ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
ரணிலின் உரையால் சபையில் கோஷம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவருடைய, உரைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிகள் சிலர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு கோஷமெழுப்பனர். இதன் சபையில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. எனினும், பிரதமரின் உரைக்கு பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில், அவரிடம் கேட்டறிந்துகொள்வதற்கு, கொழும்புக்கு அழைத்துள்ளேன். அவர், சுகயீனம் காரணமாக, யாழ்ப்பாணத்தில் உள்ளார். இன்றையதினம் கொழும்புக்கு வருகைதருவதாக உறுதியளித்தார். அவர், வந்தவுடன், அவரிடம் கேட்டறிந்துகொண்டு, அடுத்த…
-
- 2 replies
- 317 views
-
-
என்ன எங்களுக்குள் முரண்பாடா? “ஒயாட்ட பிஸ்சுத” (உங்களுக்கு பைத்தியமா) இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராஜபக்ஸ குடும்பத்தை பழிவாங்குவதுடன் முன்னாள் அமைச்சர்களையும், பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிறீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், நாட்டின் நிர்வாகம் முற்றாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.. அத்துடன் அரசாங்கத்தினரும், காவற்துறையினரும், தலைவர்களும் செயற்திறன் அற்றவர்களாக இருப்பதா…
-
- 0 replies
- 269 views
-
-
நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ”அதிபர் தேர்தல் பரப்புரைக்காக, மகிந்த ராஜபக்சவுக்கு 7.6 மில்லியன் டொலரை சீன நிறுவனம் வழங்கியது என்று நியூயோர்க் ரைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக, விசாரணை நடத்தக் கோரி, ரஞ்சன் ராமநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறையிட்டிருந்தார். அதன் அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை துறை முக விவகாரம் தொடர்பான செய்திக்கு உதவிய தமது உள்நாட்டு ஊடகவியலாளர்கள் இரு…
-
- 0 replies
- 143 views
-
-
நியூயோர்க் ரைம் செய்தி – அவசர செய்தியாளர் சந்திப்புக்கு சீன தூதரகம் அழைப்பு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு, சீனா நிதி அளித்தது என்று நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து, கொழும்பில் உள்ள சீன தூதரகம் அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த அவசர செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது, கொழும்பில் உள்ள குறிப்பிட்ட சில உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சீனத் தூதரக அதிகாரிகள், தமது தூதரகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசன வசதிகளே இருப்பதால் எல்லா ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 184 views
-
-
225 மில்லியன் டொலருக்கு மத்தல விமான நிலையத்தை மடக்குகிறது இந்தியா மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக இயக்குவது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது. சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக செயற்படுத்துவதற்கு, திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 70 வீத பங்குகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். 30 வீதத்தை சிறிலங்கா வைத்துக் கொள்ளும். இதுதொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுக்கள், தற்போது கொழும்பில் தங்கியுள்ள இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 142 views
-
-
பரபரப்புக்கு மத்தியில் பிரதமர் ரணிலை சந்தித்தார் விஜயகலா! இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. எனினும், சந்திப்பின் பின்னர் வெளியேறிய விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்கள் எதனையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றின் போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளின் மீள் வருகை குறித்து பேசியிருந்தார். இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்து. ஆளும் மற்றும் எதிர் தரப்பினர்கள் என பலரும் இதற்கு எதிர்ப்பு த…
-
- 0 replies
- 296 views
-
-
விஜயகலா கூறியதில் என்ன தவறு இருக்கிறது? நீதியரசர் விக்னேஸ்வரன் பேசுகிறார்.. பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம் ஊடகவியலாளர் கேள்வி 1. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் இரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது. விஜய் குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை துருப்பிடித்த ரெலிக்கொம் தூண்களும் அபாயமும்… காரைநகர்” பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா டெலிகொம் கடலுக்குள் தூண்களை நிறுவி காரைநகருக்கு தொலைப்பேசி சேவையை வழங்கி வருகிறது. கடலுக்குள் உள் நிறுவிய ஸ்ரீலங்கா ரொலிகொம் தூண்கள் கீழ் பகுதியில் வெடிப்புகள் காணப்படுகிறன. தூண்களுக்கு உள் இருக்கும் கம்பிகள் கடல் நீர் ஊறி துருப்பிடித்து தூண்கள் வெடிப்பு உடன் காணப்படுகிறன. வீதிக்கு மிக அருகிலே காணப்படும் தூண்கள் பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் வீதியில் போகும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனினும் இது தொடர்பாக இரண்டு மாதங்களு முன் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா…
-
- 0 replies
- 637 views
-
-
அவன்கார்ட் வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை உத்தரவு கோத்தபாய உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு எதிரான அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த குறித்த வழக்கினை விசாரிப்பதற்கே, மேன் முறையீட்டு நீதி மன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/36017
-
- 0 replies
- 150 views
-
-
வடக்கு முதல்வருடன் பேசத் தயார் - பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பாக வட மாகாண முதலமைச்சருடன் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பாக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இது தொடர்பாக மாகாண சபைகளுடன் பேச வேண்டும். தற்போது…
-
- 0 replies
- 164 views
-
-
மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணனின் – உறுப்புரிமையை நீக்கக்கோரி வழக்கு!! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்புரிமையை நீக்கக் கோரி நேற்று முன்தினம் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலகர் உள்பட்டோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்…
-
- 1 reply
- 466 views
-
-
கோத்தபாய வழக்குகளை விசாரிக்க தடை, கைதுக்கு தடை.... நீதிமன்றங்கள், அரச வழக்கு தொடரகம், போலீஸ் அனைத்தும் சோம்பலில். http://www.dailymirror.lk/article/Interim-order-preventing-proceedings-of-Avant-Garde-case-152218.html விஜயகலா மகேஸ்வரன் புலிகள் குறித்து சொன்னாலும் சொன்னார். பிரதமர் சபாநாயகர், போலீஸ், அரச வழக்கு தொடரகம் ... என்ன வேகம்... அடடா.... http://www.dailymirror.lk/article/IGP-instructs-Senior-DIG-crimes-to-probe-complaints-against-Vijayakala-152216.html http://www.dailymirror.lk/article/Vijayakala-s-statement-Speaker-refers-matter-to-AG-152164.html http://www.dailymirror.lk/article/-Women-for-Justice-demand-Vijayakala-to-be-sacked-and-arres…
-
- 0 replies
- 283 views
-
-
மன்னாரில் தொடரும் மனித எலும்புகளின் அகழ்வுப் பணிகள்! மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் இன்று (புதன்கிழமை) 27 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார். அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மேற்படி அகழ்வுப் பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு எலும்பு எச்சங்கள் கிடைத்த பகுதிகளில் மட்டுமே குறித…
-
- 0 replies
- 284 views
-
-
மகிந்தவுடன் மாகாண சபை உறுப்பினர்கள் – மொட்டவிழ்க்க வருகிறார் கோத்தா… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களுக்கு அங்கத்துவ அட்டைகளை வழங்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதனிடையே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் முதல் முறையாக இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்திற்கு வரவுள்ளார். அரசியல…
-
- 1 reply
- 247 views
-
-
யாழில் தனுரொக் குழு உறுப்பினரின் வீட்டில் ஆவா குழு! 15 வயது சிறுமி பாதிப்பு யாழ் - தெல்லிப்பழையில் வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆவா குழுவினர் நடத்திய தாக்குதலில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக வடமாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவினர், மற்றுமொரு குழுவான தனுரொக் குழுவின் உறுப்பினர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவ்வீட்டிலுள்ள 15 வயதுச் சிறுமி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேரே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்…
-
- 1 reply
- 347 views
-
-
வவுனியா, மன்னாருக்கு புதிய அரச அதிபர்கள்! July 3, 2018 வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் இன்று மாலை வழங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மோகன்ராஜ், மன்னார் மாவட்டச் செயலாளராகவும் நிந்தாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா வவுனியா மாவட்டச் செயலாளராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்துக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமிக்கவேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் கோரியிருந்தார். அதேவேளை, மன்னார் அரச அதிபராக கிருஸ்தவர் ஒருவர் நியமிக்கவேண்டும் என ஆயர் இல்லம் கேட்டிருந்து. இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனையையும் …
-
- 1 reply
- 677 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த கருத்துக்களை நிராகரித்தது சீனா இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்கும் சீனாவின் முயற்சிகளின் பின்னால் இராணுவ நோக்கங்கள் உள்ளன என ஊடகங்களில் வெளியான செய்திகளை சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் நிராகரித்துள்ளார். திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த செய்திகளிற்கு உள்நோக்கம் கொண்ட சிலரே காரணம் என லூ காங் கருத்து தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்தின் அபிலாசைகளின் வெளிப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார். வர்த்தக கொள்கைள் மற்றும் சமத்துவம் பரஸ்பர நன்மைகள் அடிப்படையில் இலங்கையுடன் அம்பாந்தோட்டைதுறைமுக திட்டத்தில் ஈடுபடு…
-
- 0 replies
- 235 views
-
-
அனந்தி அவுட்: சிறிதரனின் இரகசிய மின்னஞ்சல்-வடக்கின் புதிய அமைச்சரவை இதுதான்! July 4, 2018 டெனீஸ்வரன் விவகாரத்தையடுத்து, தனது அமைச்சரவையிலிருந்து யாரை வெளியேற்றுவதென முதலமைச்சர் இறுதியான முடிவிற்கு வந்துள்ளார். இரண்டொரு நாளில் இதற்கான தெளிவான அறிவிப்பு வெளியாகும். இந்த தகவல்களை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. தன்னை பதவிவிலக்கியது சட்டவிரோதமானதென பா.டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சார்பான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கட்டளை நேற்று ஆளுனருக்கு கிடைக்கப்பெற்றது. இதையடுத்து இன்று ஆளுனர் தரப்பிலிருந்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்படும் என தெரிகிறது. டெனீஸ்வரனையும், உங்களையும் தவிர்ந்த மூவரை அமைச்சுக்கு பிரே…
-
- 0 replies
- 453 views
-
-
யாழில் அதிகரித்து வரும் வன்முறைகள் – காவற்துறையின் விடுமுறைகள் ரத்து…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து காவற்துறையினருக்கான விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோகம், கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தன. இந் நிலையில் காவற்துறையினர் மீது பல்வேறு தரப்பினர்களும் குற்றம்சாட்டி இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஆவா குழுவின் அட்டகாசங்…
-
- 0 replies
- 340 views
-
-
புலிகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறவில்லை – விஜயகலா குத்துக்கரணம் விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தாம் உரையாற்றவில்லை என்றும், நாக்கு தடுமாறி விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த தொலைபேசி உரையாடலை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டார். ரஞ்சன் – விடுதலைப் புலிகள் பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள்? விஜயகலா – யார் கூறியது? ரஞ்சன் – ஏன், நீங்கள் கூறியுள்ளீர்கள். அது தான் எல்லா நாளிதழ்களிலும் உள்ளன. …
-
- 3 replies
- 530 views
-
-
நியுயோர்க்டைம்ஸிற்கு தகவல் வழங்கிய பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த செய்திகளிற்கான தகவல்களை வழங்கிய பத்திரிகையாளர்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான அரசியல்வாதிகள் அச்சுறுத்திவருவதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான துல்லியமான புலனாய்வு செய்திக்கான தகவல்களை வழங்கிய இரு பத்திரிகையாளர்களை முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் பகிரங்கமாக விமர்சித்துள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் இவ்வாறான விதத்தில் அச்சுறுத்தப்படுவதை ஏற்க முடியாது என நியுயோர்க் டைம்சின் சர்வதேச பதிப்பிற்கான ஆசிரியர் மைக்கல் ஸ்லக்மன் தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 442 views
-
-
அமெரிக்கா விலகினாலும் அனைத்துலக ஈடுபாடு மாறாது – ஐ.நா பிரதிநிதி உறுதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று உறுதியளித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள சூழல் குறித்து, இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது, இதன்போது, கருத்து வெளியிட்ட ஐ.நா பிரதிநிதி, ரெரன்ஸ் டி ஜோன்ஸ், “ஐ.நா மனித உரிமைகள்…
-
- 0 replies
- 272 views
-
-
இரா.சம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த அநேக விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்தார. அதேவேளை இலங்கை அரசாங்கமானது இந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது இந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலதிக கா…
-
- 1 reply
- 233 views
-
-
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை விசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் விசாரணைகள் நிறைவடையும் வரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை குறித்த அமைச்சு பதவியில் இருந்து இடைநீக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www…
-
- 2 replies
- 367 views
-
-
சிறிலங்காவில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தம் – அமெரிக்காவின் புதிய தூதுவர் சிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்று, சிறிலங்காவுக்கான தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால், சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ் கடந்த ஜூன் 28ஆம் நாள், வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையானார். அப்போது உரையாற்றிய அவர், ‘2015இல் சிறிலங்கா வாக்காளர்கள், ஊழல், முரண்பாடு, அடக்குமுறைகளை நிராகரித்து, மறுசீரமைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவள…
-
- 0 replies
- 130 views
-