யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 18 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2017) 19 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் பல மேடு பள்ளங்களைக் கடந்து தனித்துவமான தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களைத் தாங்கும் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் உள்ளது. எமக்கு என்றென்றும் பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் இணையம் தனக்கெனதோர் தனித்துவத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கவேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்…
-
- 0 replies
- 4.8k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! யாழ் இணையம் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கும், சிந்தனைமுறைகளுக்கும் ஏற்ப தன்னை காலத்துக்குக் காலம் புதுப்பித்துக்கொண்டும், பல சவால்களையும் தாண்டியும், தமிழிலே கருத்தாடல்கள் புரியும் தனித்துவமான இணையத்தளமாக விளங்குகின்றது. தமிழ்த் தேசியத்துக்கும், தாயக மக்களுக்கும் தொடர்ந்தும் துணைநிற்பதோடு, அவைசார்ந்த ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும், சுயகெளரவத்துடனும் வாழ தனிநாடே தீர்வாகும் என்ற கொள்கையுடன் மக்களின் விடுதலைக்காகப் போராடி விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் தனது வீரவணக்கத்தை த…
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம், காலத்துக்கு காலம் யாழின் வடிவங்களிலும், பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்று இப்பொழுதும் யாழில் உள்ள பகுதிகளில் (Sections / Categories) சில மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளோம். சில புதிய பிரிவுகளை ஏற்படுத்துதல், சில புதிய உப பிரிவுகளை உருவாக்குதல், இருக்கும் பகுதிகள் சிலவற்றை ஒன்றாக்குதல் மற்றும் வேறாக்குதல் போன்ற மாற்றங்கள் இவற்றில் அடங்கும். இத்தகையக மாற்றங்கள் தொடர்பான பொது அறிவித்தலுக்காக இந்த திரி பயன்படுத்தப்படும். இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக கருத்துகளை வழங்க விரும்புகின்றவர்கள் மற்றும் சந்தேகங்களை கேட்க விரும்புகின்றவர்கள் நாற்சந்தியில் அதற்கான ஒரு பொதுவான திரி திறக்கலாம். எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய முடியாமல் ப…
-
- 1 reply
- 2.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் வெள்ளிக் கிழமை மாலை (21-Feb-2014) யாழ் இணையம் தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் சேர்வரில் (Server) இருந்து புதிய சேர்வரிற்கு மாற்றப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு யாழ் இணையத்தில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதை அறியத்தருகின்றோம். சேர்வர் மாற்றத்தின் பின் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற் கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். வழக்கம் போன்று உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இம் மாற்றத்தினை செய்ய தீர்மானித்துள்ளோம். அன்புடன், யாழ் இணையம்
-
- 0 replies
- 3.5k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு யாழ் இணையம் எனும் கருத்துக்களத்தை, கடந்த 24 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்து கட்டியமைத்த சிற்பி மோகன் அவர்கள் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளார். யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு எமது நன்றிகள் என்றென்றும் இருக்கும். கடந்த மாதத்தின் இறுதியுடன் யாழ் கருத்துக்களத்தை முற்றாக மூடி வாசிப்புக்கு மாத்திரம் திறந்து வைத்திருக்க முடிவு எடு…
-
- 0 replies
- 1.2k views
-