Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பேரறிவாளனுக்கு பரோல்... விரைவில் வருகிறது அறிவிப்பு?! கால் நுாற்றாண்டு காலமாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் ராஜீவ்காந்தி கொலைவழக்கு குற்றவாளி பேரரறிவாளனுக்கு விரைவில் பரோல் வழங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உட்பட நால்வருக்கு விதிக்கபட்ட துாக்குதண்டனை சில ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலேயே தங்கள் வாழ்வைக் கழித்துவரும் அவர்கள் நான்குபேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ராஜீவ் கொலைவழக்கில் க…

  2. இந்த நாளை எப்படி மறந்தோம்... தமிழக அரசு கொண்டாட மறந்த ’பொன்விழா’ ’தமிழ்நாடு’ என்னும் பெயருக்கு அங்கீகாரம் கிடைத்த நாள், இன்று. 1967-ம் ஆண்டு ஜூலை 18 அன்றுதான், தமிழக சட்டமன்றத்தில் “ ‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் கொண்டுவந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள். தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் இந்த நாளை கொண்டாடத் தவறிவிட்டது. தற்போது, தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளராக இருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு உருவான வரலாற்றை 2006-ம் ஆண்டு புத்தகமாக வெ…

  3. "ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்" அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தெரிவித்து வந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரில் செயல்படும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும் பல்வேறு சந்தேகங்களை …

  4. சிறைக்குள் இப்படித்தான் இருக்கிறார் சசிகலா: வைரல் வீடியோ! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி, அவருக்கு தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை போலீஸ் டிஐஜி ரூபா அதிரடி புகார் கூறியிந்தார். இது, கர்நாடகம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் டிஐஜி ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ரூபா மற…

  5. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு - வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு…

  6. பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதனால், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின், அதிகாரப்பூர்வ நாளிதழ், 'நமது எம்.ஜி.ஆர்.,' இதன் நிறுவனரான ஜெயலலிதா மறைவுக்குப்பின், நாளிதழ் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, பன்னீர் அணிக்கு எதிரான செய்திகள், அதிகம் வெளியாகின. துணை பொதுச் செயலராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளதால், …

  7. சசிகலாவுக்கு சிறப்பு வசதி உதவிய தமிழக பிரமுகர்கள்? சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைக்க, தமிழக காங்., பிரமுகர்கள் சிலர், திரைமறைவில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்., துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு, சிறைத் துறை உயர் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார். உத்தரவு இது குறித்து விசாரணை நடத்த, கர்நாடக முதல்வர் சித்தரா…

  8. பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பெங்களூரு சிறை விவகாரம் பற்றி பேச உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். இதற்கிடையில், சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி., ரூபாவிடம் தகவல் கொடுத்த கைதிகள் 32பேர் பலமாக தாக்கப்பட்டதுடன் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க.…

  9. 1,1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி;யாழ். இளைஞன் உள்ளிட்ட மூவர் இந்தியாவில் கைது போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி, இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இலங்கையர் உட்பட மூவரை, இந்தியாவின் மத்திய குற்றப்பிரிவு பொலிஸ் கைதுசெய்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திவ்யன் (வயது 30), இந்தியா கனக நகரைச் சேர்ந்த நவாஸ் செரீப் (வயது 22) மற்றும் பெங்களூரு வடமேற்கைச் சேர்ந்த நதீம் செரீப் (வயது 30) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வங்கிகளின் கடனட்டைகள் போன்ற 144 போலிக் கடனட்டைகள், அவற்றைத் தயாரிப்பதற்காக வைத்திருந்த 36 இயந்திரங…

  10. மிஸ்டர் கழுகு: ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி! ‘‘உண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தைரியசாலிதான். அவர் தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொள்கிறார். அவரைப் போலவே நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்’’ என்று எடப்பாடி புகழ் பாடி ஆரம்பித்தார் கழுகார். ‘‘என்ன ஆச்சு உமக்கு?” என்றோம். ‘‘நான் சொல்வதைக் கேட்டால் நீரே அதை வழிமொழிவீர். எடப்பாடியிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் பற்றித்தான் கோட்டை வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. ‘அமைதியாக வலம்வரும் இவர் ஆளையே விழுங்கிவிடுவார்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். சசிகலா குடும்பம் பற்றிய எந்தப் பயமும் இல்லாமல் தூள் கிளப்புகிறார் எடப்பாடி என்பதுதான் இதில் ஹைலைட்.” ‘‘வரிசையாகச் சொல்லும்...” ‘‘முதல்வராகப் பதவி ஏற…

  11. டெல்லி போராட்டத்தில் மீண்டும் தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் தற்போது மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்க டெல்லி வந்தடைந்துள்ளனர். நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் ரத்து, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்கள் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எலிக்கறி உண்ணுதல், சாலையில் உருளுதல், சாட்டையடி போராட்டம் என பல்வேறு விதமாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு பஞ்சாப், ஹரியான போன்ற பிற மாநில விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவளித்தனர். பின்னர்…

  12. சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை சிறைத்துறை அதிகாரி பரபரப்பு அறிக்கை பெங்களூரு:'பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.அவர் விரும்பும்உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என, கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு …

  13. 'பிக் பாஸ்' விமர்சன சர்ச்சையால் தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப் பாகும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் காய்த்ரி ரகுராம் தெரி வித்த கருத்தால், தமிழக பா.ஜ., நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் துவங்கி, பாலிவுட்டில் கோலோச்சி, தமிழுக்கு வந்துள்ளது, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. இதில், பிரபலங்களை, வீட்டுக்குள், 100 நாட்கள் பூட்டி வைத்து, உளவியல் ரீதியாக போட்டி நடத்தப்படுகிறது. தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு, மிகவும் புதிய நிகழ்ச்சியான இதில், பா.ஜ., பிரமுகரும், நடிகை மற்றும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பங்கேற்ற…

  14. மலர்ந்தது புது உறவு: கழகங்கள் இடையே இனி கலகமில்லை சட்டசபையில், தி.மு.க.,வினருடன் அமைச்சர்கள் நெருக்கம் காட்டுவதும், சிரித்து உறவாடுவதும், இரு கட்சி தொண்டர்களிடமும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., இருந்த வரை, சட்டசபையில், அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும், எலியும் பூனையுமாக இருப்பர். சட்டசபையில், ஜெ., இருக்கும் போது, தி.மு.க.,வினரை பார்த்து, ஆளும் கட்சியினர் புன்னகை புரிய மாட்டார்கள். கடுமையாக விமர்சிப்பர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேச துவங்கினாலே, அமைச்சர்கள் அனைவரும் உஷாராகி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், உடனுக்குடன் பதில் அளிப்பர். தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை, க…

  15. பெங்களூரு சிறையில் நடப்பது என்ன வீடியோ வெளியானதால் பரபரப்பு பெங்களூரு:பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள், நேற்று, உள்ளூர், 'டிவி' சேனல்களில் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, கடந்த, 10ம் தேதி ஆய்வு செய்தார்.அப்போது, அ.தி.மு.க., சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சமையல் அறை, முத்திரை தாள் மோசடி குற்றவாளி, அப்துல் கரீம்லால் தெல்கிக்கு சிறப்பு வசதி, போதை பொருளான கஞ்சா கொண்டு வருவது போன்ற ம…

  16. சதிகலாவால் ஜெயாவுக்கு நேர்ந்த கதி ரா (கூ) ஜாவால் தீபாவுக்கும் நேரலாம் ஜூன் 11 ஆம் திகதி போயஸ் தோட்டத்தில் தீபா ஆடிய கரகாட்டத்தை தமிழ்நாடே கண்டுகளித்த சமயத்தில், அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி? தீபாவோடு நெருங்கி நிற்கும் இந்த ராஜா யார் என்பதுதான்? இவருக்கும் தீபாவிற்கும் என்ன சம்பந்தம்? மனைவி முன்னிலையிலேயே கணவன் மாதவனை நாயே, பரதேசி என்று திட்டும் அளவிற்கு சக்தி படைத்தவரா இவர் என்பதுதான்! எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவின் தோழனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த ராஜா, அப்பேரவையின் பொருளாளராக உள்ளார். தீபாவை இயக்குவது மட்டுமின்றி பேரவையின் அனைத்துச் செயல்பாடுகளையும் தற்போது இவர்தான் தீர்மானிக்கிறார். கடந்த பெப்ரவரி தொடக்கத்தில…

  17. அன்று ஆடிய ஆட்டம் என்ன? இன்று ஓடிய ஓட்டம் என்ன? ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்களை மீடியாக்கள் படம் பிடிப்பது புதிய விஷயம் அல்ல. ஆனால் ஜூன் 6 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கே.டி.பிரதர்ஸை படம் பிடிக்க முயன்ற மீடியாக்களைச் சிலர் பகிரங்கமாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டமான 2004 முதல் 2007 வரையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு அது. சென்னை போட் கிளப்பில் உள்ள தயாநிதியின் வீட்டில் சட்டவிரோதமாக அதிவேக தொலைத்தொடர்பு இணைப்பகம் இருந்ததாகவும் அதனை சன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்குப் பயன்படுத்தியதாகவும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத…

  18. "இரட்டை இலை" சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சி? நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை, அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் தலைமைக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நகர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. படத்தின் காப்புரிமைBHASKER SOLANKI தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சுகேஷின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் (தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம்) இரண்டு முறையும் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முறையும் நிராகரித்துள்ளன. இந்த வழக்கை டெல்லி த…

  19. இதுவே அ.தி.மு.கவின் கடைசி அத்தியாயம் ! மறைந்து போன முன்னாள் முதல்வர் என்ன பெரிய புண்ணியவாதியா? சசிகலா ஜெயிலில் யாரையும் சந்திக்க மறுத்தார்? பன்னீர் செல்வம் செல்வாக்கு குறைய காரணம்? அவர்கள் ஏன் மோடிக்கு ஆதரவுக்கு தெரிவிக்க காரணம்? இதுவே அ.தி.மு.கவின் கடைசி அத்தியாயம். இன்னும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் பழ.கருப்பையா. vikatan

  20. ஓவியர் வீர சந்தானம், சென்னையில் காலமானார்! ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் நிஜமாக்கித் தந்தவர்.தமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன் 71 வது வயதில் மறைந்துள்ளார். கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக…

  21. இலங்கைக்கு கடல்வழியாக கடத்தவிருந்த கேரள கஞ்சா மீட்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கஞ்சா மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் தப்பியோடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகுமூலம் கேரளா கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரியமாண் கடற்கரை அருக…

  22. மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்! - ‘திடுக்’ தினகரன் ‘‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுகிறார் திவாகரன். அவரது படத்தை எடுத்து வையும்” என்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய வேகத்தில், கழுகார் நம் முன் ஆஜரானார். ‘‘இது என்ன விவகாரம்? அவர்கள் குடும்பத்துக்குள் ஏதோ சமாதானப் படலம் நடந்ததாகவும் தகவல் பரவியதே?” என்ற கேள்வியைப் போட்டு தொடங்கி வைத்தோம்! ‘‘அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்று தினகரன் ஒரு பேட்டியில் அதிரடியாக மறுத்திருக்கிறாரே! ‘என்னிடம் இப்படி கேள்வி கேட்டிருந்தால், ‘நீர் அடித்து நீர் விலகுமா?’ என்று மட்டுமே பதில் சொல்லியிருப்பேன். முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் தினகரன். யார் என்ன செய்தாலும், இந்த ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்…

  23. டார்கெட் தி.மு.க..! - கருப்புசிவப்புக்கும் காவிக்குமான பனிப்போர் "அ.தி.மு.க, தி.மு.க எனும் இரண்டு மிகப்பெரிய திராவிடக் கட்சிகளை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்து, 'கழகம் இல்லாத ஆட்சி; களங்கமில்லாத ஆட்சி” என்ற தங்களின் கோஷத்தை தமிழகத்தில் நிலைநாட்டத் துடிக்கிறது பி.ஜே.பி" என்ற புகைச்சல் திராவிடக் கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2014-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தவுடன், அந்தக் கட்சியின் அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டது அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சி என்பதுதான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுவருகிறது அக்கட்சி. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் …

  24. அ.தி.மு.க-வை அழித்த கதை! - அணிகளின் அட்டகாசம் ப.திருமாவேலன் நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைத் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி. - எந்த மகராசன் எழுதிய பாட்டோ? எம்.ஜி.ஆர் என்ற மகராசன் ஆரம்பித்த அ.தி.மு.க-வின் இன்றைய நிலைக்கு இது பொருத்தமானது. எதற்கும் நாலு பேர் வேண்டும் என்பார்கள். ஆனால், இதற்கு மூன்று பேர் போதும்போல. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் கட்சியைக் காலி செய்யும் வேலையை எல்லா வேளையும் பார்க்கிறார்கள். அதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் குழி தோண்டுகிறார்கள், சட்டை வேட்டியில் அழுக்குப்படாமல். அதுதான் மனதில் சுயநலச் சா…

  25. யாருக்கு மகிழ்ச்சி…பெருமை…. பாரம்பரிய நகர அறிவிப்பில் -? … இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் யுனெஸ்கோவால், தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சி அடைவதாகவும் சில ‘பெரிய மனிதர்கள்’ ட்விட்டர் மூலம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்…. … … அஹமதாபாத் 600 ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் உருவான ஒரு நகரம்… அதைவிட புராதனமான, அதைவிட கலாச்சார, சரித்திர பெருமை உடைய, அதைவிட உலகப்புகழ் பெற்றவை இந்த இந்திய நகரங்கள் – ( இதைத்தவிர – இன்னமும் சிலவும் இருக்கின்றன…) வாரணாசி ( காசி )- -கௌதம புத்தர், புத்த மதத்தை கி,மு.528 -ல் அதாவது சுமார் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.