ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143300 topics in this forum
-
முதலமைசர் விக்னேஸ்வரனை கைது செய்ய வலியுறுத்தல் கிளிநொச்சியில் புதிதாக குழந்தைகளை பிரசவித்த தமிழ் தாய்மார்களின் தகவல்களை சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் விடுத்த உத்தரவிற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள சிறிலங்கா’ முன்னாள் இராணுவ தளபதியொருவர், தேசிய பாதுகாப்பிற்காகவே இராணுவத்தினர் இவ்வாறான புலனாய்வுத் தரவுகளை திரட்டி வருவதாகவும் கூறியுள்ளார். வட மாகாண முதலமைச்சர் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வட மாகாண முதலமைச்சரை உடனடியாக கைதுசெய்து அவருக்கு எதிராக சட்…
-
- 0 replies
- 426 views
-
-
அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிரசவித்தவர்களின்- விவரம் திரட்டுகின்றது ரிஐடி!!! கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் குழந்தை பிரசவித் தவர்களின் விவரத்தை பங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளனர். மருத்துவமனையிலும், வீடுகளிலும் குழந்தை பிரசவித்தவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன என்று அறிய முடிகின்றது. அதற்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரனைத் தொடர்புகொண்டு கேட்டோம். …
-
- 2 replies
- 788 views
-
-
சம்பூர் கடற்கரையில் 6.6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு…! சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இளக்கந்த கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் பொதிகளை சம்பூர் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் பொதிகள் இருப்பதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவற்றை மீட்டதாகவும், 5 கிலோவும் 510 கிராமும் எடைக் கொண்ட 6.6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 21 பொதிகளில் இந்த ஹெரோயின் பிரித்து பொதி செய்யப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் அல்லது குழு இதனை …
-
- 0 replies
- 420 views
-
-
9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு யாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது என்றும் அதற்காக ஐனாதிபதி மற்றும் பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர்களிடம் கடிதம் மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 314 views
-
-
ரணில் -இந்திய வெளிவிவகார செயலாளர் பேசியது என்ன? இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் கோஹலே இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது பிரதமரும் இந்திய வெளிவிவகார செயலாளரும் இந்திய மீனவர்கள் விவகாரம் மற்றும் இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர். வெளிவிவகார செயலாளருடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்திய நிதியுதவி திட்டங்களுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் இந்த வருடம் ஆரம்பமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உத்தேச பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்…
-
- 0 replies
- 307 views
-
-
புலிகளின் மீள் உருவாக்கம் குறித்த விஜயகலாவின் உரையை மொழிபெயர்க்க உத்தரவு.. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழில் ஆற்றிய உரையை, சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உரையைப் பதிவுசெய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் உத்தவிட்டார். http://globaltamilnews.net/2018/87503/
-
- 0 replies
- 290 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சர் – காவற்துறை மா அதிபருக்கு வாள்வெட்டுக் குழு சவால்… யாழில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என அறிவித்து 24 மணித்தியாலத்துள் வாள்வெட்டு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ள போது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்தனர். அவர்கள் இன்றும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நி…
-
- 0 replies
- 183 views
-
-
இளைஞர்களை கடத்தப் பயன்படுத்திய வாகனம் – விபரம் தர மறுக்கும் சிறிலங்கா கடற்படை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்களை சிறிலங்கா கடற்படை இன்னமும் தமக்கு வழங்கவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்கள் இந்த விசாரணைக்குத் தேவைப்படுகின்ற போதும் சிறிலங்கா கடற்படை தலைமையகம் அதனை இன்னமும் வழங்கவில்லை என்று கோட்டே நீதிவானிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று தெரிவித்தனர். அந்த வாகனம் முற்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கவில்லை. …
-
- 1 reply
- 357 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த போட்டியிடலாம் : சட்டத்தில் இடம்; தற்போது வெளிப்படுத்தமாட்டோம் (எம்.சி.நஜிமுதீன்) போதைப்பொருள் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அத் துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு சட்டத்தில் சந்தர்ப்பம் ஒன்றுள்ளது. அதனை நாம் தற்போது வெளிப்படுத்தப்போவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் த…
-
- 0 replies
- 346 views
-
-
’புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கழுகுப் பார்வை’ க.கமல் மீண்டும் தலைத்தூக்குவதற்குப் புலிகளுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காதெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க, புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து, கழுகுப் பார்வையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் சர்ச்சைக்குரிய அந்த உரை குறித்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறிகொத்தாவில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு…
-
- 0 replies
- 242 views
-
-
இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு வருடங்கள் சிறை- ஊர்காவற்றுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டன குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிவான் குறித்த தண்டனை உத்தரவைப் பிறப்பித்தார். http://newuthayan.com/story/11/இந்திய-மீனவர்கள்-16-பேருக்கு-இரண்டு-வருடங்கள்-சிறை-ஊர்காவற்றுறை-நீதிமன்றம்-அதிரடி-உத்தரவு.html
-
- 0 replies
- 191 views
-
-
மக்கள் மனங்களில் இருந்து புலிகளை நீக்க வேண்டுமாயின் போர் வெற்றியின் நினைவுகளை நீக்குங்கள்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கில் மக்கள் மனங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் ஞாபகத்தை நீக்க வேண்டுமாயின் இராணுவத்தினர் வடக்கில் நிர்மாணித்துள்ள போர் வெற்றி சம்பந்தமான சகல நினைவு ஸ்தூபிகளும் அகற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளதாக தெற்கின் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. போரில் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்தி வருமு் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற போதே சிறிதரன் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்…
-
- 0 replies
- 334 views
-
-
சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தை காப்பாற்றும் பிரயத்தனத்தில் சட்டத்தரணிகள்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதில் அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கடும் பிரயத்தனத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றில் வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது. இதன்…
-
- 0 replies
- 263 views
-
-
ஜூலை கலவரத்தில்- உயிரிழந்தவர்களுக்கு- நினைவேந்தல்!! ஜூலைக் கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாகவும் தேசிய ஒற்றுமையை கட்டி எழுப்பும் நோக்குடனும் சோசலிச இளைஞர் சங்கத்தால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவிலும், வவுனியா புதிய பேருந்து முன்றலிலும் நேற்று நடத்தப்பட்டது. நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தேசிய ஒற்றுமையை கட்டி எழுப்பி இனவாத்த்தை தோற்கடித்து ஒரே இலங்கையர் என்ற …
-
- 0 replies
- 265 views
-
-
மரண தண்டனையை நிறைவேற்ற கயிறு தயார்: இரு அலுகோசுகளை தேடுகிறது சிறை நிர்வாகம் (எம்.எப்.எம்.பஸீர்) மரண தண்டனை கைதிகளாக சிறையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிறைவேற்ற சிறையில் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாதுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய கேசரிக்கு தெரிவித்தார். முக்கியமாக மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு எனும் பதவி நிலை தொடர்ந்தும் வெற்றிடமாக உள்ளதாகவும் அப்பதவிக்கு இருவர் அவசியமாகியுள்ளதால், அதற்க…
-
- 0 replies
- 363 views
-
-
ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும் மாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு பிரிவினைக்கு வழிகோலும் என்ற தப்பான அபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படுவதாலேயே அதிகாரப் பகிர்வு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால்தான் ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியைக் கோரவேண்டும் என்றும், வேண்டிய இரு மாகா…
-
- 1 reply
- 471 views
-
-
வெலிக்கடை சிறையினுள்ளிருந்து 3950 தொலைபேசி அழைப்புகள் மலேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடனும் உரையாடல் * ஒரு அழைப்புக்கு ரூ.2000 அறவீடு * இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை சீர்திருத்த கூடங்களாக மாற்ற வேண்டும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்…
-
- 1 reply
- 343 views
-
-
புலிகளின் காலத்தில் குற்றச்செயல்கள் நடந்ததில்லை எனக்கூறுவது அறியாமையினாலேயே:நளின் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் குற்றச்செயல்கள் நடந்ததில்லை என்று கூறுவதானது அறியாமையினால் தான் என சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார யாழில் வைத்து தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் குடாநாட்டில் அதிகரித்திருக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் ஊடகவியியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தினார். இதன் போது வடக்கில் பெருமளவிலான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அதே நேரம் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.…
-
- 0 replies
- 309 views
-
-
இரட்டை கொலைக் குற்றவாளியான நெப்போலியன் இந்தியாவில்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இரட்டை கொலை குற்றவாளியான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் எஸ். ரமேஸ் தற்போது இந்தியாவில் உள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி. துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட இரட்டை கொலை குற்றவாளியான நெப்போலியன் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளார். அவர் ஐரோப்பிய நாட்டில் வசிப்பதாக வெளியான தகவல்கள் பொய். அவர் தற்போது இந்தியாவில் சட்டவிரோதமாக வசித…
-
- 0 replies
- 296 views
-
-
"வன்முறைகளை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை" (ரி.விரூஷன்) வடக்கில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பான தகவல்களை மக்கள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். வடக்கில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றைய தினம் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்க…
-
- 0 replies
- 236 views
-
-
கூட்டமைப்பைச் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார். கடந்த ஜனவரி மாத இறுதியில், இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட விஜய கேசவ் கோகலே சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். நாளை கொழும்பு வரும், இந்திய வெளிவிவகாரச் செயலர், உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை, சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அவர் நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்துவார். இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு முயற்சியாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டு …
-
- 0 replies
- 202 views
-
-
மரணதண்டனைக்கு பௌத்த பீடங்கள், கத்தோலிக்க திருச்சபை ஆதரவு மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு தெரிவித்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அதிபரின் முடிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறைகளில் இருந்தவாறு குற்றங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சிறைச்சாலைகளில் இருந்து கொண்டு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை ஒருங்கிணைக…
-
- 0 replies
- 221 views
-
-
சிறிலங்கா அதிபருடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு – உடன்பாடுகளும் கைச்சாத்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நேற்று மாலை சிறிலங்கா அதிபரின் செயலகத்தில், தாய்லாந்துப் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் பேச்சு நடத்தினர். இதையடுத்து. மூலோபாய பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டு, நிலையான சமூக அபிவிருத்தி, குற்றவாளிகளை பரிமாற்றம் செய்தல் குறித்த இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன. அதேவேளை சிறிலங்கா பிரத…
-
- 0 replies
- 201 views
-
-
ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் உறவை சிதைப்பதற்கு சதி: ஹிஸ்புல்லாஹ் முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் – வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்க…
-
- 2 replies
- 479 views
-
-
கோட்டைக்குள் இராணுவம்- தற்காலிக முகாம் அமைக்கலாம் -வடக்கு முதல்வர்!! வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினர் நிரந்தரமாக வெளியேறுவார்களாயின், கோட்டைக்குள் அவர்கள் தற்காலிக முகாம் அமைக்கலாம். ஒருபோதும் நிரந்தர முகாம் அமைத்துத் தங்குவதற்கு அனுமதிக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, கோட்டைக்குள் இராணுவம் முகாம் அமைப்பதற்கு தாம் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் குரே நேற்றுக் குறிப்பிட்டார். யாழ்ப்…
-
- 5 replies
- 748 views
-