கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"தேடும் விழிகளில்" [கசல் கவிதை] "தேடும் விழிகளில் கதைகள் இருக்கும் சொல்லப்படாத கனவுகள் ஆடும்!" "மௌன பிரார்த்தனையில் ஏக்கம் விரிந்து காதல் கலந்து மோதல் வெடித்து பின்னிப் பிணைந்து கண்களின் கண்ணீர் ஏதேதோ சொல்லும்!" "சோகத்தின் திரைகள் வழியாக மகிழ்ச்சியின் முகமூடி வழியாக மனம் பறந்து தேடும் கண்களில் நம்பிக்கை ஒளிர்விடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 307 views
-
-
"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்" "மனதின் மூலையில் ஒரு நினைவு அணையா தீபமாய் இன்றும் எரிகிறது தேநீரின் வாசனை காற்றில் வருகிறது வடையின் மெதுமை வாயில் ஊறுது!" "உரையாடல் மலர்ந்து நட்பு வளர்ந்தது கிசுகிசு கதைகளும் இடையில் வந்தது சிரிப்பும் சச்சரவும் முட்டி மோதின வெற்றிலை பாக்கு வாயில் ஆடின!" "விடைகள் புரியா வாங்கு அரசியல் குடையில் போகும் பூவையர் மகிழ்ச்சி இடையில் பறக்கும் ஈக்கள் ஒருபக்கம் கடையின் நினைவு மறையா காலமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 219 views
-
-
"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!" "தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே! அழகான என்னுடலும் உனக்கே தருவேனே அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!" "காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல காலம் முழுவதும் அன்பின் நாளே! காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம் காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 378 views
-
-
"நட்பு என்பது நடிப்பு அல்ல" "நட்பு என்பது நடிப்பு அல்ல நடனம் ஆடும் மேடை அல்ல நயமாக பேசும் பொய்யும் அல்ல நலம் வாழ என்னும் பாசமே!" "வடிவு என்பது உடல் அல்ல வட்டம் இடும் கண்ணும் அல்ல வளைந்து பொங்கும் மார்பும் அல்ல வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!" "காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல காது குளிர பேசுவது அல்ல காமம் கொடுத்து மயக்குவது அல்ல காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!" "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல அற்பம் சொற்பம் தருவது அல்ல அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!" "மு…
-
-
- 4 replies
- 357 views
-
-
"நட்பு" "தேர்ந்தெடுக்கும் நிறம் குணம் காட்டும். தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் தேய்ந்துபோகும் காதலும் நட்பு இன்றேல் தேயாமல் வாழும் நட்பு ஒன்றே !" "இருகண்கள் அழுதால் கைத்துண்டு துடைக்கும் இருதயம் அழுதால் நட்பு துடைக்கும் இன்பமாய் உலகின் அதிபதியாய் இருப்பினும் இருளாகும் நண்பர் ஒருவர் இல்லாவிடில் !" "இளமை காலத்தில் காதல் வரும் இன்பமாக சில வேளை திருமணமாகும் இளையோர் பலருக்கு நட்பு மலரும் இறுக்கமாக பல வேளை நிரந்தரமாகும்!" "உன்முகம் பார்த்து நட்பு பழகுவதல்ல உயர்தகுதி பார்த்து நட்பு பழகுவதல்ல உதடு கொட்டும் பேச்சுக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
"நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] & "முத்துக் குளிப்போம்" "நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] "புரிந்துணர்வு மலர நண்பர்கள் தழைத்து ஓங்கும்! பொறாமை சூழ எதிரிகள் வளர்ந்து பெருகும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................. "முத்துக் குளிப்போம்" "ஆழத்தில் மலரும் முத்து சிற்பிகள் அழகு கோலத்தில் வண்ணக் கற்கள்! ஈழ நாட்டின் சிலாபத் துறையில் அலைகளுக்கு அடியில் பலபல இரகசியம்!" "ஓடுகளின் அரவணைப்பில் ஆழமாக கிடக்குது வண்ணவண்ண நிறத்தில் கண்களைக் கவருது! தூங்கும் புதையலை வெளியே எடுக்க வாருங்கள் நாம் முத்துக் குளிப்போம்!" [கந்தையா தில்லைவிநா…
-
- 0 replies
- 369 views
-
-
"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை" [ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love you in silence" யின் தமிழாக்கம் இதுவாகும்.] "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை மௌனத்தில் நிராகரிக்க முடியாது என்பதால் நான் தனிமையில் காதலிக்கிறேன் உன்னை தனிமையில் நான்மட்டுமே சொந்தம் என்பதால் நான் தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை தூரம் அன்புவலிக்கு கவசம் என்பதால் நான் காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை காற்று உதடைவிட மென்மை எ…
-
- 0 replies
- 318 views
-
-
"நாம் ஆணா பெண்ணா.. ?" [வித்தியாசமாக இருக்கட்டும் என இப்படி வசன கவிதையில் ஒரு முயற்சி.] "மழலையாய் பிறந்தோம் தாய் தந்தை மகிழ்வில் விளக்கம் இல்லை நாம் வேறா வேறா.." "குழந்தையாய் வளர்ந்தோம் ஒன்றாய் கட்டி உருண்டோம் குழப்பம் இல்லை நாம் ஆணா பெண்ணா.." "சிறு…
-
- 0 replies
- 157 views
-
-
"நிலவில் முகம் பார்த்து" "மஞ்சள் நிலவில் முகம் பார்த்து கொஞ்சும் மொழியில் இனிமை கண்டு நெஞ்சம் நிறைந்த காதல் கொண்டு மஞ்சம் காண மணம் முடித்து தஞ்சம் அடைந்தேன் அவள் மடியில்!" "மதியின் அழகு மனதைக் கவர விதியின் பயனில் அவளும் சேர புதிய மலராய் மகிழ்ச்சி மலர பதியாய் என்னை உவந்து ஏற்க கைதி ஆனேன் பாசக் கூண்டில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 575 views
-
-
"நிலவுக்குள் நீயடி..!" "நிலவுக்குள் நீயடி நினைவில் நிறைந்தவளே நிம்மதி தேடி உன்னைத் தேடுகிறேன் முழுமதியே வருவாயோ அருகில்?" "கண்ணுக்குள் புதைந்த சித்திரமே மண்ணில் வாழும் இவனுக்கு பண்பு சொல்லாயோ காதல் பொழியாயோ?" "திங்கள் முகத்தில் திலகம் பதிக்க வரவா நான் தித்திக்கும் இளமை காதல் தேடுது கண்ணே மார்பைத் தழுவவா?" "நெஞ்சம் மகிழுதடி மஞ்சம் அழைக்குதடி வஞ்சகம் வேண்டாம் பெண்ணே கொஞ்சம் கருணை என்னிடம் காட்டினால் என்னடி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 250 views
-
-
"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்" [அடி எதுகை 'ல்,ள்,ழ்' யிலும் இணை மோனை: (1,2) லும் பாடல் தரப்பட்டுள்ளது] "நில்லாமல் நிற்கும், உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும், உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும், உன் வனப்பினால் செல்லாமல் செல்லும், என்னைத் தடுக்கிறாய்!" "துள்ளாமல் துள்ளும், என் உள்ளத்தில் கிள்ளாமல் கிள்ளி, ஆசை கூட்டி அள்ளாமல் அள்ளி, அன்பைக் கொட்டி தள்ளாமல் தள்ளி, என்னை அணைக்கிறாய்!" "பள்ளியில் படிக்காத, பாடம் சொல்லி வள்ளல்கள் வழங்காத, காதல் கொடுத்து நுள்ளாமல் நுள்ளி, ஊடல் கொண்டு பள்ளத்தில் பதுங்கி, என்னை ஏங்கவிடுகிற…
-
- 0 replies
- 148 views
-
-
"நிழலாடும் நினைவுகள்" "நிழலாடும் நினைவுகள் கதை சொல்லும் நித்திரை செய்கையில் கனவாய் வரும்! மகரிகை தொங்க வலதுகால் வைத்து மணமகளாய் வந்தது படமாய் போச்சு! ஆறடி சேலையில் தொட்டில் கட்டி, காலடியில் வளர்த்தது செய்தியாய் போச்சு! வாழையடி மரபை பெருமையாக பேணி வந்தாரை மகிழ்வித்தது மனதில் ஆடுது! இறக்கும் தருவாயிலும் புன்னகை பூத்தது இறவாமல் 'நிழலாடும் நினைவுகள்' ஆயிற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.4k views
-
-
"நீயின்றி நானில்லை" "நீயின்றி நானில்லை எதோ புலம்புகிறான் நீலவானின் கீழ் உணர்ச்சியில் உளறுகிறான் நீங்காத காதலென்று அவளுக்கு உறுதிகொடுத்து நீதியாய் நடப்பேனென்று சபதமும் செய்கிறான்!" "நீரின்றி உலகில்லை அவளின்றி அன்பில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நாடகம் ஆடுகிறான் நீலகண்டன் நானென்று நஞ்சு கக்குகிறான் நீச்சல் அடிக்கிறான் ஆசை முடியுமட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 442 views
-
-
"நீயில்லா நானும் நீலமில்லா வானம்" "நீயில்லா நானும் நீலமில்லா வானம் நீரில்லா ஆறு மீனில்லா ஓடை வேரில்லா மரம் பட்டு விழும் ஊரில்லா இடம் காடாய் மாறுமே!" "காதல் கொண்ட என் பெண்ணே மோதல் தவிர்த்து அருகில் வந்திடு சாதல் கூட இன்பம் தருமே கூதல் காய மடியைத் தந்தால்!" "ஊடல் ஒன்றும் புதுமை இல்லை கூடல் உன்னுடன் வரும் என்றால் தேடல் கொண்டு மனம் வாடுது விடலைப் பருவம் உன்னை நாடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 260 views
-
-
"நீராடும் நிலா" "வானத்து மதியாய் என்னுடைய காதலியாய் கானத்து குயிலாய் இனிமையின் ஒலியாய் மோனமாய் இருந்து நெஞ்சில் நிறைந்தவளே! ஆனந்தம் எதுவென உன்னில் அறிந்தேன் அனலாய் இதயம் இன்னும் கொத்திக்குதே!" "கிராமத்து மண்ணின் வாசனை தெரியுது கூரான கண்ணனும் என்னைத் துளைக்குது சீரான அழகோ ஆசையைத் தூண்டாதே! நேரான பாதையிலே தலைநிமிர்ந்து போறவளே நீராடும் நிலா நீதானோ என்னவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 2 replies
- 495 views
-
-
"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை" "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே! நீங்காத காதலென்று அவளும் நம்பி நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!" "அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து அச்சம் மடம் நாணம் மறந்து அன்னை ஈன்ற உடல் முழுவதையும் அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!" "அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான் அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 1 reply
- 602 views
- 1 follower
-
-
"நெஞ்சம் பாடும் வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும் வீரவணக்கம் இன்றோ வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 314 views
-
-
"நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.3k views
-
-
"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்" "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள் கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!" "மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் நஞ்சு கலந்து காதல் வீசினாள்!" "கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!" "நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன் செஞ்ச தெல்லாம் செய்தது போ…
-
- 0 replies
- 317 views
-
-
"நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" "நெருங்கி அருகில் நீ வந்தால் நெடுநாள் கனவு நனவு ஆக நெஞ்சம் இரண்டும் ஒன்று சேர நெற்றியில் குங்குமம் நான் இட நெருப்பாய் காதல் பற்றி எரிய நெடும்பொழுதும் சிறு பொழுதாய் ஆகுமே!" "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதால் நெறியிலாதார் போல் வீணராய்ப் பிறக்காமல் நெய்த் துடுப்பால் அன்புத்தீ ஏற்றி நெருக்கம் கொண்டு அருகில் வராமல் நெடுநாள் கனவை சிதைப்பது எனோ? நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நெருநல் - நேற்று; சற்றுமுன் நெறியிலாதார் - அசடர், கீழோர் நெய்த்துடுப்பு - சுருவம் [Spatula, used especially in Vēdic sacrifices / ஸ்பூன் வடிவத்திலுள்ள ஒரு யாகம் செய்யும் பாத்திரம்]
-
- 0 replies
- 482 views
-
-
"மேல் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெற்றி உடன் நெற்றி மோதி நெஞ்சு இரண்டும் கலந்து துடித்து நெருப்பாய் எரிந்ததை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" …
-
- 0 replies
- 156 views
-
-
"நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு... " "நேசம்வச்ச நெஞ்சில நெருப்பா ஓநெனப்பு வாசம்தாரும் மல்லிகையும் வாடிப்போகுது தேசம்சுற்றும் மாமா நெருங்கிநிண்ணு பேசாயோ பாசம்ஒன்றும் உன் இதயத்தில் இல்லையோ மோசம்இல்லா காதலை வீறாப்பின்றி சொல்லாயோ?" 'கஞ்சி குடிக்கையிலே நினைப்பெல்லாம் நீயய்யா கொஞ்சிக் குலாவ மனதெல்லாம் ஏங்குதய்யா வஞ்சகம் வேண்டாம் இறுமாப்பை நிறுத்தய்யா செஞ்சதையும் சென்சிபுட்டு விலகியது ஏனய்யா மஞ்சள் புடவையில் மணிக்கணக்காய் காத்திருக்கேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 253 views
-
-
"நேரிய பாதையில்" "நேரிய பாதையில் மனிதா நட நேர்மை கொண்ட தீர்மானம் எடு! நேசம் உள்ள நண்பர்களை அணைத்து நேரார் தரும் தொல்லைகளை அகற்று! ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம் ஆசை வைத்து செயலில் ஈடுபாடு! இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை இருப்பதை அறிந்து நடையைக் கட்டு! கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து கொடுத்து எடுத்து சமாதானம் காணு! தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் தெளிவான முடிவு தருமே வெற்றி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 243 views
-
-
"நொட்டி நொடிய விடாதே பெண்ணே?" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே!" "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்கத் துணை சேர ஒட்டி உரசிப் போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கித் துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில்…
-
- 0 replies
- 515 views
-