Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் - ரோல்ஸ் ராய்ஸ் விருப்பம் பிரிட்டனின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக தனது ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடிவு செய்தால், நாற்பத்தைந்து மில்லியன் டாலர் எஞ்சின் சோதனை தொழிற்சாலைக்கான தனது திட்டமிட்ட முதலீடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளது. சிவில் விமான எஞ்சின் தயாரிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இந்த நிறுவனம், பிரிட்டனின் ஏற்றுமதி மதிப்பில் இரண்டு சதவீதத்தை தனதாக கொண்டுள்ளது. http://www.bbc.com/tamil/global/2016/06/1606…

  2. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டால், 45 பில்லியன் டாலர் அளவுக்கு வரி உயர்வுடன் கூடிய அவரசகால நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ன் எச்சரித்துள்ளார்.அதே நேரத்தில், பெருமளவு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கும் என்று ஆஸ்பர்ன் தெரிவித்துள்ளார்ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக, அடுத்த வாரம் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், வெளியேறுவதற்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்கு, நமக்கு நாமே கட்டாய சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் போன்றது என்றும், பொருளாதார…

  3. இன்றைய நிகழ்ச்சியில்.. *ஒர்லாண்டோ படுகொலைகளையொட்டி ஒபாமாவுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம்! எதிர்காலத்தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பதிலும் கருத்து மோதல்!! *உடல் பருமனானவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு! பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் கொழுப்பும், சர்க்கரையும் உப்பும் அதிகமாகவும் இருப்பதாக எச்சரிக்கை!! *ஆழ்கடலின் அரிய பொக்கிஷத்திற்குள் செல்ல பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு! கடல் மடியில் இறுதித்துயில் கொண்டிருக்கும் Titanicஇன் சகோதரிக் கப்பலின் அரிய காட்சிகள்!! ஆகியவை இடம்பெறுகின்றன.

  4. அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுச் சிறுவன் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டில், அந்நாட்டைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் மீது, பயங்கரவாதக் குற்றச்சாட்டுச் சமத்தப்பட்டுள்ளது. அவனது செயற்பாடுகள் தொடர்பாக, சமூக ஊடக இணைத்தளப் பகிர்வுகளூடாக அறிந்துகொண்ட பொலிஸார், சிட்னியிலுள்ள அவனது வீட்டில் வைத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கைது செய்தனர். 'பயங்கரவாத நடவடிக்கைக்குத் தயார்படுத்தினார் அல்லது திட்டமிட்டார் என்ற அடிப்படையில், அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பாரிய குற்றத்தைப் புரியும் நோக்குடன் தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பயன்…

  5. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக 'ஊடுருவல்' ரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல்களை ஆராய தங்களின் கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்னஞ்சல் மற்றும் இணையத்தில் நடந்த உரையாடல்கள் திருப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹிலரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் கணினி வலைஅமைப்புகள் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல் நடவடிக்கை குழுக்கள் ஆகியவைகளும் இந்த ரஷிய குழுக்களின் இலக…

  6. ஓர்லாண்டோ தாக்குதலில் ஈடுபட்ட ஒமர் மடீனின் மனையிடம் எஃபிஐ விசாரணை ஓர்லாண்டோவில் ஒரு பாலுறவுக்காரர்களுக்கான கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி, 49 பேரை கொன்றதாக கூறப்படும் ஒமர் மடீனின் மனையிடம் எஃபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஒமர் மடீனின் மனைவி நூர், அவரின் திட்டங்கள் குறித்து அறிந்திருக்கலாம் என்றும், அவர் அறிந்த தகவல்களை அவர் வெளிப்படுத்தாமல் இருந்ததற்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின், என்பிசி நியூஸ் என்ற தொலைக்காட்சி, அவர் இந்த தாக்குதலை நடத்த வேண்டாம் என தனது கணவரை இணங்க வைக்க முயன்றார் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த தாக்குதல் சம்பவத்தில…

  7. தீவிரவாதி ஒமர் மடீனைவிட என் மீதே ஒபாமாவுக்கு கோபம் அதிகம்: டிரம்ப் சர்ச்சைப் பேச்சு டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். ஆர்லாண்டோ தீவிரவாதி மீதான கோபத்தைவிட ஒபாமாவுக்கு தன் மீதே அதிக கோபம் இருப்பதாக அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் ப்ளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஐ.எஸ். ஆதரவாளர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த டொனால்ட் டிரம்ப், "நமக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சிக்கல் இருக்கிறது" எனக் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவ…

  8. ஐஎஸ் தலைவர் பாக்தாதி பலி சிரியாவில் அமெரிக்கா தலைமை யிலான கூட்டு ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அமெரிக்க தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டார். அபு பக்கிர் அல் பாக்தாதி, ரமலான் மாதத்தின் 5-வது நாளில் கொல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இச் செய்தி குறித்து கூட்டு ராணுவப் படை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இராக் செய்தி தொலைக்காட்சி அல் சுமாரியா மற்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் இத்தகவலை உறுதி செய்துள்ளன. http://tamil.thehindu.com/world/ஐஎஸ்-தலைவர்-பாக்தாதி-பலி/art…

  9. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக 'த சன்' செய்தித்தாள் பரிந்துரை அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு பிரிட்டிஷ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பிரிட்டனில் அதிகமாக விற்கப்படும் 'த சன்' செய்தித்தாள் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வீணானது, அச்சுறுத்துவது, திறமையற்றது என்பது பரவலாக உறுதியாகி இருக்கிறது என்று செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிடுவது பிரிட்டனின் இறையாண்மையை மீண்டும் உறுதி செய்யவும், கலாசாரத்தை பாதுகாக்கவும் செய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்ட…

  10. இன்றைய நிகழ்ச்சியில்.. ஓர்லேண்டோவின் ஒமர் மதீன் நாற்பத்தி ஒன்பது பேரை சுட்டுக்கொல்லும் அளவுக்கு கொடூரமான கோபத்தின் பின்னிருந்த காரணம் என்ன? இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒருபாலுறவாளர்களுக்கான ஓர்லேண்டோ இரவு விடுதிக்கு பல முறை சென்றது ஏன்? பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதா என்று ஆராய்கிறது உலக சுகாதார நிறுவனம்; சிகா வைரஸ் பரவல் அச்சத்தால் இந்த மறுபரிசீலனை. ஆஸ்திரேலியாவில் நீடிக்கும் நவீன அடிமைத்தனம்; பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டு சம்பளமின்றி வேலைவாங்கப்பட்ட கிழக்கு ஆப்ரிக்கப்பெண்மணியின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.

  11. மலேசியாவின் 'இஸ்லாமிய' விமானத்துக்கு தடை மலேசியாவில், இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் முதல் விமான நிறுவனமான, ரயானி ஏர், விமானங்கள் விதிமுறைகளை மீறியதால் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்பு சோதனை விதிகள் மற்றும் நிர்வாகம் குறித்த கவலைகள் காரணமாக அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கூறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த விமான நிறுவனம், ஹலால் உணவை மட்டுமே பரிமாறியது. பயணிகளுக்கு மது தரப்படுவதில்லை. மேலும், விமானப் பணியாளர்கள் அடக்கமாக உடை உடுத்தியிருப்பார்கள். இரண்டு போயிங் 737-400 விமானங்களையும், எட்டு விமானிகளையும், 50 ஊழியர்களையும் வை…

  12. ஜெர்மனி: பத்தாண்டு அரசுக் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சி ஜெர்மானிய அரசின் பத்தாண்டு கடன்பத்திரங்களின் வட்டி விகிதம் முதல்முறையாக பூஜ்யத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்து இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியை தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் பலவீனம் ஏற்பட்டு வருவதை இது பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படுகின்ற ஜெர்மானிய அரசின் கடன்பத்திரத்தை வாங்க விரும்புவோர் யாராக இருந்தாலும், தங்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை இந்த வட்டி விகித வீழ்ச்சி காட்டுகிறது. ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட பிற நாடுகளில், இந்த மைல் கல்லுக்கு கீழ் வட்டி விகிதம் ஏற்க…

  13. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கவே பிரிட்டன் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் பிரிட்டனின் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கு பதிவாகும் வாக்காக அமையும் - ஜெரெமி கோர்பயின்.ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கும் வலிமையான காரியத்திற்கு அவர்கள் (தங்கள் கட்சியினர்) அனைவரும் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் புடை சூழ்ந்திருக்க லண்டனின் மத்திய பகுதியில் நடைபெற…

  14. சுட்டவர்கள் இறந்தார்களா என்பதை சோதித்த கொலையாளி அமெரிக்காவில் ஒரு பாலுறவுக்காரர்களுக்கான கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தன்னால் சுடப்பட்டவர்கள் இறந்து விட்டார்களா என்பதை உறுதிசெய்ய அவர்களிடம் எப்படி திரும்ப வந்தார் என்பதை விவரித்துள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்து, ஓர்லாண்டோ மருத்துவனையில் இருக்கும் ஏஞ்சல் கோலன், தான் காலில் மூன்று முறை சுடப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட 29 வயது ஒமர் மடீன் தனது தலையில் சுடுவதற்கு குறிவைத்ததாகவும் ஆனால் அந்த குண்டு குறி தவறியது என்றும், பின்னர் தான் இறந்தவர் …

  15. கொலைப் பட்டியலுடன் நடமாடிய பிரான்ஸ் கொலையாளி பிரான்சில் போலிஸ் தளபதி ஒருவரையும் அவரது துணைவியையும் அவர்களது வீட்டில் கொன்றவர், கொல்லப்பட இலக்கு வைத்திருந்த பிற நபர்கள் பட்டியலை வைத்திருந்தார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த இலக்குகளில் அடங்குவர் என்று பாரிஸ் அரச வழக்குரைஞர் பிரான்சுவா மொலின் தெரிவித்தார். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் கொண்ட அவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிட அஞ்சலி செலுத…

  16. பங்களாதேஷில் 8,559 பேர் கைது பங்களாதேஷில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பை சார்ந்த 119 பேர் உட்பட சந்தேகத்தின் பேரில் 8,559 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பங்களாதேஷில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற மரணங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாரிய தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தடை செய்யப்பட்ட அமைப்பானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அந்நாட்டிலுள்ள இந்து பூசகர்களை தாக்கிய சம்பவங்களில் தொடர்புப்பட்டவர்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதல் நடவடிக்கையின்…

  17. அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் தகுதி, இந்தியாவை விட தங்கள் நாட்டுக்கே அதிகமுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் "டான் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்த பேட்டி வருமாறு:என்எஸ்ஜியில் உறுப்பினராக விரும்பும் நாடுகளுக்கு, அந்த அமைப்பு சில விதிகளை நிர்ணயிக்கும்பட்சத்தில், அந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே அதிக தகுதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில், என்எஸ்ஜியில் பாகிஸ்தான் உறுப்பினராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்எஸ்ஜியில் உறுப்பினராவதற்கு இந்தியா விண்ணப்பித்த பிறகு, நாங்…

  18. இரவு விடுதி தாக்­கு­தலை அடிப்­ப­டை­வாத இஸ்­லாத்­துடன் தொடர்­பு­ப­டுத்த மறுத்த பராக் ஒபாமா பதவி விலக வேண்டும் ; டொனால்ட் டிரம்ப் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா ஒர்­லான்­டோவில் தன்­னி­னச்­சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்­கான இரவு விடு­தியில் இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தலை அடிப்­ப­டை­வாத இஸ்­லாத்­துடன் தொடர்­பு­ப­டுத்த தவ­றி­ய­மைக்­காக அவர் பதவி விலக வேண்டும் என குடி­ய­ரசுக் கட்­சியின் உத்­தேச ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்­துள்ளார். அத்­துடன் ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பாளர் ஹிலாரி கிளின்டன் ஜனா­தி­பதி பதவி நிலைக்­கான போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என அவர் தெரி­வித்தார். “எமது நாட்டை அடிப்­ப­டை­வாத இஸ்­ல…

  19. புளோரிடா இரவு விடுதி துப்பாக்கிதாரியின் தந்தை ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ஒர்லாண்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஓமர் மதீனின் (29 வயது) செத்திக் மதீன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் எனவும் அவருக்கு தலிபான் தீவிரவாதிகள் ஆதரவு வழங்கி வந்ததாகவும் தகவல் வெ ளியாகியுள்ளது. அத்துடன் செத்திக் மதீன் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க வாஷிங்டன் நகரிலுள்ள பாராளுமன்றம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்திற்கு விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் அவர் அமெரிக்க வெளிநாட்டு விவகாரம் தொடர்பான சபையின் தலைவர் எட் ரோய்ஸ் உள்ளடங்கலாக முக்க…

  20. பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றுமொரு கனேடிய பணயக்கைதி படுகொலை பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றுமொரு கனேடிய பணயக்கைதி படுகொலை தென் பிலிப்பைன்ஸில் அபு சேயப் தீவிரவாதிகளால் பிறிதொரு கனேடிய பணயக்கைதியை தலையைத் துண்டித்து நேற்று திங்கட்கிழமை கொன்றுள்ளதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்தது. ரொபேர்ட் ஹோல் என்ற மேற்படி பணயக்கைதியை விடதலை செய்வதற்கு தீவிரவாதிகளால் கோரப்பட்ட கப்பப்பணம் உரிய காலக்கெடுவுக்குள் வழங்கப்படாததையடுத்தே அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபு சேயப் தீவிரவாத குழுவின் பேச்சாளர்கள் உள்ளூர் ஊடகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கப்பப்பணம் செலுத்த வேண்டிய இறுதிக் காலக்கெடு திங்கட்கிழமை பிற்பகல்…

  21. அகதிக் குழந்தைகள் படும்பாடு அகதிகளுக்குப் புதுவாழ்வு தருவதில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சுவீடன் முன்மாதிரியாகத் திகழ்கிறது சொந்த நாட்டில் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் பெற்றோரோ, உறவினர்களோ இல்லாமல் தனியாகவே சுவீடன் நாட்டுக்கு அகதிகளாக வரும் 18 வயது நிரம்பாத குழந்தைகள் படும்பாடு கல்மனதையும் கரைய வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகின்றனர். 9 வயது முதல் 17 வயது வரையிலான 50 குழந்தைகளை ‘மனித உரிமைகள் கண்காணிப்பு’ அமைப்பினர், எந்தவித வற்புறுத்தலும் இன்றி பேட்டி கண்டபோது இந்த விவரங்கள் வெளிவந்தன. கடந்த ஆண்டில் மட்டும் தனியாக வந்த 35,000 குழந்தைகளை சுவீடன் ஏற்றுக்கொண்டு அவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் க…

  22. ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூடு சம்பவம்: உலகம் முழுவதும் அஞ்சலி (புகைப்படத் தொகுப்பு) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட பல்ஸ் கேளிக்கையகம் என்.ஒய்.பி.டி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆடையில் ஒமர் மடீன் கேளிக்கையகத்தை குண்டுகளால் துளைத்தெடுத்த ஒமர் மடீன் அமெரிக்காவில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் பெரு அணி வீரர்கள் அஞ்சலி டல்லாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக கூடியவர்கள் நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் அஞ்சலிக்காக கூடியவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற அஞ்சலி கூட்டம் http://w…

  23. ''ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது'': ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில காரணங்களுக்காக ஒமர் மடீன் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது என்றார் ட்ரம்ப். முன்னர், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், இதே போன்ற தாக்குதல்களை ந…

  24. தவறான நேரத்தில் தவறான முயற்சி: உணவு விடு­தியில் ஆயுத முனையில் கொள்­ளை­ய­டிக்கும் நட­வ­டிக்கை அங்கு உணவு உட்கொண்­டி­ருந்த 11 அதி­ரடிப் படை­யி­னரால் முறி­ய­டிப்பு பிரான்­ஸி­லுள்ள உணவு விடு­தி­யொன்றில் ஆயுத முனையில் கொள்­ளை­ய­டிப்­ப­தற்கு இரு நபர்கள் மேற்­கொண்ட முயற்சி அங்கு உணவு உட்­கொண்­டி­ருந்த சிப்­பாய்­களால் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. பிரான்ஸின் போச்­னகோன் நக­ரி­லுள்ள, மெக்­டொனால்ட்ஸ் உணவு விடு­தி­யொன்­றுக்குள் அண்­மையில் திடீ­ரென இருவர் ஷொட்கன் ரக துப்­பாக்­கி­க­ளுடன் புகுந்­தனர். அவ்­ வி­டு­தியின் பணப்­பெட்­டியை திறக்­கு­மாறு ஊழி­யர்­க­ளுக்கு உத்­த­ர­விட்ட அந் ­ந­பர்கள், அச்­சு­றுத்தும் வ…

  25. இன்றைய நிகழ்ச்சியில் ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் ஒன்றினைந்தது உலகம்; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா நெடுகவும் உலக அளவிலும் மலரஞ்சலிகளும் மவுன பிரார்த்தனைகளும் தொடர்கின்றன. அமெரிக்க இரவு விடுதிக்கு சென்ற துப்பாக்கிதாரி ஒமர் மடீன் அங்கே 49 பேரை சுட்டுக்கொன்றது ஏன்? தொடரும் காவல்துறையின் தீவிர புலனாய்வு. பாகிஸ்தானில் தனது அண்டை வீட்டுக் கிறிஸ்தவருக்காக தேவாலயம் கட்டும் முஸ்லிம்; சமாதானத்தை முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.