ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
யாழ் பல்கலைகழகத்திற்கு இந்தியாவினால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் என்பன யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று(23) முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் இடம்பெற்றது. இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் இன்று 48 மில்லியன் ரூபாவுக்கு இரண்டு அதி சொகுசு பேரூந்துகள், டபிள்கப் வாகனம், மற்றும் உழவு இயந்திரம் என்பன இன்று பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மிகுதி தொகுதி வாகனங்கள், உபகரணங்கள் என்…
-
- 0 replies
- 419 views
-
-
யாழில் மீண்டும் துளிர்விடும் ஆயுதக் கலாசாரம்; பின்னணியில் யார்? யாழில் மீண்டும் துப்பாகிக் கலாசாரம் துளிர்விட ஆரம்பிக்கின்றதா என்ற ஐயத்திற்கிடமான கேள்வியினைத் தோற்றுவித்திருக்கின்றன அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள். போர் நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகளிடையே, கடந்த ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்மீது மீண்டும் ஆரம்பித்த துப்பாக்கிக் கலாசாரம் நேற்றைய சம்பவத்தில் வந்து நிற்கின்றது. இனி யார் என்ற கேள்விதான் இப்பொழுது மக்கள் மத்தியிலிருக்கும் மிகப்பெரிய கேள்வி. அதைவிட போர் ஓய்ந்தபின் அண்மைய ஆண்டுகளை விட இந்த ஆண்டில் மிக நெருக்கமான வாள்வெட்டுச் சம்பவங்கள். இன்னார் இனியார் என்றல்லாமல் வீதியில் செல்வோர் எல்லார்மீதும் இந…
-
- 0 replies
- 528 views
-
-
‘அரசமைப்பு உருவாக்கம் இப்போது வேண்டாம்’ அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக, வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கை, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட வேண்டும் என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் கல்யாணி கரக சபா (நிர்வாகக் குழு), ஏகோபித்தமாக முடிவெடுத்துள்ளது. புதிய அரசமைப்பை வரைவதற்கான பொருத்தமான நேரம் இதுவன்று என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் அநுநாயக்க (இரண்டாம் நிலைத் தலைவர்) பேராசிரியர் வண. பெலன்வில விமலரத்ன தேரர், நேற்று (22) தெரிவித்தார். நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, நாட்டின் பாதுகாப்பு, பௌத்தம் ஆகியன தொடர்பில், இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட…
-
- 0 replies
- 549 views
-
-
ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர் ஐந்து புதிய தூதுவர்கள் மூன்று புதிய தூதுவர்களும் இரண்டு உயர் ஸ்தானிகர்களும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கனடா, ரஷ்யா, மாலைத்தீவு, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவின் உயர்ஸ்தானிகராக டேவிட் மெக்கினன், ரஷ்யத் தூதுவராக யூரி பி மெற்றியரி, மாலைதீவின் தூதுவராக மொஹமட் ஹுசைன் ஷரீப், பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராக சகீத் அஹமட் ஹஸ்மத், எகிப்தின் தூதுவராக ஹுசைன்எல் சகார்த்தி ஆகியோர் புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்கள் ஆவர். இலங்க…
-
- 0 replies
- 354 views
-
-
புதிய அரசியல் திருத்தம் எப்போது வருகிறதோ அன்றே நாடு சுபீட்சமாகும் சுமந்திரன் எம்.பி கூறுகிறார் Share இலங்கையில் அனைவரும் சம பிரஜைகளாக வாழக் கூடிய புதிய அரசியல் திருத்தம் எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இந்த நாடு சுபீட்சம் அடையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அரச தலைவர் நடமாடும் சேவையின் நிறைவு நாள் நிகழ்வு வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேலும் தெரி…
-
- 1 reply
- 440 views
-
-
இன்று ஆரம்பம் : அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன. இப் போராட்டம் தொடர்பாக அவர்கள் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து வேட்டை போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானம் செய்துள்…
-
- 1 reply
- 459 views
-
-
புதிய தேர்தல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள 50க்கு 50 என்ற முறை நியாயமற்றது புதிய தேர்தல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள 50க்கு 50 என்ற முறை நியாயமற்றது - பாதிப்பை உண்டாக்கும்; முதல் தடவையாக வாய் திறந்தார் சுமந்திரன் MP புதிய தேர்தல் முறையில் பாதிப்பு இல்லை என்று ஆளும் கட்சியில் இருக்கும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறித் திரியும் நிலையில் 50க்கு 50 என்ற முறை நியாயமற்றது. பாதிப்பை உண்டாக்கக் கூடியது தான் என்று புதிய தேர்தல் முறை மற்றும் அரசியல் யாப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெளிவாக குறிப்பிடுகிறார். உரை: ரஸ்மின் MISc (தலைவர் SLTJ)
-
- 0 replies
- 593 views
-
-
அரசியல்வாதிகளுக்கு இங்கு வேலையில்லை அரச தலைவர் வவுனியாவில் உரை Share வடக்கிலுள்ள அரச அதிகாரிகள் தத்தமது கடமைகளைச் சீராகச் செய்திருந்தால் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு இவை முன்னரே கிடைத்திருக்கும். அவ்வாறு செய்திருந்தால் நாங்கள் இங்கு வந்திருக்கவே தேவையில்லை. இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் தெரிவித்தார். அரச தலைவர் நடமாடு சேவை வவுனியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அங்கு தனது உரையில் இந்த விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டிக் கடிந்து…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கை மருத்துவர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சார்பில் சேவையாற்றுகின்றார்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை மருத்துவர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சார்பில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளினால் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர் ஒருவரும் தீவிரவாதிகளின் சார்பில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்திய மருத்துவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மருத்துவ வசதிகள் குறித்து காணொளியில் விபரித்துள்ளார். அவுஸ்திரேலியா, ரஸ்யா, இலங்கை போன்ற நாடுகளின் மருத்துவர்களும் இவ்வாறு சேவையாற்றி வருவதாக குறித்த இந்திய மருத்துவர் காணொளியில் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாத…
-
- 0 replies
- 256 views
-
-
மூனசிங்கவால் கட்சிகளுக்குக் கிடுக்குப்பிடி? நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளினதும் முக்கிய தலைவர்களின் பிரஜாவுரிமைகள் பற்றிய விவரங்களைக் கோருவதற்கு, தேர்தல் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது எனத் தெரியவருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஷாலிலா மூனசிங்க, வெளிநாட்டுப் பிரஜாவுரிமை கொண்டவர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இது தொடர்பாக ஆராய்வதற்கு, தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் ஒன்றுகூடியிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. மூனசிங்க, இலங்கையின் அரச நிறுவனமான லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்ததோடு, ப…
-
- 0 replies
- 424 views
-
-
ரூ.251 மில்லியனை விழுங்கிய யானை தலதா மாளிகைக்கு, மியன்மாரிலிருந்து யானையொன்றை கொண்டு வருவதற்காக 251 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. திறந்த சந்தையில் 10 முதல் 15 மில்லியன் ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ள வேண்டியை யானைக்கு, 261 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. யானைகளைப் பதிவு செய்தல் மற்றும் பெற்றுக் கொள்ளப்படுவது தொடர்பில் இடம்பெற்றதெனக் கூறப்படும் மோசடிகளை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் நிமல் எட்வர்ட் திசாநாயக்க பங்கெடுத்த தனிநபர் ஆணைக்குழு, நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு, இத…
-
- 0 replies
- 431 views
-
-
‘சமஷ்டி என்பது அரசியல்வாதிகளால் கெட்ட சொல்லாக்கப்பட்டுவிட்டது’ சமஷ்டி என்பது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக, தீய சொல்லாக்கப்பட்டு விட்டது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி என்பதற்கு, பெரும்பான்மை மக்களிடத்தில் காணப்படும் எதிர்ப்புத் தொடர்பில் கேட்கப்பட்ட போது பதிலளித்த முதலமைச்சர் சி.வி, “என்னுடைய கொழும்பு நண்பர்களுக்கு, சமஷ்டியின் நன்மை பற்றித் தெரியும். கவலைப்படாதீர்கள். அவர்களை நான் சமாளித்துக் கொள்வேன். “உண்மையான சமஷ்டி வழங்கப்பட்ட உடன், இந்த நாடு, செழிப்…
-
- 0 replies
- 384 views
-
-
கொக்குவிலில் பெற்றோல்குண்டு வீச்சு ,மீது வாள்வெட்டு கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பிறவுண் வீதியில், நேற்றிரவு கூரிய வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மீது பெற்றோல் குண்டு வீசி விட்டு வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். பெற்றோல் குண்டு வீச்சு மற்றும் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதல் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/
-
- 0 replies
- 415 views
-
-
கைதிகளுக்கு சீரான சிகிச்சை : அமைச்சர் சுவாமிநாதன் (ஆர்.ராம்) உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கான சீரான சிகிச்சை தொடர்ந்தும் அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்றுவந்த வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதிய…
-
- 0 replies
- 309 views
-
-
எமக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை புதிய அரசியல் யாப்பை எதிர்க்க கைகோருங்கள் (கே.குமணன்) தேர்தல்களில் தமிழ் தேசிய மக்கள் முன் னணிக்கு நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை. ஆனால் தமிழ் இனத்துக்கு முழுக்க முழுக்க பாதகமான முறை யில் கொண்டு வரப்படும் புதிய அரசியல் யாப்பை எதிர்ப்பதற்கு மக்களாகிய நீங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு கைகோர்க்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட பணிமனை திறப்பு விழாவும் மக்களுடனான சந்திப்பும்…
-
- 0 replies
- 382 views
-
-
கொழும்பில் ஆர்ப்பாட்டம் (ஆர்.ராம்) அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு தலைசாய்த்து உடன் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நீதி அமைச்சுக்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்களான அரசியல் கைதிகளின் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளதாவது, அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு கோரி மூன்று தமிழ் அரச…
-
- 0 replies
- 251 views
-
-
வித்தியாவின் குடும்பத்திற்கு மேலும் உதவிகளை வழங்க ஜனாதிபதி உறுதிv வீட்டின் காணி உறுதிப்பத்திரமும் வழங்கிவைப்பு (நமது நிருபர்) பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு மேலும் உதவிகளை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேசிய மக்கள் வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா குருமன்காட்டில் அரசாங்கத்தினால் வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டிற்கு விஜயம் செய்திருந்தார். …
-
- 0 replies
- 227 views
-
-
உதயன் மீது வடமராட்சியில் சீறிப் பாய்ந்தார் சுமந்திரன் Share அச்சு ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு அரசை தர்மசங்கடத்துக்குள் தள்ளி வருகின்றன. குறிப்பாக வடபகுதியில் இருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகை இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறு நேற்றுச் சீறிப் பாய்ந்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன். உடுப்பிட்டித் தொகுதி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுடனாக சமகால அரசியல் கலந்துரையாடல் கரணவாய் மூத்தவிநாயகர் ஆலயத்துக்கு…
-
- 0 replies
- 380 views
-
-
கட்டார் செல்கிறார் ஜனாதிபதி (நமது நிருபர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ளார். கட்டார் செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதுடன், அங்குள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார். இவ்விஜயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இன்னும் சில அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து கட்டார் செல்லவுள்ளனர். இதேவேளை, கட்டா…
-
- 0 replies
- 345 views
-
-
மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது மத்திய குழு கூட்டத்தை அடுத்து சுரேஷ் குற்றச்சாட்டு வவுனியா, மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கட்சியின் அரசியல் குழு கூடி தீர்மானிக்கும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் வவுனியா இந்திரன் விடுதியில் ஐந்து மணித்தியாலங்கள் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த மத்தி…
-
- 0 replies
- 513 views
-
-
அரியாலையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு அரியாலைப்பகுதியில் சற்று முன்னர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். http://newuthayan.com/story/39559.html
-
- 10 replies
- 1.9k views
-
-
அரசியலமைப்புக்கான முயற்சியில் பின்னணியில் உள்ளோர் யார்? கோத்தபாய ராஜபக் ஷ விளக்கம் (எம்.ஆர்.எம்.வஸீம்) யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட எந்த நாடும் உலகில் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி…
-
- 0 replies
- 283 views
-
-
தீங்கிழைக்கும் அரசியலமைப்பினை அங்கீகரித்து கையொப்பமிடேன் சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதி (ஆர்.ராம்) பௌத்த மதத்தின் முதன்மை ஸ்தானத்திற்கோ அல்லது நாட்டிற்கோ தீங்கிழைக்கும் எந்தவொரு அரசியல மைப்பு யோசனைக் கும் நான் கையொப்பமிட மாட்டேன் என மாநாயக்கர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தலைவர்களுக்கும் உறுதியளிக்கின்றேன் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக…
-
- 0 replies
- 247 views
-
-
யாழ். ரயில் சேவை இன்று முதல் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.! கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தினங்களில் ரயில் முற்பதிவு செய்த பயணிகள் சிறப்பு பஸ் மூலமாக நாவற்குழி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ்…
-
- 0 replies
- 315 views
-
-
''அதிகார பகிர்வின் மூலம் தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை" (எம்.ஆர்.எம்.வஸீம்) யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/26155
-
- 2 replies
- 525 views
-