உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
குர்துக்களுக்கு எதிராக திரும்புகிறதா இராக் இராணுவம்? இராக் பிரதமர் மறுப்புக்கு மத்தியில் அணிதிரளும் இராணுவம்! குவியும் குர்துப்படைகள்!! பாகிஸ்தானில் இந்துப்பெரும்பான்மை கிராமம்! அன்றாட நிகழ்வாகும் இந்து முஸ்லிம் கூட்டுப்பிரார்த்தனைகள்!! மற்றும் எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியுமா? ஐஸ்லாந்தின் வானத்தில் பறந்து விடைதேடும் விஞ்ஞானிகள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 203 views
-
-
பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்! மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார். ஃபிரோஷா பேகத்தின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் ஃபாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்துகொண்ட…
-
- 0 replies
- 285 views
-
-
ஆசிய கண்டத்தில் அதிக பட்டினியாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா.. இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இது தெரிய வந்துள்ளது. இந்தநாடுகளில் பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக பட்டினி நிலை தோன்றியுள்ளது. நேற்றையதினம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
கட்டலோனியா தனிநாடு குறித்து 5 நாட்களில் முடிவெடுக்கக் கெடு ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகுதியான கட்டலோனியா, தனிநாடு கோரிக்கை தொடர்பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாட்கள் அவகாசம் அளிப்பதாக ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. ஸ்பெய்ன் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்துவந்தது. ஸ்பெய்ன் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெய்ன் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடு குறித்து ஸ்பெய்னின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப…
-
- 6 replies
- 665 views
-
-
எங்கள் ஆயுதங்களால் உலக நாடுகளுக்கு முன்னால் அமெரிக்கா தலைகுனியும் நிலை ஏற்படும்: வடகொரியா நியாமாக செயல்படவில்லை என்றால் எங்கள் ஆயுத பலத்தால் உலக நாடுகளின் முன்னால் தலைகுனியும் நிலை ஏற்படும் என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ, ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்முடன் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியவுக்கு எதிரான கருத்துகள், பொருளாதார தடைகள் விதித்து போருக்கான நெருப்பை ட்ரம்ப்தான் உருவாக்கினார். எங்கள் அதிபர் கிம் ஜோங் முன்னரே எச்சரித்திருந்தார் அமெரிக…
-
- 0 replies
- 390 views
-
-
ஐ.நா-வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா! ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. 'யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம்' என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு உள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா, 'யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பு, அமெரிக்காவுக்கும் இழ…
-
- 1 reply
- 342 views
-
-
கெலிஃபோரினியா காட்டுத்தீயின் வேகத்தைக்கூட்டும் சூறைக்காற்று! இதுவரை இருபத்தி மூன்றுபேர் பலி!! நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணவில்லை!!! ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவிப்பு!!!! உலக அளவில் வேகமாக குறையும் கழுதைகள் எண்ணிக்கை! மரபு மருத்துவத்துக்காக இவை காணாமலே போகுமா? மற்றும் அமிலவீச்சு பாதிப்பைக்கடந்த ஆடை அலங்காரபோட்டி! முகம் சிதைந்தாலும் உறுதிகுலையாமல் உலகை எதிர்கொள்ளும் வங்கதேசப்பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 474 views
-
-
தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கார் அபேஸ். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் காரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் நீல நிற வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில் இன்று தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை. அக்கம்பக்கங்களில் தேடியம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் காரை திருடியவர்கள் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் …
-
- 1 reply
- 421 views
-
-
பாலஸ்தீனம்: ஹமாஸ் - ஃபதா இடையே சமரச ஒப்பந்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலஸ்தீனத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களுக்குள் நீடிக்கும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், தங்கள் எதிராளி அமைப்பான ஃபதாவுடன் சமரச ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபாலஸ்தீனத்தில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட…
-
- 0 replies
- 271 views
-
-
அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா வசமுள்ள அணு ஆயுதங்களின் அளவை பத்து மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புவதாக செய்தி வெளியிட்ட என்.பி.சி. தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்த…
-
- 0 replies
- 341 views
-
-
நிர்மலா சீதாராமனின் நட்பை வரவேற்கிறோம்: சீன அரசு ஊடகம் கருத்து YouTube அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் நாதுலா எல்லைக்கு சென்றார். அப்போது அவரும் சீன ராணுவ வீரர்களும் பரஸ்பரம் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். - PTI இந்தியாவின் சிக்கிம் மாநிலம், சீனாவின் திபெத் பகுதி சந்திப்பான நாதுலா எல்லைப் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சென்றார். அப்போது அங்கு முகாமிட்டுள்ள சீன ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். நிர்மலாவும் சீன அதிகாரிகளும் பரஸ்பரம் (நமஸ்தே) கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது. குறிப்பாக சீனாவில் லட்சக்கணக்கானோர் வீடியோவை விர…
-
- 0 replies
- 412 views
-
-
“போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது” “வடகொரியாவுடன் போருக்கான திரியை அமெரிக்கா பற்றவைத்துவிட்டது. இதற்கான நட்ட ஈட்டை அந்நாடு கடும் தீச்சுவாலைகளால் செலுத்தும்” என்று வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை விடாமல் அதிகரித்து வருகிறது. அண்மைய வாரங்களில் வடகொரியா ஏழு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்ததும், ஹைட்ரஜன் குண்டு ஒன்றைப் பரிசோதனை செய்ததும் அமெரிக்காவைக் கடுமையாகச் சீண்டியுள்ளது. இதையடுத்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ஊடகம் ஒன்றுக்குக்…
-
- 0 replies
- 370 views
-
-
அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம் அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார். மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்த சமந்தா ரட்ணம், நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ளார். மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/25657
-
- 0 replies
- 463 views
-
-
ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு பயணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஅர்சா அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோ பிபிசி-யின் தென் கிழக்கு ஆசியாவின் செய்தியாளர் ஜொனாதான் ஹெட், மியான்மரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மியான்மர் ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்த `அர்சா` அமைப்பைச் சேர்ந்தவர்களையும், வங்கதேசத்தில்…
-
- 0 replies
- 407 views
-
-
கெடலோனியா சுதந்திர நாடா? இல்லையா? விளக்கம் கோரும் ஸ்பெய்ன் பிரதமர்! விவாதிக்கக் கூடும் அவர் அமைச்சரவை!!! செனகலை பாதிக்கும் துருக்கி அரசியல் மோதல்! வெளிநாட்டில் வாழும் துருக்கிய மதகுரு மீதான தடையால் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கும் மாணவர்கள்!! மற்றும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக்கின் அளவு ஆண்டுக்கு எண்பது லட்சம் டன்னாக அதிகரிப்பு! ஸ்வீடனின் பாட்டில்களை திருப்பித்தரும் திட்டம் அதை தடுக்க உதவுமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 229 views
-
-
அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளுவோமா? ராஜீய செயலர் டில்லர்சனுக்கு டிரம்ப் சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீய செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சொன்னதாகக் கூறப்படுவதைப் பற்றி கேட்டபோது, அவருக்கும் எனக்கும் ஐ.க்யூ. டெஸ்ட் எனப்படும் அறிவுச் சோதனை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு டிரம்ப் சவால் விடுத்துள்ளார். படத்தின் காப…
-
- 0 replies
- 216 views
-
-
வட கொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் போர் பயிற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP Image captionஅமெரிக்க பசிஃபிக் பிராந்தியமான குவாம் பகுதியிலிருந்து அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து தென் கொரிய வான்வெளியில் நுழைந்தன கொரிய தீபகற்பத்தின் மீது முக்கியத்துவம் வாய்ந்த இரு குண்டுவீச்சு விமானங்களை செல…
-
- 0 replies
- 482 views
-
-
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் EU தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் – டொனால்ட் டஸ்க் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2017 டிசம்பரிற்குள் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஐரோப்பிய ஓன்றியம் தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என ஐரோப்பிய பேரவையின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் உடன்பாடு எதுவும் ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது குறித்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா உடன்பாடு ஏற்படாத நிலையில் வெளியேறிச்செல்வதற்கான சூழலை எதிர்கொள்ள தயாராகிவருவதாக அறிக…
-
- 0 replies
- 398 views
-
-
டெல்லியை போல, மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு தடை... கவலையில் வியாபாரிகள். மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து,டெல்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.கடந்த ஆண்டு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பட்டாசு விற்க உச்சநீதிமன்றம் த…
-
- 0 replies
- 394 views
-
-
கேட்டலோனியா தனி நாடு பிரகடனம் இடை நிறுத்தம்: கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கேட்டலோனியா ஸ்பெனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவதை இடைநிறுத்தம் செய்வதாக கேட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் அந்தப் பிராந்தியத்தின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். ஸ்பெயின் அரசுடன் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தும் நோக்கில், சில வாரங்…
-
- 2 replies
- 359 views
-
-
அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP PHOTO / KCNA VIA KNS Image captionகிம் ஜாங் - உன் வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-ஐ கொல்ல வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 420 views
-
-
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் எழுப்பும் எல்லைவேலி பயங்கரவாதத்தை தடுக்குமா? பிபிசியின் நேரடி படப்பிடிப்பு ; சேற்றில் பிறந்த சிசு! மியன்மாரிலிருந்து தப்பிவந்த ரொஹிஞ்சா தாய்க்கு,, அகதி முகாமின் கோணிப்பை படுக்கையில் பிறந்த குழந்தையின் கதை மற்றும் ஆட்களை மட்டுமல்ல, அவர்களின் பின்னணி அனைத்தையும் கண்டறியும் புதிய கைரேகை தொழில்நுட்பம்! குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!! இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 207 views
-
-
மியன்மாருக்கு போப் ஃபிரான்சிஸ் விஜயம்! நவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராணுவ உயரதிகாரிகளையும் அந்நாட்டு மக்கள் தலைவர் ஆங் சான் சூ கீயையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது. மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், அந்தப் பிரச்சினை குறித்தே மேற்படி முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. நவம்பர் ஆறாம் திகதி முதல் டிசம்பர் இரண்டாம் திகதி வரையான இந்த விஜயத்தின்போது போப் ஃபிரான்சிஸ் பங்களாதேஷுக்கும் விஜயம் செய்யவுள்ளார். மியன்மா…
-
- 0 replies
- 423 views
-
-
பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்த…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு பகிர்க படத்தின் காப்புரிமைMUSEO DELLA FOLLIA Image captionநவம்பர் 19 வரை நடக்கும் கண்காட்சியில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது. இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார். நாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை கிழித்தார் என்று, கொரியாரே டெல்லா சேரா என்னும் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. "பைத்தியக்காரத்தனத்திற்கான அருங்காட்சியகம்" என்று பெரியரிப்பட்ட கண்காட்சி நிகழ்ச்சிக்காக, கர்டா ஏரிக்கரையின் அருகில் உள…
-
- 0 replies
- 709 views
-