தில் தோன்றும் வேட்டி! படித்தவரும் கட்டினர் பாமரரும் கட்டினர் உடுத்த வேட்டியில் மகிழ்ச்சி கொண்டனர்! மடித்தகரை சால்வையை தோளில் போட்டு எழுந்து நடந்தனர் மனதில் கம்பீரம்பொங்க! ........................................... நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் மங்கை பாட சலங்கை ஒலிக்க பெதும்பை ஆட சங்கு பொருக்கி பேதை மகிழ்ந்தாள்! ......................................................... யாழ் நூலகத்தின் படிகளின் …

  15. "மேல் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெற்றி உடன் நெற்றி மோதி நெஞ்சு இரண்டும் கலந்து துடித்து நெருப்பாய் எரிந்ததை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" …

  16. "மூன்று கவிதைகள் / 18" 'மின்னலாய் ஒரு பின்னல்' [நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை] நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ? சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால் சோதனை வந்து வேதனை கொடுக்குதே! அல்லது நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/ துரோகம் செய்யும் மனிதர்களே/ சத்தியம் வெல்லும் நாளில்/ சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்' விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்! கண்கள் எல்லாம் அன்பு பொழிய க…

  17. "எரிச்சலை ஊட்டுகிறது" "எனக்கு மேல்- ஒரு சக்தி உண்டு- அதை நம்புகிறேன் மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி உண்டு- அதை நம்புகிறேன் அணங்கு மேல்- ஒரு மோகம் உண்டு - அதை நம்புகிறேன் பிணக்கும் பிரச்சனைக்கும் - ஒரு தீர்வு உண்டு- அதை நம்புகிறேன்" "நந்தியை விலத்தி- ஒரு அருள் காட்டியவனை- எனக்குப் புரியவில்லை மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை வெட்டியவனை- எனக்குப் புரியவில்லை அந்தியில் வாடும்- ஒரு மலரை மாட்டியவளை- எனக்குப் புரியவில்லை இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம் மூட்டியவனை- எனக்குப் புரியவில்லை" "வருணத்தை காப்பாற்ற- ஒரு பக்தனை நீ அழைக்காதது- எரிச்சலை ஊட்டுகிறது கருணைக்கு அகலிகை- ஒ…

  18. "மூன்று கவிதைகள் / 06" 'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே' இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே நன்று உணர்ந்து காதல் தேடாயோ ? அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே நின்று எனக்கு அறிவுரை தாராயோ ? கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே! அன்பு கொண்ட மங்கை கண்டு துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ? இன்பம் கொட்டும் அழகு வியந்து உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. வெள்ளிப்பூக்கள்' வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர கள்ளம் இல்லாக் காதலர் தழுவ கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே! அல்லிப்பூ நிலா ஒளியில் மலர ஒல்லி இடையாள் அருகில் நெ…

  19. 'கருணை பொழியும் கதிர்காம முருகா' கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா! கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது! சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்! சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று! கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில்! கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்! உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே! வள்ளி நீயோ முருகன் நானோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'கருணை பொழியும் கதிர்காம முருகா'] https://www.facebook.com/groups…

  20. "நாம் ஆணா பெண்ணா.. ?" [வித்தியாசமாக இருக்கட்டும் என இப்படி வசன கவிதையில் ஒரு முயற்சி.] "மழலையாய் பிறந்தோம் தாய் தந்தை மகிழ்வில் விளக்கம் இல்லை நாம் வேறா வேறா.." "குழந்தையாய் வளர்ந்தோம் ஒன்றாய் கட்டி உருண்டோம் குழப்பம் இல்லை நாம் ஆணா பெண்ணா.." "சிறு…

  21. "கம்பன் வழியில் .... " [கம்பன் விழா 2024 ஜூன் நடுப்பகுதியில் இருந்து பல நாடுகளில் / இடங்களில் ஜூலை நடுப்பகுதிவரை நடக்கின்றன. அதையொட்டி கம்பன் வழியில் எனது ஒரு துளி] "பால் ஒழுகும் இரு குடங்களோ பாலகன் பசி தீர்க்கும் சுனையோ? பாசம் பொழியும் பெண் தெய்வமோ பாவி என்னை அணைக்கா தேவதையோ??" "தென்னையில் இரு அழகு குரும்பையோ தெய்வ மங்கையின் எழில் வடிவமோ? தெவிட்டாத அவள் இன்ப மழையோ தென்றல் காற்றும் கொஞ்சும் உடலோ??" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)

  22. 'கடைக் கண்ணாலே இரசித்தேனே' கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே! இடைவெளி விட்டு நடந்து சென்றாலும் இடையை வருட உன்கை மறக்கவில்லையே! பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே! பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு பொங்கி எழுந்ததே காதலும் காமமும்! பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்

  23. "மூன்று கவிதைகள் / 09" முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ அன்பு காட்டாயோ !! ........................................... தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? ......................................................... மஞ்சள் வெயில் பூத்த வானமு…

  24. "காந்தி மடியில் சரணம் அடைந்தேன் ....." "உறங்கிக் கிடந்த மனது ஒன்று உறக்கம் இன்றி தவிப்பது எனோ? உறவு தந்து உள்ளம் கவர்ந்து உலகம் துறந்து போனது எனோ?" "கண்கள் மூடி கனவு கண்டால் கலங்கிய ஒளியில் மிதப்பது எனோ? கருத்த வெள்ளை உருவம் தோன்றி கண்ணீர் துடைத்து மறைவது எனோ?" "காற்றில் விண்ணில் குரல் கேட்க காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ? காலம் போனாலும் கோலம் மாறினாலும் காமாட்சி நினைவு வருத்துவது எனோ?" "காந்தி மடியில் சரணம் அடைந்தேன் காந்தமாய் என்னை இழுப்பது எனோ? காமம் துறந்த காதல் அவன் காதில் கீதை ஓதியது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  25. "நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்" [அடி எதுகை 'ல்,ள்,ழ்' யிலும் இணை மோனை: (1,2) லும் பாடல் தரப்பட்டுள்ளது] "நில்லாமல் நிற்கும், உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும், உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும், உன் வனப்பினால் செல்லாமல் செல்லும், என்னைத் தடுக்கிறாய்!" "துள்ளாமல் துள்ளும், என் உள்ளத்தில் கிள்ளாமல் கிள்ளி, ஆசை கூட்டி அள்ளாமல் அள்ளி, அன்பைக் கொட்டி தள்ளாமல் தள்ளி, என்னை அணைக்கிறாய்!" "பள்ளியில் படிக்காத, பாடம் சொல்லி வள்ளல்கள் வழங்காத, காதல் கொடுத்து நுள்ளாமல் நுள்ளி, ஊடல் கொண்டு பள்ளத்தில் பதுங்கி, என்னை ஏங்கவிடுகிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.