ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் - லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு 15 Feb, 2026 | 01:54 PM ஆர்.ராம் நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது எமது கொள்கையாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருப்பினும், நாட்டின் தேசிய பாதுகாப்பு சார்ந்த பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியமாகின்றது என்பதாலேயே அதுபற்றி கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, ஊடக ஒழுக…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 12:05 PM பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் ப…
-
- 1 reply
- 123 views
- 1 follower
-
-
பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை 15 Feb, 2026 | 10:46 AM மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது. இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் எதுவும் எமக்கு கிடை…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் Feb 15, 2026 - 06:02 PM வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, இக்குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் …
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு! சிறிலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, பொதுமக்களின் வங்கி விபரங்களைப் பெற்று பணத்தைச் சூறையாடும் பாரிய மோசடி ஒன்று திருகோணமலை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (12) இவ்வாறானதொரு மோசடிக்கு இலக்காகி தம்பதியினர் ஒருவர் பெரும் தொகையை இழந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர்கள், தாம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். பணமோசடி "நீங்கள் நீண்டகாலமாக எமது வாடிக்கையாளராக இருப்பதால், உங்கள் கணக்கில் 1,20,000 ரூபா பெறுமதியான 'ஸ்டார் பொயின்ஸ்' (Star Points) சேர்ந்துள்ளது. அதனைப் பணமாக மாற்றி உங்கள் வங்கிக் கணக்க…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல் போதைப்பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார். நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தனமல்விலவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவல்துறை மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாகத் பொதுமக்கள் எனக்கு தெரிவிக்க முடியும். 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது "இந்த போதைப்பொருள் வியாபாரம் ஒவ்வொரு மூலையிலும் இந்தக் கடத்தல்காரர்களால் நிறை…
-
-
- 1 reply
- 120 views
- 1 follower
-
-
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை! நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு …
-
- 0 replies
- 144 views
-
-
நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு 15 Feb, 2026 | 12:06 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை விட, நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் கொண்டதாக தற்போதைய அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் ஊடகங்கள் மாத்திரமின்றி, மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்படுமென முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்…
-
- 0 replies
- 90 views
-
-
வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர் 15 Feb, 2026 | 11:38 AM யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான்…
-
- 0 replies
- 72 views
-
-
சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு 15 Feb, 2026 | 11:29 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைவிடுத்து கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின…
-
- 0 replies
- 89 views
-
-
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன் 15 Feb, 2026 | 12:06 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசியமக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து அவ்வதிகாரிகளுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐர…
-
- 0 replies
- 68 views
-
-
’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது. இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்த…
-
- 0 replies
- 86 views
-
-
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு. adminFebruary 14, 2026 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதன் போது அன்ன பூரணி மட நிர்வாக உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://glob…
-
- 0 replies
- 61 views
-
-
நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி Feb 14, 2026 - 04:24 PM 2026 ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு 6.824 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது இது 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவாகியிருந்த 6.838 பில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத சிறிய வீழ்ச்சியாகும். எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு 2025 டிசம்பரில் காணப்பட்ட 86 மில்லியன் டொலர்களிலிருந்து, 2026 ஜனவரியில் 109 மில்லியன் டொலர்கள் வரை 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த மாதத்தில் உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தமையால், மத்திய வங்கி வசமுள்ள தங்கக் கையிருப்பின் ப…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
காதலர் தினம்; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்! 14 Feb, 2026 | 11:59 AM காதலர் தினத்தை முன்னிட்டு பூ கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. காதலர் தினம் இன்று (14) (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும் ஆனால் இம்முறை நுவரெலியாவில் வியாபாரம் சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் சிகப்பு ரோஜா…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்! “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சப…
-
-
- 4 replies
- 281 views
-
-
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு! தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464739 #################### ############################ அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு. அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ம…
-
- 17 replies
- 669 views
- 1 follower
-
-
ஜே.வி.பி - இந்தியா நெருக்கம்: மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை 14 February 2026 ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா கொண்டுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரப்பூர்வப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்திய கலாசார உறவுகளுக்கான நிலையத்தின் அழைப்பின் பேரில் கடந்த 05ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை அவரின் இந்த இந்திய விஜயம் அமைந்திருந்தது. இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரை டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர். இந்தச்…
-
- 0 replies
- 99 views
-
-
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க Published By: Vishnu 13 Feb, 2026 | 11:01 PM அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் 3457 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகளும் வழங்கப்பட்டிருந்தன. வவுனியா மாவட்டத்தில் பல வீடுகள் இ…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் 13 Feb, 2026 | 07:12 PM (நா.தனுஜா) ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ச…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? written by admin February 13, 2026 பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண…
-
- 0 replies
- 143 views
-
-
தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு 13 Feb, 2026 | 04:41 PM (செ.சுபதர்ஷனி) தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை (12) தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதி…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம் 13 Feb, 2026 | 04:47 PM இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு …
-
- 1 reply
- 134 views
- 1 follower
-
-
2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி Feb 13, 2026 - 05:26 PM 2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதன்போது,…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு Feb 13, 2026 - 12:41 PM 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தவணையின் முன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்க…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-