ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
தன்மானம்,சுயமரியாதையை விட்டு பட்ஜட்டுக்கு ஆதரவளித்துள்ளோம் சபையில் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீதரன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்பதற்காக எமது தலைவர் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்கு அமைவாக எமது தன்மனாத்தையும் சுயமரியாதையும் விட்டு வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கல்வி, விளையாட்டுத்துறை, உள்ளக அலுவல்கள், வடமேல்,கலாசார அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களுக…
-
- 4 replies
- 449 views
- 1 follower
-
-
ஆவா முக்கிய செயற்பாட்டாளர் பொற்பதியில் கைது!! ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஹந்தவெல தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொற்பதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குத் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக் கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். http://newuthayan.co…
-
- 2 replies
- 417 views
-
-
தமிழ்–முஸ்லிம் ஒற்றுமையின்மை இரண்டு சமூகங்களுக்கும் ஆபத்தானது தமிழ்–முஸ்லிம் ஒற்றுமையின்மை இரண்டு சமூகங்களுக்கும் ஆபத்தானது வவுனியா பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தாமல் இருப்பது இரண்டு சமூகங்களுக்கும் ஆபத்தானது என்று தெரிவித்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வவுனியா பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று வவுனியா பட்டானிச்சூரில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வ…
-
- 0 replies
- 357 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியினரை எச்சரிக்கும் ஜனாதிபதி மைத்திரி! ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது அவற்றை எதிர்த்து தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளைத் துறந்து மக்களுடன் இணைந்தவாறு அவற்றிற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிக்கவரட்டிய பிரதேசத்தில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ளவர்களும் அரச…
-
- 0 replies
- 331 views
-
-
வடக்கிலும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர்- அளுத்கமகே ‘‘வடக்கில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்படவேண்டும். கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுவரும் விளையாட்ட ரங்கைக்கூட இன்னமும் நிர்மாணித்து முடிக்கவில்லை’’ இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கல்வி அமைச்ச…
-
- 2 replies
- 485 views
-
-
உறவுகள் தாயகம் திரும்ப உதவுங்கள் மன்னார் மாந்தை மேற்குப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை, கூராய், சீதுவிநாயகபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து இந்தியா சென்று அங்கு அகதிகள் போன்று வாழ்வு வாழும் எமது உறவுகள் தாயகம் திரும்ப வழி ஏற்படுத்த வேண்டும் என அந்தக் கிராமங்களில் எஞ்சியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராமங்கள் அபிவிருத்தி அடையாததே அவர்கள் நாடு திரும்பாதத்துக்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது: ஏ-32 சாலையில் மன்னார் வீதிக்கு அண்மையில் அதிக விவசாயக் கிராமங்களும் பெரும் எண்ணிக்கையான கால…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையில் தன்னினச் சேர்க்கை அங்கீகரிக்கப்படும்(மா)? இலங்கையில் தன்னினச் சேர்க்கை, இருபால் உறவு போன்ற பாலியல் செயற்பாடுகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான முயற்சிகளை அரசு ஆரம்பித்துள்ளது. ஐ.நா.வின் ஆலோசனைப்படியே இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐ.நா.வின் மனித உரிமைகள் மீதான சீராய்வுகளின்போது, இலங்கையில் தன்னினச் சேர்க்கை உட்பட முறைசாரா பாலியல் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் கேள்வி எழுப்பின. இலங்கையின் சட்டங்களின்படி இவ்வாறான செயற்பாடுகளுக்கு பத்து ஆண்டுகால சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியும். ஐ.நா.வின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் இவ்வாறான பாலியல் செயற்பாடுகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்…
-
- 0 replies
- 554 views
-
-
பெண் சட்டத்தரணி மீது காவலர்கள் முறையீடு! சட்டத்தரணி சர்மினி மீது சிறைச்சாலை அதிகாரிகள் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவரான நிஷா விக்டரைத் தாம் வேண்டுமென்றே தப்பிக்க விட்டனர் எனத் தெரிவித்துத் தம்மைக் கடுமையான வார்த்தைகளால் அவர் திட்டினார் என்று அந்த முறைப்பாட்டில் சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவர் நிஷா விக்டர் எனப்படும் சக்திவேல்நாதன் நிசாந்தன் (வயது –22). கொக்குவிலில் பொலிஸார் இருவ…
-
- 0 replies
- 511 views
-
-
இளைஞர்களின் முகநூல் பதிவுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலர் முறைப்பாடு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுங்கேணி பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரினால் நெடுங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டு உள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நின்ற பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் கீழ் உள்ள மதிலில் ‘ மர நடுகை மாதம் ‘ எனும் தொனிப்பொருளில் பதாகை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம் பிடித்து தனது முகநூலில் பகிர்ந்து உள்ளார். குறித்த இளைஞன் பகிர்ந்த படத்தை மற்றுமொரு இளைஞன் தனது முகநூலில் பகிர்ந்து பகிர்ந்துள்ளார். …
-
- 3 replies
- 468 views
-
-
விடுதலைப்புலிகள் காலத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இருந்த உறவு அம்பலமாகியது.! விடுதலைப்புலிகளின் காலத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் அதிகாரிகள் …
-
- 0 replies
- 619 views
-
-
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுரூத்தல்களுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்ட்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று காலை மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட…
-
- 0 replies
- 213 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தேர்தலில் தனித்து போட்டியிடும் முன்னாள் கிழக்குமாகாணசபைத்தலைவர் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையர்களுக்கு நாசா அறிவித்தல் சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் இன்று மாலை இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து செல்லவுள்ளது. இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையின் தென்மேற்கு திசையில் குறித்த சர்வதேச விண்வெளி நிலையமானது பயணிக்கவுள்ளதாகவும் 5 நிமிடங்களே அது பயணிக்கவுள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களால் பார்வையிட முடியுமென நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/2735…
-
- 3 replies
- 877 views
-
-
ஹிருணிகாவை தவிர 6 பேருக்கு கடூழிய சிறை தெமட்டகொட பிரதேசத்தில், இளைஞன் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்ட மேற்படி வழக்கின் தீர்ப்பு, நீதிபதி ஆர். குணசிங்ஹவினால் இன்று (24) வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தவிர அவருடைய மெய் பாதுகாவலர்களான எட்டுபேரில் ஆறுபேருக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அறுபேருக்கும் 12 வருடங்…
-
- 0 replies
- 221 views
-
-
தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது தமிழ் மக்களில் பெரும்பாலோர் எதிர்பார்த்தமை போன்று கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற சுரேஸ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமாரும் இணைந்து இந்த முன்னணியை உருவாக்கியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையும் இந்த முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்குமென நம்பப்படுகிறது. தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டபோது அது கூட்டமைப்புக்கு எதிரான அமைப்பொன்றாகவே கருதப்பட்டது. ஆனால் கூட்டமைப் பைச் சேர்ந்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பேரவையுடன் இணைந்து கொண்டார். பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவர…
-
- 1 reply
- 415 views
-
-
யாழில்.ஆவா குழுவை பிடிப்பதற்கு, ஐஸ் கிறீம் குடிக்கும் காவற்துறை.. யாழில். வீதி சோதனைகளில் ஈடுபட்டு உள்ள சில காவற்துறையினர் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழில்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டநிலையில், குறித்த வாள் வெட்டு சம்பவங்களை ஆவா குழு எனும் குழுவே மேற்கொண்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்து தேடுதல்களை மேற்கொண்டு உள்ளனர். அதனை தொடர்ந்து யாழில். தற்போது வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அதேவேளை ஆவா குழுவை சார்ந்த பலரை பொலிசார் கைது செய்துள்ளனர். அந்நிலையில் தற்போது ஆவா குழுவை கட்டுப்படுத்த என வீதி…
-
- 2 replies
- 508 views
-
-
மஹிந்தவுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரண்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு அமைச்சர்கள் இவ்வாறு மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜோன் செனவிரட்ன ஆகியோரே இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மைத்திரி தரப்பினையும் மஹிந்த தரப்பினையும் இணைக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சவார்த்தைகள் பூரண வெற்றி அளிக்காவிட்டாலும் சாத…
-
- 0 replies
- 273 views
-
-
துயிலுமில்ல இராணுவ முகாம்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவம்! மாவீரர் துயிலும் இல்ல காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை பலப்படும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ள நிலையில், குறித்த துயிலுமில்ல காணியில் ஒரு பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுக்காக மாவீரர்களின் பெற்றோர் உறவுகளால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இராணுவம் குறித்த துயிலுமில்ல காணியில் உள்ள இராணுவ முகாமை சுற்றி புதிதாக காவல் நிலைக…
-
- 0 replies
- 388 views
-
-
‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’ க.அகரன் “பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்), சலசலப்புக்கு அஞ்சாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினுடனான கொள்கை முரண்பாடு காரணமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் புதிதாக இணைந்துகொண்ட சிலர் தமிழரசுக் கட்சியால் உள்வாங்கப்பட்டு வரும் நிலையிலேயே, தான் இவ் அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிடுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 370 views
-
-
கிழக்கில் இன்று தொடக்கம் கூட்டமைப்பு தீவிர பரப்புரை கிழக்கில் இன்று தொடக்கம் கூட்டமைப்பு தீவிர பரப்புரை புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் இன்று முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பிக்கின்றது. கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இதனை ஆரம்பித்து வைப்பார். புதிய அரசமைப்புக்…
-
- 0 replies
- 269 views
-
-
முன்னாள் போராளி ஒருவரைக் காணவில்லை என மனைவி முறைப்பாடு முன்னாள் போராளி ஒருவரைக் காணவில்லை என மனைவி முறைப்பாடு முன்னாள் போராளி ஒருவரை காணவில்லை என மன்னாா் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மன்னாா் எருக்கலம்பிட்டி, 5 ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான தனது கணவா் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இராசையா…
-
- 0 replies
- 702 views
-
-
வடமாகாண அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) வடமாகாண கல்வி அமைச்சர் தேசியக் கொடியை அவமதித்ததற்கு எதிராக ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த அதிகாரத்தில் எந்த பயனும் இல்லை. அத்துடன் தேசிய கொடியின் கெளரவத்தை பாதுகாப்பது ஜனாதிபதியின் கடமை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜீ. எல்,பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெ…
-
- 0 replies
- 241 views
-
-
மாங்குளத்தில் விகாரைகள் அமைக்க முடியாதென்றால் வெள்ளவத்தையில் கோவில் நிர்மாணிக்கவும் முடியாது (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு மாகாண கல்வி அமைச்சரே தேசியக் கொடியை அவமதித் தால் மாணவர்களின் நிலைமை என்னவாகும்? மாங்குளத்தில் விகாரை கள் அமைப்பதினால் நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்று கருத வேண்டாம். அப்படியாயின் வெள்ளவத்தையிலும் இந்து கோவில்கள் நிர்மாணிக்க முடியாது.இந்த அரசாங்கமே மாகாணங்களுக்கு சம அதிகாரங்களை வழங்கியுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் செயற்பட்டு வருகின்றோம். ஆகையால் எவரும் இனவாதத்துடன் செயற்படுவதற்கு இடமளிக்க மாட்…
-
- 0 replies
- 264 views
-
-
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தது கூட்டு எதிரணி (ஆர்.ராம்.எம்.எம்.மின்ஹாஜ்) உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக பாராளு மன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர். பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜய சூரியவிடம் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர். பாராளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் அமைச்சர் பைசஸ் முஸ்தபா ஏமாற்றியு…
-
- 0 replies
- 252 views
-
-
இந்திய திட்டங்களை விரைவுபடுத்துங்கள் பிரதமர் ரணிலிடம் நரேந்திர மோடி வலியுறுத்தல் நெருக்கடிகளை தீர்க்க முடியும் என ரணில் நம்பிக்கை (நமது விசேட நிருபர்) இலங்கையும் இந்தியாவும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை அளித்து அதுதொடர்பாக தீவிர கவனம் செலுத்தி திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியிருக்கின்றார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையும் இந்தியாவும் இணைந்து முன்னெடுக்கும் திட்…
-
- 0 replies
- 144 views
-