கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்க…
-
- 1 reply
- 193 views
-
-
"விழிகளின் வித்தை" "கீழ் உதடை மெல்லக் கடித்து குறும் சிரிப்பை அள்ளி வீசினாளே! கண் இரண்டும் கொஞ்சம் கூராக்கி காமம் பூசிய அம்பு எய்தினாளே!" "வில் வித்தை தெரிந்து இருந்தும் 'விழிகளின் வித்தை'யில் நான் விழுந்தேனே! கள்ளியை நம்பி உதவிகள் செய்து அள்ளி வீசினேன் காதல் மட்டுமே!" இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும், மக்கள் தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமுமான கொழும்பின் பரபரப்பான இதயத்தில், கரையோரக் காற்று இடைவிடாது முட்டி மோதும் கோல் பேஸ் (Galle face) என்று அழைக்கும் காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைந்து உள்ள கொள்ளுப்பிட்டி என்ற வசதியான இடத்தில் அருணி என்ற ஒரு இளம் பெண், ஆடம்பர பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில்…
-
- 0 replies
- 191 views
-
-
"இளமொட்டு மனது" யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. அப்பொழுது 'கச்சாய்த் துறைமுகம்' முக்கிய இடத்தை பெற்றிருந்தது. அப்படியான யாழ்ப்பாணத்தின் பசுமையான வயல்களின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கச்சாய் என்ற பண்டைய கிராமத்தில், கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் முத்துச்செல்வி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அன்பின் உருவகமாக இருந்ததுடன் அவளுடைய ஒளிரும் கண்கள் ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை பிரதிபலித்தும், அதை உறுதிப்படுத்துவது போல அவளுடைய புன்னகையும் நடத்தையும் கூட நிறைந்திருந்தது. ஆயினும்கூட, அவளுடைய கண்கொள்ளா வெளிப்புற அழகுக்குக் கீழே ஒரு துளிர்விட்ட பூவைப் போல, இளமைப் பருவத்தின் சிக்கல்களால் கறைபடாத ஒரு மனமும் அவளு…
-
- 0 replies
- 189 views
-
-
"விடியல் உன் கையில்" "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!" நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும்…
-
- 0 replies
- 181 views
-
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும்18 வயது ரவியும்…
-
- 0 replies
- 179 views
-
-
"நட்பதிகாரம்" "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு." இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான கண்டி நகரத்தை அண்டிய ஒரு சிறிய கிராமத்தில், உருளும் மலைகளுக்கும் மின்னும் நதிக்கும் இடையில் இரண்டு பிரிக்க முடியாத நண்பிகளாக, ஒளவை மற்றும் வள்ளி வாழ்ந்தனர். அவர்களின் பந்தம் அந்த கிராமத்தின் ஆற்றங் கரையில் உயர்ந்து பத்தையாக ஒன்றாக நிற்கும் மூங்கில் மரங்களைப் போல நீடித்தது. அது கருங்கூந்தலை வாரிச் செல்லும் மென் காற்றைப் போலவும் குளிர்ந்த மாலையில் ஒரு சூடான அடுப்பு போலவும் அவர்களுக்கு ஆறுதலளித்தன. ஒரு இதமான சூரிய ஒளிமிக்க மதியம், மென்மையான காற்று தேயிலைச் செடிகளுடன் விளையாடிக்கொ…
-
- 0 replies
- 176 views
-
-
"விட்டுக்கொடுத்துப் பழகு" 'விட்டுக்கொடுத்துப் பழகு', கேட்க நல்லாத்தான் இருக்குது. ஆனால் பழகின எனக்குத்தான் தெரியும் அதன் கொடுமை . 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் இன்னும் அடி வாங்காதவர்கள் என்றே எண்ணுகிறேன்! காலம் மாற கோலம் மாறும் என்பது உண்மையே! அப்படித்தான் என் மனம் முணுமுணுத்துக் கொண்டு இருந்தது. நான் என் மனைவியை காதலிக்க ஆரம்பிக்கும் பொழுதே , 'என் மனதுக்கும் உண்மைக்கும் ஒவ்வாத ஒன்றில் நான் என்றும் ஈடுபட மாட்டேன். என் உணவு சைவம் , உடை , அலங்காரம் பகட்டு இல்லாமல், தேவையின் அடிப்படையில். அது என் தனிப்பட்ட கொள்கை, அதே போல நீ…
-
- 0 replies
- 175 views
-
-
"காதல் கோட்டை" இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ் நகரின் ஒரு சிறு பகுதியான அத்தியடியில் அப்பன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கொழும்பு, பொரளையில் அவனின் உறவினர் ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி முகாமையாளராக தன் முதல் உத்தியோகத்தை ஆரம்பித்தான். அகவை இருபத்தி மூன்று, இருபத்தி நாலு இருக்கும். ஒரு வாலிபனுக்கான ஆசைகள், கனவுகள் நிறைந்தவனாக, ஒரு உண்மையான அன்பை பெற்று வாழ்வை பூரணமாக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு விருப்பம், அவா இருந்ததில் வியப்பு இல்லை. நாளாக ஆக, தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். முன்பு அத்தியடியில், பேராதனையில் இருந்…
-
- 0 replies
- 174 views
-
-
சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், முல்லைத்தீவு ஒரு சிதைந்த நிலமாக, ஆனால் இன்னும் நம்பிக்கையின் கல்லறையாக இருந்தது. பசி குண்டுகளை விட சத்தமாக அலறியது. என்றாலும் சரியான உணவின்றி, ஆனால் இன்னும் நம்பிக்கையில் உயிர் வாழும் மக்கள் அங்கு நிறைந்து இருந்தனர். மருந்தின்றி துடிக்கும் குழந்தைகள், குண்டுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட நஞ்சு கலந்த காற்றினாலும் மக்களுக்கு பயம் கலந்து இருந்தது. வீடுகளும் நிலங்களும் எரிந்தன. குழந்தைகள் பால் இல்லாமல் அழுதனர். வயதான பெண்கள் மருந்து இல்லாமல் மயக்கமடைந்தனர். மௌனம் கூட பயமாகத் தோன்றியது. அங்கே விழுந்து கிடந்த பிணங்களை அகற்றவோ அல்லது யார் எவர் என்று அடையாளம் காணவோ அல்லது எத்தனை என்று எண்ணு…
-
- 1 reply
- 174 views
-
-
"மீட்டாத வீணை.." வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டமானது எழில் கொஞ்சும் கடற்கரையினையும் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலப்பகுதிகளில் அதிக வெப்பநிலையினையும் டிசம்பர் - பெப்ரவரி வரை குளிரான காலநிலையினையும் கொண்டு இருப்பதுடன் தரைத் தோற்றத்தினை அவதானிக்கு மிடத்து கரையோர சமவெளியினை கொண்டும், அழகியத் தீவுகளினையும், பல்லுருவத்தன்மை கொண்ட கடற் கரைகளினையும், பாரிய மணல் மேடுகளினையும், நாற்புறமும் பனை சூழவும் காணப்படுகின்றது. அங்கு தான் கவிதா என்ற ஒரு இளம் பட்டதாரி ஆசிரியை, பெற்றோருடனும் சகோதர, சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்தார். அழகு மற்றும் நாகரிகம் என்ற வார்த்தைகளுக்கு அவளே உதாரணம். அவள் படிக்கும் காலத்திலும் சரி, இன்று ஆசிரியையாக பணிபுரிய…
-
- 0 replies
- 165 views
-
-
கிறிஸ்துமஸ் மரம் --------------------------- ஒரு ஒழுங்கான கூம்பு வடிவில் இருக்கும் சின்ன சவுக்கு மரமே கிறிஸ்துமஸ் மரம் என்று தான் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஊரில் இருந்த நாட்களில் இதை எங்காவது நேருக்கு நேரே பார்த்ததாக ஞாபகம் இல்லை. படங்களில் அல்லது கதைகளில் மட்டுமே நான் இதை பார்த்திருக்கவேண்டும். அப்படியே வெள்ளைப் போர்வையாக அந்த வீடுகளைச் சுற்றி பனி கொட்டிக் கொண்டிருப்பதாகவும் மனதில் பதிந்து இருந்தது. ஆகவே நிச்சயம் இது படமோ அல்லது கதையோ உண்டாக்கிய தோற்றம் மட்டுமே. ஊரில் கிறிஸ்தவ மக்கள் இருந்தார்கள். மற்றைய ஊர்களை விட என்னுடைய ஊரில் அதிகமாகவே இருந்தார்கள். அதில் ஒரு சிலர் என்னுடைய வயது உடையவர்களாவும், தெரிந்தவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்தப் பண்டிக…
-
-
- 3 replies
- 165 views
-
-
"ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் நீண்ட கருங் கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கி வந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்து சென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொ…
-
- 0 replies
- 157 views
-
-
"பார்வை ஒன்றே போதும்" திடீரென எதேச்சையாக இருவர் சந்திக்கும் பொழுது அவர்களின் கண்கள் அப்படியே ஒருவரை ஒருவர் அசையாமல் கணப்பொழுது நின்றுவிட்டது என்றால், அதுவும் இளம் ஆணும் பெண்ணும் என்றால், 'கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்பதைவிட அது வேறு ஒன்றாக இருக்க முடியாது. இதை பட்டாசு வெடிப்பது போல இதயங்கள் வெடிக்கின்றன என வர்ணிப்பார்களும் உண்டு. இருவரின் தனித்துவமான வெளிப்படையான இயல்புகள் ஒருங்கினையும் பொழுது மின்சாரம் பாய்வது போல அந்த உணர்வு தானாக ஏற்படுகிறது. அது அப்படியே இருவரையும் விழுங்கிவிடுகிறது என்று நான் முன்பு படித்த கவிதை ஒன்று எ…
-
- 0 replies
- 155 views
-
-
"ரதியின் கனவு" [போதை பொருள் மற்றும் பாலியல் விழிப்புணர்வு] வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட, சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாகவும் உள்ள முல்லைத்தீவில் தனது சிறு வீட்டில் பெற்றோர் சகோதரர்களுடன் வாழும் இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு அகவை மதிக்கத்தக்க, எழுத்தாளரும் சமூக தொண்டாளருமான இளம் பெண் ரதி, காலை தேநீரை அருந்திக் கொண்டு, ஹால் இல் இருந்த தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தார். கிழக்கு வானம் சிவந்து சூரியன் மெல்ல மெல்ல கீழ்வானில் இருந்து மேலே ஏறிக் கொண்டு இருந்தது. பறவைகள் தமது கூட்…
-
- 0 replies
- 146 views
-
-
"தேயாதே வெண்ணிலவே" முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும். அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவ…
-
- 0 replies
- 146 views
-
-
"உள்ளம் கவர்ந்த கள்வன்" நான் உயர்தரம் முடித்து, அரசாங்கம் அறிமுகப் படுத்திய தரம் அற்ற, இனரீதியான தரப்படுத்தல் மூலம், பல்கலைக்கழக நுழைவை இழந்து, தனியார் நிலையம் ஒன்றில் தொழில் சார்ந்த கல்வி ஒன்றில் அன்று பயின்று கொண்டு இருந்தேன். பொழுது போக்காக சில பேனா நண்பர்களை உள்வாங்கி, எனது ஓய்வை பயன் படுத்திய காலம் அது. நாளடைவில், அதில் ஒரு பேனா நண்பன் முன்னிலை வகுக்க தொடங்கினார். அரசியல் தொடங்கி சமயம் வரை எமக்குள் கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இருவருக்கும் சில உடன்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தாலும் நட்பு வலுவாகிக் கொண்டே போனது. நம்பிக்கை வளர, இயல்பாகவே, எந்தவித தயக்கமும் இன்றி கடிதங்கள் பரிமாற தொடங்கினேன். அவனை பற்றிய தனி விபரங்களையும் …
-
- 0 replies
- 144 views
-
-
கறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலம…
-
- 0 replies
- 139 views
-
-
"கோபத்தைக் குறைத்துவிடு" "கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும் கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்" கண்டது ஒரு [அழகு] வடிவத்தை, அதை கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு உருகி நிட்குதே, ஆனால், இவள் [இவர்] பேசுவதோ பைத்தியக்காரி [பைத்தியகாரன்] மாதிரி இருக்கிறது, அதை கேட்டவுடன் உடனே கோபம் வருகிறதே!. என் மனம் இப்படித்தான் ஊசல் ஆடிக்கொண்டு இருந்தது. காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் அது வந்து விடலாம்?. அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு. மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு …
-
- 0 replies
- 120 views
-
-
"என் மூச்சு நீயடி" இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற விரிவை உற்றுப் பார்த்துக் கொண்டு சிவகுமார் யாழ்ப்பாணக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, அப்பொழுது தண்ணீரின் மேல் ஒரு சூடான தங்க நிறத்தை வீசியது, ஆனால் காட்சியின் அழகு அவனைக் கவரவில்லை. அவன் சுவாசித்த காற்றாக மாறிய மீராவின் நினைவுகளால் அவன் மனம் மூழ்கி இருந்தது. அவன் வாய் "என் மூச்சு நீயடி" என முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த சிவகுமார் அமைதியான அதே நேரம் மதிப்பீட்டுத் திறனையும் மற்றும் சுயபரிசோதனை அல்லது அகநோக்குப் பார்வை அல்லது சிந்தனை கொண்ட இளைஞன் ஆவான். அவனது பெற்றோர் எப்போதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர், அதை, அவர்களின் வார்த்தைகளை…
-
- 0 replies
- 114 views
-
-
"தாயின் பரிசு" [உயிர் பிழைத்த வளையல்] இலங்கையின் தமிழ் மக்களின் முதன்மையான தாயகமான யாழ்ப்பாணம் டச்சு காலனித்துவ அம்சங்கள் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கங்களால் உருவான சுவாரசியமான கலாச்சாரத்தைக் கொண்ட தனித்துவமான ஒரு பகுதியாகும். அப்படியான, அதேநேரம், பெரும்பாலும் வெயிலின் கொடுமையில் வாடிய யாழ்ப்பாண நகரத்தில், அழகு மற்றும் உள்நாட்டு போரின் போதும் அதன் பின்பும் பல விதமான கஷ்டங்கள், பாதிப்புகள் கொண்ட ஒரு பகுதியாகவும் இருந்தது. அங்கே, தெருக்கள் குறுகலாக, மிதிவண்டிகள், பழ வியாபாரிகள், காற்றில் கலந்த தமிழ் மொழியின் ஓசைகள் என பரபரப்பாக இருக்கும் அதன் மையப் பகுதியில் அடக்கமான ஒரு சிறிய வீட்டில் மாரியம்மா என்ற விதவை வாழ்ந்து வந்தார். அவளது வாழ்க்கை …
-
- 0 replies
- 114 views
-
-
"பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]" இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர். பறவைக்கு கூ…
-
- 0 replies
- 107 views
-
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். …
-
- 0 replies
- 99 views
-