ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
928 கிலோ கொக்கைன் சிக்கிய, அழிந்ந கதை போதைப் பொருள். இன்று நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறி வருகின்ற ஒரு சாபம். இந்த போதைப் பொருளை முற்றாக நாட்டில் இருந்து ஒழிக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பங்களிப்புடன் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் தமது திட்டங்களை மாற்றி வருகின்றனர். இந் நிலையில் அவற்றை முறியடித்து, போதைப் பொருளினை கைப்பற்றும் பொலிஸார் அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என தொடர்ச்சியாக மக்கள் எழுப்பி வந்த கேள்விக்கு, இது தான் இறுதியில் நடக்கும் என செயல் ரீதியாக பதிலளித்தனர். …
-
- 4 replies
- 478 views
-
-
25 வீத பெண் பிரதிநிதித்துவம் எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எமது நாட்டில் மூன்றில் ஒருபங்கு குடும்பங்கள் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங் களாகும். அவர்களது பாதுகாப்பு, பொரு ளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அவர்களை அபிவிருத்திக்கு பங்காற்றச் செய்ய வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீதபெண் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இது நாம்பெற்ற வெற்றியாகும். பெண்கள் இப்போது அரசியலில் பிரவேசிப்பதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வ…
-
- 0 replies
- 258 views
-
-
கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் பொறுப்புக்கூறவேண்டும் கடுமையாக சாடுகின்றார் மஹிந்த ராஜபக் ஷ (இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் துணை போகும் மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தாம் எதிர்க் கட்சி போன்று நடந்து கொள்வதாக மக்கள் மத்தியில் போலி நாடகத் தினை அரங்கேற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணருமான மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று வருட கால அர சியல் செயற்பாடு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கடந்த மூன்று வருடகாலமாக ந…
-
- 0 replies
- 182 views
-
-
ஊவா மாகாண சபைக்கு முன் ஆர்ப்பாட்டம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு பதுளை தமிழ் மகளிர் மாகா வித்தியாலய பெண் அதிபரை முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்தை கண்டித்து ஊவா மாகாண சபைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் அந்தப் பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/ஊவா-மாகாண-சபைக்கு-முன்-ஆர/
-
- 0 replies
- 340 views
-
-
2020ல் ஜனாதிபதி மைத்திரி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவார் – கீதபொன்கலன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவார் என பேராசிரியரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எஸ்,ஐ. கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் மீளவும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அவர் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். மீளவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரகாசமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 288 views
-
-
யாழ். மாநகர மேயர் வேட்பாளர் மணிவண்ணனிடம் பொலிசார் விசாரணை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரத்ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். தேர்தல்கள் ஆணைக்…
-
- 0 replies
- 228 views
-
-
ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலகினார் பதுளை தமிழ் பெண் அதிபரின் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான அழுத்தங்களையடுத்து, தாம் உடனடியாகப் பதவி விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் அறிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை தாம் அந்தப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/29710 பதவி துறந்தார் ஊவா மாகாண முதலமைச்சர் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தனது கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாழிட வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்…
-
- 1 reply
- 343 views
-
-
கைது செய்யப்படவுள்ளார் ரவி கருணாநாயக்க? சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரி ஒருவரினால் நடத்தப்படும் இணையம் ஒன்றை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவுக்கு பொய் சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதிபர் ஆணைக்குழுவுக்கு பொய்ச்சாட்சியம் அளிப்பது மோசமான குற்றம் என்றும், இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுபவர் குறைந்தது 3 மாதங்கள் பிணையில் வெளிவர முடியாது என…
-
- 1 reply
- 203 views
-
-
கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை 12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம், 2,500 மில்லியன் ரூபாவை மாத்திரமே, 2017ஆம் ஆண்டில் வழங்கியிருந்தது. மத்திய அரசாங்கம் நிதியை வழங்கும் போது, எதற்காக இந்த நிதியைச் செலவிட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த நிதியை எதற்காக செலவிடுவது என்று தெரிவு செய்யும் உரிமையும…
-
- 0 replies
- 275 views
-
-
கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் – உறவுகளை பலப்படுத்தப் போகிறாராம் சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள செங் சுவேயுவான் நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், சீன- சிறிலங்கா நட்புறவுச் சங்கப் பிரதிநிதிகள், சீன தொழிற்துறை மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். சிறிலங்காவுக்கான சீனாவின் 21 ஆவது தூதுவராக செங் சுவேயுவான் பொறுப்பேற்கவுள்ளார். சிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய ஷி ஷியான்லியாங் அண்மையில் தமது பணிக்காலம் முடிந்த நாடு திரும்பியதை அடுத்து, புதிய தூதுவராக செங் சுவேயுவான் பொறுப்பேற்கவுள்ளார். தாம் சிறிலங்கா- சீன உறவுகளை …
-
- 0 replies
- 212 views
-
-
மக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க நானும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இனம், சமயம், நிறம் என்ற பேதமின்றி இந்த நாட்டின் அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது ஜனநாயக சமூகமொன்றையும் தூய அரசியல் இயக்கமொன்றையும் எதிர்பார்த்தேயாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் மக்களுடன் செயற்பட்டு அந்த சவாலை வெற்றிகொள்வதாக தெரிவித்தார். இன்று பிற்பகல் மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜ…
-
- 2 replies
- 385 views
-
-
ஜனநாயக தலைமை தந்தைக்கு சென்றுவிடும் என்ற பயத்திலேயே சுட்டார்கள்! ஜனநாயகத்தின் தலைமை தனது தந்தைக்கு சென்றுவிடும் என்ற பயத்திலேயே அவரைச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஆயுத போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளிற்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களிற்கு தியாகம் என்றால் என்ன என்று த…
-
- 0 replies
- 365 views
-
-
அமைச்சரவையில் வெடித்த பூகம்பம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வழமைபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருந்தன. அமைச்சர்களும் தமது அமைச்சரவை பத்திரங்களுடன் கூட்டத்துக்கு தயாராக இருந்தனர். சற்று நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் பூகம்பம் வெடிக்கப்போகின்றது என்பதனை தெரியாமல் அமைச்சர்கள் அமைதியாக கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அமைச்சர்கள் அனைவரும் சமுகமளித்திருந்த நிலையில் ஜனாதிபதி வருகைதந்தார். ஜனாதிபதி வந்து சற்று நேரத்தில் அமைச்சரவைக்கூட்டம் ஆரம்பமானது. …
-
- 0 replies
- 399 views
-
-
தேர்தலின் பின்னர் முக்கிய நகர்வுகள்.! ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சில முக்கிய நகர்வுகளை கையாள இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. தேர்தல் முடிந்தவுடன் அடுத்தகட்டமாக காணமல்போனோர் சட்டமூலம், பயங்கரவாத திருத்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த வாரம் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சிவில் அமைப்புகளும், மனித உரிமைகள் குறித்து செயற்பட்டுவரும் நிறுவன தலைவர்கள் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரை கையாளும் நகர்வுகள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் சில முக்கிய வேலைத்திட்டங்களை கையாளும் வகையிலும் இதில் க…
-
- 0 replies
- 196 views
-
-
சிங்கள குடியேற்றங்கள் ஜெயந்திபுர, அசோகபுர, சிரிமாபுர என்றெல்லாம் வளர்ந்துவிட்டன… சிங்கள குடியேற்றங்கள் தமிழர்கள் நாடுபூராகவும் வாழ்வது போன்றல்ல வாரத்திற்கொரு கேள்வி இவ்வாரம் கொழும்பில் இருந்து கிடைத்திருக்கும் கேள்விக்குப் பதில் தரப்படுகின்றது. கேள்வி–தமிழ்க் கட்சிகள், ஏன் நீங்களும் கூட, வட மாகாணத்தில் சிங்கள மக்கள் குடிகொள்ளப் பார்க்கின்றார்கள், எமது பாரம்பரியம் அழியப் போகின்றது என்றெல்லாம் குரல் எழுப்புகின்றீர்கள். தமிழராகிய நாம் பெருவாரியாக கொழும்பில் குடியிருக்கின்றோமே அது சிங்களப் பாரம்பரியத்தை அழிப்பதாக அர்த்தம் கொள்ள முடியாதா? நீங்கள் உங்கள் கூக்குரல்களால் கொழும்பில் வசிக்கும் எம்மையெல்லாம் அவதிக்குள்ளாக்கின்…
-
- 0 replies
- 343 views
-
-
அரச தொழில் வாய்ப்புகள் * பதவி: தொழில்நுட்ப அலுவலர் நிறுவனம்: தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம். விண்ணப்ப இறுதி நாள் : 06.02.2018 *பதவி: தற்காலிக உதவி விரிவுரையாளர் நிறுவனம்: ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் விண்ணப்ப இறுதி நாள் : 06.02.2018 * பதவி: கணனி மென்பொருள் அபிவிருத்தி அலுவலர் நிறுவனம்: ஓய்வூதிய திணைக்களம் விண்ணப்ப இறுதி நாள் :31.01.2018 * பதவி: சிரேஷ்ட விரிவுரையாளர் நிறுவனம்: மொரட்டுவ பல்கலைக்கழகம் விண்ணப்ப இறுதி நாள் : 09.02.2018 *பதவி: இணைப்பாளர், உதவி இணைப்பாளர் நிறுவனம்: கொழும்பு …
-
- 0 replies
- 319 views
-
-
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2018 - பிரம்மாண்டமான ஏற்பாடு! யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2018 ஆனது, எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த வருடம் ஒன்பதாவது தடவையாகவும் ஏற்பாடாகியுள்ள இந்த கண்காட்சியானது, உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் சந்திக்கும் களமாக அமைந்துள்ளதால் வடக்கிற்கான நுழைவாயில் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. யாழ் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் தனியார் நிறுவனம், யாழ் மாநகர சபை போன்றவற்றின் துணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில், 350 காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும் …
-
- 0 replies
- 180 views
-
-
யாழ்ப்பாண பொலிஸாரின் அனுசரனையுடன் வீடமைப்பு! யாழ்ப்பாண பொலிஸாரின் அனுசரனையுடன் வீடமைப்பு! தையிட்டிப்பகுதியில் இன்று அடிக்கல் நடப்பட்டது உயிரிழந்த பொலிஸாரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் பெறுமதியான வீட்டை அமைப்பதற்கான அடிக்கல் காங்கேசன்துறை தையிட்டிப் பகுதியில் இன்று காலை நடப்பட்டது. யாழ்.மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் றொசான் பொ்னான்டோ தலைமையில் வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது. இந்த வீடமைப்புக்கான நிதியை, யாழ்.மாவட்டத்தின் அனைத்து பொலிஸ…
-
- 8 replies
- 735 views
-
-
அர்ஜூன மகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கை சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் ? லியோ நிரோஷ தர்ஷன் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வரும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்வுடனான சந்திப்பின் போது அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில் இந்த விடயத்தை கையாள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மத்திய வங்க…
-
- 0 replies
- 219 views
-
-
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணை? எஸ்.கணேசன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொண்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்படும், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்றெல்லாம் இப்போது …
-
- 0 replies
- 191 views
-
-
சிறிசேனாவின் பேச்சுசட்டக் குழப்பமா...அரசியல் உத்தியா? இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ‘‘அதிபரின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளிலிருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார். 2015-ல் இலங்கை அதிபர் பதவிக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பொலனருவ மாவட்டத்தில் ஜனவரி 26-ல் பேசிய அதிபர் சிறிசேனா இவ்வாறு பேசியிருக்கிறார். நல்ல நிர்வாகியாக இருந்தால், சீர்திருத்தங்களை அமல்படுத்த நான்கு ஆண்டுகளே போதும் என்று தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவை உதாரணமாகவும் கூறியிருக்கிறார். “நான் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அரசியல் சட்ட நிபுணர்களும் அரசியல் தலை…
-
- 0 replies
- 164 views
-
-
இணைந்த தமிழ்மொழிவழி மாநிலத்தில் முஸ்லிம் பிரதேசங்களை முஸ்லிம்களே ஆளும் அதிகாரம் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தமிழருக்கான மாகாணமாக நாங்கள் கோரவில்லை. தமிழ்மொழி வழி மாநிலமாகவே நாங்கள் கேட்கின்றோம். முஸ்லிம் பிரதேசங்களை முஸ்லிம் மக்களே ஆளக்கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தலைமைகளான நாங்கள் தயாராகவே இருக்கின்றோமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பேரினவாதத…
-
- 0 replies
- 291 views
-
-
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது! தேர்தல் விதிமுறைகளை மீறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயர் பொறிக்கப்பட்ட 25 நோட்டீஸ்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்…
-
- 0 replies
- 199 views
-
-
ஒற்றையாட்சி நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது – முதலமைச்சர் ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி: மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்றார். இந்நிலையில் வடமாகாணத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைச் சவால்கள் எவை? பதில்: முன்னர் நிலவிய சூழல் தற்போதில்லை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. பரந்துபட்டளவில் நோக்கில் ஜனநாயகம் ம…
-
- 0 replies
- 198 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை அமர்வுகளை கண்காணிக்கிறதாம் சிறிலங்கா தூதரகம் கனடாவில் நடந்து வரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில், ஜனவரி 19ஆம் நாள் ஆரம்பமாகி இன்று வரை நடக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் குறித்து, கனேடிய வெளிவிவகார அமைச்சிடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், சிறிலங்காவின் தனிநாட்டுக் கொள்கையை ஊக்குவிக்கும், நாடு க…
-
- 0 replies
- 228 views
-