Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 140 கிலோ கஞ்சா மீட்பு இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள கம்பிப்பாடு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 140 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை தனுஷ்கோடி பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார். தனுஸ்கோடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த கஞ்சா பொதிகள் கடற்கரை மணலினுள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகளின் மொத்த தொகை இலங்கை மதிப்பின்படி சுமார் 1கோடியே 40 இலட்சம் ரூபா எனவும் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்க…

  2. ’எங்களின் எண்ணிக்கை விரைவில் 80-ஐ தாண்டும்!’ - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அதிரடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றும், அவருக்கு அளித்துவந்த ஆதரவைத் தாங்கள் விலக்கிக் கொள்வதாகவும் மனு அளித்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் 'பீச் ரிசார்ட்டில்' தங்க வைக்கப்ப…

  3. 'ஆட்சியை கலையுங்கள்!'- அதிர வைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ பேட்டி அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு இணைந்தன. இருப்பினும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்' என்று கூறி ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர். இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ், 'புடம் போட்டத் தங்கமாக அ.தி.மு.க வரவேண்டும் என்றால் ஆட…

  4. 2 ஜி வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு! சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அறிவிப்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு, வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2007-ல், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது. அதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து வழக்கு விசாரணையைத் தொட…

  5. சிக்கல்! அ.தி.மு.க.,வை சேர்ப்பதில் திடீர் சிக்கல் கட்சிக்குள் நிலவும் உச்சக்கட்ட குழப்பம் காரணமாக, விரைவில் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், அ.தி.மு.க., வை சேர்ப்பதில், திடீர் முட்டுக்கட்டை விழுந்து உள்ளது.டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவை, விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த விரி வாக்கத்தின் போது, கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க,பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு, அமைச்சரவையில் இடம் கிடைப…

  6. கலவரத்தை தூண்ட சசி சொந்தங்கள் சதி? மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி வரும், சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், கலவரத்தை துாண்ட திட்டமிட்டு இருப்பதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு பட்டது. தற்போது, இரு அணிகளும் இணைந்து விட்டன. எதிர்ப்பு முதல்வராக பழனிசாமியும், துணை முதல்வ ராக பன்னீர்செல்வமும், அரசை வழிநடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், சசிகலாவால், துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள், தனி அணியாக செயல்பட்டு வருகின…

  7. சசி சொத்து முடக்கம்: அரசு அடுத்த 'மூவ்' அடுத்த கட்டமாக, நீதிமன்றம் விதித்த, அபராத தொகைக்கு ஈடாக, சசிகலாவின் சொத்துகளை முடக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, வருமானத் திற்கு அதிகமாக, சொத்து குவித்த வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம், அவருக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனையும்,10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ., இறந்து விட்டதால்,அவருக்கு எதிரான வழக்கை, உச்ச நீதி மன்றம் கைவிட்டது.மற்ற மூவருக்குமான தண்டனையை உறுதிசெய்தது. அபராத தொகையை வசூலிக்கவும்…

  8. சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி! சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உறுதிசெய்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்துவிடவே, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கடந்த மே மாதம்…

  9. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார்..! தமிழருவிமணியன் சூளுரை நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாக ரஜினிகாந்த் என்னிடம் கூறினார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை முன்னிருத்தி நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தமிழருவி மணியன் ரஜினிகாந்த் கூறியதாக நிறைய விஷயங்களை தெரிவித்தார். அதில் பேசிய தமிழருவி மணியன், 'காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும் என்று ரஜினி என்னிடம் கூறினார். ஆட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்ட…

  10. ஆளுநருடன் சந்திப்பு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்த உடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் வழங்கிய அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இ இந்நிலையில், ர…

  11. தினகரனை சமாதானப்படுத்த பழனிசாமி அணி தீவிர முயற்சி: கொங்கு மண்டல மூத்த அமைச்சர்கள் இருவர் களமிறங்கினர் கே. பழனிசாமி - E_Lakshmi narayanan தினகரனை சமாதானப்படுத்த முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் சமீபத்தில் இணைந்தன. அணிகள் இணைப்பின்போது, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தினகரன் தரப்பு அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர். இ…

  12. களமிறங்கிய ஸ்டாலின், திவாகரன்! சபாநாயகருடன் முதல்வர் அவசர ஆலோசனை ஆளும்கட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, சில நாள்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தது. தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு இருஅணிகள் இணைந்ததால் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஆளுநரை சந்தித்து மு…

  13. ஜெயலலிதா மர்மம்! - யார் அந்த 17 பேர்? எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - ஓவியம்: கார்த்திகேயன் மேடி ‘மர்ம மரணம்’ பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது ஜெயலலிதாவின் மரணம்தான். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டபோது செவிடாய் இருந்த அரசு இப்போது செவி சாய்ப்பதற்குக் காரணம் அரசியல். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் எனச் சொல்லி பலரையும் கைது செய்தார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’’ என்றார். சி.பி.ஐ. விசாரணை கோரி மக்களவையில் ஓ.பி.எஸ். எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜெயலலிதாவின் தோழி கீதாவும் இந்த விவகாரத்தை எழுப்பினார். பிரதமரிடமே நேரில் போய்ப் புகார்…

  14. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு! டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதில், 'மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு நேற்றுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்திருந்த நிலையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமாமகேஸ்வரி இன்று காலை தினகரனைச் சந்தித்து ஆதரவளித்தார். எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர். அதன் …

  15. என்ன செய்யப் போகிறது திமுக? ஸ்டாலின் - கோப்புப் படம் முதல்வர் பழனிசாமி அரசுக்கான ஆதரவை 19 எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக இரு அணிகள் இணைப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவிடம் நேற்று முன்தினம் நேரில் கடிதம் அளித்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு…

  16. கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு: 2004 மக்களவைத் தேர்தல் போல மெகா கூட்டணி அமைக்க ஸ்டாலின் வியூகம் கோப்புப் படம்: ஸ்டாலின் கடந்த 2004 மக்களவைத் தேர்தலைப் போல திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைத்து வருகிறார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல் என தொடர்ந்து 3 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்தது. கடந்த 2016 தேர்தலில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக இழந்தது. இது திமுக தொண்டர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அசாதாரண சூழல் ஜெயலலிதா மறைவால் அதிமுகவிலும்…

  17. எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்கக் காத்திருக்கும் அந்த '10 அமைச்சர்கள்'! ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனதில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் 10 அ.தி.மு.க அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள், எந்நேரமும் எடப்பாடி அரசுக்கு எதிராகத் திரும்பலாம் என்பதுதான் இப்போது கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். அந்த அமைச்சர்களோடும் அவர்களுக்கு நெருங்கியவர்களோடும் டி.டி.வி.தினகரன் டீம் பேசி வருகிறது. சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் விதித்த மூன்று நிபந்தனைகளில், ‘ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவது’ என்ற கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டார் முதல்வர் எ…

  18. மிஸ்டர் கழுகு: இணைப்பு முடிந்தது! கவிழ்ப்பு ஆரம்பம்! கழுகார் முகத்தைப் பார்த்ததும், ‘‘ஒருவழியாக ஒன்று சேர்ந்து விட்டார்களே?” என்றோம். ‘‘ஆம்... இணைப்பு முடிந்தது! அடுத்து கவிழ்ப்பு வேலைகள் ஆரம்பம்” என்றார் கழுகார். ‘‘அதற்குள்ளாகவே கவிழ்ப்பா?” ‘‘ஒன்று சேர்ந்தது எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தானே? தினகரன் இன்னமும் உறுமிக்கொண்டுதானே இருக்கிறார்! ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் இறங்கிவிட்டார்களே...” என்று பீடிகை போட்டவரிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம். ‘‘ஆறு மாதங்களுக்கும் மேலான தர்மயுத்தம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது எப்படி?’’ ‘‘தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களிடமும் மக்களிடமும் நியாயம் கேட்டதைவிட, டெ…

  19. ‘முதல்வரை மாற்றுவதுதான் என் வேலையா?!’ - கொதி கொதித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் #VikatanExclusive மீண்டும் ஓர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ‘முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்' என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அளித்த கடிதத்துக்கு இன்னமும் ஆளுநர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. ‘என்னை தேவையில்லாமல் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். முதல்வரை தேர்வு செய்வது என் வேலையா?' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். சென்னை, வானகரம் பொதுக் குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, கட்சி எம்.எல்.ஏக்களால் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏக்க…

  20. பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான வாயிலில் கையில் பைகளுடன் நுழையும் வீடியோ பதிவை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம், ஐபிஎஸ் அதிகாரி ரூபா அளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், …

  21. 'எங்கே கருணாஸ்..?' - தேடுதல் பணியில் தினகரன் அணி 'என்னுடைய ஆதரவு தினகரனுக்குத்தான்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே நேரிடையாகத் தெரிவித்தவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் கருணாஸைத் தேடி வருகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். அ.தி.மு.க-வில் அணிகள் இணைந்த பிறகு, அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கொடி பிடித்துள்ளனர். ஆளுநர் வித்யாசாகரைச் சந்தித்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்கள் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். அதில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். இந்த ஆட்சிக்கு ந…

  22. ரஜினி குடும்பத்தின் ஆஸ்ரம் பள்ளி திறப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தாக்கல் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் குத்தகை அடிப்படையில் இடத்தைப் பெற்று எங்கள் சங்கம் சார்பில் ஆஸ்ரம் பள்ளி நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் வரை வாடகை பாக்கி இல்லாதபோதும், நில உரிமையாளர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி பள்ளி நுழைவுவாயிலை பூட்டிவிட்டனர். இதற்காக ரூ. 6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடந்தது. பள்ளி பூட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வழ…

  23. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிகரித்தால் சட்டப்பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சி அமல்? - பாஜக போடும் புதிய திட்டம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சட்டப்பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதத்தில் கூறியுள்ளனர். இவர்கள் தவிர அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின…

  24. சென்னையையும் தாக்கியது "ப்ளூவேல் கேம்" விபரீதம் - 7வது மாடியிலிருந்து குதித்த மாணவி. சென்னையையும் தாக்கியுள்ளது "ப்ளூவேல் கேம்" விளையாட்டு. விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ப்ளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பல உயிர்களைப் பறித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து அறிமுகமான இந்த விபரீத விளையாட்டுக்கு தொடர்ந்து இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். பல சுற்றுக்களைக் கொண்ட இந்த விளையாட்டின் இறுதிச் சுற்று மரணம் என்பதுதான் மிகக் கொடுமையானது, கோரமானது. ஆனால் இந்தக் கோர விளையாட்டுக…

  25. அ.தி.மு.க அணிகள் இணைப்பு: அதிமுக-வின் மூன்று அணிகளும் தனித்தனியே ஆலோசனை #LiveUpdate *ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. *இதனிடையே டிடிவி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.