ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர் ஆணையிட்டே தனது அலுவல்களை ஆற்றிக் கொண்டார். – முதலமைச்சர் வடமாகாண சபைக்கு 7 தங்க விருதுகள் பாராட்டுவிழா – முதலமைச்சர் உரை அனைவருக்கும் வணக்கம்! இன்றைய இந்தப் பாராட்டுவிழா உங்கள் ஒவ்வொருவருக்கும் உரியது. உங்களுக்கு என்று கூறும் போது உங்கள் பதவிகளில் உங்களுக்கு முன் இருந்தவர்களையும் குறிப்பிடுகின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் கடமை உணர்ச்சியுடன் வேலை செய்ததால்த்தான் இந்த விருதுகளைப் பெறக் கூடியதாக இருந்தது. பாராளுமன்ற சபாநாயகரையும் அதன் செயலாளர் நாயகத்தையும் அண்மையில் கொழும்பில் சந்தித்தேன். அப்போது இந்த விருதுகள் பற்றியும் பேசப்பட்டது. காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடல்…
-
- 0 replies
- 398 views
-
-
நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேக நபர்களுக்கு பிணை மறுப்பு யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் மூவரும் கையளித்த பிணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி மனுவை நிராகரித்த யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்ரி சைலவன், சந்தேக நபர்கள் மூவரின் விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதிவரை நீட்டித்து உத்தரவிட்டார். நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை 22ஆம் திகதி காலை வேளையில் இடம்பெற்றது. இதில், நீதிபதியின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்…
-
- 0 replies
- 312 views
-
-
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 78 வயது முதியவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று இறுதி தீர்ப்பு ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முல்லைத்தீவைச் சேர்ந்த 78 வயது முதியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து இன்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 2013ஆம் ஆண்டு முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வயது முதிந்த நபர் ஒருவர் தனது பக்கத்து வீட்டு ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை…
-
- 0 replies
- 206 views
-
-
கூட்டமைப்பின் பொறுமைக்கும் எல்லையுண்டு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கூட்டாட்சி அரசு 93 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளமை அதன் பலத்தை எடுத்துக் காட்டியுள்ளது. அரசுடன் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்க் கட்சிகள் வாக்கெடுப்புக்கு ஆத ரவாக வாக்களித்திருந்தன. மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணியுடன் ஜே.வி.பி மட்டுமே இணைந்து எதிராக வாக்களித்தது. ஜே.வி.பியின் இந்த நிலைப்பாட்டை மகிந்தவுக்கு ஆதரவானதொரு நிலைப் பாடாக எடுத்துக் கொள்ள…
-
- 0 replies
- 385 views
-
-
சாவகச்சேரி நகர சபை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை முந்திக்கொண்டு செலுத்தியது ஈ.பி.டி.பி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முதல் கட்சியாக கட்டுப்பணத்தைச் செலுத்தியது. யாழ். மாவட்ட தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு வருகைதந்த அந்தக் கட்சியின் யாழ்ப்பாண உதவி நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் கட்டுப்பணத்தைச் செலுத்தினார். உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு கட்டுப்பணத்தை ஏற்கும் நாள் நேற்று தொடக்கம் டிசெம்பர் 13 ஆம் திகதிவரை என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது. வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மட்டுமே வேட்பு…
-
- 0 replies
- 320 views
-
-
கடதாசி தட்டு தயாரிக்கும் இயந்திரம் ஐ.பி.சி தமிழ் ஊடக தலைவரால் வழங்கிவைப்பு! உதயம் விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடதாசி தட்டு தயாரிக்கும் இயந்திரம் ஒன்று ஐ.பி.சி தமிழ் ஊடக தலைவர் கந்தையா பாஸ்கரனால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. உதயம் விழிப்புலன் அற்றோர் சங்கத்தினர் சிறு கைத்தொழில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவிற்கு அதிதியாக கலந்து கொண்ட கந்தையா பாஸ்கரன் அவர்களை சந்தித்து உதயம் அமைப்பினர் தமது செயற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். அவர்களது முயற்சிகளை நேரில் கண்ட ஐ.பி.சி தமிழ் ஊடக தலைவ…
-
- 0 replies
- 408 views
-
-
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதிருப்பது நன்று தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினர் அரசியல் நோக்கம் கொண்டு குழப்பியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று தசாப்தகால யுத்தத்தினால் தமிழ் மக்கள் பெரும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்று வந்த இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாயினர். ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயினர். 90 ஆயி…
-
- 0 replies
- 656 views
-
-
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஈழ அகதிகள் தமிழகத்தின் தூத்துக்குடி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒன்பது பேர் இராமேசுவரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச்சென்றது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது. இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில் உள்ள சிலர் தங்களது உறவினர்களைப் பார்க்க இராமேசுவரத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு சென்று விடுகின்றனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரியந்தி (32), பரமநாதன் (37), மற்றொரு பரமநாதன் …
-
- 0 replies
- 364 views
-
-
நாட்டின் தலைமைப் பொறுப்பில் தமிழர்கள் அமர்வதற்கு காலம் எடுக்கும் நாட்டின் தலைமைப் பொறுப்பில் தமிழர்கள் அமர்வதற்கு காலம் எடுக்கும் நாடாளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவிப்பு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கே எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது எனில், சிறுபான்மையினர் அரச தலைவர், தலைமை அமைச்சர் ஆசனங்களில் அமர்வதற்கு நீண்டகாலம் செல்லும் என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றக் குழுநி…
-
- 0 replies
- 448 views
-
-
மாவீரர் தினம் என்பதனால் விஜயகலா சபையில் மகிழ்ச்சியாக இருக்கிறார் : ரோஹித அபேகுணவர்த்தன எம்.பி. தெரிவிப்பு (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) மாவீரர் தினம் என்பதனால் விஜயகலா மகேஸ்வரன் இன்று சபையில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கூறியதால் சபையில் தர்க்கம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்ட கூட்டு எதிர்…
-
- 0 replies
- 520 views
-
-
தமிழர்களால் உதாசீனம் செய்ய முடியாத உபதேசம் தமிழ் மக்கள், குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டாது விட்டால், விரைவில் இலங்கைத் தீவில் சிறுபான்மையிலும் சிறுபான்மை இனமாக, தமிழ் இனம் மாற வேண்டிய அவலநிலை ஏற்படும்” என வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோண்டாவில் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் பரிசளிப்பு விழா, அண்மையில் நடைபெற்றபோது, அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் அதன் அந்திம முடிவுகளும் பல்வேறு வகைகளிலும் பல்வேறு அழ…
-
- 0 replies
- 443 views
-
-
வட கிழக்கில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பொதுச்சுடரேற்றி அஞ்சலி (நமது பிராந்திய நிருபர்கள்) வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்வு நேற்று மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர். வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மாபெரும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேபோன்றே கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங…
-
- 0 replies
- 378 views
-
-
பைஸரின் உரையின்போது சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டிருந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று சபையில் பிரசன்னமாகி உள்ளூராட்சி மன்ற தேர்தல் தாமதம் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்க முற்பட்ட வேளை சபையில் கடும் சர்ச்சை வெடித்தது. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் பைஸர் முஸ்தபா உரையாற்ற ஆரம்பித்தார். அவர் தனது உரையில், அநு…
-
- 0 replies
- 281 views
-
-
வித்தியா கொலை சந்தேக நபர் மீது தாக்குதல் நடத்த இடமளித்திருந்தால் அன்றே வழக்கு நிறைவடைந்திருக்கும் பிமல் ரட்னாயக்கவின் குற்றச்சாட்டுக்கு நீதியமைச்சர் தலதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வித்தியா கொலை சந்தேக நபர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட முனைந்தமைக்கு இடமளித்திருந்தால் அந்த வழக்கு அன்றே நிறைவடைந்திருக்கும். தற்போது நீதிமன்ற நடவடிக்கை ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே குறித்த பெண் அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பொருத்தமானதல்ல. அவ்வாறான குற்றச்சாட்டுக்களை தொடராதீர்கள் என்று நீதித்துறை மற்றும் வெ ளிநாட்டு வேலைவாய்பப்பு அமைச்சர் தலதா அத்துக்கோ…
-
- 0 replies
- 227 views
-
-
2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேர்தலை நடத்த சிறுபான்மை தலைமைகள் எதிர்ப்பு ஏற்கவே முடியாதென மனோ, ஹக்கீம் திட்டவட்டமாக அறிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கு சிறுபான்மை கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.30இக்கு கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது உள்ளுராட்சி தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்குரிய நடவடிக்கைளை விரைந்து எடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. …
-
- 0 replies
- 169 views
-
-
தேர்தலை விரைவுபடுத்தும் பொறுப்பு சபாநாயகரிடம் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் பிரதமர் தலைமையில் குழுவும் நியமனம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தாமதமின்றி முன்னெடுப்பதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதோடு தேர்தலை விரைவுபடுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான பொறுப்பு சபாநாயகர் கருஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான கட்சி தலைவர்கள…
-
- 0 replies
- 200 views
-
-
சிவாஜிலிங்கம் இராணுவத்தினரைத்தான் நினைவுகூரவேண்டும்: சம்பிக்க ரணவக்க! தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவுகூறும் சிவாஜிலிங்கம் முதலில் இராணுவத்தினரைத்தான் நினைவுகூறவேண்டும் என தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், மாவீரர் தினத்தைக் கடைப்பிடிப்பவர்களும் விடுதலைப்புலிகள்தான், அவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களது விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களது நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு உட்பட ஸ்ரீலங்காவின் ஏ…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது. தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இம்முறை தாயகத்தில் உள்ள பெரும்பாலான துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தும் சூழல் அமைந்துள்ளது. போருக்குப் பின்னர், சிறிலங்கா படைகளால் அழிக்கப்பட்ட துயிலுமில்லங்கள், நினைவிடங…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழீழத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள்! உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து உந்துருளிப் பேரணி ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது. தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், பிவித்துரு ஹெல உறுமய இந்தப் பேரணியை ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான இளைஞர்கள் மத வழிபாட்டுடன் குறித்த பேரணியை ஆரம்பித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, “சமஷ்டி ஆட்சி வந்தால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதன் விளைவுகளை விரிவாக அச்சிட்ட துண…
-
- 6 replies
- 772 views
-
-
கிளிநொச்சி கனகபுரம்துயிலுமில்லத்திலிருந்து
-
- 1 reply
- 634 views
-
-
யாழ் .பல்கலையில் ஆரம்பமானது மாவீரர் நினைவேந்தல்! யாழ்.பல்கலைக் கழகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு தற்போது உணர்வுபூர்வமாக இடம்பெற்றுவருகிறது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்திலேயே குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலா் கலந்துகொண்டு மாவீரர் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினா். http://newuthayan.com/story/50843.html
-
- 3 replies
- 1.1k views
-
-
தொண்டமனாறு கடற்கரையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி யாழ்.வடமராட்சி தொண்டமனாறு கடற்கரையில் இன்று இரவு 8 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கடற்புலி மாவீரர்களின் நினைவாக படகுகளில் சென்று கடலினுள் சுடரேற்றப்பட்டது. பிரதான ஈகை சுடரினை வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார். http://globaltamilnews.net/archives/51875
-
- 0 replies
- 697 views
-
-
IMAGE தமிழர் தாயகத்தில் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாவீரர் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் திரண்ட மக்கள் மாலை 6.05 மணிக்குச் சுடரேற்றி மாவீரர்களை நினைவில் ஏந்தி அஞ்சலித்தனர். மாவீரர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கண்ணீருடன் மாவீரர்களை அஞ்சலித்தனர். கனகபுரம், கிளிநொச்சி யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் ஈச்சங்குளம், வவுனியா இரணைப்பா…
-
- 0 replies
- 885 views
-
-
வவுனியா வளாகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே குழப்பம்! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளுக்கு வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துத் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் இன்று பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியுள்ளனர். பின்னர் தமது விடுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். குறித்த புகைப்படங்களை அவதானித்த சிங்கள மாணவர்கள், பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டுள்ளனர். எனினும் விடுதி மேற்பார்வையாளர் இரு பிரிவினரையும் சமரசம் செய்து வை…
-
- 1 reply
- 442 views
-
-
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்! தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் உறவினர்களால் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி உணர்வுபூர்வமாக மாவீரர்களை அஞ்சலித்தனர். இ…
-
- 1 reply
- 944 views
-