உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
அமெரிக்க கப்பலில் இருந்த மாலுமிகள், ஊழியர்கள் 35 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த "சீமென் கார்டு ஓகியா" என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இந்த கப்பலில் 10 மாலுமிகள், 25 வீரர்கள் இருந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, துப்பாக்கி தோட்டாக்களை அதிகமாக வைத்திருத்தல் (ஆயுத சட்டம்), சட்ட விரோதமாக டீசல் பரிமாற்றம் மற்றும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தைவிடவும் கூடுதலாக பயண நேரம் எடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில், கப்பல் கேப்டன் டட்னிக் வாலென்டின் உட்பட கப்பல் ஊழியர்கள் 35 பேர் (இக்கப்பலில் பணிப…
-
- 2 replies
- 490 views
-
-
உக்ரைன் நாட்டில் ‘த்ரில்’ அனுபவத்துக்காக ரெயில் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது ரெயில் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு வயது 41. காதலிக்கு வயது 30. சம்பவத்தின்போது இருவரும் மது போதையில் இருந்தனர். ரெயில் மோதியதில், காதலி இறந்து விட்டார். காதலனுக்கு இரண்டு கால்களும் துண்டாகி விட்டன. அவர் போலீசில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டதாக தெரிவித்தார். தன்னுடைய காதலியுடன் நண்பருடைய மதுவிருந்து ஒன்றில் கலந்துவிட்டு, திரும்பும் வழியில் தங்களுக்கு அடக்கமுடியாத செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டதாகவும், ஒரு த்ரில் அனுபவத்தை பெறுவதற்காக ரயில் தண்டவாளத்தில் செக்ஸ் உறவு வைத்ததாகவும், அந்த …
-
- 18 replies
- 1.5k views
-
-
மிலன்: விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர்களை வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத் தரகர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக், சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சப் புகாரின் பேரில் அவரை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அகஸ்ட்வெஸ்ட்லேன்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கியமான குற்றவாளி இந்த ஹாஸ்செக் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து லா ரிபப்ளிகா என்ற இத்தாலிய செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், விரைவில் ஹாஸ்செக் இத்தாலிக்குக் கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது. அனேகமாக அவர் அடுத்த வாரம் கொண்டு வரப்படலாம். ஹாஸ்செக்கை இத்தாலிக்கு விசாரணைக்காக கொண்டு செல்லலாம் என்று சுவிட்சர்லாந்து …
-
- 0 replies
- 504 views
-
-
தெலுங்கானாவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக 13 சீமாந்திரா எம்.பி.க்கள் கொடுத்த கடிதத்தை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்த நிலையில் மீண்டும் ராஜினாமா செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் எஸ்.பி.ஒய். ரெட்டி, ஹர்சகுமார், சாய் பிரதாப், ராஜகோபால், அனந்தவெங்கடராமி ரெட்டி, அருண்குமார், மாகுண்ட சீனிவாசலு ரெட்டி, சாம்பசிவ ராவ், சப்பம்ஹரி, பாப்பிராஜு கனுமுரு ஆகிய 10 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஜெகன்மோகன் ரெட்டி, ராஜ்மோகன் ரெட்டி இருவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்தவர்கள். கொகைல்ல நாராயணா என்பவர் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர்…
-
- 0 replies
- 452 views
-
-
கான்பூர்: மதச்சார்பின்மையின் பெயரால் நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துகிறது என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சாடியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது கோபத்தில் இருக்கின்றனர். தேர்தல்களின் போது பொய்யான உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. இதைத்தான் கடந்த 60 ஆண்டுகாலமாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்து வருகின்றன. இளவரசர் ராகுல் ஏழை மக்களின் மிக முக்கிய பிரச்சனை விலைவாசி உயர்வுதான். ஆனால் விலைவாசி உயர்வைப் பற்றி நாட்டு பிரதமர் ஒருபோதும் வாய்திறந்து பேசியதில்லை. சோன…
-
- 0 replies
- 402 views
-
-
தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு டீசல் வழங்கியதாக 3 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓஹியோ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 11ந் தேதி இரவு மடக்கிப் பிடித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இக்கப்பலில் 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் இருந்தன. ஆனால் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதைத் கப்பலில் இருந்த 35 பேரில் 33 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவர் பராமரிப்புப் பணிக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த கப்பலுக…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கலாச்சாரம், பொருளாதாரம், தந்திரோபாயம், பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வெளியுறவுக் கொள்கைகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் இந்திய மத்திய அசராங்கம் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நாட்டுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண சந்தர்ப்பம் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டமானது , சொந்த நாட்டுக்கான விடுதலைப் ப…
-
- 1 reply
- 365 views
-
-
ரூ.20 லட்சம் பண மெத்தையில் படுத்து தூங்கிய கம்யூனிஸ்ட் தலைவர். டிவியில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு. பொதுவாக கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் எளிமையாக காட்சி அளிப்பார்கள். அதற்கு மாறாக, திரிபுரா மாநிலத்தில், சமர் ஆச்சார்ஜி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ‘பண மெத்தை’யில் படுத்திருப்பது போன்று வெளியான டி.வி. காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகர்தலா மாநகராட்சியின் 3 வார்டுகளில் மலிவு விலை கழிவறை அமைக்கும் பணி ஒப்பந்தம் எடுத்திருந்த அவர் அதன் மூலம் ரூ.2½ கோடிக்கு மேல் லாபம் அடைந்தார். இந்த தகவலை அந்த டி.வி. நிகழ்ச்சியில் அவரே தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘‘பண மெத்தையில் படுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அதை நிறைவேற்றுவதற்காக வங்கியில் இர…
-
- 4 replies
- 774 views
-
-
சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமை நிராகரித்துள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10- நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் (2 ஆண்டுகள் பதவிக்காலம்) உள்ளன பாதுகாப்புக் கவுன்சிலின் இரட்டை நிலைப்பாடு காரணமாக அதனால் உலக அமைதிக்காக பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியே சவுதி அரேபியா அதன் உறுப்புரிமையை நிராகரித்துள்ளது. ஆனால், என்ன வகையான சீர்திருத்தங்கள் என்ற விபரங்களை அந்நாடு வெளியிடவில்லை.பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சவுதி அரசாங்கம் கோரியுள்ளது. சிரியா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்…
-
- 4 replies
- 582 views
-
-
முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடியின் மகளுக்கு ஜப்பான் நாட்டின் தூதர் பதவி. ஒபாமா ஒப்புதல் அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியின் மகள் கரோலின் கென்னடியை(55) ஜப்பான் நாட்டின் தூதராக ஜனாதிபதி ஒபாமா நியமித்தார். இதற்கு ஒப்புதல் கிடைப்பதில் சில மாதங்களாக சிக்கல் நீடித்தது. இந்நிலையில் செனட் சபை நேற்று முன்தினம் தீவிர ஆலோசனைக்கு பிறகு கரோலின் கென்னடி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் ஜப்பானுக்கு செல்லும் முதல் பெண் தூதர் இவர் ஆவார். கென்னடியின் மகள் தூதராக பணிபுரிய கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியே அமெரிக்க அரசு அனுமதி வழங்கிவிட்டது. ஆனால் செனட் சபையின் ஒப்புதல் கிடைக்க தாமதமானதால் அவர் பணிபுரிவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அமெரிக்காவின் …
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்காவில் தாய்ப்பால் வியாபாரம் படுஜோர். தடுத்து நிறுத்த சமூக ஆர்வல அமைப்புகள் வலியுறுத்தல். மனிதநேய அடிப்படையில் பலர் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் சிறுநீரகம், நீண்ட தலைமுடி (உரோமம்), தாய்ப்பால், கருமுட்டை ஆகியவை விற்பனை அமோகமாக நடக்கிறது. இணையதளம் மூலம் ஏராளமானோர் இவற்றை விலை பேசுகிறார்கள். கரு முட்டை விற்க ஆயிரக்கணக்கான பெண்கள் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களில் காத்துக்கிடக்கிறார்கள். இந்த வகையில் நீண்ட கூந்தல் சுமார் ரூ.60 ஆயிரத்திற்கும், ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் ரூ.300 என்று விலை போகிறது. தாய்ப்பாலை வாங்குவதற்கு மிக அதிக அளவில் மக்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிகிறது. தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் தாய்ப்பால் ஒரு நல்ல ந…
-
- 0 replies
- 542 views
-
-
சென்னை: வரும் நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்ற வேண்டும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் மூத்த பத்திரிகையாளர் அருண்ஷோரியின் நூல் வெளியீட்டு விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு நரேந்திர மோடி பேசியதாவது: ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற மட்டுமே சுதந்திரப் போராட்டம் அல்ல.. சர்வதேச அளவிலான காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கத்தின் ஒருபகுதியாகவுமே சுதந்திரப் போராட்டம் இருந்தது. அதனடிப்படையிலேயே வெளியுறவுக் கொள்கை உருவெடுத்தது. ஆசிய, கிழக்காசிய நாடுகளுக்கும் நமக்கும் இடையே புத்தர்தான் பொது இணைப்பாக இருக்கிறார். இந்த இணைப்பை நாம் பலப்படுத்த வேண்டும். 60 ஆண்டுகாலமாக அண்டை நாடுகளின் நல்லுறவை…
-
- 0 replies
- 407 views
-
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில்,பாழடைந்த அரண்மனைக்குக் கீழே பல ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள தங்கப் புதையல் இருப்பதாக , கனவு கண்டதாக சாமியார் ஒருவர் சொன்னதை அடுத்து, அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கும் பணியை இந்திய தொல்லியல் கழகம் தொடங்கியிருக்கிறது. புதையல் வேட்டை கனவை நம்பி ஷோபன் சர்க்கார் என்ற இந்த சாமியார் தான் கண்ட கனவில் 19வது நூற்றாண்டு அரசரான, ராவ் ராம் பக்ஸ் சிங்குக்குச் சொந்தமானது என்றும், இந்த புதையல் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தௌண்டியா கேரா என்ற கிராமத்தில் இருப்பதாகவும் கூறினார். இந்தக் கனவை அந்த சாமியார் ஒரு அமைச்சரிடம் சொல்ல அவர் அதிகாரிகளை விட்டு இந்த இடத்தை ஆய்வு செய்து, தோண்டும் வேலைகளைத் தொடங்க உத்தரவிட்டார். கனவை நம்பி புதையலைத் தேடும் அரசாங்கத்தின் இந்த நட…
-
- 0 replies
- 396 views
-
-
இன்று முழுக்க பல இடங்களில் (95 இடங்களில்) நெருப்பு பற்றி எரிகிறது. நூற்றுக் கணக்கான வீடுகள் எரிந்துள்ளன. இன்று மதியம் தொடக்கம் சிட்னி வானம் புகையால் கறுத்துப் போய் இருந்தது.
-
- 11 replies
- 965 views
-
-
லண்டன்: உலகில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளனர் என்று கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் 29.8 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. எந்தெந்த நாடுகளில் கொத்தடிமைத்தனம் அதிகம் என்று பார்ப்போம். உலக அளவில் 29.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக இருந்தாலும் அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளார்களாம். அதாவது இந்தியாவில் 14 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். சீனாவில் 3 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம்.உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா,…
-
- 1 reply
- 510 views
-
-
டெல்லி: 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் அடுத்த ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளில் பிராந்திய கட்சிகள்தான் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஒரு சர்வே கூறுகிறது. மேலும் தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே முன்னணியில் உள்ளதாகவும் இந்த சர்வேத தெரிவிக்கிறது. அதை விட முக்கியப் பங்கு வகிக்கப் போகும் பிராந்தியக் கட்சிகள் தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ இல்லாத கட்சிகள் என்றும் இந்த சர்வே குண்டைத் தூக்கிப் போடுகிறது. இந்தியா டிவி- டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய சர்வேயில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர…
-
- 0 replies
- 436 views
-
-
வாஷிங்டன்(யு.எஸ்) பதினாறு நாட்களாக அமெரிக்க அரசை நிலை குலைய வைத்த முடக்கம் முடிவுக்கு வந்தது. அரசு செலவினங்களுக்கான ஒப்புதல் மசோதா இரு சபையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 15ம் தேதி வரைக்கான அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் உச்ச வரம்பும் பிப்ரவரி 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் ஆளுங்கட்சி தலைவர் ஹாரி ரீட், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கனலுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரச முறையில் தீர்மானம் இயற்றினார். செனட் சபையில் 81 :18 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்டது. முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய ஜனநாயகக் கட்சி செனட்டர் சக் சூமர், எதிர்க் …
-
- 1 reply
- 407 views
-
-
"அரசின் அசுர பலத்தை எதிர்க்க முடியவில்லை!" சுப.உதயகுமாரனின் அபயக் குரல்! எங்கள் மீது மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதற்காக காவல் துறையும், தமிழக அரசும், அணுமின் நிர்வாகமும், தாதுமணல் கொள்ளையர்களும் கூட்டு சேர்ந்துள்ளனர். நாங்கள் அடித்து நொறுக்கப்பட்டால், அதற்கு இவர்கள்தான் பொறுப்பு; தமிழக மக்கள்தான் சாட்சி. இதை ஆனந்த விகடன் மூலமாக விடுக்கும் அபயக்குரலாக எடுத்துக்கொள்ளுங்கள்!'
-
- 0 replies
- 522 views
-
-
அமெரிக்காவில் நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாடு கண்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் மூத்த எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் நிலவி வரும் நெருக்கடியைச் சமாளிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மற்றும் ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களிடையே புதன்கிழமை முக்கிய விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசியல்ரீதியிலான கருத்து வேறுபாடுகளை மறந்து சமரசத்தீர்வு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செனட் எனப்படும் மேலவையின் பெரும்பான்மைத் தலைவர் ஹாரி ரீட், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்போது எட்டப்பட்டுள்ள சமரசத் திட்டத்தின் மூலம் நமது பொருளாதாரத்துக்கு ஸ்திரத்தன்மை ஏற்படும்'' என்றும் அவர…
-
- 0 replies
- 336 views
-
-
லாவோஸ் நாட்டில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான விபத்தில் 44 பேர் பலியானதாக தாய்லாந்து நாட்டு டெலிவிஷன் அறிவித்து உள்ளது. இறந்த பயணிகளில் 17 பேர் லாவோஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஏழு பேர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வியட்நாம், …
-
- 0 replies
- 492 views
-
-
நோயாளிகளின் முக்கிய குறிப்புகள் அடங்கிய லேப்டாப்பை தொலைத்த சைக்காலஜி மருத்துவர் ஒருவர் வாஷிங்டனில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் விபச்சாரி ஒருவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தூங்கிவிட்டார். அந்த நேரத்தில் அவருடன் இருந்த விபச்சாரி அந்த லேப்டாப்பை திருடிச்சென்றுவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள Dr Sunil Kakar, என்ற சைக்காலஜி அரசு மருத்துவர், தனது வீட்டில் 652 நோயாளிகளின் மருத்துவக்குறிப்புகள் அடங்கிய லேப்டாப்பை வைத்திருந்தார். சம்பவம் நடந்த அன்று, உல்லாசமாக இருப்பதற்காக போன் செய்து விபச்சாரி ஒருவரை வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தூங்கிவிட்டார். பின்னர் காலையில் எழுந்துபார்த்தபோது தனது லேப்டாப் திருட்டு போனதை அறிந்தார். ஆனால் …
-
- 0 replies
- 416 views
-
-
$ டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால் அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பிரகாஷ் சந்திர பரக் தெரிவித்துள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ 14வது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அதில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, முன்னாள் நிலக்கரி துறை செயலர் பிரகாஷ் சந்திர பரக் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ் சந்திர பரக், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்தால் அதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மன்மோகன்சிங்கே முதல் குற்றவாளியாக இருப்பார் என்றார். http://tamil.oneindia.in/n…
-
- 0 replies
- 586 views
-
-
அகமதாபாத்: பக்ரீத் திருநாளையொட்டி முஸ்லீம்களுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த டிவிட்டர் செய்தியில், இந்த திருநாள், நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பலப்படுத்த உதவட்டும் என்று கூறியிருந்தார் மோடி. பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://tamil.oneindia.in/news/india/narendra-modi-tweets-eid-greetings-185462.html
-
- 0 replies
- 385 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 48 மணி நேரத்தில் 4 முறை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஹமிர்புர் பகுதியில் நேற்று நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். பின்னர் கிருஷ்ணா காடி, பிம்பெர் காலி செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 48 மணி நேரத்தில் 4 முறை இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியு…
-
- 0 replies
- 400 views
-
-
ஜெனீவா: கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பது யார் என்ற விவரத்தை இதுவரை வெளியிட மறுத்து வந்த சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள் தற்போது அந்த ரகசியத்தை வெளியிடத் தயாராகி விட்டன. இது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. காரணம், இந்தியாவைச் சேர்ந்த பெரும் பெரும் பணக்கார திமிங்கலங்கள்தான் ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்பதால் ஸ்விஸ் வங்கிகளின் இந்த முடிவு இந்தியாவில் உள்ள கருப்புப் பண முதலைகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்ட சமீபத்திய கணக்குப்படி, இந்தியர்கள் அங்குள்ள வங்கிகளில் குவித்துள்ள கருப்புப் பணம் மட்டும் ரூ. 9000 கோடியாகும். இது 2012ம் ஆண்டு கணக…
-
- 0 replies
- 543 views
-