ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அல் ஹுசைனின் அழுத்தத்திற்கிணங்கவே 21 ஆம் திகதி சமவாய சட்டமூலம் வருகின்றது இராணுவத்தினருக்கு எதிராக பாரிய வேலைத்திட்டம் என்கிறார் பீரிஸ் (எம்.சி.நஜிமுதீன்) இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தம் வலு வடைந்துகொண்டு வருகிறது. அதன் பின்னணி யில் புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டு இலங்கை இராணுவத்திற்கு எதிரான பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின் றன. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவை ஆணையாளர் அல் ஹுசைனின் அழுத்தத்திற்கிணங்கவே எதிர்வரும் 21ஆம் திகதி, வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்து…
-
- 0 replies
- 491 views
-
-
20 ஆவது திருத்தம், இடைக்கால அறிக்கை குறித்து ஆராய கூடுகிறது கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அதற்கு முன் ஒருங்கிணைப்புக்குழுவை கூட்டுமாறு ஈ.பி.ஆர்.எல்.எப்.கோரிக்கை (ஆர்.ராம்) 20ஆவது திருத்தச்சட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறி க்கை ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வ தற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு எதிர்வரும் 19ஆம் திகதி முற்பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் கூடவுள்ளதாக அனை த்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பாராளுமன்றக…
-
- 0 replies
- 272 views
-
-
மாகாண சபைகளின் அதிகாரங்களில் மாற்றம் இல்லை 20 ஆவது திருத்தச் சட்டம் மிகப் பெரிய விடயமாக இருக்காத போதிலும் அதில் தொடர்ந்தும் குறைபாடுகள் காணப்படுவதாக வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் மாகாண சபைகளின் அதிகாரங்களில் கை வைப்பதற்கான சரத்துக்கள் எதுவும் 20 ஆவது சட்டத்திருத்ததில் இல்லை எனவும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/20th-Amendment-Act-is-not-a-big-issue
-
- 1 reply
- 525 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் இன்று முதல் நடைமுறைக்கு ஸ்ரீலங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் கைச்சாத்துடன் இந்த வாரம் வெளியாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த அலுவலகத்தின் பணிகள் காணாமல் போனோரை அறிதலும் அதற்கான தீர்வை வழங்குவதுமாக அமையும் என்று தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கொழும்பில் உள்ள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் உட்பட ஏழு அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த நி…
-
- 0 replies
- 370 views
-
-
சாட்சியமளிக்க மாட்டேன் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நேரில் அறிவித்தார் அர்ஜுன் அலோஸியஸ் (எம்.எப்.எம்.பஸீர்) பிணைமுறி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தான் சாட்சியம் அளிக்கப் போவதில்லை என்று பேப்பச் சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோ ஸியஸ் நேரடியாக நேற்று ஆணைக் குழுவுக்கு அறி வித்தார். தனது சட்டத்தரணிகளுடன் நேற்று முன்தினம் வழங் கப்பட்ட ஆணைக்குழுவின் தீர்ப்பு மற்றும் சட்டத்தன்மை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் தான் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அர்ஜுன் அலோஸியஸ் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார். பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட வ…
-
- 0 replies
- 324 views
-
-
துன்னாலையில் மூவர் இன்று அதிகாலை கைது வடமராட்சிக் கிழக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த மூவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து துன்னாலைப் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/28761.html
-
- 0 replies
- 205 views
-
-
பன்னாட்டு அழுத்தம் அண்மையில் தன்னைச் சந்தித்திருந்த வெளிநாடுகளின் பிரதிநிதிகளிடம் ஒரு விடயத்தை எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். இலங்கையின் இரு முக்கிய பெரிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமது சுய நலத்துக்காக புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் அசட்டையுடன் செயற்படுகின்றன, பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் கொடுப்பதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும் என்று சம்பந்தன் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரை…
-
- 0 replies
- 380 views
-
-
சமஷ்டி குறித்த தீர்ப்பு தொடர்பில் பெருமிதம் வெளியிட்ட சுமந்திரன் ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றினால் அண்மையில் சமஷ்டி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மிகவும் முக்கியமான மாற்றம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக சுய நிர்ணய உரிமை, சமஸ்டி மற்றும் பகிரப்பட்ட இறையாண்மை என்பவற்றுக்கு அப்பால் சென்ற வகையில் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் வெளியிட்டுள்ளார். எனினும் சமஷ்டி குறித்த ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றின் தீர்ப்பில் புதிதாக எதனையும் குறிப்பிடப…
-
- 0 replies
- 352 views
-
-
சக்தி டிவி செய்திகள் 14 09 2017 , 8PM
-
- 0 replies
- 294 views
-
-
யாழ் பல்கலையில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் தியாகி திலீபனின் 30 ஆண்டு நினைவு தினம் நாளையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் காலை 9.30க்கு அனுஸ்ரிக்கப்பட உள்ளது. தமிழர் மீதான அடக்கு முறைக்கு எதிராக 1987 செப்டம்பர் 15 தொடக்கம் செப்டம்பர் 26 வரை 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அகிம்சை வழியில் உண்ணவாவிரதம் இருந்து தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்களினால் நாளை தொடக்கம் தொடர்ச்சியாக இது 12 நாட்களுக்கு நினைவு கூரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://news.ib…
-
- 0 replies
- 510 views
-
-
மைத்திரியிடம் ரூபா25 கோடி பேரம் பேசினாரா அருந்திக்க? கட்சியின் ஒழுக்க விழுமியங்களுக்கு எதிராகச் செயற்பட்டதாலேயே முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இவர் அரச தலைவரிடம் 25 கோடி ரூபா பேரம் பேசினாரா என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அருந்திக்க பெர்னாண்டோவிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊட…
-
- 0 replies
- 378 views
-
-
ஆட்சியைக் கவிழ்ப்பேன் அருந்திக்க எம்.பி தெரிவிப்பு சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் முழுமூச்சாக உழைக்கப் போகின்றேன். முதுகெலும்புடன் எழுந்து நின்று இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒன்றிணையுமாறு சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இவ்வாறு அரச தலைவரால் பதவி நீக்கப்பட்ட அருந்திக்க பெர்னான்டோ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: என்னை அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கியமை தொடர்பில் நான் எந்தக் கவலையும் அடையவில்லை. பிளவடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவத…
-
- 0 replies
- 400 views
-
-
வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரரை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் நேற்று மாலை போகம்பறை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்… குற்ற ஒப்புதலுக்கு அமைவாக மாத்திரமே இவர்களுக்கு தண்டனை வித…
-
- 8 replies
- 1.3k views
-
-
’புதிய வரைவு இதுவரை அனுப்பப்படவில்லை’ - எஸ். நிதர்ஷன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து நேற்றுக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், “வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தங்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். வவுனியாவிலும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்துச் சபைக்கும் இடையில் பல பிரச்சினைகள் உள்ளன. அது தொடர்…
-
- 0 replies
- 225 views
-
-
“கடல்காகம்“ போர்ப் பயிற்சி இலங்கை இராணுவத்தினரால் 8ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடல்காகம் – 2017 போர்ப் பயிற்சி திருகோணமலை குச்சவெளியில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கடல்காகம்-போர்ப்-பயிற்சி/46-203812
-
- 0 replies
- 207 views
-
-
காணாமல் போனோர் விவகாரம் : ஜனாதிபதி செய்வது தவறு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க முடியாது என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆரசியலமைப்புக்கு முரணணாக இந்த அலுவலகம் அமைக்கப்படுமாயின் எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைவோர் நீதிமன்றம் சென்று, வழக்கு தொடுக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையே தமக்கு உள்ள அச்சம் என மாற்றுக்கொள்கைக்கான ஆய்வு நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளிய…
-
- 1 reply
- 480 views
-
-
நிலவில் கால்வைத்ததைப் போல் பரவசமானோம் இரணைதீவு வாசி ஆனந்தக்கண்ணீர் இரணைதீவில் உள்ள எமது வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்கான கால்நடைகள் பல்கிப் பெருகிக் கட்டாக்காலிகளாக அலைகின்றன. அங்கு கால்வைத்தபோது ஆம்ஸ்ரோங் நிலவில் காலடி வைத்தபோது அடைந்ததாகக் கூறப்படும் ஒரு பரவச நிலையை அடைந்தோம். இவ்வாறு இரணைதீவுக்குச் சென்று திரும்பிய வர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி – நாச்சிக்குடாவிலிருந்து சற்றுத் தொலைவில் இரணைமாதா நகரிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலைவில் – கடலில் இரணைதீவு அமைந்துள்ளது. இது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவுடையது. கிளி…
-
- 2 replies
- 599 views
-
-
பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 14.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 357 views
-
-
மானிப்பாய் வாள்வெட்டு: சந்தேகத்தில் ஒருவர் கைது மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரண்டு மோட்டர் சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் வந்த கும்பல் அவ்விடத்தில் நின்ற இளைஞன் ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றது. வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். …
-
- 0 replies
- 414 views
-
-
தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும்; சி.வி வலியுறுத்தல் ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தம்மை தாமே ஆள்வதற்கான அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்கள் மதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில பங்கேற்ற வட மாகாண முதலமைச்சர், பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களுக்கு என்ன தேவை? எந்தெந்த…
-
- 3 replies
- 743 views
-
-
யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும் அந்த வரலாற்றைப் பதிந்திருக்கின்றன. இந்த வகையில், “வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை” என்ற சி.க.செந்தில்வேலின் புத்தகம், போருக்குப் பின்னான தமிழ் சமூகத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு புத்தகமாக அமைகின்றது. ஒரு சமூகத்தினது அல்லது ஒரு பிரச்சினையினது வரலாறு என்பது ஒருவராலோ ஒரு நிலைப்பாட்டிலிருந்தோ விளங்கிக்கொள்ளப்படக் கூடிய ஒரு விடயம் அல்ல. நாங்கள் வரலாற்றைப் படித்து எங்கள் எதிர்காலத்தைப் பற்றி…
-
- 0 replies
- 659 views
-
-
லலித் – அனுஷ பிணை மனு மீதான விசாரணையில் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை சில் ஆடை விநியோக வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்படி, குறித்த மனு தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி ஆஜ…
-
- 0 replies
- 306 views
-
-
பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!! யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான ப…
-
- 1 reply
- 474 views
-
-
பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் இன்றும் யோஷித முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் (எப்.சி.ஐ.டி) முன்னிலையாகியுள்ளார். கல்கிசை மற்றும் இத்மலானை பகுதிகளில் காணிகளை கொள்வனவு செய்தமை அதில் ஒரு காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை தொடர்பில் இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. கல்கிசை மிஹிந்து மாவத்தையில் 31 பேர்ச் காணியை கொள்வனவு செய்தமை, இரத்மலானை கெக்கடிய பிரதேசத்தில் 31.5 பேர்ச் காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை மற்றும் அதற்கான பணத்தை உழைத்த, செலவளித்த விதம…
-
- 0 replies
- 349 views
-
-
சேதமாக்கப்பட்ட புனித யாகப்பர் திருச் சொரூபம் மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிறு நீலாசேனை கிராமத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச் சொரூபம் நேற்று இரவு இனம் தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர். மன்னார், மதவாச்சி பிரதான வீதி நொச்சிக்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான புனித யாகப்பர் திருச் சொரூபம் இவ்வாறு உடைத்து தேசதப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட புனித யாகப்பர் திருச் சொரூபம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு …
-
- 0 replies
- 355 views
-