தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தடை? தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்திற்காகவும், வரம்பு மீறி செலவு செய்ததற்காகவும், தேர்தலில் போட்டியிட முடியாமல், தினகரனை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். வெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்க…
-
- 0 replies
- 453 views
-
-
பல கோடி பணம் எப்படி? அமைச்சரிடம் கிடுக்கிப்பிடி பல கோடி பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் பேரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமாரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், எம்.எல்.ஏ., விடுதி உள்ளிட்ட, 38 இடங்களில், சமீபத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது கணக்காளர் சீனிவாசன் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு தலா, 4,000 ரூபாய் தரப்பட்ட பட்டியல் கிடைத்தது. அதன் மூலம், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிசாமி மூலமாக, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததது த…
-
- 0 replies
- 410 views
-
-
விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியிலும் ரெய்டு! ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை பூக்கடையில் உள்ள ஒரு விடுதியில் வ…
-
- 0 replies
- 480 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம் சாடல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியே எனறு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வியே' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து ராம் கூறுகையில், '' இடைத்தேர்தலை ரத்து செய்வது நல்ல விஷயமல்ல. ஆனால் , வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார். ''ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் வரை தரப்படுவ…
-
- 0 replies
- 374 views
-
-
ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... முடிவு யார் கையில்?! ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... நடக்காதா என்பது டெல்லியில் இன்று (08-04-17) மாலை நடைபெற உள்ள தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. மேலும், பணத்துடன் ஆர்.கே.நகரில் சிலர் பிடிபடவும் செய்தார்கள். ஆர்.கே.நகர் தேர்தலை பணமில்லாத் தேர்தலாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் இருந்தாலும் பணம் கொடுப்பதைத் தடுக்கமுடியாமல் கையைப் பிசைந்து நின்றது. வாக்காளர்களுக்குப் பணம்வரும் வழிகளை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வந்த தேர்தல் ஆணையம், தமிழக அமைச்சர்கள…
-
- 12 replies
- 1.7k views
-
-
'தீபா கணவன் மாதவன் வந்திருக்கேன்' கடைசிநாள் பிரசாரக் காட்சிகள் ! #SpotReport #VikatanExclusive சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்றிரவு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக, அரசியல்கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் என பகலிலும், இரவிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தத் தொகுதி மக்களுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்துள்ளது. துணை ராணுவப்படையினர் எங்கும் காணப்படவில்லை, கட்சிக் கொடிகள் இல்லை; வேட்பாளர்களை வரவேற்க மேளச் சத்தம் இல்லை; கரைவேட்டி கட்டியவர்களின் நடமாட்டம் இல்லை; வெளிமாவட்ட பதிவெண் க…
-
- 0 replies
- 478 views
-
-
‘தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும்!’ - அமித் ஷா-வின் அடுத்த ஆபரேஷன் நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளை எதிர்கொண்டுவருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘கடந்த 100 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டிருக்கிறார். ஜூன் மாதம் வரையில் அமைச்சர்களுக்கு நிம்மதியான உறக்கம் வரப்போவதில்லை’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ‘நான் நிரபராதி. என் மீது எந்தக் குற்றமும் இல்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் கே.கே.மகேஷ் Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன். எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்? நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
கழகங்கள் இல்லா தமிழகம்... சீமானையும் வளைக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகள்- சிக்குவாரா? சென்னை: தமிழர் அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாள மீட்டெடுப்பு முழக்கங்களை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை 'இந்துத்துவாவாதி' என முத்திரை குத்தி தங்கள் பக்கம் இழுக்கத் துடிக்கிறது இந்துத்துவா சக்திகள். தந்தை பெரியாரின் பேரன்... பிரபாகரனின் தம்பி... மார்க்ஸின் மாணவன்... இதுதான் தொடக்க கால அரசியல் மேடைகளில் சீமான் தம்மைப் பற்றி பிரகடனம் செய்து கொண்டது. திராவிடர் இயக்க மேடைகளில் தொடக்க காலங்களில் பகுத்தறிவு பிரசாரம் செய்தார் சீமான். தலைகீழாக முயற்சி திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழர் வாழ்வுரிமையை பேசும் அரசியலை முன்வைத்து வருகிறார் சீமான். தமிழகத்…
-
- 1 reply
- 504 views
-
-
சொந்தநாட்டு விவசாயிகளை நிர்வாணமாக்கி... சிங்களத்து வறட்சிக்காக ரத்தக் கண்ணீர் வடிக்கும் மோடி அரசு! டெல்லி: இந்திய தேசத்தின் குடிமக்களான தமிழகத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நிர்வாணமாக போராட்டம் நடத்தும் நேரத்தில்தான் இலங்கை வாழ் சிங்கள மக்களின் வறட்சியைப் போக்க 100 மெட்ரிக் டன் அரிசியை அனுப்புகிறதாம் தமிழர் விரோத மோடி தலைமையிலான பாஜக. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலே தமிழகத்துக்கு எதிராக பச்சை துரோகம்... படுபாதகங்கள்.. ஒன்றா இரண்டா... எத்தனை எத்தனை துரோகங்கள்? ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய பாஜக மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்றது. ஆண்டுகள் உருண்டோடின... துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும் கூட காவிரி மேல…
-
- 0 replies
- 674 views
-
-
உண்மையில் எதனை யாரை ரத்து செய்ய வேண்டும்...? : தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள்! சென்னை ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து நண்பர் அன்பழகன் தன் முகநூலில் இவ்வாறாக ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தேர்தலை நேர்மையாக நடத்த முடியவில்லை என்றால் கலைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தைத்தான்” என்று. அவரது கருத்து கொஞ்சம் அதட்டலாக, கடுமையானதாக இருந்தாலும்...இன்னும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் பலரின் எண்ண ஓட்டம் இதுதான். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு... கிர் காட்டில் வசிக்கும் ஒரே ஒரு வாக்காளரையும் வாக்களிக்க வைக்க மெனக்கெடும் தேர்தல் ஆணையம் என பெருமை பிதற்றிக்கொள்ளும் அதேவேளையில், அந்த அமைப்பால் ஒரு சிற…
-
- 1 reply
- 431 views
-
-
அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவு! - ஐ.டி-க்கு அல்வா கொடுக்க அதிரடி #VikatanExclusvie தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது ஆடிட்டர்மூலம் வருமான வரித்துறையினருக்கு அல்வா கொடுக்கும் வேலையில் மும்முரமாக சிலர் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இதனால், வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்திவிட்டு, அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதுபோல, ஓ.…
-
- 0 replies
- 471 views
-
-
வருமான வரித்துறை அலுவலகத்தில் அடுத்தடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜர்! சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவ…
-
- 0 replies
- 364 views
-
-
முதல்வர்,5அமைச்சர்களிடம் விசாரணை நடத்த... ரூ.89 கோடிக்கான மூலாதாரம் அறிய வரித்துறை மும்முரம் சென்னை, ஆர்.கே.நகரில், தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், 89 கோடி ரூபாய்க்கான மூலாதாரம் அறிய, வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களிடம் விசாரிக்க, சம்மன் அனுப்பப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தினகரன், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, பணத்த…
-
- 0 replies
- 196 views
-
-
சிறை சந்திப்பும் டாஸ்மாக் உத்தரவும்! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை 31 நாட்களில் 28 முறை பார்வையாளர்கள் சந்தித்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சசிகலாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் தவிர, அவரைச் சந்தித்த ஒரே அந்நிய நபர், மகுன்டா சீனிவாசலு ரெட்டி. யார் இவர்... எதற்காக சசிகலாவைச் சந்திக்க வேண்டும்... என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல் அதிர வைத்தது. சசிகலாவை இவர் சந்தித்ததற்கும், டாஸ்மாக் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது! சீனிவாசலு ரெட்டி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆந்திராவின் ஓங்கோல் தொகுதியின் எம்.பி-யாக இருந்திருக்கிறார். 2014-ம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பி…
-
- 0 replies
- 524 views
-
-
நீட் நுழைவு தேர்வை உடனே தடை செய்ய வேண்டும்
-
- 0 replies
- 212 views
-
-
சென்னை அண்ணா சாலையில் உருவான திடீர் பள்ளம்: மாநகர பேருந்து, கார் கவிழ்ந்தது சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென உருவான பள்ளத்தில் பேருந்தும், காரும் சிக்கி கவிழ்ந்ததில் சிலர் காயமடைந்தனர். சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக சாலையில் திடீரென பள்ளம் ஏற்படுவதும், அதில் இருந்து சிமெண்டு கலவை மற்றும் ரசாயன கலவை வெளியேறுவதும் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணா சாலையில் சர்ச் பார்க் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து ரசாயன …
-
- 6 replies
- 1.9k views
-
-
டைம்ஸ் நவ் தொலைகாட்சிக்கு மணிரத்னம் அளித்துள்ள முழு பேட்டியின், மூன்று நிமிட வீடியோ “முக.ஸ்டாலின் குறித்து மணிரத்னம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் முதல் அரசியல் பேட்டி என்று பெயரிட்டு பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மைல் கல்களில் இந்தி எழுதப்பட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த கேள்விக்கு “அப்படி நடைபெறும்தான். சிறு குழுக்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துவது நடைபெறக்கூடும்தான். ஆனால், நாம் அனைவரும் வலிமையுடன் அதனை எதிர்க்க வேண்டும். இந்த சிறுகுழுக்களுக்கு பயந்துகொண்டு, நம்முடைய ஓட்டுக்குள் நாம் சுருங்கிவிடக்கூடாது. நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களது கருத்துக்கள் நியாயமானவையாக இருக்கிறது என்றால், உங்களது உரிமை…
-
- 0 replies
- 275 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : தலைகுனிய வைக்கும் பண விநியோகம் சென்னை ஆர்.கே.நகர் (ராதா கிருஷ்ணன் நகர்) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. இதனையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. தொகுதியைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளும், சுயேச்சை உறுப்பினர்களும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். அவர் காலமானதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே எதிர்வரும் 12 ஆம் திகதி புதனன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 15 ஆம் த…
-
- 1 reply
- 459 views
-
-
ஆர்.கே.நகரில் அ.தி.மு.க செயலாளருக்கு அரிவாள் வெட்டு! ஆர்.கே நகரில் 47-வது வட்டத்தில் இன்று பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஒ.பி.எஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனனை அதரித்து அந்த பகுதி கிளைச் செயலாளர் நித்யானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, கும்பலாக வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து, அவர் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிற கட்சியினர் சிதறி ஓடினார்கள். தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் ராமர் மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பின்னர், நித்யானந்தத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நித்யானந்தத்ததை வெட்டிய…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழ் உணர்வாளர் சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார் சிவன் பக்தரும் தமிழ் உணர்வாளருமான சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவாசகம், தேவாரம் பாடல்களை தமிழில் பாடவேண்டும் என தொடர்ந்து போராடி வந்த இவர், 2008 ல் உயரநீதிமன்ற தீர்ப்பை பெற்று மேளதாளங்கள் முழங்க தமிழில் தேவாரம் பாடினார். 2008 மார்ச் 2 -ஆம் தேதி தில்லை நடராஜர் கோயிலில் தமிழ் ஒலித்தது. தள்ளாத வயதிலும்,கண் பார்வை மங்கிய முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பலத்தில் தேவாரம் பாடினார். தில்லை தீட்சிதர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிய போராட்டவீரர் ஆறுமுகசாமி. சிதம்பரம் கோயிலை அரசாங்கமே நடத்த வேண்டும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து குரல…
-
- 0 replies
- 248 views
-
-
முந்தய அடுத்து சென்னை, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, தினகரன் கோஷ்டியினர் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணத்தை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள னர். இதன் மூலம், தேர்தலுக்காக எவ்வளவு பணம், யாரால் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடம், வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சி அதிகாரத்தில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில், தினகரன் அணியினர் உள்ளனர். அதனால், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. பணம்…
-
- 2 replies
- 361 views
-
-
மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி: டெல்லியில் பரபரப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் மூன்றுபேர் இன்று பிற்பகல் மரத்தின்மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லி: வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்ட…
-
- 18 replies
- 2.5k views
-
-
தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு.. லயோலா கருத்து கணிப்பு!! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என லயோலா முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பு ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு என்று கருத்து கணிப்பு நடத்தியது. தற்போதுள்ள அரசியல் சூழலில் தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி இருக்கிறதாம். இந்த கருத்து கணிப்பு நடத்திய லயோலா முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், செய்தியாளர்கள் சந்திப்பில் த…
-
- 0 replies
- 633 views
-
-
மிஸ்டர் கழுகு ‘வருமான வரி ரெய்டு தகவல்களைச் சேகரிப்பதில் பிஸியாக இருக்கிறேன். செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறேன்’ எனத் திரையில் கழுகாரின் மெசேஜ் ஒளிர்ந்தது. அடுத்தடுத்த நிமிடங்களில் வரிசையாகக் கொட்டின தகவல்கள்... ஆர்.கே. நகர் தொகுதியில், 2015 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தேர்தல் வேலைக்காக வந்த கட்சியினர் முகாமிட்ட கல்யாண மண்டபங்கள்தான், இப்போது டி.டி.வி.தினகரன் தரப்பின் தேர்தல் முகாம்களாக உள்ளன. இப்படி, 13 கல்யாண மண்டபங்கள் செயல்படுகின்றன. ஒரு மண்டபத்தில் 500 பேர் வரை உள்ளனர். இவர்களுக்கு தினமும் கல்யாண மண்டபங்களிலேயே பிரியாணி தயாரிக்கப்படுகிறது. இதற்காக வேலூர், ஆம்பூர் போன்ற ஊர்களில் இருந்து …
-
- 0 replies
- 1.2k views
-