தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
சசிகலாவுக்கு பக்கத்து அறை 'சயனைடு' மல்லிகா, வேறு சிறைக்கு ஏன் மாற்றப்பட்டார்? சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கொலையாளியும் அடைக்கப்பட்டிருந்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல் நாள் சசிகலா அடைக்கப்பட்டபோது, அடுத்த அறையில் சயனைடு மல்லிகா இருந்தார். சயனைடு கலந்த தண்ணீரைக் கொடுத்து பெண்களைக் கொலை செய்து நகைகளை அபேஸ் செய்வது மல்லிகாவின் ஸ்டைல். இதனால் மல்லிகா என்ற பெயருடன் 'சயனைடு' ஒட்டிக் கொண்டது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை 6 பெண்களை 'சயனைடு' மல்லிகா கொன்றுள்ளா…
-
- 1 reply
- 788 views
-
-
சந்தி சிரித்த சட்டசபை : 18 கேள்விகள் !
-
- 0 replies
- 398 views
-
-
நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள் நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் அவரது போட்டோ வுடன் விமர்சனம் வந்துள்ளது. செங்கோட்டையன் படத்தின் மேல், 'கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'செங்கோட்டையன், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின், வேலைக் காரனுக்கு ஆதரவாக ஓட்டளித்த தால், தொகுதி மக்களின் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோ…
-
- 0 replies
- 445 views
-
-
ராஜாவின் பதிலடியால் கிடுகிடுத்த கோர்ட் '2ஜி' வழக்கல், நீதிபதியின் சரமாரியான கேள்விகளால், திணறிய, சி.பி.ஐ., வழக்கறிஞர், ''அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வெற்றி பெறட்டும்,'' என, கூறியதும்,''ஆவணங்களையும், சட்டத் தையும் நம்புகிறேன்; அதிர்ஷ்டத்தை அல்ல,'' என, தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ராஜா பதிலடி தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர் பாக, சி.பி.ஐ., தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பிலும், வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், டில்லி பாட்டியாலா கோர்ட்டில், இறுதிகட்டமாக, சுருக்கமான வாத பிரதிவாதங் கள், துவங்கியுள்ளன. நேற்று நடந்த வ…
-
- 0 replies
- 496 views
-
-
தி.மு.க போராட்டத்தில் முதல்வர் பங்கேற்பு தி.மு.க சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். பிப்ரவரி 18--ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனைக் கண்டித்து, தி.மு.க சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களும், தி.மு.க தலைவர்களும் மாநிலம் முழுவதும் போராட…
-
- 4 replies
- 2.5k views
-
-
சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற …
-
- 0 replies
- 316 views
-
-
சேகர் ரெட்டி... எடப்பாடி... ஊழல் டீலிங்! - ‘அறப்போர்’ அதிரடி! சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனைப் பெற்ற சூழலில், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார், எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்ட சூழலில், அவர்மீது அதிரடி ஊழல் புகார் ஒன்று பரபரப்பாக வலம் வரத் தொடங்கியுள்ளது. கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து ராவுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றி தகவல் வெளியானது. அதோடு, சேகர் ரெட்டிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருந்த தொடர்பு உள்ளிட்ட விவகாரங்…
-
- 0 replies
- 925 views
-
-
ஜெ. வைத்த துளசி மாடம்... சுற்றிவந்த சசிகலா... டி.வி பார்க்கும் இளவரசி... மிரட்டும் சுதாகரன்! பரப்பன அக்ரஹாரா ஜெயில் வாழ்க்கை தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான …
-
- 0 replies
- 860 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு: வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க ஸ்டாலின் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்திருந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இம்மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஸ்டாலின் தன் மனுவில், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவைத்தலைவரின் அறிவிப்பு சட்ட விரோதமானது; நம்பிக்கை தீர்மானத்தின் மீதான அவைத்தலைவரின் முடிவு செல்லாது. ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி ஆகியோர் …
-
- 0 replies
- 237 views
-
-
கூவத்தூர் கும்மாளம்! விதிமீறிய போலீஸ்... வதைக்கப்பட்ட மாணவர்கள்... மலையாகக் குவிந்த மதுபாட்டில்கள்... ஜல்லிக்கட்டுக் காக பல லட்சம் பேர் திரண்ட மெரினா கடற்கரையில் சேர்ந்த குப்பையில், ஒரே ஒரு காலி மதுபாட்டில்கூட இல்லை. ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக’ தங்கியிருந்த கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸில், மூட்டை மூட்டையாக காலி மது பாட்டில்களை குப்பை களிலிருந்து அகற்றினார்கள். கூவத்தூரில் இத்தனை நாட்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தமிழக அரசு, மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டது. பூட்டியக் கதவுகளுக்குப் பின்னால், அடியாட்கள் கடுங்காவல் இருந்த காம்பவுண்ட் சுவர்களுக்குப் பின்னால் என, அங்கு நடந்த சமாச்சாரங்கள் ஒவ்வொன்றாக வ…
-
- 0 replies
- 638 views
-
-
தமிழக ஆளுநரின் முடிவு சரியா? சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது! தமிழகத்தில், அதிமுகவில் உருவான பிளவின் விளைவாக பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஆட்சி அமைக்கும் உரிமை கோரியபோது பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். ‘முன்னதாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்ட பன்னீர்செல்வத்துக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும். இரண்டு பேருக்குமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்கிற யோசனைகள் அவற்றில் முக்கியமானவை. ஆனா…
-
- 0 replies
- 329 views
-
-
இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு கமல் | கோப்பு படம்: எல்.சீனிவாசன் தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக,…
-
- 0 replies
- 355 views
-
-
Share this video : spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, அறிக் ஜனாதிபதியிடம் சட்டசபை நிகழ்வுகள் அறிக்கை …
-
- 0 replies
- 263 views
-
-
பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவதை அனுமதிக்க முடியாது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா திட்டவட்டம் பி.வி. ஆச்சார்யா | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அங்கிருந்து தமிழக சிறைக்கு மாற்றுவதை அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர். …
-
- 0 replies
- 364 views
-
-
மிஸ்டர் கழுகு: செத்தது ஜனநாயகம்... இது பச்சைப் படுகொலை! கழுகார் வந்ததும், இந்த இதழ் ஜூ.வி அட்டையை எடுத்துப் பார்த்தார். புருவத்தை உயர்த்தினார். ‘‘கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களை இதைவிட சரியாக எப்படிச் சொல்ல முடியும்? சமீப நாட்களில் மத்திய அரசும், பி.ஜே.பி தலைமையும், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், சபாநாயகரும், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் இணைந்து நடத்தியவற்றை என்னவென்று சொல்வது?” என்ற கேள்வியுடன் நம்மை நோக்கி நிமிர்ந்தவர், ‘‘திரைமறைவுக் காட்சிகளை மட்டும் சொல்கிறேன்’’ என ஆரம்பித்தார். ‘‘ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுக் கத்தினாலும் அவருக்கு 11 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் செல்வாக்கு இல்லை…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் எப்படி இருக்கிறது? #VikatanExclusive ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் வேதா நிலையத்தில், இரவில் மயான அமைதி நிலவுகிறது. பகலில் மட்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை போயஸ் கார்டன் என்றதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 81, வேதா நிலையம் நினைவுக்கு வரும். ஏனெனில் அந்தளவுக்கு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஜெயலலிதா, வீட்டிலிருந்து தலைமை செயலகம் அல்லது வெளியூர் செல்ல புறப்பட்டால், அந்தப் பகுதியில் காக்கிகள் அணிவகுத்து நிறுத்தப்படுவர். ஜெயலலிதாவின் இசட் பிளஸ் பாதுகாப்போடு செல்லும் கான்வாயில், அவரது காரைப் பார்த்த…
-
- 0 replies
- 385 views
-
-
சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து, திருச்சியில்... ஸ்டாலின், தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது.சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. திருச்சியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் குண்டு கட்டாக தூக்கி வெள…
-
- 1 reply
- 285 views
-
-
சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு! ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள் பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் அமைச்சர்களும், அதிமுக மகளிர் அணியினரும் சென்னை திரும்பினர். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, சசிகலா உள்பட மூன்று பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மூன்று பேரையும் விடுதலை செய்தார். இந்தத் தீ…
-
- 1 reply
- 499 views
-
-
ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?
-
- 4 replies
- 580 views
-
-
எதிர்ப்பால் வீடுகளில் முடங்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சேலம்:சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள், சொந்த ஊர் திரும்பிய போதும், மக்களிடம் இருந்து வரும் மிரட்டல்களால், வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கடந்த மூன்று வாரங்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், நேற்று தங்களது தொகுதிகளுக்கு திரும்பினர்.சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் இருந்து, நேற்று காலை, ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவே, எம்.எல்.ஏ.,க் கள் வீடு, அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், அம்மாபேட்டை அரசு பள்…
-
- 0 replies
- 515 views
-
-
மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் : தமிழகம் முழுவதும் குவியுது புகார் தமிழகம் முழுவதும், 'அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை' என, போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன. வீரமணி எங்கே? வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் கே.கே.மணி, தன் ஆதரவாளர்களுடன், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதில், '6ம் தேதி முதல், எங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான வீரமணியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை; அவரை கண்டுபிடித்து தர …
-
- 1 reply
- 423 views
-
-
ரூ.10 கோடி செலுத்தாவிட்டால் சசிகலாவுக்கு மேலும் 13 மாத சிறை பெங்களூரு:பெங்களூரு சிறையில், நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வரும், அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலா, அவருக்கு விதிக்கப்பட்ட, 10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்தா விட்டால், மேலும், 13 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தகவல் கிடைத்துள்ளது. வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக் கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும், 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ரூ.10 கோடி அபராதம்: இதையட…
-
- 0 replies
- 363 views
-
-
சமூக வலைத்தளங்களில் என்னை கலாய்க்க வேண்டாம் -வைகோ சமூக வலைத்தளங்களில் தன்னை கலாய்ப்பதற்கு பதிலாக, ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் சுமேஷ் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ, அண்ணாவால் உருவாக்கப்பட்ட அறிவு இயக்கமான திமுக, தற்போது அழிவு பாதைக்கு சென்று கொண்டு இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். திமுக தற்போது ஆக்கப்பூர்வமான செயல்களை செய்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த தொகுதிகளுக்குச்…
-
- 0 replies
- 342 views
-
-
எதிர்ப்பைச் சமாளிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பிரியாணி பிளான்! -கலகலத்த நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தி உள்ளார். அப்போது தீபாவின் ஆதரவாளருக்கு எப்படி பிரியாணி கொடுக்கலாம் என்று நிர்வாகிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளது. சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி இருந்த சசிகலா அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதியில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. தொகுதிக்குச் சென்ற சசிகலா அணி எம்.எல்.ஏ.களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் …
-
- 0 replies
- 297 views
-
-
‘சசிகலாவுக்கு திகார் சிறைதான் சரியான சாய்ஸ்!’ - கர்நாடக அரசை நெருக்கும் அமைப்புகள் #VikatanExclusive கர்நாடக சிறையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. 'பாதுகாப்பு கருதி இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தால், அவருக்கு திகார் சிறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்' என ஊழல் எதிர்ப்பு அமைப்புகள், கர்நாடக உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகே, முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்ற…
-
- 2 replies
- 648 views
-