ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
அரசியலுக்காக மகாநாயக்கர்களை இனவாதிகள் பயன்படுத்துகின்றனர் இனவாதிகளும் அரசியலில் தோல்வியுற்றவர்களும் மகாநாயக்க தேரர்களை தங்கள் குறுகிய அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் விடயங்களை மகாநாயக்க தேரர்கள் தீர ஆராய்ந்து பார்க்காமல் சமூகத்தைப் பாதிக்கும் வகையில் அந்தக் கருத்துக்களை மக்களுக்குக் கூறக்கூடாது. அரசின் அனைத்துச் செயற்பாடுகளையும் எதிர்க்கும் மகாநாயக்கர்களின்போக்கை தோல்வியுற்றவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு புதிய அரசமைப்புக்கான தேசிய அமைப்பு நேற்றுத் …
-
- 0 replies
- 305 views
-
-
புங்குடுதீவு மாணவி வித்தியா வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுவதாக உறுதி யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதியை இன்றையதினம் சந்தித்துள்ளார் வவுனியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வித்தியாவின் குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்ச்சியின் முடிவில் வவுனியா பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி, வித்தியாவின் குடும்ப உறுப்பினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். …
-
- 0 replies
- 280 views
-
-
இந்த வாரத்துக்கான வடமாகாண முதலமைச்சருக்கான கேள்வியும் பதிலும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வாரத்திற்கு ஒரு கேள்வி : மக்களால் கேட்கப்படும் பொதுவான கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாராவாரம் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். இந்த வாரத்தின் கேள்வியும் பதிலும் இதோ – கேள்வி – அரசியல் யாப்பை மாற்றக்கூடாதென மகா நாயக்க தேரர்கள் கோரியிருப்பதாக செய்தி வந்தது. தற்போது பிரதமர் மகா நாயக்க தேரர் ஒருவர் வெளி நாட்டில் இருக்கும் போது இவ்வாறான தவறான செய்தியைப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில் – இன்று தமிழர்கள் படும் அவஸ்தைக்குப் போதிய உர…
-
- 0 replies
- 291 views
-
-
புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த மைத்திரி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.30 மணியளவில் "நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை" ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பரிசில்கள் வழங்கப்படவிருந்த நிலையில் அக் கௌரவிப்பு இடம்பெறமால் மாவட்ட மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர…
-
- 0 replies
- 283 views
-
-
உங்களுக்காக எங்களின் கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடை கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார். இன்று (21) கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில் இடம்பெற்ற வயலும் வாழ்வு மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவா் இவ்வாறு தெரிவித்தாh். அவா் மேலும் தெரிவிக்கையில் கடந்த இரண்டரை வருடங்களாக யாழ் இந்திய துணைதூதுவராக இருக்கும் தான் இதுவரை இங்கு வந்து உங்களை சந்திக்காமை கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார். இருந்தும் இன்று சந்தித்திருப்பது மகிழ்ச்ச…
-
- 0 replies
- 309 views
-
-
கோண்டாவிலில் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு முயற்சி:சிறுவன் கைது கோண்டாவில் அரசடி விநாயகர் ஆலயத்தில் உண்டியல் உடைக்கச் சென்ற சிறுவன் ஒருவன் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் சற்று முன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுமார் 14 வயது மதிக்கத்தக்க இந்த சிறுவன் கோவில் உண்டியல் உடைக்கும் முயற்சியில் இரு நாட்களாக ஈடுபட்டதாகவும் நேற்று அப்பகுதி மக்களால் எச்சரிக்கப்பட்டு விடுவித்த போதும்,இன்றும் அந்த சிறுவன் உட்பட மேலும் இருவர் அக்கோவிலுக்கு வந்து உண்டியலை உடைக்க முற்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் தப்பி ஓடிய நிலையில் இச்சிறுவன் பிடிபட்டுள்ளான். ஆலய நிர்வாகத்தினர் பொலீசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்…
-
- 0 replies
- 332 views
-
-
சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் லக்ஷபான இரானுவத்தினர் நல்லத்தண்ணி, சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் இன்று காலை முதல் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே கடந்த 18 ஆம் திகதி பகல் குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையினால் சிவனொளிபாதமலைக்கு செல்லும் நடை பாதை சுமார் 15 மீட்டர் தூரம் வரை தடைப்பட்டது பருவகாலத்தில் மலையுச்சிக்கு செல்லும் பாத யாத்திரிகளினால் எரியப்பட்ட பிளார்ஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது . கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அக…
-
- 0 replies
- 217 views
-
-
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு வவுனியாவில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவானது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சற்று முன் வவுனியாவிற்கு சென்றடைந்துள்ளனர். இவர்களின் வருகையை முன்னிட…
-
- 0 replies
- 434 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சி 21.10.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 249 views
-
-
சொந்தத் தேவையால் உறுப்பினர்கள் வடமாகாண சபை அமர்வுக்கு வருவதில்லை- பேரவைச் செயலகம் சொந்தத் தேவை காரணமாக வடக்கு மாகாண சபையில் இடம்பறும் சபை அமர்வுகளில் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என பேரவைச் செயலகத்தின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வடக்கு மாகாண சபையில் இதுவரை நடைபெற்ற அமர்வுகளின் அடிப்படையில் அந்தப் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்தப் புள்ளி விவரத்தின்படி மேலும் தெரியவருவதாவது: வடக்கு மாகாண சபை தோற்றம் பெற்ற பிறகு இதுவரை 108 சபை அமர்வுகள் நடைபெற்றுள்ளன. சபை அமர்வு என்பது மிக முக்கியமான தொன்றாகும். மக்கள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் …
-
- 0 replies
- 326 views
-
-
யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் 21 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வுகளே இன்று இடம்பெற்றுள்ளன. https://news.ibctamil.com/ta/internal-affairs/29th-of-the-massacre-of-the-teaching-hospital
-
- 4 replies
- 1.3k views
-
-
காணாமல்போனோர் சான்றிதழைபெற அதிகமானோர் அஞ்சுகின்றனர் நேர்காணல் : எம்.எம்.மின்ஹாஜ் ஜனாதிபதி மக்கள் சேவை இன்று வவுனியாவில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. இங்கு இலவசமாக அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், விவாக சான்றிதழ், சாரதி அனுமதிப்பத்திரம், இலவச மூக்குக் கண்ணாடி, காணி உறுதிப் பத்திரம் திருமணப் பதிவு போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழைப் பெற்று கொள்வதற்கு பெரும்பாலானோர் அஞ்சுகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விடுவார்களோ என்று அஞ்சுகின்றனர். எனவே அந்த சந்தேகம் நீங்கிய பின்னர் அதனை பெற்றுக்கொள்ள முன்வருவார்கள் என நம்புகின்…
-
- 0 replies
- 533 views
-
-
ஒருமித்த நாடு என்ற விடயத்தை முன்வைத்து அனைத்தையும் குழப்பிவிட்டனர் சிரால் லக்திலக்க கேசரி நாளிதழுக்கு விசேட செவ்வி நேர்காணல்-: ரொபட் அன்டனி (படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்) பிரபாகரனைவிட சிறந்த யுத்த தளபதி இல்லை. அவரே தோற்கடிக்கப்பட்டுவிட்டார். இதனை நான் கூறியதும் தமிழ் மக்கள் கவலைப்படுவார்கள். ஆனால் இதுதான் உண்மையாகும். யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 20 வருடங்களாக அதிகாரப் பகிர்வுக்காக மற்றும் ஐக்கிய இலங்கை என்ற விடயங்களுக்காக குரல் கொடுத்துவரும் ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் சமஷ்ட…
-
- 0 replies
- 439 views
-
-
''பத்து வருடங்களில் மூன்றரை இலட்சம் விபத்துக்கள்'' (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் பத்து வருட காலத்தில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 137 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துகளினால் 25 ஆயிரத்து 624 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி யுத்த காலப்பகுதியில் கூட இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்…
-
- 0 replies
- 371 views
-
-
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தெஹிவளை பகுதியிலேயே ஐந்து பேரை கடத்தினோம் முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களின் கீழ் சேவையாற்றிய மூவர் சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் (எம்.எப்.எம்.பஸீர்) தெஹிவளை பகுதியில் வைத்தே கடந்த 2008.09.17 அன்று ஐந்து பேரை தாம் உள்ளிட்டோரே கடத்தியதா கவும், லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி யின் தலைமையிலேயே அந்த நடவடிக்கை இடம்பெற்ற தாகவும் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப் புலனாய் வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு கடத்தப்பட்டோரை கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப் போது இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப் பட்டு…
-
- 1 reply
- 295 views
-
-
ஏறாவூர், சவுக்கடி இரட்டைக்கொலை தொடர்பில் மூவர் கைது
-
- 0 replies
- 403 views
-
-
வவுனியாவில் ஜனாதிபதி தலைமையிலான நிகழ்வு ஆரம்பம் ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவையின் மூன்றாவது நடமாடும் சேவை வவுனியாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா - சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் தற்போது இந்த நிகழ்வு ஆரம்பமாகியது. இவ்நடமாடும் சேவைக்கு ஜனாதிபதி,பிரதமர் உள்நாட்டலுவல்கள், அமைச்சர் சிறைச்சாலைகள்,மீள குடியேற்ற அமைச்சர், வர்த்தக அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளதுடன், அதிகளவான வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழ…
-
- 0 replies
- 385 views
-
-
இந்தியாவின் சுரக்ஷா போர்க்கப்பல் இன்று இலங்கையிடம் ஒப்படைப்பு இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ள புதிய கடற்படை பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை வந்தடையும். இக் கப்பலுக்கு சுரக் ஷா என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் இரண்டாவது பாதுகாப்பு ஆயுதக் கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படை இந்திய அரசாங்கத்திடம் இருந்து கொள்வனவு செய்துள்ள ஈ–ஜி 60 ரகத்தை சேர்ந்த கடல் பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படும். அத்துடன் இன்று இக் கடற்படை பாதுகாப்பு போர்க்கப்பலுக்கு சுரக் ஷா என்ற பெயர் சூட்டப…
-
- 0 replies
- 380 views
-
-
''மாநாயக்கர்களுக்கு தொடர்பில்லை'' (செங்கடகல நிருபர்) புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர் பில் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களைச் மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டிருந்த அறிக்கைக்கும் மேற்படி பீடங்களின் மாநாயக்க தேரர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று மல்வத்த பௌத்த பீடத்தின் அனுநாயக்க திம்புல்கும்புர விமலதர்ம தேரர் அறிவித்துள்ளார். சங்க சபையினர் கூடி தீர்மானங்களை மேற்கொண்டபோதும் அந்த சந்தர்ப்பத்தில் மாநாயக்கர்கள் இருவரும் குறித்த கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருக்கிவில்லை என்றும் அவர்கள் நாட்டிலேயே இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள விமலதர்ம தேரர், ஆகவே…
-
- 0 replies
- 472 views
-
-
நீதிக்காக காத்திருந்த இரு தாய்மார் மரணம் சட்டத்தரணியின் உருக்கமான வாதத்தில் கண் கலங்கிய நீதிவான் (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில், தமது பிள் ளைகள் மற்றும் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்கும் என காத்திருந்த இரு தாய்மார்கள், காணாமல்போன உறவுகளின் ஏக்கத்திலேயே மரணமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் மன்றில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கோட்டை நீதிவான் லங்காஜயரத்னவின் கவனத்துக்கு நேற்று கொண்டு வந்தார். ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் தொடர்பில் வழக்கு விசாரணை நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன முன்னில…
-
- 1 reply
- 347 views
-
-
இலங்கையில் முழ்கியது இந்தியக் கப்பல் இந்தியாவில் இருந்து மாலைத்தீவு நோக்கிப் பயணித்த கப்பல் ஒன்று காலியில் இருந்து சுமார் 65 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் முழ்கியது. மாலைத்தீவுக்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலே இவ்வாறு கடலில் முழ்கியது எனத் தெரிவிக்கப்பட்டது. கப்பலில் பயணித்த ஏழு இந்திய நாட்டவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர். காப்பாற்றப்பட்டவர்கள் இன்று காலை காலி கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைத்தனர் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார் http://newuthayan.com/story/39040.html
-
- 0 replies
- 324 views
-
-
ரணிலின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்தார் மல்வத்துப்பீட செயலாளர் புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என்பதை இரண்டு பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைப்படியே அறிவிக்கப்பட்டதாக அஸ்கிரிப்பீட செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று முன்தினம் கூடிய அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான சங்க சபையில் புதிய அரசியலமைப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதனையடுத்து தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தேவையற்றத…
-
- 1 reply
- 292 views
-
-
ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமா? சபையில் தினேஷ் , பிரதமர் ரணில் இடையே வாக்குவாதம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் இன்னும் அமைச்சரினால் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படுமா? இல்லை தாமதிக்கப்படுமா? என தினேஷ் குணவர்தன எம்.பி வினவிய போது சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது எழுந்த வாக்குவாதத்தை அடுத்து உள்ளூராட்சி மன்ற சட்டமூலத்தில் திருத்தங்கள் பல செய்ய வேண்டி உள்ளமையினால் இது தொடர்பிலான அறிக்கையை அமைச்சர் அடுத்த வாரம் அ…
-
- 0 replies
- 333 views
-
-
பௌத்த மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையே இடைக்கால அறிக்கை கிளிநொச்சி மக்கள் கருத்து சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையிலேயே இலங்கையின் புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சியில் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அரசியலமைப்புச் சபையின் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான மக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் ó¼அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு கருத்துரைத்தனர். ம…
-
- 0 replies
- 158 views
-
-
நிலைமாறுகால நீதி செயற்பாடு அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் தெரிவிப்பு (ரொபட் அன்டனி) பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது. இந்த விடயத்தில் அரசியல் முன் னெடுக்கப்படுமானால் நிலைமாறு கால நீதி செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டுவிடும். இது நீதி செயற்பாடுகளாகும். மாறாக அரசியல் திட்டம் அல்ல என்பதனை எப்போதும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மோதல் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெர…
-
- 0 replies
- 541 views
-