Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வியாழன் கோளை விட... பெரிய நட்சத்திர கிரகத்தை, கண்டுப்பிடித்த இந்திய விஞ்ஞானிகள்! வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுப்பிடித்துள்ளதாக ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகம் 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகம் வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரிய கோளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேலும் இதன் தரை தளம் மிக அதிக வெப்பம் கொண்டாதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை இந்த ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினரும் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannew…

  2. அமெரிக்கா பயணமாகிறார்... மோடி! ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் குவாட் கூட்டமைப்பில் பேசும் அவர், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மற்றும் தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளார். அதேநேரம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசுவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1240545

  3. 28 JUL, 2023 | 12:51 PM புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து வெளியிடுகிறது. அதன்படி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வர…

  4. 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாக மோடி அறிவிப்பு! கொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சவால்கள் இருந்தபோதும் இந்த நோய்தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. 100 கோடி தடுப்பூசி தவணைகளை இந்தியா செலுத்தியுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது எங்கள் குடிமக்களுக்கு மட்டுமன்றி உலகின் பிற பகுதி…

  5. உத்தரப்பிரதேசத்தில் ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் என்கவுண்ட்டர்கள்! உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில், 10 ஆயிரம் முறை பொலிஸார், எதிர்பாரா தாக்குதல் அல்லது என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. கொடிய ரவுடிகள் உள்பட 178 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிட்டதட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் குற்றவாளிகள், மாபியா கும்பல்களை சகித்துக் கொள்வதிலும் அரசு கருணை காட்டாது என்று யோகி ஆதித்யநாத திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். https://atha…

  6. இந்தியாவிற்கு... உதவ தயாராக இருப்பதாக, அமெரிக்கா அறிவிப்பு! சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் மேற்படி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் தடையற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், இந்திய இராணுவத்தினர் ரஷ்யாவின் பூர்வீகமான ஆயுதக் கொள்முதலை சார்ந்து இருக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா உதவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவ…

  7. கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு! வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபா நிவாரணமாக வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ள…

  8. சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் 17, கேரளா 17, மகாராஷ்டிரா 19, உத்தரபிரதேசம் 11, டெல்லி 6, ஆந்திரா 4, கர்நாடகா 4, லடாக் 3, காஷ்மீர் 1, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையா…

    • 0 replies
    • 126 views
  9. மாலைத்தீவில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்ள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாலைத்தீவில் இந்திய இராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலைத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது. இராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மாலைத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10 ஆம் திகதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்த…

  10. பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்! பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது. ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ…

  11. படக்குறிப்பு, எய்ம்ஸில் நடந்த அரிய அறுவை சிகிச்சையில், மோஹித்தின் உடலில் கூடுதலாக இருந்த இரண்டு கால்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர் கட்டுரை தகவல் எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். நான் மோகித்தை முதல் முறையாகப் பார்த்தபோது அவரது சட்டையின் முன்பகுதியைத் தனது கைகளால் பிடித்துக்கொண்டிருந்தார். இதைத்தான் அவர் கடந்த 17 ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார். இது அவருக்குப் பழகியும் போனது. ஆனால் அவர் இனி அதைச் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அவ்வாறு அவர் செய்வதற்குக் காரணமாக இருந்த, அவரின் உடலில் கூடுதலாக இருந்த இரண்டு கால்கள் கடந்த மாதம் அறுவை சிகிச…

  12. 22 JUL, 2024 | 10:45 PM மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது விபத்து. இதில் மாலுமி ஒருவரை காணவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பின்னரும் அதனை நிமிர்த்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாலுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த மற்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை தீ விப…

  13. இலங்கை – இந்தியா விமான சேவையை... குறைக்க, எயார் இந்தியா நடவடிக்கை! இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது வாரத்திற்கு 16 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை 13 ஆவதாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274707

  14. பெண்கள் கழிவறையைில் ரகசிய கெமரா – 300ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் கசிவு.witter இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. திரும்பும் திசைகளில் எல்லாம் சிறுமிகள் தொடக்கம் வயோதிப பெண்கள் வரை அனைவரும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல்…

  15. அசாமில் ரயிலுடன் மோதி எட்டு யானைகள் பலி! 20 Dec, 2025 | 10:29 AM இந்தியாவின் அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதியில், ரயிலுடன் யானைக் கூட்டம் மோதியதில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு குட்டி யானை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து சனிக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது, ரயிலின் இயந்திரங்கள் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டதுடன், பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் தடத்தில் யானைகளின் உடல் பகுதிகள் சிதறி கிடந்ததாலும், ரயில…

  16. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு! இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவுள்ளார். அதன்படி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்னிலையில் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக …

  17. இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை! இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் வரவேற்றுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புக…

  18. ரஷ்ய எண்ணெய் கொள்வனவு; இந்தியாவுக்கு ட்ரம்ப் சூசகமாக மீண்டும் எச்சரிக்கை! ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (04) ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அவர்கள் ( இந்தியா) எங்களுக்கு உதவவில்லை என்றால் வரியை நாங்கள் அதிகரிப்போம். இந்தியா எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்தால், விரைவில் அவர்கள் மீது வரியை உயர்த்…

  19. ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பத்தாண்டுக்குள், இந்திய மன்னர்களின் ராணுவத் திறன் விரைவாக அதிகரித்து வருவதையும், பிளாசி போன்ற வெற்றியை மீண்டும் பெறுவது கடினம் என்பதையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் உணர்ந்தனர். ஐரோப்பியர்களின் ராணுவத் தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக இந்திய சுதேச சமஸ்தானங்கள் வர வெறும் பத்தாண்டுககள் மட்டுமே ஆனது. 1760-களின் நடுப்பகுதிக்குள், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ராணுவ பலத்தின் இடைவெளி …

  20. பட மூலாதாரம்,RONNY SEN/BBC படக்குறிப்பு, புச்சுவுக்கு ஒன்பது வயதாகும் போது, அவர் பந்து என்று நினைத்த ஒரு பொருள், பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்தியது. கட்டுரை தகவல் எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ், நுபுர் சோனர் மற்றும் தனுஸ்ரீ பாண்டே பதவி, பிபிசி உலக சேவை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறைந்தது 565 குழந்தைகள் நாட்டு வெடிகுண்டுகளால் காயமடைந்துள்ளனர், உடல் உறுப்புகளை இழந்துள்ளனர், பார்வை இழந்துள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்று பிபிசி உலக சேவை புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய பொருட்கள் என்ன, அவை மேற்கு வங்கத்தில், அரசியல் வன்முறையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? ஏன் பல வங்க குழந்த…

  21. இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தரு…

  22. பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோரை... தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்! பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு வருகை தந்தவுடன் ஒருமுறையும் எட்டாவது நாளில் ஒரு தடவையும் பி.சி.ஆர் பரிசோதனையை …

  23. கனமழை: வட கர்நாடகாவிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி, ஹாவேரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதேவேளை கிருஷ்ணா, வேதகங்கா, துத்கங்கா உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவற்றின் கரையோரத்திலுள்ள கர்ஜகி, யாதஹள்ளி, கும்பாரஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை கத்ரா பகுதியில் 50 வீடுகள் தொடர் மழையால் இடிந்து விழுந்துள்ளள. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கு…

  24. நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு Published By: Digital Desk 3 28 Dec, 2025 | 02:13 PM நீர்மூழ்கி கப்பலில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம் செய்துள்ளார். கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 03 மாநிலங்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 04 நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தனது பயணத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) கடலில் பயணம் செய்துள்ளார். கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வாக்‌ஷீரில் இந்திய ஜனாதிபதியும், முப்படைகளின் உச்ச தலைவருமான திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டுள்ளனர்.…

  25. எல்லைப் பகுதியில்... சீனாவை, எச்சரிக்கும் வகையில் இந்தியா போர் பயிற்சி! சீனாவை எச்சரிக்கும் விதமாக லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய விமானப்படையினர் போர் ஒத்திகை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற இந்த போர் ஒத்திகை கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ஒத்திகையில் சி130 ஜே சூப்பர் மற்றும் ஏஎன் 32 ரக விமானங்கள் பங்கேற்றுள்ளன. மேலும் பாராட்ரூப்பர்ஸ் எனப்படும் விமானத்தில் இருந்து குதிக்கும் பாராசூட் வீரர்கள், எதிரிகளின் இலக்குகளை தாக்குவதுபோல் பயிற்சி எடுத்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1247833

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.