யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
94 topics in this forum
-
செவ்வந்தியில் செவ்வந்தி --------------------------------------- எங்கள் வீட்டு செவ்வந்தியில் செவ்வந்திப் பூ ஒன்று வந்துள்ளது என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் 'செவ்வந்தியில் செவ்வந்திப் பூவா..........' என்று ஆச்சரியப்பட்ட அடுத்தவரிடம் இது பரமரகசியம் எங்கும் பகிரக்கூடாது என்று சத்தியமும் கேட்கப்பட்டது அடுத்த அடுத்த நாளும் இருவரும் செவ்வந்தியும் பூவும் என்று இரகசியமாக பேசிக் கொண்டனர் மூன்றாவது நாளில் மூன்றாவது நபர் ஒருவர் செவ்வந்தி செவ்வந்தி என்றார் இவரைப் பார்த்து இப்படியே பலருக்கும் இது தெரிந்திருந்தது இவருக்கு தெரிய வர அவருடன் உறவு முறிந்தது பூ காய்ந்து செடி காய்ந்து மண்ணோடு மண்ணாக கலந்து போனது எப்போதும் போலவே முறிந்த உறவும் முறிந்தே கிடக்கின்றது ஒரு ரகசியம் என…
-
-
- 3 replies
- 269 views
-
-
"பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] "பணம் படுத்தும் பாடு" "பகட்டு வாழ்வில் பற்றுக் கொண்டு படித்த அறிவை மூடி வைத்து பண்பு மறந்த செயல்கள் மூலம் பணம் படுத்தும் பாடு தெரியுமா?" "நாணயம் கொடுத்தாலே ஆண்டவனுக்கும் பூசை நாணும் கோதையும் பாய் விரிப்பாள்! நாக்கு கூட பொய் உரைக்கும் நாடகமும் ஆடும் பதவிகள் சேர்க்கவே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. ஹைக்கூ கவிதை / "தைப்பொங்கல்” "தைத்திங்கள் பிறந்தால் எமக்கு வழி காட்டும் பொங்கலே புத்தாண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................…
-
- 0 replies
- 265 views
-
-
"நீயில்லா வாழ்வு" நீயில்லா வாழ்வு பாலைவனம் ஆகுமே நீரற்ற உலகு வெறிச்சோடி இருக்குமே நீதியிழந்த நாடு சமாதானம் காணாதே நீலக் கருங்குயிலே என்னைத் தழுவாயோ? காதல் இல்லையேல் குடும்பம் அழியுமே காமம் ஒழிந்தால் பரம்பரை மறையுமே காதணி அணிந்த அழகு வஞ்சியே காலம் தாழ்த்தாமல் அருகில் வருவாயோ? உன்னைக் காணாத கண்ணும் விழியல்ல உள்ளம் சேராத இல்லமும் வீடல்ல உவகை கொண்டு உயிர்கள் நிலைக்க உண்மை உணர்ந்து அன்பு பொழியாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 259 views
-
-
“காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” நன்முல்லை, ஒரு கடற்கரையோரம் இருந்த, பழமையான மரத்தடியில் அமர்ந்திருந்தாள். மெல்லிய குளிர் காற்றில் அவளின் சேலை அசைந்தது. அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூக்களின் நறுமணம் உப்புக் காற்றில் கலந்திருந்தது. பழைய மகிழ்வான நினைவுகளால் நிரம்பிய அவளது கண்கள், தனக்கு நன்றாகத் தெரிந்த, ஆனால் பல ஆண்டுகளாகப் பார்த்திராத, ஒரு உருவத்தைத் தேடுவது போல, அடிவானத்தை நோக்கியது. அவளுடைய மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களைக் கண்ட கடல், அவள் இதயத்தில் உள்ள வலியை மறந்து, தனது நித்திய தாளத்தைத் தொடர்ந்தது. பனிமலை போல் பரந்திருக்கும் வெண்மணலின் முடிவில், பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து, அவள் காலை முத்தமிட்டது. அந்த அழகே தனிதான்! ஆனால் அவள் அதை விர…
-
-
- 2 replies
- 258 views
-
-
"தனிக் குடித்தனம்" இலங்கையின் யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பரபரப்பான தெருக்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு மத்தியில், அகநகை மற்றும் இளங்கவி என்ற புதுமணத் தம்பதிகள் வாழ்ந்தனர். புதிதாகத் திருமணமாகி, உற்சாகத்தில் மூழ்கிய அவர்கள், தங்கள் பெற்றோரின் வீடுகளின் ஆறுதலான அரவணைப்பிலிருந்து விலகி, தங்களுக்கென சொந்தக் கூடு அல்லது தனிக் குடித்தனம், "இனித்திட இனித்திடத்தான் நகைமுத்தன் எழில் அறம் நடத்துதற்கு தனியில்லம் கொண்டான்" என்று பாரதிதாசனார் கூறியது போல, கட்டுவதற்கான பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அகநகையின் பெற்றோர் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, " நீ ஆரம்பத்தில் இருந்தே செல்லமாக, சுதந்திரமாக வாழ்ந்துவிட்டாய், காலையில் நேரத்துடன் கூட எழும்பமாட்டாய், அவசரமாக அரைகுறை…
-
- 0 replies
- 256 views
-
-
"இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" பரபரப்பான திருகோணமலை நகரில், இளங்கவி என்ற சாதாரண மனிதர் வாழ்ந்து வந்தார். தனது வாழ்க்கையின் முதன்மையான ஆண்டுகளை பொறியியலாளராக அர்ப்பணித்த இளங்கவி, பிற்பகுதியில் சூழ்நிலை காரணமாக ஒரு நிறுவனத்தின் கிளையில் மேலாளராக பணியாற்றி இன்று ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பிறகு, ஒரு பொழுது போக்காக தமிழர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மையமாக வைத்து எழுதும் ஆர்வத்தை அவர் ஏற்படுத்தினார். அவரது கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறு கதைகள் வலைத்தளங்களில் ஓரளவு ஆழமாக எதிரொலித்தது, அவருக்கு ஒரு அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றது. ஒரு முறை சிரிப்பும் உரையாடல்களும் அவரின் வீட்டின் காற்றில் நிறைந்திருக்க, இளங்கவி ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து தன் சொந்…
-
-
- 2 replies
- 255 views
-
-
"மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" "மன்னிப்பாயா என்னை" மன்னிப்பாயா என்னை அழகு சுந்தரியே அன்பைப் புரியாத பாவி நானே இன்பம் ஒன்றுக்கே பெண்ணென நினைத்தேனே துன்பம் தந்து கண்ணீரை வரவழைத்தேனே! பெண்ணில் பிறந்தவன் அவளையே தேடுகிறான் கண்ணை நம்பி எங்கேயோ அலைகிறான் மண்ணில் மனிதம் காக்கத் தவறி கண்ணியம் தாண்டியவனைப் பொறுத்தால் என்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. தாய்மை [கைக்கூ] தாய்மை என்பது தாயாக இருக்கும் நிலையோ தாலியின் பாக்கியமோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. "தாத்தா" [தன்முன…
-
-
- 4 replies
- 248 views
-
-
கிறிக்கட் போட்டிக்கு போக வெளிக்கிடுகிறேன் மோட்டார் சைக்கிள் கொஞ்சம் தாமதப்படுத்த நீங்கள் முந்திச்செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என நண்பர்களிடம் சொல்லிவிட அவர்கள் மைதானத்திற்கு செல்கிறார்கள். நானும் சைக்கிளை சரிபண்ணி எடுத்து அந்த ஊருக்கு செல்ல சைக்கிள் மீண்டும் பழுதடைகிறது என்னடா திரும்ப சைக்கிள் பழுதாகிறதே! என இறங்கி சைக்கிளை தள்ளி ஒரு திருகாணி இருந்தால் சரி பண்ணி விடலாம் என நினைக்க. ஒரு பெரிய பங்களா போல வீடு எதிரே இருக்க அங்கே ஒரு பெண்மணி ஒரு பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டு நிற்கிறார் அவவோ என்ன ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என எனைக்கேட்க ஓம் என நான் சொல்ல உள்ள வந்து நிறைய சாவிகள் இருக்கிறது எடுத்துப்போங்கள் என சொல்கிறார். நானும் உள்ளே சென்று சாவியை எடுக்கும் போது அங்கே ச…
-
-
- 2 replies
- 238 views
-
-
"எங்களுக்கும் காலம் வரும்" இன்றைக்கு குறைந்தது ஏழு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் வட மாகாணத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கின்ற நிலையும் உருவாகியது. அந்தவகையில், வவுனியா குளம், நொச்சிக்குளம், பத்தினியார் மகிழங்குளம், தாண்டிக்குளம், வைரவபுளியங்குளம், அரசமுறிப்புகுளம், பாவற்குளம், பேராறு நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு குளங்களை அண்டி வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருத்திதான் கனகம்மா. அவள் கடந்த காலப் போரில், விசா…
-
- 0 replies
- 227 views
-
-
"உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" "உன்னோடு வாழ்வது உவப்பானதே" "உன்னோடு வாழ்வது உவப்பானதே என்றாலும் உயிரோடு போராடும் நோயாளி இவனால் உரிமையோடு இன்பம் சுவைத்திட முடியுமா? உண்மையோடு வாழா வாழ்வும் வாழ்வா?" "மண்ணோடு மண்ணாய் போகும் உடலுக்கு பெண்ணோடு இணையும் ஆசை எதற்கு? பண்போடு சொல்கிறேன் விலகிச் செல்லாயோ? விண்ணோடு பறக்க நேரம் குறித்தாச்சே!" "என்னோடு நீயும் காலத்தை வீணாக்காமல் துன்பத்தின் சுமையை தோளில் சுமக்காமல் அன்புடன் வாழ்த்துகிறேன் விடையும் தருகிறேன்! இன்பத்தின் சுவையை அனுபவித்து மகிழ்வாயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "புது விடியல்" "புது விடியல…
-
- 1 reply
- 225 views
-
-
"வாடகை வீடு..!" இலங்கையின் துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில் கவி என்ற இளைஞன் இருந்தான். அவன் உயரமானவன், வசீகரிக்கும் புன்னகை மற்றும் சாகச மனப்பான்மையுடன் மக்களை சிரமமின்றி தன்னிடம் ஈர்த்தான். கவி, தனது உயர் படிப்பைத் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடரும் போது தங்குவதற்கு ஒரு இடத்தைத் கண்டியில் தேடி, அமைதியான சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான வீட்டைக் கண்டான். உரிமையாளர் திரு ராஜன் அவனை அன்புடன் வரவேற்று வாடகைக்கு தனது வீட்டில் ஒரு அறை கொடுத்தார். திருவாளர் ராஜன் கண்டியில் பெரும் வர்த்தகராகும். அவர் நுவரெலியாவில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்த பெற்றோருக்கு ஒரே மகனாக இரு சகோதரிகளுடன் பிறந்து, லைன் அறை குடிசையில் [வரிசை வீடு ஒன்றில்] தனது வாழ்வை ஆரம்பித்தவர். …
-
- 0 replies
- 224 views
-
-
"மௌனம் சம்மதமா?" இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பகலவன் என்ற இளைஞன், கொழும்பின் மையப் பகுதியில், வணிக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில், மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரிந்தான். அவனது நாட்கள் கூட்டங்கள், அறிமுகப்படுத்துகை [விளக்கக் காட்சிகள் / presentations] மற்றும் நகர வாழ்க்கையின் சலசலப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிந்தன. அப்படியான மும்முரமான ஒரு வேலையான நாளின் போதுதான், சமீபத்தில் அந்த நிறுவனத்தில் இணைந்து இருந்த பயிற்சி ஊழியரான மட்டக்களப்பைச் சேர்ந்த ஆழினி என்ற இளம் பெண் சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு அவனுக்கு வந்தது. அவன் அந்த மின்னஞ்சல் [ஈ-மெயிலில்] குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் பெரிதாக கவனிக்காமல…
-
- 0 replies
- 220 views
-
-
"இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "இதுவும் கடந்து போகட்டும்" "இதுவும் கடந்து போகட்டும் என்கிறாய் இதயம் உடைந்து சிதறுவது தெரியாதோ? இதமாகப் பழகி ஆசையைத் தூண்டி இன்பக் கடலில் என்னை மூழ்கடித்து இப்படிச் சொல்வதின் நோக்கம் என்னவோ?" "காதல் உணர்வை வியாபாரம் செய்கிறாய் காத்து கிடந்தவனைத் தட்டிக் கழிக்கிறாயே? காலம் போக்க ஆடவன் நாடுபவளே காமம் ஊட்டி விளையாடும் ஆடவளே காரணம் தேடி கண்ணீர் கொட்டுதே?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "மாற்றங்கள் வேண்டி வாக்குரிமை செலுத்தியவனே செலுத்திய உனக்கு வேறுபாடு தெரிகிறதா? தெரிவதை உண்மையில்…
-
- 0 replies
- 218 views
-
-
"நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" "நெஞ்சோடு நிழலாடுதே" "இதமான கனிவில் அன்பு ஊற்றி இளமை துள்ளும் காலம் காட்டி இடையின் வண்ணத்தில் மயக்கம் தந்து இதய வீட்டில் என்னை நிறுத்தி இனிமை கொட்டும் காதல் விதைத்தவளே!" "வஞ்சகம் இல்லா இனிமைப் பேச்சும் கொஞ்சும் சலங்கையின் மணி ஓசையும் நஞ்சு கலக்கா காமப் பார்வையும் பிஞ்சு உள்ளத்தின் உண்மையைக் கட்டிட நெஞ்சோடு நிழலாடுதே உன் அழகு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு வளரட்டும் மனிதம் தளைக்கட்டும் அன்பு மலரட்டும…
-
- 0 replies
- 213 views
-
-
"கந்துவட்டி" தமிழ்நாட்டின் பசுமையான பண்டைய சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கிய பூம்புகார் கிராமத்தில் ராஜன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக அறியப்பட்டனர். இருப்பினும், அவர்கள் கந்துவட்டியின் பிடியில் சிக்கியபோது விதி ஒரு கொடூரமான திருப்பத்தை எடுத்தது. பொதிய மலை, இமய மலை போலத் தனிப்பெருமை வாய்ந்தது பூம்புகார். பொதிய மலையும், இமய மலையும் நடுங்குவது இல்லை. அதுப்போல, புகாரில் மிகுந்த செல்வமும், பகையின்மையும் சேர்ந்து விளங்குவதால், இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் புகாரை விட்டு எங்கும் செல்வதில்லை. இதனால் பூம்புகார், நாகலோகம் போலப் போகத்திலும், தேவலோகம் போலப் புகழிலும் சிறந்து விளங்கியது என்று சிலப்பதி…
-
- 0 replies
- 211 views
-
-
"கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" "கலாச்சாரம் தமிழா தலைசுத்துது எனக்கு கலப்பு இல்லா ஆதி மொழியே கலை மூன்றும் தந்த பெருமையே!" "பகலோனாக உலகிற்கு ஒளி ஏற்றிவவனே பகுத்தறிவு சித்தர்களின் பிறப்பு இடமே பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதலே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "துடிக்கும் இதயங்கள்" "துடிக்கும் இதயங்கள் தேடுது அன்பு அடிக்கும் கைகள் அணைக்குது பாசம் இடிக்கும் வார்த்தைகள் வாட்டுது நெஞ்சம் குடிக்கும் மதுபானம் சிதைக்குது உடலை கெடுக்கும் செயல்கள் குறைக்குது நற்பெயரை!" "உள்ளம் மலர்ந்தால் மகிழ்வு பிறக்கும்…
-
- 1 reply
- 209 views
-
-
"செருக்கு” [தன்முனைக் கவிதை] "செருக்கு அற்றவர் வாழ்வு என்றும் பெருமிதமே! கர்வம் கொண்டவர் இருப்பு ஒரு கேள்விக்குறியே!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 207 views
-
-
"மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" "மனமே கலங்காதே!" "மனமே கலங்காதே உறுதியாக இருந்திடு தினமும் நடப்பதை விழிப்புடன் கவனித்திடு! ஈனப் பிறவிகளென யாரும் இல்லை இனம் சார்ந்த நடவடிக்கைகள் ஒழியட்டும்!" "குணம் நாடிக் குற்றமும் ஆராய்ந்து மணம் வீசும் செயல்கள் தொடரட்டும்! எண்ணம் எல்லாம் மனிதம் வளர்க்க பண்பாடு நிலைத்து மனது மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "இயற்கையின் இன்ப அழகில்" "இயற்கையின் இன்ப அழகில் மலர்ந்தவளே மயக்கத்தின் பிடியில் உலகை மறந்தவளே தயக்கம் கொண்டு வெட்கப் படுபவளே அயலவர் உள்ளங்…
-
-
- 2 replies
- 207 views
-
-
கூடுவேம் என்பது அவா / குறள்1310 ஊடல் காட்டுவது அழகின் வடிவமே ஆடல் கலையின் ஒரு முத்திரையே வாட விடாமல் அருகில் இருந்தே மடவரல் பெண்ணைத் தேற்றினால் என்ன? கூடல் இல்லா இன்பம் உண்டா பாடல் தராத இசை இருக்கா தேட வைத்து கண்ணீர் வரவழைக்காமல் மடந்தை நெஞ்சுடன் இணைந்தால் என்ன? தேடல் கொண்டு உள்ளம் அறிந்து உடல் வனப்பை பார்த்து மகிழ்ந்து அடக்கம் தூவும் நாணம் அகற்றி ஆடவள் மனதில் குடிகொண்டு வாழ்ந்தாலென்ன? கூடுவேம் என்பது அவாவின் வெளிப்பாடு நாடும் ஆசைக்கும் வடிகால் அதுவே கூடு போட்டு அதைச் சிறைவைக்காமல் கேடுவிளைக்கும் பொய்க் கோபம் அழிந்தாலென்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 200 views
-
-
"அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" "அன்பு வலிமையானது" "அன்பு வலிமையானது மனிதம் வளர்ப்பது துன்பம் வேதனையானது மனதை வாட்டுவது இன்பம் மகிழ்வானது சேர்ந்து அனுபவித்தால் புன்னகை கொடுப்பது இனிய வரவேற்பே நன்றாய் இவையை அறிந்தால் சொர்க்கமே!" "பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதல் கண்கள் போல் காக்கவேண்டிய ஒன்றே மாண்போடு வாழ்தல் மனிதனின் தேவை விண்ணில் ஒளிரும் மீன்கள் போல வண்ண அழகில் மானிடம் மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "ஓடுகிற தண்ணியிலே" "ஓடுகிற தண்ணியிலே வாடிநிற்கும் கொக்கே தேடுகிற என்னழகியை கண்டதுண்டோ சொல்லாயோ? பாடுகிற குயிலே கிளையிலே இருக்கிறியே கூடுகிற ஆசையை த…
-
-
- 2 replies
- 200 views
-
-
ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" "ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே ஈரத்தாவணியிலே இடுப்புக் காட்டி வதைப்பவளே பரந்த பண்பொழுகும் செம்பவள திருமேனியே! எந்தை பூவையே தேன்சிந்தும் வஞ்சியே தீந்தை விழியால் மயக்கும் சுந்தரியே சிந்தை சிவக்க மகிழ்கிறேன் உன்னழகில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................... "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] "வாசிப்பு உங்கள் அறிவை வளர்க்கட்டும் வளர்க்கும் அறிவு பண்பு கொடுக்கட்டும் கொடுக்கும் பண்பு மனிதம் நேசிக்கட்டும் நேசிக்கும் மனிதர்கள் தர்மம் காக்கட்டும் காக்கும் தலைவர்கள் நீத…
-
- 0 replies
- 199 views
-
-
"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை" செயற்கைக் கால்களைப் பெற வரிசையில் நின்ற ஒரு இளம் தாய், கால் கருகிய தன் சேயை இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ’ என்று கைகளை நீட்டிய படி அவள் அங்கு கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' என்ற தீபச்செல்வனின் கவலைக்கு ஒரு அத்தாட்சியாகக், கிளிநொச்சியின…
-
- 0 replies
- 195 views
-
-
"தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] "தைமகளே வருக பொங்கலோ பொங்கல் பொங்கல் தமிழர் புத்தாண்டு ஆகட்டும் ஆகும் எல்லாம் பெருமை பேசட்டும் பேசும் பேச்சில் பண்பாடு தெரியட்டுமே! தெரியும் உண்மைகள் தையை வாழ்த்தட்டும் வாழ்த்தும் திருநாளே பொங்கல் விழாவாகட்டும் விழாவெடுத்து மங்கையர் கொண்டாடும் தையே தைத்திங்கள் பிறந்தால் வழி பிறக்குமே! பிறக்கும் தையில் திருமணம் வேண்டி வேண்டிய வரத்திற்கு முன்பனி நீராடி நீராடி தவம் முடித்து வணங்கினாளே வணங்கி அழைத்தாள், தைமகளே வருக!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 194 views
-
-
"வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "வாழ்வில் வசந்தம்" "வாழ்வில் வசந்தம் கட்டாயம் வரும் தாழ்வில் ஒரு உயர்வு வந்தால்! தோல்வியில் வெற்றி மனதுக்கு அமைதி சொல்லில் அடங்கா மகிழ்ச்சி அது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல தையல் அருகிலே தாளாத காதலுல தைத்த வண்ணத்துல தாமரை அழகில தைவரல் சுகத்துல தாலாட்டி மகிழ்ந்ததேனோ?" "கற்றாழை முள்ளு குத்தியதோ பாதத்தில் கண்கள் இரண்டும் கலங்கியதோ வேதனையில் கஞ்சி குடிக்கையிலே கதறல் கேட…
-
-
- 2 replies
- 190 views
-
-
"தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" வண்ணக் கோலத்தில் அழகு சொல்லி கண்கள் இரண்டாலும் காதல் பேசி மண்ணின் வாசனையை ஆடையில் காட்டி ஆண்மையை இயக்கும் பெண்மையை வாழ்த்துகிறேன்! மாலைக் கதிரவன் அடிவானம் தொட சேலை ஒப்பனையில் அடிமனதைக் கிளறி சோலை வனப்பில் ஆசை தெளித்து அலையாய் என்னை முட்டி மோதுகிறாயே! கன்னத்தில் கைவைத்து சோர்ந்து இருந்தவனுக்கு புன்னகை பொழிந்து அருகில் நெருங்கியிருந்து அன்பான வார்த்தைகளால் ஊக்கம் கொடுத்து என் தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 188 views
-